Sunday, 19 June 2011

அவன் இவன் - உப்பில்லா பண்டம்


வணக்கம் குழந்தைகளா! இன்னிக்கு அங்கிள் உங்க எல்லாருக்கும் ஒரு கத சொல்ல போறேன்.. ஒரு ஊருல ஒரு ஜமிந்தார் இருந்தாராம்.. அவருக்கு குடும்பம், குட்டி எதுவுமே இல்லையாம்.. அதுனால அவரு ரெண்டு பசங்கள புள்ளைங்க மாதிரி ஃப்ரெண்டா பாத்துக்கிட்டாராம்.. இந்த ரெண்டு பசங்க தான் ஹீரோவாம்.. அதுல ஒருத்தன் பெண்மை கலந்த வீரன், இன்னொருத்தன் பயந்தாங்கோலி திருடன்.. எப்பவுமே திருடனுக்கு தானே போலீஸ் ஜோடி, ஆனா இது வித்தியாசத்த எதிர்பாக்குற கிளாஸ் படமாமே.. அதுனால மொத பையனுக்கு போலிஸ் ஜோடி.. ரெண்டாப்புள்ளைக்கு வழக்கம்போல, காலேஜ் போற புள்ள ஜோடி.. ஒரு வித்தியாசத்துக்கு டுட்டோரியல் காலேஜாம்.. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை, லலலலலா’ன்னு ஜாலியா இருந்த ஃபெமிலில்ல வந்தானாம் வில்லன்.. ஜமினு வில்லன் கூட பிரச்சன பண்ண, அடுத்து என்ன ஆகும் குழந்தைகளா? ஆங்ங்ங்ங்ங்.. கரெக்ட்.. வில்லன் ஜமின போட, வில்லன யாரு போடுவா? ஆங்ங்ங்.. சூப்பர்.. ஜமின் தோஸ்துங்க வில்லன போட, ஆப்பரேட்டர் சுபம் போடுறாரு..எப்பவுமே வித்தியாசமா கதைக்களம்ல படம் பண்ற பாலா இந்த முற அதெல்லாம் ஓரம்கட்டி வச்சிட்டு, கமர்சியல்லா ஒரு காமெடி படம் பண்ணலாம்னு எடுத்தது தான் –’அவன் இவன்’ ஆனா ‘வேர்க்கடல நிலக்கடல பொட்டுக்கடல, நீ சொன்ன ஜோக்குக்கு சிரிப்பே வரல’ மாதிரி டைமிங் காமெடி நெற இடத்துல மிஸ்ஸு.. லாஜிக்ன்னா என்னன்னு கேக்கற மாதிரி பல சீன்ஸ்.. நம்ம ரசிகர்கள் கிட்ட இருக்குற பிரச்சனையே, யாராச்சும் வித்தியாசமா, புதுசா பண்ணா சில சமயம் அந்த EFFORTகாகவே பாராட்டணும்ன்னு சொல்லிடுவாங்க.. அதோட ஒளிப்பதிவு சூப்பர், ஆக்டிங் தாருமாறு, இசை அடடான்னு கத, திரைக்கத இதெல்லாம் ஓரங்கட்டி வச்சிட்டு கொண்டாடுவாங்க... என்னதான் ஃபோன்ல ஃபிகரோட வாய்ஸ் சூப்ப்ரா இருந்தாலும், நேருல மொக்க ஃபிகரா இருந்தா இருந்தது தான்.. அது மாதிரி தான், பெர்ஃபாமன்ஸ்ஸ வச்சு என்ன செய்ய, கத திரைக்கத உருப்படியா இல்லன்னா..