Tuesday, 30 March 2010

விஜய்யின் 50வது படம்- சுறா: ஒரு எக்ஸ்கூலுசிவ்

இளைய தளபதி விஜய்யின் 50வது படத்தை அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பாக்குறாங்க.. அதுல நானும் ஒருத்தன்.. அவரோட சுறா படத்தின் கதை என்னவாக இருக்கும்?


விஜய் இன்ட்ரோ: தூக்குக்குடி கடலுக்குள்ள கேமரா ஜூம்… அங்கே ஒரு சுறா உயிருக்கு பயந்து வேகமா நீந்திட்டு இருக்கு.. அப்டியே கேமராவ திருப்புன்னா ஒரு திமிங்கலம்.. சுறாவ விடாம துறத்துடு.. வழியிலே டைட்டானிக் கப்பல் மாதிரி கடலுக்கடியில் மூழ்குன ஒண்ணு வழிமறிக்க, சுறா பயந்து நிக்குது, திமிங்கலம் சிரிக்குது… உடனே சுறாவும் சிரிக்குது… திமிங்கலுத்துக்கு ஷாக்.. சுறா நகர, கப்பல உடச்சிகிட்டு நம்ம தளபதி வராரு…


நீ கடிச்சா வெளிறி போகும் உடலு
நா அடிச்சா வெளிய வரும் குடலு


ஒரு பன்ச்.. திமிங்கலம் பறந்து போய் பசிஃபிக் கடல்ல விழுந்து மர்கயா…


உடனே ஒரு இண்ட்ரோ சாங்…


இது வங்கக்கடல் எல்லை
இவன் எங்க வீட்டுப்பிள்ளை
பாசமா பார்த்தாக்கா இவன் எறா
வேஷம் போட்டா வெறிகொண்ட சுறான்னு ரைமிங்க்ல வர மாதிரிஹீரோயின் இன்ட்ரோ: விஜய்யும் சுறாவும் சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்ஸ்.. சின்ன வயசுல விஜய் தங்க மீன் வேணும்னு கேட்டு அழுவாரு… அவங்க வீட்ல புரட்டாசி மாசம் விரதம்னு வாங்கி தர மாட்டாங்க.. அப்போ இந்த சுறா தான் விஜய்க்கு தங்க மீன் தந்துச்சு… அப்போ ஆரம்பிச்ச நட்பு இன்னும் தொடருது… இந்த சுறாக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட்.. இதுங்க ரெண்டும் சந்தோசமா இருக்குறத பாத்து, விஜய் சொல்வாரு “என்ன குஜால்ஸ்ஸா? எனக்கும் கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கும்” அப்போ கடல்ல “காப்பாத்துங்க காப்பாத்துங்க” ஒரு இளம்பெண்ணின் கூச்சல்.. விஜய் அவங்கள காப்பாத்த, தண்ணீர வெளிஎடுக்க, மயக்கம் தெளிய, அப்போ முடிவு பண்றாரு நம்ப தளபதி, இவ தான் நம்ம ஆளுன்னு..வில்லன் இன்ட்ரோ: “அய்யா பாவம்யா விட்ருங்க” ஒரு தாத்தா கதறல்.. அவருக்கு ஒரு அடி.. நீளமான முடி உள்ள ஒருத்தன் நெத்திலி மீன ருசிச்சு சாப்பிட்டுகிட்டு இருக்கான்.. “பல்லு போன பன்னாடைக்கு நெத்திலி கேக்குதா? ஹா ஹா ஹா” சிரிச்சிகிட்டே இன்னொரு மீன சாப்பிடுறான்.. இவனுக்கு அழகான மீன்கள சாப்பிடுறதே பொழப்பு..
ரொமான்ஸ் மற்றும் சண்டை: ஹீரோயினுக்கு மீனுன்னா ரொம்ப பிடிக்கும்.. அதுன்னாலேயே அவங்க பேரு மீனான்னு வச்சிட்டாங்க… விஜய் அவங்களுக்கு தங்க மீன், ஏஞ்சல் வாங்கி தந்து கரெக்ட் பண்ணிடுறாரு. இதுக்கு அவரோட ஃப்ரெண்ட் மீன் ஹெல்ப் பண்ணுது.. இங்கே ஒரு ஃபோல்க் (FOLK) சாங்.. வில்லனோட அடுத்த குறி விஜய் ஃப்ரெண்ட் சுறாவோட லவ்வர்.. ஆனா அவர் விரிக்குற வலையிலே இது சிக்கல.. இந்த கேப்புல விஜய் ஹீரோயின்ன கரெக்ட் பண்ணிடுறாரு.. ஒரு வெஸ்டர்ன்-ரொமாண்டிக் சாங்.. வெறிகொண்ட வில்லன் சுறாவோட ஆள கடத்திட்டு போக, சுறா அழுதுகிட்டே விஜய்கிட்ட சொல்ல, வெகுண்டு எழும் விஜய் மீன்பாடி வண்டில போய் வில்லனோட ஆட்கள அடிச்சு போட்டு, சுறா லவ்வர மீட்கிறாரு.. அடி வாங்குன வில்லனோட அப்பா தாத்தாகெல்லாம் தாத்தா.. ஸாரி, தாதாக்கெல்லாம் தாதா.. அவர் புறாவ அனுப்பிச்சு சமாதனமா போகலாம்னு இருக்க, அந்த புறாவ புடிச்சிகிட்டே அவங்க வீட்டுக்கு பறந்து வந்து சமாதனமா போக நான் புறா இல்லடா சுறான்னு பன்ச் பேசி, நீயும், உன் பையனும் ஆசயா வளக்குற மீன எல்லாம் அழிச்சு, உங்க மீன் மார்க்கெட்ல என் கொடி ஏத்துறேன்னு சவால் விடுறாரு.. இங்கே வருது இடைவேளை…ரெண்டாவது பேதி-பாதி: சபதத்தை நிறைவேற்ற விஜய் மீன்வலை, மீன்பாடி வண்டி, பீச்ல மீன் பஜ்ஜி, மீன் மார்க்கெட்ல ஒரு கடை, மீன் பண்ணை ஆரம்பிக்கிறாரு.. வில்லன் அப்பாவோட மூவ்மெண்ட்ஸ்கெல்லாம் செக் வைப்பாரு விஜய்… அவர் ஆசயா வளர்க்குற எறா, வஞ்சரம், ஷீலா, சங்கரா மீன எல்லாம் விஜய் சாப்பிடுவாரு..

