Tuesday, 16 December 2014

லிங்கா - ஒரு காலத்துல ஒரு ராஜா இருந்தானாம்

நான்கு வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டாரின்  திரைப்படம் - அதுவும் லொள்ளு சபா ஜீவா டூப்பு போடாமல் தலைவர் லைவ்வாக நடித்த படம். படையப்பா மாபெரும் வெற்றிக்கு அடுத்து கே.எஸ்.ரவிகுமாரோடு இணையும் படம். எந்திரன் மெகா-பட்ஜெட், க்ளாஸ் மேக்கிங்ன்னு ஒரு பெஞ்ச்-மார்க் செட் பண்ண பிறகு வருகிற படம்ன்னு நிறைய எதிர்ப்பார்ப்போடு ரஜினி அவர்களின் பிறந்த நாள் அன்றே ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக வந்த லிங்கா - நின்னுச்சா ஸ்ட்ராங்கா??

ரஜினி என்கிற ஹீரோ மஜெஸ்டிக்கா இருக்க முக்கிய காரணங்கள் - கம்பீர நடை, ஹே ஹே ஹேன்னு பின்னணியில் ஹீரோயிசத்தை கூட்டுற இசை, டைமிங்க்கு கரெக்டா இறங்குற பஞ்ச்-டயலாக்குள், குறிப்பா அந்த ஹீரோ ஹீரோவா தூக்கி நிறுத்துற ஸ்ட்ராங்கான வில்லன். லிங்காவில் இருக்குற பெரிய பிரச்சனையே டம்மி-பீஸ் வில்லைன்ஸ் தான். பிளாஷ்பாக் வில்லன் படையப்பா மணிவண்ணன் மாதிரி ஒண்ணு சொத்த ஏமாத்தி வாங்குறான், இல்ல ஜெய்ஷங்கர் மாதிரி குதிரைல சுத்திட்டு இருக்கான். மாடர்ன் வில்லன் அதுக்கு மேல - கார்ல வரான், பாரசூட்டுல பறக்குறான், அப்றோம் கீழ விழுந்து இறக்குறான். எப்பவுமே ரஜினிக்கும்-வில்லனுக்கும் இருக்குற One-to-One confrontation scenes லிங்கால சுத்தமா இல்லாததால ரஜினிங்கற ஹீரோ அனாதையா ஸ்க்ரீன்ல பொலிவே இல்லாம இருக்காரு . சிவாஜில 'என்னங்க ஆதி இப்டி ஆகி போச்சு', 'பஜ்ஜி சாப்டுறியா' , ஆதிஷேஷன்ன சர்ல கால்ல சுத்திட்டே 'சிவாஜியும் நான் தான், எம்.ஜி.ஆரும் நான் தான்'ன்னு இப்டி ஹீரோசித்த தூக்கி நிறுத்திற காட்சிகள் லிங்காவுல மிஸ்ஸிங். ரஜினிக்கே உரித்தான Elements படத்துல அங்கங்கே இருந்தாலும், தூக்கி நிறுத்த பின்னணி இசையில் ரஹ்மான் பெருசா ஸ்கோர் பண்ணாததால் அந்த காட்கிகள் கொடுக்க வேண்டிய பெரிய Impacta தரல.

தலைவா வானத்துல பாத்தியா ஆரஞ்சு கலர்ல ஒரு உருண்ட, ஏதோ மார்ச்ஸாம்
கண்ணா , அது மார்ஸ் இல்ல.. நேத்து புட்பால் நெனச்சு பாஸ்கட்-பால்ல எட்டி உட்டேன்னா .. ஹாஹாஹா 

படத்த ஒத்த ஆள தன் தோளுல தூக்கி சுமந்திட்டு இருக்காரு லிங்கேஸ்வரனா வர பிளாஷ்பாக் ரஜினி. கம்பீரம், நடை , குரல்ன்னு துளியும் சோடை போகல.. இந்தியனே வா பாடலில் வரும் sequences, இந்திய கொடியை சுட்ட பிரிட்டிஷ் கவர்னருக்கு கொடுக்கும் பதிலடி (ராண்டி கேமரா-ஒர்க் அட்டகாசம்), உண்மை ஒரு நாள் வெல்லும் பாடல் தொடங்கும் முன் வரும் sequences, பொன்னோடு மண் எல்லாம் போனாலும் அவன் புன்னைகையை கொள்ளையிட முடியாது வரிகள் அப்போ ரஜினியின் சிரிப்பு - இப்டி ரஜினியிடம் பிடித்த, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் லிங்கேஸ்வரன் கேரக்டரில் கணக்கச்சிதமாக வைத்த ரவிகுமார் இன்னொரு ரஜினியில் சுத்தமாக கோட்டை விட்டார். ப்ரெசென்ட் ரஜினியின் மேக்-அப், பாடி லாங்குவேஜ்,  நாக்கு குழையும் டயலாக் டெலிவரின்னு ஒரு எனேர்ஜியே இல்லாமல் ஒப்புக்கு சப்பானா உலவிகொண்டிருந்தார். சந்தானத்தின் டைமிங்-காமடி தான் முதற்பாதி தோய்வே இல்லாமல் போன காரணம். நடந்து முடிந்த ஆஸ்திரேலியா -இந்தியா டெஸ்டில் எப்டி முரளி விஜய்யும்-விராட் கோலியும் பார்ட்னர்ஷிப் போட்டு ஆட மத்தவங்கலா பேந்த பேந்த ஆடுனாங்களோ அது மாதிரி முதற்பாதி சந்தானம் -இரண்டாம் பாதி ரஜினி தான் இந்த படத்தை காப்பாத்தினாங்க.

