Thursday, 3 January 2013

Diary காதல் - தைரியமான காதல் : பக்கம் 1


Series சுருக்கம் - ரெண்டு நண்பர்கள் : கார்த்திக்- அருண்… ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் கோர்ஸ் படிக்கிறாங்க (கடைசி வார்த்தை அருணுக்கு மட்டும்)… இவங்க போடுற மொக்க, கடலை, தத்துவம் இது தான் இந்த சீரிஸ். அருண் சின்சியரா லவ் பண்ற பொண்ணு பேரு அனுஷா.. இதுக்கு கார்த்திக் கொடுக்குற ஐடியாஸ்லா என்ன? அவங்க லவ் சக்ஸஸ் ஆச்சா? அதான் சில்லற பசங்க உங்களுக்காக..


அருண்: மச்சி, மெட்டர் தெரியுமா?

கார்த்தி: தெரியும் மச்சி…

அருண்: ச்ச… அப்போ எனக்கு தான் லேட்டா தெரிஞ்சிதா? ரூம்லேயே இருந்துட்டு எப்டிடா இதெல்லாம்?

கார்த்தி: நெத்து நைட்டு தான்டா தெரிஞ்சிது…

அருண்: டேய்.. அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல?

கார்த்தி: சொல்லலாம்ன்னு வந்தேன்… ஆனா பரதேசி சத்யம் தியேட்டர் டால்பி 5.1 டிஜிட்டல் சவுண்ட் மாதிரி கொரட்ட விட்டு தூங்கிட்டு இருந்த…

அருண்: எதிர்பாக்கவே இல்லல?

கார்த்தி: ஆமாடா… நேத்து தாத்தா கடைல இருந்து வரும் போது தான் தெரிஞ்சுது… சம அல்லு… 500 ரூபா கொடு பாத்துக்கலாம்ன்னு சொன்னா…

அருண்: டேய்… என்னடா ஒளரிட்டு இருக்க?

கார்த்தி: நாயே.. நேத்து ஒரு மெட்டர பாத்தேன்டா.. அத பத்தி தானே நீ கேட்டுட்டு இருக்க?

அருண்: முருகாகாகா… இவன வச்சிட்டு !! நான் சொல்றது தினேஷ் லவ் மெட்டர்டா…

கார்த்தி: அதுக்கு்ள்ள மேட்டர் ஆயிருச்சா?

அருண்: செருப்பால அடிப்பேன்.. எல்லாத்துக்கும் அந்த மேட்டரையே நினச்சிட்டு இரு.. நம்ப தினேஷ் இருக்கான்ல.. அவன் இ.சி.இ பிரியாங்கவ கரெக்ட் பண்டான்டா…

கார்த்தி: யாரு, அந்த பானி பூரி மேல தயிர் ஊத்துன பப்டி சாட் மாதிரி இருப்பாளே, அந்த சேட்டு பொண்ணு பிரியங்காவா?

அருண்: ஆமாடா… இன்னிக்கு காபிடே போயிருந்தேன்…  ரெண்டு பேரும் கைய பிடிக்கற்தென்ன, அடிச்சிக்கற்தென்ன, பாத்து பாத்து சிரிச்சிக்கற்தென்ன…

கார்த்தி: டேய் ஆதிவாசி… இதெல்லாம் பண்ணா லவ்வா? இப்போல்லா பொண்ணுங்க ரொம்ப சகஜமா பழக ஆரம்பிச்சிட்டாங்கடா… இதயெல்லாம் லவ்ன்னு நெனச்சிட்டு பசங்க ஏமாந்து போறீங்க… அப்றோம் அவள திட்டி ஷார்ட்-ஃபிலிம் எடுத்து ஃபேமஸ் ஆகிடுறீங்க… பொண்ணுங்கள புரிஞ்சிக்கணும்டா… 

