Friday, 2 September 2011

மங்கத்தா - தலயின் ஆட்டம்


  • அஜித் படமா? செம கடியா இருக்குமே – ரைட்டு
  • அஜித்துக்கு டான்ஸ்ஸே வராதே, பாட்டெல்லாம் செம மொக்கையா இருக்கும் – ரைட்டு
  • எனர்ஜித்(திக்) இல்லாத அஜித் – ரைட்டு
  • அஜித்துக்கு டயலாக்ஸ் எல்லாம் ஒழுங்கா பேசவே வராதே – ரைட்டு
  • அஜித் வாய்ஸ் மாடுலேசன் தான் அவர் படத்துல இருக்குற ஒரே காமெடி – ரைட்டு


வெங்கட் பிரபு – ராங்கு, பாத்து பண்ணலாம், ராங்கு, ராங்கு, ராங்கு


ஒவ்வொரு முறை அஜித் படத்தைப் பார்க்க திரையரங்கு செல்லும் போது, எமாற்றமே மிஞ்சும்… ‘என்னடா இந்த ஆளு, இப்படி மொக்க படமா நடிச்சிட்டு இருக்காரு, படமும் Entertaininga இல்ல, அப்றோம் ஏன் இவரு ஃபேன்ஸ் இந்த ஆட்டம் ஆடுறாங்க.. Does he really deserve this?’ என்ற எண்ணம் எப்போதும் ஓடும்… நான் அஜித் படங்கள் பார்க்க ஆரம்பித்தது வேறு காலகட்டமாக இருந்த பட்சத்தில், (ஆஞ்சனேயாவில் ஆரம்பித்தது) அவரின் படங்கள் ஒன்று கூட எனக்கு பிடிக்கவில்லை, அவரையும் பிடிக்கவில்லை… குறிப்பாக அவரின் சில ரசிகர்கள் பண்ணும் அலப்பறை – They go overboard for things that doesn’t deserve much of hype. அவரின் ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய வரலாறு, பில்லா கூட எனக்கு மொக்கையாக தான் தெரிந்தது.. வரலாறு படத்தில் ஃப்ளாஸ்ஃபேக்கில் வரும் அஜித்தின் நடிப்பு, வில்லன் மகன் அஜித்தின் நடிப்பைத் தவிர இப்படம் பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை… பில்லாவோ ஸ்டைல்லை தவிர்த்து பார்த்தால் மந்தமாகப் போகும்.. முன்னரே சொன்னது போல செம Bore.
இதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மங்காத்தா படத்துக்கு சென்றேன்.. முதற்முறையாக, ரசிகர்களின் கொண்டாட்டம், ஒரு வருட காத்திருப்பு, Hype, இது அனைத்தும் Deserving ஆக தோன்றியது இந்த படத்திற்கு மட்டும் தான்.. வெங்கட் பிரபு, தான் முன்னதே சொன்னது போல ’ஒரு அஜித் ரசிகனாக இருந்து இந்த படத்தை எடுத்துருக்கேன்’ என்று சொன்ன சொல்லை காப்பாற்றி இருக்கிறார்… ஒவ்வொரு Frameலும் ரசித்து, அஜித்தை ஆராதித்து எடுத்துள்ளார்... அஜித் என்ற நடிகனுக்கும், அவரின் ரசிகர்களுக்கும் செம தீனி, நீண்ட நாட்கள் கழித்து.. அவரின் மைனஸ் எது என்று சொல்லிக்கொண்டு கலாய்த்தோமோ அது அனைத்தையும் இந்த படத்தில் பாதிக்கு மேல் பல இடங்களில் சரி கட்டி உள்ளார்..  அஜித்தை க்ளாஸ்ஸா காட்டுவதா மாஸ்ஸா காட்டுவதா என்று குழம்பி உட்டாலக்கடி அடித்த கிரிடம், எவ்ளோ க்ளாஸ் காட்டுவது, எவ்ளோ மாஸ் காட்டுவது என்பதில் குழம்பிய பில்ட்-அப் பில்லா, இதில் இருந்த தவறை எல்லாம் களைந்து, சரியான விகிதத்தில் அஜித்தின் மாஸ், தனது ட்ரேட்மார்க் Entertainment, நெடி அடிக்காத மசாலா என கலந்து 50வது படத்தை தந்து இருக்கிறார் வெங்கட் பிரபு
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அஜித்.. உம்மன்னா மூஞ்சு, Somber screen-presence இதை எல்லாம் இந்த படத்தில் உடைந்தெறிந்து விட்டார்.. முதற்பாதியில் டல் அடித்தாலும், இடைவேளி பதினைந்து நிமிடங்கள் முன்னால் இருந்து, படம் முடியும் வரை, அஜித்’s Show... எந்திரனின் மிகப்பெரிய ப்ளஸ்ஸே கடைசி இருபது நிமிடங்கள் வரும் வில்ல ரஜினியின் நடிப்பு.. அதோட Extended Versionஆ மங்காத்தாவில் ரகளை பண்ணிருக்கிறார் அஜித்… நீண்ட நாட்கள் கழித்து, அந்த வில்லச்சிரிப்பில் ஒரு Energy and Life இருந்தது (கண்ணு மட்டும் பார்த்துக்கோங்க, eye-bag சில காட்சிகளில் டய்ர்ட் ஆனவர் மாதிரி காட்டுது) இடைவேளி முன்பு காட்டும் Chess சீனில் ஆரம்பிக்கும் Subtle வில்லத்தனம், பணம் போன உடனே வெறியாக மாறுவதும், அர்ஜுனுடன் உரையாடும் காட்சிகள் எல்லாம் சரவெடி.. ’தல தல, ஏற்றி விட யாரும் இல்லை, தனி ஆளா வந்தவன்’ போன்ற மொக்கை வசனங்கள் பேசி, கைதட்டல், விசில் வாங்காமல் இருந்தது ஆறுதல்… One Man Show ஆக படத்தை தாங்கியுள்ளார் என்றே சொல்லலாம்...


