Thursday, 7 February 2013

அலெக்ஸ் பாண்டியன், விஸ்வரூபம், கடல் - 3 in 1 விமர்சனம்


அலெக்ஸ் பாண்டியன் – என்னடா சாவுக்கு வர சொன்னா, பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்து துக்கம் விசாரிக்கிற மாதிரி விமர்சனம் தரானேன்னு யோசிக்க வேணாம்… ஏற்கனவே கைப்புள்ளய விட பலபேரு அடிச்சு, துவச்சு காயப்போட்ட படம் தான்… பருத்தி வீரன், நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன்னு பாக்குற மாதிரி படங்கள கொடுத்துட்டு இருந்தாரு… யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரில, இல்ல கமர்சியல் மசாலா சிறுத்தை ஹிட் ஆச்சே, அதுனால என்ன கருமத்த பண்ணாலும் மக்கள் பாப்பாங்கன்னு மெதப்புல இருக்காரு போல ஹீரோ… சென்னைல்ல ஃபோர் போட்டா கூட தண்ணி கெடச்சிரும், ஆனா இந்த படத்த தோண்டுன்னா ஒரு நாலு நல்ல சீன் கூட கெடக்காது… அதுவும் ஆரம்பத்துல ஒடியே ட்ரெயின்ன புடிக்கிற சாகசம் ஆகட்டும், அப்பப்பப்பப்பப்பப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாப்பா, இவர் பின்னாடி உக்காந்தா அஞ்சு மணி நேரத்துலேயே டெல்லி போய்ரலாம்… ப்ரிட்ஜ்ல இருந்து ட்ரெயின்ல குதிக்கிறாரு, காரு கேப்ல பறந்து வந்து அடிக்கிறாரு…ங்ங்ங்கொய்யால வீடியோ கேம்ல கூட இப்டிலா பண்ணமாட்டாங்கடா…. ஹீரோ சாரு அவர நொக்கிவர ஹெலிகாப்டர புடிச்சு ஒடைக்காதது தான் மிச்சம்… பட்ஜெட் ப்ராப்ளமோ? சந்தானம் காமெடி – காம ’நெடி’… இதெல்லாம் பழய கே.எஸ்.ரவிகுமார் படத்துலேயே பாத்தாச்சு பாஸூ… அனுஷ்கா நானும் இருக்கேன்னு அப்பப்போ வந்து போறாங்க… இசை – சரிகமபதநிச பின்னணி இசை சநிதபமகரிச…. அண்ணனும் தம்பியும் காப்டன் ரிட்டயர் ஆயிட்டாருன்னு இந்தியாவ காப்பாத்துறேன்னு கெளம்பி நம்ப உசுர வாங்குறாங்க… மொதல்ல இவனுங்க கிட்ட இருந்து தமிழ் சினிமாவ காப்பாத்தணும்… ஆனா ஒண்ணு, சூரியாகிட்ட இல்லாத இயல்பான ஸ்கிரின் ப்ரெசன்ஸ் கார்த்தி கிட்ட கொட்டி கெடக்கு… அத இது மாதிரி படத்துல நடிச்சு வீணாக்கிக்க வேண்டாம்…