வட இந்தியாவில் ரஜினிகாந்த் ஜோக்க்கு சவால் விடும் வகையில் க்ளைமாக்ஸ், 'இது ரஜினின்னு சொன்னா சௌந்தர்யா கூட நம்ப மாட்டாங்க' அளவுக்கு டூப்பு தெளிவா தெரியுது. எடுக்கும் போது இவங்களுக்கே சிரிப்பு வந்துருக்காதோ? பைக்-சிக்னல்ல மீட் பண்ற 30 செகண்ட் பழைய நண்பன் மாதிரி காதுவாக்குல 'காசு வாங்கிட்டேன், டேம்ம வெடிக்கிறேன்'ன்னு சால்பி ட்விஸ்ட்ட வச்சிட்டு அதுக்கு இன்னொரு ரஜினி. அவ்ளோ லெங்த் பிளாஷ்பக் முடிஞ்ச உடனே படமும் அவசர கதியில் முடிச்சு விட்ட பீல். பிளாஷ்பேக் காட்சிகளை குறைத்து ப்ரெசென்ட் ரஜினிக்கும் - வில்லனுக்கும் 2-3 Confrontation சீன்ஸ் வச்சிருந்தா படம் ரேஞ்சே வேற, இல்ல ப்ரெசென்ட் ரஜினி கேரக்டரே இல்லாம ஒரு முழு-நீள பீரியட் பிலிமா ரஜினிக்கும் -பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் நடக்குற கதைன்னு நகர்த்தி இருந்தா இந்த படம் முன்ன சொன்னத விட இன்னும் பெருசா வந்துருக்கும்.  ஒரு நல்ல கதைய வேஸ்ட் பண்ணிட்டாங்கன்னு தான் சொல்லணும்.

லிங்கா - பாக்கலாம் ஒரு தபாக்கா

வருகைக்கு நன்றி!!

Saturday, 16 August 2014

அஞ்சான் - கவுண்டமணி விமர்சனம்

லிங்குசாமி, சூரியா கால்-ஷீட் கெடச்ச ஒடனே - சொம்பு பலபலன்னு இருக்கே, வச்சு செஞ்சுற வேண்டியது தான்.ரீலிஸ் ஆன அன்று -ஐய்ய்ய்ய்ய் சூரியா, ஐய்ய்ய்ய்ய் சமந்தா. பங்க் பங்க் பங்க் மாஸ் தான்பா இன்னிக்கிப்ப்ப்ப்பா, இவல நக வாங்கலன்னு யாரு அழுதா? படத்த சீக்கிரம் போடுங்கப்பா, சூரியாக்கு இது பாட்ஷா மாதிரி இருக்குமாமே, அய்யோ நான் பாத்தே ஆகணுமே


அய்ய்யய்ய என்ன 15 நிமிசம் ஆச்சு, இன்னும் ராசூ பாயா காணோம்? டேய் பில்ட்-அப் போதும் மகனே, ராசூ பாய் ஒஷ்தாவையா ராசூ பாய் ஒஷ்தாவையா ஊருசனம் துடிக்குதய்யா


இது தான் நீ சொன்ன ஸ்கிரீன்னு கிழியுற மாஸாடா லிங்கு? வரே வா வாட்டே ஹீரோ இண்ட்ரோ, எங்க ஊருல பிஜிலி வெடி வெடிக்க பசங்க இப்டி தான் ஊதவத்திய வச்சிட்டு வருவானுங்க.. ராசூ பாய்இது லவ் படமா, இல்ல ஆக்‌ஷன் படமா? இன்னும் தேடிட்டே இருக்கேன், எங்கதான்யா நீ சொன்ன சீனுக்கு சீன் மாஸ் பறக்கும் ஸ்கீரின்ப்ளே?சமந்தா பிகினி சீன் இருக்கும்ன்னு சொல்லி அனுப்பிச்சானே? வருமா வராதா?ஓஓஓஓ, நீ சொன்ன உலக மகா இண்டர்வல் ட்வீஸ்ட் இது தானா? படம் ஆரம்பிச்ச பத்து நிமிசத்துலேயே நான் கண்டுபிடிச்சிட்டேனேடா ஜிம்பலக்கடி பம்பாஇடைவேளை - என்னப்பா ஒரு கண்ண காணோம்? ராஜூ பாய் சுட்டு சுட்டு ஸ்கீரின் கிழிஞ்சி என் ஒரு கண்ணு போனது தான் மிச்சம்டாஎன்னது? இன்னும் செகண்ட் ஆப் வேற இருக்கா?ஒரே ஆறுதல் - யுவன்சங்கர் ராஜா பாடல். நைஸ் ப்ரேக்-டைம்


