Tuesday, 11 May 2010

கவி-Dieஅருண்: ஒரு மாலை இலவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ஸட்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்


கார்த்திக்: என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு, Dailyum தான் அனுஷாவ பாக்குற.. என்னிக்கும் இல்லமா இன்னிக்கு எதுக்கு Song?

அருண்:
மச்சி.. அனுஷா இன்னிக்கு என்ன பண்ணா கேட்டா நீ Fire-Stationக்கு போன போடுவடா..

கார்த்திக்:
ஏன்டா? நம்ப ரூம கொழுத்த போறாளா?

அருண்:
நா சொன்னது உன்னோட Stomach-Burning அணைக்கடா வெண்கலம்..

கார்த்திக்:
அடத்தூ.. மேட்டர சொல்லு

அருண்:
நா ஃபூட்-பால் க்ரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தேன்டா

கார்த்திக்:
டேய்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.. உனக்கு ஃபூட்-பால் தெரியுமா?

அருண்:
போன வாரம் நாம மைலோ வாங்குனதுக்கு ஃப்ரீயா கொடுத்தாங்களே..

கார்த்திக்:
டேய்.. அது வாலி-பால்டா.. இப்போ தான் புரியுது எப்புடி அந்த பால் மூணு நாள்ல கிழிஞ்சிடுன்னு.. போனா போகட்டும், You Continue..

அருண்:
நா வேடிக்க தான்டா பார்த்தேன்.. ஒரு கால் குறையுது வரியானு ரமேஷ் கேட்டான்.. அதுனால போய் ஆடுனேன்.. எனக்கும் ஃபூட்-பால் தெரியும்டா..

கார்த்திக்:
Chelsea தெரியுமா?

அருண்:
ராபர்ட்டோட ஃபிகருடா.. சப்ப ஃபிகரு, ஆனா அநியாயத்துக்கு சீன போடுவா..

கார்த்திக்:
டேய்.. Gerrard தெரியுமா?

அருண்:
ECE சீனியர்? அவனும் அனுஷாவ ட்ரை பண்றானா? மச்சி நீ தான்டா ஹெல்ப் பண்ணனும்..

கார்த்திக்:
அடத்தூ.. உன்கிட்ட கேட்டேன் பாரு..

அருண்:
மச்சி.. கேளுடா.. அப்போ அனுஷா வந்து என்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தனியா கூப்டா.. நானும் அவளும் கிறுக்கல் மரத்துக்கு பின்னாடி போனோம்..

கார்த்திக்:
போயி...

அருண்:
அவ சொன்னா எவ்வளவு நேரம் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு தான் மொதல்ல கொடுக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்னு சொல்லி வெக்கத்தோட சிரிச்சா..

கார்த்திக்:
டேய்.. கில்லாடிடா நீ.. தந்தாளா?

அருண்:
ஆமா.. தந்தா..

கார்த்திக்:
எங்க? left or right?

அருண்:
டேய்.. பீசாங்கைல எப்டிடா வாங்குறது? Rightல தான்..

கார்த்திக்:
இத்தன நாள் நா தான் பொண்ணுங்க விஷயத்துல கில்லாடின்னு நினச்சேன்.. ஆனா நீ தான்டா உண்மையான ஜலபுலஜன்க்ஸ்.. இன்னும் ரெண்டு நாளைக்கு அந்த Right Handa கழுவ மாட்ட..

அருண்:
ஏன்டா?

கார்த்திக்:
அவ முத்தம் தந்தால..?

அருண்:
முத்தமா?

கார்த்திக்:
அப்போ இல்லயா?

அருண்:
நா முத்தம் தந்தான்னு சொல்லவே இல்லயே?

கார்த்திக்:
அட நாயே நீ கொடுத்த பில்ட்-அப்க்கு நா என்னமோ imagine பண்ணேனே.. இப்டி பொத்துனு போட்டுட்டியே?

அருண்:
அவ மேரேஜ்- இன்விடேஷன் தந்தாடா..

கார்த்திக்:
என்னது? அதுக்குள்ள கல்யாணமா?

அருண்:
23 வயசு ஆச்சுடா.. சின்ன வயஸா என்ன?

கார்த்திக்:
டேய்.. அப்போ இவ்ளோ நாளு வயஸு பெரிய பொண்ணயா லவ் பண்ணிட்டு இருந்த? எத்தன வருஷம் எந்தெந்த க்லாஸ்ல பேஸ்மெண்ட் போட்டா?             
 

