Sunday, 21 July 2013

மரியான் விமர்சனம்

காதலால் ஒருவன் எவ்ளோ கஷ்டத்துல போய் மாட்டிக்கிறான், பிறவு அதே காதலோட சக்தியால அவன் எப்டி போராடி மீண்டு வராங்கறத சொல்ல ரெண்டு நாளைக்கு ஓடுற படமா வந்துருக்கறது தான் மரியான்.


தனுஷ் நல்லா நடிச்சிருக்காரு, பட்டய கெளப்பிருக்காருன்னு சொல்லி போர் அடிச்சிருச்சு. ஆனாலும் நடிப்புலயும், பாடி லாங்குவேஜ்லயும் படத்துக்கு படம் அவர் காட்ற வேறுப்பாட்ட பாராட்டாம இருக்க முடில. பார்வதிய சர்ச்ல பாக்குற சீன் ஆகட்டும், காதல் வந்த ஒடனே அவ நம்பள பாப்பாளான்னு ஏங்கறதாகட்டும், நண்பன் செத்த தூக்கத்துல பார்வதிய அடிக்க பொங்கறதாகட்டும், ஃபோன்ல தன்னோட காதலையும், இயலாமையும் ஒண்ணு சேர பேசுற இடமாகட்டும், க்ளைமாக்ஸ்ல தன்னோட தெய்வமான கடல பாத்து ஆத்தான்னு கத்தறதாகட்டும், கடசி காட்சில பார்வதிய அணச்சிகிட்டு ‘அழாத, நான் வந்துட்டேன்’ன்னு வசனம் இல்லாம முகபாவங்கள்லேயே காட்ற இடமாகட்டும் – யப்பா தனுஷ்ஷூ நீ அசுரன்யா.படத்துல இருக்குற நல்ல சீன் எல்லாம் சொல்டேனே, இதுக்கு மேல படத்துல என்ன இருக்குன்னா கண்ணுக்கு குளிர்ச்சியா பனிமலராக பார்வதி. பூ படத்துல ‘ப்ப்ப்ப்ப்ப்ப்பா’ன்னு மூஞ்சில கொஞ்ச மேக்-அப்ப காணோம்ன்னு வந்த பார்வதி, இதுல அவ்ளோ அழகு. முந்தய படத்துலேயே நடிப்புல சோட போகாதவங்க, இதுல சொல்ல வேணுமா? நாலு வருஷம் மேல காத்திருந்து தமிழ்ல ஒரு சூப்பர் ரீ-எண்ட்ரி. படத்தோட காதல் காட்சிகள் க்ளிச்சேவா இருந்தாலும், பார்வதியோட கண்ணுல பொங்குற காதல் – அப்பப்பப்பா. வலுவில்லாத காதல் காட்சிகளுக்கு தனுஷ் – பார்வதி கெமிஷ்ட்ரி ஐ.சி.யூ Patientக்கு ஆக்சிஜன் மாதிரி.   தனுஷ் – பார்வதி அட்டகாசமான Casting இருந்தும் உமா ரியாஷ், பனிமலர் அப்பா, பொம்பள பொறுக்கி மைனர்ன்னு இதர கதாபாத்திரங்கள் செலக்ஷன்ல கோட்ட விட்டுட்டாரு பரத் பாலா. பனிமலர் அப்பாவோட டப்பிங் கொடுரம். சூடான் வில்லன் கனக்கச்சிதம், ஆனா புகுந்து விளையாட Scope இல்ல. ரஹ்மானின் இசைல பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்டு. எனக்கு பெர்சனலா இன்னும் கொஞ்ச நேரம் லீட், அது வந்த இடம் ரொம்ப பிடிச்சிது. எங்க போன ராசா முதற் Placement மோசம். பின்னணி இசைல சுமார் சுகுமார் ரஹ்மான்.


