Friday, 1 January 2010

கனவு கண்ணன் 2010

டிக்.. டிக்.. டிக்..

டூமில்... டமார்...

உங்கள் வானவில் டீ.வியின் ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

காலை 6 மணிக்கு காதல் கீதம்

கார்த்திக்கை காதலனாக பாவித்து, இளம் கல்லூரி பெண்களின் மாங்கல்ய இசை..

க்ளிப்ஸ்: MOP பொண்ணு, “தீராத விளையாட்டு பிள்ளை.. கார்த்திக் கல்லூரிப்பெண்களுக்கு ஓயாத தொல்லை”

WCC பொண்ணு, “ஸ்நேகிதனே ஸ்நேகிதனே, ரகசிய ஸ்நேகிதனே”காலை 7 மணிக்கு டீ வித் சோனு..

இதில் கார்த்திக் முதல்முதலாக டேட்டிங் சென்ற எத்திராஜ் கல்லூரி அனிதா தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் கலகலப்பான நிகழ்ச்சி

க்ளிப்ஸ்: வாய்ஸ் கேக்கும் போதே அப்டியே ஒரு VIBRATION.. I LOST MYSELF... அப்றோம் அவர் டேட்டிங்க்கு வந்த முதல் பொண்ணு நான் தான் உடனே I WAS LIKE FLYING…காலை 8.30க்கு கடலை கண்ணியம் காட்பாடி...

காட்பாடி ஜங்சனில் கார்த்திக்குடன் பொங்கலன்று டேட்டிங் செல்ல இளம்பெண்கள் போட்டி போடும் வித்தியாசமான கேம்-ஷோ...

க்ளிப்ஸ்: பொண்ணு, “ஹே..ஹே... நான் ஜெயிச்சிட்டேன்”
இன்னொரு பொண்ணு, “கமான்.. யூ கன்”
இன்னொரு பொண்ணு, “ஜெயிக்கலனாலும் பரவால்ல.. இதுல கலந்துகிட்டதே என் பாக்கியம்”காலை 9.30க்கு கனவு கண்ணன் 2010..

ஆண்கள், பெண்கள் 2009இல் தங்களை ஈர்த்த, 2010இல் கவர இருக்கும் தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரத்தை பற்றி பேசும் ஜாலியான நிகழ்ச்சி

க்ளிப்ஸ்:

காம்பியர்: “கேர்ள்ஸ்... சொல்லுங்க, யாரு இந்த வருசம் கனவு கண்ணன்?”
கோரஸ்ஸா “கார்த்திக் கார்த்திக் கார்த்திக்”

ஒரு ஆடவன், “போங்க சார்.. என்ன தான் ட்ரெஸ் பண்ணாலும் பொண்ணுங்க நம்பள பாக்க மாட்டேங்கிறாங்க.. ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு கனவு கண்ணன், அது கார்த்திக்”

பாட்டி, “எம்.ஜி.ஆர்க்கு அப்றோம் எனக்கு புடிச்சமான பையன் கார்த்தி தான்.. ஹீஹீஹீ" (போக்க வாய் தெரிய)காலை 10 மணிக்கு மேவி தலைமையில் “கார்த்திக்கை அதிகம் சைட் அடிக்கும் பெண்கள் ENGINEERING COLLEGE பெண்களா இல்லை ARTS & SCIENCE காலேஜ் பெண்களா” உங்கள் அபிமான ப்ளாக்கர்கள் பங்குபெறும், புத்தாண்டு சிறப்பு-சிரிப்பு பட்டிமன்றம்...

க்ளிப்ஸ்:

பப்பு: அய்யா நடுவர் அவர்களே.. கார்த்திக் ஏன் ஆண்கள் கல்லூரியிலே சேர்ந்தார்ன்னு இந்த தலைப்ப பார்த்த உடனே தான் தெரியுது..

மேவி: பின்னிட்டல்லே...

கார்க்கி: நான் ஒரு ARTS & SCIENCE காலேஜ்க்கு போனேன்.. கெமிஸ்ட்ரி டிப்பார்ட்மெண்ட் ஃபுல்லா கார்த்திக் படம் தான்.. ஒரு வேள பயாலஜி டிப்பார்ட்மெண்ட்டான்னு சந்தேகம்.. அப்றோம் தான் தெரிஞ்சுது கார்த்திக் இருந்தா அங்கே கெமிஸ்ட்ரி நல்லா வொர்க் ஆகுமாம்

மேவி: மேத்ஸ் டிப்பார்ட்மெண்ட் போயிருக்கலாம்லே.. அங்க இன்னும் இருந்துருக்கும்... கணக்கு நல்லா பண்ணலாம்ல??காலை 11 மணிக்கு, இந்திய தொலைக்காட்சிகளில் முதற்முறையாக, திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, புத்தம் புதிய சூப்பர்ஹிட் காதல் திரைப்படம்- காதலில் நொந்தேன்...