மொத்தத்துல அலெக்ஸ் பாண்டியன் - 7 அனாசின், 8 விக்ஸ் ஆக்‌ஷன் 500


இந்த படத்துல நடிச்சதுக்கு என்ன நானே சுட்டுக்கணும்

விஸ்வரூபம் – அமெரிக்கால இருக்குற என்ன, ஃப்ரெண்ட்ஸ்லா வெறுப்பேத்துவாங்க, எனக்கு முன்னாடியே படத்த பாத்துட்டேன்னு… படம் பாக்கலாம்ன்னு ஆச தான்… ஆனா எவன் 15$ செலவழிச்சு, ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி பாக்கணும்? ரீலிஸ் டேட் சொன்னாலே ‘வாங்குடா தடை, போடுடா கேஸூ’ன்னு கமல வச்சு தமிழகத்துல கும்மாங்குத்து குத்தாடத்த போட, கமலும் ‘ஓடஓடஓட தூரம் கொறயல’ன்னு பாட, அப்டி என்னதான்டா படத்துல இருக்குன்னு பாக்கலாம்ன்னு போனேன்… கமல் படத்துல பிரச்சன என்னன்னா அவரு தான் புத்திசாலின்னு காட்டிக்கவே படம் எடுக்குற மாதிரி ஒரு ஃபீல் தோணும்… அதவுட பிரச்சன, படம் புரியல, அதுனால புடிக்கலன்னு சொன்னா, சிலபல கமல் பக்தர்கள் ‘போடா ஃபூல் (English Word) அறிவிருந்தா தான் படம் புரியும்’ன்னு திட்டிபுடுவாங்க… கமர்சியல்ரீதியா கமல் ஒரு இயக்குநரா மிகப்பெரிய வெற்றிய பெறலன்னு தான் சொல்ல முடியும்… அப்டியே கெடச்சாலும் (டைரக்டர் மட்டும் வேற பேரு), அந்த படம் சுமாருக்கும் கீழ தான் இருக்கும்… ஆனா கமல் ஒரு சூரன், இதான் உண்ம.. அத செவிட்டுல அறஞ்சா மாதிரி சொல்ற படம் தான் விஸ்வரூபம்… காலத்துக்கு ஏத்தா மாதிரி மாறி (Adapting to the continual changing trend), ரசிக்கும்படியாகவும், புத்திசாலிதனமாகவும், கமர்சியல் ஐட்டங்கள் கலந்துகட்டி எல்லாம் ஒருசேர விஸ்வருபத்த கொடுத்திருக்காரு… பாராட்ட நெறய விஷயங்கள் இருக்கு… திரைக்கதை, Dark Humor வசனங்கள், ஆஃப்கான் காட்சிகள், Attention to the detailsன்னு... ஊருக்குள்ள பலபசங்க ஸ்டைலிஷ் படம்ன்னு சொல்லி மொக்க பீஸா கொடுத்து ஏமாத்திட்டு இருக்க, கமல் ‘டாய்… த்தா சின்ன பசங்களா’ன்னு திரைக்கதை கூட ஸ்டைல சேத்து ஒரு பாடமே எடுத்துருக்காரு… விஷ்ணுவர்தன் & கோ கவனிக்க… ரெண்டாம் பாதி ஓவர் கமர்சியலிசம், FBI காமெடின்னு ஜவ்வடிச்சாலும், பார்ட்-2க்கு சூப்பரா அஸ்திவாரம் போட்டுருக்காரு… இதுக்கு ஒரு முழு விமர்சனம், பார்ட்-2 வந்தா தான் கொடுக்க முடியும்… ’I’m waiting’

மொத்ததுல விஸ்வரூபம் - வித்தகரூபம்

பேசாம அடுத்த படத்துக்கு ‘தடை’ன்னு பேர் வச்சிரலாமா?
‘தடை மேல தடை’ ஹெட்லைன்


கடல் – ஊருக்குள்ள ஒரு ஹீரோ இருந்தாராம், நாம என்ன படம் கொடுத்தாலும் அத பாக்க கூட்டம் வரும்ன்னு ஆணவத்துல இருந்தாராம்… தல மேலேய அடிச்சு உக்கார வச்ச அப்றோம் தான் ஷங்கர், முருகதாஸ்ன்னு ரூட்ட மாத்துனாரு… அதுமாதிரி மணிரத்னம் சார் நெனசிட்டாரு போல, எத எடுத்தாலும் க்ளாஸி, ரேஞ்சுன்னு சொல்ல கூட்டம் இருக்கும்ன்னு… ‘இது மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உங்கள அசசிக்க முடியாது’ சுஜாதா மறைவு கதை திரைக்கதைல அப்பட்டமா தெரியுது… கடசி படங்கள்ல இருந்த பாலிவுட் மோகம், இதுல இல்லாத்த நெனச்சு சந்தோஷப்பட்டாலும், ‘கடல், கிராமம்’ன்னு தனக்கு செட் ஆகாத Platform எடுத்து சொதப்பிருக்காரு…. படம் மொக்கயா இருந்தாலும் பாட்டெல்லாம் சூப்பராவாச்சும் எடுத்துருப்பாரு (உப: திருடா திருடா), கடல்ல அது கூட இல்ல… மானாட மயிலாட டான்ஸ் மாதிரி அடியே சாங்கு…. கதாபாத்திரம் எதுவும் மனசுல ஒட்டவே இல்ல, ‘அதே டெய்லர், அதே அந்நிய காட்சியமைப்பு’ எல்லாரும் சொல்ற மாதிரி ஒளிப்பதிவு சூப்பர், கண்ல எடுத்து ஒத்திக்கலாம் தான்… ஆனா கதைக்கு சுத்தமா செட் ஆகாத கலர்-டோன்… மணிசார் படம்ன்னா வசனம் கம்மிங்கறத மாத்தணும்ன்னு எல்லாரும் வசனமா பேசி இம்ச கொடுக்குறாங்க… கவுதம் நல்ல அறிமுகம், துளசிக்கு நல்ல ‘முகம்’… அஞ்சு வருஷம் கழிச்சு நடிக்கவா பாப்பா… இவனுங்க கூட இப்போதைக்கு சேராத… மணி சார், நாயகன் பாத்து ரசிச்சுருக்கேன், அஞ்சலி பாத்து பிரமிச்சிருக்கேன், அலைபாயுதே பாத்து உருகிருக்கேன், கண்ணத்தில் முத்தமித்தால் பாத்து சிலிர்த்திருக்கேன்… இப்டி சம்பாதிச்ச நல்ல பேர எல்லாம் கDULLல கரச்சிராதீங்க…. ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினேன், அங்கே கடல் ஓடிக்கொண்டிருந்ததால் திரும்ப வந்து விட்டேன்… 

மொத்தத்துல கடல் - கதறல்   

கிஸ்ஸிங் மிஸ்ஸிங்

No comments:

Blogger templates

Custom Search