அருண்: ஷப்பா.. எல்லாத்தயும் அரகொறையா கேக்குறதே உனக்கு வேலயா போச்சு.. கல்யாணம் அவ அக்காக்கு..

கார்த்திக்:
ஓ.. அவங்க அக்கா வேற இருக்குறால அவங்கொக்கா..

அருண்:
என்ன Chief-Guestஆ Invite பண்ணிருக்காடா..

கார்த்திக்:
ஆமா.. நீ தான் சீப்பா கிஃப்ட் தருவ.. அதுனால போல..

அருண்:
மொக்க மண்டையா..

கார்த்திக்:
பின்ன இது என்ன 500 பேருக்கு இலவச திருமணமா இல்ல விருது வழங்கும் விழவா Chief-Guestஆ கூப்ட..

அருண்:
ஸாரிடா, டங்க்-ஸ்லிப் ஆகிடிச்சு.. பத்திரிக்கைல முதல் தடவையா பேர பாக்குறேனா.. அதான்..

கார்த்திக்:
கொய்யால.. பெறுநர்ல பேரு வந்ததுக்கே இந்த ஆட்டமா? மாப்பிள்ளையா உன் பேரு வந்தா புடிக்க முடியாது போல.. ஆனா ஒரு ஐடியா..

அருண்:
கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்குறதுன்னா?

கார்த்திக்:
இல்லடா, இப்போ அனுஷா அக்காக்கு கல்யாணம்னா அவளுக்கு ரூட் க்ளியர் ஆகிடிச்சு.. இப்போ அந்த ரூட்ல நாம காதல் வண்டிய ஒட்டணும்டா..

அருண்:
நாமலா? டேய்.. உன் மனசுல இந்த ஆச வேற இருக்கா?

கார்த்திக்:
ஒரு ஃப்லோல சொல்டேன்டா.. கிருஷ்ணர் எப்பிடி அர்ஜுணர்க்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்தாரோ அது மாதிரி உன் காதலுக்கு நா இருக்கேன்டா..

அருண்:
சரி ஐடியாவ சொல்லு..

கார்த்திக்:
பொண்ணுங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் Snacks, Pizza, நகை, ட்ரெஸ், பொம்ம, Cute Heroes அப்றோம்.... கவிதை..

அருண்:
ஸோ நாம என்ன பண்ண போறோம்?

கார்த்திக்:
அவளுக்கு கவிதையா ஒரு லவ் லெட்டர் எழுதலாம்டா.. லவ் லெட்டர்..

அருண்:
மச்சி வேணும்னா அந்த முன்னாடி சொன்ன Snacks, Pizza, பொம்ம ட்ரை பண்ணலாம்டா.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்றத விட்டுட்டு தெரியாத விஷயங்கள எதுக்கு பண்ணனும்?

கார்த்திக்:
இது தான்டா பெரிய சக்ஸஸ் ஆகும்..

அருண்:
கல்யாண பத்திரிக்கைல பேர் வந்துச்சுன்னு சந்தோசப் பட்டேன்.. ஆன இப்போ நீ கொடுக்குற Ideaல கருமாரி பத்திரிக்கைல பேர் வரும் போல இருக்கே.. அப்றோம் கண்ணீர் அஞ்சலில என் ஃபோட்டோவ நடுவுல போட்டு காலேஜ் ஃபுல்லா ஒட்டுவாங்கடா.. இது வேணாம்..

கார்த்திக்:
டேய் பயந்தவனுக்கு பொக்க ஃபிகர் கூட மடியாதுன்னு வள்ளுவர் சொல்லிருக்கார்டா..


அருண்:
அவர் 1330 சொல்லுவாருடா.. எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுடா.. ஸ்கூல்ல நா மனப்பாட பாடல் எழுத சொன்னாலே முழிச்சிட்டு இருப்பேன்.. கவிதைலா?

கார்த்திக்:
நா எதுக்குடா இருக்கேன்..

அருண்:
நீ கவிதை எழுதுவியாடா?

கார்த்திக்:
மச்சி.. எனக்குல்ல ஆயிரம் திறமைகள் ஒழிந்து இருக்குடா..இனிமேல் ஒண்ணு ஒண்ணா உனக்கு காட்ட போறேன்.. 

2 மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த அறையில் எங்கும் காகித குவியல்கள்.. கார்த்திக் வாயில் பேனாவை வைத்து எதோ யோசித்து கொண்டுருக்க, அருண் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டுருக்கிறான்


கார்த்திக்:
அன்க்க்க்..

