Wednesday, 28 April 2010

மாஸ்டர் பிளான்-2

5 .05 - தாத்தா கடைலே மீட்டிங்..

அருண்: டேய்.. அலாரம் ஒழுங்கா வேல செய்யுமான்னே சந்தேகத்துல தூங்கவே இல்ல.. நீ வேற பச்சை தண்ணில குளிக்க வச்சிட்ட.. உடம்புலா நடுங்குது.. என்னதான்டா பிளான்?

கார்த்திக்: இன்னிக்கு என்ன?


அருண்: டேய்.. இதுக்கா காலைலே எழுப்பிவிட்ட?
 
கார்த்திக்: நீ எல்லாம் எப்ப வளர போறியோ?  உனக்கு லவ் ஒன்னு தான் கேடு..
 
அருண்: சாரி மச்சி.. இன்னிக்கு.. இன்னிக்கு...
 
கார்த்திக்: வெள்ளி கிழமை.. அவ காலைலே அவங்க அப்பா-அம்மா கூட கோவிலுக்கு வருவா... நாமளும் போறோம்.. போயி..
 
அருண்: டேய்.. வேணாம்டா.. விட்டா சம்பந்தம் பேசிடுவ போல.. அப்றோம் படிக்கிற வயசுல எதுக்கு உனக்கு லவ்வுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க.. இல்ல கோவில் நடைய சாத்திட்டு நம்பள நல்லா சாத்துவாங்க..  
கார்த்திக்: அடச்சீ.. உனக்குலா அவ்வளவு பில்ட்-அப் கொடுக்க மாட்டேன்டா.. தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட..  என் பிளான் மிஸ் ஆகாதுடா.. இது மூலமா அவளுக்கு உன் மேல ஒரு இது வரும்.. அந்த இத வச்சு நாம  சாரி நீ ஒரு அத டெவலப் பண்ணலாம்..

அருண்: கோவிலுக்கு போனா நல்ல பையன் இமேஜ் கிடைக்கும்.. அதானே உன் ப்ளான்?? அப்றோம் என்ன அம்பியா நினைச்சிட்டா?
 
கார்த்திக்: அம்பியாக பயந்து அவளுக்கு தம்பி ஆகிடாதே.. அவ்ளோ தான் சொல்ல முடியும்..

தாத்தா கடையில் இருந்து அருணின் வண்டியில் கிளம்பி அவர்கள் கோவில் வந்தடைகிறார்கள்..
 
அருண்: டேய்.. பைக்க வேகமா ஓட்டிட்டு வந்துட்ட.. குளிர் தாங்கலடா.. அப்டியே விறைஞ்சி போயிட்டேன்.. போகும் போது சூடா ஒரு காபி வாங்கித்தாடா..
 
அப்போ அனுஷா அவங்க அப்பா-அம்மா கூட வர,
 
அருண்: டேய் டேய்.. அவங்க வராங்க... வாடா போலாம்...
 
கார்த்திக்: மச்சி.. இப்டியே போனோம்னா அவளுக்கு சந்தேகம் வரும்டா... மொதல்ல அவங்க போகட்டும்.. நாம அடுத்து போயி  எதேச்சையா அவள பாக்குற மாதிரி இருக்கணும்...
 
அருண்: சீனு மச்சி.. உன் மூளையே மூளைடா..
 
கார்த்திக்: ரொம்ப கூவாத.. காபி கண்டிப்பா வாங்கி தரேன்.. 

அவர்கள் பின்னாலே சில்லறை பசங்க கோவிலுக்குள் நுழைகிறார்கள்.. அனுஷா பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறாள்..
 
அருண்: மச்சி.. என்னடா பேசவே மாட்டேன்கிறா?
 
கார்த்திக்: இந்த பொண்ணுங்களே இப்டி தான் மச்சி.. மெசேஜ்ல வாய்கிழிய பேசுவாங்க.. நேர்ல பார்த்தா ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க, வீட்ல ஸ்ட்ரிக்ட்ன்னு  சீன  போட வேண்டியது.. நல்ல பொண்ணுங்கன்னு பில்ட்-அப் கொடுப்பாங்க மச்சி..
 
