Friday, 10 December 2010

வாழ்த்தலாம் வாங்கமச்சி நீ ஒரு பொறிக்கி.. சமுகத்தில் நடக்கும் அக்க்ரமங்களை பொறிக்கி அதை கண்டிப்பதால்


மச்சி நீ ஒரு பொறம்போக்கு.. நண்பர்களையும் சரி, மற்றவர்களையும் சரி அவர்கள் இல்லாத நேரத்தில் முதுகின் புறமாய் பேசும் போக்கு இல்லாத நல்ல மனம் உடைய பொறம்போக்கு.. 


மச்சி நீ ஒரு முடிச்சவுக்கி.. உலகின் நடக்கும் பல குற்றங்களின் மூலகாரணங்களையும், மர்மமாய் யாருக்கும் புலப்படாத விஷயங்களின் முடுச்சுக்களை அவிழ்க்கும் ஒரு முடிச்சவுக்கி.. 


மச்சி நீ ஒரு கேப்மாரி.. நண்பர்களுடன் உரையாடும் பொழுது சிறு கேப் கிடைத்தாலும், யானை காதில் புகுந்த எறும்பு போல விடமால் நோண்டிக்கொண்டே மாறி மாறி கலாய்க்கும் ஒரு கேப்மாரி  


மச்சி நீ ஒரு முள்ளமாரி.. உன் காலில் முள் குத்தினாலும் அதை பொருட்படுத்தாது உன் அன்பால் அந்த முள்ளின் குணத்தை கூட மாற்றும் சக்தி கொண்ட முள்ளமாரி.. 


மச்சி நீ ஒரு பரதேசி.. ஐந்தாம் வகுப்புலே டேசிபாபா சைட் பார்த்து பல உலக விஷயங்களை அறிந்து, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஸ்பெயின் என பல தேசங்களுக்கு பறந்த பறதேசி.. சாரி.. பரதேசி..


மச்சி நீ ஒரு டுபுக்கு.. பல புக்குகளை ரெண்டு முறை படித்து அதில் டூ மச்சாக அர்த்தங்களை கண்டுபிடித்த டுபுக்கு..


மச்சி நீ ஒரு கபோதி.. கற்றறிந்த சான்றோர்களுக்கே நீ போதி மரமாய் விளங்கும் க-போதி 


மச்சி நீ ஒரு கம்னாட்டி.. இளம்பெண்களின் மனதை கவர்ந்து, வாடா நாட்டி பாய் என அழைக்க பதும் கம்னாட்டி..


மச்சி நீ ஒரு சாவுகிராக்கி.. மைகேல் ஜாக்சன் அட்டாக் செய்த  ஆட்டக்காரன்..  சாவு வீட்டில் நடனத்துக்கு செம கிராக்கி கொண்ட நீ ஒரு சாவுகிராக்கி..  


சரி மச்சி உன்ன ரொம்ப புகழ்ந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. 

நீ சொல்வியே ஒரு பஞ்ச டயலாக் 

முகத்துக்கு முன்னாடி முகஸ்துடி போடுறவனையும் பிடிக்காது
முதுகுக்கு முன்னாடி முட்றவனையும் பிடிக்காது 


அதுனால நா இத்தோட ஸ்டாப்பு.. 
இன்னிக்கு உன் பொறந்த நாளுல.. 
அதான் நல்ல நாள் அன்னிக்கு 
நாலு நல்ல வார்த்த சொல்லலாம்ன்னு இந்த போஸ்ட்டு.. (ரைமிங்கா பேசுவோம்ல) 


ஹாப்பி பர்த்டே மச்சி.. ஓஒ.. நீ தமிழ்காரன்ல.. அதுனால தானே கேக் கூட வெட்ட மாட்ட.. 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..


உனக்கு இந்த போஸ்ட் பிறந்த நாள் பரிசா தர அளவுக்கு நா கஞ்சன் இல்ல.. 
நீ ரொம்ப நாளா கேட்டியே BAJAJ AVENGER பைக் அத தரலாம்னு பார்த்த காசு இல்ல.. ஏதோ என்னால முடிஞ்சுது


நம்ப சாம் அன்டேர்சன்  எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே?

முகப்புத்தகத்தில் வாழ்த்தை தெரிவிக்க- அருண்

செத்துப்போன பிளாக்கில் மொய் எழுத- அருண் பிளாக்


டிஸ்கி: அடுத்த மாசம் ஒருத்தரு பொறந்த நாளு இருக்கு.. அவருக்கு இது ஒரு ட்ரைலர்.. இதைப் படித்து டரியல் ஆக வேண்டாம் சகா..


வருகைக்கு நன்றி!! 