அருண்:
என்னடா..

கார்த்திக்:
அது இல்லடா..

அருண்:
டேய்.. இது என்ன எக்ஸாம் பேப்பராடா? இப்டி மறச்சு மறச்சு எழுதுற? என்ன எழுதுறன்னு காட்டுடா..

கார்த்திக்:
மச்சி.. கற்பனை குதிரைல பயனிக்கும் போது லிஃப்ட் கேட்டு Disturb பண்ணாதடா..

அருண்:
டேய்.. டேய்.. நா முத்துக்குமார் மச்சான் மாதிரியே பேசாதடா
 
5 நிமிடங்கள் கழித்து

கார்த்திக்:
முடிச்சிட்டேன்டா..

அருண்:
என்னடா இங்கிலிஷ்ல எழுதிருக்க?

கார்த்திக்:
இப்போல்லா எந்த பொண்ணுடா தமிழ் கவிதை படிக்கிறாங்க?? நீ எப்டி இருக்குனு சொல்லு..
 
Once I dreamt of playing See-saw
And you were with me Anusha
Your childish speech is as sweet as Badushah
To hear this I will drop my jaw
 

அருண்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....

கார்த்திக்:
மச்சி கீழ படிடா
 
Anusha you are my heart-beat
I swear I wont cheat
Sooner or later we will meet 
Then I will sweep you off your feet

அருண்:
மச்சான்ன்ன்ன்ன்ன்....


கார்த்திக்:
எப்புடி?
 
I cant wait till Valentine's day
I Love you is what I want to Say
I love you Anusha 
Come let us play See-saw

கார்த்திக்:
ஏன் மச்சா கண் கலங்கிருக்கு? ஓஓ.. நமக்காக இவ்லோ பண்றானேன்னு ஆனந்த கண்ணீரா?

அருண்:
டேய்.. இதலா ஒரு கவிதைன்னு என்ன படிக்க வச்சிட்டியேடா.. சொரி நாயே..

கார்த்திக்:
ஏன்டா புடிக்கலயா.. கவிதைல எதாவது Changes?

அருண்:
டேய்.. இத கவிதைன்னு சொல்றத நிறுத்து.. அசிங்கமா திட்டிட போறேன்.. அவள கரெக்ட் பண்ண ஐடியா தாடான்னு கேட்டேன், இத அவகிட்ட கொடுத்து ரெட் பென்ல கரெக்ட் பண்ண கேக்கல.. யோசிச்சேன்டா.. எனக்குல்ல ஆயிரம் திறமை ஒழிஞ்சு இருக்கு சொல்லும் போதே யோசிச்சேன்.. அது ஒழிஞ்சே இருக்கட்டும், வெளிய காட்டாத..

கார்த்திக்:
மக்சி.. உனக்கு Poem types தெரியுமா? இது Englishல Rareஅ எழுதுற Genreடா.. First ரெண்டு லைன்ல கடசி வார்த்தை கடசி ரெண்டு லைன்ல கடசி வார்தையா வருது பாருடா.. இதெல்லம் எழுத டலென்ட் வேணும்..

அருண்:
டேய்.. ஓடிடு அப்றோம் உனக்கு கண்ணீர் அஞ்சலி அடிக்க வேண்டி இருக்கும், இத கசக்கி..

கார்த்திக்:
மச்சி.. வேணாம்டா..

அருண்:
கசக்கி குப்ப தொட்டில போட மாட்டேன்டா.. அப்டி கசக்கி போட்டா குப்ப தொட்டிக்கே அசிங்கம்..

கார்த்திக்:
மச்சி வேணா Greeting-card?

அருண்:
எனக்கு லவ்வே வேணாம்டா.. வருகைக்கு நன்றி!!

Sunday, 2 May 2010

சுறா - வேக(மா)வே இல்ல

சுறா- உங்க மொக்க எங்க மொக்க இல்ல, சூற மொக்க.. அசுர மொக்க. அதுனால தான் என்னமோ படத்துக்கு சுறான்னு வச்சிட்டாங்க.. இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..

 
புதுசா புதுசா இருக்கா?

