Thursday, 25 October 2012

திருத்தணி விமர்சனம் – ஓம் பேரரசாயா நமக


இந்தியாவில் இருக்கும் போதே என்னை பெரிதும் கவர்ந்த ட்ரைலர், பிட்சா படகுழுவினரால் வெளியிடப்பட்டது. எப்படியாச்சும் இந்த படத்த பாத்தே ஆகணுங்க்ற எதிர்ப்பார்ப்பு. ஆனா என் கெட்ட நேரம், அதுக்குள்ள அமெரிக்காவுக்கு வந்துட்டேன். வலைத்தள குழுக்கள் மூலம் போன வாரம் படம் ரீலிஸ் ஆனது தெரிஞ்சு, தியேட்டரில் பாக்கலாம்ன்னா இங்கே மாற்றான், தாண்டவம் தான் ஓடிட்டு இருக்கு. தெரிஞ்சவன் எல்லாம் *த்தா பிச்சிட்டான்டா, *ம்மால கொன்னுட்டான்டா, மெர்சல் ஆஃப் த மெல்கிப்சன் பண்ணிட்டான்டான்னு நோட்டீஸ் அடிக்க, நமக்கோ எதிர்ப்பார்ப்புகள் ஷகிலாவை கண்ட கங்கா மாதிரி ஏறிப்போக, ஆன்லைன்ல பாத்திரலாம்டான்னு முடிவு பண்ணி, லிங்க அடிச்சா – வந்தான் பாருய்யா திருத்தணி. ஹாலிவுட் இயக்குனர்களுக்கே சவால் விடும் ஸ்டீவன் நோலன் பேரரசுவின் இயக்கத்தில், ரொம்ப நாளா ஆட்டம் காட்டி கடசியா ரீலிஸ் ஆயிடுச்சுங்கற சந்தோசம். கண்ணுக்குள்ள தலைவரோட முதல் ஷோ கொண்டாட்டம் தேங்கி நிக்க, பிட்சா கெடக்குதுன்னு திருத்தணிய ஓட வுட்டேன்…


ஒரு ஊருல பல ரவுடிங்க. அதுல பாதி பேர விஜய் திருப்பாச்சிலேயே போட்டுத் தள்ள, மீதி இருக்குற மிச்சத்தி சொச்சத்தி ரவுடிகள பரத் எப்டி போட்டு தள்ளுறாருங்க்ற கத தான் திருத்தணி. 


எடுத்த உடனே, எம்.ஜி.ஆர் பாட்டு பேக்ரவுண்டல ஓட, அவரோட மாண்டேஜ் விடியோஸ் காட்சிகளாக தெரிய, உள்ளுக்குள்ள சந்தேகம், ‘ஒரு வேள ஜெயா டீ.வி. போட்டுட்டேன்னா?’ன்னு. கதை திரைக்கதை பேரரசுன்னு வரலையேன்னு தயக்கத்தோட பாத்துட்டே இருக்கும் போது, ஒரு ரவுடி கூட்டம் தெரண்டு வர, இது தலைவர் படம் தான்டான்னு நிமிர்ந்து உக்காந்தேன். ஃபோட்டோ ஃப்ரேம்ல இருக்குற ஆளு செத்து போனதால, தீபாவளி கொண்டாட கூடாதுன்னு ஒரு தெருவையே அடிச்சு நொறுக்க, ஒரு வீட்ல மட்டும் ‘பட்டாசு வெடிச்சா தானே சத்தம் வரும்? நாம கம்பி மத்தாப்பு கொளுத்தலாம்’ன்னு ’என்னயும் நடிக்க வைங்க’ பாண்டியராஜன் ஐன்ஸ்ட்டீன் கணக்கா ஐடியா கொடுத்து, கொண்டாடும் போது புஸ்வானம் வெடிச்சு ரவுடிங்க காதுல விழ, அவங்க வழக்கம் போல அந்த வீட்ல இருக்குற ஒரு கன்னிப்பெண்ண தரதரன்னு இழுத்துட்டு வரும் போது, ஒரு அடி இல்ல இடி. என்னன்னு பார்த்தா இளைய தளபதி விஜய். இப்போ தானேய்யா நண்பன்ல நடிச்சு நல்ல பேரு வாங்குனியே தலைவா, திரும்பவும் மொதல்லருந்தான்னு ஜெர்க்காகி யோசிக்கும் போதே, அது சிவகாசி படத்துல இருந்து வெட்டப்பட்ட காட்சின்னு தெரிஞ்சு நிம்மதி பெருமூச்சு. (இதுக்கு தான் கெட்-அப் மாத்தி நடிக்கணும்ங்றது) அடுத்த ரெண்டாவது அடில்ல ஒஸ்தி சிம்பு ஒடம்போட பரத் வெரப்பா நிக்க, வழக்கம்போல அடி, ஒத, குத்து, பன்ச்சு, முருகன வேண்டிட்டு இண்ட்ரோ சாங்கு. 