படத்தோட பெரிய பிளஸ் – விஷால்.. இது பாலா படம் சொல்றத விட விஷால் படம் சொல்லலாம்.. மனுஷன் பாவம் உசுர கொடுத்து நடிச்சிருக்காரு.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல சும்மா இருக்குற பஸ்ஸ பார்ட்-பார்ட்டா பேத்து சண்ட போடுற ஆளுக்குள்ள இப்டி இரு நடிகனா? அதுவும் அந்த ஜமினு இறந்த காட்சில இவரோட நடிப்பு, அட்டகாசம்.. எங்க பிதாமகன் சாயல் வந்துதுமோன்னு யோசிச்சேன்.. அதெல்லாம் இல்ல.. ஆண் குரல்ல பேசிட்டே இருக்கும் போது, அப்டியே பெண் குரலுக்கு மாறி, திரும்ப ஆண் குரலுக்குன்னு மெரட்டி இருக்காரு டப்பிங்ல.. அவரோட அறிமுக காட்சி சூப்பரா இருந்தாலும், அங்க மட்டும் பாடி-லாங்குவேஜ்ல ‘மதுரகாரன் தான்டா’ விஷால் வந்துடுறாரு.. கொஞ்சம் பெண்மை, நளினம் நடனத்துல இருந்துருக்கலாம்.. (இதுக்கும் பாலா Intentionala வச்சாருன்னு விளக்கம் கொடுக்காதீங்கபா) ஐ-னஸ் (Highness) ஜமின்னா நடிச்சவரு சிறந்த குணசித்திர நடிகரா வருவாரு... கலக்கிருக்காரு.. ஜமினுக்கே உரிய ஆணவம், கம்பீரம், மிடுக்கு, Subtle humorயோட ரசிக்கும்படி பண்ணிருக்காரு.. அதுவும் அவர ஆர்யா ‘நீ ஒண்டிகட்ட தானே’ன்னு திட்டுன உடனே அவரோட Transformation, க்ளாப்ஸ்.. ஆர்யா கூட வர குண்டு பையன், நேச்சுரல்லா பண்ணிருக்கான், ஒவர்-டூ பண்ணாம.. ரெண்டு அம்மாக்கள்ல அம்பிகா மட்டுமே மனசுல நிக்குற மாதிரி இருந்தாங்க..ஒளிப்பதிவு படத்துக்கு எது தேவயோ, அத கரெக்டா பண்ணிருந்தாங்க.. க்ளைமாக்ஸ் சண்ட நடக்குற இடம், ஜமின் வீடு, வில்லன் இடம்ன்னு அழகா படம்பிடிச்சு இருக்காரு.. பின்னணி இசை – யுவன், டைட்டில் பி.ஜி.எம், விஷால் அவரு ஜோடி வரும்போது வர இசை எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா ஹைப் பண்ண அளவுக்கு பெருசா எதுவும் இல்ல.. ஆர்யா நடிப்பும் ரொம்ப சுமாரா தான் இருந்துச்சு... சில இடத்துல தொன தொனன்னு பேசியே ப்ளேட் போட்டாரு.. அதுவும் ஒரு காட்சியில குடிச்சிட்டு, விஷால்ல பாராட்டுறேன்னு சொற்பொழிவு ஆற்ற சீன், யப்பா முடில, கொடுர மொக்க..