ஒரே ஒரு ஹிட்டு கொடுக்க நான் படுற அவஸ்த இருக்கே.. அய்யய்யயயோ..அர்ஜூன் அந்த கேரக்டருக்கு கரெக்டா பொறுந்திருக்கிறார்… எங்கேயும் over-do பண்ணாமல், இயல்பாக செய்திருக்கிறார்… த்ரிஷா, அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளேன் அய்யா கோஷ்டிகள்.. லஷ்மிராய்க்கு பழய காலத்து படங்களில் வரும் ஜெயமாலினி, அனுராதா மாதிரியான ரோல்… வழக்கம் போல காட்டுகிறார்… வெங்கட் பிரபு படத்துக்கே உரிய 4 பேரு கோஷ்டி இங்கேயும்... அதில் தேறுவது போலிஸ் அதிகாரி அஷ்வின் மற்றும் வைபவ்… நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் அஷ்வின் ஒரு ரவுண்ட் வரலாம்… Has a good body language… வேட்டைக்காரன் விஜய்யை கலாய்த்து, எப்போதும் போல ஒரு பழைய பாடல் ரீ-மிக்ஸ் என காமெடி பேர்விழி ப்ரேம்ஜி… எந்திரன் ரஜினியை நக்கலடிக்கும் காட்சியில் மட்டும் சிரிப்பை வரவழைக்கிறார்… இறுதியாக ரெடிய தளபதி மகத்… அருமையான நடிப்பு.. அடுத்த சாம் ஆண்டர்சன் ஆக வாழ்த்துக்கள்… (படத்தில் ஒரு வசனம், நீ ஒரு சாம் ஆண்டர்சன்டா.. விரைவில், நீ ஒரு மகத்டா என்று வசனம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அவ்ளோ அபாரமான நடிப்புத்திறைமையை தன்னுள் ஒளித்து வைத்துள்ளார்)படத்தோடு நம்மை ஒன்ற வைக்கும் மற்ற அம்சங்கள் – ஒளிப்பதிவு, இசை… ப்ளு டோன், வைட் டோன் என்று நம்மை படுத்தாமல் ஆக்சன் படத்துக்கு ஏற்றாற் போன்ற படமாக்கிய விதம்… விளையாடு மங்கத்தா, ஓப்பன் பாட்டில் பாடல்களிலும் கலர் சூப்பர்… அஜித்தை முழுமைப்படுத்தியே வைத்த Anglesக்கு ரொம்ப மெனக்கெட்டு இருப்பார்கள் போல… பெண்டுலம் போல ஒரே ஷாட்டில் கேமரா நகர, பல அஜித் தோன்றும் அந்த காட்சி சபாஷ்… பின்னணி இசையில் யுவன் மீண்டும் தான் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்று காட்டியுள்ளார்… தீம் மியூசிக், சண்டை-சேஷ் காட்சிகளில் அதிர வைக்கிறார்… Slow ஆன முதற்பாதி, ஆனால் அதில் ரேண்டமாக வரும் காட்சிகள் பிற்பாதியில் க்ளூவாக மாற்றுவது நல்லா இருந்தாலும், இதெல்லாம் அயன், கோ, சரோஜால பார்த்தாச்சு பாஸூ… ஆடியோவில் ரசித்த பாடல்கள் விஷுவலாய் பார்க்கும் போது ஏமாற்றம்… அதுவும் படத்தோடு ஒட்டாமல், திணிக்கப்பட்டதைப் போன்ற ஃபீல்... அஜித் டீசண்டாக நடனம் ஆடியுள்ளார்… பெரிதும் கவர்ந்த வாடா பின்லேடா விஷூவலாக சூப்பரா இருந்தாலும், தேவையே இல்லைன்னு தோன்றியது – திரும்பவும் கே.வி. ஆனந்த் எஃபெக்ட்… படத்தை சீரியசாக கொண்டு செல்வதா இல்லை காமெடியாக கொண்டு செல்வதா என்ற குழப்பம், அலைபாயும் திரைக்கதையில் வெட்ட வெளிச்சம்… Chess சீனில் காட்டிய புத்திசாலித்தனமான இயக்கத்தை, கொள்ளை அடிக்கும் காட்சியிலும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் - ரொம்ப சல்பி Execution… பணம் போன உடனே வரும் Follow-up காட்சியில் ஜெயப்பிரகாஷ்ஷின் body-language எதுவும் நடக்காதது போல இருப்பது, ரொம்ப செயற்கை..


படம் perfect இல்லை.. ஆனால் அஜித்தின் முந்தைய குப்பைகளைக் காட்டிலும் பல miles ahead… வெங்கட் பிரபு படங்களுக்கே உரித்தான Trademark ஸ்டைல், லாஜிக் சொதப்பல், திரைக்கதை ஓட்டை இப்படி மைனஸ்கள் இருந்தாலும், அஜித்தின் நடிப்பு, பின்னணி இசை, Commercial Entertainerக்கு முக்கியமான விறுவிறு பிற்பாதி எல்லாத்தையும் மறைத்து விடுகிறது… கண்டிப்பாக ஒருமுறை பாக்கலாம்…  


நீ அங்க என்ன சுட்டியோ, அதே தான் நானும் சுட்டேன்.. 


44 பூச்செண்டு தரலாம்


மங்காத்தா – வில்லனின் அட்டகாசம்


வருகைக்கு நன்றி!! 


Blogger templates

Custom Search