Monday, 1 July 2013

தீயா வேல செய்யணும் குமாரு – நீ ரொம்ப சுமாரு

ஆண்டவன் நமக்கு அடையார் ஆனந்த பவன் அல்வா துண்ட கொடுக்காட்டியும், அரும்பாக்கம் ஆண்ட்டி செஞ்ச அதிரசத்த ஆச்சும் கொடுப்பான், அப்டி கொடுத்த சமந்தாங்கற அதிரசத்த கொத்திட்டு போன சித்தார்த் நடிப்புல, சுந்தர் சி இயக்கத்துல, நாளைய இயக்குநர்களின் ஸ்க்ரிப்ட் உதவியோட வந்துருக்குற படம் தான் ‘தீயா வேல செய்யணும் குமாரு’


ஒரு காமெடி படம் கொடுக்கற்து ரொம்ப கஷ்டம்ன்னு 1,24,563 பேரு சொல்லிருக்காங்க, அதுல நானும் ஒருத்தன். கேஷுவலா சிவா மனசுல சக்தி, சூது கவ்வும் மாதிரி படத்தயும் தந்துருக்கு தமிழ் சினிமா, அதே நேரம் சேட்டை, கண்ணா லட்டு திங்க ஆசயான்னு கோவம் வர மாதிரி காமெடியும் பண்ணி வச்சிருக்கு. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல நுழஞ்சாலே சூப்பர் ஃபிகரா இருக்கும்ன்னு லாஜிக் மாதிரியே சந்தானத்த போட்டாலே காமெடி படமா இருக்கும், கல்லாவும் கட்டலாம்ன்னு மனப்பால் குடிச்சு வாந்தி எடுத்தவங்களும் இருக்காங்க. தீ.வே.செ.கு படத்துல கதன்னு பெருசா ஒண்ணுமில்ல, ஆனா சந்தானத்த எப்டி வேல வாங்குன்னா க்ளிக் ஆகும்ன்னு சுந்த்ர் சி கரெக்டா ஆடியன்ஸ் பல்ஸ்ஸ தெரிஞ்சு வச்சுருக்காரு.


சித்தார்த்துக்கு பெருசா ஸ்கோப் இல்ல, சமந்தா கூட ரெண்டு சீன்ல வந்து எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டாரு. கதப்படி இவருக்கு பொண்ணுங்கனாலே ஆகாதாம், லவ் பண்ணவும் தெரியாதாம். சந்தானம் வரவரைக்கும் ஆர்.ஜே. பாலாஜி வாய்ஸ் ஓவர் கொடுக்குறேன்னு அவரோட ட்ரேட்மார்க் கவுண்டர்ஸ் கொடுத்து நாய்ஸ்- ஓவர் ஆக்கிட்டு இருந்தாரு. எஃப்.எம்ல அவர் ஸ்பீடா பேசுறது கேக்க ஜாலியா இருந்தாலும், படத்துல பாக்கும் போது ஷகிலா ஒடம்புல போர்த்துன ட்ரெஸ் மாதிரி ஒட்டவே இல்ல. இருந்தாலும் சில இடங்களில் சிக்லிக்கா மூட்டுனாரு. படத்தோட ஆல்-ரவுண்டரே சந்தானம் என்கின்ற ரவீந்திர ஜடேஜா. ஃபார்ம் அவுட் ஆன ஃபார்முலா வச்சு புகுந்து விளையாடிருக்காரு. ‘லூஸ் மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு ஆசப்படாத, யூரின் மாதிரி முன்னாடி போகணும் ஆசப்படு’ன்னு நெறய பட்டாசு காமெடி கொளுத்திருக்காரு. யூ ராக்கிட்ட.

ஹன்சிகா ரொம்ப டல்சிகா, ஒரே ஒரு பாட்டுல மட்டும் பம்பர் சீட் குலுக்கல் மாதிரி எங்கள மாதிரி வாலிப இள கு..ச்ச நெஞ்சங்கள சந்தோஷப்படுத்திருக்காங்க.. மனோபாலா, டெல்லி கணேஷ் ஒரு சீன் வந்தாலும் நச்ச்.. பாட்டெல்லாம் படு மொக்கயா எடுத்துருக்காங்க, எங்கேயும் எப்போதும் சத்யாவா இது? தனியா கேக்க சுமாரா இருந்தாலும், படத்தோட ஓட்டத்துல, எரிச்சல தான் தந்துச்சு, Wrong Placement. பின்னணி இசை நன்று.


ஓசோன் ஓட்ட மாதிரி பெரிய லாஜிக் ஓட்ட இருந்தாலும் (கணேஷ் கேரக்டர், ஒலக மகா காமெடி ஐ.டி. கம்பெனி), நல்ல டைம்-பாஸ் ஃபில்க்கா கொடுத்த சுந்தர்.சிக்கும் ஸ்கிரிப்ட்ல உதவியா இருந்த ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்களுக்கும் ஷொட்டு. மத்தபடி தூக்கி வச்சு கொண்டாடுற லெவல் காமெடி படம் இல்ல.

தீயா வேல செய்யணும் குமாரு – சந்தானம் இல்லாட்டி டமாருவருகைக்கு நன்றி!!

No comments:

Blogger templates

Custom Search