Sunday, 18 April 2010

லொல்லு சொல்லு

பதிவுலகில் சுறுசுறுப்பா வெட்டிவேலையில் இருந்த நான் வேலைவெட்டி கிடைத்ததால் புனேவில் இருக்கிறேன்.. வாரம் ஒரு பதிவு எழுதமுடியாத நிலை.. அதை ஈடு செய்ய இப்புதுமுயற்சி- லொல்லு சொல்லு.. பதிவு போட முடியாத, மூளையில் பொறி தட்டாத நேரத்தில் புனேவில் என்ன நடக்கிறதோ அதை எழுத போகிறேன்.


 
சென்னை அளவுக்கு இங்கே வெயில் இல்லை.. காலை முதல் மாலை வரை ஏ.சி.யில் இருப்பதும் ஒரு காரணம்.. சாப்பாடும், மொழியும் பிரச்சனையாக இருக்கிறது.. கொஞ்சம் சமையல் கத்துருக்கலாம். BETTER LATE THAN NEVER. ஹிந்தியில் பேசினாலும் அவர்கள் மராத்தியில் பதிலிளிக்கிறார்கள்.. நம்ப ஊர் பீட்டர் பெண்கள் கவனிக்க.. சில நாட்களுக்கு முன் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது கரப்பான்பூச்சியை துரத்த, அது அசையாமல் அங்கேயே இருந்தது.. ம்ம்ம்ம்ம்.. இந்த ஊரு பூச்சி கூட மராத்தில பேசுனா தான் ரெஸ்பாண்ட் பண்ணும் போல.. இந்த ஊரில் மறக்க முடியாத/கூடாத பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றி வரும் பதிவில்..


விலை மலிவான செட்-டாப் பாக்ஸ் வாங்கியதன் விளைவு- தமிழில் ஜெயா டி.வி, கே டி.வி, சன் டி.வி மட்டுமே ஒளிபரப்பாகின்றது. எனவே எங்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா. ஆனா தமிழ் படம் ஒரே காட்சி, அதுவும் இரவு காட்சியாக இருப்பதால் எப்படா வெள்ளி, சனிக்கிழமை வரும்னு காத்திருக்க வேண்டியுள்ளது. தீராத விளையாட்டுப்பிள்ளை, விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு பார்த்தேன். SMS மாதிரி தீ.வி.பி நல்ல டைம்-பாஸ் படமாக இருந்தது.. ஹீரோயின்களை மாற்றிருந்தால் இன்னும் தூக்கலா இருந்துருக்கும்.. லாஜிக்லா பாக்காம பார்த்தா ONE TIME WATCHABLE... வி.தா.வ சிம்புவுக்கு கிடைத்த புதுவாழ்வு.. நல்லா பண்ணிருந்தாரு.. படத்துல க்ளைமாக்ஸ் தான் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு- SHOCKINGLY DIFFERENT. த்ரிஷா கொஞ்சம் ரொம்ப அழகா தெரிஞ்சாங்க... சூப்பருன்னு சொல்ல முடியாது, அதே நேரம் சுமார்ன்னும் சொல்லமுடியாது.. ரெண்டுக்கும் இடையில்..
 
 
அங்காடித்தெரு இன்னும் மனசுலேயே இருக்கு.. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை” பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஹீரோயின் அஞ்சலி சாலப்பொருத்தமாக இருந்தாங்க.. TAMIL MA WAS AN INDICATION BUT ANGAADI THERU IS A REVELATION… விருதுகள் வாங்கிக்கொள்ள இப்பவே தயராக இருங்க.. கமல் சொல்வது போல “இதெல்லாம் ஒண்ணுமில்லை.. போக வேண்டிய தூரம் ரொம்ப” கவர்ச்சி சாக்கடையில் சிக்கிக்காம நல்லா நடிங்க.. தெரியாத முகங்களை நடிக்கவைத்ததாலேயே மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டது.. சூப்பர்வைசர், ஹீரோ நண்பன் பாண்டி, துணை நடிகர்கள்ன்னு எல்லாரும் நிறைவா வாழ்ந்திருந்தாங்க…


இப்படி நல்ல படங்களா பார்த்து மொக்க படங்கள் பாக்கலன்னா எப்படி? சாமி கண்ண குத்திடும்ல.. அதுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன், தளபதியோட 50வது படம்- சுறா.. படம் மொக்கயா இருக்கும்னு உள்மனசு சொல்லுது.. இருந்தாலும் பழகின ரசிகன் பாவத்துக்கு பாத்து தான் ஆகணும்..


இன்னும் சொல்வேன் 


வருகைக்கு நன்றி!!

8 comments:

Chitra said...

நல்ல பதிவு. அங்காடி தெரு ரசித்து பார்த்து இருக்கீங்க. சுறா வருது, சுறா வருது...... !!!

Vijay said...

அட கார்த்திக் இப்ப பூனே வாசியா???
அங்காடித் தெரு இன்னும் பார்க்க வில்லை. முடிந்தால் அடுத்த வாரம் பார்க்கணும்.

பூனே பற்றி லொள்ளு நக்கல் செய்யாமல் உருப்படியாக புதிதாக எழுதவும் :)

தாரணி பிரியா said...

ஓ பூனா போயாச்சா ? சுறா , ம் நம்பிக்கைதானே வாழ்க்கை நம்புங்க‌ :)

Divyapriya said...

ohh pune poyachaa? super...enjoy...
vtv - trisha romba romba azhagu :)

Karthik said...

பாஸ் சென்னை வரீங்களா? சுறா போவோம்!

டிக்கெட் என்னுது. ட்ரீட் உங்களுது. பழைய டீல். :)

Karthik said...

நீங்க இருக்கற ஊர்ல பூனை ஜாஸ்தியா? :))

kanagu said...

Hindi guy aana peragu tamil padam paaka maateengalo nu nenachen... paravala ungalukku hindi theriyathathu naala paakureenga :D :D

Angadi theru naanum paathen nalla irundhu... :) :)

ethavathu booster plan podunga... appa than matha channel ellam varum...

Surabhi said...

நீங்க இருக்கற ஊர்ல பூனை ஜாஸ்தியா? :))

Blogger templates

Custom Search