Sunday, 12 January 2014

வீரம் - என்னத் த(ல) சொல்லுறது

விஜய் வேஷ்டி கட்டுனா எப்டி இருக்கும்? கோரமா இருக்கும். அதுவே அஜித் வேஷ்டி கட்டுனா எப்டி இருக்கும்? வீரமா இருக்கும். எத்தன பேர் வேஷ்டி கட்டுறான்னு முக்கியமில்ல எவன் வேஷ்டி கட்டுறான் தான் முக்கியம் என வழக்கம் போல அஜித் ரசிகர்கள் பல்லி முட்டைய டைனோசர் முட்டயாக தூக்கிவைச்சு கொண்டாடும் படம் தான் வீரம்.

தனது 41 படங்களில் விஜய் பேண்ட்-சட்ட போட்டு நடிச்ச அதே கதய தான் அஜித் ராம்ராஜ் வேஷ்டி-சட்ட போட்டு நடிச்சிருக்காரு. ஊருக்குள்ள ஒரு அப்பா அம்மா இல்லாத பாசக்கார ஹீரோ, தங்கச்சிக்கு பதிலா தம்பி - ஒண்ணில்ல நாலா. அப்றோம் கூடவே சுத்துறியே செவ்வாலன்னு காமெடியன். அண்ணனுக்கு கல்யாணம்ன்னா ஹீரோயின் இண்ட்ரோ. உடனே ரெண்டு பேரயும் சேத்து வைக்க 3 காமெடி, ஒரு பாட்டு. சேந்த ஒடனே இண்டர்வல் ட்விஸ்ட் வித் ‘வாழ்க்க, நான் தான்’ன்னு அஜித்தின் வழக்கமான வசனம். பிற்பாதி மட்டும் மொக்க விஜய் படமா இல்லாம ஹரி படம் ஸ்டைல்ல வீரம்ன்னா நல்லதுக்காக கத்திய தூக்கற்து இல்ல, நல்லதுக்காக கத்திய போடுறதுன்னு செண்டிமெண்ட், காரி துப்புற வில்லன் ஃப்ளாஸ்ஃபேக், திரும்ப வீரம்ன்னா நல்லதுக்காக கத்திய போடுறது இல்ல, அந்த நல்லதுக்காக நல்லது நல்லா இருக்கணும்ன்னு கத்திய தூக்குறது, அணுகுண்டு வெடிச்சாலும், மூஞ்சில ஆரஞ்சு பழ ஒட்டிகிட்டு வர வில்லன், க்ளைமாக்ஸ் ஃபைட்டுன்னு ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சுபம்.

டைரக்டர் கட்ன்னு சொன்னா ஏன்டா என் மூஞ்சில பூரான் வுட்டீங்க

படத்துல சிறப்பாக வந்த காட்சிகள்ன்னா அஜித் ஏன் டீ குடிக்கிறாருன்னு ஒரு ஃப்ளாஸ்பேக். அத கேட்ட ஒடனே அசல்ல எமனுக்கு டீ கொடுத்த தலயா இப்டின்னு கண்ணு குளமாயிறுச்சு. பரதேசி பாத்துட்டு எப்டி டீ குடிக்க கூடாதுன்னு தோணிச்சோ, அது மாதிரி ஒரு 15 டீ ஒடனே குடிக்கணும் தல உன் பேர சொல்லின்னு ஃபீலிங்க்ஸ். காதல் காட்சிகளில் ரெஃப்ரெஷிங் அஜித். எல்லாரும் லவ் பண்றாங்கன்னு Peer-Pressureல பேருக்குனு காதலிக்கற இந்த உலகத்துல கோப்புங்க்ற பேருக்காக காதலிக்கற தலயோட லவ்-ட்ராக் ஜஸ்ட் தல ப்ளோயிங்க்கு.. பிற்பாதில ஷேவ் பண்ணி தல பொண்ணு கேக்க போகும் போது, தமண்ணாவோட பாட்டி பேரும் கோப்புன்ன ஒடனே, டை அடிக்காத தல ஒரு வேள பாட்டிய பொண்ணு கேக்க போறாரோ, பாட்டிய கரெக்ட் பண்ணிடுவாரோன்னு உள்ளுக்குள்ள ஜெர்க் இருந்தாலும், அந்த பாட்டி-தல காதலையும் நாசுக்கா காமிச்ச நாசா விஞ்ஞானி சிவா ஹாட்ஸ்-ஆப்டா கண்ணா. சிங்காரவேலன் வடிவேலு மாதிரி இங்கருக்குற எல்லா இன்ஸ்ட்ருமண்ட்டயும் தப்பு தப்பா வாசிப்பான்னு தனக்கு தெரிஞ்ச அஞ்சு ட்யூனயும் ஒவ்வோரு படத்துலயும் தப்பு தப்பா வாசிச்சே புது சாங்க் உருவாக்குறான்யா டி.எஸ்.பி. வேலாயுதம் டி.வி.டி கிடைக்காத காரணத்தால், அதுல் குல்கர்னிக்கு சம்பளம் மட்டும் தந்து வேஷ்ட் பண்ணிட்டாங்க (நல்லவேள இன்னொரு வில்லனோட க்ளிப்ஸ் சிறுத்தைல இருந்தே உருவிட்டாரு சிவா). ஒலகத்துலேயே முதற்தடவ தூக்கு தண்டனைக்கு போலிஸ் வேன்ல கூட்டிட்டு போறற்த இந்த படத்துல பாக்கலாம். பெட்ரோல் பங்க்ல வெடிச்சாலும், கைலயும் மூஞ்சிலயும் தோல லைட்டா உருச்சிட்டு அடி பட்டுறுச்சாம்லா - India's Most Funniest Videos. 