தலைவர் படம்னாலே தொப்பி நமக்குதான்ஹீரோ அறிமுக பாட்டு முடிஞ்சா அடுத்து என்னங்கற  ஃபார்முலாக்கு விதிவிலக்கில்லாம, ஹீரோயின் எண்ட்ரி. சுனைனா அழகா இருக்காங்க, நல்லாவும் நடிக்கிறாங்க. ட்ரேயின்ங் யாரு, ‘பாரதிராஜா + பாலசந்தர்’ கலவை பேரரசு அல்லவா. வழக்கம் போல பொய் சொல்லி ஹீரோவ எமாத்த (சிவகாசி + திருத்தணி), பொது அறிவு இல்லாத ஹீரோ மம்தா பேனர்ஜி ஹீரோயினோட சொந்தக்காரங்க நெனச்சு எமாற, அப்டியே ராஜ்தானி எக்ஸ்ப்ரெஸ்ஸ காமெடி ட்ராக்ல ஓட்றாரு பேரரசு. அடக்கமுடியாத சிரிப்பு. அடுத்த மூணாவது ரீல்லேயே பித்தலாட்டத்த பரத் கண்டுபிடிச்சு, ஆதரவற்றோர் இல்லத்துல வளர்ந்த சுனைனா, கூட்டுக்குடும்பத்துல தான் வாக்கப்படுவேன்னு சொல்றத தெரிஞ்சிக்கிறாரு. பூனம்பாண்டே மாதிரி ரசிகர்கள ஆச காட்டி மோசம் பண்ணாம, ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே பரத்தோட குடும்பத்துல ஐக்கியம் ஆயிடுறாங்க, ரொமாண்ட்டிக் பாட்டயும் போட்டுடுறாங்க.அடுத்து பெரிய ட்விஸ்ட்டா, வேறு பல எடங்களில் அநியாயம், அக்கிரமம் நடக்கும்போது, அங்கே பரத் இருந்தும் தட்டி கேக்க மாட்டேங்க்றாரு. அதே இடத்துல ‘அடிடா அவன, ஒடடா அவன’ன்னு நரம்ப முறுக்கிட்டு முதல் ஃபைட்ல வேடிக்க பார்த்த ‘நட்புக்காக’ ராஜ்கிரணும் அட்டெண்ட்டன்ஸ் போட, என்னடா இவன் கோககோலா பாட்டில் மாதிரி பொங்குவான்னு பாத்தா, ஸ்லைஸ் மாதிரி சாந்தமா போறான்னேன்னு கடுப்பாகுறாரு. இதுக்கு கண்டிப்பா ஒரு ஃப்ளாஸ்-பேக் இருக்குமேன்னு நாம யோசிக்கறுக்குள்ளேயே, நெஞ்ச வேரோடு புடுங்கி போடுற மாதிரி, கல் மனசையும் கரைய வைக்குற ஒரு ப்ளாஸ்-பேக்க போட்டு நம்பள நிலைகுலைய செய்றாரு பேரரசு. கொஞ்ச நேரத்துல பரத் விபத்துல சிக்க, ‘வெற்றி விழா’ படம் மாதிரி ஆயிடுமோன்னு திங்க் பண்ணும்போதே ’ தெய்வத்துக்கு சோதிக்க ஆளில்லையா?’ன்னு சோக பாட்ட போட்டு நம்பள இன்னும் தாக்குறாரு. படம் பாக்குறவங்க நமக்கே எழுதுன மாதிரி இருக்கேன்னு ஃபீல் பண்ணும் போதே, இன்னொரு ட்விஸ்ட்ட தந்து (அத நான் சொல்ல மாட்டேனே), ராஜ்கிரண் பரத்த கூட்டிட்டு போய் அர்ஜூனனுக்கு கீதா உபதேசம் செஞ்ச கிருஷ்ணன் மாதிரி, விவேக்கானந்தர், பகத்சிங், பாரதியார் இப்படி பலபேரோட வாழ்க்கை வரலாற்ற பாடமா எடுத்து ‘சாதிக்காம செத்தா தோளுல தூக்கிட்டு போவாங்க, சாதிச்சிட்டு செத்தா பூ..பூ… பூமால தூவி தூக்கிட்டு போவாங்க’ன்னு நரம்பு புடைக்கும் தத்துவத்த சொல்லி, பாலுவா இருக்குற பரத்த திருத்தணியா மாத்துறாரு. அதுக்காப்பாலிக்கா, திருத்தணி எப்படி வில்லன் கூடாரத்த அழிச்சான்னு தன்னோட டிப்பிக்கல் கமர்சியல் பஞ்சாமிர்தத்துல பேரிச்சம்பழ அரசியல்வாதி வில்லன், வாழப்பழ கரப்ட் போலீஸ், கற்கண்டு காமெடி போலீஸ், நெய் புத்திசாலி ஹீரோன்னு கலந்து கட்டிருக்காரு. கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்த தலைவரோட தரிசனம் ரெண்டாவது பாதில கிடைக்க, அரங்கமே அதிரும் கரகோஷத்த மனசுக்குள்ள இசச்சிகிட்டே ரசிச்சு பார்த்தேன். அதுவும் தலைவர் ‘திருத்தணி எல்லாம் தனி கார்டு, நீ அவன போய் தேடு’ன்னு வசனம் பேசும் போது *த்தா தலைவாவாவாவான்னு விசில் அடிச்சிட்டே, ரைமிங்கா எவனாச்சும் தலைவர திட்டிற கூடாதுன்னு பண்ணாத பிராத்தனை இல்லை. ‘டி.ஆர் சிம்புக்கு அப்பன்னா, நான் வம்புக்கு அப்பன்’ன்னு சொல்லிட்டு அவர் சிரிப்பாரே ஒரு சிரி, ச்ச. எல்லாமே எல்லாருக்கும் அமஞ்சிறாது. சிலதெல்லாம் தானா அமையணும். PROUD TO BE A PERARASUIST.பரத்த பத்தி பெருசா சொல்ல ஒண்ணுமில்ல. என்னோட முழு கவனமும் பேரரசுவோட இசை, வசனங்கள், திரைக்கதை இதுலேயே இருந்துச்சு. அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ’ என்னடா பில்லு பில்லு நீ என்ன பெரிய பில் க்ளின்டனா?’ங்ற வசனம் மூலமா பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு தலைவருக்கு கெடச்சா ஆச்சிரியப்படுவதற்கில்லை. ’ கண்ணகி மதுரைய தான் எரிப்பா, நாங்க நெனச்சா கண்ணகியே எரிப்போம்’ என்ற வசனத்தால் சிலப்பதிகாரத்தை கரைத்து குடித்த வாழும் இளங்கோ அடிகளாக கண்ணுக்கு தெரிந்தார். இசை சொல்லவே வேணாம், முதற்படம் என்று சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. ரோஜா ஏ.ஆர்.ரகுமான், மின்னலே ஹாரிஸ் ஜெயராஜ், மூணு அனிருத் வரிசையில் பேரரசுவுக்கு திருத்தணி. ஆண்ட்ரியா உதட்டை கடிக்காமல், இசையில் கவனம் செலுத்துங்க தலைவா. குத்து, மெலடி, ராக், ஹிப்-ஹாப், சோகம்ன்னு வைரட்டியாக வாத்தியம் வாசித்து இருக்கிறார்.


