Sunday, 6 February 2011

யுத்தம் செய் - மிஷ்க்கின்’ஸ் டச் கம்மி
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது


இந்த குறளுக்கான விளக்கத்தை தனது பாணியிலே, கொஞ்சம் யதார்த்தம், கொஞ்சம் சினிமாத்தனம், கொஞ்சம் நாடகத்தன்மையோடு கலந்து கொடுத்திருக்கிறார் மிஷ்க்கின் தனது யுத்தம் செய்யில். டாக்டர் புருஷோத்தமன் (ஒய்.ஜீ.மகேந்தரன்) முன்பு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக, ஜீடாஸ் (ஜெயப்பிரகாஷ்) செய்தது என்ன? டாக்டரின் மனைவி, தன் தங்கைக்கு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக ஜெ.கே (கிருஷ்ணமூர்த்தியாக சேரன்) செய்தது என்ன? இதை ‘Man's Search for Meaning’ என்ற ஒரு ஷாட்டில் விவரித்திருப்பது மிஷ்க்கின்’ஸ் டச்.கதவு க்ரீச்ச் சத்தம், நிழல் உருவம், வாயை மூடிக்கொண்டு ஹீரோயின் ஆஆஆஆஆஆ என்று அலறுவது – த்ரில்லர் படத்திற்கான Default வரைமுறைகள் இல்லாமல், இயல்பாக (கொஞ்சம் பொறுமையாகவும்) கதையை நகர்த்தி செல்கிறார். படத்தின் முக்கிய ப்ளஸ், கதாபாத்திரங்கள். மேன்ஷன் பையன் முதற்கொண்டு கான்ஸ்டெபிள் வரை கனக்கச்சிதம். சேரன் முந்தய படங்களைப் போல சொல்லும்மா என Over-do செய்யாமல் சிறப்பாக நடித்துள்ளார். தன் தங்கையை காப்பாற்ற முடியாத இயலாமையை வெளிப்படுத்தும் காட்சி- சபாஷ். படம் முடிந்தும் ஜெயப்பிரகாஷ் மனதில் நிழலாடுகிறார். ‘The observer is observed’ என்று சாதரணமாக இவர் க்ளூ விட்டு செல்லும் வசனம் – ‘ஷார்ப்’ ப்ளாஷ்பேக் விவரிக்கும் காட்சியில் கொஞ்சம் சிவாஜியிஷ்ஷா தெரிந்தாலும், அந்த அத்தியாயம் – Hard-hitting and haunting.

