Saturday, 1 January 2011

வானவில் உங்கள் சாய்ஸ்

வணக்கம் நேயர்களே.. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. நான் உங்க ஜிப்சி சுமா.. நீங்க பார்த்துட்டு இருக்குற நிகழ்ச்சி வானவில் உங்கள் சாய்ஸ்.. இன்னிக்கு நியு இயர் சிறப்பு நிகழ்ச்சிக்கு நம்ப கூட வந்து கலந்துரையாட போகின்ற பிரபலம் யாருன்னா? இவர் சாதாரண ஆள் இல்லேங்க.. பொண்ணுங்க மத்தில இவருக்கு இவருக்கு எவ்ளோ க்ரேஸ் இருக்குன்னு விவரிக்கவே முடியாது..ஸ்கூல் பொண்ணுங்க ஆகட்டும், காலேஜ் பெண்கள் ஆகட்டும், பல்லு முளைக்காத பாப்பபா ஆகட்டும், பல்லு போன ஆயா ஆகட்டும்.. எல்லாரும் இவர பாக்கணும், இவர் கிட்ட பேசணும்னு துடியா துடிக்கிறாங்க..  அந்த அளவுக்கு இவர் ஒரு கண்ணன், காதல் மன்னன், செல்ல பிள்ளை, இவர் இன்றி நான் இல்லைன்னு கூட சொல்லலாம்.. இவர பத்தி இன்னும் சொல்லிட்டே போகலாம்.. ஆனா நீங்க ”பேசுனது போதும், அவர கூப்டு”ன்னு என்ன கோபமா திட்றது கேக்குது.. வாங்க வானவில் கார்த்திக்.. 



(விசில் விசில்.. பெண்களின் கூச்சல் சத்தம்)


ஜிப்சி சுமா: வணக்கம் கார்த்திக்.. நியூ இயர் விஷேஸ்.. 

கார்த்திக்: உங்களுக்கும், நேயர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

ஜிப்சி சுமா: அது என்ன நேயர்கள், உங்க ரசிகர்கள் சொல்லலாமே.. குறிப்பா பெண் ரசிகர்கள்..

கார்த்திக்: எங்க இப்டி கோர்த்து விடுறீங்க?

ஜிப்சி சுமா: ஹஹஅஹஹா.. பெண்களுக்கு உங்க கிட்ட பிடிச்சதே இந்த தன்னடக்கம் தான்..

ட்ரிங் ட்ரிங்

ஜிப்சி சுமா: ஹல்லோ.. யாரு எங்க இருந்து அழைக்கிறீங்க?

ஹலோ.. வானவில் உங்க சாய்ஸ்சா? கார்த்திக் இருக்காரா?

ஜிப்சி சுமா: ம்ம்ம்.. பேசுங்க.. 

ஹல்லோ.. கார்த்திக்?

கார்த்திக்: சொல்லுங்க.. உங்க பேரு?

என் பேரு ஜெஸ்ஸி.. ஐயோ.. என்னால நம்ப முடியவே இல்ல.. 

கார்த்திக்: உங்கள கிள்ளி பார்த்துகோங்க..

ஜெஸ்ஸி: நீங்க வந்து கிள்ளுங்க.. ஹிஹிஹிஹி..

கார்த்திக்: நல்ல ஹியுமர் சென்ஸ்.. 

ஜெஸ்ஸி: நான் உங்களுக்கு ரொம்ப வருஷமா ட்ரை பண்ணிட்டு இருக்கேங்க.. லைன் கிடச்சதுல இருந்து என்ன பேசுறதுன்னே தெரில.. 

ஜிப்சி சுமா: நீங்க மட்டுமா, தமிழ் நாட்டுல பாதி அழகான பெண்கள் இவருக்கு ட்ரை பண்ணிட்டே தான் இருக்காங்க.. 

கார்த்திக்: நீங்க வேற மாட்டி விடறீங்களே.. சரி ஜெஸ்ஸி நீங்க என்ன பண்றீங்க? 

ஜெஸ்ஸி: நா உங்க கூட பேசிட்டு இருக்கேன்.. ஹிஹிஹி..