லாஜிக் கருமாந்திரம்லா பாத்து விமர்சனம் பண்லாம்ன்னா கருமம் விஜய் ஃபேன்னா போயிட்டேன்ல. ஆனா அஜித் ரசிகர்கள் மாதிரி மாசத்துக்கு மனசாட்சிய அடகு வைக்காம, ஒரு கமர்சியல் சினிமா ரசிகனா பாத்தா - ஒரு படத்துக்கு என்ன வேணுமோ, தனக்கு என்ன வருமோ, அஜித்துக்கு எப்டி மாஸ் வச்சா ரசிகர்கள் மட்டுமில்லாம பொதுஜனம்லா ரசிப்பாங்களோ - அதயெல்லாம் கரெக்டா புரிஞ்சி சிவா இயக்கிருக்காரு. அஜித்த ரசிக்கவே கூடாதுன்னு மைண்ட்-செட்ல போய் உக்காந்தாலும் அந்த டெண்டர் எடுக்குற சீன் இருக்கே - மாஸீன் உச்சக்கட்டம் 6 பாலும் சிக்ஸ்ரா பொளந்துருக்காரு தல. அப்றோம் காமெடி (சந்தானம் சில இடங்களில் மட்டுமே கிச்சு கிச்சு) லவ் மொக்கன்னு விஜய் ரசிகனா என்ன திருப்டி படுத்துனாலும், திரும்பவும் 6 பாலும் ஃபவுண்ட்ரியா விளாசுற ஊஞ்சல் சீன். படத்தோட உண்மையான பலமே இப்டி ஃபுல்லா மாஸ் மாஸ்ன்னு 5 நிமிசத்துக்கு மூக்குல மசாலா தூவாம, சாகவாசமா ரொம்ப பில்ட்-அப் கொடுக்காம கரெக்ட்டான எடத்துல செட் பண்ணிருக்காரு சிவா - Neat Package. அஜித் பத்தி ஏற்கனவே ரசிகர்களே எக்ஸ்ட்ரா அடிசினல் ஷீட் வாங்கி சொல்லிட்டதால, நா நோ-கமெண்ட்ஸ். தம்பிங்க வழக்கம் போல சந்தானம், தம்பி ராமையா, காமெடி வில்லன்ஸ மட்டுமே அடிச்சி, பெரிய தலங்கள அஜித் அடிக்கும் போது அண்ண்ண்ண்ணான்னு ஃபீலிங்க்ல அனகோண்டாவே வாயில போற அளவுக்கு வாய பொளக்க, வசனம் மூலமா அஜித்துக்கு மாஸ் ஏத்துறதுக்குன்னே யூஸ் ஆகிருக்காங்க - பட் குறை ஒன்றுமில்லை. தமண்ணா கொஞ்சம் எக்ஸ்ட்ரா செளிப்போட ரீ-எண்ட்ரி தந்துருக்காங்க. அஜித் மாஸ் சீன்ஸ் தவிர்த்து மத்த எடத்துல எல்லாம் இசை - இரைச்சல். ஒளிப்பதிவு, வசனம் எல்லாம் தூள். சின்ன சின்ன விஷயங்கள்ல கூட நாசுக்கா மாஸ ஏத்துன சிவாக்கு வாழ்த்துக்கள் - குறிப்பா முடி பறக்கற்து, வீபுதி தெறிக்கற்து, சண்ட முடிஞ்ச ஒடனே லைட்டா ரத்தத்த காட்றதுன்னு. 


வீரம் -ரோகித் ஷர்மா இன்னிங்க்ஸ் மாதிரி தாராளமா ஒன்ஸ் பாக்கலாம்

வருகைக்கு நன்றி

Blogger templates

Custom Search