Wednesday, 13 April 2011

கார்த்தியும், நாலஞ்சு பெண்களும் : பகுதி-1


அருண்: மச்சி உன்ன ஏன்டா எந்த பொண்ணும் நம்ப கிளாஸ்ல மதிக்க மாட்டேங்றாங்க?

கார்த்திக்: டேய்.. இத தான் அவ்வையார் அன்னிக்கே சொல்லி வச்சாங்க..  கழுதைக்கு தெரியுமா கார்த்தியோட யோசனைன்னு..

அருண்: அப்றோம் ஏன்டா என்கூட மட்டும் நல்ல பேசுறாங்க?

கார்த்திக்: அத கூட அவ்வையார் சொல்லிருக்காங்கடா.. அஞ்சு பைசா பெருமானமில்லாத சீன அஞ்சு ஊருக்கும் தெரியும்படி அஞ்சு மணீ நேரம் போடுவாங்களாம் அருண வச்சு..

அருண்: கொய்யால.. நான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்றேன்.. ஆனா நீ என்கிட்ட ஒண்ணுத்தையும் சொல்ல மாட்ற..

கார்த்திக்: என்ன மச்சி இப்டி சொல்ட?

அருண்: ரகசியமாவே எல்லா காரியமும் பண்ற.. டேய்.. நீ யாரையோ லவ் பண்றன்னு நினைக்கிறேன்..

கார்த்திக்: மச்சி.. சத்யமா இல்லடா..

அருண்: பொய் சொல்லாதடா.. சத்யபாமா காலேஜ் பிகராட உன்ன சத்யம் தியேட்டர்ல விஷால் படம் சத்யம் பாக்கும் போது, நம்ப இ.சி.இ சத்யமூர்த்தி பார்த்ததா ஒரு நியூஸ் உலா வருது..

கார்த்திக்: பசி, பஞ்சம், பட்டினி உன்ன இப்டி எல்லாம் பேசவைக்குதுடா.. மெஸ்ல சாப்பாடுக்கு டைம் ஆச்சு.. வா போலாம்..

அருண்: எனக்கு இன்னொரு சந்தேகம்.. பரிசோதனை எலி கேள்விபட்டுருக்கியா?

கார்த்திக்: டிச்கவேரி சேனல்ல காட்டுவாங்களே.. அதானே?

அருண்: ஆமாடா.. அதே தான்... அது மாதிரி நீ என்ன யூஸ் பண்ணி, ஐடியா கிளிக் ஆச்சுன்னா, அத நீ உன் காதல்ல யூஸ் பண்ணிக்கலாம்ன்னு இருக்க.. கரெக்ட்?

கார்த்திக்: என்னடா ஆச்சு உனக்கு? இன்னிக்கு உளறிட்டே இருக்க? நா யாரையும் லவ் பண்ணலடா.. நம்புடா..

அருண்: முடியாது.. எனக்கொரு உண்மை தெரிஞ்சு ஆகணும் சாமி..

..........

அருண்: அனுஷா உன்கூட சேராத, அவன் கொஞ்சம் மோசமான பையன்னு சொல்றா..

கார்த்திக்: அசிங்க படுத்திட்டா..

அருண்: கிருத்திகா இவன் கூட எல்லாம் எப்டி நட்பு வச்சிருக்கன்னு கேக்குறா..

கார்த்திக்: கேவல படுத்திட்டா..

அருண்: ஆர்த்தி கிளாஸ்ல எனக்கு பிடிக்காத முதல் பையன் கார்த்தி தான்னு சொல்டா

கார்த்திக்: அவமான படுத்திட்டா..

அருண்: மோனிகா இவன பார்த்தாலே எரிச்சலா இருக்குன்னு சொல்டா..

கார்த்திக்: மதிக்காம போய்டா..

அருண்: வேதிகா இவன் கூட பழகுறதே பாவம்னு சொல்டா

கார்த்திக்: வேடிக்கையா பேசிட்டா..

அருண்: டேய்.. இங்க என்ன எதுகை மோனை பட்டிமன்றமா நடக்குது?

கார்த்திக்: அதான் கிளாஸ்ல இருக்குற ஒட்டுமொத்த பொண்ணுங்களும் பிடிக்கலன்னு சொல்றாங்க.. மொத்தமா Declare பண்றத விட்டுட்டு Individuala declare பண்ணி Memory வேஸ்ட் பண்ற?

அருண்: என் இவங்க இப்டி பேசுறாங்க?

...

அருண்: உனக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சன?

..

அருண்: காலேஜ் ஆரம்பிச்சு 2 Months அப்றோம் தான் நாம பேச ஆரம்பிச்சோம்..

..

அருண்: அதுக்கு முன்னாடி நீ என்ன பண்ணிட்டு இருந்த?


(எக்கோ)

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க..


**********************

கல்லூரி தொடங்கிய முதல் நாள், அனைவரும் Introduction Sessionனில் தங்கள் பெயர், பள்ளி, ஹாபீஸ் என்று மொக்கை தனமாக சொல்கின்றனர்.. நம்ப கார்த்திக்கை ஈர்த்த பெண் இவள்..

கார்த்திக்: வேதிகா வர்மா.. ஹிந்தி பொண்ணா இருக்கும் போல.. வெள்ள வெளேர்னு இருக்கா.. முதல்ல இவள தான் கரெக்ட் பண்ணனும்

பக்கத்தில் இருக்கும் பையனிடம் கார்த்தி பேச்சு கொடுக்க..

கார்த்தி

ரமேஷ்

கார்த்திக்: ஹிந்தி தெரியுமா?