கடைசி காட்சியில் பரத் ஒரு ஊரு பேரை சொல்ல, ‘தலைவரோட அடுத்த படத்துக்கு டைட்டில் கெடச்சாச்சு’ங்ற ரெட்டிப்பு சந்தோசத்தோட படத்த ரெண்டாவது தடவையா பாத்து முடிச்சேன். இனிமேலும் படையப்பா நீலாம்பரி மாதிரி பாத்துட்டே இருப்பேன். ஏனா IT’s A CLASSIC. தலைவா, இனிமேல் பரத், விஜய், அஜித்ன்னு லுச்சா பசங்க கூட படம் பண்ணாத, அடுத்த படத்துல நீ தான் ஹீரோவா நடிக்கணும், இது அனைத்துலக ஸ்டீவன் பேரரசு ரசிகர் மன்றம், அமெரிக்கா கிளை சார்ப்பா லட்சோப லட்சம் ரசிகர்களின் வேண்டுகோள்.

திருத்தணி – பாக்கலன்னா செத்துரு நீ


பூந்தோட்டத்துக்கே பூச்செண்டா? போங்க பாஸ்


வருகைக்கு நன்றி!! 

Saturday, 14 July 2012

பில்லா 2 விமர்சனம்: தலடா நாளைக்கு வரேன்டா
கவுண்டமணி: கிருஷ்ணா, கிருஷ்ணா

ரஜினி: ஆஅங்க்... import package, log பார்த்தா Null Pointer Exception


கவுண்டமணி: அட வாப்பா... நாளைக்கு நாம ரெண்டு பேரும் லீவ் போட்டு, சினிமாவுக்கு போக போறோம்...ரஜினி:  சினிமாவா? போயா... Next week release இருக்கு... 

கவுண்டமணி: அட இருப்பா... நம்ப ஊருல, ஆல்பர்ட் தியேட்டர்ல பில்லா-2 ரீலிஸ் ஆகுதாம்ப்பா


ரஜினி:  அட ஆமா, நம்ப தல படம்...


கவுண்டமணி: ஆமாப்பா... First day ஷோ எப்டி இருக்கும் தெரியும்ல? பால் அபிஷேகம் என்ன, பீர் அபிஷேகம் என்ன, டான்ஸு என்ன, சவுண்ட் என்னன்னு என்னென்ன...


ரஜினி:  யாருப்பா PM கிட்ட போய் லீவ் கேக்கற்து?


கவுண்டமணி: யோவ்... அவரு படமே ஒரு வருஷத்துக்கு ஒண்ணு தான் வருது... அதுவும் ஹிட் படம்ன்னா மூணு வருஷத்துக்கு ஒண்ணு தான்... ஒரு மாசம் பூரா கிடைக்காத எண்டர்டெயின்மெண்ட்ட, இந்த ஆளு ஒரே நாளுல, அதுவும் ரெண்ட்ர மணி நேரத்துல தராங்க்றான்... அத எவனாவது விடுவானா?


தியேட்டர் வெளியே


ரஜினி: பாத்தியா கூட்டத்த?? தலன்னா சும்மாவா? கிங் ஆஃப் ஒப்பனிங்... இப்போ டிக்கெட் என்ன பண்றது?


கவுண்டமணி: இது மாதிரில்லா நடக்கும் தெரிஞ்சு தான் நான் ஆன்-லைன்ல புக் பண்டேன் மாப்ள... ஸ்னாக்ஸ் கூட சீட்டுக்கே வந்து தருவாங்க... வாங்குறோம்


கவுண்டமணி: (கூட்டத்தில் புகுந்து) தல தல... தலடா.... போட்றா போட்றா.... (ரஜினியை பார்த்து) மச்சி, இங்கவா இங்கவா...

