Saturday, 13 August 2011

”ஆடி” மாச மங்காத்தா - இசை விமர்சனம்


வாடா பின்லேடா – கல்லூரியில் படிக்கும் போது, சிம்போசியம் போனா, அங்கே அடப்டிவ் ரவுண்ட்ன்னு (Adaptive Round) ஒண்ணு வைப்பாங்க.. அதாவது பாடல் மாறிக்கொண்டே இருக்க, அதற்கு ஏற்ப நாம் நடனத்த மாத்தி ஆடணும்.. குத்துல ஆரம்பிக்கும், திடீர்ன்னு மெலடி வரும், அப்றோம் ஃபோக், திரும்ப குத்துன்னு.. அதே மாதிரி ஃபீல் இந்த பாடல்ல இருக்கு.. க்லாசிக்கல்ல (Classical) சுசித்ரா குரல் ஆரம்பிச்சு, அப்டியே வெர்ஸ்டன்ல (Western) மாறி, சரணம் இடையில் மெல்லிய குத்து (பன்றி காய்ச்சல் மாதிரி, பருவ காய்ச்சல் தானடி) ட்ரை பண்ணிருக்கார் யுவன்.. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு.. அழகன் படத்துல தத்தித்தோம் என்ற பாடலும் இதே தர்மாவதி ராகம் தான்.. ரெண்டயும் கேட்டு பாருங்க.. ரஹமான் கூட ஒட்டகத்த கட்டிக்கோன்னு ஜெண்டில்மேன் படத்துல போட்டுருப்பாரு 


குழல் – 5/5மச்சி ஓப்பன் பாட்டில் யுவன்’ஸ் டிப்பிக்கல் குத்து.. சரோஜா சாமான் நிக்காலோ + வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல + தமிழ் என்ற நான் ஒரு தமிழன்டா சாயல் இருந்தாலும், சிங்கர்ஸ் தேர்வு டாப்-க்ளாஸ்.. ரெண்டாவது சரணத்துல இருந்து வரும் மனோவோட வாய்ஸ் பாடலுக்கு ஹைலைட்.. அதே போல எல்லாரும் சேர்ந்து பாடும் ‘ஓடாம ஜெயிச்சோமடா, நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா’ இடத்துல செம குத்து


குழல் – 4/5

மங்காத்தா தீம் மியுசிக் – தாருமாறு தக்காளி சோரு.. ஆக்க்ஷன் படத்துக்கு ஏத்த மாதிரி பக்காவா கம்போஸ் பண்ணிருக்காரு.. இது படத்தில் எப்படி வரும்ன்னு எதிர்ப்பார்ப்பு கூடிருக்கு.. அவன் இவன் மாதிரி டைட்டில்ல முடிச்சிடுவாங்களோ?


குழல் – 4/5விளையாடு மங்காத்தா (ரீ-மிக்ஸ்) – செம பார்ட்டி மிக்ஸ்.. கண்டிப்பா இந்த வருஷம் Pub dance floors எல்லாம் இந்த பாடல் ஒலிக்கும்.. குறிப்பா அந்த சிரிப்பு, பாடல் முடிந்தும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கு.. அது கூட அப்டியே குழந்தையின் சிரிப்பை சேர்த்தது சூப்பர்..


குழல் – 4/5


நீ நான் – ஆரம்பம் ‘நிமிர்ந்து நில்’ மாதிரி ஆரம்பிச்சாலும், இங்கே ஹாரிஸ்ஸாய் மாறி இருக்கிறார் யுவன்.. ‘ஏனோ ஏனோ பனித்துளி + காதல் கொஞ்சம்’ கலந்த மெலடி.. நான் மகான் அல்ல படத்தில் ‘ஒரு மாலை நேரம், இறகை போலே’ பாடல்கள் நடுவே ஒலிக்கும் அந்த இதமான சொடுக்கு இசை, இங்கேயும் பின்னணியில்.. சரண் அஸால்ட்டாக பாட, பவதாரிணி குரல் மட்டும் இங்கு திருஷ்டி.. வேற பெண் பின்னணி பாடகி குரல் தந்து இருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும்..


குழல் – 3.5/5


என் நண்பனே மேற்கே மேற்கே மாதிரி மெல்லிய பாத்தோஸ் (Pathos) பாடல்.. மதுஸ்ரீ குரலும், யுவன் குரலும் ரொம்ப unique... தொண்டை கட்டுன மாதிரி, வித்தியாசமான தமிழ் உச்சரிப்பு, Nasal singing… இங்கே ரெண்டும் சேரும் போது இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்.. ‘காதல் என்பது கனவு மாளிகை’ன்னு யுவன் பாடும் போது கொஞ்சம் எரிச்சலாத்தான் இருக்கு.. Jig-Saw மாதிரி clumsy orchestration இருந்தாலும், மதுஸ்ரீ காப்பாதிட்டார் இந்த பாடலை.. ‘வலைக்கையைப் பிடித்து வலைக்கையில் விழுந்தேன். வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்’ இடத்தில் ஃபீல் நல்லா இருந்தாலும், தமிழ் உச்சரிப்பை கொஞ்சம் பார்த்துக்கோங்க அம்மணி..

குழல் – 3/5
பல்லேலக்கா – சுத்தமா புடிக்கல.. ஒரு மாதிரி Black Eyed Peas போடும் ஹிப்-ஹாப் ஸ்டைல்ல ட்ரை பண்ணிருக்காரு.. ஆனா எம்.ஜி.ஆர் பாட்டு ‘பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது’ ஃபீல் தருது.. மொக்கைக்கும் சுமாருக்கும் நடுவுல


குழல் – 2/5


ஏகன், அசல் விட நல்லா பல மடங்கு இருக்கு.. ஆனா பில்லா விட ஒரு படி கீழ்


மங்காத்தா - மோசமில்லை


வருகைக்கு நன்றி!! 

Blogger templates

Custom Search