அருண்: எப்டிடா உன்னால மட்டும்?
 
கார்த்திக்: என் அருமை உனக்கு தெரியுது.. மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குது..
 
புர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
கார்த்திக்: டேய்.. என்னடா கோவில்ல வந்து.. கருமம்..
 
அருண்: மச்சி.. மொபைல் வைப்ரேட்சன்டா…
 
1 MESSAGE RECEIVED- ANU
 
Hi. Wassup? To templ nd al?
 
அருண்: என்னடா சொல்றது?
 
கார்த்திக்: உன்ன பாக்க தான் வந்தோம்னு சொல்லிடு
 
அருண்: டேய்,. இது தான் உன் ஐடியாவா? காலங்காத்தால கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றியா?
 
கார்த்திக்: ஹாஹா.. அப்டி டைப் பண்ணி கடசியில  jus kidding yaar, :P, :D சேர்த்துக்கோ.. பொண்ணுங்களுக்கு அது தான்டா பிடிக்கும்..
 
Came 2 see u :P Jus kidding yaar :D
 
MESSAGE SENT
 
DELIVERED TO ANU
 
அருண்: என்னடா ரிப்ளையே வரல? வட போச்சா?
 
கார்த்திக்: பொறுமையா இருடா..
 
அனுவும் அவங்க அப்பா-அம்மாவும் ஒரு இடத்தில் உட்கார, அதுக்கு நேரெதிர் சில்லறை பசங்க அமர்ந்தார்கள்..
 
அருண்: என்னடா பண்றது?
 
கார்த்திக்: பிரசாதம் சாப்டுட்டு கிளம்பலாம்..
 
அருண்: வெண்ண..
 
கார்த்திக்: கொஞ்சம் கம்மியா இருக்குடா பொங்கல்ல..
 
அருண்: டேய் மார்கழி மாசத்துல தெருநாய் கடிய விட உன் கடி தாங்க முடிலடா..
 
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
1 MESSAGE RECEIVED
 
Chalo.. me leaving.. c u n clg..
 
அருண்: டேய்.. போறாங்கடா..
 
கார்த்திக்: இரு இரு.. பின்னாடியே போனா சந்தேகம் வரும்..  அவங்க போகட்டும்.. கொஞ்ச நேரம் கழிச்சு நாம போலாம்..
 
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
Sir busy oh? Nerla pesa bayama?
 
இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்க்க,
 
அருண்: எதுக்கு இந்த மெசேஜ்ன்னு புரிலடா..
 
Apdi la illaiye.. en?
 
புர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்
 
Then u cud hv spoken wit me na? I wud hv introducd u to my mom-dad.. ;)
 
டமார் டமார்..
 
அருண்: இத நான் எதிர்பாக்கல..
 
கார்த்திக்: நானும் தான் மச்சி..
 
அருண்: பேசாதடா.. தப்பா எடுத்துப்பாங்கன்னு சொல்லி சொல்லியே எல்லாமே தப்பா போச்சு.. இதுக்கு கூட வருத்தமில்லடா.. பொண்ணுங்க விஷயத்துல நான் கில்லாடின்னு பேசி பேசியே என்னையும் உன்ன புகழ வச்சிட்டியே.. அத என்னால பொறுத்துக்க முடில…
 
கார்த்திக்: மச்சி.. SOLACE IN SORROW மாதிரி ஒண்ணு நடந்துருக்குடா..
 
அருண்: என்ன?
 
கார்த்திக்: அவ சொன்னால, எங்க அப்பா-அம்மா பாக்குற பையன தான் கட்டிப்பான்னு.. இன்னுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்திருக்கும் போது உன்ன பாத்துக்கிட்டே இருந்தாங்கடா.. Futureல நீ அவகிட்ட Propose பண்ணும் போது, ”அன்னிக்கு கோவில்ல உங்க அப்பா-அம்மா என்ன பார்த்தாங்க.. நீ சொன்ன மாதிரி உங்க அப்பா-அம்மா பார்த்த பையன்ல நானும் ஒருத்தன்.. என்ன கட்டிக்கோ”ன்னு சொல்லிடு.. உன் ஹியுமர்-சென்ஸ்ல மயங்கி ஒத்துப்பாடா.. எப்ப்பூடி?
 