கார்த்திக்: சரி.. வேற என்ன பண்றீங்க? 

ஜெஸ்ஸி: டிவில லைவ்வா உங்கள பாக்குறேன்.. ஹிஹிஹி

கார்த்திக்: ஜெஸ்ஸி.. நீங்க அண்ணா ஆதர்ஷ் காலேஜ் தானே? 

ஜெஸ்ஸி: ஆமா.. எப்டி கண்டுபிடிச்சீங்க?

கார்த்திக்: உங்க ஹியுமர் சென்ஸ்லேயே தெரியுது நீங்க எந்த காலேஜ்ன்னு

ஜிப்சி சுமா: வாவ்.. சூப்பர் கார்த்திக்.. பேசுறதுலேயே கண்டுபிடிகிறீங்க எந்த காலேஜ்ன்னு.. சான்சே இல்ல..

கார்த்திக்: எல்லாம் அனுபவம் தாங்க.. 

ஜிப்சி சுமா: சரி ஜெஸ்ஸி.. உங்களுக்கு கார்த்திக் கிட்ட எதாவது கேள்விகள் கேக்கணுமா?

ஜெஸ்ஸி: அவரோட ட்ரீம் கேர்ள் எப்படி இருக்கணும்னு ஆசபடுறாரு?

கார்த்திக்: இப்டில்லா கேட்டு எங்க மாட்டி விடுறேங்க?

ஜெஸ்ஸி: ஒருவேள அவரு கண்டுபிடிச்சிட்டாரா கேட்டு சொல்லுங்க..

கார்த்திக்: என் ட்ரீம் கேர்ள் எனக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்ங்க..

ஜெஸ்ஸி: ஓஓ.. அப்போ உங்களுக்கு புடிச்ச பொண்ணு எப்டி இருக்கணும்?

கார்த்திக்: என் ட்ரீம் கேர்ள் மாதிரி இருக்கணும்க..

ஜெஸ்ஸி: அப்போ ட்ரீம் கேர்ள்?

கார்த்திக்: எனக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்..

ஜெஸ்ஸி: ஐய்யோ.. கார்த்தி எப்டிங்க? செமயா பேசுறீங்க.. இதுனால தாங்க உங்கள எனக்கு புடிச்சிருக்கு..

ஜிப்சி சுமா: சரி.. நீங்க நல்லா பாடுவீங்க கேள்விப்பட்டோமே.. நம்ப கார்த்திக்காக ஒரு பாட்டு பாடுங்க..

ஜெஸ்ஸி: ஐயோ.. எனக்கு வெக்கமா இருக்குங்க.. ஹிஹிஹி

கார்த்திக்: உங்கள பொண்ணு பாக்கவா வந்தோம்.. சும்மா பாடுங்க..

ஜெஸ்ஸி: கார்த்திக்கோட விண்ணைத்தாண்டி வருவாயா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுல இருந்தே பாடுறேன்..

மன்னிப்பாயா, மன்னிப்பாயா
ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே.. மன்னிப்பாயா.. 

நல்லா இருந்துச்சா?

க்ளாப் க்ளாப்

ஜிப்சி சுமா:  சூப்பரா பாடுனீங்க.. உங்களுக்காக இந்த சாங்கயே நாங்க ப்ளே பண்றோம்..


பாடல் முடிந்தவுடன்


ஜிப்சி சுமா: நெறய பெண்கள் உங்ககிட்ட பேசணும்ன்னு ஆசயோட இருக்காங்க.. அடுத்த நேயர் யார் எங்க இருந்து அழைக்கிறாங்க பாக்கலாம்.. வணக்கம் ஜிப்சி உமா, வானவில் உங்கள் சாய்ஸ்

ஹெல்லோ.. வானவில் கார்த்திக்..

ஜிப்சி சுமா: பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு சும்மாவா சொன்னாங்க.. பாருங்க.. இங்க ஒருத்தி நிகழ்ச்சி நடத்துறா, அவகிட்ட பேசணும்ன்னு யாருகாச்சும் தோணுச்சா?

