Sunday, 8 May 2011

எங்கேயும் காதல் - எங்கேயும் மொக்கை


எங்கேயும் காதல் – முதல் சாங்கு.. பிரபு தேவா ஆடுறாரு.. பாடல் கேக்க ரம்மியமா இருக்கு.. ஆனா நடன அசைவுகள் சம்பந்தமே இல்லாம இருக்கு.. சரி விடுங்க, பெரிய நடன மாஸ்டர், நளினம், நயனம் எல்லாமே தெரிஞ்சிருக்கும்.. 


இங்கிலீஷ் பாடல் – என்னன்னே புரில.. ஒரே வெள்ளைக்காரியா வந்தாங்க, ஆடுனாங்க, காமிச்சாங்க, போனாங்க.. ஜெயம் ரவி கேரக்டர் Establish பண்றாங்களாமா.. ரைட்டு


தீ இல்லை, புகை இல்லை – படத்தின் மூணாவது பாடல்.. ஹன்சிகா தொப்புள் காட்டுவாங்கன்னு எதிர்பார்த்த என் போன்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம்.. பாடல் தவறான இடத்தில் வேற வருது.. ஹன்சிகாக்கு ஜெயம் ரவி மேல காதல்.. ஆனா பாடலை ஜெயம் ரவி பாடுறாரு.. இது எப்டின்னா 2-Gல்ல சரத்த மாட்ட வச்ச மாதிரி


லோலிட்டா – நாலாவது சாங்க்.. நல்லா எடுத்துருக்காங்க.. ஹே பாட்டு பாட்டுன்னு கத்தும் போது கரெக்ட்டா வந்து என்னை சந்தோஷப்பட வைத்தது.. ரவி செமயா ஆடி இருக்காரு.. சிம்பு, விஜய் கொஞ்சம் இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க..


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ - மறுபடியும் ஹன்சிகாக்கு ஜெயம் ரவி மேல காதல்.. ஆனா பாடலை ஜெயம் ரவி பாடுறாரு.. இது எப்டின்னா PRESTIGE தோசை கல்லுல சுடுற மாதிரி.. ஒட்டவே ஒட்டல..


நங்கை நிலாவின் தங்கை – ஹன்சிகா தொப்புள்ள கடசியா காட்னாங்க.. சந்தோஷம்.. அழகா, ஹோட்டல் வசந்த பவன்ல சுடுற குழி பனியாரம் மாதிரி இருந்துச்சு.. நடனம் சூப்பர்.. ஆனா விஜய் படம் மாதிரி வரிகளுக்கு சம்பந்தமே இல்லாத ஸ்டெப்ஸ்.. ஜெயம் ரவி ஆட ஆரம்பிச்ச உடனே களை கட்டுச்சு.. அந்த இங்கிலிஷ்காரங்க ஹன்சிகா விட நல்லா லிப்-சிங்க் பண்ணாங்க..


திமு திமு - கடைசி பாட்டு.. அப்பாடா படம் முடிய போகுது.. கரெக்ட்டா இருந்துச்சு.. BEST COMES IN LAST மாதிரி, கரெக்ட்டான இடத்துல வச்சாங்க..


அட வீணா போன விவேக்கானந்தன்னே.. பட விமர்சனம்ல நான் எழுதணும்? படம் பார்த்த மாதிரி ஃபீலே இல்லைங்க.. ஏதோ சன் மியுசிக்ல்ல தொண தொணன்னு பேசுற வீ.ஜே, அதுக்கு நடுவுல பாட்டு, அது மாதிரி இருந்துச்சு.. (பார்த்தது தேவி தியேட்டர்ல, சின்ன ஸ்கிரீன்) படம் நடுவுல பாட்டு வராம, பாட்டு நடுவுல படத்த போட்டுட்டாங்க.. நல்ல வேள, இது 2 மணி நேரம் தான்.. அதுவே பெருசா தெரிஞ்சுது, ஹன்சிகாவ காட்டிலும்..ஹீரோயின்னை வெறுப்பேத்துற ஹீரோ – முதற்பாதி , ஹீரோவை வெறுப்பேத்துற ஹீரோயின் – ரெண்டாம் பாதி.. பாக்குற நமக்கு இனிமா இல்லாமையே பேதி.. ரெண்டாவது பாதி ஏதோ தேறும்.. ஜெயம் ரவி, சாரி.. ஹன்சிகா, நல்ல உடல், நல்ல உதடு, ஆனா நடிப்பு தான் வரல, ஜெனியிலாக்கு பக்காவா ஃபிட் ஆகுற கேரக்டர்.. சரி ஹன்சிகா கிட்ட நடிப்ப எதிர்பாக்குறது, பெருமாள் கோவில்ல தினமும் புளியோதரை கிடைக்கும்மான்னு ஏங்குற மாதிரி.. கிடச்ச பிரசாதத்த எஞ்சாய் செய்ங்கோ.. ராஜூ சுந்தரம் வந்தாலே சிரிக்கணும், ஏனா அப்போ தான் அடுத்த மொக்க ஜோக் அடிக்க மாட்டாருன்னு.. ஹாலிவுட் B-GRADE FLICKS விட மகா மொக்கை..படத்துக்கு எங்கேயும் முத்தம்ன்னு வச்சிருக்கலாம்.. மூணு நிமிசத்துக்கு ஒரு கிஸ்ஸு.. ஆனா ஹன்சிகா முத்த சீன் வைக்கல, படத்துக்கு இது ஒரு மிகப்பெரிய குறை.. ஒளிப்பதிவு பிரமாதம், கலை கூட அற்புதமா பண்ணிருக்காங்க.. ஹன்சிகா வீடு, ஜெயம் ரவி ஹோட்டல் ரூம், பாரீஸ் தெருக்கள், கடைகள்ன்னு எல்லாமே கொள்ளை அழகு.. ஆனா இது எல்லாமே விலை போகாத வீட்டுக்கு பெயின்ட் அடிச்ச மாதிரி.. டிடெக்டீவ்வா வர சுமன்ன வச்சு கத எங்க இருக்கு தேட சொன்னாலும் கஷ்டம்.. படத்துல பிரகாஷ் ராஜ் கேரக்டர் ஒண்ணு வரும்.. அதுக்கு சம்பந்தமாவே படம் எடுத்துருக்காங்க.. ‘வாங்க, சுத்தி பாக்கலாம், சும்மா கேமரா வச்சு ஹாலிடே ட்ரிப் எடுக்கலாம், அத படமா போடலாம்ன்னு’ ஜெய் நயந்தாராய நமக..


34 பூச்செண்டு தரலாம்


எங்கேயும் காதல் – குப்பைத்தொட்டியில் கிடக்கும் வாசமில்லா அழகிய பிளாஸ்டிக் பூ…


வருகைக்கு நன்றி!! 


Blogger templates

Custom Search