Monday, 4 November 2013

ஆரம்பம் - ரம் பம் ரம்பம்

முன்னாடியே சொன்ன மாதிரி ஒரு சுமாரான கமர்ஷியல் படம் கூட மூணு - நாலு நாடி நரம்பெல்லாம் முறுக்கேற வைக்குற சீன்ஸ் இருந்தாலே படம் எனக்கு புடிச்சிரும். துப்பாக்கில அதே 1445வது தங்கச்சிய தூக்கிட்டு போன வில்லன் கேங்க போடுற அதே 1445வது அண்ணன் சீன் தான். ஆனா அந்த சீனோட Lead, அதோட Execution, அதுக்கு அப்றோம் வர follow throughன்னு மூணு செக்மண்ட்டையும் கோர்வையா Construct பண்ணிருப்பாரு முருகதாஸ் - கூடவே தூக்கி நிருத்துற பிண்ணனி இசை. சிங்கம் முதற்பாதில மயில்வாகனம் - துரைசிங்கம் முதற்முதலா சந்திக்கிற சீன் கூட சொல்லலாம். அஜித்தின் ஆரம்பத்துல அதே மாதிரி ரெண்டு காட்சிகள் பெருசா வந்துருக்கலாம் - ஆனா ஈர்க்காத காட்சி அமைப்பு, கோவத்த கெளப்புற பிண்ணனி இசை அந்த காட்சிகள Least Impressiveஆக ஆக்கிடிச்ச்சு. கண்ணாடியை கழட்ட வச்ச மினிஸ்டர் பொண்ண, கொஞ்ச நேரத்துல Gun Pointல நிக்க வச்சு கண்ணாடிய திரும்ப மாட்ற சீன் ஹீரோயிசத்தின் உச்சகட்டம் (படையப்பா அப்றோம்). வாய் வரைக்கும் வந்த விசில் காத்து, அங்கே நம்ப யுவன் போட்ட கொடுரமான பிண்ணனி இசையாலும், அதுக்கு அப்றோம் வந்த சுமாரான சேசிங் சீன்னாலயும் பின்னாடியே போயிருச்சு. அதே மாதிரி தல கைய்ய புடிச்ச ஒடனே உட்ற லுக்கு. அங்கேயும் பம்பு செட்டுல ரேப்பு பண்ண மாதிரி ஒரு இசை.


பேரு தான் ஆரம்பம், ஆனா முத இருபது நிமிசம் எப்படா ஆரம்பிப்பீங்கன்னு இருந்துச்சி. அதுக்கப்றோம் வந்த முதற்பாதி காட்சிகள் கொஞ்சம் விறுவிறு வீரேந்திர சேவாக்கு, கொஞ்சம் 35-45 ஓவர்ல ஆடுற மந்தமான தோனி மாதிரி போனாலும், பெரிய குறை இல்லை. அதுக்கு அப்றோம் வர உயிரோட்டம் இல்லாத மயிராட்டாம் ஃப்ளாஸ்பேக், கதையின் உயிர்நாடியான புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட் மாதிரி பெரிய லாஜிக் ஓட்டைகளால களையிழந்து போகுது. போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சு ஒடனே துபாய் போகறதெல்லாம் காதுல ராட்டினத்தயே சுத்துற மாதிரி. குறிப்பா கடசி அரை மணி நேரம் திராபை. கந்தசாமி பேங்க் ட்ரான்ஸ்ஃபர், தளபதி ஃப்ரெண்ட் சாங்கு, இந்தியன் தாத்தா லெக்சர்ன்னு நாசுக்கா விஷ்ணுவர்த்ன் உருவிருக்குற சீன்ஸ் இன்னும் நல்லா பண்ணிருக்கலாம் ரானா - அஜித் நட்புல இன்னும் கொஞ்சம் அழுத்தம் காமிச்சிருக்கலாம். இப்டி நெறய குறைகள் இருந்தாலும், அஜித் மங்காத்தா அப்றோம் கொஞ்சம் Interest காட்டி நடிச்சிருக்காரு, But மங்காத்தால இருந்த் அந்த Unpredictable Anti-hero இதுல மிஸ்ஸிங். தனி ஆளா கஷ்டப்பட்டு இந்த் படத்த தூக்கி நிறுத்த முயற்சி பண்ணிருக்காரு. நயந்தாரா, கிஷோர் தவிர்த்து மத்த காஸ்டிங் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஆர்யா இன்னும் Improve பண்ணனும். 

’லிஃப்ட்’க்கு நன்றி விஷ்ணு

பயத்துக்கே பயம் காட்டுற படங்களா விஜய் தந்த நேரத்துல எப்டி சுமார் மூஞ்சி குமாரு மாதிரி வேலாயுதம் வந்து குஷிபடுத்துச்சோ, அது மாதிரி பில்லா - 2 அப்றோம் ஆரம்பம். என்ன வேலாயுதம் கொஞ்சம் லோ மேக்கிங். இதுல கொஞ்சம் ஸ்டைலிஷ் அண்ட் சூப்பரா இங்கிலிஷ் பேசுற கேப்டன் விஜயகாந்த்தாக நம்ப தல. ஆனா ஒண்ணு, இந்த ஸ்க்ரிப்ட வச்சு விஷ்ணுவர்தன் நல்லா பண்ணிருக்கலாம். ஆனா அவரோட வலுவில்லாத திரைக்கதை, கைவிட்ட யுவனின் பிண்ணனி இசை, பவர் கம்மியான பவர்ஸ்டார் வசனங்கள் (அதுவும் செகண்ட் ஹாஃப்ல ஆனா ஊன்னா சாவு சாவுன்னு தல பேசுறது) Strictly one time watch மூவி தான், அதுவும் டிக்கெட் வாங்கிட்டோமேன்னு :P


ஆரம்பம் - அஜித் ஃபேன்ஸ்க்கு மட்டுமே இன்பம்


வருகைக்கு நன்றி

Sunday, 29 September 2013

ராஜா ராணி - த்ரிஷா இல்லன்னா திவ்யா

ரொமான்ஸ் படம் எடுப்பது கத்தி மேல் நடக்குற மாதிரி, நமிதா உடம்புல இருக்குற புடவ மாதிரி - ரொம்ப ரிஸ்க்கு, எப்ப ச்லிப் ஆகும்ன்னே சொல்ல முடியாது. ஆக்‌ஷன் படம்ன்னா நம்பளால பண்ண முடியாதத ஹீரோ பண்ணும் போது பாத்து சிலிர்த்துக்கும் - ஆங்கிலத்துல (கக்)கூஸ்பம்புன்னு சொல்வாங்க. ஆனா லவ் படம்ன்னா நாம பண்ணத, நம்ப லைஃப்ல நடந்தத திரும்ப திரைல பாக்கும் போது சிலிர்த்துக்குமே - நல்ல லவ் படம் எடுக்குற டைரக்டர் எல்லாம் ரசனக்காரன்யா.. லவ் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸே இசையும், காஸ்டிங்க்கும். ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட கிளிச்சே காட்சிகள்னாலும், பிண்ணனி இசையும், ஹீரோ-ஹீரோயின் கெமிஸ்ட்ரியும் ஒரு ஃப்ரெஷ்னஸ்ஸ கொண்டு வந்துடும். அப்டி சன் டி.வி காதல் செவ்வாய்ல இருந்து ரிதம், சூப்பர்ஹிட் வெள்ளில இருந்து மெளனராகம்ன்னு மிக்ஸ் பண்ணிருக்குற கலர்ஃபுல் காக்டெயில் தான் ராஜா ராணி.