டிக்கெட் வாங்கியவுடன்


ரஜினி: ஆஆஆங்ங்... பில்ல்ல்ல்ல்ல்ல்லா...

கவுண்டமணி: டேவிட் பில்ல்ல்ல்ல்ல்ல்லா.... யோவ் எங்கய்யா உன் ஒரு கண்ண காணோம்?

ரஜினி: அட போனா போகுது... தல தான் படத்துல போட்டுருக்காரே... ஒண்ண கொடுப்பாரு...

(தியேட்டர் உள்ளே நுழைந்தவுடன்)


(கூட்டத்தோடு) தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலலல....

கவுண்டமணி: யப்பா... மூஞ்சு துடக்கற்துக்கு காஞ்ச டவல் எதாச்சும் வச்சிருக்கியா?


ரஜினி: நீ வேற... தலய பாக்கணும்ன்னு நானே காஞ்சு போய் இருக்கேன்... கைகுட்டல இருந்து எல்லாமே நனஞ்சு போச்சு.. நீ வேற காஞ்ச துணிய கேக்குற


கவுண்டமணி: அப்போ உடு ஒழிவிட்டு போட்டும்

ரஜினி: ஆமா... தலதலன்னு நாமளும் கத்துறோம்... இந்த படம் நல்லா இல்லன்னா என்னப்பா பண்றது?


கவுண்டமணி: நல்லா இல்லனாலும், தலக்காகவே பாக்கலாம், என்னா ஸ்டைல்லும்மா, ஹண்ட்சம் தலன்னு சொல்லிட வேண்டியது தான்...


ரஜினி: ஏன்?


கவுண்டமணி: அட அதன் ஏன்ப்பா மொக்கன்னு சொல்லணும்? விஜய் ஃபேன்ஸ் கிட்டல்லா அசிங்கமா நக்கல் வாங்கிட்டு...

ஆஸ்கார் ரவிசந்திரன் வழங்கும்

கவுண்டமணி: அட எவன்டா அவன்??


ரஜினி: Distributorபா... வேலாயுதம் படத்த தயாரிச்சவர்


கவுண்டமணி: த்ச்ச, சீக்கிரம் படத்த போடுங்கடா... மாப்ள, அடடா.. நாட்ல இந்த Distributor தொல்ல தாங்கல முடியலப்பா... த்ரிஷ்டி பொம்மய வச்சு படம் எடுத்தவன்லா Distributorஆம்...

(அஜித் இண்ட்ரோ)

விண்ணை கிழிக்கும் சவுண்ட்டு
தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலலலல....
வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா (விசில் விசில் விசில்)

(அரை மணி நேரம் கழித்து)


கவுண்டமணி: மாப்ள, சத்தியமா முடிலடா


ரஜினி: ஆமாடா... ஆழ்வார் மாதிரி ஆயிடும்ம்மா?


கவுண்டமணி: அந்த தீஞ்சு போன நூடுல்ஸ் மண்டயன் சாக்பீஸ் டொலிடி நம்பள கவுட்டுட்டானே...

இருவரும் நெளிந்து நெளிந்து, சீட்டுக்கு அடியில் செட்டில் ஆகிறார்கள்

ரஜினி: நான் வேண்டாம் சொன்னேன், கேட்டியா? இப்டி மாட்டி வுட்டுட்டியே?


கவுண்டமணி: வெளியே ஓடிப்போகலாம்ன்ன கதவ வேற சாத்தி வுட்டுட்டாங்கப்பா... 


ரஜினி: இப்போ என்ன பண்றது? அய்யோயோ... முடிலயே

(முதற்பாதி முடிந்தவுடன்)


கவுண்டமணி: ஹே... ஆனது ஆகிப்போச்சு, வுடு... எப்டியோ செகண்ட்-ஹாப் நல்லா இருக்கும்... துணிஞ்சு பாக்கலாம்..


ரஜினி: அய்யோ... நான் வரமாட்டேன், நான் வரமாட்டேன்...


கவுண்டமணி: செகண்ட்-ஷோக்கு வேற டிக்கெட் இருக்குய்யா... Back-to-Back ஷோஸ்


ரஜினி: அய்ய்ய்ய்ய்யோ... என்ன விட்ரு... நான் வரல...

கவுண்டர் நேராக ரெஸ்ட்-ரூம் சொல்ல

ரஜினி: அண்ணே... இந்த பக்கம்...


கவுண்டமணி: இல்ல நான் கதவு இந்த பக்கம் நெனச்சிகிட்டேன்...

(ரெண்டாம் பாதி துவங்கியவுடன்)


ரஜினி: (தனியாக) தலல்ல்ல


கவுண்டமணி: ஆஹன், இது வேற ஆக்கும்... இருக்குற உசுரே போய்டும் போல இருக்கு... இதுல கை வேற, தல வேறன்னு...

(பாடல் வர)


கவுண்டமணி: ஓஓஓஓஓஓஓஒ... இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போலருக்குப்போவ்...

(கொஞ்ச நேரம் கழித்து)


கவுண்டமணி: எதுக்கு என்ன தட்ன?