அருண்: இத நீ வேற யாருகிட்டவாது சொல்லிருக்கியா மச்சி?
 
கார்த்திக்: இல்லடா.. நீ தானே என் உயிர்-நண்பன்.. Exclusively for you..
 
அருண்: சொல்லிடாத.. அப்றோம் அவங்க குடும்பத்துல போலிஸ், கோர்ட் வாசல் மெதிக்க வேண்டி இருக்கும்.. எல்லாரும் என்ன மாதிரி அமைதியா இத கேட்டுட்டு உன்ன உயிரோட விடமாட்டாங்க..
 
கார்த்திக்:  என்னடா இப்டி சொல்ட? எவ்ளோ சூப்பரா யோசிச்சி சொன்னேன்?
 
அருண்: டேய்… கோவிலாச்சே பாக்குறேன்… ஆனா ஒண்ணுடா.. உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கோவில் வாசல்லேயே செருப்ப விட்டுட்டு வராங்க..


வருகைக்கு நன்றி!!

Friday, 23 April 2010

மாஸ்டர் பிளான்-1

வானவில் வீதி கார்த்திக், திவ்ய பிரியா அக்கா  தொடர்கதைகள் எழுதுவதைப் பார்த்து எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆசை.. அனால் மொக்கையா போச்சுன்னா என்ன செய்ய? அதான் கொஞ்சம் வித்தியாசமா தொடர்கதை மூலமா என்னோட கதைல வர சீன்ஸ இதுல சொருகிருக்கேன்.. ரெண்டு நண்பர்கள் : கார்த்திக்- அருண்… இவங்க போடுற மொக்க, கடலை, தத்துவம் இது தான் இந்த சீரிஸ். அருண் சின்சியரா லவ் பண்ற பொண்ணு பேரு அனுஷா.. இதுக்கு கார்த்திக் கொடுக்குற ஐடியாஸ்லா என்ன? அதான் சில்லற பசங்க உங்களுக்காக..

அருண்: மச்சி வாழ்கையே கடுப்பா இருக்குடா..

கார்த்திக்: என்னடா ஆச்சு.. ரொம்ப பீல் பண்ற?

அருண்: ஒண்ணும் இல்ல டா..
 
கார்த்திக்: ஓக்கே
 
அருண் திரும்பவும் சோகமாக மாற

அருண்: ஏன் எனக்கு இப்டி நடக்குது?
 
கார்த்திக்: என்ன பெருசா நடந்துச்சு?? 

அருண்: கேக்காத மச்சி..
 
கார்த்திக்: ம்ம்ம்... கேக்கல..

இருவரும் பாய் சுண்டல் கடைக்கு செல்கிறார்கள்.. 
கார்த்திக்: மச்சி.. சூப்பு?
 
அருண்: வேணாம்டா.. நானே சூடா சூப்பு மாதிரி தான் இப்போ இருக்கேன்.. ஒண்ணும் வேணாம்.. 
கார்த்திக்: ஒரு சுண்டல் பாய்.. 
அருண்: டேய்.. எனக்கு?

 
கார்த்திக்: ஒண்ணும் வேணாம் சொன்னல?அருண்: சும்மா பேச்சுக்கு சொன்னேன் மாப்ள.. அதுக்குன்னு..
 
கார்த்திக்: இருவரும் சுண்டல் சாப்பிடுகிறார்கள்…
 
அருண்: ஒருத்தன் சோகமா இருக்கனே.. ஏன்னு கேட்டியா? 
கார்த்திக்: நீ தானே கேக்காதன்னு சொன்ன?
 
