Sunday, 29 September 2013

ராஜா ராணி - த்ரிஷா இல்லன்னா திவ்யா

ரொமான்ஸ் படம் எடுப்பது கத்தி மேல் நடக்குற மாதிரி, நமிதா உடம்புல இருக்குற புடவ மாதிரி - ரொம்ப ரிஸ்க்கு, எப்ப ச்லிப் ஆகும்ன்னே சொல்ல முடியாது. ஆக்‌ஷன் படம்ன்னா நம்பளால பண்ண முடியாதத ஹீரோ பண்ணும் போது பாத்து சிலிர்த்துக்கும் - ஆங்கிலத்துல (கக்)கூஸ்பம்புன்னு சொல்வாங்க. ஆனா லவ் படம்ன்னா நாம பண்ணத, நம்ப லைஃப்ல நடந்தத திரும்ப திரைல பாக்கும் போது சிலிர்த்துக்குமே - நல்ல லவ் படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் ரசனக்காரன்யா.. லவ் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸே இசையும், காஸ்டிங்க்கும். ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட கிளிச்சே காட்சிகள்னாலும், பிண்ணனி இசையும், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியும் ஒரு ஃப்ரெஷ்னஸ்ஸ கொண்டு வந்துடும். அப்டி சன் டி.வி காதல் செவ்வாய்ல இருந்து ரிதம், சூப்பர்ஹிட் வெள்ளில இருந்து மெளனராகம்ன்னு மிக்ஸ் பண்ணிருக்குற கலர்ஃபுல் காக்டெயில் தான் ராஜா ராணி.


ட்ரைலர்லேயே கதய ஓப்பனா சொல்லிட்டாங்க, லைஃப் ஆஃப்டர் லவ்ன்னு. ரெண்டு ட்ராக்ல எது என்ன ரொம்ப கவர்ந்துச்சுன்னா ஆர்யா - நஷ்ரியா ரொமான்ஸ் தான். சினிமாத்தனமான காதல் இருந்தாலும், அத Present பண்ண விதம் அருமை. கூட சந்தானத்தின் கூட்டணி, டைமிங்ல ரெண்டாம் பாதிய Audi கார்ல போற மாதிரி smooth and enjoyable ride. ஜெய் - நயந்தாரா matureda இருந்தாலும், ஜெய் அவரோட காரெக்டர்ர ஓவர்-டூ பண்ண மாதிரி ஃபீல். எங்கேயும் எப்போதும்ல இருந்த அந்த Innocence இதுல மிஸ்ஸிங். ஒரு வேள ரொம்ப எதிர்பார்த்ததால Disappoint ஆயிட்டேனோ? ஆர்யா முதற்பாதியில் பல இடங்களில் வழக்கம் போல ங்ங்ங்கேகேன்னு முழித்தபடி இருக்க, நயந்தாராவும் சத்யராஜ்ஜூம் செமயா ஸ்கோர் செஞ்சிருக்காங்க. இந்த மாதிரி படத்துல பொதுவா ஹீரோ-அப்பா இல்லாட்டி ஹீரோ-அம்மா அவங்களோட அன்ப மட்டுமே தூக்கி நிறுத்துற காட்சிகள் இருக்கும். இதுல ஒரு பொண்ணுக்கும் அப்பாக்கும் இருக்குற பாசத்த செயற்கைத்தனம் இல்லாம, நிறைவா தந்துருக்காரு அட்லீ. சத்யராஜ்ஜூம் ப்பா, மகளே, உன்னோட, சந்தோஷம்ன்னு யோகா செஞ்சிட்டே டயலாக் சொல்லாம நடிச்சிருக்கற்து ஆறுதல். ஜெய் அமெரிக்கா போயிட்டான்னு நயந்தாரா கலங்க ஆரம்பிக்குற எடத்துல சத்யராஜ்ஜூம் Syncல குலுங்கும் இடம் - Vintage. நயந்தாராவ இத்தன நாள் தமிழ் சினிமா என் மிஸ் பண்ணுச்சுன்னு அளவுக்கு Performance. ஜெய்யோடு இருக்கும் போது நக்கல், அடாவடி; ஆர்யாவோரு இருக்கும் போது சின்ன சந்தோஷம், ஏக்கம்ன்னு ரகளையா நடிச்சிருக்காங்க. என்ன க்ளிசரின் போட்டு அழும் போது கண்மையோட சேர்ந்து கருப்பு கலர்ல வர கண்ணீர் தான் ஒரே மைனஸ். அடுத்த குறும்புக்கார ஹீரோயின்னா கூப்டுங்க நஷ்ரியாவன்னு செம லைவ்லி கேரக்டர். சில லவ் சினிமாஸ்ல இருக்குற பெரிய மைனஸ் குறும்புக்கார ஹீரோயின்ன காட்டுறேன்னு அர லூசு கேரக்டர், இல்லன்னா சைக்கோ கேரக்டர்ன்னு Portray பண்ணிடுவாங்க. அப்டி இல்லாம நமக்கு புடிச்ச பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி சூப்பரோ சூப்பர். Brotherன்னு சொன்னாலும் நம்பள பொண்ணுங்க லவ் பண்ணுவாங்கன்னு ஒரு நம்பிக்கை ஊட்டும் டானிக் கேரக்டர்.


