Wednesday, 26 October 2011

வேலாயுதம் - அவன் வருவான்டா, கொல்வான்டா


ஒரு ஊருல ஒரு கிராமமாம், அந்த கிராமத்துல ஹீரோவாம், அவன் அண்ணனாம், அந்த அண்ணனுக்கு ஒரே ஒரு தங்கச்சியாம், ஊருலேயே அவன் மட்டும் தான் அழகாம், அதுனால ஒரே ஒரு அத்த பொண்ணு அட்ட மாதிரி ஒட்டிக்குமாம்..


அப்றோம் ஒரு ஊருல ஒரு நகரமாம், அந்த நகரத்துல வில்லனாம், அவன் அரசியல்வாதியாம், அவனுக்கு பாகிஸ்தான் டெரரிஸ்ட் நண்பர்களாம், அவங்க நகரத்த அழிக்கணுமாம், அத தெரிஞ்சிகிட்ட இன்னொரு பொண்ணு செகண்ட் ஹீரோயினாம்.. ‘அநியாயத்த தட்டி கேக்க ஒருத்தன் வருவான்டா’ன்னு எம்.ஜி.ஆர் காலத்துல கத்துன இளைஞன் இப்போ தாத்தா ஆகி அதயே கத்திட்டு இருக்கானாம்... கட் பண்ணா ஹீரோ நகரத்து வராராம்… சந்தர்ப்ப சூழ்நிலையால இத தட்டி கேக்க முடிவு பண்றாராம்.. அப்றோம் என்னமாம்? மேசேஜாம், சுபமாம்..திருப்பாச்சியில் ஆரம்பிச்சது விஜய் படம் முதற்முறை தியேட்டரில் பார்த்த அனுபவம்… அப்பொதெல்லாம் விஜய் படம் என்றாலே க்ரேஸ்… பொறியியல் நுழைவுத்தேர்வுக்கு படிக்காமல் சச்சின் படம் பாக்க போனதுன்னு.. பெருசா பண்ணதுன்னா, போக்கிரிக்கு சென்னைல டிக்கெட் கிடைக்கலன்னு முன்னாடி நாளே பாண்டிச்சேரிக்கு கிளம்பி போனது, மாமாவோ ‘என்னடா வராம வந்துருக்க’ன்னு கேக்க ‘போக்கிரி பாக்கணும் மாமா’ன்னு நான் உண்மைய உடைக்க அவர் முகம் போன போக்கு – சக்கரைப்பொங்கல்ல எவன்டா மொலகா வச்சது மாதிரி ரியாக்ஷன்… விஜய்யிடம் ஈர்த்ததே அவரோட ஸ்கிரின் பிரசன்ஸ்... பெருசா மெனக்கெடாமல் தனக்கு எது வருமோ அதை செய்வது… பாட்டு, நடனம், சண்டை இவற்றில் குறை வைத்ததில்லை… ஆனால் போகப் போக, கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்த உடனோ, அல்லது நல்ல சினிமாவை ரசிக்க ஆரம்பித்த உடனோ அதெல்லாம் Monotonous ஆக தெரிந்தது… இருந்தாலும், அந்த attraction, முதற்காதலைப் போல, fatal attraction.. மொக்கைன்னு தெரிஞ்சும், விஜய்யை திரையில் பார்க்க வேண்டும் என்கின்ற அந்த ஆர்வம் போனதில்லை, இன்னும் போகவில்லை (ஏனோ அஜித் பிடிக்காமல் போனதுக்கு அவரோட Energy இல்லாத screen-presence சொல்லலாம்)என்னது ஒன்ஸ்-மோர் பாக்கணுமா? ஆள வுடுங்கடா


வேலாயுதம், இனி

  • விஜய் வழக்கம் போல வஞ்சனை இல்லாமல் பண்ணிருக்காரு… ஹீரோயிசம் கொஞ்சம் Tolerable ஆக இருந்தது, முந்தைய மசாலா படங்களை காட்டிலும்... அதிகமா பஞ்ச் பேசாம, கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், முழு திருப்தி இல்லை…

  • இன்னொரு ஹீரோ சந்தானம், சிறுத்தை அடுத்து மிகவும் ரசித்து பார்த்த காமெடி காட்சிகள்… ஏ.டி.எம்மில் மிஸ் ஆன கெமிஸ்ட்ரி இதுல நல்லா வர்க் ஆகியிருக்கு… விஜய்யும் சந்தானத்தை டாமினேட் பண்ணாமல், டீசன்ட்டான பாடி-லாங்குவேஜ்ஜில் (கரெண்ட் ஷாக் அடிக்கும் போது கைல கற்பூரத்த வச்ச மாதிரி ஆடிட்டே இல்ல) கம்பெனி தந்திருக்கிறார்…

