Thursday, 21 April 2011

கார்த்தியும், நாலஞ்சு பெண்களும் : பகுதி-2

பகுதி ஒன்று படிக்க, சொடுக்குங்கள் இங்கே - பகுதி-1


ஆர்த்தியும், ஆனந்தும் பிசிக்ஸ் லேப்ல கெமிஸ்டரி வர்க்-அவுட் செய்து கொண்டிருக்க, மேரி-க்யுரி பூஜையில் ஐன்ஸ்டீன் நுழைந்த கதையா கார்த்திக் தெரியாமல் உள்ளே நுழைகிறான்..கார்த்திக்: மச்சி.. ஸ்பெக்ட்ரோமீட்டர் Experiment Reading 1 ரூபா தலையன் கேக்குறான்டா.. எப்டி திருப்புனாலும் கலரே தெரிய மாட்டேங்குது..

ஆனந்த்: PRISM வச்சியாடா?

கார்த்திக்: டேய்.. கலாய்க்றியா? காலேஜ்லயும் எல்லாமே மொக்கையா இருக்காங்க.. இங்கேயும் கலர் இல்ல.. Spectrometerலயும் கலர் இல்ல.. ஹிஹிஹி..

ஆர்த்தியின் காதில் அது விழ, அவள் அவனை முறைக்கிறாள்..

கார்த்திக் ஆனந்தின் Record பார்த்து Copy அடிக்க, அவர்கள் கடலை தொடர்கிறார்கள்..

ஆனந்த்: ஹே.. நாளைக்கு அப்போ சர்ச்க்கு போவியா?

ஆர்த்தி: Ofcourse man.

கார்த்திக்: நீங்க christian?

ஆர்த்தி: ஆமா..

கார்த்திக்: ஆர்த்தின்னு பேர் இருக்கு..

ஆர்த்தி: அப்பா Christian அம்மா Hindu.. லவ் Marriage.. So, எம்மதமும் சம்மதம்..

கார்த்திக்: அப்போ உங்ககிட்ட கலர் கலரா நெறைய Scandals இருக்கும்ல?

ஆர்த்தி: பொறிக்கி.. Mind Your words. Anand, Is he your friend? Shit. Cheapa பேசுறான் பாரு..

அவள் அங்கிருந்து நகர்கிறாள்..

ஆனந்த்: டேய்.. லூஸ் கூ*.. ஏன்டா இப்டி இருக்க.. ஒரு பொண்ணு கிட்ட இப்டியா பேசுவ? உன்னால என்ன தப்ப நினைச்சிக்க போறா .

கார்த்திக்: மச்சி.. சாரிடா..  Christianல.. நெறைய Candles வச்சிருப்பாங்க.. அத தாண்டா கேக்க வந்தேன்.. நாக்கு சிலிப் ஆகி வார்த்தை Scandala மாறிடிச்சு..

ஆனந்த்: போடா பு**

அப்போது ஆர்த்தி அவள் நோட்டை எடுக்க வர, அதை கவனிக்காத கார்த்திக்

கார்த்திக்: மச்சி.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. Spectrometerla கலர் பிடிக்க தெரிஞ்ச உனக்கு Lifela நல்ல கலரா பிடிக்க தெரியலையே..

திரும்பி பார்த்தால் ஆர்த்தி..

ஆர்த்தி: நீ என்ன பெரிய மன்மதனா? உன் மூஞ்ச பாரு.. ஆனந்த், This guy is disgusting, Lets go!

கார்த்திக்:  கல(ர்)வரம் கல(ர்)வரம்ன்னு இதுனால தான் சொல்றாங்களா? கர்த்தரே...**********************

கார்த்தி தன்னோட நோக்கியா 1110 போன்ல விளையாடி கொண்டிருக்க..

மச்சி என்னடா புது ஃபோன்?

கார்த்திக்: இல்லடா.. பழசு தான்.. எங்க அப்பா புது ஃபோன் வாங்கி, அவரோட பழச எனக்கு தந்துட்டாரு..

திலிப்: ஹிஹி.. நல்ல அப்பாடா.. மச்சி, புது ஃபோன் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ...

கார்த்திக்: ஃபோன் திருடிடுவாங்கன்னா? நான் Socksகுள்ள ஒளிச்சு வச்சிக்குவேன் மச்சி..