ட்ரைலர்லேயே கதய ஓப்பனா சொல்லிட்டாங்க, லைஃப் ஆஃப்டர் லவ்ன்னு. ரெண்டு ட்ராக்ல எது என்ன ரொம்ப கவர்ந்துச்சுன்னா ஆர்யா - நஷ்ரியா ரொமான்ஸ் தான். சினிமாத்தனமான காதல் இருந்தாலும், அத Present பண்ண விதம் அருமை. கூட சந்தானத்தின் கூட்டணி, டைமிங்ல ரெண்டாம் பாதிய Audi கார்ல போற மாதிரி smooth and enjoyable ride. ஜெய் - நயந்தாரா matureda இருந்தாலும், ஜெய் அவரோட காரெக்டர்ர ஓவர்-டூ பண்ண மாதிரி ஃபீல். எங்கேயும் எப்போதும்ல இருந்த அந்த Innocence இதுல மிஸ்ஸிங். ஒரு வேள ரொம்ப எதிர்பார்த்ததால Disappoint ஆயிட்டேனோ? ஆர்யா முதற்பாதியில் பல இடங்களில் வழக்கம் போல ங்ங்ங்கேகேன்னு முழித்தபடி இருக்க, நயந்தாராவும் சத்யராஜ்ஜூம் செமயா ஸ்கோர் செஞ்சிருக்காங்க. இந்த மாதிரி படத்துல பொதுவா ஹீரோ-அப்பா இல்லாட்டி ஹீரோ-அம்மா அவங்களோட அன்ப மட்டுமே தூக்கி நிறுத்துற காட்சிகள் இருக்கும். இதுல ஒரு பொண்ணுக்கும் அப்பாக்கும் இருக்குற பாசத்த செயற்கைத்தனம் இல்லாம, நிறைவா தந்துருக்காரு அட்லீ. சத்யராஜ்ஜூம் ப்பா, மகளே, உன்னோட, சந்தோஷம்ன்னு யோகா செஞ்சிட்டே டயலாக் சொல்லாம நடிச்சிருக்கற்து ஆறுதல். ஜெய் அமெரிக்கா போயிட்டான்னு நயந்தாரா கலங்க ஆரம்பிக்குற எடத்துல சத்யராஜ்ஜூம் Syncல குலுங்கும் இடம் - Vintage. நயந்தாராவ இத்தன நாள் தமிழ் சினிமா என் மிஸ் பண்ணுச்சுன்னு அளவுக்கு Performance. ஜெய்யோடு இருக்கும் போது நக்கல், அடாவடி; ஆர்யாவோரு இருக்கும் போது சின்ன சந்தோஷம், ஏக்கம்ன்னு ரகளையா நடிச்சிருக்காங்க. என்ன க்ளிசரின் போட்டு அழும் போது கண்மையோட சேர்ந்து கருப்பு கலர்ல வர கண்ணீர் தான் ஒரே மைனஸ். அடுத்த குறும்புக்கார ஹீரோயின்னா கூப்டுங்க நஷ்ரியாவன்னு செம லைவ்லி கேரக்டர். சில லவ் சினிமாஸ்ல இருக்குற பெரிய மைனஸ் குறும்புக்கார ஹீரோயின்ன காட்டுறேன்னு அர லூசு கேரக்டர், இல்லன்னா சைக்கோ கேரக்டர்ன்னு Portray பண்ணிடுவாங்க. அப்டி இல்லாம நமக்கு புடிச்ச பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி சூப்பரோ சூப்பர். Brotherன்னு சொன்னாலும் நம்பள பொண்ணுங்க லவ் பண்ணுவாங்கன்னு ஒரு நம்பிக்கை ஊட்டும் டானிக் கேரக்டர்.


இந்த நாலு ஹீரோ - ஹீரோயின் செலக்‌ஷன்லேயே சிக்கர் தவான் மாதிரி ஒரு Dream Debutல ஹாஃப்-சென்சூரி அடிச்சிட்டாரு அட்லீ. இதுக்கு கூட பார்ட்னர்-ஷிப் போட்டு அட்லீய வழிநடத்திருக்காரு இசையமைப்பாளர் ஜீ.வி.ப்ரகாஷ்குமார். கல்யாண மூட்ல இருந்தாரோ என்னவோ, பிண்ணனி இசைல கட்டி போட்டுடுறாரு. அவர் இல்லாம கண்டிப்பா இந்த படம் Incompleteஆ இருந்துருக்குன்னு என் ஃபீல். சில காட்சிகளில் வவுத்துக்குள்ள லவ் பேர்ஸ்ட்டே பறக்க விட்டுடுறாரு.  ஓடே ஓடே பாடல் படமாக்கிய விதம் அருமை. கலர்ஃபுல் விஷுவல்ஸ் மூலம் போர் அடிக்காமல் நம்பள ஆக்ரமிச்சிடுறாரு ஒளிப்பதிவாளர், Well Done. வசனங்கள் பஞ்ச் பேசுறேன்னு லவ்வர்ஸ், பெண்கள தாக்கி இல்லாம யதார்த்தமா அமைஞ்சதும் சூப்பர்.

உங்கள எப்டிங்க கரெக்ட் பண்ற்து?


படத்துல மைனஸ்ன்னா சிறப்பா வந்துருக்க வேண்டிய இடங்கள் எல்லாம் ஒரே ஷார்ட்-ஃப்லிம் ஃபீல். ரெண்டு லவ் ட்ராக்கும் நல்லா பண்ணிருந்தாலும், End of the Dayல படம் பாத்துட்டு வரும் போது கொடுக்க வேண்டிய இம்பாக்ட்ட தரல. பஸ் பயணத்துல பாக்குற எதிர்த்த சீட்டு ஃபிகர் மாதிரி அந்த ஒரு மணி நேரம் மட்டும் ரசிக்குற மாதிரி இருந்துச்சு. ஆர்யாவும் நயந்தாராவும் அவங்களுக்குள்ள வர அந்த லவ்வ இன்னும் விரிவா காட்டிருக்கலாம், ஏனா படத்தோட உயிர்நாடியே அதான். மெளனராகம் படத்தோட வெற்றியே அங்கே தான்; வெறும் கார்த்திக் - ரேவதி காதல மட்டும் மையப்படுத்தாம மோகன் - ரேவதி எப்டி அவங்க அன்ப உணர்ராங்கன்னும் ரெண்டு Dimensionயும் சிறப்பா காட்டிருப்பாங்க. இதுல ஃப்ளாஸ்பேக்கே ரொம்ப நேரம் செலவிட்டதால, ரொம்ப அரக்க பறக்க படத்த முடிச்ச ஃபீல். அதுவும் ஏர்போர்ட் க்ளைமாக்ஸ் எல்லாம் த்ராபை.


எல்லா லவ் படமும் ஃபீல்-குட் படமா இருக்கற்தில்ல, அதுல கேரக்டர்ஸ் வாழ்ந்து காட்டணும். கொஞ்சம் கூட ஆபாசம், விரசம் இல்லாத குடும்பத்தோட ரசிக்குற படம். பட் என்ன தான் ஃபுல் மீல்ஸ் சாப்டாலும் ஒரு ‘ஏதோ குறையுதே’ன்னு தோணும்ல, அதே தான் இந்த படத்துலயும். எப்டி விண்ணைத்தாண்டி வருவாயா பாத்து தமிழ்நாட்டு தேவதாசுகள் யேசுதாஸ்ஸா மாறி ‘காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்’னு உணர்ச்சிவசப்பட்டு ஹிட் ஆக்குனாங்களோ, அதே மாதிரி இப்போ லவ் ஃபெயிலர் ஆகி கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்ற பாக்யராஜ்களுக்கும், சேரன்களுக்கும் ஏத்த படம். 


ராஜா சுமாரு, ராணி பேஜாரு

வருகைக்கு நன்றி

Sunday, 25 August 2013

பட்டத்து யானை - அட்டு யானை


விஷால்: பாலா கூட படம் பண்ணாலும் நம்பள கவுத்துட்டாரு, சும்மா ஒரு நிமிஷம் வந்த தீயா வேல செய்யணும் குமாரு கூட ஹிட்டடிக்குது, நம்மள ஹீரோவாவே ஏத்துக்க மாட்டாங்களா?

பூபதி: யார் பாஸ் சொன்னா? விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமால மிகப்பெரிய மாஸ் ஹீரோவே நீங்க தான். ரஜினி, விஜய்க்கு அடுத்து நீங்க அடிச்சா தான் மக்கள் நம்புவாங்கங்றேன்…

சந்தானம்: சும்மா இருந்த சோனாவ சொறிஞ்சு வுட்டு மூடு ஏத்துறானே?

விஷால்: அப்போ நாம படம் பண்ணலாம் பூபதி. எனக்காக மாஸா ஒரு கத வச்சிருக்கீங்களா?

பூபதி: இருக்கே, படத்த ஒப்பன் பண்ணா நீங்க ஒரு ஊருல இருந்து இன்னோரு ஊருக்கு வரீங்க..

சந்தானம்: அத தானேடா எல்லா படத்துலயும் இவன் பண்ணிட்டு இருக்கான்? நேர்மையான கவர்மென்ட் ஆப்பிசர்க்கு அடுத்து ஊருக்கு ஊர் போறற்து விஷால் மட்டும் தான்..

பூபதி: போன படத்துல எல்லாம் மதுரைல இருந்து சென்னை, பட்டுக்கோட்டைல இருந்து திருச்சின்னு தானே போனாரு. இப்போ மதுரைல இருந்து திருச்சிக்கு வராரு விஷால்

சந்தானம்: ஏன், பஸ் மாறி ஏறிட்டாரா? 

விஷால்: ஆரம்பமே அசத்தலா இருக்கு, மேல சொல்லுங்க..

பூபதி: வரும் போது தனியா வரல, ஃப்ரெண்ட்ஸோட வரீங்க

சந்தானம்: இது சண்டைக்கோழில வரல?

பூபதி: நல்லா காமெடி பண்றீங்களே பாஸ், பேசாம இவரயும் படத்துக்கு சேத்துக்கலாம், விஷால் சார், நீங்களும் உங்க ஃப்ரெண்ட்ஸ்ஸூம் சந்தானத்த பாக்க வரீங்க, அப்டியே ஒரு 40 மினிட்ஸ் காமெடி ட்ராக்

சந்தானம்: வாண்டட்டா மண்டைய கொடுத்து மொட்ட போட்டுக்கிட்டேனோ? நான் நல்லா காமெடி பண்றேனோ இல்லையோ நீங்க பண்றீங்கடா..

விஷால்: காமெடி படம் வேணாம் பூபதி, நடுவுல மத்தவன் பொண்டாட்டி மேல ஆச படுற வில்லன், ஏஞ்சலுக்கு தாவணி கட்டி விட்ட மாதிரி ஹீரோயின்னு மிக்ஸ் பண்ணுங்க..

பூபதி: பேஸா பண்ணிடுவோம்..

