Sunday, 12 May 2013

சூது கவ்வும் - வெல்கம் நளன்


என்னிக்காச்சும் தமிழ் படம் பாக்கும் போது கெட்டவன் ஜெயிக்கணும், நல்லவன் தோக்கணும்ன்னு நெனச்சிருப்போமா? கெட்டவங்கள எல்லாம் ரசிச்சு அவங்கள தூக்கி வச்சு கொண்டாடிருக்கோமா? ஆங்கிலத்துல 'Suspension of disbelief'ன்னு சொல்வாங்க - அதாவது ஷகிலா பாவட சைஸ்ல லாஜிக் ஓட்டை இருந்தாலும், படம் பாக்கும் போது ‘இதெல்லாம் எப்டி நடக்கும், சம ஓலு’ன்னு நாம நையாண்டி நக்கல் சவுண்ட் கொடுக்காம, கைதட்டி அந்த காட்சிகள ரசிப்போம்ல? படம் முடிஞ்சு வெளிய வந்தாலும், நாம ரசிச்ச காட்சிகளெல்லாம் மைண்ட்ல ஓடிட்டே இருக்க, நம்ப ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள சொல்லி குதூகலிப்போம்ல? இப்டி ஒரு வரைட்டியான ஃபுல் மீல்ஸ் தான் சூது கவ்வும்.நாளைய இயக்குநரின் முதற்பகுதில எல்லாரையும் பெரிதும் ஈர்த்தவர் நளன் குமாரசாமி. தனக்கென ஒரு ஸ்டைல உருவாக்கி, காட்சியமைப்பு மற்றும் வசனங்கள் மூலமாக ‘கதயா, அத அது கெடக்கு கழுத’ன்னு பார்வையாளர்களை வசியப்படுத்தி விடுவார். அதுவும் அவரோட Ending , ‘என்னடா அவ்ளோதானா? முடிஞ்சு போச்சா?’ன்ங்கற மாதிரி இருக்கும். அரைகுறை கடத்தற்காரன், அவனுக்கு கெடச்ச மூணு கூட்டாளிகள், கடத்த தோதுவா அமைச்சர் பையன், இவங்கள பிடிக்க போலிஸ்ஸு - இப்டி நாலே வரில கதாபாத்திரங்கள் மூலமா படத்த விறுவிறுப்பா கொண்டுபோய் இருக்காரு. இது தான் படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே. ஜவ்வு மாதிரி  Character establish பண்றேன்னு இல்லாம, ஓரிரு காட்சிகளிலே இவன் இப்டி தான்னு ஆணி அடிச்ச மாதிரி காட்டிடுறாரு - குறிப்பா சைக்கோ இன்ஸ்பெக்டர், உத்தம அமைச்சர். அதே மாதிரி பன்ச் பேசுறேன், தத்துவம் சொல்றேன்னு வசனங்கள் இல்லாம, காட்சி மூலமாவே இல்ல சின்ன ஒன்-லைனர்ன்னு அதே கன்வே பண்ணிருக்குற டெக்னிக், அசத்தல்.


நெஞ்சுற நக்குற காட்சிகள் இல்ல, (இப்போ ஃபீல் பண்ற நேரமில்ல பாஸு டைமிங் காமெடி) காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்குறேன்னு நம்பள டயர்ட் ஆக்காம, டைமிங்ஙோட அடுத்து என்ன நடக்க போகுது, இந்த கேரக்டர் என்ன டிவிஸ்ட்ன்னு interestingஆ பல இடங்களில் நம்பள திக்குமுக்காட வைக்கிறார் நளன். ஒளிப்பதிவு, பாடல், பின்னணி இசை, எடிட்டிங்ன்னு எல்லா டிப்பார்ட்மெண்டிலும் குறையே வைக்காம நல்லா வேள வாங்கிருக்காரு. பாடல்கள் படத்துக்கு ஸ்பீட்-ப்ரேக்கரா இல்லாம, மாண்டேஜ் மூலமா, அதுவும் கடசி இரண்டு பாடங்கள் யோசிச்சு பார்த்தா ‘என்னடா சம்பந்தமே இல்லாம பாட்டு’ன்னு தோணவைக்காம கதை ஓட்டத்தோடு ரசிக்கும்படியா சேர்த்துருக்காரு. பின்னணி இசை ஒரு சாதாரண காட்சிய கூட elevate பண்ணிடுது. இது நடக்கும்ன்னு சில எடங்கள்ல நாம யூசிச்சாலும் பின்னணி இசையும், கேரக்டரோட டயலாக் டெலிவரியும் ஃப்ரெஷ்ஷா காட்டுது.

மணிரத்னம் படமா? ஷட்-அப்


படத்துல மைன்ஸ்ஸே இல்லையான்னா கதன்னு பெருசா இல்ல, ரெண்டாம் பாதி கொஞ்சம் lengthன்னு அடுக்கலாம்ன்னா ப்ளஸ் எல்லாம் அனகோண்டா பாம்பு மாதிரி மைனஸ்ஸ அசால்டா முழுங்கிடுது.. சஸ்பென்ஸ், காமெடி, பேன்டசின்னு ஒரு காமிக் புக் படிச்ச ஃபீல். சிம்பிள்ளா சொல்லணும்ன்னா ஹ-க்ளாஸ் ஹாஸ்பிடல் மாதிரி ‘பழக்கப்பட்ட நோய், பட் ஃப்ரெஷ் + ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்’


சூது கவ்வும் - இறுதியில் நளன்னே வெல்லும்


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search