எவன்டா அவன் தனியா கை தட்டிட்டு இருக்கான்? ஓ சூரியா ஃபேன்னா? சூப்பரப்பேபர்தா பொண்ணு தான் சமந்தாவா? அய்ய்ய்ய்யோ அம்ம்மாமாமா இதயும் ட்விஸ்ட்ன்னு சொல்வானே அந்த டைரக்டருஆப்பரேட்டரு, டேய் ஆப்பரேட்டரு - படத்த எப்படா முடிப்ப? 200 ரூபா செலவானாலும் சூரியா படம் பாப்பேன்னா? டேய் 70 ரூபாடா 70 ரூபா இருந்தா ரோட்டு கடைல பிரியாணி வாங்கி சாப்டு உன்ன மாதிரி பல்லு குத்திட்டு இருப்பேனேடா


படம் முடிஞ்சிருச்சு, எல்லாரும் கெளம்புங்க.. டேய் இனிமே படம் முடிஞ்சா என்ன, முடியலன்னா என்ன? அதான் எனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சே. ஒடம்பு புல்லா பேங்க் பேங்க் பேங்க் தான்.லிங்கு, லிங்கு டேய் - இது தான் நீ சொன்ன பாக்‌ஷா, போக்கிரி படமாடா? இது நியாயாமா, உனக்கு அடுக்குமாடா? அது எப்டிடா மனசாட்சியே இல்லாம கத திரைக்கதல உன் பேர போட்டுருக்க? அஜித்துக்கு வத்தலும் தொத்தலுமா ஒரு ஜீ, விக்ரம்க்கு ஓட்டயும் ஒடச்சலுமா ஒரு பீமா கொடுத்த.இது தான் ஏதோ கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கும் நெனச்சா, அதயும் முன்ன விட கேவலமா எடுத்துவச்சிருக்கியே.. அப்போ யூ.டிவி தனஞ்செயன்?
வருகைக்கு நன்றி !!

Saturday, 21 June 2014

அயலும் நிஜனும் தம்மில்

எது நல்ல படம்? போரடிக்காம போச்சுன்னா நல்ல படம். கொடுத்த காசுக்கு ஒர்த்தா இருந்தா நல்ல படம். ஒரு ஃபீல் குட்டா இருந்தா நல்ல படம். இந்த மாதிரி ஒரு மனுஷன நம்ம லைப்ல இருந்துருக்கலாமோன்னு ஃபீல் பண்ண வச்சா நல்ல படம். நெஞ்ச கணக்க வைக்குற மாதிரி இருந்தா நல்ல படம். படம் முடிஞ்சும் நம்மள தூங்கவிடாம, சீன்ஸ்லா கண்ணுலேயே இன்னும் இருந்தா நல்ல படம். இது எல்லாம் ஒரு படத்துலேயே இருந்தா? - அது உண்மையிலே அற்புதமான படம் - அப்ப அயலும் நிஜனும் தம்மில் ஒரு அற்புதமான படம்.


தமிழ் சினிமாவுல க்ளிச்சேவா வர காட்சி - உயிருக்கு போராடிட்டு இருக்குற ஒரு சின்ன கதாபாத்திரம், டாக்டர் வராரு, கண்ணாடிய கெளட்டிட்டே ‘சாரி, நாங்க எவ்ளவோ ட்ரை பண்ணோம். பட்..’ இதுக்கு பின்னாடி இருக்குற ஒரு 2 மணி நேர கதய இயக்குநர் லால் ஜோஸ் கொடுத்துருக்காரு. பட், டாக்டர் ஹீரோ ப்ரித்வி கண்ணாடிய கெளட்டல, டயலாக்கும் சொல்லல.. இப்டி படம் முழுசா தேவையில்லாத வசனங்கள், ஆரஞ்சு பழம் மாதிரி நெஞ்ச புழியுறேன் எமோசனல் சீன்ஸ்ன்னு இல்லாம இசை, அமைதி, முகபாவனை வச்சே நமக்கு புரிய வைக்கிறாரு இயக்குநர். டாக்டர்ன்னா நமக்குன்னு இருக்குற ஒரு இமேஜ் - பணம் புடுங்குறவரு, காச வச்சா தான் ஆப்பரேஷன் பண்ணுவேன்னு அடாவடி பண்றவரு. ஆனா இந்த படத்துல அப்டி டாக்டர தவறா சித்தரிக்காம, எல்லா கதாபாத்திரங்களும் நல்லவங்களாவே நடமாட விட்டுருக்குறது மிகப்பெரிய ப்ளஸ் - படம் பாக்கும் போதே அவ்ளோ ஒரு பாசிட்டிவ் வைப். காலேஜ் செகண்ட் இயர்ல ஒடம்பு சரியில்லாம சீரியஸ்ஸான நெலமைல ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, பிரதாப் போத்தன் மாதிரி ஒரு டாக்டர் தான் என்ன காப்பாத்தினாரு, காசு முக்கியம்ன்னு பாக்காம. இன்னி வரைக்கும் நான் ஒடம்பு சரியில்லன்னு அவர பாக்க போனா என்கிட்ட கன்சல்டிங் ஃபீஸ் வாங்கற்தில்ல ‘ஆல்ரெடி நான் நெறய வாங்கிட்டேனே கார்த்தி’ன்னு. இப்டி நாம வாழ்ந்து பழக்கப்பட்ட நல்ல கேரக்டர்ஸ் எல்லாம் திரைல பாக்கும் போது ஒரு ஈர்ப்பு கெடைக்குமே - அப்டியான படம்.