ரஜினி: இல்ல.. தூங்கிட்டீங்களோன்னு


கவுண்டமணி: இருந்தாலும் நீ ரொம்ப தைரியசாலிப்பா.. இந்த ஓட்ட கண்ணாடிய போட்டுடு எப்டிதான் இந்த படத்த துணிஞ்சு பாக்குறியோ...

(பஃப்ஸ் பாஸ் பண்ண)


கவுண்டமணி: அத நீங்கள வச்சிகோங்க, எங்கள தயவு செஞ்சு வெளிய மட்டும் விட்ருங்ககவ்வ்வ்வ்வ்வ் :(என் படத்துல ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு பாடும், ஏன் ஒவ்வொரு ஃப்ரெமும் மொக்கையா செதுக்குனதுடா


ஒரு வழியாக படம் முடிந்து வெளியே விமர்சனம் கேக்க


கவுண்டமணி: நாங்களாச்சும் படம் மொக்கன்னு தெரியாம வந்தோம்... ஆனா நீங்க தெரிஞ்சே வந்து, எங்ககிட்ட விமர்சனம் வேற கேக்குறீங்க... நீங்கல்லா இங்க வருவீங்க சொல்லிருந்தா, நாங்க இந்த பக்கம் வந்துருக்கவே மாட்டோம்

விமர்சன குழு: நீங்க இப்டி சொன்னா, நாங்க விமர்சனத்த போட மாட்டோம்... மூஞ்ச சிரிச்ச மாதிரி வச்சிட்டு சொல்லுங்க...

ரஜினி: (சிரித்து கொண்டே) தல தக்கரு டோய்ய்ய்ய்ய்...  (கவுண்டரிடம்) வாப்பா போலாம்

கவுண்டமணி:  என்னப்பா உன் வேல முடிஞ்ச உடனே போலாங்க்ற... (காமரா பார்த்து) தல படத்த பாக்க தகுதி வேணாம், ஆனா தல படத்த
விமர்சனம் பண்ண தகுதி வேணும் (ரஜினியிடம்) இப்டி தான் படம் நல்லா இல்லனாலும் அத பத்தி பேசாம தலய பத்தி புராணம் பாடி அப்பீட் ஆயிடணும்... ஆனா சக்கரகட்டி சக்ரி மண்டய, நீ மட்டும் கைல கெடச்ச....
பில்லா 2 - இல்ல நல்லா த்தூ
வருகைக்கு நன்றி!! 

Saturday, 16 June 2012

அப்பா கதைகள்வில்லன் அப்பா


அப்பா: டேய், பாஸ்போர்ட் அப்ளை பண்ண சொல்லி…

பையன்: இந்த சனிக்கிழம காலேஜ் லீவ்ப்பா… அப்ளிகேஷன் வாங்கிடுறேன்

அப்பா:இத தான் ஒரு மாசமா சொல்லிட்டு இருக்க, நானே வாங்கிட்டேன்… இந்தா ஃபில் பண்ணு, அடுத்த வாரம் போய் கொடுத்துறலாம்


அடுத்த வாரம்

அப்பா:டேய், அப்ளிகேஷன் வாங்கிட்டு வந்தேனே, அத கொஞ்சமாச்சும் படிச்சியா?

பையன்:காலேஜ்ல டெஸ்ட்ப்பா, அதான் பாக்கல…

அப்பா:எடுக்கற்து என்னமோ 15, 25 தான்… அதுக்கு ஏன்டா நடிக்கிற?? நான் ஜெராக்ஸ் எடுத்து, அதுல பென்சில்ல ஃபில் பண்ணிட்டேன்… நீ அதே மாதிரி ஒரிஜினல்ல எழுதிக்கோ… காபி அடிக்கறதாச்சும் ஒழுங்கா செய்டா


மூன்று நாட்கள் கழித்து

அப்பா:டேய், முடிச்சியா?

பையன்:எங்கப்பா வச்ச, அப்ளிகேஷன்ன? மூணு நாளா தேடுறேன்

அப்பா:தெரியும்டா உன்னபத்தி, உன் டேபிள் மேலேயே தான் இருந்துச்சு, கம்யூட்டர்ல பைத்தியக்காரன் மாதிரி சாட் ஆடிட்டு இருக்க, க்ரவுண்ட்ல போய் ஆடுறான்னா, இங்க பந்து விளையாடிட்டு இருக்க.. அத ஒரு நாளாச்சும் பாத்தியா??

பையன்:சரி சரி, இப்போ நான் ஃப்ரீ தான், 10 நிமிஷ வேலப்பா, முடிச்சிடுறேன்

அப்பா:நானே எழுதிட்டேன்டா… உன் சைன் மட்டும் போடு, இல்ல அதுவும்

பையன்:ங்கேகேகேகேகேகே


அடுத்த வாரம்

பக்கத்து வீட்டு பெண்: அண்ணா இருக்காங்களா? 

அப்பா:ரூம்ல கேம்ஸ் விளையாடிட்டு இருக்கான்மா…

(பையன் அதற்குள் வெளியே வர)

பக்கத்து வீட்டு பெண்: அண்ணா, +1 சேரணும்.. அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபில் பண்ணனும்… சிலது தெரில, ஹெல்ப் பண்றீங்களா?