மைனஸ்னு பார்த்தா நெறய இருக்கு.. எப்பவுமே பாலா படத்துல ரெண்டு வெவ்வேறு தளங்கள்ள போயிட்டுருக்குற ரெண்டு பேரலல் கதைகள ஒரு பாயிண்ட்ல சேர்த்து திரைக்கதை பண்ணுவாரு.. ஆனா இதுல சொதப்பல்.. ஒரு 8-10 நல்ல காட்சிகள் நம்பகிட்ட இருக்கு, அத வச்சு படம் பண்ணலாம்ன்னு எடுத்த மாதிரி இருக்கு.. காட்சிகளுக்கு ஒரு கோர்வையே இல்ல… ரசிக்கும்படியா காட்சிகள் இருந்தாலும், அதை Connect பண்ண ஒரு திரைக்கதைய அமைக்க மறந்துட்டாரு போல… முதற்பாதி முழுக்க, continuity இல்லாம காட்சிகள் வருது, போதுன்னு disjointஆ இருந்துச்சு… இதுனால எப்பவுமே பாலா படத்துல இருக்குற IMPACT இதுல சுத்தமா மிஸ்ஸிங்.. மேலும், அவர் கதாபாத்திரங்களை நேரம் எடுத்துக்கிட்டு செதுக்குவாரு.. கொஞ்ச நேரம் அந்த கேரக்டர்ஸ்ஸ பில்ட் பண்ணிட்டு, அது செட்டில் ஆன உடனே கதய அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவாரு… இதுல எல்லா கதாபாத்திரமும் Loose-endsசாவே இருந்துச்சு, proper definition கொடுக்கவே இல்ல.. வில்லன் டம்மி-பீஸ் மாதிரி காட்டிட்டாங்க.. முதற்பாதில்ல நெறய மொக்க ஜோக்ஸ் வந்துச்சு, அதெல்லாம் தூக்கிட்டு, அங்க வில்லன அறிமுகப்படுத்தி, அவன பில்ட் பண்ணி, கடசி அரை-மணி நேரத்துல ஸ்டார்ங்கா காட்டிருக்கலாம்.. ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் கொடுக்குற பாலா, இங்க தல தளபதி படங்கள் ரேஞ்ச்க்கு ரொமான்ஸ் ட்ராக் இருந்துச்சு.. குட்டி கரணம் அடிச்சா லவ் வருதாம்.. இத மூன்றாம் பிறை ஸ்ரீதேவி பார்த்துருந்தா, விஜி-சீனு கூட சேர்ந்துருப்பாங்க… சுறால்ல பேனா வாங்குன்னா லவ்க்கே ரத்தம் கக்க கக்க கலாய்ச்சோம்… தமிழ் சினிமாவுல சில பேருக்கு Bench-mark, yardstick வச்சிருக்கோம், மணி, செல்வா, பாலா போன்றவர்களுக்கு… அதாவது இவங்க மட்டும் தப்பு பண்ணலாம்... எது பண்ணாலும் ஒரு அர்த்தம் இருக்கும்டா.. அதுவும் ஒரு தடவ தானே பண்றாங்க?? என்னமோ மத்தவன்லா ஒழுங்கு மாதிரி’ன்னு self-justification… ஆர்யா ஃபேர் மதுஷாலினி வேஷ்ட்.. விஷால் ஜோடி ஜனனி அய்யர் ஒரே குறை – டயலாக் டெலிவரி.. எங்க நிறுத்தணும், எங்க அழுத்தி பேசணும்ன்னு தெரியாம, பேச்சு போட்டில கலந்துக்கிட்ட குழந்த மாதிரி பேசுனாங்க…இந்த படம் ஹூமரா வர்க்-அவுட் ஆச்சுன்னா சில இடங்கள்ல சூப்பர், நெறய இடங்கள்ல சொதப்பல்.. பிதாமகன்ல சக்ஸஸ்ஃபுல்லா காமெடில்ல கலக்குன பாலா, அதுல பாதி கூட இந்த படத்துல கொண்டு வர முடியல.. பாலாவோட Weakest படம்னா அது அவன் – இவன் தான்.. இதுவே பாலாவோட முதற்படமா இருந்துருந்தா, விஷால் நடிப்புக்காக ‘முதற்முயற்சி பாராட்டலாம்’ சொல்லிருப்போம், இல்ல தல-தளபதி பண்ணிருந்தா ‘தலவலிடா’ன்னு முத்திரை குத்திருப்போம்.. பாலா ரசிகர்களுக்கே இது ஒரு கசப்பான மருந்துன்னு தான் சொல்லணும்.. விஷால் என்கிற மனுஷனுக்காகவும், அவரோட உழைப்புக்காகவும் ஒரு முறை கஷ்டப்பட்டு பாக்கலாம்.. அது இல்லாட்டி மொக்க படம் பாஸ்39 பூச்செண்டு தரலாம்


அவன் இவன் – அதுக்குல்லா சரிப்பட்டு வர மாட்டான்  வருகைக்கு நன்றி!! 


டிஸ்கி: விமர்சனத்துல காமெடி இல்லையேன்னு கொற சொல்றவங்களுக்கு, படத்துலேயே காமெடி இல்லன்னு ஞாபகம் வச்சிக்கணும்.. 

Blogger templates

Custom Search