அருண்: மூடு… சொல்ல வந்தத முழுசா கேளு… லவ் க்ரீட்டிங் கார்ட் அவ கொடுக்க, ஹார்ட் போட்ட காஃபி இவன் வாங்கி கொடுக்க, கண்ணுல காதல் பொங்கி வழிஞ்சு ஓடுச்சுடா…

கார்த்தி: அப்டியே அந்த பொங்குன லவ்ல நீ கொஞ்சம் காஃபி அடிச்சிருப்பியே… ச்ச குடிச்சிருப்பியே…

அருண்: இதுல கொடும என்னன்னா நம்ப க்ளாஸ் குண்டு லீலா கூட வேற ஒரு ட்ராக்க ஓட்டிட்டு இருக்கான்டா

கார்த்தி: ஒண்ணு Fate-ஆள் Attraction, இன்னொன்னு FAT-ஆள் Attraction போல

அருண்: ஆனா ஒண்ணுடா.. அன்னிக்கு பானி பூரி சாப்டும் போது, அவன் எக்ஸ்ட்ரா ’ஆலு’ கேக்கும் போதே டவுட் வந்துச்சு…

கார்த்தி: விடு மச்சி காரசேவுக்கு சட்ட போட்டவனுக்கெல்லாம் ரெண்டு லட்டு கிடைக்கும் போது, காண்டாமிருகத்துக்கு சட்ட போட்ட மாதிரி இருக்குற உனக்கு ரெண்டு இல்ல, ஒரு அட்டு ஆச்சும் கெடைக்கும்டா…

அருண்: த்தா… இதான் சாக்குனு என் அனுஷாவ அட்டுன்னு சொல்டல?

கார்த்தி: இல்ல மச்சி, ரைமிங்ஙா இருக்கணுமேன்னு… உன் ஆள நான் எப்டிடா தப்பா சொல்வேன்?? தாத்தாவோட காஃபி கடேலெயே அக்கவுண்ட் வச்சிருக்குற டாக்கு, நீ ஏன் காஃபி டே போன? உன்னால நேத்து எனக்கு பஜ்ஜி கூட கொடுக்கமாட்டேன்னு சொல்டாருடா…

அருண்: டேய்.. அனுஷா கூப்டா.. அவ பர்த்தே ட்ரீட்க்குடா…

கார்த்தி: அது முடிஞ்சு போய் நாலு மாசம் ஆச்சேடா… கல்யாணத்துக்கு சாப்பாடு போட சொன்னா, காதுகுத்துல வாழஇலைய போட்டுருக்கா அவ…

அருண்: நீ தானடா பர்த்தே அப்போவே ட்ரீட் கேட்டா கவுரவம் கொரஞ்சிடும்ன்னு சொன்ன… அத நம்பி நானும் கேக்காம இருந்தேன்டா.. முந்தாநேத்து ஏதேச்சையா பேசிட்டு இருக்கும் போது, ‘என் ஃப்ரெண்ட்ஸ்ல நீ மட்டும் தான் ட்ரீட் கேக்கல, ஏன்டா இப்டி இருக்கன்னு’ கேட்டுட்டா… மனசே கஷ்டமாயிடுச்சு… அதான் அவ ஃபீல் பண்ண கூடாதுன்னு ட்ரீட்க்கு போனேன்…

கார்த்தி: அவ அசிங்கப்படுத்துனது கூட உனக்கு வருத்தமில்ல… அவ ஜஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொன்னது கூட கவலயில்ல… அது எப்டி சார்? அவ ஃபீல் பண்வாளா? நாயே எப்போ அவ கூப்டுவா, எப்போ சுத்தலாம்ன்னு வயித்துல ஈர துணிய கட்டிட்டு சுத்துறியேடா…. நமக்காக ஒரு ஜீவன், நம்ப ஆருயிர் நண்பன் சாப்டாம இருக்கானேன்னு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணியாடா?