சந்தானம்: டேய், அவன் என்ன கல்யாண சமையலுக்கு உன்ன காண்ட்ராக்டரா எடுக்க வந்துருக்கான், பேஸா பண்ணுவோம், பாஸ்டா பண்ணுவோம்ன்னு

பூபதி: சூப்பர் சார், நீங்க கல்யாண காண்ட்ராக்டர், இவங்க உங்க அசிட்டண்ட்ஸ், ஊருல இருக்குற ஸ்கூல் படிக்கிற பொண்ண பாத்த உடனே காதல், அவ மேல வில்லனுக்கும் காதல்

சந்தானம்: இது தான் மலைக்கோட்டைல பாத்தோமே?

பூபதி: சரி, அப்போ வில்லன் தம்பிக்கு காதல்

சந்தானம்: டேய் டால்டா, அதுவும் மலைக்கோட்டை தான்டா..

பூபதி: சரி, அப்போ வில்லன் இருக்கான், அவன் அண்ணன் ஒரு காமெடி பீஸ், இந்த காமெடியனோட தம்பி காதலிக்கிறான், எப்படி இப்போ ட்ப்பரண்டா இருக்கா?

சந்தானம்: ஊரே பேசுற மாதிரி கத இருக்கு சார்ன்னு சொல்றவங்க மத்தில பேசுறத வச்சே கத எழுதுறவன இப்போ தான்டா பாக்குறேன், சரி எனக்கே போர் அடிக்குது, இண்டர்வல் விடு


அடுத்த படத்துல கட்ட விரல்லயே வில்லன நசுக்குறீங்க - கட்டத்து யானைன்னு

பூபதி: உடஞ்ச ப்ரிட்ஜ்ல சண்ட

சந்தானம்: அந்த ப்ரிட்ஜ்ஜ ஒடச்சதே விஷால் தானே?

பூபதி: ஒரு 20 பேர பொறட்டி எடுக்குறீங்க.

விஷால்: 20 வேணாம்ன்னே, ஒரு 30?

சந்தானம்: இவன் ஆயா மாதிரி கத சொன்னா, அவன் பாயா மாதிரி அதுக்கு மேல கேக்குறானே.. பரோட்டா மாஸ்டரா போக வேண்டியவன், அநேகமா இந்த படம் எடுத்து ரீலிஸ் பண்ண அப்றோம் அங்க தான் போவான் போல

பூபதி: அவங்கள அடிச்சிட்டு நீங்க ஏன் திருச்சிக்கு வந்தீங்கன்னு சொல்றீங்க?

விஷால்: ஏன்?

சந்தானம்: திருச்சி வரைக்கும் தான் காசு இருந்திச்சாம், கேக்குறான் பாரு.. மதுரைல ஏதாச்சும் இன்னொரு வில்லன அடிச்சிருப்ப

பூபதி: இல்ல, அங்க தான் ட்விஸ்ட்டு, இவர் மதுரல அடிச்சிட்டு வரல, கொலயே பண்ணிட்டு வந்துருக்காரு.. அதுவும் மதுர தெருவுல ஒண்ணுக்கு மூணா அவ்வொருத்தனயும் ஓட வுட்டு கொல பண்ணாரு. அதுக்கு காரணம்…

சந்தானம்: வேணாண்டா போதும், இதுக்கே என் பிஞ்சு மனசு குலுங்குதுடா

பூபதி: ஆமான் சார், ஒரு பிஞ்சு பாப்பாவ கொல பண்ணிடுறாங்க..

சந்தானம்: இதயெல்லாம் நாங்க பாட்ஷாலேயே பாத்துட்டோமேடா..

பூபதி: அது பாம்பே, இது திருச்சி

சந்தானம்: டேய் என்ன தான் டூ-பீஸ்ல இருந்து தாவணி கட்டுனாலும் நயன்தாரா நயன்தாரா தான்டா திருட்டு மூதேவி… சரி, அந்த செத்து போன மூணு பசங்கள்ல ஒருத்தனொட அப்பன் தானே இன்னொரு வில்லன்?

பூபதி: ஆமா சார், எப்டி கரெக்டா ட்விஸ்ட்க்கு ட்விஸ்ட்ட கண்டுபிடிச்சீங்க?

சந்தானம்: இந்த இத்து போன கதய சொல்ல நீ எடுக்குடா? முந்தாநாள் பொறந்த குழந்த கூட இவனோட முன்னாடி படத்த சொல்லுமேடா…

விஷால்: சார், கத சூப்பர்.. ப்ரொடியூசர் எப்பவோ ரெடி, ஒடனே சூட்டிங் ஆரம்பிச்சிடுறோம்..

சந்தானம்: டேய் டேய், செகண்ட்-ஆப் கேக்கலையாடா?

விஷால்: வழக்கம் போல அந்த பொண்ண காப்பாத்தி, இவங்கள அடிச்சு பொளக்க போறேன், எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?

சந்தானம்: டேய் செல்லக்குட்டி, அது அப்டி இல்ல.. எவ்ளோ வாட்டி பண்ணிட்டோம், இந்த வாட்டியும் பண்ண மாட்டோமா?

தமிழ்சினிமால ரெண்டு ஹீரோங்க இருக்காங்க.. அவங்களுக்கு ரசிகர்களே இல்லனாலும், நமக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு, அவங்க இது மாதிரி பண்ண சொல்லி கேக்குறாங்க, அவங்களுக்கு புடிச்ச மாதிரி பண்றேன்னு தொழில் சுத்தமா தமிழ் சினிமால இருக்கற்து - பவர் ஸ்டார் அண்ட் விஷால்.. வழக்கம் போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு விஷால் செலுத்தும் மற்றுமொரு காணிக்கை


பட்டத்து யானை – ஒடஞ்சி போன பானை


வருகைக்கு நன்றி

Sunday, 21 July 2013

மரியான் விமர்சனம்

காதலால் ஒருவன் எவ்ளோ கஷ்டத்துல போய் மாட்டிக்கிறான், பிறவு அதே காதலோட சக்தியால அவன் எப்டி போராடி மீண்டு வராங்கறத சொல்ல ரெண்டு நாளைக்கு ஓடுற படமா வந்துருக்கறது தான் மரியான்.


தனுஷ் நல்லா நடிச்சிருக்காரு, பட்டய கெளப்பிருக்காருன்னு சொல்லி போர் அடிச்சிருச்சு. ஆனாலும் நடிப்புலயும், பாடி லாங்குவேஜ்லயும் படத்துக்கு படம் அவர் காட்ற வேறுப்பாட்ட பாராட்டாம இருக்க முடில. பார்வதிய சர்ச்ல பாக்குற சீன் ஆகட்டும், காதல் வந்த ஒடனே அவ நம்பள பாப்பாளான்னு ஏங்கறதாகட்டும், நண்பன் செத்த தூக்கத்துல பார்வதிய அடிக்க பொங்கறதாகட்டும், ஃபோன்ல தன்னோட காதலையும், இயலாமையும் ஒண்ணு சேர பேசுற இடமாகட்டும், க்ளைமாக்ஸ்ல தன்னோட தெய்வமான கடல பாத்து ஆத்தான்னு கத்தறதாகட்டும், கடசி காட்சில பார்வதிய அணச்சிகிட்டு ‘அழாத, நான் வந்துட்டேன்’ன்னு வசனம் இல்லாம முகபாவங்கள்லேயே காட்ற இடமாகட்டும் – யப்பா தனுஷ்ஷூ நீ அசுரன்யா.படத்துல இருக்குற நல்ல சீன் எல்லாம் சொல்டேனே, இதுக்கு மேல படத்துல என்ன இருக்குன்னா கண்ணுக்கு குளிர்ச்சியா பனிமலராக பார்வதி. பூ படத்துல ‘ப்ப்ப்ப்ப்ப்ப்பா’ன்னு மூஞ்சில கொஞ்ச மேக்-அப்ப காணோம்ன்னு வந்த பார்வதி, இதுல அவ்ளோ அழகு. முந்தய படத்துலேயே நடிப்புல சோட போகாதவங்க, இதுல சொல்ல வேணுமா? நாலு வருஷம் மேல காத்திருந்து தமிழ்ல ஒரு சூப்பர் ரீ-எண்ட்ரி. படத்தோட காதல் காட்சிகள் க்ளிச்சேவா இருந்தாலும், பார்வதியோட கண்ணுல பொங்குற காதல் – அப்பப்பப்பா. வலுவில்லாத காதல் காட்சிகளுக்கு தனுஷ் – பார்வதி கெமிஷ்ட்ரி ஐ.சி.யூ Patientக்கு ஆக்சிஜன் மாதிரி.   தனுஷ் – பார்வதி அட்டகாசமான Casting இருந்தும் உமா ரியாஷ், பனிமலர் அப்பா, பொம்பள பொறுக்கி மைனர்ன்னு இதர கதாபாத்திரங்கள் செலக்ஷன்ல கோட்ட விட்டுட்டாரு பரத் பாலா. பனிமலர் அப்பாவோட டப்பிங் கொடுரம். சூடான் வில்லன் கனக்கச்சிதம், ஆனா புகுந்து விளையாட Scope இல்ல. ரஹ்மானின் இசைல பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்டு. எனக்கு பெர்சனலா இன்னும் கொஞ்ச நேரம் லீட், அது வந்த இடம் ரொம்ப பிடிச்சிது. எங்க போன ராசா முதற் Placement மோசம். பின்னணி இசைல சுமார் சுகுமார் ரஹ்மான்.