தொண்டய அடைக்குற ஷாட். ரெண்டு நிமிஷம் Pause பண்ணி.... ப்ளிச்ச்ச்


ஒரு ஃபெயில்லான ஆப்பரேஷனால் காணாமல் போன ப்ரித்வி, அப்டியே நான்-லீனியர் நரெஷன்ல அவரோட கல்லூரி, காதல் வாழ்க்கை - அவருக்கும் ப்ரதாப் போத்தனுக்கும் இடையே இருக்கும் ரோல்-மாடல் தாண்டிய உறவு என்று பயணிக்கும் இன்னொரு கதை - ப்ரித்வி எங்கே? அவரின் ஃப்ளாஸ்பேக் காதல் கைகூடியதா? இப்டி ரெண்டு காலகட்ட த்ரில்லரில் Parallela பயணிக்கிற திரைக்கதை. ப்ரித்விராஜ் எவ்வளவு அற்புதமான நடிகன். நம்ம தமிழ்சினிமாவுல தான் அவர டம்மி டப்பாசா ஆக்கிட்டோம். படம் முழுக்க தன்னோட இயல்பான நடிப்பால கவர்ந்து இழுத்துட்டாரு. தன் காதலியோடு நடக்கவிருக்கும் ரகசிய திருமணத்திற்கு தடங்கல் ஆரம்பிப்பதிலிருந்து  ஒரு 15 நிமிஷம் அவரின் நடிப்பு - டாப் க்ளாஸ். அழுகை கூட அவ்ளோ இயல்பா வருதுய்யா இவருக்கு. கலாபவன் மணிக்கும் அவருக்கும் இருக்கும் என்ன கைய்ய புடிச்சி இழுத்தியா தகராறால் ஒருகணம் அவர் கல் நெஞ்சகாரனாக ஆகும் இடமாகட்டும், மணியின் பெண்ணை ஸ்கூல்ல பார்த்து ஃபீல் பண்றதாகட்டும் எங்குமே ப்ரித்வியின் நடிப்பு சோடை போகவில்லை. இது நான் பார்க்கும் ப்ரித்வியின் மூண்றாவது படம் - இனிமேலாச்சும் பெரிய இயக்குநர் படத்துல ஓரமா ஒரு செகண்ட் ரோல் கெடச்சாலே வரம்ன்னு நெனச்சு தமிழ் சினிமா வுட்டு ஓரமா போயிறாம நல்ல கதயா தேர்ந்தெடுத்து நடிங்க பாஸ் - காவியத்தலைவனுக்கு வெயிட்டிங்.

லூசு கேரக்டர்ல பாத்து பழக்கப்பட்ட ப்ரதாப் போத்தன் இதுல செம லவ்வபள் காட்-ஃபாதர் ரோல். ப்ரித்வியிடம் சீனியர் டாக்டராக பழகாமல், அன்பால் திருத்தும் இடத்தில் எல்லாம் செமயா ஸ்கோர் பண்ணிருக்காரு. நரேன், ரம்யா நம்பீசன், தோமச்சன் இப்டி எல்லா கதாபாத்திரங்களும் தேவயில்லாத ஆணியா இல்லாம படத்த நகர்த்தி செல்வதற்கு உறுதுணையாக இருக்கின்றனர். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூடுதல் பலம். படம் முடிஞ்ச ஒடனே யூ-ட்யூப்ல பாட்ட திரும்ப கேக்கணும்ன்னு இருந்துச்சு. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் அவசரமா முடிச்ச மாதிரி ஒரு உணர்வு இருந்தாலும், படம் முடிய கூடாதுன்னு நம்ம உள்ளுணர்வு எதிர்பார்த்ததால இது குறையா தெரிஞ்சிச்சோ?

Flawless படம்ன்னு சொல்ல முடியாது. ஆனா அற்புதமான நடிப்பு, மேக்கிங், ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி இதுக்காகவே அயலும் நிஜனும் தம்மில் கண்டிப்பா பாக்க வேண்டிய படம் - டோண்ட் மிஸ்

அயலும் நிஜனும் தம்மில் - படம் பாக்க லைன்ல போய் நில்

வருகைக்கு நன்றி !!

Monday, 26 May 2014

கதை திரைக்கதை இயக்கம் - ஐ.பி.எல்

உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்னா என்னது?