Monday, 6 December 2010

நந்தலாலா - மீண்டும் மிஷ்க்கின்

அவனை நான் என் சித்தி வீட்டிற்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன்...  எனது ஐந்தாவது வயதில் அறிமுகம்.. அந்த தெருவில் இருக்கும் மத்த குழந்தைகளுக்கு அவன் விளையாட்டு பொம்மை.. அவனை சீண்டுவது, கொக்கா மைனாவில் முட்டிக்கால் போட்டு குனிய வைத்து எகிறுவது, கண்ணாமுச்சி விளையாடும் போது அவன் முதுகுக்கு பின்னால் ஒளிந்தே கத்துவது என அவனை ஒரு காமெடி பீஸ் போல நடத்தினோம்.. ஆனால் அது எதுவும் புரியாமல் அவன் வெள்ளந்தியாக சிரித்து கொண்டிருப்பான்.. மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் அவனோடு விளையாடுவதை கண்டாலே அலறுவர். “ஹே… இங்க வா… அவன் கூட விளையாடதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன், அறிவில்ல, கால உடச்சா தான் சரி படுவ வீட்டுக்கு வீடு வார்த்தைகள் மாறினாலும், அர்த்தம் ஒன்று தான்… “போடா லூசு பயலே” என்று அவனை ஏசி விட்டால் போதும், முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து உக்கிரமும், அழுகையும் சேர்ந்து கதறுவான்… அவன் அம்மா வந்து சமாதானம் சொன்னாலும் அவளையும் அடிப்பான்.. வெறித்த பார்வை, கலங்கிய கண்கள்.. சில நிமிடங்களில் ‘உன் பேச்சு பளம்’ என்று விளையாட வருவான்.. அவனுக்கு வேண்டியது அன்பும், நண்பர்களும்.. அவன் அம்மாவிடம் என் சித்தி ஒரு முறை கேட்டாங்க “இந்த மாதிரி பயன வளக்கற்து கஷ்டமாச்சே, எங்கேயாவது சேக்கலாம்ல?" ஆனா அவங்க அம்மா சொல்வாங்க, “இதெல்லாம் கஷ்டம் பாத்தா நான் என் இவன பத்து மாசம் வயித்துல வச்சு பெத்தேன், எப்டி இருந்தாலும் அவன் என் மவன் தான், என் கூடவே கடசி வரைக்கும் இருப்பான் வயது ஆக ஆக நண்பர்கள் வட்டம் பெருக, அவனை மறந்தே போனோம்.. ஒரு நாள் சித்தி வீட்டிற்கு போகும் போது அவன் வீட்டு கதவில் விற்பனைக்கு என எழுதி இருக்க, ‘என்ன ஆச்சு சித்தி’ கேட்டேன்… “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிணத்த எட்டி பார்த்து கத்திக்கிட்டே விழுந்துட்டான்பா.. பாவம்.. அவங்க அம்மா அழுதது இன்னும் கண்ணுலேயே இருக்கு.. பையன் இல்லாத இடத்துல எதுக்கு இருக்கணுன்னு சொந்த ஊருக்கே போயிட்டாங்கப்பா” அன்பும் நண்பர்களும் கிடைக்காததால், தனது பிம்பத்தை பார்த்து யாரோ விளையாட அழைக்கிறாங்க நினச்சு குதிச்சிட்டான்னா? அந்த அம்மா எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்…நந்தலாலா- தாயை தேடி இரண்டு குழந்தைகளின் பயணம்- ஒருவன் உருவத்தால், இன்னொருவன் மனதால்… சின்னவனுக்கு அம்மாவ பார்த்து கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்க ஆச... அதுனால யாரு முத்தம் கொடுக்க வந்தாலும் கன்னத்த காட்டாம ஓடிடுவான்.. பெரியவனுக்கோ அந்த மூளிய இழுத்து வச்சு கன்னத்துல அறைய ஆச.. ரெண்டு பேரும் அவங்க அம்மாவ பார்த்தாங்களா, அவங்க ஆச நெறவேருச்சா இதுதான் கதை.. நமக்குள்ளேயே சந்தோஷத்த தேடுறத காட்டிலும் நம்மள சுத்தி இருக்குற சின்ன சின்ன விஷயத்துல கூட சந்தோஷம் இருக்குங்கறத படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூலமாக நமக்கு உணர்த்துகிறார் மிஷ்க்கின்…