நெஞ்சே எழுன்னு ஆரம்பிக்கும் போதே
கொஞ்ச பேரு எழுந்து போயிட்டாங்களாமேபடத்தோட மிகப்பெரிய மைனஸ் எடிட்டிங். ஏகப்பட்ட ஜம்ப்ஸ், Continuity Misses. சிறப்பா ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள், அழகான ஃப்ரெம்ஸ் கூட ரெஜிஷ்டர் ஆகல.. ரெண்டாவது, இண்ட்ரெஷ்ட் இல்லாத திரைக்கதை. மரியான்னா சாவே இல்லாதவன்னு உணர்த்த தனுஷ் சாகுற மாதிரி சந்தர்ப்பங்கள் அமைந்தாலும், அவர் எப்டி அதுல இருந்து மீண்டு வரார்ங்கறத பாமரனுக்கும் புரியுற மாதிரி காட்டிருக்கலாம், உதாரணத்துக்கு பதுங்கு குழி காட்சி. 7 டாட் பால் நடுவுல சிக்ஸர் அடிக்கிற தோனி மாதிரி, ஒரு மோசமான சீன் பேட்ட்ரன் நடுவுல நல்ல சீன் வந்து உக்கார்ந்துக்கிது. படத்தோட வலுவே பார்வதி – தனுஷ் காதல் தான். ஆனா அதுவே ஏனோதானோன்னு ஸ்டார்ங்க்கா இல்லாம இருக்கற்தால தனுஷ் படுற கஷ்டத்துக்கு நம்பளால உச்ச் கொட்ட முடில. இந்த மாதிரி படங்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஹீரோ கூட நாமளும் பயணிச்சு, அவன் எப்டி தப்பிக்கிறான்னு ஒரு எதிர்ப்பார்ப்போட, அவனோட சோகத்துல நாமளும் சோலோ சாங் பாடி ‘Connect’ பண்ணிக்கிற Factor தான். மரியான்ல இது சுத்தமா மிஸ் ஆயிருச்சு. சுவாரசியமா வர வேண்டிய எஸ்கேப் சீன், டேய் சிக்கிரம் ஊர் போய் சேருடான்னு பொறுமைய சோதிக்கிற மாதிரி தனுஷ் உருண்டு பொறண்டு ஓடுறாரு. கடல் ஃபைட்ல எங்க ‘கிங் ஆஃப் இந்தியன் ஓசன்’ன்னு சிங்கம் - 2 ஹை-பிட்ச்ல கத்துவாரோன்னு பயம் இருந்தாலும், மணிரத்னம் சாருக்கு ட்ரிப்யூட்டா ‘கடல்டா’ன்னு சொல்லி அடிக்கிற டச் இருக்கே, என்னை போன்ற மணி சார் ஃபேன்ஸ்க்கு சக்கர பொங்கல் மாதிரிஒரு க்ரியேட்டரோட வெற்றி – Mindல Conceptualize பண்ண கதய, அழகா திரைக்கதையா Visualize பண்றது தான். அங்கங்க நல்ல சீன்ஸ் வச்ச இயக்குநர், திரைக்கதைக்கும் எடிட்டிங்க்கும் கொஞ்சம் மெனக்கெட்டுருந்தா தனுஷ், பார்வதி இவங்களோட அசுர உழைப்புக்கு கெடச்ச வெற்றியா இருந்துருக்கும். படம் முடியும் போது ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன’ன்னு பாட்டு ஓட ‘டேய் இதுவரைக்கும் இருந்ததே போதும், படத்த முடிங்கடான்னு கத்தாம இருக்க முடிலமரியான் – கிழிஞ்ச ஷு – சோல்லே இல்லை


வருகைக்கு நன்றி!!
   Monday, 1 July 2013

தீயா வேல செய்யணும் குமாரு – நீ ரொம்ப சுமாரு

ஆண்டவன் நமக்கு அடையார் ஆனந்த பவன் அல்வா துண்ட கொடுக்காட்டியும், அரும்பாக்கம் ஆண்ட்டி செஞ்ச அதிரசத்த ஆச்சும் கொடுப்பான், அப்டி கொடுத்த சமந்தாங்கற அதிரசத்த கொத்திட்டு போன சித்தார்த் நடிப்புல, சுந்தர் சி இயக்கத்துல, நாளைய இயக்குநர்களின் ஸ்க்ரிப்ட் உதவியோட வந்துருக்குற படம் தான் ‘தீயா வேல செய்யணும் குமாரு’


ஒரு காமெடி படம் கொடுக்கற்து ரொம்ப கஷ்டம்ன்னு 1,24,563 பேரு சொல்லிருக்காங்க, அதுல நானும் ஒருத்தன். கேஷுவலா சிவா மனசுல சக்தி, சூது கவ்வும் மாதிரி படத்தயும் தந்துருக்கு தமிழ் சினிமா, அதே நேரம் சேட்டை, கண்ணா லட்டு திங்க ஆசயான்னு கோவம் வர மாதிரி காமெடியும் பண்ணி வச்சிருக்கு. எஸ்.ஆர்.எம் காலேஜ்ல நுழஞ்சாலே சூப்பர் ஃபிகரா இருக்கும்ன்னு லாஜிக் மாதிரியே சந்தானத்த போட்டாலே காமெடி படமா இருக்கும், கல்லாவும் கட்டலாம்ன்னு மனப்பால் குடிச்சு வாந்தி எடுத்தவங்களும் இருக்காங்க. தீ.வே.செ.கு படத்துல கதன்னு பெருசா ஒண்ணுமில்ல, ஆனா சந்தானத்த எப்டி வேல வாங்குன்னா க்ளிக் ஆகும்ன்னு சுந்த்ர் சி கரெக்டா ஆடியன்ஸ் பல்ஸ்ஸ தெரிஞ்சு வச்சுருக்காரு.


சித்தார்த்துக்கு பெருசா ஸ்கோப் இல்ல, சமந்தா கூட ரெண்டு சீன்ல வந்து எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டாரு. கதப்படி இவருக்கு பொண்ணுங்கனாலே ஆகாதாம், லவ் பண்ணவும் தெரியாதாம். சந்தானம் வரவரைக்கும் ஆர்.ஜே. பாலாஜி வாய்ஸ் ஓவர் கொடுக்குறேன்னு அவரோட ட்ரேட்மார்க் கவுண்டர்ஸ் கொடுத்து நாய்ஸ்- ஓவர் ஆக்கிட்டு இருந்தாரு. எஃப்.எம்ல அவர் ஸ்பீடா பேசுறது கேக்க ஜாலியா இருந்தாலும், படத்துல பாக்கும் போது ஷகிலா ஒடம்புல போர்த்துன ட்ரெஸ் மாதிரி ஒட்டவே இல்ல. இருந்தாலும் சில இடங்களில் சிக்லிக்கா மூட்டுனாரு. படத்தோட ஆல்-ரவுண்டரே சந்தானம் என்கின்ற ரவீந்திர ஜடேஜா. ஃபார்ம் அவுட் ஆன ஃபார்முலா வச்சு புகுந்து விளையாடிருக்காரு. ‘லூஸ் மோஷன் மாதிரி பின்னாடி போகணும்ன்னு ஆசப்படாத, யூரின் மாதிரி முன்னாடி போகணும் ஆசப்படு’ன்னு நெறய பட்டாசு காமெடி கொளுத்திருக்காரு. யூ ராக்கிட்ட.

ஹன்சிகா ரொம்ப டல்சிகா, ஒரே ஒரு பாட்டுல மட்டும் பம்பர் சீட் குலுக்கல் மாதிரி எங்கள மாதிரி வாலிப இள கு..ச்ச நெஞ்சங்கள சந்தோஷப்படுத்திருக்காங்க.. மனோபாலா, டெல்லி கணேஷ் ஒரு சீன் வந்தாலும் நச்ச்.. பாட்டெல்லாம் படு மொக்கயா எடுத்துருக்காங்க, எங்கேயும் எப்போதும் சத்யாவா இது? தனியா கேக்க சுமாரா இருந்தாலும், படத்தோட ஓட்டத்துல, எரிச்சல தான் தந்துச்சு, Wrong Placement. பின்னணி இசை நன்று.


ஓசோன் ஓட்ட மாதிரி பெரிய லாஜிக் ஓட்ட இருந்தாலும் (கணேஷ் கேரக்டர், ஒலக மகா காமெடி ஐ.டி. கம்பெனி), நல்ல டைம்-பாஸ் ஃபில்க்கா கொடுத்த சுந்தர்.சிக்கும் ஸ்கிரிப்ட்ல உதவியா இருந்த ஷார்ட் ஃபிலிம் டைரக்டர்களுக்கும் ஷொட்டு. மத்தபடி தூக்கி வச்சு கொண்டாடுற லெவல் காமெடி படம் இல்ல.

தீயா வேல செய்யணும் குமாரு – சந்தானம் இல்லாட்டி டமாருவருகைக்கு நன்றி!!