அருண்: சும்மா பேச்சுக்கு சொன்னேன் மாப்ள.. அதுக்குன்னு.. 
கார்த்திக்: சொம்ப நாயே..  *^%$@

அமைதி

கார்த்திக்: சாரி மச்சி.. தெரியாம.. 
அருண்: ச்சீ.. விடுறா.. நீ ஏன் பிரெண்ட் தானே.. நீ திட்டாம யாரு திட்டுவா?

 
கார்த்திக்: அதுக்கு சாரி இல்ல மச்சி.. காசு எடுத்து வரதுக்கு பதிலா தெரியாம ஐ.டி. கார்ட் ஜெராக்ஸ் எடுத்து வந்துட்டேன்..

அருண்: நானே ட்ரீட் தரேன்னு சொல்லும் போதே யோசிச்சேன்டா.. இன்னிக்கும் மங்களம் பாடிட்ட.. 
கார்த்திக்: மச்சி.. உன் லவ்வுக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்றேன்.. என்ன போயி? 
அருண்: டேய்.. அவள பத்தி பேசாத..

கார்த்திக்: ஏன்டா என்ன ஆச்சு? மச்சி.. நேத்து நைட் கூட மொக்க போட்டுட்டு இருந்தீங்க?
 
அருண்: டேய்.. விடுறா..  PLEASE CHUCK IT..
 
அமைதி
 
அருண்: இருந்தாலும் அவ அப்டி சொல்லிருக்க கூடாது..

.......................
அருண்:  டேய்.. உன்கிட்ட தான்டா பேசிட்டு இருக்கேன்.. 
கார்த்திக்: அப்டி அவ என்ன சொல்லிட்டா?

அருண்: அத ஏன் கேக் .... 
கார்த்திக்: டேய்.. ஓடிரு.. நான் வியாழக்கிழமை யாரையும் திட்றதில்லை.. 
அருண்: நேத்து மெசேஜ் பண்ணும் போது ஒண்ணு சொல்டா.. 
கார்த்திக்:  என்ன?  
அருண்: சும்மா பேசிட்டு இருந்தோம்.. அப்போ உனக்கு லவ் மேரேஜ்ஜா இல்ல அரேன்ஜ்ட் மேரேஜ்ஜா கேட்டேன்..

கார்த்திக்: சீன் மச்சி.. அப்டியே அவ உன்கிட்ட கேப்பா.. நீ இதான் சான்சுன்னு உன்ன மாதிரி ஒரு பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்க  ஆசைன்னு சொன்னியா?

அருண்: டேய்.. முழுசா கேளுடா.. 

கார்த்திக்: செப்பு
 
அருண்: அவ அவங்க அப்பா-அம்மா பாக்குற பையன தான் கட்டிப்பாலாம்.. 
கார்த்திக்: அடச்சே.. இதுக்கா பீல் பண்ணிட்டு இருக்க.. சப்ப மேட்டர் மச்சி..

அருண்:  எப்டிடா அவங்க வீட்ல??

கார்த்திக்: மச்சி.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.. நிலா உயரமா இருக்குன்னு நினைச்சதால தான் நாம நிலா நிலா ஓடி வான்னு பாடிட்டே நிலா சோறு சாப்பிடுறோம்.. அமெரிக்காகாரன் நினச்சிருந்தா ஆம்ஸ்ட்ராங் நிலவுல கால் வச்சிருக்க முடியுமா?

அருண்:  இப்ப எதுக்குடா இந்த டயலாக்?

கார்த்திக்: டேய்.. பன்ச் சொன்னா ரசிக்கணும் பஞ்ச பரதேசி மாதிரி யோசிக்க கூடாது..

அருண்: சரி.. இப்போ என்ன பண்றது?
 
 கார்த்திக்: இப்ப கேட்டியே அது கேள்வி.. பொண்ணுங்க விஷயத்துல நான் கில்லாடிடா.. உனக்கு அதெல்லாம் புரியாது.. பொண்ணுங்க மைன்ட் DYNAMIC VARIABLES மாதிரி.. RUN-TIMEல தான்டா  முடிவு பண்ண முடியும்.. மொதல்ல நாம எதுவுமே INITIALISE பண்ணல.. அப்றோம் ஏன் கவலை படுற?