கார்த்திக்: ஹாய்.. உங்க பேரு

கார்த்திக்.. எப்டி இருக்கீங்க.. நான் பிரியா பேசுறேன்

கார்த்திக்: நானும் ப்ரியா தான் பேசுறேன்.. ஏனா இது அவுட்கோயிங்ல.. 

ப்ரியா: ஹாஹாஹா.. இதே மாதிரி தானே நீங்க அன்னிக்கு நாம மீட் பண்ணும் போதும் ஜோக் பண்ணீங்க.. சூப்பர் கார்த்திக்

கார்த்திக்: ஹெல்லோ.. ப்ரியா, நாம முன்னாடி மீட் பண்ணோம்?

ப்ரியா: ஆமா, சென்னை ப்ரியா மறந்துட்டீங்களா?

கார்த்திக்: சென்னைல்ல எந்த காலேஜ்?

ப்ரியா: வுமன்ஸ் காலேஜ்..

கார்த்திக்: எனக்கு நெறய ப்ரியா தெரியுமே.. இன்னும் Details ப்ளீஸ்

ப்ரியா: எத்திராஜ் காலேஜ்

கார்த்திக்: எந்த டிப்பார்ட்மெண்ட்? எனக்கு பிசிக்ஸ், மேத்ஸ், கெமிஸ்ட்ரி, காமர்ஸ், விஸ்காம்ல கூட ப்ரியா தெரியுமே..

ப்ரியா: அடப்பாவி.. கெமிஸ்ட்ரி..

கார்த்திக்: கெமிஸ்ட்ரில எந்த இயர்? எனக்கு எல்லா இயர்லயும் தெரியுமே?

ப்ரியா: ஓ காட்.. செகண்ட் இயர்..

கார்த்திக்: நீங்க R.ப்ரியாவா இல்ல D.ப்ரியாவா இல்ல S.ப்ரியாவா?

ப்ரியா: எங்க க்ளாஸ்ல எல்லாரையும் தெரியுமா? நான் S.ப்ரியா

ஜிப்சி சுமா: அட என்னங்க நீங்க.. தெரிஞ்ச பெண்கள் கையளவு.. இவர அறிந்த பெண்கள் உலகளவு..

ப்ரியா: கார்த்திக்.. அன்னிக்கு நாம கபே காபிடேல்ல மீட் பண்ணும் போது ஒரு லவ் ஸ்டோரி சொன்னீங்க.. சான்ஸே இல்ல.. அதுவும் English  Dialogs.. சில பேரு பீட்டர் விடுறதுக்காக பேசுவாங்க Like பீட்டர் மேனன்.. ஆனா நீங்க அப்டி இல்லாம, எங்க எப்டி பேசணும்ன்னு கரெக்ட்டா இருக்கீங்க.. உங்க எழுத்துக்கும், பேச்சுக்கும் நான் ரசிகை..

கார்த்திக்: ரொம்ப நன்றிங்க..

ப்ரியா: எப்டி உங்களால இப்டி எழுத முடியுது? அதோட ரகசியம் சொல்லுங்களேன்.. அதுவும் உங்க இங்கிலீஷ்.. சிம்ப்ளி சூப்பர்ப்..

கார்த்திக்: ரொம்ப புகழ்றீங்க.. நான் அந்த அளவுக்கு Worth இல்லைங்க..

ஜிப்சி சுமா: அந்த ரகசியம் தெரிஞ்சா நீங்களும் கார்த்திக் ஆகிடுவீங்கல்ல.. So let that be secret..

ப்ரியா: சுமா, நான் கார்த்திக்காக ஒரு கவிதை எழுதிருக்கேன்.. சொல்லவா?

ஜிப்சி சுமா: கண்டிப்பா..

ப்ரியா: 
உலகை ரசிக்க என் அம்மா சொன்னாள்
ஆனால் நான் ரசித்ததோ உன்னை
காரணம் நீ என் உலகம் என்பதால் அல்ல..
நீ பிறந்த அன்று தான் உலகும் பிறந்தது – அதனால்


க்ளாப் க்ளாப் க்ளாப்..

ஜிப்சி சுமா: பின்னிட்டீங்க.. 