எல்லாரும் சுறா எங்க தேடுறாங்க- விஜய் நீந்திக்கிட்டே பறக்குற இண்ட்ரோ- தத்துவ முத்துக்கள் சிதறியிருக்கும் பாட்டு-விஜய்யோட லட்சியம்-காமெடி சீன்-ஹீரோயின் இண்ட்ரோ- ஹீரோயின்-விஜய்-வடிவேலு மொக்க காமெடி-வில்லன் இண்ட்ரோ- பாட்டு-ஃபைட்டு-லட்சியத்துக்கு தடையா இருக்குற வில்லனுக்கு சவால்.. இத பாக்குற நமக்கு முட்டிட்டு  நிக்குது; நான் ஆத்திரத்த சொன்னேன்.. அப்றோம் விஜய் கோட்டு, கண்ணாடி போட்டு கெட்-அப் மாற்றி பழிவாங்குறாரு.. நடுவுல கோடைக்கால சுற்றுலாக்கு வர மாதிரி தமன்னா டான்ஸ் ஆடிட்டு போறாங்க-அப்றோம் விஜய் போற்றி ஆளுக்கொரு டயலாக்குன்னு நம்ப உசுர வாங்குறாங்க… வழக்கம்போல சண்ட-க்ளைமாக்ஸ்ன்னு படம் முடியுது..
 
 
சுறா மேனரிசம்ஸ்:
 
விஜய் இன்னும் இது மாதிரி ஒரு 3 படம் நடிச்சா தமிழ்நாட்டு மக்கள் தொகைல்ல பாதி குறஞ்சிடும் (மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு).. படத்துல புதுசா என்ன இருக்குன்னு கேட்டா அவர் போட்டுருக்குற செயின்.. போன படத்துல பண்ண மாதிரி கர்சீப், கருப்பு கோட்டு, ஃபாரின் காரு, கண்ணாடின்னு பழய பஞ்சாகத்த பாடிட்டு இருக்காரு.. கருகுனாலும் பரவாயில்லன்னு சுட்டுக்கிட்டே இருக்காரு… ஆனா பாவம் மாவு தான் இல்ல... நடந்தா சுனாமி வருதாம், சூறாவளி வருதாம்—பாக்குற நமக்கு தலவலி தான் வருது… வழக்கம் போல பல்ல கடிக்குறது, குழந்தைகளை கொஞ்சுறது, மூக்க உறியது, ஹீரோயின் டவுசர தூக்குறது, பட்டக்ஸ்ஸ தொடுறது, கைய ஆட்டி காமெடின்னு வாய்ஸ் மாடுலேசன்ல குழஞ்சி பேசுறது, பிதாமகன் விக்ரம் மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு டயலாக் சொல்லுறதுன்னு கொடும படுத்துறாரு.. அவர் பாணியில “என் படத்த பாக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு பாரு.. ஏனா ஒரு தடவ புக் பண்ணிட்டனா அப்றோம் யோசிக்க முடியாது”

 
தமன்னா-கம்முன்னா, துணி எல்லாம் கம்மின்னா: 
தமன்னா அதே லூசு ஹீரோயின், அவங்க ஃபெமிலியும் அதே மாதிரி.. விஜய் பேனா வாங்குன உடனே லவ் வந்துடுச்சாம்.. இது மாதிரி பொண்ணுங்க நான் படிச்ச ஸ்கூல்ல இருந்துருக்கலாம்.. பாட்டுல்ல தாராளம், பையா விட இதுல ட்ரெஸ் இன்னும் குறைச்சல்.. இதுக்கு பேசாம முமைத் கான், மும்தாஜ், ரகசியாவ ஹீரோயின்னா போட்டுருக்கலாம்.. அவங்களும் இதே தான் செய்றாங்க.. ஆ சாங்கு சாங்கு.. அப்றோம் தூங்கு தூங்கு..
 
 
சார் சப்ப காமெடி சார் நீங்க: 
வில்லன் இவருக்கும் நடிப்பும் வரல, லிப்-சிங்க்கும் வரல.. அப்டியே டெலுகு தேசத்துலு செட்டில் காரு, தமிழ் பிலிமிலு ஆக்டிங் பெர்பாமன்ஸ் சேவை போதும் காரு.. யார் படத்துல வர பேய் பொம்ம மாதிரி வாய மேல, கீழ் தான் ஆட்டிட்டே இருக்காரு.. ஊ, ஆ தவிர அங்க ஒண்ணும் காணோம்.. வேட்டைக்காரன் மாதிரி நிறய வில்லன்ஸ் இல்ல, அது ஒரே ஆறுதல்.. இவரோட அடியாட்கள் இன்னும் காமெடி.. லைன்னா வந்து விஜய் கிட்ட அடி வாங்குறாங்க.. தீபாவளி ராக்கெட்க்கும், ராக்கெட் லான்ச்சருக்கும் வித்தியாசம் தெரியாத பசங்களா இருக்காங்க..
 