அருண்: டேய் சீலு வந்த சிங்காரம்.. கிளாஸ்ல தான் மொக்க போடறாங்கன்னா இங்கேயுமா? 

கார்த்திக்: ப்ரீயா விடு மச்சி.. நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு தாத்தா கடைல இருந்து கிளம்புறோம்.. 

அருண்: எதுக்கு?

கார்த்திக்: டேய்.. கேள்வி கேக்காத.. எல்லாம் உன் லவ்க்கு தான்..

அருண்: மச்சி.. செமஸ்டர் எக்ஸாம் கூட இவ்ளோ சீக்கிரம் எழுந்ததில்ல.. ப்ளான் வேணா சாயங்காலம் வச்சிக்கலாமா?

கார்த்திக்: உனக்கு வாழ்க்கைல கல்யாணமே ஆகாதுடா.. சாமியாரா தான்டா இருப்ப.. அப்டியே ஆனாலும் உனக்கு முதலிரவு..

அருண்: டேய்.. வேணாம்டா.. பிரீயாவே நீ செஞ்சிடுவ போல.. ஆனா இப்போலா சாமியார் தான்டா என்ஜாய் பண்றாங்க.. நித்யமே ஆனந்தமே.. நித்தமே பரமசுகமே.. சீ சீ.. பரஹம்சரே.. 

 
கார்த்திக்: காலைல வரியா வரலையா? ஒரே வார்த்தை ஓஓன்னு வாழ்க்கை.. 
அருண்: வரேன்டா..  காதலுக்காக அவனவன் அமெரிக்கா, கேரளான்னு போறான்.. இதோ இங்க இருக்கு தாத்தா கட.. வந்துட்டா போச்சு..

கார்த்திக்: டேய் பயிருக்கு அடிக்கிற யூரியா மாதிரி இருந்துகிட்டு உனக்கு சூர்யா டயலாக் தேவையா? அலாரம் வச்சிக்கிட்டு  காலைல எழுந்துக்குற வழிய பாரு..


பொறுக்குவார்கள்..


வருகைக்கு நன்றி!!

Sunday, 18 April 2010

லொல்லு சொல்லு

பதிவுலகில் சுறுசுறுப்பா வெட்டிவேலையில் இருந்த நான் வேலைவெட்டி கிடைத்ததால் புனேவில் இருக்கிறேன்.. வாரம் ஒரு பதிவு எழுதமுடியாத நிலை.. அதை ஈடு செய்ய இப்புதுமுயற்சி- லொல்லு சொல்லு.. பதிவு போட முடியாத, மூளையில் பொறி தட்டாத நேரத்தில் புனேவில் என்ன நடக்கிறதோ அதை எழுத போகிறேன்.


 
சென்னை அளவுக்கு இங்கே வெயில் இல்லை.. காலை முதல் மாலை வரை ஏ.சி.யில் இருப்பதும் ஒரு காரணம்.. சாப்பாடும், மொழியும் பிரச்சனையாக இருக்கிறது.. கொஞ்சம் சமையல் கத்துருக்கலாம். BETTER LATE THAN NEVER. ஹிந்தியில் பேசினாலும் அவர்கள் மராத்தியில் பதிலிளிக்கிறார்கள்.. நம்ப ஊர் பீட்டர் பெண்கள் கவனிக்க.. சில நாட்களுக்கு முன் ஒரு ஹோட்டலில் சாப்பிடும் போது கரப்பான்பூச்சியை துரத்த, அது அசையாமல் அங்கேயே இருந்தது.. ம்ம்ம்ம்ம்.. இந்த ஊரு பூச்சி கூட மராத்தில பேசுனா தான் ரெஸ்பாண்ட் பண்ணும் போல.. இந்த ஊரில் மறக்க முடியாத/கூடாத பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.. அவர்களைப் பற்றி வரும் பதிவில்..


