Friday, 10 December 2010

வாழ்த்தலாம் வாங்கமச்சி நீ ஒரு பொறிக்கி.. சமுகத்தில் நடக்கும் அக்க்ரமங்களை பொறிக்கி அதை கண்டிப்பதால்


மச்சி நீ ஒரு பொறம்போக்கு.. நண்பர்களையும் சரி, மற்றவர்களையும் சரி அவர்கள் இல்லாத நேரத்தில் முதுகின் புறமாய் பேசும் போக்கு இல்லாத நல்ல மனம் உடைய பொறம்போக்கு.. 


மச்சி நீ ஒரு முடிச்சவுக்கி.. உலகின் நடக்கும் பல குற்றங்களின் மூலகாரணங்களையும், மர்மமாய் யாருக்கும் புலப்படாத விஷயங்களின் முடுச்சுக்களை அவிழ்க்கும் ஒரு முடிச்சவுக்கி.. 


மச்சி நீ ஒரு கேப்மாரி.. நண்பர்களுடன் உரையாடும் பொழுது சிறு கேப் கிடைத்தாலும், யானை காதில் புகுந்த எறும்பு போல விடமால் நோண்டிக்கொண்டே மாறி மாறி கலாய்க்கும் ஒரு கேப்மாரி  


மச்சி நீ ஒரு முள்ளமாரி.. உன் காலில் முள் குத்தினாலும் அதை பொருட்படுத்தாது உன் அன்பால் அந்த முள்ளின் குணத்தை கூட மாற்றும் சக்தி கொண்ட முள்ளமாரி.. 


மச்சி நீ ஒரு பரதேசி.. ஐந்தாம் வகுப்புலே டேசிபாபா சைட் பார்த்து பல உலக விஷயங்களை அறிந்து, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஸ்பெயின் என பல தேசங்களுக்கு பறந்த பறதேசி.. சாரி.. பரதேசி..


மச்சி நீ ஒரு டுபுக்கு.. பல புக்குகளை ரெண்டு முறை படித்து அதில் டூ மச்சாக அர்த்தங்களை கண்டுபிடித்த டுபுக்கு..


மச்சி நீ ஒரு கபோதி.. கற்றறிந்த சான்றோர்களுக்கே நீ போதி மரமாய் விளங்கும் க-போதி 


மச்சி நீ ஒரு கம்னாட்டி.. இளம்பெண்களின் மனதை கவர்ந்து, வாடா நாட்டி பாய் என அழைக்க பதும் கம்னாட்டி..


மச்சி நீ ஒரு சாவுகிராக்கி.. மைகேல் ஜாக்சன் அட்டாக் செய்த  ஆட்டக்காரன்..  சாவு வீட்டில் நடனத்துக்கு செம கிராக்கி கொண்ட நீ ஒரு சாவுகிராக்கி..  


சரி மச்சி உன்ன ரொம்ப புகழ்ந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. 

நீ சொல்வியே ஒரு பஞ்ச டயலாக் 

முகத்துக்கு முன்னாடி முகஸ்துடி போடுறவனையும் பிடிக்காது
முதுகுக்கு முன்னாடி முட்றவனையும் பிடிக்காது 


அதுனால நா இத்தோட ஸ்டாப்பு.. 
இன்னிக்கு உன் பொறந்த நாளுல.. 
அதான் நல்ல நாள் அன்னிக்கு 
நாலு நல்ல வார்த்த சொல்லலாம்ன்னு இந்த போஸ்ட்டு.. (ரைமிங்கா பேசுவோம்ல) 


ஹாப்பி பர்த்டே மச்சி.. ஓஒ.. நீ தமிழ்காரன்ல.. அதுனால தானே கேக் கூட வெட்ட மாட்ட.. 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..


உனக்கு இந்த போஸ்ட் பிறந்த நாள் பரிசா தர அளவுக்கு நா கஞ்சன் இல்ல.. 
நீ ரொம்ப நாளா கேட்டியே BAJAJ AVENGER பைக் அத தரலாம்னு பார்த்த காசு இல்ல.. ஏதோ என்னால முடிஞ்சுது


நம்ப சாம் அன்டேர்சன்  எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே?

முகப்புத்தகத்தில் வாழ்த்தை தெரிவிக்க- அருண்

செத்துப்போன பிளாக்கில் மொய் எழுத- அருண் பிளாக்


டிஸ்கி: அடுத்த மாசம் ஒருத்தரு பொறந்த நாளு இருக்கு.. அவருக்கு இது ஒரு ட்ரைலர்.. இதைப் படித்து டரியல் ஆக வேண்டாம் சகா..


வருகைக்கு நன்றி!! 

8 comments:

ARVIND said...

sema da...itha vida asingamaa oruthanuku budday wish pana mudiyathu :D

Chitra said...

நம்ப சாம் அன்டேர்சன் எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே?


.....கலக்கல் வாழ்த்தும் பரிசும். ஜூப்பரு!

Karthik said...

aaww. be careful, naan enna sonnen!!

piranda naal vaazhthukkal arun!!

kanagu said...

/*ரைமிங்கா பேசுவோம்ல*/

அது எங்க இருக்கு??????? :ஷாக்:

/*
நம்ப சாம் அன்டேர்சன் எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே?*/

:D :D :D

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி :)

/*அடுத்த மாசம் ஒருத்தரு பொறந்த நாளு இருக்கு.. அவருக்கு இது ஒரு ட்ரைலர்.. இதைப் படித்து டரியல் ஆக வேண்டாம் சகா..*/

ஆமா இத படிச்சு டரியல் ஆக வேணாம்... உங்களுக்கு-னு ஒண்ணு எழுதுவார்.. அப்ப ஆனா போதும் :) :)

Lancelot said...

romba naal kalichu commenturen...dai enna kalaichi post potta...dhil iruntha enga singam kanaguva kalaichi post podudaa...appadiyae pottalum unna september la avar summa vitturuvaara?

Anonymous said...

/*dhil iruntha enga singam kanaguva kalaichi post podudaa*/

Machi.. ithu thevaya.. avan etho enna paavam paathu vittutu irukkan.. :(

/*romba naal kalichu commenturen...*/

Nee podamaye irundurukalam :D :D

Narayanan said...

sema da

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Blogger templates

Custom Search