அதாவது 6 மேட்ச்சு ஜெயிச்ச இருமாப்புல ஐ திங்க் டிஃப்பரண்ட்ன்னு 2 மார்க் கொஸ்டீனுக்கு 16 மார்க் வாங்க ஆசப்பட்டு கத எழுதி முட்ட வாங்குன கதயா கடசி கட்டத்துல கதற கதற ரேப் ஆகி வலிக்கலையேன்னு இருக்குற ராஜஸ்தான் ராயல்ஸ் ஓர் எடுத்துக்காட்டு


5 மேட்சு தோல்வி, உள்ளூர் ஓணான ஊமக்குத்து குத்துன மெதப்புல டாட்டா பை பைன்னு மும்பை இந்தியன்ஸ்ஸ புளிப்பு காட்டி, கடசில அவங்க கூட மோத போறோன்ன ஒடனே, ‘அய்யய்யோ.. தோச மாத்ரி ரெண்டு வாட்டி பொறட்டி போட்டாச்சு, அடுத்து நமக்கு ஆப்பு வச்சிருவாங்களோ’ன்னு பயம் இருந்தாலும் ‘வாடா வாடா, இன்னும் திருப்பி கொடுக்கணும்ன்னு’ன்னு ஹீரோ கிட்ட அடி வாங்க போறோன்னு தெரிஞ்சும் ரேப் காட்சிக்கு ரெடி ஆகுற வில்லன் அடியாள் மாதிரி இருக்குற சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஓர் எடுத்துக்காட்டு

நாமக்கல் அடுத்து அதிகமா முட்ட உற்பத்தி செய்யுற காப்டன வச்சிட்டு அம்பியா இருந்த டீம திடீர்ன்னு ‘ஏன்டா என்ன அடிச்ச, இந்தா வாங்கிக்கோ’ன்னு எல்லா டீமுக்கும் ஷாக்கிங்கா திருப்பி கொடுத்தாலும் ‘அய்யோ ஒரு சிங்கத்து கிட்ட இருந்து தப்பிச்சு இன்னொன்னு கிட்டெ மாட்டிக்கிட்டோமே’ன்னு லைட்டா பீதில இருக்குற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓர் உதாரணம்.ஆக்சன்ல காசு இருந்தும், எனக்கும் பல்லி முட்டாய், தேன் முட்டாய் தான் வேணும்ன்னு உலகத்தரம் வாய்ந்த அசோக்கு திண்டா, வருண் ஆரோன்னு இவங்கள எடுத்து 130 அடிச்சா கூட டிஃப்பண்ட் பண்ணுவோம்லனு நெஞ்ச நிமிர்த்திட்டு வந்து அங்கேயே அடி வாங்கி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆன கீப் ட்ரையிங், கீப் ஆன் ட்ரையிங்ன்னு இருக்குற ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஓர் எடுத்துக்காட்டு

கோவிலுக்கு வந்தோமா, சாமி கும்டோமா, சுண்டல் சாப்டோமா, வூட்டுக்கு போய் வாயுவ வுட்டோமான்னு கடமைக்குன்னு விளையாட வந்து ஆல் ஏரியால எக்கி எக்கி அடி வாங்குனாலும் ‘அய் வலிக்கலையே வலிக்கலையே’ன்னு இருக்குற டெல்லி டேர்டெவில்ஸ் ஓர் உதாரணம்.

வீரப்பன், ஓசாமா அடுத்து அதிகமான தலைமறைவு வாழ்க்கய அவங்க ரசிகர்கள வாழவச்சிட்டு, ‘எவ்ளோ செலவானலும் பரவால டாக்டர், ப்ளீஸ் காப்பத்திருங்க’ன்னு பெரிய பணமாற்றத்த நிகழ்த்தி, 4-5ன்னு இருந்த ஹார்ட்-பீட்ட 80-90ன்னு ஏற வச்சு ‘நான் மீண்டும் வருவேன்’ன்னு மம்மி பட வில்லன் மாதிரி வந்தாலும், ஸ்கிரிப்ட் சேஞ்ச்ல அப்பட்டமா மாட்டிக்கிட்ட அப்றோம் ‘அய்யய்யோ, இதயே சி.எஸ்.கே செய்யும் போது ஃபிக்ஸிங், தோனி சிக்ஸ் அடிச்சா சீனி மாமாடான்னு சொல்லி குஜால்டியா இருந்தோமே, இப்ப என்ன சொல்லி தப்பிக்கறது’ன்னு ப்ளான் பண்ணி கடசில ‘ஹே பாரு, சச்சின் உத்தமி கவுதமி, அவர்கூட டென்ஸன்ல இருந்தாரு.. இத போய் ஃபிக்ஸிங் சொல்றியே’ன்னு தம் கட்டி ‘பாரு, ட்ராவிட் கூட கோவமானாரு, அவர் போய் பண்ணுவாரா’ன்னு கூட ஸப்பொர்ட்க்கு ஆள் சேத்து விஜய் நடிச்சா மொக்கன்னு சொல்லி அதே ஸ்கிரிப்ல அஜித் நடிச்சா ராக்கிங்யா, பிச்சிட்டயா, உன் ரசிகன்யான்னு வெளி வர ஸீலிப்பர் செல்ஸ் மாதிரி இருக்குற மும்பை இந்தியன்ஸ் ஓர் உதாரணம்.