கார்த்திக்: ரொம்ப நன்றிங்க.. ஆனா கவிதைய கேட்டா எனக்கு மேவி தான் பொண்ணு வாய்ஸ்ல பேசுறாரோ ஒரு டவுட்..

ப்ரியா: ஹாஹா.. இல்ல கார்த்திக்.. I wish you all success.. நீங்க இன்னும் நெறய எழுதணும்.. பிசிக்ஸ் நோபல் பரிசு வாங்கணும்.. எனக்கு கார்த்திக்கு புடிச்ச பாடலையே போடுங்க..

ஜிப்சி சுமா: அழைத்ததற்கு ரொம்ப நன்றி.. நீங்க கேட்ட மாதிரியே கார்த்திக்கு புடிச்ச பாட்டு வருது.. என்ஜாய் பண்ணுங்க..


பாடல் முடிந்தவுடன்


ஜிப்சி சுமா: ஒரே பெண்களா பேசுறாங்களே கார்த்திக்.. ஹல்லோ

ஹல்லோ வானவில் உங்க சாய்ஸ்.. கப்சி சுமா எப்டி இருக்கீங்க?

ஜிப்சி சுமா: நான் நல்லா இருக்கேன்.. என்னடா பையன் போன் பண்ணலையே யோசிச்சேன்.. கார்த்திக் கிட்ட பேசுறீங்களா?

அவன் கிடக்குறான்.. நாம பேசலாம் சுமா.. எப்டி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?

ஜிப்சி சுமா: எல்லாரும் நலம்.. உங்க பேரு, நீங்க எப்டி இருக்கீங்க?

நான் 27 வயசு தடியன், மனசலவுல பொடியன், பேசுனா கடியன், கோவம் வந்தா வெடியன்

ஜிப்சி சுமா: வாவ்.. நீங்க கண்டிப்பா விஜய் ஃபேன்னா தான் இருப்பீங்க.. இந்த பஞ்ச் டயலாக் கேட்ட உடனே 4 பேரு ஓடிட்டாங்க..

என் பேரு கார்க்கி.. எனக்கு தளபதின்னா ரொம்ப பிடிக்கும்ங்க..

ஜிப்சி சுமா: எப்டி இருக்கீங்க?

கார்க்கி: கில்லி மாதிரி இருக்கேன்.. என் ஃப்ரெண்ட் ஷாஜகான், பத்ரி இவங்க எல்லாம் உங்க ஃபேன்.. மதுர, திருப்பாச்சி, சிவகாசி எங்க போனாலும் உங்க நிகழ்ச்சிய தவறாம பாப்பேன்..


ஜிப்சி சுமா: ரொம்ப சந்தோஷமா இருக்கு, எனக்கு இவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்கன்னு.. சரி கார்த்திக் கிட்ட பேசுங்க..

கார்த்திக்: ஹாய் கார்க்கி.. தோழி எப்டி இருக்காங்க?

ஜிப்சி சுமா: சச்சின் மாதிரி இப்போ தான் எனக்கு ஒரு 50 அடி போட்டாங்க.. ஹாஹா.. அவங்க வளர்த்த குருவிய, இந்த அழகிய தமிழ்மகன், ஒரு வேட்டைக்காரன் கிட்ட பந்தயம் கட்டி தோத்து போனதுல அவங்க எனக்கொரு புதிய கீதை எழுதி இருக்காங்க.. 

கார்த்திக்: ராசா.. ஒத்துக்றேன்.. அண்ணா வாழ்க.. Me The பாவம்ல.. எதாவது கேள்வி கேக்கணுமா?

கார்க்கி: நீங்க எப்போ மேசேஜ் பண்ணாலும் ட்விட்டர் வாங்க சொல்றீங்க.. ஆனா ட்விட்டர்ல பையன் பேருல வந்தா உங்கள பாலோ பண்ண முடில.. ட்விட்டர் கூட பொண்ணு பேருல வந்தா தான் உங்க Profile-ல Follow பட்டன் காட்டுது.. என்ன கொடும கார்த்திக் இது?

கார்த்திக்: அவ்வ்வ்வ்வ்.. நான் என்னங்க செய்ய முடியும்?