திலிப்: டேய்.. கருமாந்தரம் புடிச்சவனே.. காலேஜ் ஸ்டார்டிங் டைம்ல.. அவன் அவனுக்கு மனசுக்குள்ள பட்டாம்பூச்சி, க்ரஷ் எல்லாம் இப்போ தான் ஸ்டார்ட் ஆகும்.. இந்த பொண்ண புடிச்சிருக்கு, அந்த பொண்ண புடிச்சிருக்கு, அவ நம்பர் வாங்கணும்ன்னு உளறி தொலைக்காத..

கார்த்திக்: ஏன்டா அவகிட்ட போய் போட்டு கொடுப்பாங்களா?

திலிப்: அத செஞ்சாலும் பரவால.. இவனுங்க புதுசா சிம் கார்ட் வாங்கி, அந்த பொண்ணு பேருல மெசேஜ் பண்றாங்க...போன வாரம் கிருத்திக்காா பேருல்ல பண்ணாங்க, எனக்கு அவ மேல ஒரு இது இருக்குன்னு தெரிஞ்சு.. நானும் அவ தான்னு நினச்சு ஏமாந்துட்டேன்டா.. கடசில கிளாஸ்ல வந்து நான் தான் இதெல்லாம் பண்ணோம்னு அந்த ஜகா கேங் சொல்லிச்சு... செம கடி ஆகிட்டேன்.. உஷாரா இருந்துக்கோ..


அடுத்த நாள் இரவு - நேரம் இரவு 9.15..

கார்த்தி வழக்கம் போல அந்த ஒண்ணுத்துக்கும் உதவாத ஃபோன்ல விளையாடி கொண்டிருக்க..

பீப் பீப்..

1 மெசேஜ் Received

Hi..

Who is this? 

Kiruthika

கார்த்திக்: ஆகா.. வலைய விரிக்குறாங்க.. சிக்குன்னா சேதாரமே இல்லாம சின்னாபின்னம் ஆக்கிடுவாங்க...

ஹாய் டார்லிங்..

டார்லிங்கா?

கார்த்திக்: ஆமா.. என்ன அழகு எத்தனை அழகு.. நீங்க ரொம்ப சுமார் ஃபிகரா இருக்கீங்க..

லூசா நீ? மெசேஜ் தப்பா அனுப்புறியா? Are you trying to flirt?

கார்த்திக்: கோபப்படாதே.. முனிம்மா கோபப்படாதே..

த்தூ.. நீ லவ் Failure கேஸ் eh? அதான் உளறிட்டு இருக்க..

கார்த்திக்: ஆமா.. இவளுக்கு லவ் அப்டியே சக்சஸ் ஆகி தாஜ்மஹால் பக்கத்துல பில்டிங் கட்டி, சென்னைல நினைவு சிலை வச்சிருக்காங்க.. ச்சீ.. பே..

Wow.. Thats a joke.. LMAO..

கார்த்திக்: இஞ்சினியர் பொண்ணுங்க என்றாலே இஞ்சினியர் பொண்ணுங்க தான்.. மொக்க ஜோக் அடிச்சா சிரிக்கிடுங்க.. சுயமா யோசிச்சு நல்ல ஜோக் சொன்னா ரியாக்‌ஷன் கொடுக்கவே மாட்டேங்கிடுங்க..

போடா லூசு..

கார்த்திக்: ஆமா.. உன் மேல் நான் லூசா இருக்கேன்.. காதல் பைத்தியம்.. லூசு பெண்ணே.. லூசு பெண்ணே...

செருப்பு.. போடா கீழ்பாக், டுமாகோலி..

கார்த்திக்: திட்டு செல்லம் ஆச தீர திட்டு

போடா பிச்ச..

கார்த்திக்: ஆமாம்.. உன்னிடம் காதல் யாசிக்க வந்த நான் ஒரு பிச்சைகாரன் தான்..

 டேய்.. நா காலேஜ்ல கம்ப்ளைன் பண்ணுவேன்..

கார்த்திக்: நான் இன்னிக்கு நைட் காம்ப்ளான் பண்ணுவேன்.. வா செல்லம் ரெண்டு பெரும் குடிக்கலாம்..

த்தூ.. இப்போ போறியா இல்ல குச்சி எடுக்கவா?

கார்த்திக்: குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்.. ஹே ஹே

வேற

கார்த்திக்: வேற சாங் வேணுமா? உன்னை ஒன்று கேப்பேன் உண்மை சொல்ல வேண்டும்..