விலை மலிவான செட்-டாப் பாக்ஸ் வாங்கியதன் விளைவு- தமிழில் ஜெயா டி.வி, கே டி.வி, சன் டி.வி மட்டுமே ஒளிபரப்பாகின்றது. எனவே எங்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமா. ஆனா தமிழ் படம் ஒரே காட்சி, அதுவும் இரவு காட்சியாக இருப்பதால் எப்படா வெள்ளி, சனிக்கிழமை வரும்னு காத்திருக்க வேண்டியுள்ளது. தீராத விளையாட்டுப்பிள்ளை, விண்ணைத்தாண்டி வருவாயா, அங்காடித்தெரு பார்த்தேன். SMS மாதிரி தீ.வி.பி நல்ல டைம்-பாஸ் படமாக இருந்தது.. ஹீரோயின்களை மாற்றிருந்தால் இன்னும் தூக்கலா இருந்துருக்கும்.. லாஜிக்லா பாக்காம பார்த்தா ONE TIME WATCHABLE... வி.தா.வ சிம்புவுக்கு கிடைத்த புதுவாழ்வு.. நல்லா பண்ணிருந்தாரு.. படத்துல க்ளைமாக்ஸ் தான் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு- SHOCKINGLY DIFFERENT. த்ரிஷா கொஞ்சம் ரொம்ப அழகா தெரிஞ்சாங்க... சூப்பருன்னு சொல்ல முடியாது, அதே நேரம் சுமார்ன்னும் சொல்லமுடியாது.. ரெண்டுக்கும் இடையில்..
 
 
அங்காடித்தெரு இன்னும் மனசுலேயே இருக்கு.. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, அவளுக்கு யாரும் இணையில்லை” பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஹீரோயின் அஞ்சலி சாலப்பொருத்தமாக இருந்தாங்க.. TAMIL MA WAS AN INDICATION BUT ANGAADI THERU IS A REVELATION… விருதுகள் வாங்கிக்கொள்ள இப்பவே தயராக இருங்க.. கமல் சொல்வது போல “இதெல்லாம் ஒண்ணுமில்லை.. போக வேண்டிய தூரம் ரொம்ப” கவர்ச்சி சாக்கடையில் சிக்கிக்காம நல்லா நடிங்க.. தெரியாத முகங்களை நடிக்கவைத்ததாலேயே மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டது.. சூப்பர்வைசர், ஹீரோ நண்பன் பாண்டி, துணை நடிகர்கள்ன்னு எல்லாரும் நிறைவா வாழ்ந்திருந்தாங்க…


இப்படி நல்ல படங்களா பார்த்து மொக்க படங்கள் பாக்கலன்னா எப்படி? சாமி கண்ண குத்திடும்ல.. அதுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன், தளபதியோட 50வது படம்- சுறா.. படம் மொக்கயா இருக்கும்னு உள்மனசு சொல்லுது.. இருந்தாலும் பழகின ரசிகன் பாவத்துக்கு பாத்து தான் ஆகணும்..


இன்னும் சொல்வேன் 


வருகைக்கு நன்றி!!

Saturday, 10 April 2010

பையா-இத்தோட போதும் அய்யா

ஈ பிலிமுலு டைரக்டர் காரு, கண்டினுயஸ் ப்ளாப்பு கொடுத்தாரண்டே வாடகைக்கு காரு வாங்கினு சன்டே அண்டே ஆந்திரா, மும்பை டூரு வெல்லி போயிரு.. அவ்வடே ஆந்திரா பக்கத்துலு சாரு காரு ப்ரேக்-டவுன் ஆயின்டே.. டைம் ஆயின்டே, சாரு மோரு குடிச்சின்டே ஸ்க்ரிப்ட் யோசிச்சினாரு.. நாரு நாரு யோசிச்சே நாராசமான ஒரு ஸ்டோரி தொருகின்டி.. கார் ரிப்பேர் சே ஹெல்ப் செய்துன்னா பீப்புள்ஸ் ஈ ஆளு சினிமா டைரக்டர்ன்னு கண்டுபிடிச்சிதாங்க... ஆ ஒக்க சான்ஸ் பாவா, நேனு வில்லன் அடியாளா ட்ரை சேசுனாரு.. நல்லா அடி வாங்குவேன் பாவா... ஒன் சான்சே பாவா ரெக்வஸ்ட் சேஸ்தான்னு.. டைரக்டர் காரு, மைன்ட் சேன்ஞ் ஆயி, ஸ்கிரிப்ட் சேன்ஞ் ஆயி, லவ் பிலிமுலு ஆக்ஷன் ஸ்டோரி கொண்டாவு... அதே மோரு கொடுத்த ஆண்ட்டி ஃபேசு பங்க கொடுரமுண்டே வில்லி வாய்ஸ் சான்ஸ் கிடச்சாவு.. பாக்ரே நமக்கு சாவு..