கார்க்கி: உங்க அழகின் ரகசியம் என்ன கார்த்திக்? எப்டி இவ்ளோ கேர்ஸ்ஸ சமாளிக்கிறீங்க? Joe This is for you சொல்லி Girls ஃபேன்ஸ் சேக்குறாங்க.. ஆனா நீங்க அப்டி இல்லாம எப்டி ஈர்க்குறீங்க?

கார்த்திக்: நான் ரொம்ப ஸ்விட்ங்க.. அதான் ஈஈஈஈ-ர்க்குறேன்..

கார்க்கி: அருமை அருமை.. சரி கார்த்திக் நான் உங்களுக்காக தோழி அப்டேட்ஸ் சொல்லவா?

ஜிப்சி சுமா: ஆரம்பிச்சிட்டாரே.. விஜய் இல்லாட்டி தோழி.. ம்ம்ம்ம்.. சொல்லுங்க..

கார்க்கி: தோழி கேட்டாள்.. எப்டிட்டா காதலே வராத என் மனசுக்குள்ள நீ வந்தேன்னு.. நான் சொன்னேன், உன் மனச திறக்குற சாவி என்கிட்ட இருக்குல்ல.. என்னடான்னு அவ கேக்க, அதான் கார்க்-கீன்னு நா சொன்னேன்..

கார்த்திக்: சூப்பர் சகா.. 

கார்க்கி: இன்னொன்னு சொல்றேன்.. தோழியுடன் பைக்கில் செல்லும் போது சிக்னலில் மாட்டிக்கொண்டேன்.. நிமிடங்கள் ஓட, நான் தோழியிடம் சொன்னேன், ‘நானும் அந்த சிகப்பு விளக்கும் ஒன்று, உன்னை பாக்க நாங்க எவ்ளோ நேரம் “சிக்னல்” கொடுக்குறோம் பாரு என்றாள்.. 

கார்க்கி: கோபத்தில் தோழி சொன்னாள், போடா இதயமே இல்லாதவன் என்று.. ஆமாம், என் இதயம் அவளிடம் தானே இருக்கிறது..

கார்த்திக்: கலக்குறீங்க.. நான் ஒண்ணு சொல்றேன்,

I'm attracted to you like the Earth is attracted to the Sun - with a large force inversely proportional to the distance squared.

கார்க்கி: வாவ்.. நீங்க நீங்க தான், நாங்க நாங்க தான்.. பிசிக்ஸ் பிசிக்ஸ் தான், பீட்டர் பீட்டர் தான், மொக்க மொக்க தான்.. 

கார்த்திக்: சகா, அப்றோம் எப்ப பாக்குறது?

கார்க்கி: காவலன் வருதுல்ல.. வாங்க கார்த்திக்..

கார்த்திக்: ஹல்லோ.. உங்க டி.வி. வால்யும்ம கம்மி பண்ணுங்க.. ஹல்லோ

ஜிப்சி சுமா: கால் கட் ஆகிடிச்சு.. காவலன் சொன்னா எல்லாமே கட் ஆகிடும் போல.. சரி நம்ப தளபதி ரசிகர் கார்க்கிக்கு ஒரு விஜய் ஸாங்க் போடலாம், பாத்து மகிழுங்க..


பாடல் முடிந்தவுடன்


ஹல்லோ..வானவில் உங்கள் சாய்ஸ்.. நான் மேவி பேசுறேன்..

ஜிப்சி சுமா: பின்னாடி ஒரே சத்தமே இருக்கே..

மேவி: அங்க பாவி பேசுறான்..

ஜிப்சி சுமா: சொல்லுங்க மேவி, என்ன பண்றீங்க?

மேவி: நான் இப்பொ தான் குலித்லிங்கோ போங்கமன்கோன்னு ஒரு படம் பார்த்தேன்… 1950’s ல வந்த படம்..
ஜிப்சி சுமா: கார்த்திக் கிட்ட பேசுறீங்களா?

மேவி: கண்டிப்பா.. கார்த்திக் எப்டி இருக்க? அந்த அண்ணா யுனிவர்சிட்டி மேட்டர் சொல்லவா?

கார்த்திக்: யோவ்வ்.. வேணாம்யா..