படத்தில் சிறப்பாக தெரிந்த மத்த விஷயங்களில் ஒன்று Realism. படபடக்கவைக்கும் இசையோடு, அதிரடி விசாரணையைப் பார்த்த நமக்கு இதில் தத்ரூபமாக CBCID Officer கண்ணோட்டத்தில் கொண்டு சென்ற பாணி அருமை. சவக்கிடங்கை அதே போல காட்டிருப்பது பார்க்கும் நமக்கே மூக்கை பொத்திக்கொள்ள வைக்கிறது.. கடைசியாக 7Gஇல் பார்த்தது, அதை விட இதில் பன்மடங்கு Impact. பொசுக்கென்று துப்பாக்கி தூக்கி, விறைப்பாய் தெரியும் சினிமா போலிஸாய் இல்லாமல், ஒரு Gun வாங்க என்னென்ன Procedures இருக்கிறது என்று காட்டிருப்பது – நல்ல Research. (படம் முழுவதும் கான்ஸ்டெபிள் துப்பாக்கி வைத்திருக்க மாட்டார் – அட) அதே போல Mortuary காட்சிகளில் எரிந்து போன பிணங்களை எப்படி அடையாளம் காண்கிறார்கள் போன்றவற்றைக் கூட நுணுக்கமாக புரியும்படி விவரிக்கும் காட்சிகள் – சூப்பர் மிஷ்க்கின்'பணத்தாலும், அதிகாரத்தாலும் எவ்ளோ தான்டா அடிப்பீங்க? நாங்களும் எவ்ளோ தூரம் தான்டா ஓடுறது, இப்போ நாங்க அடிக்கிறோம், நீங்க ஓடுங்க' என்ற வசனத்தில் ஆதங்கத்தின் வீரியம்.. அதே போல ஏன் சார் ரேப்ன்னு எழுதல என்ற கேள்விக்கு ‘எனக்கும் இவ வயசுல ஒரு பொண்ணு இருந்தா, இறந்துட்டா’ இது மாதிரி பல செயற்கை பூசப்படாத வசனங்கள் நம்மை கவர்கின்றன.. கேமரா அடேங்கப்பா.. வசனங்கள் இல்லாத இடத்தில் கேமராவை பேச வைத்திருப்பது மிஷ்க்கின் ஸ்டைல். கொஞ்சம் அஞ்சாதே பீல் இருந்தாலும், Aerial, Top Angle shots, Rotational movementsல் இசையோடு கலந்து பேசுகின்றன. Investigation காட்சிகளில் இறந்தகாலத்துடன் நிகழ்காலம் Sync ஆகும் இடத்தில் எடிட்டிங் அருமை.  Pandora Box Theme (பெட்டி கண்டுபிடிக்கப்படும் போது வரும் இசை) misfitting ஆக தெரிந்தாலும், பல இடங்களில் பளிச்.அழகாக கொண்டுபோய் கடைசியில் ஸ்லிப் ஆகுவது போல த்ருஷ்டி பூசணிக்காய் க்ளைமாக்ஸ். 80களில் வந்த செண்டிமெண்ட் ப்ளஸ் ராஜ்கிரண் ஸ்டைல் உடல் அசைவு ஒட்டவே இல்லை.. சுடப்பட்டவுடன் ஜீடாஸ் கொடுக்கும் நம்பகத்தகுந்த விளக்கம், இங்கே மிஸ்ஸிங்.. அதே போல இடைவேளி சண்டை, நன்றாக இருந்தாலும், தேவையா என்று யோசிக்க வைக்கிறது. கொஞ்சம் அஞ்சாதே ஹாஷ்பிட்டல் Effect, கொஞ்சம் கேப்டன் Effect. அதே போல முதல் அரைமணி நேரத்தில் சம்பந்தமே இல்லாத கொலைகள் நம்மை கலங்கடித்தாலும், அதை சேரன் விவரித்து ஒரு புள்ளியில் சேர்க்கும் காட்சி, திரைக்கதையின் சிறப்பு. கொஞ்சம் கவனிக்க தவறினாலும், போச்சு… ஈசனை நினைவு படுத்தினாலும் அதை விட நன்றாகவே செய்துள்ளார் (க்ளைமாக்ஸ், சஷ்பென்ஸ் தவிர)Realistic படங்களை தந்த மிஷ்க்கின் இங்கே க்ளைமாக்ஸ்ஸில் சொதப்பிவிட்டார். Drama + Thriller Style ஹாலிவுட் பாணியில், நமக்கு புதுசா தெரிந்தாலும், மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா என தெரியவில்லை.. அஞ்சாதே அளவுக்கு இல்லை.. ஆனால் மிஷ்க்கின் சோடை போகவில்லை... அடுத்த படத்தில் இந்த குறைகளை நீக்கி, இன்னும் நல்ல படத்தை தருவார் என நம்புகிறேன்...


48 பூச்செண்டு தரலாம்யுத்தம் செய் – கொஞ்சம் பழைய பாணியில் கொஞ்சம் பழைய மிஷ்க்கின்


வருகைக்கு நன்றி!! 

4 comments:

Chitra said...

good review...

கார்க்கி said...

innoru karthik innaiku porarame :)

hearthacker said...

review eluthina varuku manasula periya parupu nu ninapu pola...

கோமாளி செல்வா said...

Unka vimarsanam nalla irukunka. Naan innum padam parkala. Parthutu solren.

Blogger templates

Custom Search