  • ஓப்பனிங் சாங் சூப்பர், போக்கிரி அப்றோம் கலக்கலா எடுத்துருக்காங்க, ஆடாம இருக்க முடியல, செம மாஸ் அப்பீல்

  • ஹன்சிகா ஹாட்வானி, காட்டு காட்டுன்னு காட்டிருக்காங்க.. வெளிய பெஞ்ச மழைல நனையாதது எல்லாம் சில்லாக்ஸ் பாட்டு பார்த்த உடனே நனஞ்சு போச்சு

  • ஜெனிலியா, சுமாரா நடிச்சிருக்காங்க, சில இடங்களில் லிப்-சிங்க் ஆகவே இல்ல, நடிக்க பெருசா ஸ்கோப் இல்லை, காட்டவும் ஒண்ணும் இல்லை (நான் திறமைய தான் சொன்னேன்)

  • டெடரிஸ்ட் வில்லன் டப்சா காமெடி பீஸ்.. ‘ஹே வேலாயுதம், நான் தான் இப்ராகிம்’ன்னு பயோ-டேட்டா வாசிக்கிறாரு, கேப்டன் பட ஃபீல் – ‘ஹே நொரசிம்மா, ஹே வாஞ்சிநாதன்ன்’ இவனுக்கு மேல அரசியல்வாதியா வர இன்னொரு வில்லன்… அவன் பேசுறப்பலாம் டப்பிங் படம் பாக்குற மாதிரி இருக்கு… போக்கிரி தாண்டி இன்னும் ஒரு நல்ல வில்லன் விஜய் படத்துக்கு மிஸ்ஸிங்..

  • படத்துல வர நண்டு சிண்டெல்லாம் ‘அவரு வருவாருடா’ ‘எங்க அண்ணன் கொல்வாருடா’ ‘வந்துட்டாருடா’, ‘அநியாயம் பண்ணா அடிப்பாருடா’ன்னு பேசியே சாவடிக்கிறாங்க, இவங்கள இதே டயலாக்க வில்லன் கிட்ட பத்து தடவ சொல்ல சொன்னா அவன் பாகிஸ்தானுக்கே ஒடிருப்பான்.. அதுலயும் ராகவ் கொடுக்குற எக்ஸ்பிரஷன்ஸ் ஷப்பா… நல்லவேள அவர சீக்கரம் கொன்னாங்க...

  • க்ளைமாக்ஸ்ல வில்லன அடிக்க சொன்னா, ஒடிப்போய் விஜய் முகத்த ரங்கோலி கோலம் மாதிரி போட லைன்னா நிக்கறது, மாஸா இருந்தாலும், வெளியே வரும்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

  • வசனம் பல இடங்களில் பளிச், குறிப்பா இடைவேளை முன்பு விஜய்-ஜெனிலியா உரையாடல், ஷாயாஜி சிண்டேவின் கசாப் வசனம்… சில இடங்களில் புளிச், அதுவும் ராகவ் பேச ஆரம்பிச்ச உடனே ஆப்ப கரண்டிய எடுத்து வாயில வச்சிருக்கணும்… ’நம்ம கிராமமே இந்த பாம்மால வெடிச்சிருக்கும்’ன்னு நாட்டாமை அலற ‘அடேய், வீட்டு செவரு கூட ஓழுங்கா உடையல பாம் வெடிச்சு, இதுல கிராமமே வெடியுமா’ன்னு கேக்காம இருக்க முடியல…

  • ட்ரெயின் ஸ்டண்ட் எல்லாம் கொடுத்த பில்ட்-அப்புக்கு வர்த் இல்லை… இதெல்லாம் கேப்டன் பண்ணிருந்தா கலாசி இருப்பாங்க… மொத ஃபைட் சம்பந்தமே இல்லாம வருது, அதை தொடர்ந்து மாயம் செய்தாயோ பாடல் – உச்சக்கட்ட கொடுமை… 


படத்துல அங்கங்கே ரசிக்கிற மாதிரி சுவாரசியமாக பண்ணிருந்தாலும், புதுசா ஒண்ணும் இல்லை… சரியான இடங்களில் காமெடி, சென்டிமெண்ட் வைத்து திரைக்கதை தோய்வில்லாமல் கொண்டு சென்றது ப்ளஸ்… பிற்பாதில கலாய்க்க பல இடங்கள் இருப்பது மைனஸ்.. ஆனாலும் சிங்கிள்ளாக படத்தை ஒரளவுக்கு ரசிக்க வைக்கும் விஜய்யின் எனர்ஜி, ஸ்க்ரின் பிரசன்ஸ்காக பல வேட்டைக்காரன், சுறாக்களை தாங்கலாம், வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டு… விஜய்க்கு இன்னொரு பாஷ்ஷா, கில்லின்னு என்று சில்லி தனமாக சொல்வது வேடிக்கை… மொக்க காலேஜ்ல சுமாரிலும் சுமார் ஃபிகர் மேல் வரும் ஈர்ப்பு தான் வேலாயுதம்… 


