Sunday, 2 May 2010

சுறா - வேக(மா)வே இல்ல

சுறா- உங்க மொக்க எங்க மொக்க இல்ல, சூற மொக்க.. அசுர மொக்க. அதுனால தான் என்னமோ படத்துக்கு சுறான்னு வச்சிட்டாங்க.. இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..

 
புதுசா புதுசா இருக்கா?

எல்லாரும் சுறா எங்க தேடுறாங்க- விஜய் நீந்திக்கிட்டே பறக்குற இண்ட்ரோ- தத்துவ முத்துக்கள் சிதறியிருக்கும் பாட்டு-விஜய்யோட லட்சியம்-காமெடி சீன்-ஹீரோயின் இண்ட்ரோ- ஹீரோயின்-விஜய்-வடிவேலு மொக்க காமெடி-வில்லன் இண்ட்ரோ- பாட்டு-ஃபைட்டு-லட்சியத்துக்கு தடையா இருக்குற வில்லனுக்கு சவால்.. இத பாக்குற நமக்கு முட்டிட்டு  நிக்குது; நான் ஆத்திரத்த சொன்னேன்.. அப்றோம் விஜய் கோட்டு, கண்ணாடி போட்டு கெட்-அப் மாற்றி பழிவாங்குறாரு.. நடுவுல கோடைக்கால சுற்றுலாக்கு வர மாதிரி தமன்னா டான்ஸ் ஆடிட்டு போறாங்க-அப்றோம் விஜய் போற்றி ஆளுக்கொரு டயலாக்குன்னு நம்ப உசுர வாங்குறாங்க… வழக்கம்போல சண்ட-க்ளைமாக்ஸ்ன்னு படம் முடியுது..
 
 
சுறா மேனரிசம்ஸ்:
 
விஜய் இன்னும் இது மாதிரி ஒரு 3 படம் நடிச்சா தமிழ்நாட்டு மக்கள் தொகைல்ல பாதி குறஞ்சிடும் (மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு).. படத்துல புதுசா என்ன இருக்குன்னு கேட்டா அவர் போட்டுருக்குற செயின்.. போன படத்துல பண்ண மாதிரி கர்சீப், கருப்பு கோட்டு, ஃபாரின் காரு, கண்ணாடின்னு பழய பஞ்சாகத்த பாடிட்டு இருக்காரு.. கருகுனாலும் பரவாயில்லன்னு சுட்டுக்கிட்டே இருக்காரு… ஆனா பாவம் மாவு தான் இல்ல... நடந்தா சுனாமி வருதாம், சூறாவளி வருதாம்—பாக்குற நமக்கு தலவலி தான் வருது… வழக்கம் போல பல்ல கடிக்குறது, குழந்தைகளை கொஞ்சுறது, மூக்க உறியது, ஹீரோயின் டவுசர தூக்குறது, பட்டக்ஸ்ஸ தொடுறது, கைய ஆட்டி காமெடின்னு வாய்ஸ் மாடுலேசன்ல குழஞ்சி பேசுறது, பிதாமகன் விக்ரம் மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு டயலாக் சொல்லுறதுன்னு கொடும படுத்துறாரு.. அவர் பாணியில “என் படத்த பாக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு பாரு.. ஏனா ஒரு தடவ புக் பண்ணிட்டனா அப்றோம் யோசிக்க முடியாது”

 
தமன்னா-கம்முன்னா, துணி எல்லாம் கம்மின்னா: 
தமன்னா அதே லூசு ஹீரோயின், அவங்க ஃபெமிலியும் அதே மாதிரி.. விஜய் பேனா வாங்குன உடனே லவ் வந்துடுச்சாம்.. இது மாதிரி பொண்ணுங்க நான் படிச்ச ஸ்கூல்ல இருந்துருக்கலாம்.. பாட்டுல்ல தாராளம், பையா விட இதுல ட்ரெஸ் இன்னும் குறைச்சல்.. இதுக்கு பேசாம முமைத் கான், மும்தாஜ், ரகசியாவ ஹீரோயின்னா போட்டுருக்கலாம்.. அவங்களும் இதே தான் செய்றாங்க.. ஆ சாங்கு சாங்கு.. அப்றோம் தூங்கு தூங்கு..
 
 
சார் சப்ப காமெடி சார் நீங்க: 
வில்லன் இவருக்கும் நடிப்பும் வரல, லிப்-சிங்க்கும் வரல.. அப்டியே டெலுகு தேசத்துலு செட்டில் காரு, தமிழ் பிலிமிலு ஆக்டிங் பெர்பாமன்ஸ் சேவை போதும் காரு.. யார் படத்துல வர பேய் பொம்ம மாதிரி வாய மேல, கீழ் தான் ஆட்டிட்டே இருக்காரு.. ஊ, ஆ தவிர அங்க ஒண்ணும் காணோம்.. வேட்டைக்காரன் மாதிரி நிறய வில்லன்ஸ் இல்ல, அது ஒரே ஆறுதல்.. இவரோட அடியாட்கள் இன்னும் காமெடி.. லைன்னா வந்து விஜய் கிட்ட அடி வாங்குறாங்க.. தீபாவளி ராக்கெட்க்கும், ராக்கெட் லான்ச்சருக்கும் வித்தியாசம் தெரியாத பசங்களா இருக்காங்க..
 