Sunday, 12 May 2013

சூது கவ்வும் - வெல்கம் நளன்


என்னிக்காச்சும் தமிழ் படம் பாக்கும் போது கெட்டவன் ஜெயிக்கணும், நல்லவன் தோக்கணும்ன்னு நெனச்சிருப்போமா? கெட்டவங்கள எல்லாம் ரசிச்சு அவங்கள தூக்கி வச்சு கொண்டாடிருக்கோமா? ஆங்கிலத்துல 'Suspension of disbelief'ன்னு சொல்வாங்க - அதாவது ஷகிலா பாவட சைஸ்ல லாஜிக் ஓட்டை இருந்தாலும், படம் பாக்கும் போது ‘இதெல்லாம் எப்டி நடக்கும், சம ஓலு’ன்னு நாம நையாண்டி நக்கல் சவுண்ட் கொடுக்காம, கைதட்டி அந்த காட்சிகள ரசிப்போம்ல? படம் முடிஞ்சு வெளிய வந்தாலும், நாம ரசிச்ச காட்சிகளெல்லாம் மைண்ட்ல ஓடிட்டே இருக்க, நம்ப ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள சொல்லி குதூகலிப்போம்ல? இப்டி ஒரு வரைட்டியான ஃபுல் மீல்ஸ் தான் சூது கவ்வும்.நாளைய இயக்குநரின் முதற்பகுதில எல்லாரையும் பெரிதும் ஈர்த்தவர் நளன் குமாரசாமி. தனக்கென ஒரு ஸ்டைல உருவாக்கி, காட்சியமைப்பு மற்றும் வசனங்கள் மூலமாக ‘கதயா, அத அது கெடக்கு கழுத’ன்னு பார்வையாளர்களை வசியப்படுத்தி விடுவார். அதுவும் அவரோட Ending , ‘என்னடா அவ்ளோதானா? முடிஞ்சு போச்சா?’ன்ங்கற மாதிரி இருக்கும். அரைகுறை கடத்தற்காரன், அவனுக்கு கெடச்ச மூணு கூட்டாளிகள், கடத்த தோதுவா அமைச்சர் பையன், இவங்கள பிடிக்க போலிஸ்ஸு - இப்டி நாலே வரில கதாபாத்திரங்கள் மூலமா படத்த விறுவிறுப்பா கொண்டுபோய் இருக்காரு. இது தான் படத்துக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே. ஜவ்வு மாதிரி  Character establish பண்றேன்னு இல்லாம, ஓரிரு காட்சிகளிலே இவன் இப்டி தான்னு ஆணி அடிச்ச மாதிரி காட்டிடுறாரு - குறிப்பா சைக்கோ இன்ஸ்பெக்டர், உத்தம அமைச்சர். அதே மாதிரி பன்ச் பேசுறேன், தத்துவம் சொல்றேன்னு வசனங்கள் இல்லாம, காட்சி மூலமாவே இல்ல சின்ன ஒன்-லைனர்ன்னு அதே கன்வே பண்ணிருக்குற டெக்னிக், அசத்தல்.


நெஞ்சுற நக்குற காட்சிகள் இல்ல, (இப்போ ஃபீல் பண்ற நேரமில்ல பாஸு டைமிங் காமெடி) காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்குறேன்னு நம்பள டயர்ட் ஆக்காம, டைமிங்ஙோட அடுத்து என்ன நடக்க போகுது, இந்த கேரக்டர் என்ன டிவிஸ்ட்ன்னு interestingஆ பல இடங்களில் நம்பள திக்குமுக்காட வைக்கிறார் நளன். ஒளிப்பதிவு, பாடல், பின்னணி இசை, எடிட்டிங்ன்னு எல்லா டிப்பார்ட்மெண்டிலும் குறையே வைக்காம நல்லா வேள வாங்கிருக்காரு. பாடல்கள் படத்துக்கு ஸ்பீட்-ப்ரேக்கரா இல்லாம, மாண்டேஜ் மூலமா, அதுவும் கடசி இரண்டு பாடங்கள் யோசிச்சு பார்த்தா ‘என்னடா சம்பந்தமே இல்லாம பாட்டு’ன்னு தோணவைக்காம கதை ஓட்டத்தோடு ரசிக்கும்படியா சேர்த்துருக்காரு. பின்னணி இசை ஒரு சாதாரண காட்சிய கூட elevate பண்ணிடுது. இது நடக்கும்ன்னு சில எடங்கள்ல நாம யூசிச்சாலும் பின்னணி இசையும், கேரக்டரோட டயலாக் டெலிவரியும் ஃப்ரெஷ்ஷா காட்டுது.

மணிரத்னம் படமா? ஷட்-அப்


படத்துல மைன்ஸ்ஸே இல்லையான்னா கதன்னு பெருசா இல்ல, ரெண்டாம் பாதி கொஞ்சம் lengthன்னு அடுக்கலாம்ன்னா ப்ளஸ் எல்லாம் அனகோண்டா பாம்பு மாதிரி மைனஸ்ஸ அசால்டா முழுங்கிடுது.. சஸ்பென்ஸ், காமெடி, பேன்டசின்னு ஒரு காமிக் புக் படிச்ச ஃபீல். சிம்பிள்ளா சொல்லணும்ன்னா ஹ-க்ளாஸ் ஹாஸ்பிடல் மாதிரி ‘பழக்கப்பட்ட நோய், பட் ஃப்ரெஷ் + ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்’


சூது கவ்வும் - இறுதியில் நளன்னே வெல்லும்


வருகைக்கு நன்றி!!

Friday, 5 April 2013

லொல்லு சொல்லு - 3

தொண்டைல இருக்கு ஆனா வெளிய வரமாட்டேங்குது மாதிரி , ரொம்ப நாளா எதாச்சும் எழுதணும்ன்னு தோணுது, ஆனா கரெக்டா எந்த போஸ்ட்டும் போட முடியல.. ஆரம்பத்துல வாரம் ஒரு போஸ்ட், அப்றோம் மாசம் ஒரு போஸ்ட், அப்றோம் 2 மாசத்துக்கு ஒரு போஸ்ட், இப்டியே போனா வருசத்துக்கு ஒரு போஸ்ட் தான் போடுவேன் போல.. எதாச்சும் பதிவு பண்ணனும்ன்னு login பண்ணி, Draftsல தூங்குற போஸ்ட்ஸ் பல.. சிவாஜி சொல்ற மாதிரி "வயசாயிரிசிலே" ஒரு காரணம். இன்னொன்னு  நான் பிஸியா இல்லனாலும் பிஸியா இருக்குற மாதிரி காட்டிட்டு இருக்கேன். முகபுத்தகம் இருக்கறதுனால ப்ளாக் பக்கம் வரவே மாட்டேங்றாங்க நம் மக்கள் எல்லாம். ஒரு வேள ஷகீலா, ரேஷ்மா , சன்னி லியோன் இவங்களால சேலம் டாக்டர் சொல்ற மாதிரி என் சிந்திக்கும் திறன் குறைஞ்சிட்டே (ஒழுங்க படிங்க - சிந்திக்கும் திறன் மட்டும்) வருதான்னு சந்தேகம்.. புரட்டிப்பார்த்தா நெறைய சினிமா விமர்சனமா இருக்கு.. இன்னும் எழுத நெறைய படங்கள் இருந்தாலும் மசாலா படங்கள் மாதிரி எனக்கே போர்.. கடந்த ஆறு மாசங்களாக என் வாழ்க்க எப்டி போகுதுன்னு ஒரு பதிவு போடலாம்ன்னு உக்காந்தேன்.. இதுக்கு மேல நீங்க படிக்கப் போகறது எல்லாம்  டிட் -பிட்ஸ்.

___________________________________பாதி யூத்து மாதிரி தேசிபாபா, மல்லுவூட்ஸ் இதுக்கெல்லாம்  ஆசைப்பட்டு, கம்ப்யூட்டர் வாங்கி பொறியியல் சேர்ந்த கோஸ்தி தான் நானும். ‘முதல் வருசத்துலேயே தெரிஞ்சிது இதெல்லாம் எனக்கு செட் ஆகாது’ன்னு கவுதம் பீட்டர் மேனன் பட ஹீரோ மாதிரி சொன்னா செருப்பு வரும்ன்னு.. சிலதெல்லாம் படிக்கணும்ன்னு  படிச்சேன், சிலதெல்லாம் ரொம்ப ஆர்வத்தோட படிச்சேன்.. பக்கத்துல அஞ்சலி இருக்குற நேரத்துல நெஞ்சுவலி  வர மாதிரி, நாம ஆசையா படிக்கறதுல மட்டும் மார்க்கே வராது.. (இன்னிக்கு வரைக்கும் அதான் நடக்குது ) சம்பிரதாயத்துக்கு  ஒரு ஐ.டி. கம்பெனில அஞ்சு பிகர் சம்பளம்.. (ஆனா பக்கத்துக்கு சீட்ல்ல ஒரு பிகரும்  இருக்காது, இருந்தாலும் அவ நமக்குன்னு இருக்காது.. ஸ்கூல்லேயே வித  விதச்சிருப்பாங்க. கோல்-கீப்பர் இருந்தாலும் கோல் அடிப்போம்லன்னு இருக்கலாமா? )

___________________________________மாசம் கடக்க எனக்கு புடிக்காத விஷயத்த தான் செஞ்சுட்டு இருக்கேன்னு தோணுச்சு... க்ரியடிவ்வா பண்ண வாய்ப்பு கெடைக்கலையா, இல்ல என்னால இந்த துறைல க்ரியடிவ்வா யோசிக்க முடியலையான்னு எனக்குள்ள குழப்பம்.. நமீதா மாதிரி காசு கண்ண கொஞ்ச காலத்துக்கு மறச்சிட்டு இருந்துது.. மேல படிக்கலாம்ன்னா வாய் மேலேயே போடுவேன்னு குடும்பம்.. ஆனாலும் முடில , சரி ஐ.டிலேயே  கொஞ்சம் க்ரியடிவ்வா ஒரு நெலமைக்கு போகணும், அதுல மாஸ்டர்ஸ் பண்ணனும்ன்னு தேடுனேன்.. அதே ஆட்டு மந்த போல அமெரிக்கா வந்தேன் - சில தயக்கங்கள், பல தியாகங்கள், ரொம்ப தெளிவா ..