நெஞ்சே எழுன்னு ஆரம்பிக்கும் போதே
கொஞ்ச பேரு எழுந்து போயிட்டாங்களாமேபடத்தோட மிகப்பெரிய மைனஸ் எடிட்டிங். ஏகப்பட்ட ஜம்ப்ஸ், Continuity Misses. சிறப்பா ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அழகான ஃப்ரெம்ஸ் கூட ரெஜிஷ்டர் ஆகல.. ரெண்டாவது, இண்ட்ரெஷ்ட் இல்லாத திரைக்கதை. மரியான்னா சாவே இல்லாதவன்னு உணர்த்த தனுஷ் சாகுற மாதிரி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும், அவர் எப்டி அதுல இருந்து மீண்டு வரார்ங்கறத பாமரனுக்கும் புரியுற மாதிரி காட்டிருக்கலாம், உதாரணத்துக்கு பதுங்கு குழி காட்சி. 7 டாட் பால் நடுவுல சிக்ஸர் அடிக்கிற தோனி மாதிரி, ஒரு மோசமான சீன் பேட்ட்ரன் நடுவுல நல்ல சீன் வந்து உக்கார்ந்துக்கிது. படத்தோட வலுவே பார்வதி – தனுஷ் காதல் தான். ஆனா அதுவே ஏனோதானோன்னு ஸ்டார்ங்க்கா இல்லாம இருக்கற்தால தனுஷ் படுற கஷ்டத்துக்கு நம்பளால உச்ச் கொட்ட முடில. இந்த மாதிரி படங்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஹீரோ கூட நாமளும் பயணிச்சு, அவன் எப்டி தப்பிக்கிறான்னு ஒரு எதிர்ப்பார்ப்போட, அவனோட சோகத்துல நாமளும் சோலோ சாங் பாடி ‘Connect’ பண்ணிக்கிற Factor தான். மரியான்ல இது சுத்தமா மிஸ் ஆயிருச்சு. சுவாரசியமா வர வேண்டிய எஸ்கேப் சீன், டேய் சிக்கிரம் ஊர் போய் சேருடான்னு பொறுமைய சோதிக்கிற மாதிரி தனுஷ் உருண்டு பொறண்டு ஓடுறாரு. கடல் ஃபைட்ல எங்க ‘கிங் ஆஃப் இந்தியன் ஓசன்’ன்னு சிங்கம் - 2 ஹை-பிட்ச்ல கத்துவாரோன்னு பயம் இருந்தாலும், மணிரத்னம் சாருக்கு ட்ரிப்யூட்டா ‘கடல்டா’ன்னு சொல்லி அடிக்கிற டச் இருக்கே, என்னை போன்ற மணி சார் ஃபேன்ஸ்க்கு சக்கர பொங்கல் மாதிரிஒரு க்ரியேட்டரோட வெற்றி – Mindல Conceptualize பண்ண கதய, அழகா திரைக்கதையா Visualize பண்றது தான். அங்கங்க நல்ல சீன்ஸ் வச்ச இயக்குநர், திரைக்கதைக்கும் எடிட்டிங்க்கும் கொஞ்சம் மெனக்கெட்டுருந்தா தனுஷ், பார்வதி இவங்களோட அசுர உழைப்புக்கு கெடச்ச வெற்றியா இருந்துருக்கும். படம் முடியும் போது ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன’ன்னு பாட்டு ஓட ‘டேய் இதுவரைக்கும் இருந்ததே போதும், படத்த முடிங்கடான்னு கத்தாம இருக்க முடிலமரியான் – கிழிஞ்ச ஷு – சோல்லே இல்லை


வருகைக்கு நன்றி!!
   Monday, 1 July 2013

தீயா வேல செய்யணும் குமாரு – நீ ரொம்ப சுமாரு

ஆண்டவன் நமக்கு அடையார் ஆனந்த பவன் அல்வா துண்ட கொடுக்காட்டியும், அரும்பாக்கம் ஆண்ட்டி செஞ்ச அதிரசத்த ஆச்சும் கொடுப்பான், அப்டி கொடுத்த சமந்தாங்கற அதிரசத்த கொத்திட்டு போன சித்தார்த் நடிப்புல, சுந்தர் சி இயக்கத்துல, நாளைய இயக்குநர்களின் ஸ்க்ரிப்ட் உதவியோட வந்துருக்குற படம் தான் ‘தீயா வேல செய்யணும் குமாரு’