அப்பா:நல்லா கேட்ட போ… (விஷமச்சிரிப்பு)

ஹீரோ அப்பா


பையன்:அப்பா, அண்ணா யூனிவர்சிட்டி போறேன் நாளைக்கு, சிம்போசியம் இருக்கு

அப்பா:சிம்போசியம்ன்னா என்னடா?

பையன்:ஆங்ங், கிளி ஜோசியம் மாதிரி சீட்டு எடுத்து, வேலைக்கு செலக்ட் பண்வாங்கப்பா

அப்பா:டேய், அத கேம்பஸ் இண்டர்வியு தானே சொல்வாங்க…

பையன்:சும்மாப்பா, அதுவும் படிப்பு விஷயமா தான், படிப்பு சம்பந்தமா கேள்வி கேப்பாங்க..

அப்பா:சரி, எப்டி போகணும் தெரியும்ல? நம்ப டெப்போல இருந்து M147A ஏறிக்கோ, தி.நகர்ல எறங்கிக்கோ, கடசி ஸ்டாப்… எதிர்தாப்புல டெப்போ தெரியும், அங்க இருந்து அடயாறுன்னு போட்டுருக்குற பஸ்ல ஏறு… 

பையன்:யப்பா… எனக்கு தெரியும், 47D இருக்கு, தி.நகர்ல இருந்து கேட்டு போய்க்கிறேன்

அப்பா:கண்டக்டர்கிட்ட கேட்டுக்கோடா எந்த ஸ்டாப்புன்னு, சிலதுல்லா நிக்காது…

பையன்:நான் பாத்துக்கிறேன்

அப்பா:(நூறு ரூபாயோடு சில 10 ரூபாய் தாள்களை தந்து) ஷேர்-ஆட்டோ தி.நகர் வந்தா ஏறிக்கோ… பஸ் வந்துச்சுன்னா 50 ரூபா பாஸ் எடுத்துக்கோ…. ஒரு நாள் ஃபுல்லா போலாம் அத வச்சு, எந்த பஸ் வந்தாலும் ஏறிக்கோ

பையன்:(மனசுக்குள்) என்னமோ நான் அண்ணா யுனிவர்சிட்டி தனியா போனதே இல்ல மாதிரி

அடுத்த நாள்


அப்பா காலிங்

பையன்:சொல்லுப்பா, இப்போ தான் பஸ் வந்துச்சு

அப்பா:தெரியும்ல? லாஸ்ட் ஸ்டாப்… 

பையன்:ஷப்ப்ப்ப்ப்பா யப்பா, நான் தி.நகர் வந்துட்டு கால் பண்றேன்


30 நிமிடங்கள் கழித்து

அப்பா காலிங்

பையன்:இன்னாப்பா?

அப்பா:எங்கடா இருக்க?

பையன்:லயோலா காலேஜ் வர போறேன்…

அப்பா:ஆபிஸ்ல கிண்டில ஒரு பில் வாங்கிட்டு வர சொல்லிருக்காங்க, நீ என்ன பண்ணு, தி.நகர்ல எறங்கிட்டு கால் பண்ணு, நான் இப்போ வள்ளுவர் கோட்டம் தாண்டிட்டேன், உன்ன அண்ணா யுனிவர்சிட்டில விட்டுறேன்

தி.நகரில் இறங்கியவுடன், அப்பா கைதட்டி மகனை கூப்பிடுகிறார்

அப்பா:எவ்ளோ நேரம்டா லயோலால இருந்து இங்க வர?

பையன்:அப்போ நீ வந்து பஸ்ஸு ஓட்டேன், இவ்ளோ பேசுற

அப்பா:டயர்ட்டா? ஜூஸ் குடிக்லாமா?

பையனுக்கு புரிந்தது, அப்பாவுக்கு கிண்டியில் வேலை இல்லை என்று


வருகைக்கு நன்றி!! Sunday, 15 January 2012

நண்பன் - விஜய் ட்ரெண்ட மாத்தி வச்சான்
  • விஜய் படத்துல பஞ்ச் டயலாக் இல்லை
  • விஜய் படத்துல வில்லன பழிவாங்குற காட்சிகள் இல்லை
  • விஜய் படத்துல அனாமத்தா அடி வாங்குற அடியாளுங்களோட மூணு ஃபைட் இல்லை
  • அட, விஜய் படத்துல பல்லு மொளைக்காத பாப்பால இருந்து, பல்லும் போன பாட்டி வரைக்கும் கட்டி புடிச்சு ஆடுற இண்ட்ரோ பாடல் இல்லை