___________________________________ஏன் இந்தியால இல்லையானா 'இருக்கு ஆனா இல்ல'. இளங்கலைல பிடிக்காத  சிலதெல்லாம் படிச்சு வேஸ்ட் பண்ண மாதிரி இருக்க வேண்டாம்ன்னு இங்கே வந்தேன் (சர்க்கியுட் பேப்பர்க்கே  ஷாக் கொடுத்தோம்ல) எப்பவுமே மனசுல ஓடிட்டே இருக்கும், 'புடிச்சத மட்டும் செய்'ன்னு, அதுனாலே வீட்ல வேல சொன்னா செய்யமாட்டேன்.. ஆனா இங்க வந்து நெறைய கத்துக்கிட்டேன் - படிப்பாகட்டும், சமையலாகட்டும், வாழ்க்கையாகட்டும்.. கொஞ்சம் மெட்சூரிட்டி வருது.. இன்னும் நெறைய கத்துப்பேன்னு நெனைக்கிறேன்..


___________________________________வந்த புதுசுல வசூல் ராஜா கமல்ஹாசன் நெலம தான்.. அப்டியே பாஸ் பண்ண கையோட இங்க கெளம்பி வர பசங்கல்லா 'ஆன்ங், சொல்லுங்க பாஸ், இத்தன வயசுக்கு படிக்கிறீங்க? கிரேட்'ங்ற அளவுக்கு தான் பாத்துட்டு இருந்தாங்க. இத்தனைக்கும் மூணு வருஷம் தான் வித்தியாசம்.. வழக்கம் போல சில பொண்ணுங்க 'அண்ணா'ன்னு கூப்ட 'இன்னா'ன்னு காது கேக்காத மாதிரி அவாய்ட் பண்றது நடந்துட்டே இருக்கு.. ஏன் இந்த மாதிரி தப்பான எண்ணத்தோட என் கூட பழகுறாங்கன்னு தெரில.. இப்பொல்லா தெளிவா விசாரிச்சிட்டு தான் பழகறதே.. 'கமிட் ஆனா பொண்ணு கிட்ட எப்போர்ட் போடறதும் த்ரிஷா படத்த பார்த்துட்டு பாத்ரூம்க்கு ஓடறதும் ஒண்ணு தான் - ஒரு அவுட்புட்டும் வராது '

___________________________________இளங்கலைல ஒபி அடிக்க நல்ல நண்பர்கள் கெடச்சாங்க.. Assignment, Quiz, Project, Homeworkன்னு நாலா பக்கமும் ராடு எத்துனாலும், அத ஏத்துக்க சில அறிவு ஜீவிஸ் இருந்தாங்க.. அவங்களோட புண்ணியத்துல பொலப்ப ஓட்டிட்டு இருந்தேன்.. முன்னமே சொன்ன மாதிரி, இங்கே எல்லாமே நாமளே பண்ண, பண்ணி கத்துக்க வேண்டியதா இருக்கு.. ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும், ஊசி ஏத்துன மாதிரி பழகிறிச்சு.. வீட்ல இருக்கும் போது 10.30 மணிக்கே தூங்கிருவேன்.. (நமக்கென்ன கேர்ள்-ப்ரெண்ட்டா, கடலையா) ஆனா இங்க 3 மணிக்கு ‘தூங்காத விழிகள் ரெண்டு’ பாட்டு ஓடிட்டு இருக்கும்.. நானே ஆசைப்பட்டு எடுத்த Courses, எனக்கு புடிச்சத செய்றேன்னு இருக்கும் போது ஒரு திருப்தி, சந்தோஷம், மனநிறைவு  எக்ஸட்ரா எச்சகல..

___________________________________மீடியா மேல இருக்குற மோகம் குறையல.. ஷார்ட் பிலிம்ஸ், வீடியோஸ்ன்னு கொஞ்சம் பண்ணேன்.. இங்க அதெல்லாம் பண்ண முடியலையேன்னு நெனைக்கும் போது கொஞ்சம் வருத்தம்.. மூளைக்குள்ள உசேன் போல்ட் மாதிரி கதைகள் வேகமா ஓடிட்டே இருக்கு.. விஸ்காம் பண்ணிருந்தா என் வாழ்க்க மாறி இருக்குமா? தெரில.. ஆனா இங்க social-media courses சிலது பண்ணிட்டு இருக்கேன்.. த்ரிஷா இல்லன்னா திவ்யா.. அதுல ஒரு Course ப்ளாக் related.. இது தான் திரும்ப என்ன ப்ளாக் எழுத தூண்டிருக்கு.. Creativea யோசிக்க நெறைய விஷயங்கள்.. வழக்கம் போல மார்க் மட்டும் ங்கே ன்னு  பல்ல காட்டி சிரிக்குது .. இன்னும் சில courses பிளான்ல  இருக்கு.. பாக்கலாம் வாழ்க்க என்ன எங்க கொண்டு செல்லுதுன்னு !! அது சாணிய தூக்கி எறிஞ்சாலும், சானியா மிர்ச்சாவ நெனச்சு அரவணச்சுப்பேன் :)

மூளய தான் மூட்ட கட்டு ஃபாலோ யுவர் ஹார்ட்டு-பீட்டு ரூட்டு


வருகைக்கு நன்றி!!

Thursday, 7 February 2013

அலெக்ஸ் பாண்டியன், விஸ்வரூபம், கடல் - 3 in 1 விமர்சனம்


அலெக்ஸ் பாண்டியன் – என்னடா சாவுக்கு வர சொன்னா, பதினாறாம் நாள் காரியத்துக்கு வந்து துக்கம் விசாரிக்கிற மாதிரி விமர்சனம் தரானேன்னு யோசிக்க வேணாம்… ஏற்கனவே கைப்புள்ளய விட பலபேரு அடிச்சு, துவச்சு காயப்போட்ட படம் தான்… பருத்தி வீரன், நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன்னு பாக்குற மாதிரி படங்கள கொடுத்துட்டு இருந்தாரு… யாரு கண்ணு பட்டுச்சுன்னு தெரில, இல்ல கமர்சியல் மசாலா சிறுத்தை ஹிட் ஆச்சே, அதுனால என்ன கருமத்த பண்ணாலும் மக்கள் பாப்பாங்கன்னு மெதப்புல இருக்காரு போல ஹீரோ… சென்னைல்ல ஃபோர் போட்டா கூட தண்ணி கெடச்சிரும், ஆனா இந்த படத்த தோண்டுன்னா ஒரு நாலு நல்ல சீன் கூட கெடக்காது… அதுவும் ஆரம்பத்துல ஒடியே ட்ரெயின்ன புடிக்கிற சாகசம் ஆகட்டும், அப்பப்பப்பப்பப்பப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாப்பா, இவர் பின்னாடி உக்காந்தா அஞ்சு மணி நேரத்துலேயே டெல்லி போய்ரலாம்… ப்ரிட்ஜ்ல இருந்து ட்ரெயின்ல குதிக்கிறாரு, காரு கேப்ல பறந்து வந்து அடிக்கிறாரு…ங்ங்ங்கொய்யால வீடியோ கேம்ல கூட இப்டிலா பண்ணமாட்டாங்கடா…. ஹீரோ சாரு அவர நொக்கிவர ஹெலிகாப்டர புடிச்சு ஒடைக்காதது தான் மிச்சம்… பட்ஜெட் ப்ராப்ளமோ? சந்தானம் காமெடி – காம ’நெடி’… இதெல்லாம் பழய கே.எஸ்.ரவிகுமார் படத்துலேயே பாத்தாச்சு பாஸூ… அனுஷ்கா நானும் இருக்கேன்னு அப்பப்போ வந்து போறாங்க… இசை – சரிகமபதநிச பின்னணி இசை சநிதபமகரிச…. அண்ணனும் தம்பியும் காப்டன் ரிட்டயர் ஆயிட்டாருன்னு இந்தியாவ காப்பாத்துறேன்னு கெளம்பி நம்ப உசுர வாங்குறாங்க… மொதல்ல இவனுங்க கிட்ட இருந்து தமிழ் சினிமாவ காப்பாத்தணும்… ஆனா ஒண்ணு, சூரியாகிட்ட இல்லாத இயல்பான ஸ்கிரின் ப்ரெசன்ஸ் கார்த்தி கிட்ட கொட்டி கெடக்கு… அத இது மாதிரி படத்துல நடிச்சு வீணாக்கிக்க வேண்டாம்…