ஆந்திரா தாண்டி மஹாராஸ்ட்ரா என்டர், வில்லன் டெர்ரர் ஸ்கிரிப்ட்ல என்ட்டர்.. பச்சைக்கிளி முத்துச்சரம் கீ பாத் வில்லன் மிலிந்த் சோமன் கோயி சான்ஸ் நெகி மிலா.. ஹமாரா டைரக்டர் சாப் லிங்கு பஞ்சாபி டாபாலே நிம்பள் சோமன் சார் பார்த்து "நமக்கு அடிமை சிக்கிட்டான் டோய்" கத்தர்னாக் வில்லன் ரோல்க்கு சான்ஸ் கொதுத்துடு.. ஐசா ரோல் தமிழ் சினிமா ஹிஸ்ட்ரில ஆப்பு தக் நெகி.. சப்பாத்தி ரோல விட பவர்-பேக்ட் ரோல்.. நன்றி மறவா மிலிந்த் அழுகையோட "பைய்யா.. மேன் இசே கபி நஹி பூலுங்கா பைய்யா" அந்தர் ப்ளேஸ்லே லிங்குக்கு திமாக் கே பத்தி ஜலா.. லிங்கு(LINGU) இத படத்தோட டைட்டிலோட லிங்கு (LINK), பிலிம் நேம் பைய்யா ரக் தியா...என்னடா இவன் ஹிந்தி, தெலுகுல பேசிட்டு இருக்கான்னு பாக்குறீங்களா? அட இந்த பட ஹீரோ யாரு டெலுகுல, ஹிந்தில்ல பேசுனாலும் இவரு தமிழ்ல தான் பதில் சொல்வாரு (கேப்டனின் அடுத்த வாரிசு..)அவருக்கே ஹிந்தி, தெலுகு புரியும் போது உங்களுக்கு புரியாதா? ஆனா இதுல ஒரு ஆறுதல் அவங்க திக்கி திக்கி "உன்னே நான் கொல்து பாரு" தமிழ்ல பேசாம அவர் பேசுற தமிழ புரிஞ்சிகிட்டு, அவங்க மதர்-டங்குல ரிப்ளை பண்றாங்க.. நேட்டிவிட்டி- பட் வாட்ட பிட்டி


மிலிந்த் சோமனுக்கு ஃலைப்-டைம் ரோல்.. ஹீரோகிட்ட என்ன அடிப்பியா அடிப்பியா (யப்பா இன்னும் எத்தன படத்ல.. வசனமும் மாறலே) பேசிட்டு படார்ன்னு அடி வாங்கி படுத்துடுறாரு.. அப்றோம் க்ளைமாக்ஸ்ல திரும்பவும் வான்ட்டட்டா வந்து "என்ன அடிச்சிட்டல்ல.. இப்ப அடிடா" (என்ன இது சின்ன புள்ள தனமா?) சொல்லிட்டு திரும்பவும் அடி வாங்கி படுத்துதுறாரு... இதுல இவரு மும்பைய கலக்குற ரௌடியாம்.. இதுக்காகவே ரூம் போட்டு காத்துகிட்டு இருந்தார் போல..