அருண்: இல்ல

கார்த்தி: என்னடா சட்டுன்னு இப்டி சொல்ட?


சிறிது நேரம் அமைதி


கார்த்தி தன்னுடைய மொபைலில் ‘என் இதயம் உடைத்தாய்’ பாடலை போட

அருண்: மச்சி… சிட்டுவேஷன் சாங்க்கா? ப்ளீஸ்டா, ஆஃப் பண்ணு…

கார்த்தி: என்னடா ஆச்சு?

அருண்: காபிடேல… She burst my heart 

கார்த்தி: வாட்? வை? ஏன்? எப்படி? என்னாச்சி?

அருண்: டேய் பேஜார் சுந்தராஜன்... அவ அப்டி பண்ண அப்றோம் செம ஃபீல் ஆயிடுச்சு

கார்த்தி: ப்ரோபோஸ் பண்ணிட்டியா?

அருண்: கேக்காதடா அந்த கதய…. பண்லாம்ன்னு பக்காவா ப்ளான் பண்ணி வச்சிருந்தேன்டா… ஒரே செகண்ட்ல எல்லாத்தையும்….

கார்த்தி: கேக்குற எனக்கே கஷ்டமா இருக்குடா… ஃப்ரெண்ட்டா இருக்கலாம்ன்னு சொல்டாலா? அப்டி சொன்னா கூட இன்னொரு சான்ஸ் இருக்கு மச்சி…

அருண்: அதுல்லா சொல்லலடா…

கார்த்தி: டேய் என்ன தான்டா நடந்துச்சு?

அருண்: நம்ம கிட்ட கிஃப்ட் வாங்க காசு இல்லன்னு, ஹார்ட்ல ஒரு பலூன் வாங்கிட்டு போனேன்டா

கார்த்தி: ஓஓ.. சிம்பாலிக்கா லவ்வ எக்ஸ்ப்ரெஷ் பண்றாராம்…. அப்றோம்?

அருண்: அவ வந்த உடனே, திஸ் இஸ் ஃபார் யூன்னு ஒரு ஸ்மைலோட கொடுத்தேன்…

கார்த்தி: அவ அத வாங்கிட்டு ஓஓமைகாட்ட்ட்ட்ட்.. ச்ச்ச்ச்ச்ச்ச்சோசுவிய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட் சொல்லிருப்பாளே?

அருண்: எப்டிடா பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே சொல்ற?

கார்த்தி: அன்னிக்கு கிளி ஜோசியன் சொன்னானேடா, உன்ன பைத்தியமா ஒருத்தி காதலிப்பான்னு… அதிர்ஷ்டசாலிடா நீ… மேல சொல்லு

அருண்: சுவிய்ட்ட்ட்ட்ன்னு சொல்லி அழுத்துனா பாரு, பலூன் வெடிச்சிருச்சுடா

கார்த்தி: உச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுசு

அருண்: அப்டியே என் நெஞ்சும் தான்டா… அதுல இருந்தது காத்து இல்ல… என்

கார்த்தி: ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுசு

அருண்: டேய் ரைமிங்க்கு பொறந்த ரைனா.. என் காதல்ன்னு சொல்ல வந்தேன்…. 

கார்த்தி: சத்யமா சொல்றேன்டா… இந்த ஜென்மத்துல அவ உனக்கு கெடைக்க மாட்டா… நெஞ்ச ஒடச்சாலாம்…. நைட்டு என் பக்கத்துல படுக்காத சொல்லிட்டேன், அவ நெஞ்ச தான் ஒடப்பா, நான் கு……

அருண்: மச்ச்ச்சீ

கார்த்தி: மூடு…. 

அருண்: லவ் ப்ரோபோஸ் பண்ண நீயாச்சும் ஐடியா தாயேன்டா…

கார்த்தி: அந்த டைரி மேட்டர வர்க்-கவுட் பண்ணியா?


பொறுக்குவார்கள்..


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search