வேலாயுதம்: லவ்வர் இல்லாத பையன் - ஸ்ட்ரிக்ட்லி ஒன்ஸ்…

வருகைக்கு நன்றி!! 

Saturday, 1 October 2011

வெடி - பத்து வருஷத்துக்கு முன்னாடி வாங்குனது


பாலாவின் கையில் ‘அவன் இவன்’ ஆக குட்டுப்பட்டு, கஷ்டப்பட்டு ‘நானும் நடிகன் தான்’ என்று காட்டிய விஷால், இப்போ ‘நானும் மாஸ் ஹீரோ தான்’ன்னு படம் பாக்க வந்த நம்பள போட்டு காட்டு காட்டுன்னு பொறட்டி போடுறாரு வெடில (புரட்சி தளபதின்னு டைட்டில் வேற).. சண்டைக்கோழி வெற்றிக்கு காரணமே மாஸ் இல்லாத நம்பள்ள ஒருத்தன், மாஸ் ஹீரோ ஆகறது தான்... ஆனா அந்த வெற்றி மெதப்புல நாம இன்னும் மாஸ் ஹீரோன்னு நெனச்சிட்டு த-மாஸு பண்ணிட்டு இருக்காரு விஷால்… வராத மாஸ வா வான்னா எப்படி சார் வரும்? அமுதனின் ’தமிழ்படம்’ காட்டிலும் இந்த படம் SPOOF MOVIEல சிறப்பா பண்ணிருக்காங்க…அதரப்பழசு ’எவன் வந்தாலும் அடிப்பேன் ஹீரோ’ கூட ‘எதையும் காட்டும் ஹீரோயின்’ சேர்த்து ‘இவனைப்போல அண்ணன்’ செண்டிமெண்ட் கலந்து ’வெட்டுங்கடா அவன’ன்னு படம் பாக்க வந்தவங்கள ‘கிழிங்கடா ஸ்க்ரீன’ன்னு கொல்றாங்க… விஷால் பாக்க மேன்லியா இருக்காரு… (சமீராவும் அவர விட மேன்லியா இருக்காங்க – அது வேற விஷயம்) எப்பவுமே தனது மசாலா படங்கள்ல விஜய்ய இமிடேட் பண்ணும் பாடி-லாங்குவேஜ் இப்படத்தில் மிஸ்ஸிங் என்பது பெரிய ஆறுதல்… கேரக்டருக்கு எது தேவையோ அத நல்லா பண்ணிருக்காரு… மத்தபடி சொல்றதுக்கு எதுவும் இல்ல… படத்துல பாடல்கள் நல்லா எடுத்துருக்காங்க, பின்னணி இசை சில இடங்களில் பளிச்… ஒரு சீன் வந்தாலும் ஊர்வசி விவேக்கை காட்டிலும் சிரிப்பு வரவழைக்குறாங்க… விவேக் சார் – இன்னும் எத்தன படத்துல தான் இதே டெம்ப்ளேட்?

இந்த குழந்தைகளும் நம்ம படத்த பாத்து மூஞ்ச திருப்பிக்கிறாங்களே??

ரீமேக் பண்ண வேற நல்ல படமே கிடைக்கலையா? திரைக்கதையில் பிரபுதேவா சில பட்டி டிங்கரிங் செய்திருந்தாலும், எதுவுமே ஒட்டவே இல்லை… டெலுங்கு படத்த தமிழ்ல எடுப்பாங்க, இவங்க டெலுங்கு படத்த எடுத்து டெலுங்கு படமாவே கொடுத்துருக்காங்க… விஷால் ரொம்ப கொடுத்து வச்சவர்.. ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க’ போன்ற குடும்பம்… இவர்கள் இருக்கும் வரை விஷால் மேலும் நமக்கு மசாலா வெடிகளை கொடுத்து, தமிழ் சினிமாவை சிறப்புற செய்வார்…     வெடி – செம கடி


படத்துல பெருசா எதுவும் இல்ல… அதுனால விமர்சனமும் பெருசா இல்ல..


வருகைக்கு நன்றி!! 

Blogger templates

Custom Search