கார்த்தீ ஒரு சீன்ல வில்லன் ஆட்கள மரண அடி அடிச்சிடிவாரு.. கொஞ்ச நேரத்துல அவங்க டோல்-கேட்க்கு ஃரெப்ஃரெஷ் பண்ணிட்டு ரெடியா காத்துகிட்டு இருப்பாங்க.. திரும்பவும் ஸ்டண்ட் வச்சா சப்பை ஆகிடுமே.. அங்கே டைரக்டர் காட்னாரு பாருங்க வித்தியாசம்.. NFSல GARAGEkku போய் கார 2 நிமிசத்துல பளபளன்னு ஆக்குவோம்ல.. அது மாதிரி மேக்-அப் கிட் வச்சு காருக்கு மேக்-அப் போட்டு ரீ-மாடல் பண்றாரு.. அட அட... அவன் அவன் 10 பேர அடிப்பான்.. நம்ப மாஸ்-ஹீரோ ஒரே நேரத்துல 30- 40 பேர அடிப்பாரு..அதுவும் இவர் அடிச்சா ரத்தம், அவங்க அடிச்சா சத்தம்.. இரும்பு ராட்டால எத்தன அடி அடிச்சாலும் வத்தல பாக்கு மென்னு துப்புன மாதிரி தவ்லூண்டு இரத்தம் வரும் ஹீரோக்கு.. இரத்தம் சிந்துன்னா சென்ஸார்-போர்ட் A கொடுத்துடும்ன்னு யாருக்கும் இரத்தம் வர மாதிரி காட்டக்கூடாதுங்கற டைரக்டர் டெக்னிக்- க்ளாப்ஸ்ஓசாமாவ தேடுனாலும் கிடைப்பாரு, ஆனா இந்த படத்துல கத என்ன, எதுக்கு இதெல்லாம் நடக்குதுன்னு தேடுனா ஒரு மண்ணும் கிடைக்காது.. முதற்பாதி ஹைவேஸ்ல போற மாதிரி ஸ்மூத்தா போகுது.. ரெண்டாவது பாதி மழையில டேமேஜ் ஆன சென்னை ரோட் மாதிரி எப்படா பயணம் முடியும்ங்கற மாதிரி இருந்துச்சு.. இடைவேளை முன்னாடி ஒரு ஸ்டண்ட் வந்த உடனே தெரிஞ்சு போச்சு, படம் இதுக்கு மேல சப்பையா தான் போகும்ன்னு..கார்த்தீ இன்னும் பருத்திவீரன் ஹேங்க்-ஓவர்ல தெனாவட்டா அலையுற மாதிரியே நடிச்சிருக்கார்.. கொஞ்சம் மாத்துங்க.. தமன்னா, சந்து முனைல காரு திரும்பும் போது வரும் கேரக்டர் என்பதால லிங்கு இவங்க கேரக்டர் படத்துல முக்கியமான, திருப்புமுனை வாய்ந்த கேரக்டர்ன்னு சொல்டாரு.. அழகா இருக்காங்க.. ஏதோ நடிக்குறாங்க.. தயவு செய்து கவர்ச்சியா நடிக்காதீங்க.. அடடா மழைடா பாடல்ல சின்ன பொண்ண ஒரு மாதிரி ஆடவிட்ட மாதிரி இருந்துச்சு.. பாடல்கள் சூப்பர்; என்னோட ஓட்டு துளி துளி, அடடா மழைடா.. சுத்துதே, சுத்துதே CG தெளிவா தெரிஞ்சிடிச்சு..படத்துல கார தவிர புதுசா எதுவும் இல்லை.. கார்த்தி இதுமாதிரி படத்துல நடிச்சு டேலன்ட்ட வேஸ்ட் பண்ணாதீங்க.. இதுக்கு தான் நம்ப தளபதீஸ், அல்டிமேட்ஸ் இருக்காங்க.. லிங்கு ரொம்ப பில்ட்-அப் கொடுத்து இப்டி ஏமாத்திட்டீங்க.. சரக்கு தீர்ந்துகிட்டே வருது.. ஸ்டண்ட் மாஸ்டர், பரோட்டா மாஸ்டர் ஆக வாழ்த்துக்கள்.. நல்லா பொரட்டி போடுறீங்க..


37 பூச்செண்டு தரலாம்


பையா- தே தே தே...... தேஞ்சு போன பையா


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search