Sunday, 11 July 2010

ராவணன்- ”டென்”ஷன்

கொஞ்ச நாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ப்ளாக் பக்கம் வரமுடியல.. இனி உங்க ஆரோக்யம் கெட்டுப்போனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல..

எப்டி விஜய் படத்த நல்லா இருக்குன்னு சொன்னா குத்தமோ, அது மாதிரி மணிஜி படங்கள குறை சொன்னா நமக்கு சினிமா அறிவு இல்ல, அவரோட படங்கள ரசிக்க ஒரு இது வேணும், ஞானக்கண் இருந்தா தான் ரசிக்க முடியும்ன்னு என்னமோ சினிமாவ கண்டுபிடிச்சவனோட பேரன்-பேத்திகளாட்டும் சண்டைக்கு வருவாங்க.. பிசா, பர்கர் சாப்பிடுறது எப்டி UBER COOLன்னு காட்டிக்றாங்களோ, அது மாதிரி I’m Fan of Mani Sir Movies சொல்றது ஃபஷனா போச்சு..

ராவணன் படம் எப்டிடான்னு நண்பர்கள் கிட்ட கேட்டா காமரா சூப்பரு, சினிமாடொக்ராபி சீனு, லொக்கேஷன் செம மச்சி, ஒளிப்பதிவு ஒத்தா பின்னிட்டாங்கல, இந்திய சினிமால்ல இது மாதிரி படப்பிடிப்பு இல்ல, லைட்டிங்ல ரகள பண்ணிட்டாங்க மாமா சொல்றாங்க.. இது எல்லாமே ஒரே விஷயம் தான்.. இது கூட தெரியாம மத்தவங்கள குற சொல்வாங்க.. படத்துல நல்லா இருந்ததே இது மட்டும் தான்..

ஏன் எதிர்ப்பார்ப்போட போற? எந்த Expectationsம் இல்லாம படத்த பாக்கணும்ன்னு இன்னும் சில பேரு.. அப்டி பார்த்தா தான் படம் பிடிக்குமாம்.. என்னங்கடா உங்க லாஜிக்.. அப்றோம் என் விஜய் படத்துக்கு மட்டும் குத்துடு, குடையுதுன்னு சொல்றீங்க? அவர் தான் நான் இப்டி நடிப்பேன், என் படம் மொக்கயா தான் இருக்கும்னு ஓப்பனா சொல்றாருல.. அதுக்கும் எதிர்பார்ப்பு இல்லாம போய் பாருங்க..

படத்த பத்தி சொல்லணும்னா, HALF BAKED SCRIPT. ஒழுங்கா இந்தில எடுத்து இருக்கலாம்.. படம் முழுக்க ஒரு செயற்கை தனம்.. தாஜ்மகால்ன்னு ஒரு படம் மணி-பாரதிராஜா எடுத்தாங்களே, அது மாதிரி.. லொக்கேஷன்ஸ் எல்லாமே அந்நியமா தெரிஞ்சது.. படத்தோட ஒன்றி பார்க்க முடியல.. விக்ரம் நல்லா பண்ணிருக்காரு.. ஆனா அவரோட Characterisation சரியா எழுதல.. அவர் சைக்கோவா இல்ல வைகோவான்னு சந்தேகமாவே இருந்துச்சு.. கடசில மணி கூட அவர் வாழ்க்கைல விளையாடிட்டாரு.. ஐசு ஆன்ட்டிக்கு வயசாகிட்டே போகுதே.. லிப்-சிங்க்கும் மிஸ் ஆச்சு.. பல இடத்துல இந்தி உதட்டசைவு.. எடிட்டர் நோட் பண்ணல போல..

இசை, பின்னணில கலக்கிருக்காரு… பாடல்கள் சுமார்.. ஹிந்திக்கு கம்போஸ் பண்ணி அத தமிழுக்கு மொழி பெயர்த்த மாதிரி இருந்துச்சு.. டாக்டர் ராஜசேகரின் உடம்பு எப்புடி இருக்கு ஞாபகங்கள்.. வசனங்கள்ல எல்லா ஊரு பாசையும் பேசுறாங்க.. நெல்லை, கோவைன்னு வால்வோ பஸ்ல ஊர் ஊரா போற மாதிரி ஒரு ஃபீல்..

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.. இந்த காவியத்த சூப்பர், ஆஹோ, தமிழ் சினிமாவ திருப்பி போட்டுச்சு, உலக சினிமாவ பொறட்டி போட்டுச்சு, பலே பேஷ்ஷ்ன்னு சப்போர்ட் பண்ணி நான் புத்திசாலின்னு காட்டிக்கறத விட முட்டாளவே இருந்துடுறேன்..

ஒரு பெரிய ஃபைவ்-ஸ்டார் ஹோட்டலுக்கு போயி, அழகான, மிருதுவான சோபால அமர்ந்து, கலக்கல் டிஷைன் போட்ட தட்ட முன்னால வச்சு, கமகம வாசனையோட உணவ ருசிச்சா உப்பில்ல, சாப்பாட வாயில வைக்க முடில.. அது போல தான் ராவணன்..

ராவணன்- அந்நியன்

வருகைக்கு நன்றி!!

9 comments:

கார்க்கி said...

same feeling.

the most crap movie i have watched recently. Maanaj velu is really better than this.script wise :)

Narayanan said...

nee vera..padatha muthal vaarathula athuvum inox pvr sathyam la paathathaan super nu solravanga irukaanga..

padatha ennala system la kooda paaka mudiyala...

mani rathnam padam na dialog kuraivu nu solraanga..athukkunu.. vikram "bak bak bak" - naa enna nae puriala..athuku expansion theriala

vikram kandasamy flop continues nu kathinaa maathiri irunthuthu..

oru nalla vishayam maniku enna na..ippa release aana ellaa tamil padamum mokka ..athunaala intha mokka padam oduthu..

Hindi la padam nakkidichu..

Karthik said...

boss hindi version itha vida kevalama irukku. AB imsai thangala. :(

Karthik said...

why vijay? mokkai nale vijaynu aagi pochu.. :)))

GAYATHRI said...

neenga ipdi solreenga..aana en frnds elaarume super nu solraanga...indha padam paakavaa venaama:(

Karthik Lollu said...

Adaan soltene பிசா, பர்கர் சாப்பிடுறது எப்டி UBER COOLன்னு காட்டிக்றாங்களோ, அது மாதிரி I’m Fan of Mani Sir Movies சொல்றது ஃபஷனா போச்சு..

People try to prove they are right but never try to prove others are wrong because they are into a mindset, X is great, untouchable, commenting against him/her is a sin :)

Anonymous said...

பூனே சென்றும் மக்கள் சேவையை செவ்வனே செய்யும் கார்த்திக் வாழ்க :)

படத்த இன்னும் பாக்கல... அதனால நோ கமெண்டிங்

/*பிசா, பர்கர் சாப்பிடுறது எப்டி UBER COOLன்னு காட்டிக்றாங்களோ, அது மாதிரி I’m Fan of Mani Sir Movies சொல்றது ஃபஷனா போச்சு.. */


கரெக்டா சொல்லிட்டப்பா... ராவணனுக்கு அடுத்த ஷோ டிக்கெட் ஃப்ரீயா கொடுங்கப்பா இவருக்கு..

Suganya said...

exactly..was not satisfied at all..Kodutha hypeku romba kammi

Divyapriya said...

super karthik...sema review. last para chance ye illa :)

Blogger templates

Custom Search