டேய்… இத டைப் பண்ணும் போது உன் கீபோர்ட்டே சிரிச்சிருக்கும்டான்னு நீங்க நினைக்கலாம்..  இது சிரிக்க வைக்குற படம் தான், ஆனா வேற விதத்தில்... ஆங்கிலத்துல PARADOXன்னு ஒரு வார்த்தை இருக்கு.. அதாவது ஒரு கருத்து அதையே Contradict செய்தாலும்,  அது உண்மையே.. அதுபோல இது விஜய் படம், அனால் விஜய் elements இல்லாத விஜய் படம்.. கதை, திரைக்கதை எல்லாம் அப்டியே 3 Idiots இந்தி படத்தோட தழுவல் தான்.. கொச்சையா சொல்லனும்ன்னா Xerox Copy.. வசனம் கூட பல இடங்களில் Translate செய்து சேர்த்திருக்கிறார்கள்... அட இத செய்ய எதுக்குடா சங்கர்ன்னு யோசனகபால்லா இருந்தாலும், 'குரங்கு கைல இருக்குற பூமாலை’க்கும் ‘அழகான மணமகன் கைல இருக்குற பூமாலை’க்கும் வித்தியாசம் இருக்குல்லே... அத சங்கர் கரெக்டா பண்ணிருக்காரு... ஒரு நல்ல படத்தை ரீ-மேக் செய்யும் போது, அந்த Originalஇன் Essence கொஞ்சம் கூட கெடாமல், Improvise பண்றேன்னு சொதப்பாம, 3Idiots தந்த Impact இந்த படத்துல கொண்டு வந்துருக்காரு சங்கர்... ஏற்கனவே படிச்ச நாவல் தான்,  ஆனா நமக்கு புடிச்ச புத்தகத்த திரும்ப படிக்கும் போது அது தர உணர்வு, சுவாரசியம்,  மகிழ்ச்சி, அதோடு சேர்ந்து நாம இன்னொரு முறை செல்லும் பயணம், எப்டி அலுக்காம இருக்குமோ, அதே தான் நண்பன்.. இது மாதிரி ஒரு விஜய் பாக்க தானே இத்தன நாள் காத்து கெடந்தோம்?? ஆரம்ப 30 நிமிசங்கள்ல ஆமிர்கான இமிடேட் பண்றதா இல்ல நம்ப ஸ்டைல்லேயே நடிக்கற்தான்னு குழம்பி, கொஞ்சம் Hesitation அங்க இங்க இருந்தாலும், அதுக்கு அப்றோம் மனுஷன் பின்னிருக்காரு... ஜீவா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆன காட்சியில் தொடங்கும் பாடலில் இருந்து சரி, ஜீவாவுக்கு நினைவு திரும்பிய உடன் ‘ஹ செம ரெஷ்பான்ஸ்டா’ என்று சந்தோஷத்தில் துள்ளும் இடத்திலும் சரி, க்ளைமாக்ஸ் முன், குழந்தை எட்டி உதைத்த உடன் கொடுக்கும் Expression ஆகட்டும், ஆமிரை விட சிறப்பாக பண்ணிருந்தார் என்றே எனக்கு தோன்றியது (அந்த இரண்டு காட்சிகளில் மட்டுமே)... ஹேர்-ஸ்டைல் மட்டும் சில இடங்களில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை... புவி-ஈர்ப்பு விசைக்கு எதிராக அண்ணன் பறந்து பறந்து ‘குருவி குருவி அடிச்சா’ன்னு இல்லாம, ஜீவா, ஸ்ரீகாந்த், அனுயா, சத்யராஜ்ன்னு எல்லார் கிட்டயும் அடிவாங்குறாரு... செய்த தவறுகளுக்கு பாவமன்னிப்போ? இதுவரை விஜய்யின் மொக்க பன்ச்-டயலாக்ஸ்க்கு எல்லாம் சில சமயம் சீரியசாவும், பல சமயங்களில் காமெடிக்காகவும் விசில் அடிச்சு, கை தட்டி ‘ஒத்தா மெர்சல் தலைவாவாவா’ன்னு கதறிய ‘சம்பவாமியுகே யுகே’ ரசிகன்களில் ஒருவனாக இருந்து, நண்பனில் மட்டும் தான் பல காட்சிகளுக்கு மனதாற ரசித்து, சிரித்து கை தட்டினேன்... மொக்க ஃபிகர் இருக்குற காலேஜ்ல, சூப்பர் ஃபிகர் ஒண்ணு இருந்தா, அதுக்கு அந்த மொக்க ஃபிகர்களுக்கு நன்றி செலுத்துற மாதிரி, விஜய் இதில் நன்றாக தெரிய பிரபுதேவா, எஸ்.பி.ராஜ்குமார், பாபுசிவன் போன்றோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்... மொக்க கதைக்கு பின்னாடி போகாத, உனக்கு செட் ஆகுற கதய தேர்ந்தெடு...