 
கடிவேலு:
 
வடிவேலு காமெடின்னு மொக்கய போட, விஜய் மொக்கன்னு காமெடி போட, நாமளும் ஒரு குட்டி தூக்கம் போடலாம்.. வேட்டைக்காரன் முதற்பாதில்ல காமெடி பரவாலைய்யா இருந்துச்சு.. இந்த படத்துல எப்படா இடைவேளை வரும்ன்னு காக்க வச்சிட்டாங்க..
 
 
பாட்டு-அதிர்வேட்டு:
 
படத்துல நல்லா இருந்த ஒரே விஷயம்- பாட்டு, டான்ஸ், ரெண்டாவது ஃபைட்.. கண்ண கூச வைக்குற ட்ரெஸ் அவ்வளவா இல்ல.. அறிமுக சாங் குத்து டைப்பா இல்லாம புதுசா இருந்துது.. பொம்மாயி, நான் நடந்தால் அதிரடி டான்ஸ் பட்டய கிளப்பிட்டாரு.. இதயே வச்சு கடைய எத்தன நாளைக்கு ஓட்ட போறீங்க? பேசாம டான்ஸ், சாங் சம்பந்தப்பட்ட படமா நடிங்க- சலங்கை ஒலி, STEP UP-2 மாதிரி.. இல்லன்னா விஜய் ஜோசப் ஜாக்சன்னு ஆல்பம் ரீலிஸ் பண்ணுங்க.. (Thriller, Dangerous, Blood on the Floor- டைட்டில் கூட பொருத்தமா இருக்கு) 
 
 
டை-லாக் (DIELOCK):
 
கலெக்டர் முதற்கொண்டு ஊர்மக்கள் வரை எல்லாரையும் பஞ்ச் டையலாக் பேச வச்சிட்டாரு வசனகர்த்தா.. வலையில சிக்க எறா இல்லடா சுசுசுசுசுசுசுசுசுர்ர்ர்ர்ர்ர்றா, இவன் பார்த்தா கடல்லே பத்திகிட்டு எரியும், என்கூட இருக்குறவங்க சின்னப்பசங்க இல்ல, சிங்கக்குட்டி, சிறுத்தக்குட்டி (கவுண்டமணி ஜெயிந்த் காமெடி பூனைக்குட்டி தான் ஞாபகம் வந்துச்சு) மனசுல பதியுற மாதிரி வசனங்களை எழுதி இருக்காரு.. அரசியல் பிரசவத்துக்கு, சே சே பிரவேசத்துக்கும் அங்கிட்டு இங்கிட்டுன்னு கொஞ்சம் இருக்கு..

 
அடுத்து என்ன?

யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல நான் இப்டி தான் நடிப்பேன்னு முடிவோட இருக்குறவர என்ன சொல்றது.. நாலு மாசம் தூங்கமாட்டன்னு பாடுறாரு.. இப்டி நாலு மாசத்துக்கு ஒரு படத்த கொடுத்து நம்பள தூங்கவுட மாட்டேங்குறாரு.. இந்த படம் குப்பைன்னு குப்பத்தொட்டில போட்டா அதுக்கே அசிங்கம்.. திரும்ப திரும்ப அதயே செஞ்சிட்டு இருக்காரு.. பாக்குற நமக்கு போர் அடிக்குற மாதிரி, இவருக்கு போர் அடிக்கவே அடிக்காதா? அதுக்கு பழய படங்களோட சீன்ஸ் எடுத்து ஒரு படமா ரிலிஸ் பண்ணுங்க..


விஜய் இந்த படத்த பத்தி என்ன நினைக்குறீங்க?

ஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க.. YOU-TUBE, MUSIC CHANNELS இதுல பாட்டு போடுவாங்க.. அத மட்டும் பாருங்க.. அதையும் மீறி பாப்பேன்னா எனக்கென்ன, பாருங்க.. அப்றோம் என்ன மாதிரி தலவலியோட Review எழுதாத வரைக்கும் நல்லது..
 
இதுக்கு பூச்செண்டு ஒண்ணு தான் குறைச்சல்.. போயா கடுப்ப கிளப்பிட்டு..

 
சுறா- ஆள விட்றா
 
டிஸ்கி: புது வலைப்பூ- வருகை தாங்க- தங்கலீஸ்
 
வருகைக்கு நன்றி!! 

6 comments:

kanagu said...

/*மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு*/

விமர்சனம் நல்லா இருந்துது... ஆனா இந்த வரிய கண்ணாபின்னா-னு கண்டிக்கிறேன்...

பூனே போயும் மொக்க வாங்குற உங்க திறமைய என்னன்னு சொல்ல...

காவல்காரன் கிட்டயாவது சிக்காம தப்பிக்க பாருங்க....

Chitra said...

ஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க..


....:-)

தாரணி பிரியா said...

பூனா போனாலும் தேடி பிடித்து பல்ப் வாங்கற திறமை எங்க இருந்து உங்களுக்கு வந்தது

Karthik said...

Jooper review thala! :)

//இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..

Haha. :))))

Anonymous said...

உண்மைய‌ சொன்ன‌துக்கு ரொம்ப‌ ந‌ன்றி

GAYATHRI said...

appaaaaaade nimmmmmmmmadhiya irku:D:D:D:D:D

Blogger templates

Custom Search