 
கடிவேலு:
 
வடிவேலு காமெடின்னு மொக்கய போட, விஜய் மொக்கன்னு காமெடி போட, நாமளும் ஒரு குட்டி தூக்கம் போடலாம்.. வேட்டைக்காரன் முதற்பாதில்ல காமெடி பரவாலைய்யா இருந்துச்சு.. இந்த படத்துல எப்படா இடைவேளை வரும்ன்னு காக்க வச்சிட்டாங்க..
 
 
பாட்டு-அதிர்வேட்டு:
 
படத்துல நல்லா இருந்த ஒரே விஷயம்- பாட்டு, டான்ஸ், ரெண்டாவது ஃபைட்.. கண்ண கூச வைக்குற ட்ரெஸ் அவ்வளவா இல்ல.. அறிமுக சாங் குத்து டைப்பா இல்லாம புதுசா இருந்துது.. பொம்மாயி, நான் நடந்தால் அதிரடி டான்ஸ் பட்டய கிளப்பிட்டாரு.. இதயே வச்சு கடைய எத்தன நாளைக்கு ஓட்ட போறீங்க? பேசாம டான்ஸ், சாங் சம்பந்தப்பட்ட படமா நடிங்க- சலங்கை ஒலி, STEP UP-2 மாதிரி.. இல்லன்னா விஜய் ஜோசப் ஜாக்சன்னு ஆல்பம் ரீலிஸ் பண்ணுங்க.. (Thriller, Dangerous, Blood on the Floor- டைட்டில் கூட பொருத்தமா இருக்கு) 
 
 
டை-லாக் (DIELOCK):
 
கலெக்டர் முதற்கொண்டு ஊர்மக்கள் வரை எல்லாரையும் பஞ்ச் டையலாக் பேச வச்சிட்டாரு வசனகர்த்தா.. வலையில சிக்க எறா இல்லடா சுசுசுசுசுசுசுசுசுர்ர்ர்ர்ர்ர்றா, இவன் பார்த்தா கடல்லே பத்திகிட்டு எரியும், என்கூட இருக்குறவங்க சின்னப்பசங்க இல்ல, சிங்கக்குட்டி, சிறுத்தக்குட்டி (கவுண்டமணி ஜெயிந்த் காமெடி பூனைக்குட்டி தான் ஞாபகம் வந்துச்சு) மனசுல பதியுற மாதிரி வசனங்களை எழுதி இருக்காரு.. அரசியல் பிரசவத்துக்கு, சே சே பிரவேசத்துக்கும் அங்கிட்டு இங்கிட்டுன்னு கொஞ்சம் இருக்கு..

 
அடுத்து என்ன?

யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல நான் இப்டி தான் நடிப்பேன்னு முடிவோட இருக்குறவர என்ன சொல்றது.. நாலு மாசம் தூங்கமாட்டன்னு பாடுறாரு.. இப்டி நாலு மாசத்துக்கு ஒரு படத்த கொடுத்து நம்பள தூங்கவுட மாட்டேங்குறாரு.. இந்த படம் குப்பைன்னு குப்பத்தொட்டில போட்டா அதுக்கே அசிங்கம்.. திரும்ப திரும்ப அதயே செஞ்சிட்டு இருக்காரு.. பாக்குற நமக்கு போர் அடிக்குற மாதிரி, இவருக்கு போர் அடிக்கவே அடிக்காதா? அதுக்கு பழய படங்களோட சீன்ஸ் எடுத்து ஒரு படமா ரிலிஸ் பண்ணுங்க..


விஜய் இந்த படத்த பத்தி என்ன நினைக்குறீங்க?

ஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க.. YOU-TUBE, MUSIC CHANNELS இதுல பாட்டு போடுவாங்க.. அத மட்டும் பாருங்க.. அதையும் மீறி பாப்பேன்னா எனக்கென்ன, பாருங்க.. அப்றோம் என்ன மாதிரி தலவலியோட Review எழுதாத வரைக்கும் நல்லது..
 
இதுக்கு பூச்செண்டு ஒண்ணு தான் குறைச்சல்.. போயா கடுப்ப கிளப்பிட்டு..

 
சுறா- ஆள விட்றா
 
டிஸ்கி: புது வலைப்பூ- வருகை தாங்க- தங்கலீஸ்
 
வருகைக்கு நன்றி!! 

Blogger templates

Custom Search