அப்போ மீதி ரெண்டு? அட போப்பா அதான் எல்லாமேன்னு ஸ்கிர்ப்ட்ன்னு ஆயிர்ச்சே.. அம்பானி நாமம் வாழ்க !!

வருகைக்கு நன்றி !

Saturday, 5 April 2014

மான் கராத்தே - படம் பார்த்து விமர்சனம் சொல்

1. அப்பாடா டிக்கெட் கெடச்சாச்சு, தட்றோம் தூக்குறோம் 8-) சிவகார்த்திகேயன்டா.. நாலாவது ஹிட்டா


2. முதற்பாதி நல்லா தானே போயிட்டுருக்கு


3. ரெண்டாவது பாதி தொடங்குன கொஞ்ச நேரத்துலேயே


4. நடுவுல ஃப்ரெண்ட்டு ஒருத்தன் ஃபோன் பண்ணி, ‘மச்சான் படம் எப்டிடா இருக்கு இது வரைக்கும்’ன்னு கேக்றான்


5. ஆஹா, வசமா சிக்கிட்டோமோ? படத்த முடியிப்பாய்ங்களா, மாட்டாய்ங்களா? ஃபைட்டு வேற போடுறானே..


6. க்ளைமாக்ஸ் வந்தாச்சு - ஆப்பரேட்டர் கோடான கோடி நன்றி


7. சிவகார்த்திகேயன் ஒன் மேன் ஷோ, அனிருத் இசை, ஒளிப்பதிவு தவிர்த்து மத்ததெல்லாமே
8. ஒன்ஸ்-மோர் பாக்கலாமா ப்ரோ?


9. அவ்ளோதானா விமர்சனம்? டியீட்டேய்ல்லா சொல்லுங்களேன்?


மான் கராத்தே - ரொம்பவே சுமார் மூஞ்சி அண்ணாத்தேவருகைக்கு நன்றி


Friday, 21 March 2014

அம்மா போல காதலி

அது ஏன்?

அது ஏன் நெரய பசங்களோட கேர்ள்-ஃப்ரெண்ட்ஸ் அவனோட அம்மா மாதிரியே நடந்துக்குறாங்க?
  • ஃபோன் பண்ணி எடுக்கலன்னா விடாம ஃபோன் பண்ணிட்டே இருக்கற்து, அட்டெண்ட் பண்ணா எங்க இருக்க, எவனோட இருக்கன்னு கேக்கற்து?
  • வெளிய சாப்ட போறேன்னு சொன்னாதான் ‘இல்ல நான் சமைக்கிறேன்’னு சொல்லி புடிக்காத டிஸ்ஸா செய்யற்து. அது ஓக்கேன்னு சொன்னா ‘ஒழுங்கா உண்மைய சொல்லு’ன்னு மெரட்டுறது. சரி, உண்மையா இருப்போம்ன்னு ‘கேவலமா இருக்கு’ன்னு சொன்னா ’ம்ம்ம்.. உனக்குல்லா இவ்ளோ செய்யற்தே பெருசு’ன்னு மூஞ்ச தூக்கி வச்சிக்கற்து.
  • பசங்களுக்கு ஒரு டாப்பிக் பேசுனா புடிக்காதுன்னா அதயே பேசிட்டு இருக்கற்து. ‘ஏய் இங்க கேளேன், நேத்து என்னாச்சி தெரியுமா, பக்கத்து வீட்டுல..’ன்னு வாரமலர் நடுபக்கம் கிசுகிசுவ எல்லாம் நாம கேக்கணும்ன்னு எதிர்ப்பார்க்கற்து.


  • நாம ஏதாச்சும் ஒரு சிந்தனைல இருந்தா, ‘என்னாச்சி, ஏன் டல்லா இருக்க? சொல்லு என்ன பிரச்சன, ஏன் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கிற’ன்னு இல்லாத ஒரு பிரச்சனாவ உருவாக்கி அவன சிநேகாக்கு கட்டி வச்ச கதயா. நமக்கே நம்ம மேல ஒரு சந்தேகம் ‘ஒரு வேல பிரச்சன இருக்கோ’ன்னு.
  • ஏதாச்சும் சண்ட வந்தா, பேசாம மூஞ்ச தூக்கி வச்சிக்கற்து. பசங்களும் பேசாம வுட்டுட்டா வாய் ஓயாம நம்பள கொற சொல்லிட்டே இருக்கற்து - ‘வாய தொறந்து பேசுறானா பாரு. தப்பு பண்ணவன் எப்டி பேசுவான்’ன்னு. சரி பேசலாம்ன்னு போனா M சைஸ்ல இருக்குற பிரச்சனைய XXL சைஸ்க்கு பெருசாக்கி இன்னும் ரெண்டு மணி நேரம் சண்ட போடுறது. அப்பாடா சமாதானம் ஆயாச்சுன்னு இருந்தா, மூணு மாசம் முன்னாடி நாமளே மறந்த ஒரு சின்ன விஷயத்த தூசி தட்டி, பார்ட்-2 ஸ்டார்ட் பண்றது
  • நமக்கு புடிச்ச ஹீரோயின் அவங்களுக்கு புடிக்காம இருக்கற்து. குறிப்பா நம்ம கண்ணுக்கு அழகா தெரியுற மத்த பொண்ணுங்க எல்லாம் அவங்க கண்ணுக்கு அட்டா தெரியற்து.