ஜிப்சி சுமா: என்னது, சொல்லுங்க, சொல்லுங்க..

மேவி: இவர் அண்ணா யுனிவர்சிட்டில்ல படிக்கிறாருன்னு ஒரு புரளி கிளம்புன அப்றோம், நெறய பொண்ணுங்க Unjoin பண்ணிட்டாங்க, சில பேரு அட்மிஷன் வாங்க கூட வரல..

ஜிப்சி சுமா: என்னது? ஏன் மேவி?

மேவி: இவங்க அண்ணா யுனிவர்சிட்டில்ல சேர்ந்தா, ஊருல இருக்குறவங்க, ‘என்னம்மா, நீயும், கார்த்திக்கும் அண்ணாவாமே’ கேக்குறாங்களாம்.. இந்த பழிபாவத்துக்கு ஆள் ஆக வேணாம்னு தான் இப்டி செஞ்சிட்டாங்க.. இப்போ தெரிஞ்சிக்கோங்க இவர் ஏன் லயோலால படிக்கிறாருன்னு.. அவர் கற்புக்கு சேதாரம் இன்றி உத்தரவாதம் கிடைக்க தான்..

ஜிப்சி சுமா: சூப்பர் நியுஸ்ங்க.. சொன்னதுக்கு நன்றி.. உங்க ஃப்ரெண்டுக்கு ஏதாவது கவிதை சொல்லுங்க..

மேவி: அப்பாவின் மீசை
கார்த்தி மேல எல்லாருக்கும் ஆசை

அப்போ சட்டென்று ஃபோனை ஒருத்தர் புடுங்கி..

யோவ் கார்த்தி..

கார்த்திக்: யாரு? மேவி ஃப்ரெண்ட் பாவியா?

ஆமாய்யா.. லொல்லு கார்த்தி என்கிற பாவி..

ஜிப்சி சுமா: வாவ்.. கார்த்திக் காலிங் கார்த்திக்.. சூப்பர்ல..

லொல்லு: யோவ்.. உன்ன இது மாதிரி ஷோல வந்தா தான் புடிக்க முடியுது.. போன் பண்ணா Switch Off, Not Reachable

கார்த்திக்: சாரி பாஸ்.. போன் ரீப்பர் ஆகிட்டே இருக்கு.. 

லொல்லு: இத தான்யா நீ 4 மாசமா சொல்லிட்டு இருக்க.. எனக்கு தெரிஞ்சு உலகத்துல உன் போன் தான் நாலு மாசமா டெய்லியும் ரீப்பேர் ஆகுது.. இத கூட பொறுத்துப்பேன்… ஆனா உனக்கு கால் பண்ணா கூட ஒரு பொண்ணு தான் பேசுது.. அதுவும் இங்கிலீஷ்ல 'The subscriber you are trying to reach is currently switched off' பேசுது.. கம்ப்யூட்டர் ரெக்கார்ட் வாய்ஸ் கூட உனக்கு மயங்குதுய்யா.. சிட்டிசன் அஜித் மாதிரி எரியுதுல்லே.. வவுறு எரியுதுல்லே..

கார்த்திக்: பாஸ்.. நான் என்ன பண்ண முடியும்.. வீட்ல புது போன் வாங்கி தர மாட்டேங்றாங்க..

லொல்லு: அப்டியே உங்க போன் அதிசயமா வேல செஞ்சாலும், User Busy.. கடலை கடலை.. எரியுதுல்லே.. வவுறு எரியுதுல்லே..

கார்த்திக்: பாஸ்.. சத்யமா நான் பசங்க கிட்ட தான் பேசுறேன்.. அவ்வ்வ்வ்.. நம்புங்க.. நாம எப்ப மீட் பண்றது தல?