இது கொல இல்லடா சமையல்


ஃபிஷிங்(FISHING) ஆரம்பம் ஆகிடுச்சு டோய்


நான் சுறா முன்னாடி மட்டும் தான் சாந்தமா பேசுவேன், எறா முன்னாடி இல்ல..
போன்ற பன்ச் வசனங்கள் நிரம்பி இருக்கும்.. இதுக்கு நடுவுல விஜய் வளர்ந்து வருவதை போற்றி ஒரு பாடல், ஹீரோயினை வில்லன் ஆட்கள் கடத்திக்கொண்டு போக விஜய் சண்டை போட்டு மீட்க (இன்னொரு சாங்), கடைசி கட்டமாக “ஒரு கடுகு கிடைச்சா போதும், தாளிச்சிடலாம்” முடிவோடு வில்லனோட அப்பா சுறாவையும், லவ்வரையும் கடுகு, எண்ணெய்ல போட்டு வறுத்தெடுக்குறாரு.. பழிக்குப்பழியா விஜய் வில்லன(பையன்) கடலுக்குள்ள கூட்டிட்டு போய், எல்லா மீன்களோட முள்ளால குத்தி சாவடிச்சிடுறாரு..க்ளைமாக்ஸ்: விஜய் தன்னோட சபதத்துல சொன்ன மாதிரி மீன் மார்க்கெட் தலைவர் ஆகிடுறாரு.. இந்த நேரத்துல அவர கொல பண்ண வில்லன் அப்பா கொடிக்குள்ள விஷமீன்கள வைச்சு அமெரிக்காக்கு தப்பிச்சிடுறாரு.. கொடி ஏத்தும் போது இத தெரிஞ்சிகிட்ட விஜய் லாவகமா கயிற்ற இழுக்க, அது பறந்து போய் வில்லன் அடியாட்கள் மேல விழுந்துடுடு.. “நீ விரிச்ச வலையில சிக்க நான் எறா இல்லடா சுறா சுறா”ன்னு அமெரிக்காக்கு தப்பிச்ச அப்பாவ பிடிக்க விஜய் எல்.ஐ.சி மாடி மேலே ஏறி குதிக்குறாரு, அங்கேயே சிலை மாதிரி நிக்குறாரு... உலகம் சுழழும்ன்னு சைன்ஸ்ல படிச்சத விஜய் இங்கே யூஸ் பண்றாரு… உலகம் சுத்தி அமெரிக்காக்கு வர, சிலையா இருக்குற தளபதி அப்டியே ஜம்ப் பண்ணி வில்லன சமையல், ஸாரி சம்காரம் செய்றாரு.. திரும்ப மார்க்கெட்க்கு அதே உலகம் சுழழும் டெக்னிக் யூஸ் பண்ணி வராரு.. கொடில “உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்” இருக்க தளபதி சிரித்த முகத்துடன் படம் சுபம்..


பி.கு: தளபதி இப்போ இருக்குற ஃபார்முக்கு இந்த மாதிரி ஸ்கிரிப்ட்ல நடிச்சா ஆச்சிரியப்படுவதற்கில்லை..


பி.கு 2: இது என்னோட 50வது பதிவு..


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search