மொத்தத்துல அலெக்ஸ் பாண்டியன் - 7 அனாசின், 8 விக்ஸ் ஆக்‌ஷன் 500


இந்த படத்துல நடிச்சதுக்கு என்ன நானே சுட்டுக்கணும்

விஸ்வரூபம் – அமெரிக்கால இருக்குற என்ன, ஃப்ரெண்ட்ஸ்லா வெறுப்பேத்துவாங்க, எனக்கு முன்னாடியே படத்த பாத்துட்டேன்னு… படம் பாக்கலாம்ன்னு ஆச தான்… ஆனா எவன் 15$ செலவழிச்சு, ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி பாக்கணும்? ரீலிஸ் டேட் சொன்னாலே ‘வாங்குடா தடை, போடுடா கேஸூ’ன்னு கமல வச்சு தமிழகத்துல கும்மாங்குத்து குத்தாடத்த போட, கமலும் ‘ஓடஓடஓட தூரம் கொறயல’ன்னு பாட, அப்டி என்னதான்டா படத்துல இருக்குன்னு பாக்கலாம்ன்னு போனேன்… கமல் படத்துல பிரச்சன என்னன்னா அவரு தான் புத்திசாலின்னு காட்டிக்கவே படம் எடுக்குற மாதிரி ஒரு ஃபீல் தோணும்… அதவுட பிரச்சன, படம் புரியல, அதுனால புடிக்கலன்னு சொன்னா, சிலபல கமல் பக்தர்கள் ‘போடா ஃபூல் (English Word) அறிவிருந்தா தான் படம் புரியும்’ன்னு திட்டிபுடுவாங்க… கமர்சியல்ரீதியா கமல் ஒரு இயக்குநரா மிகப்பெரிய வெற்றிய பெறலன்னு தான் சொல்ல முடியும்… அப்டியே கெடச்சாலும் (டைரக்டர் மட்டும் வேற பேரு), அந்த படம் சுமாருக்கும் கீழ தான் இருக்கும்… ஆனா கமல் ஒரு சூரன், இதான் உண்ம.. அத செவிட்டுல அறஞ்சா மாதிரி சொல்ற படம் தான் விஸ்வரூபம்… காலத்துக்கு ஏத்தா மாதிரி மாறி (Adapting to the continual changing trend), ரசிக்கும்படியாகவும், புத்திசாலிதனமாகவும், கமர்சியல் ஐட்டங்கள் கலந்துகட்டி எல்லாம் ஒருசேர விஸ்வருபத்த கொடுத்திருக்காரு… பாராட்ட நெறய விஷயங்கள் இருக்கு… திரைக்கதை, Dark Humor வசனங்கள், ஆஃப்கான் காட்சிகள், Attention to the detailsன்னு... ஊருக்குள்ள பலபசங்க ஸ்டைலிஷ் படம்ன்னு சொல்லி மொக்க பீஸா கொடுத்து ஏமாத்திட்டு இருக்க, கமல் ‘டாய்… த்தா சின்ன பசங்களா’ன்னு திரைக்கதை கூட ஸ்டைல சேத்து ஒரு பாடமே எடுத்துருக்காரு… விஷ்ணுவர்தன் & கோ கவனிக்க… ரெண்டாம் பாதி ஓவர் கமர்சியலிசம், FBI காமெடின்னு ஜவ்வடிச்சாலும், பார்ட்-2க்கு சூப்பரா அஸ்திவாரம் போட்டுருக்காரு… இதுக்கு ஒரு முழு விமர்சனம், பார்ட்-2 வந்தா தான் கொடுக்க முடியும்… ’I’m waiting’

மொத்ததுல விஸ்வரூபம் - வித்தகரூபம்

பேசாம அடுத்த படத்துக்கு ‘தடை’ன்னு பேர் வச்சிரலாமா?
‘தடை மேல தடை’ ஹெட்லைன்


கடல் – ஊருக்குள்ள ஒரு ஹீரோ இருந்தாராம், நாம என்ன படம் கொடுத்தாலும் அத பாக்க கூட்டம் வரும்ன்னு ஆணவத்துல இருந்தாராம்… தல மேலேய அடிச்சு உக்கார வச்ச அப்றோம் தான் ஷங்கர், முருகதாஸ்ன்னு ரூட்ட மாத்துனாரு… அதுமாதிரி மணிரத்னம் சார் நெனசிட்டாரு போல, எத எடுத்தாலும் க்ளாஸி, ரேஞ்சுன்னு சொல்ல கூட்டம் இருக்கும்ன்னு… ‘இது மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குற வரைக்கும் உங்கள அசசிக்க முடியாது’ சுஜாதா மறைவு கதை திரைக்கதைல அப்பட்டமா தெரியுது… கடசி படங்கள்ல இருந்த பாலிவுட் மோகம், இதுல இல்லாத்த நெனச்சு சந்தோஷப்பட்டாலும், ‘கடல், கிராமம்’ன்னு தனக்கு செட் ஆகாத Platform எடுத்து சொதப்பிருக்காரு…. படம் மொக்கயா இருந்தாலும் பாட்டெல்லாம் சூப்பராவாச்சும் எடுத்துருப்பாரு (உப: திருடா திருடா), கடல்ல அது கூட இல்ல… மானாட மயிலாட டான்ஸ் மாதிரி அடியே சாங்கு…. கதாபாத்திரம் எதுவும் மனசுல ஒட்டவே இல்ல, ‘அதே டெய்லர், அதே அந்நிய காட்சியமைப்பு’ எல்லாரும் சொல்ற மாதிரி ஒளிப்பதிவு சூப்பர், கண்ல எடுத்து ஒத்திக்கலாம் தான்… ஆனா கதைக்கு சுத்தமா செட் ஆகாத கலர்-டோன்… மணிசார் படம்ன்னா வசனம் கம்மிங்கறத மாத்தணும்ன்னு எல்லாரும் வசனமா பேசி இம்ச கொடுக்குறாங்க… கவுதம் நல்ல அறிமுகம், துளசிக்கு நல்ல ‘முகம்’… அஞ்சு வருஷம் கழிச்சு நடிக்கவா பாப்பா… இவனுங்க கூட இப்போதைக்கு சேராத… மணி சார், நாயகன் பாத்து ரசிச்சுருக்கேன், அஞ்சலி பாத்து பிரமிச்சிருக்கேன், அலைபாயுதே பாத்து உருகிருக்கேன், கண்ணத்தில் முத்தமித்தால் பாத்து சிலிர்த்திருக்கேன்… இப்டி சம்பாதிச்ச நல்ல பேர எல்லாம் கDULLல கரச்சிராதீங்க…. ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வரை ஓடினேன், அங்கே கடல் ஓடிக்கொண்டிருந்ததால் திரும்ப வந்து விட்டேன்… 

மொத்தத்துல கடல் - கதறல்   

கிஸ்ஸிங் மிஸ்ஸிங்

Thursday, 3 January 2013

Diary காதல் - தைரியமான காதல் : பக்கம் 1


Series சுருக்கம் - ரெண்டு நண்பர்கள் : கார்த்திக்- அருண்… ஹாஸ்டல்ல தங்கி இஞ்சினியரிங் கோர்ஸ் படிக்கிறாங்க (கடைசி வார்த்தை அருணுக்கு மட்டும்)… இவங்க போடுற மொக்க, கடலை, தத்துவம் இது தான் இந்த சீரிஸ். அருண் சின்சியரா லவ் பண்ற பொண்ணு பேரு அனுஷா.. இதுக்கு கார்த்திக் கொடுக்குற ஐடியாஸ்லா என்ன? அவங்க லவ் சக்ஸஸ் ஆச்சா? அதான் சில்லற பசங்க உங்களுக்காக..


அருண்: மச்சி, மெட்டர் தெரியுமா?

கார்த்தி: தெரியும் மச்சி…

அருண்: ச்ச… அப்போ எனக்கு தான் லேட்டா தெரிஞ்சிதா? ரூம்லேயே இருந்துட்டு எப்டிடா இதெல்லாம்?

கார்த்தி: நெத்து நைட்டு தான்டா தெரிஞ்சிது…

அருண்: டேய்.. அப்போவே என்கிட்ட சொல்லிருக்கலாம்ல?

கார்த்தி: சொல்லலாம்ன்னு வந்தேன்… ஆனா பரதேசி சத்யம் தியேட்டர் டால்பி 5.1 டிஜிட்டல் சவுண்ட் மாதிரி கொரட்ட விட்டு தூங்கிட்டு இருந்த…

அருண்: எதிர்பாக்கவே இல்லல?

கார்த்தி: ஆமாடா… நேத்து தாத்தா கடைல இருந்து வரும் போது தான் தெரிஞ்சுது… சம அல்லு… 500 ரூபா கொடு பாத்துக்கலாம்ன்னு சொன்னா…

அருண்: டேய்… என்னடா ஒளரிட்டு இருக்க?

கார்த்தி: நாயே.. நேத்து ஒரு மெட்டர பாத்தேன்டா.. அத பத்தி தானே நீ கேட்டுட்டு இருக்க?

அருண்: முருகாகாகா… இவன வச்சிட்டு !! நான் சொல்றது தினேஷ் லவ் மெட்டர்டா…

கார்த்தி: அதுக்கு்ள்ள மேட்டர் ஆயிருச்சா?

