Saturday, 24 December 2011

ராஜபாட்டை - விக்ரம் விட்ட கோட்டை


விக்ரமோட நடிப்புல எப்பவுமே ஒரு ‘நடிப்பு’ இருக்கும்… ரொம்ப மெனக்கெட்டு, நானும் நடிக்கிறேன் பாருன்னு மெனக்கெடுறது தெரியும்.. தெய்வதிருமகனில் சில இடங்களில் இஸ்து இஸ்து பேஸ்றேன்னு ‘கொடுத்த காசுக்கு மேல நடிக்காதடா’ன்னு கத்த தோணுச்சு… விக்ரம் நல்ல நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை… சேது, தில், தூள், சாமி எல்லாம் ரசித்தவன் நான்… ஆனா காலப்போக்கில் அரிதாரத்தில் செயற்கைமூலாமும் கலந்துவிட்டது…


போன வருசம் நான் ரசிச்சு பார்த்த படம் ‘நான் மகான் அல்ல’. சுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு நெகட்டிவ் க்ளைமாக்ஸ்ஸால பிடிக்காம போனது… ஆனா நான் மகான் அல்ல மூன்று முறை தியேட்டரில் பார்த்தேன்.. காதல், ஆக்ஷன், அப்பா செண்டிமெண்ட், கதையோடு கலந்த நகைச்சுவை, த்ரில் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்துகட்டி கொடுத்திருப்பார்… இந்த வருடம் வந்த அழகர்சாமியின் குதிரை கூட அருமையாக பண்ணிருந்தார்… இப்படி மூன்று வெவ்வேறு தளத்தில் படம் கொடுத்து, முதற்தடவை கொஞ்சம் பெரிய ஹீரோ விக்ரமோட மாஸ்-மசாலா படம் பண்றேன்னு கொடுத்தது தான் ராஜபாட்டை…


படத்துல ப்ளஸ் மதியோட ஒளிப்பதிவு… ஒரே ப்ளஸ் இதான்… மத்தபடி ஏனோதானோன்னு எடுத்துருக்காங்க… பொண்ணுக்கு வயசாயிட்டே போகுது, சட்டுபுட்டுன்னு கல்யாணத்த பண்ணுங்கன்னு சொல்ற மாதிரி, விக்ரமுக்கு வயசாகுது, அதுக்குள்ள கால்ஷீட் இருக்கு, எடுத்துக்கலாம்ன்னு ஷூட் போயிட்டாங்க… திரைக்கத ஒழுங்கா எழுதாம திருமங்கலம் டூ அண்ணாநகர் திருப்பி விட்ட ரூட் மாதிரி இஷ்டத்துக்கு போகுது. எடிட்டர் டைலரிங் வேல பாக்க போயிட்டாரோ என்னவோ, இல்ல அவருக்கே சீன எங்க வைக்கணும்ன்னு தெரில போலவிக்ரம்ம இத விட அசிங்கமா காட்ட முடியாது… ஏற்கனவே முகத்துல சுருக்கங்கள், இதுல இவர் பண்ற சேஷ்டைகள பாக்குற நம்ப முகமும் சுருங்கி போகுது… ஜிம்-பாய்ன்னு வரவன் எல்லாரையும் அடிச்சிட்டே இருக்காரு… பாக்குற நமக்கே ட்யர்ட்டாகி ரெஸ்ட் கொடுங்கடா சாமின்னு கத்தாத குற… மாஸ் காட்றேன், பஞ்ச் பேசுறேன்னு (குறிப்பா இடைவேளை முன் – இடைவேளை பின் வர காட்சிகள்) பாடி-லாங்குவேஜ் பார்த்து ஸ்க்ரீன கிழிச்சிட்டு தூக்கு மாட்டிக்கலாம் போல இருந்துச்சு… தசவதாரத்தை தூக்கி சாப்டணும்ன்னு நம்ப டவுசர கழட்டாத குறையா கெட்-அப் போட்டு இம்ச வேற பண்றாருஹீரோயின் போஸ்டர்ல வந்த அளவுக்கு கூட படத்துல இல்ல… வில்லியா ‘அக்கா’ன்னு ஒருத்தங்க… தில் சொர்ணாக்கா எஃபெக்ட் கொடுக்க பார்த்தாங்க... ஆய் உய்ய் ஏய்ய்ன்னு கத்தி, புடவய தூக்கி க்ளாமரா உதைக்கறது இல்லாம, சீரியல் வில்லி மாதிரி கண்ண உருட்டி மெறட்ட மெனக்கெடுறாங்க… கும்முன்னு இருந்த இவங்களையே ஹீரோயின்னா போட்டுருக்கலாம்… யாரடி நீ மோகினி தாத்தா, சந்தானம் மாதிரி காமெடி பண்றேன்னு சில இடங்களில் சிரிக்க வச்சாரு… இவருக்கு என்ன கஷ்டமோ, இந்த கூட்டத்துல வந்து சிக்கிக்கிட்டாரு…. வாப்பா வாப்பான்னு பில்ட்-அப் கொடுத்து கடசில போப்பான்னு அவரையும் சப்பையா முடிச்சிட்டாங்க… பர்மா பஜார் போனா, ‘வாங்க சார்’ன்னு கைய புடிச்சு இழுக்காத கொறயா வரவன் போறவன் எல்லாம் நடிக்க வச்சிருக்காங்க காசு இருக்கேன்னு… நம்ம கேரியருக்கு ‘கட்டம்’ கட்டிட்டானே :(


இசை யுவன் சங்கர் ராஜான்னு டைட்டில்ல மட்டும் தான் பளிச்சிடுது… சரி பின்னணி இசை நல்லா இருந்தாவாச்சும் காட்சிகளுக்கு சுவாரசியம்ன்னு பார்த்தா அது பாட்டுக்கும் மேல… ராப் எல்லாம் வச்சு அலறவுடுறாரு… ஆரம்ப ஸ்டண்ட்டே நீள்ள்ள்ள்ளமா இருக்கறதால் அடுத்து வரர்து ஒட்டவே இல்ல..  படத்துல இது ஏன் நடக்குதுன்னு லாஜிக் பாக்க முடியாத அளவுக்கு ஓசோன் படலத்த விட பெரிய ஓட்ட… ராம்ஜி – பாஸ்கர்சக்தி – யுவன் என்கின்ற நல்ல டீம அநியாயத்துக்கு வீணாக்கிருக்காங்க…. படம் முடியும் போது ‘லட்டே லட்டே’ன்னு பாடல் வச்ச இயக்குனரின் அசாத்திய திறமய பாராட்டியே ஆகணும்… ஆனா அத நின்னு கேக்க கூட படம் பாக்க வந்தவங்களுக்கு ஆர்வமில்ல போல, உட்டாச்சுடான்னு ஓட்டம் தான்... படத்தோட கத ‘நில மோசடி’யாம்… அநேகமா படத்தோட தயாரிப்பாளர் வீடு, நிலம் எல்லாம் வித்து தான் படம் எடுத்துருப்பாரு, ரிசல்ட் அப்றோம் இதுக்காக ‘நில மோசடி’ வழக்கு இந்த டீம் மேல போடலாம்.ராஜபாட்டை - ராஜகொறட்டை

வருகைக்கு நன்றி!! 

Blogger templates

Custom Search