லொல்லு: தக்காளி.. ஒரு வருஷமா நீ என்கிட்ட பேசுன அதிகமான வார்த்த இதான்.. ஜெமினி-வானவில் போற ஷேர் ஆட்டோல்ல கூட போனேன்யா, அப்போயாச்ச்சும் வானவில்ல உன்ன பாக்கலாம்ன்னு.. நீ அடிக்கடி மீட்ல இருந்து ஜகா வாங்குனதால, சென்னைல மழையும் அவ்ளோவ இல்ல.. ஏன்னு கேக்குறீயா? வானவில் வந்தா தான் மழை வருமாம்…

கார்த்திக்: முடில பாஸ் :(

லொல்லு: மீட் ப்ளான் போட்டா, மெட்ராஸ்ல எல்லாரும் என் மேல ’கண்ணு’ வச்சிட்டாங்க.. அதுனால எனக்கு மெட்ராஸ் ஐ, அப்றோம் எக்ஸாம், ஊருக்கு போறேன்னு எஸ்கேப் ஆகிடுற.. எங்க உளவுத்துறையின் நம்பகத்தகுந்த வட்டாரம் நீங்க அடிக்கடி இ.சி.ஆர்க்கு போறீங்க சொல்லுது.. கற்பத்தையும், காதலையும் ரொம்ப நாள் மறைக்க முடியாது..

கார்த்திக்: தல.. ப்ளிஸ்.. நான் சின்ன பையன்.. இத்தோட விட்டுடுங்க.. :(((((((((((((( கண்டிப்பா புது வருஷம் நாம பாக்கலாம்.. இத்தோட நாம நிறுத்திப்போம்..

………………



பவர்கட்..


பிறந்த நாள் வாழ்த்துக்கள் வானவில் கார்த்திக்.. அவர் ப்ளாக் பார்க்க, சொடுக்குங்க இங்க - கார்த்திக்


டிஸ்கி: வானவில் கார்த்திக் கெஞ்சி கேட்டதால இதோட நான் நிறுத்திக்கிறேன்.. கொலவெறி போஸ்ட் எழுத ரொம்ப நாள் ஆச.. சீக்கிரம் நாம மீட் பண்ணுவோம்.. இல்லாட்டி இருக்கவே இருக்கு ஜனவரி 1, 2012








வருகைக்கு நன்றி!! 


10 comments:

vinu said...

hpy new year

vinu said...

hpy new year

Karthik said...

First of all, thanks for the wishes. But enna ethunu kekkama, oru pacha pullaiya, thuvaichu thvamsam pannirukka venaam. Mindle vechukkaren. :D

கார்க்கி said...

ஹாஹாஹாஹா

எனக்கும் லைட்டா டேமேஜ்தான் இருந்தாலும் ஓக்கே..

நீ கலக்கு மச்சி

டம்பி மேவீ said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்திக்.... இன்று போல் என்றும் பெண்களுடன் கடலை போட்டபடி இருக்கவும்.

அது என்னவோ தெரியல ...கார்த்திக் செல் நம்பர் மாத்தின்ன பொண்ணுங்களுக்கு மட்டும் சொல்லுறாரு..

டம்பி மேவீ said...

வானவில் கார்த்திக், நேத்து உங்க கூட பேசும் போது ஒரே பொண்ணுங்க குரலா கேட்டுச்சே ..எங்கப்பா இருந்த ?

டம்பி மேவீ said...

ஜிப்சி சுமா நம்பர் கிடைக்குமா :))))))

kanagu said...

கலக்கல் பதிவு ’லொள்ளு’ கார்த்திக்... நான் கூட எங்க பப்ளிஷ் ஆகாம போயிடுமோ-னு ரொம்ப பயந்துட்டேன் :)

/*பாஸ்.. சத்யமா நான் பசங்க கிட்ட தான் பேசுறேன்.. அவ்வ்வ்வ்.. நம்புங்க.. நாம எப்ப மீட் பண்றது தல?

லொல்லு: தக்காளி.. ஒரு வருஷமா நீ என்கிட்ட பேசுன அதிகமான வார்த்த இதான்..*/

இதுல உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு... கார்த்திக் எல்லா பசங்க கிட்டயும் ஒரே பிட்ட தான் போடுறார் :D :D

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திக் :) :)

கா.கி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் to வானவில் கார்த்திக்

கோமாளி செல்வா said...

Sema lolla iruku. Enaku karki annanoda thozhi updates theriyum. Athu super. Appuram jipsi suma , unka lollu ithellam nalla iruku.

Blogger templates

Custom Search