அருண்: செருப்பால அடிப்பேன்.. எல்லாத்துக்கும் அந்த மேட்டரையே நினச்சிட்டு இரு.. நம்ப தினேஷ் இருக்கான்ல.. அவன் இ.சி.இ பிரியாங்கவ கரெக்ட் பண்டான்டா…

கார்த்தி: யாரு, அந்த பானி பூரி மேல தயிர் ஊத்துன பப்டி சாட் மாதிரி இருப்பாளே, அந்த சேட்டு பொண்ணு பிரியங்காவா?

அருண்: ஆமாடா… இன்னிக்கு காபிடே போயிருந்தேன்…  ரெண்டு பேரும் கைய பிடிக்கற்தென்ன, அடிச்சிக்கற்தென்ன, பாத்து பாத்து சிரிச்சிக்கற்தென்ன…

கார்த்தி: டேய் ஆதிவாசி… இதெல்லாம் பண்ணா லவ்வா? இப்போல்லா பொண்ணுங்க ரொம்ப சகஜமா பழக ஆரம்பிச்சிட்டாங்கடா… இதயெல்லாம் லவ்ன்னு நெனச்சிட்டு பசங்க ஏமாந்து போறீங்க… அப்றோம் அவள திட்டி ஷார்ட்-ஃபிலிம் எடுத்து ஃபேமஸ் ஆகிடுறீங்க… பொண்ணுங்கள புரிஞ்சிக்கணும்டா… 

அருண்: மூடு… சொல்ல வந்தத முழுசா கேளு… லவ் க்ரீட்டிங் கார்ட் அவ கொடுக்க, ஹார்ட் போட்ட காஃபி இவன் வாங்கி கொடுக்க, கண்ணுல காதல் பொங்கி வழிஞ்சு ஓடுச்சுடா…

கார்த்தி: அப்டியே அந்த பொங்குன லவ்ல நீ கொஞ்சம் காஃபி அடிச்சிருப்பியே… ச்ச குடிச்சிருப்பியே…

அருண்: இதுல கொடும என்னன்னா நம்ப க்ளாஸ் குண்டு லீலா கூட வேற ஒரு ட்ராக்க ஓட்டிட்டு இருக்கான்டா

கார்த்தி: ஒண்ணு Fate-ஆள் Attraction, இன்னொன்னு FAT-ஆள் Attraction போல

அருண்: ஆனா ஒண்ணுடா.. அன்னிக்கு பானி பூரி சாப்டும் போது, அவன் எக்ஸ்ட்ரா ’ஆலு’ கேக்கும் போதே டவுட் வந்துச்சு…

கார்த்தி: விடு மச்சி காரசேவுக்கு சட்ட போட்டவனுக்கெல்லாம் ரெண்டு லட்டு கிடைக்கும் போது, காண்டாமிருகத்துக்கு சட்ட போட்ட மாதிரி இருக்குற உனக்கு ரெண்டு இல்ல, ஒரு அட்டு ஆச்சும் கெடைக்கும்டா…

அருண்: த்தா… இதான் சாக்குனு என் அனுஷாவ அட்டுன்னு சொல்டல?

கார்த்தி: இல்ல மச்சி, ரைமிங்ஙா இருக்கணுமேன்னு… உன் ஆள நான் எப்டிடா தப்பா சொல்வேன்?? தாத்தாவோட காஃபி கடேலெயே அக்கவுண்ட் வச்சிருக்குற டாக்கு, நீ ஏன் காஃபி டே போன? உன்னால நேத்து எனக்கு பஜ்ஜி கூட கொடுக்கமாட்டேன்னு சொல்டாருடா…

அருண்: டேய்.. அனுஷா கூப்டா.. அவ பர்த்தே ட்ரீட்க்குடா…

கார்த்தி: அது முடிஞ்சு போய் நாலு மாசம் ஆச்சேடா… கல்யாணத்துக்கு சாப்பாடு போட சொன்னா, காதுகுத்துல வாழஇலைய போட்டுருக்கா அவ…

அருண்: நீ தானடா பர்த்தே அப்போவே ட்ரீட் கேட்டா கவுரவம் கொரஞ்சிடும்ன்னு சொன்ன… அத நம்பி நானும் கேக்காம இருந்தேன்டா.. முந்தாநேத்து ஏதேச்சையா பேசிட்டு இருக்கும் போது, ‘என் ஃப்ரெண்ட்ஸ்ல நீ மட்டும் தான் ட்ரீட் கேக்கல, ஏன்டா இப்டி இருக்கன்னு’ கேட்டுட்டா… மனசே கஷ்டமாயிடுச்சு… அதான் அவ ஃபீல் பண்ண கூடாதுன்னு ட்ரீட்க்கு போனேன்…

கார்த்தி: அவ அசிங்கப்படுத்துனது கூட உனக்கு வருத்தமில்ல… அவ ஜஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொன்னது கூட கவலயில்ல… அது எப்டி சார்? அவ ஃபீல் பண்வாளா? நாயே எப்போ அவ கூப்டுவா, எப்போ சுத்தலாம்ன்னு வயித்துல ஈர துணிய கட்டிட்டு சுத்துறியேடா…. நமக்காக ஒரு ஜீவன், நம்ப ஆருயிர் நண்பன் சாப்டாம இருக்கானேன்னு கொஞ்சமாச்சும் ஃபீல் பண்ணியாடா?

அருண்: இல்ல

கார்த்தி: என்னடா சட்டுன்னு இப்டி சொல்ட?


சிறிது நேரம் அமைதி


கார்த்தி தன்னுடைய மொபைலில் ‘என் இதயம் உடைத்தாய்’ பாடலை போட

அருண்: மச்சி… சிட்டுவேஷன் சாங்க்கா? ப்ளீஸ்டா, ஆஃப் பண்ணு…

கார்த்தி: என்னடா ஆச்சு?

அருண்: காபிடேல… She burst my heart 

கார்த்தி: வாட்? வை? ஏன்? எப்படி? என்னாச்சி?

அருண்: டேய் பேஜார் சுந்தராஜன்... அவ அப்டி பண்ண அப்றோம் செம ஃபீல் ஆயிடுச்சு

கார்த்தி: ப்ரோபோஸ் பண்ணிட்டியா?

அருண்: கேக்காதடா அந்த கதய…. பண்லாம்ன்னு பக்காவா ப்ளான் பண்ணி வச்சிருந்தேன்டா… ஒரே செகண்ட்ல எல்லாத்தையும்….

கார்த்தி: கேக்குற எனக்கே கஷ்டமா இருக்குடா… ஃப்ரெண்ட்டா இருக்கலாம்ன்னு சொல்டாலா? அப்டி சொன்னா கூட இன்னொரு சான்ஸ் இருக்கு மச்சி…

அருண்: அதுல்லா சொல்லலடா…

கார்த்தி: டேய் என்ன தான்டா நடந்துச்சு?

அருண்: நம்ம கிட்ட கிஃப்ட் வாங்க காசு இல்லன்னு, ஹார்ட்ல ஒரு பலூன் வாங்கிட்டு போனேன்டா

கார்த்தி: ஓஓ.. சிம்பாலிக்கா லவ்வ எக்ஸ்ப்ரெஷ் பண்றாராம்…. அப்றோம்?

அருண்: அவ வந்த உடனே, திஸ் இஸ் ஃபார் யூன்னு ஒரு ஸ்மைலோட கொடுத்தேன்…

கார்த்தி: அவ அத வாங்கிட்டு ஓஓமைகாட்ட்ட்ட்ட்.. ச்ச்ச்ச்ச்ச்ச்சோசுவிய்ய்ய்ய்ய்ட்ட்ட்ட்ட் சொல்லிருப்பாளே?

அருண்: எப்டிடா பக்கத்துல இருந்து பாத்த மாதிரியே சொல்ற?

கார்த்தி: அன்னிக்கு கிளி ஜோசியன் சொன்னானேடா, உன்ன பைத்தியமா ஒருத்தி காதலிப்பான்னு… அதிர்ஷ்டசாலிடா நீ… மேல சொல்லு

அருண்: சுவிய்ட்ட்ட்ட்ன்னு சொல்லி அழுத்துனா பாரு, பலூன் வெடிச்சிருச்சுடா

கார்த்தி: உச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுசு

அருண்: அப்டியே என் நெஞ்சும் தான்டா… அதுல இருந்தது காத்து இல்ல… என்

கார்த்தி: ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுசு

அருண்: டேய் ரைமிங்க்கு பொறந்த ரைனா.. என் காதல்ன்னு சொல்ல வந்தேன்…. 

கார்த்தி: சத்யமா சொல்றேன்டா… இந்த ஜென்மத்துல அவ உனக்கு கெடைக்க மாட்டா… நெஞ்ச ஒடச்சாலாம்…. நைட்டு என் பக்கத்துல படுக்காத சொல்லிட்டேன், அவ நெஞ்ச தான் ஒடப்பா, நான் கு……

அருண்: மச்ச்ச்சீ

கார்த்தி: மூடு…. 

அருண்: லவ் ப்ரோபோஸ் பண்ண நீயாச்சும் ஐடியா தாயேன்டா…

கார்த்தி: அந்த டைரி மேட்டர வர்க்-கவுட் பண்ணியா?


பொறுக்குவார்கள்..


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search