ரமேஷ்: மாலும்.. எதுக்கு?

கார்த்திக்: மச்சி.. உன் பெயர் என்ன? இத ஹிந்தில எப்டி சொல்றது?

ரமேஷ்: ஏன்டா?

கார்த்திக்: அந்த ப்லு சுடிதார் பொண்ண பிடிச்சிருக்கு..  ஹிந்தி பொண்ணா இருக்கும் போல.. அப்டியே கரெக்ட் பண்ணிடலாமேனு..

ரமேஷ்: ஹிந்தில பேசுனா கரெக்ட் ஆகிடுமா?

கார்த்திக்: மச்சி இப்போ ஒரு கூட்டத்துல 20 பேரு இருக்காங்கன்னா, அதுல தமிழ் பேசுற ஆளுங்க கூட தானே நாம ஈர்க்க படுறோம்.. BE A ROMAN WHEN YOU ARE IN ROME சொல்லிருக்காங்கடா.. So, ஹிந்தி பேசுற பையன்னா அவளுக்கு Extra Attraction இருக்கும்..

ரமேஷ்: நண்பா.. இன்னிக்கு சொல்றேன்.. இந்த கிளாஸ்ல மட்டும் இல்ல, இந்த காலேஜ்லேயே நீ பெரிய ஆளா வருவடா.. Genius da.. ஹ்ம்ம்ம்.. சுக்ரியா க்யா கேளு..

கார்த்திக்: அப்டின்னா?

ரமேஷ்: பேரு சொல்லுங்கன்னு அர்த்தம்டா..

மாலை, கல்லூரி பேருந்தில் கார்த்தி, அதே பேருந்தில் வேதிகா..

கார்த்திக்: Confidence மச்சி Confidence


கார்த்திக் வேதிகா அமர்ந்த இடத்தின் பக்கத்தில் அமர்ந்தான்..

மெதுவாக

கார்த்திக்: சுக்ரியா சுக்ரியா?

வேதிகா திரும்பவில்லை..

கொஞ்சம் சத்தமாக

கார்த்திக்: சுக்ரியா சுக்ரியா..

அவள் அவனை ஒரு பார்வை பார்த்து திரும்பி கொள்கிறாள்..

கொஞ்சம் சத்தமாக,

கார்த்திக்: காது கேக்காது போல.. சுக்ரியா சுக்ரியா சுகிர்யாயாயாயாயா..

வேதிகா: டேய்.. லூசா நீ? எனக்கு காது கேக்கும்.. நீ கொஞ்சம் சுருக்குரியா?


**********************

LAB

மோனிகா,கார்த்திக் பக்கத்துக்கு பக்கத்துக்கு இருக்கையில்.. கார்த்திக் மோனிகா என்ன செய்கிறாள் என்று எட்டி பார்க்க, MATRIMONIAL WEB SITE பார்த்து கொண்டுருக்கிறாள்..

கார்த்திக் 2 ரமேஷ்: மோனிகா MATRIMONIAL வெப்-சைட் ஓபன் பண்ணி வச்சிருந்தா..

ரமேஷ் 2 சந்தியா: மோனி MATRI வெப்-சைட்ல பார்த்துட்டு இருந்தாளாம்

சந்தியா 2 வினோத்: மோனி மேட்டர் வெப்-சைட் பார்த்தாளாம்

வினோத் 2 அபிராமி: மோனிக்கு வெப்-சைட்ல ஏதோ பாக்கும் போது மேட்டர் ஆகிடிச்சாம்

அபிராமி 2 திலிப்: மோனி வெப்-சைட் விஷயமா மேட்டர்ல மாட்டிகிட்டாலாம்.. என்னத்த பார்த்தா?

திலிப் 2 ஜெயஸ்ரீ: மோனி மேட்டர் ஒண்ணு வெப்-சைட்ல வந்துடிச்சாம்

ஜெயஸ்ரீ 2 மோனிகா: உனக்கு ஒருத்தன் கூட மேட்டர் ஆகிடிச்சாம்.. யாருடி அவன்?


இறுதியில் மோனிகா, கார்த்திக் தான் இந்த செய்தியை பரப்பி விட்டான் என்று அவனை அசிங்க அசிங்கமா திட்டி ஓய்கிறாள்

கார்த்திக்: இவ MATRIMONIAL வெப்-சைட் பார்த்தா தானே சொன்னேன்.. அதுக்கு எதுக்கு எனக்கு கல்யாணமே ஆகாதுன்னு சாபம் விட்ரா.. ஆனா ஒண்ணுடா .. MATRI-MONY எப்டிடா MATTER-MONInnu திரித்து சொன்னிங்க.. உங்க தமிழ் வாத்தியார் பெரும படுவாருடா...


அசிகங்கள் தொடரும்...


வருகைக்கு நன்றி!!

5 comments:

creation said...

romba naalku aprom i liked ur post......very natural!!!!waiting for next one

கா.கி said...

boss, usual nakkal... kalakkunga.. aduttha script ready.. but character name karthick nu irundhadhu dhaan konjam idikkudhu :(

gils said...

awesome..after a long time had such a hearty laugh..amazingly original ...kalaku machi

Sarath said...

hehehehehehehe awesome na ;)

Tanya said...

Wow.. had an hearty laugh.. really ROFLMAO... karthik na udane thala thaan nyabagathuku vantharu.. aparam 2 lines padichathum thalaiku female fan irukume thavara critic irukathu.. so ithula namma thalai karthik ku samandham illana nu purinjidhu..

Blogger templates

Custom Search