இந்த நாலு ஹீரோ - ஹீரோயின் செலக்‌ஷன்லேயே சிக்கர் தவான் மாதிரி ஒரு Dream Debutல ஹாஃப்-சென்சூரி அடிச்சிட்டாரு அட்லீ. இதுக்கு கூட பார்ட்னர்-ஷிப் போட்டு அட்லீய வழிநடத்திருக்காரு இசையமைப்பாளர் ஜீ.வி.ப்ரகாஷ்குமார். கல்யாண மூட்ல இருந்தாரோ என்னவோ, பிண்ணனி இசைல கட்டி போட்டுடுறாரு. அவர் இல்லாம கண்டிப்பா இந்த படம் Incompleteஆ இருந்துருக்குன்னு என் ஃபீல். சில காட்சிகளில் வவுத்துக்குள்ள லவ் பேர்ஸ்ட்டே பறக்க விட்டுடுறாரு.  ஓடே ஓடே பாடல் படமாக்கிய விதம் அருமை. கலர்ஃபுல் விஷுவல்ஸ் மூலம் போர் அடிக்காமல் நம்பள ஆக்ரமிச்சிடுறாரு ஒளிப்பதிவாளர், Well Done. வசனங்கள் பஞ்ச் பேசுறேன்னு லவ்வர்ஸ், பெண்கள தாக்கி இல்லாம யதார்த்தமா அமைஞ்சதும் சூப்பர்.

உங்கள எப்டிங்க கரெக்ட் பண்ற்து?


படத்துல மைனஸ்ன்னா சிறப்பா வந்துருக்க வேண்டிய இடங்கள் எல்லாம் ஒரே ஷார்ட்-ஃப்லிம் ஃபீல். ரெண்டு லவ் ட்ராக்கும் நல்லா பண்ணிருந்தாலும், End of the Dayல படம் பாத்துட்டு வரும் போது கொடுக்க வேண்டிய இம்பாக்ட்ட தரல. பஸ் பயணத்துல பாக்குற எதிர்த்த சீட்டு ஃபிகர் மாதிரி அந்த ஒரு மணி நேரம் மட்டும் ரசிக்குற மாதிரி இருந்துச்சு. ஆர்யாவும் நயந்தாராவும் அவங்களுக்குள்ள வர அந்த லவ்வ இன்னும் விரிவா காட்டிருக்கலாம், ஏனா படத்தோட உயிர்நாடியே அதான். மெளனராகம் படத்தோட வெற்றியே அங்கே தான்; வெறும் கார்த்திக் - ரேவதி காதல மட்டும் மையப்படுத்தாம மோகன் - ரேவதி எப்டி அவங்க அன்ப உணர்ராங்கன்னும் ரெண்டு Dimensionயும் சிறப்பா காட்டிருப்பாங்க. இதுல ஃப்ளாஸ்பேக்கே ரொம்ப நேரம் செலவிட்டதால, ரொம்ப அரக்க பறக்க படத்த முடிச்ச ஃபீல். அதுவும் ஏர்போர்ட் க்ளைமாக்ஸ் எல்லாம் த்ராபை.


எல்லா லவ் படமும் ஃபீல்-குட் படமா இருக்கற்தில்ல, அதுல கேரக்டர்ஸ் வாழ்ந்து காட்டணும். கொஞ்சம் கூட ஆபாசம், விரசம் இல்லாத குடும்பத்தோட ரசிக்குற படம். பட் என்ன தான் ஃபுல் மீல்ஸ் சாப்டாலும் ஒரு ‘ஏதோ குறையுதே’ன்னு தோணும்ல, அதே தான் இந்த படத்துலயும். எப்டி விண்ணைத்தாண்டி வருவாயா பாத்து தமிழ்நாட்டு தேவதாசுகள் யேசுதாஸ்ஸா மாறி ‘காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்’னு உணர்ச்சிவசப்பட்டு ஹிட் ஆக்குனாங்களோ, அதே மாதிரி இப்போ லவ் ஃபெயிலர் ஆகி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ற பாக்யராஜ்களுக்கும், சேரன்களுக்கும் ஏத்த படம். 


ராஜா சுமாரு, ராணி பேஜாரு

வருகைக்கு நன்றி

Blogger templates

Custom Search