அதுல உன்னால நல்லா பெர்ஃபார்ம் பண்ண முடியும்... வெற்றி உன் பின்னாடி தானா வரும்சங்கரின் அடுத்த பெரிய வெற்றி - Casting.. வசந்த் விஜய் (வசந்த்ப்பா) என்கிற அந்த ஒத்தை தலைவலி தவிர (நல்லவேள, சீக்கிரம் கொன்னுட்டாய்ங்க), எல்லாரும் நல்லா/ஓரளவு நல்லா பண்ணிருக்காங்க.செட்டே ஆகமாட்டாருன்னு நினச்ச சத்யன் அதகளம் பண்ணிருக்காரு... மேடை பேச்சாகட்டும், ‘ஹே தோத்தாங்கோலிஸ், மை பிஸ்கட்’ன்னு தங்கலீஷ்ல பேசுறதாகட்டும், விஜய்க்கு அப்றோம் படத்துல இவர் தான் தெரியுறாரு... விஜய் Shine ஆக முக்கிய காரணம், Supporting cast - ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா... வழக்கமான, சைட்-டான்ஸ் ஆடுற, லவ்வுக்கும் ஹெல்ப் பண்ற/ஹெல்ப் கேக்குற, ‘ஹே... அவரு யாருங்க்ற?? அவர் யாரு தெரியுமா??’ன்னு உச்சஸ்தானியில் கதறுகிற நண்பர்களா இல்லாம, படத்துக்கு செம ஒத்துழைப்பு தந்துருக்காங்க... குடித்துவிட்டு உளறும் காட்சியில் இருக்கும் குறும்பிலும், ‘புழுக ஒரு அளவில்லையா?’ என்று கண்ணின் ஓரத்தில் கசியும் நீரிலும், நேர்முகத்தேர்வில் பேசும் முதிர்ச்சியிலும் ஜீவா ஷர்மன் ஜோஷியை விடவே சிறப்பாக செய்திருக்கிறார்... ஸ்ரீகாந்த் சில காட்சிகளில் என்ன ரியாக்ட் செய்வதென தெரியாமல் ங்ங்கே என தத்தி போல காட்சி அளித்தாலும், அப்பாவோடு பேசும் காட்சியில் அள்ளுகிறார் (Professional Camera எவ்ளோ இருக்கும்ன்னு கேக்குற காட்சியில் சிலிர்ப்பு) ரொம்ப எதிர்பார்த்த சத்யராஜ், இலியானா மட்டுமே ஏமாற்றம்... சத்யராஜ் Calibreக்கு இத விட சிறப்பாவே செஞ்சிருக்கலாம்... ஆனா போமன் இரானிய இமிடேட் பண்றதா, இல்ல நம்ப ஸ்டைல்ல லொல்லா லந்து பண்றதா இல்ல ஜேப்பியார் மாதிரி பேசறதா தெரியாமா கன்ஃபியுஸ் ஆகிருக்காரு சில காட்சிகள்ல... இலியானா இடுப்பு மட்டும் நல்லா இருக்கு, முகமெல்லாம் செரமிக் டைல்ஸ் மாதிரி லைட்டா சொறி.... மேக்-அப் மேன் கவுத்திட்டியேப்பா... நடிப்பு அவங்க உடல் மாதிரி சொல்ற அளவு ‘பெருசா’ இல்ல..ஒளிப்பதிவு ரொம்ப ஃப்ரெஷ்... சில ஷாட்ஸ் ஒரிஜினல்ல இருந்த மாதிரி வச்சாலும், மனோஜ் கலர்ஸ் மூலமா படத்துக்கு பாசிட்டிவ் வைப் சேர்த்துருக்காரு... கண்ணுல ஒத்திக்கலாம், குறிப்பா ஏரியல்-ஷாட்ஸ்... டெக்னிக்கல் வசனங்களி சுஜாதா சாயல் கார்க்கி - ‘Principal பொண்ணு நீங்க தான் Profit' பளிச். எப்டி ஏற்கனவே பாத்த படமா இருந்தாலும் ரசிக்குற மாதிரி இருந்துச்சோ, அதே போல ஹாரிஸ் ஜெயராஜ் இசை.. ஏற்கனவே கேட்ட மாதிரி இருந்தாலும் பாடல்கள் எல்லாம் விஷுவல்ஸ் உடன் நல்லா இருக்கு... பிண்ணனி இசையும் கொற சொல்ற மாதிரி இல்ல, ஏழாம் அறிவுல சொதப்புனாலும் இதுல, Comfort zoneல ஸ்லிப் ஆகி Settle ஆயிட்டாரு (ரசூல் பூக்குட்டின்னு நன்றி சொல்லணுமோ Sound Quality) குசேலன், க்ரிடம் படங்களை எடுத்து மாத்துறேன்னு சொதப்பியது போல் இல்லாமல், ரெண்டு வரி திருக்குறள மொழிபெயர்க்கும் போது, அதோட அர்தத்த கெடுக்காம, recreating magicன்னு சொல்ற மாதிரி, ஷங்கர் சூப்பர் டீம வீணாக்காம சக்‌ஷஸ் ஃபார்முலா போட்டுருக்காரு... வேறு இயக்குனரா இருந்தா விஜய்யோட மாஸ் இமேஜ்க்கு சூட் ஆகணும்ன்னு ஸ்க்ரிப்ட மாத்திருக்கலாம், ஆனா அப்டி பண்ணாம, இதான் உண்மையான மாஸ்ன்னு ஷங்கர் விஜய்ய மாத்திருக்குற இடத்துல ஜெயிச்சிருக்காரு... டைட்டில் கார்ட்ல இருந்து (பளப்பள ஜிகின்னா, காதை அடைக்கும் இசை, ‘இளைய தளபதி’ன்னு இல்லாம) கடைசி க்ரெடிட்ஸ் வரைக்கும் ஃப்ரேம்-பை-ஃப்ரேம் ரசிக்க வச்சிருக்காரு... குறிப்பா இருக்கானா இலியானா குத்து டைப் சாங்க்ல கூட விஜய்ய டீசண்டா காட்ட முடியும்ன்னு நிருபிச்சிருக்காரு.. ‘உச்சி மண்ட, சில்லாக்ஸ்’ வகையறா டைரக்டர்ஸ் கவனிக்க.... நண்பன் - விஜய்க்கு தகுதியான வெற்றி (பேண்ட்டை இறக்கி) ‘தலைவாவாவா... You ARE GREAT'


வருகைக்கு நன்றி!! 
Blogger templates

Custom Search