ஒரு காமெடி படம் கொடுக்கற்து ரொம்ப கஷ்டம்ன்னு 1,24,563 பேரு சொல்லிருக்காங்க, அதுல நானும் ஒருத்தன். கேஷுவலா சிவா மனசுல சக்தி, சூது கவ்வும் மாதிரி படத்தயும் தந்துருக்கு தமிழ் சினிமா, அதே நேரம் சேட்டை, கண்ணா லட்டு திங்க ஆசயான்னு கோவம் வர மாதிரி காமெடியும் பண்ணி வச்சிருக்கு. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல நுழஞ்சாலே சூப்பர் ஃபிகரா இருக்கும்ன்னு லாஜிக் மாதிரியே சந்தானத்த போட்டாலே காமெடி படமா இருக்கும், கல்லாவும் கட்டலாம்ன்னு மனப்பால் குடிச்சு வாந்தி எடுத்தவங்களும் இருக்காங்க. தீ.வே.செ.கு படத்துல கதன்னு பெருசா ஒண்ணுமில்ல, ஆனா சந்தானத்த எப்டி வேல வாங்குன்னா க்ளிக் ஆகும்ன்னு சுந்த்ர் சி கரெக்டா ஆடியன்ஸ் பல்ஸ்ஸ தெரிஞ்சு வச்சுருக்காரு.


சித்தார்த்துக்கு பெருசா ஸ்கோப் இல்ல, சமந்தா கூட ரெண்டு சீன்ல வந்து எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டாரு. கதப்படி இவருக்கு பொண்ணுங்கனாலே ஆகாதாம், லவ் பண்ணவும் தெரியாதாம். சந்தானம் வரவரைக்கும் ஆர்.ஜே. பாலாஜி வாய்ஸ் ஓவர் கொடுக்குறேன்னு அவரோட ட்ரேட்மார்க் கவுண்டர்ஸ் கொடுத்து நாய்ஸ்- ஓவர் ஆக்கிட்டு இருந்தாரு. எஃப்.எம்ல அவர் ஸ்பீடா பேசுறது கேக்க ஜாலியா இருந்தாலும், படத்துல பாக்கும் போது ஷகிலா ஒடம்புல போர்த்துன ட்ரெஸ் மாதிரி ஒட்டவே இல்ல. இருந்தாலும் சில இடங்களில் சிக்லிக்கா மூட்டுனாரு. படத்தோட ஆல்-ரவுண்டரே சந்தானம் என்கின்ற ரவீந்திர ஜடேஜா. ஃபார்ம் அவுட் ஆன ஃபார்முலா வச்சு புகுந்து விளையாடிருக்காரு. ‘லூஸ் மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு ஆசப்படாத, யூரின் மாதிரி முன்னாடி போகணும் ஆசப்படு’ன்னு நெறய பட்டாசு காமெடி கொளுத்திருக்காரு. யூ ராக்கிட்ட.

ஹன்சிகா ரொம்ப டல்சிகா, ஒரே ஒரு பாட்டுல மட்டும் பம்பர் சீட் குலுக்கல் மாதிரி எங்கள மாதிரி வாலிப இள கு..ச்ச நெஞ்சங்கள சந்தோஷப்படுத்திருக்காங்க.. மனோபாலா, டெல்லி கணேஷ் ஒரு சீன் வந்தாலும் நச்ச்.. பாட்டெல்லாம் படு மொக்கயா எடுத்துருக்காங்க, எங்கேயும் எப்போதும் சத்யாவா இது? தனியா கேக்க சுமாரா இருந்தாலும், படத்தோட ஓட்டத்துல, எரிச்சல தான் தந்துச்சு, Wrong Placement. பின்னணி இசை நன்று.


ஓசோன் ஓட்ட மாதிரி பெரிய லாஜிக் ஓட்ட இருந்தாலும் (கணேஷ் கேரக்டர், ஒலக மகா காமெடி ஐ.டி. கம்பெனி), நல்ல டைம்-பாஸ் ஃபில்க்கா கொடுத்த சுந்தர்.சிக்கும் ஸ்கிரிப்ட்ல உதவியா இருந்த ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்களுக்கும் ஷொட்டு. மத்தபடி தூக்கி வச்சு கொண்டாடுற லெவல் காமெடி படம் இல்ல.

தீயா வேல செய்யணும் குமாரு – சந்தானம் இல்லாட்டி டமாருவருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search