இது Damn Co-incidenceஆ இல்ல பசங்க இயல்பாவே அவங்க அம்மாவோட குணாதிசயங்களோட இருக்குற பொண்ணுக்கு Attract ஆகுறாங்களா? சரி, இப்டி எழுதுறன்னா நீ யார லவ் பண்றன்னு கேக்கலாம். ஹீ ஹீ. ஹார்ட்-அட்டாக் வந்தா தான் ஹார்ட்-ஸ்பெஷலிஸ்ட் ஆக முடியுமா என்ன?

எல்லாம் கேள்வி ஞானம் தான் :)

வருகைக்கு நன்றி!!

Sunday, 12 January 2014

வீரம் - என்னத் த(ல) சொல்லுறது

விஜய் வேஷ்டி கட்டுனா எப்டி இருக்கும்? கோரமா இருக்கும். அதுவே அஜித் வேஷ்டி கட்டுனா எப்டி இருக்கும்? வீரமா இருக்கும். எத்தன பேர் வேஷ்டி கட்டுறான்னு முக்கியமில்ல எவன் வேஷ்டி கட்டுறான் தான் முக்கியம் என வழக்கம் போல அஜித் ரசிகர்கள் பல்லி முட்டைய டைனோசர் முட்டயாக தூக்கிவைச்சு கொண்டாடும் படம் தான் வீரம்.

தனது 41 படங்களில் விஜய் பேண்ட்-சட்ட போட்டு நடிச்ச அதே கதய தான் அஜித் ராம்ராஜ் வேஷ்டி-சட்ட போட்டு நடிச்சிருக்காரு. ஊருக்குள்ள ஒரு அப்பா அம்மா இல்லாத பாசக்கார ஹீரோ, தங்கச்சிக்கு பதிலா தம்பி - ஒண்ணில்ல நாலா. அப்றோம் கூடவே சுத்துறியே செவ்வாலன்னு காமெடியன். அண்ணனுக்கு கல்யாணம்ன்னா ஹீரோயின் இண்ட்ரோ. உடனே ரெண்டு பேரயும் சேத்து வைக்க 3 காமெடி, ஒரு பாட்டு. சேந்த ஒடனே இண்டர்வல் ட்விஸ்ட் வித் ‘வாழ்க்க, நான் தான்’ன்னு அஜித்தின் வழக்கமான வசனம். பிற்பாதி மட்டும் மொக்க விஜய் படமா இல்லாம ஹரி படம் ஸ்டைல்ல வீரம்ன்னா நல்லதுக்காக கத்திய தூக்கற்து இல்ல, நல்லதுக்காக கத்திய போடுறதுன்னு செண்டிமெண்ட், காரி துப்புற வில்லன் ஃப்ளாஸ்ஃபேக், திரும்ப வீரம்ன்னா நல்லதுக்காக கத்திய போடுறது இல்ல, அந்த நல்லதுக்காக நல்லது நல்லா இருக்கணும்ன்னு கத்திய தூக்குறது, அணுகுண்டு வெடிச்சாலும், மூஞ்சில ஆரஞ்சு பழ ஒட்டிகிட்டு வர வில்லன், க்ளைமாக்ஸ் ஃபைட்டுன்னு ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சுபம்.

டைரக்டர் கட்ன்னு சொன்னா ஏன்டா என் மூஞ்சில பூரான் வுட்டீங்க

படத்துல சிறப்பாக வந்த காட்சிகள்ன்னா அஜித் ஏன் டீ குடிக்கிறாருன்னு ஒரு ஃப்ளாஸ்பேக். அத கேட்ட ஒடனே அசல்ல எமனுக்கு டீ கொடுத்த தலயா இப்டின்னு கண்ணு குளமாயிறுச்சு. பரதேசி பாத்துட்டு எப்டி டீ குடிக்க கூடாதுன்னு தோணிச்சோ, அது மாதிரி ஒரு 15 டீ ஒடனே குடிக்கணும் தல உன் பேர சொல்லின்னு ஃபீலிங்க்ஸ். காதல் காட்சிகளில் ரெஃப்ரெஷிங் அஜித். எல்லாரும் லவ் பண்றாங்கன்னு Peer-Pressureல பேருக்குனு காதலிக்கற இந்த உலகத்துல கோப்புங்க்ற பேருக்காக காதலிக்கற தலயோட லவ்-ட்ராக் ஜஸ்ட் தல ப்ளோயிங்க்கு.. பிற்பாதில ஷேவ் பண்ணி தல பொண்ணு கேக்க போகும் போது, தமண்ணாவோட பாட்டி பேரும் கோப்புன்ன ஒடனே, டை அடிக்காத தல ஒரு வேள பாட்டிய பொண்ணு கேக்க போறாரோ, பாட்டிய கரெக்ட் பண்ணிடுவாரோன்னு உள்ளுக்குள்ள ஜெர்க் இருந்தாலும், அந்த பாட்டி-தல காதலையும் நாசுக்கா காமிச்ச நாசா விஞ்ஞானி சிவா ஹாட்ஸ்-ஆப்டா கண்ணா. சிங்காரவேலன் வடிவேலு மாதிரி இங்கருக்குற எல்லா இன்ஸ்ட்ருமண்ட்டயும் தப்பு தப்பா வாசிப்பான்னு தனக்கு தெரிஞ்ச அஞ்சு ட்யூனயும் ஒவ்வோரு படத்துலயும் தப்பு தப்பா வாசிச்சே புது சாங்க் உருவாக்குறான்யா டி.எஸ்.பி. வேலாயுதம் டி.வி.டி கிடைக்காத காரணத்தால், அதுல் குல்கர்னிக்கு சம்பளம் மட்டும் தந்து வேஷ்ட் பண்ணிட்டாங்க (நல்லவேள இன்னொரு வில்லனோட க்ளிப்ஸ் சிறுத்தைல இருந்தே உருவிட்டாரு சிவா). ஒலகத்துலேயே முதற்தடவ தூக்கு தண்டனைக்கு போலிஸ் வேன்ல கூட்டிட்டு போறற்த இந்த படத்துல பாக்கலாம். பெட்ரோல் பங்க்ல வெடிச்சாலும், கைலயும் மூஞ்சிலயும் தோல லைட்டா உருச்சிட்டு அடி பட்டுறுச்சாம்லா - India's Most Funniest Videos. 