படத்தின் நாயகன் இளையராஜா… அதிரடி பின்னணி இசை, மனதை வருடும் இசை என்றில்லாமல், மௌனத்தை கூட இசையாய் புகுத்தி நம்மை காட்சியோடு கட்டிப் போடுகிறார்.. எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு அமைதியாக விட வேண்டும் என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார்.. ஆரம்பத்தில் ஒரு சில மௌன நொடிகளை கடந்து வரும் அந்த வயலின் பிட்.. சூப்பர் சார்.. இளையராஜா இல்லாம இந்த படம் இல்லைய்யா ராஜான்னு சொல்லலாம்.. பாதி ஜீவன் ராஜாவின் இசை என்றால் மீதி ஜீவன் மிஷ்க்கினின் திரைக்கதையும், பாத்திர தேர்வும்… கதையின் நாயகனாக மிஷ்க்கின்.. ட்ரைலர் பார்த்து மொக்கயா பண்ணிருப்பாரோன்னு பயந்தேன்… ஆனா நல்ல நடிச்சிருக்காரு… காசு வேணுன்னு சில்லறைகளை மட்டும் வாங்குவது, தன்னை பைத்தியம் என்று சொன்ன ஆட்டோக்காரனை அடிப்பது, சிறுவன் அவங்க அம்மாவை பாக்கக்கூடாதுன்னு தூக்கிக்கொண்டு ஓடும் காட்சியில் மிஷ்க்கினின் கண்ணில் தெரியும் மிரட்சி- அப்ப்பப்ப்பா… ஆனால் தனது தாயை பார்த்தவுடன் பரித்தவிக்கும் காட்சியில் கோட்டை விட்டுட்டார்.. திரைக்கதை அங்கே பலவீனமாக இருந்ததால், அவரின் நடிப்பும் எடுபடவில்லை.. குட்டிப்பையன் அஷ் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், ரெண்டாவது பாதியில் நம்பளை கவர்கிறான்.. பக்கத்து வீட்டு குழந்தை போல பார்த்த உடனே ‘மாமா’ என்று ஒட்டி கொள்வதாகட்டும், கடைசியில் தனது அம்மாவை பார்த்தவுடன் அவனது கண்கள் (இடைவேளையில் மிஷ்க்கின் என்றால், க்ளைமாக்ஸ்ஸில் இவன்) மட்டுமே பேசுவது- அருமை…வசனங்களின்றி காட்சிகளை நகர்த்தும் பாணி படத்துக்கு பலமாகவும் அதே சமயம் பலவீனமாகவும் இருக்கிறது.. படத்தில் நிறைய குறியீடுகள் (Symbolisms).. அம்மா எங்கே என கேக்கும் சிறுவனுக்கு நிழலாய் பதில் சொல்வது (நிழல்-பொய்) அவன் ஓடி இறுதியில் கதாநாயகியிடம் முடிவது, சிறுவனின் அம்மா தவறானவள் என தெரிந்தவுடன் அவள் முகத்தை காட்டாது காட்சி அமைத்த பாணி, மிஷ்க்கின் அக்கி அம்மாவுக்காக ஒரு செம்பருத்தி பூவை பறித்து வைத்திருப்பார்.. கடைசி காட்சியில் ஸ்னிகிதா தலையில் செம்பருத்தி பூ.. இப்படி படம் முழுக்க வியாபித்திருக்கும் Symbolisms ஒரு கடைகோடி சினிமா ரசிகனால் (Layman's point of view) புரிந்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்…’நீ தானே பாம்பாம்ம எடுக்க சொன்ன’ என்று மிஷ்க்கின் அப்பாவியாய் அழும்போது மனம்மாறும் லாரி ட்ரைவரின் பகுதி ஒரு குட்டிக்கவிதை.. தாய்வாசல், அன்னைவேர் என ஊரின் பெயரிலேயே தாய்மையை புகுத்தியது, மெதுவாக கடக்கும் வண்டியில் அக்கி தனது அம்மாவை அவளின் இன்னொரு குழந்தை மூலம் தெரிந்து கொள்வது (அதற்கு முன்னரே DRIVE SLOWLY-  என எழுதப்பட்டிருக்கும்) என மெனக்கெட்டு திரைக்கதை அமைத்துள்ளார் மிஷ்க்கின்.. பள்ளி மாணவியின் காட்சிகள் மிகையான உறுத்தல்.. அதே போல படத்தின் உயிர்நாடியான காட்சி- தன் அம்மாவை மிஷ்க்கின் பார்த்த உடன் அவருக்கு வரும் பரிதவிப்பு, அதிர்ச்சி எனக்கு வரவில்லை… அதை தொடர்ந்து வந்த காட்சிகளும் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது.. சில இடங்களில் மிஷ்க்கின் Cliches.. தலையை குனிந்தபடியே இருப்பது, கால்கள், ஆகாயத்தை மாற்றி மாற்றி காட்டுவது என சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவில் பார்த்த காட்சிஅமைப்புகள்.. மற்றபடி கேமராவில் குறை சொல்ல ஒண்ணும் இல்லை (அஞ்சாதே நிறய வாட்டி பாத்துருக்க கூடாது)நாம மத்தவங்களுக்கு எது கொடுத்தாலும் அது நமக்கு திரும்ப வருமாங்கறது சந்தேகம் தான், ஆனா சந்தோஷத்த கொடுத்து பாரு, அது மட்டுந்தான் வட்டியோட வரும்.. இதை களமாக்கி, காட்சியமைத்த விதத்தில் மிஷ்க்கினுக்கு ஒரு சபாஷ்… ஆனாலும் அஞ்சாதே தான் என்னை பொருத்தமட்டில் மிஷ்க்கினின் சிறந்த, முழுமையான படைப்பு
53 பூச்செண்டு தரலாம்

நந்தலாலா- இனிமை


வருகைக்கு நன்றி!! 

Blogger templates

Custom Search