ஒரு பொண்ணு கிட்ட இப்டி கேவலமா நடந்துக்குற.. உனக்கு வெக்கமா இல்ல?

கார்த்திக்: இல்லையே.. என நீ பொண்ணே இல்லையே.. ஹி ஹி.. ஏன்டா / என்டீ இந்த பொழப்பு? வெக்கமே இல்லையா? ஒருத்தன் அழகா இருந்தா போதுமே.. ஒடனே பல் இளிச்சிட்டு மெசேஜ் பண்ண ஆரம்பிசிடுவீங்களே.. என்ன மாதிரி அழகான ஆண்களுக்கு பாதுகாப்பே இல்ல..

Will you please stop this nonsense? சத்யமா Nil Balance இருக்கு.. இல்லைன்னா போன் பண்ணி நாக்க புடுங்குற மாதிரி கேப்பேன் உன்ன..

கார்த்திக்: எப்ப எவன் கிடைப்பான் அலைறது.. ஆமா இவங்க அப்டியே புடிங்கிட்டாலும்... You cant pluck anything.. நாக்கையும் என்............ சரி விடு, அத என் வாயால சொல்லிக்கிட்டு..

Fuck off.. இதுக்கு மேல உங்கிட்ட பேசுனா செருப்பாலையே அடி என்ன..

கார்த்திக்: நாலு இங்கிலீஷ் படம் பார்த்து Fuck Offன்னு.. அடச்சீ.. பே... போய் மும்பைல ஆபரேஷன் பண்ணிக்கோ..அடுத்த நாள், கார்த்தியை கிருத்திக்கா அடிக்கடி மொறைத்து கொண்டே பார்க்கிறாள்..

திலிப்: மச்சி.. என்னடா இப்டி பண்ணிட்ட?

கார்த்திக்: என்னடா?

திலிப்: கிருத்திக்கா..

கார்த்திக்: ஹஹாஹ்..முந்தாநேத்து நீ சொன்ன மாதிரியே பசங்க விளையாடுனாங்க மச்சி.. நார கலாய் கலாசிட்டேன்.. இனிமே போன் தொடவே அலறுவாங்க..

திலிப்: டேய்..

கார்த்திக்: என்னடா?

திலிப்: நேத்து உனக்கு மேசேஜ் பண்ணது கிருத்திக்கா தான்டா..

டமார்.. டமார்

கார்த்திக்: டேய்.. இது எப்போ?

திலிப்: நேத்து வர்க்‌ஷாப் லேப் Readings நீ தானே எடுத்த.. அத உன்கிட்ட இருந்து வாங்கிக்க உனக்கு மெசேஜ் பண்ணாடா.. பஸ்ல என்கிட்டே தான் நம்பர் வாங்குனா.. என் நம்பர் கூட கேக்கல மச்சி..


கார்த்திக்: இத ஏன்டா என்கிட்டே நேத்தே சொல்லல?

திலிப்: போன்ல சார்ஜ் இல்லடா..  காலைல கிருத்திக்கா வந்து என்ன கேவலமா பேசிட்டா.. இது தான் அவன் நம்பரா? இத தான் என்கிட்டே கொடுத்தியா? அவனெல்லாம் ஒரு மனுஷனா, நீ இதுல அவன் ஃப்ரெண்டு வேறன்னு..

கார்த்திக்: வளக்காப்புக்கு வர சொன்னா, குழந்த காது குத்துக்கு வந்தவன் மாதிரி சொல்றியேடா..

திலிப்: பாவம்டா நீ.. உன் நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது..

கார்த்திக்: உன்ன மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இல்லன்னா கண்டிப்பா வராது மச்சி.. நோக்கியா Connecting Peopleன்னு தப்பா வச்சிட்டாங்க போல.. எங்கப்பன அடிக்கணும்...

அசிகங்கள் முடிந்தது...


வருகைக்கு நன்றி!!

7 comments:

Sadhu said...

sir attakaasam :D , pinreenga ponga,

Sadhu said...

sir attakaasam :D , pinreenga ponga,

creation said...

super da..had a gud laugh @ lot places while reading..:-)

vijaya said...

ithu oru unmai kathaiya?

kanagu said...

Super ah irukku Karthik :) :) nalla comedy :)

Tanya said...

:P :P awesomee... nalla asingam... really semaya irundhuchu.. u made my day...

shobana said...

Ithu entha karthick-a kalaichi pottathunu therinjikalama? :-P

Blogger templates

Custom Search