லாஜிக் கருமாந்திரம்லா பாத்து விமர்சனம் பண்லாம்ன்னா கருமம் விஜய் ஃபேன்னா போயிட்டேன்ல. ஆனா அஜித் ரசிகர்கள் மாதிரி மாசத்துக்கு மனசாட்சிய அடகு வைக்காம, ஒரு கமர்சியல் சினிமா ரசிகனா பாத்தா - ஒரு படத்துக்கு என்ன வேணுமோ, தனக்கு என்ன வருமோ, அஜித்துக்கு எப்டி மாஸ் வச்சா ரசிகர்கள் மட்டுமில்லாம பொதுஜனம்லா ரசிப்பாங்களோ - அதயெல்லாம் கரெக்டா புரிஞ்சி சிவா இயக்கிருக்காரு. அஜித்த ரசிக்கவே கூடாதுன்னு மைண்ட்-செட்ல போய் உக்காந்தாலும் அந்த டெண்டர் எடுக்குற சீன் இருக்கே - மாஸீன் உச்சக்கட்டம் 6 பாலும் சிக்ஸ்ரா பொளந்துருக்காரு தல. அப்றோம் காமெடி (சந்தானம் சில இடங்களில் மட்டுமே கிச்சு கிச்சு) லவ் மொக்கன்னு விஜய் ரசிகனா என்ன திருப்டி படுத்துனாலும், திரும்பவும் 6 பாலும் ஃபவுண்ட்ரியா விளாசுற ஊஞ்சல் சீன். படத்தோட உண்மையான பலமே இப்டி ஃபுல்லா மாஸ் மாஸ்ன்னு 5 நிமிசத்துக்கு மூக்குல மசாலா தூவாம, சாகவாசமா ரொம்ப பில்ட்-அப் கொடுக்காம கரெக்ட்டான எடத்துல செட் பண்ணிருக்காரு சிவா - Neat Package. அஜித் பத்தி ஏற்கனவே ரசிகர்களே எக்ஸ்ட்ரா அடிசினல் ஷீட் வாங்கி சொல்லிட்டதால, நா நோ-கமெண்ட்ஸ். தம்பிங்க வழக்கம் போல சந்தானம், தம்பி ராமையா, காமெடி வில்லன்ஸ மட்டுமே அடிச்சி, பெரிய தலங்கள அஜித் அடிக்கும் போது அண்ண்ண்ண்ணான்னு ஃபீலிங்க்ல அனகோண்டாவே வாயில போற அளவுக்கு வாய பொளக்க, வசனம் மூலமா அஜித்துக்கு மாஸ் ஏத்துறதுக்குன்னே யூஸ் ஆகிருக்காங்க - பட் குறை ஒன்றுமில்லை. தமண்ணா கொஞ்சம் எக்ஸ்ட்ரா செளிப்போட ரீ-எண்ட்ரி தந்துருக்காங்க. அஜித் மாஸ் சீன்ஸ் தவிர்த்து மத்த எடத்துல எல்லாம் இசை - இரைச்சல். ஒளிப்பதிவு, வசனம் எல்லாம் தூள். சின்ன சின்ன விஷயங்கள்ல கூட நாசுக்கா மாஸ ஏத்துன சிவாக்கு வாழ்த்துக்கள் - குறிப்பா முடி பறக்கற்து, வீபுதி தெறிக்கற்து, சண்ட முடிஞ்ச ஒடனே லைட்டா ரத்தத்த காட்றதுன்னு. 


வீரம் -ரோகித் ஷர்மா இன்னிங்க்ஸ் மாதிரி தாராளமா ஒன்ஸ் பாக்கலாம்

வருகைக்கு நன்றி

Blogger templates

Custom Search