க்ளிப்ஸ்:

கார்த்திக்: ஃபாதர் ஃபாதர் ப்ளிஸ் ஃபாதர்.. நான் சென்னை போல ஃபாதர்.. அங்க எல்லா ஃபிகர்களும் என்னையே பார்க்கும் ஃபாதர்...

கார்த்திக்கை கண்டேன், காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டான்...

ஹீரோயின்: உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..............

கார்த்திக்: ஹே.. பாக்க சைலன்டா இருக்கேன்னு கொறச்சு எட போடாதே... கோவம் வந்தா சைலண்ட்டும் வைலண்ட் தான்...

கார்த்திக்: அய்யோ எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்குது?

ஹீரோயின் 2: அவள நம்பாத கார்த்திக்.. கூடவே இருந்து குழி பறிக்குறா

ஹீரோயின்: இதோ.. இவள கொன்னுட்டா நீ என் கூடவே இருப்பல்ல? கொஞ்சம் நேரன் இருடா.. இதோ இப்பவே கொன்னுட்டு வந்துடுறேன்

தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் கார்த்திக் இன்று பார்த்ததாலே...

ஃபாதர்: உனக்குல்லா எத்திராஜ் ஃபிகர் பத்தாது... வேற வேற வேற வேப்பேரி ஜெயின் காலேஜ் ஃபிகர் தான்டா

வில்லன்: மச்சா இல்லா ஃபிகரும் அவனையே பாக்குது.. சரி இல்ல..

கார்த்திக், பூஜா, சுனைனா நடிக்கும் காதலில் நொந்தேன்.. இத்திரைப்படத்தை இணைந்து வழங்குவோர், யாரும் இல்லை...மதியம் 3 மணிக்கு, லண்டனில் கார்த்திக்குடன் திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெற்ற கோலாகலமான கலை நிகழ்ச்சி

க்ளிப்ஸ்:

அனுஷ்கா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது, உன்ன நான் பாக்கல கிர்ருங்குது.. கிட்ட நீ வந்தாலே டர்ர்ங்குது

சுனைனா: உனக்கென நான் எனக்கென நீ.. நினைக்கையில் இனிக்குதே

மும்தாஜ்: ஸ்ஸ்ஸ்ஸ்...ஆஆஆஆஆ... கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணால கண்டபடி கட்டிப்புடிடா.. ஆஆஆஆஆ

ஸ்ரேயா கோஷல்: முன்பே வா என் அன்பே வா..

ஸ்ரேயா சரன்: எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கார்த்திக்சாமி... ஒரு காபி குடிப்போம் கம் வித் மீ...

தமண்ணா: ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்

த்ரிஷா: கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?மாலை 5 மணிக்கு, உங்களோடு நான்..

தன்னுடைய ரசிகர், ரசிகைகளின் கேள்விக்கு கார்த்திக் பதில் அளிக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி..

க்ளிப்ஸ்:

ரசிகை 1: சார், கார்த்திக் சார்.. சிரிக்கிறார் சார்... கண்ணு சார், மூக்கு சார்...

ரசிகை 2: அவரோட கதை எல்லாம் எனக்கு புடிக்கும்... அவ்வளவு ரொமண்டிக்கா இருக்கும்.. அப்டியே நம்பள லவ் பண்ற மாதிரி இருக்கும்

ரசிகை 3: எங்க காலேஜ்ல ஒரு பொண்ணு இவர அண்ணான்னு சொன்னதால நாங்க எல்லாம் அதை செலப்ரேட் பண்ணோம்

கோபிநாத்: வாவ்.. வாவ்.. அருமையான தருணம் இது...

ரசிகர் 1: என் லவ்வர் ஆன்லைன் வந்தா போதும், என் கூட சாட் பண்ணாம, இவரோட ப்ளாக்லேயே இருப்பாங்க..


மாலை 6 மணிக்கு, உலகத்தொலைக்காட்சிகளில் முதற்முறையாக, வுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், கார்த்திக் இரட்டை வேடத்தில் நடித்த காதலி ஆயிரம்..

க்ளிப்ஸ்:

ஹீரோயின் 1: ஹாய் கார்த்திக்.. ஐ அம் கிருஷ்ணவேணி, நான் இத சொல்லியே ஆகணும்.. நீங்க அவ்வளவு அழகு... இங்கே எவளும் இப்டி ஒரு அழக பார்த்துருக்க மாட்டாங்க

டாட்.. பொண்ணுங்க சைட் அடிச்சா எப்டி டீசண்டா நடந்துக்கணும்ன்னு எனக்கு கத்து கொடுத்தது நீங்க தான்... YOU ARE MY INSPIRATION DADDY… I LOVE YOU DADDY…

ட்ரெயின்- மேக்னா: கொல்றானே... அம்மா, நீங்க அப்பா எப்டில்லா இருப்பாருன்னு சொன்னீங்களோ அதே மாதிரி இந்த பையன் இருந்தான்..

ராஜா நான் ராஜா என் பேட்டைக்கென்றுமே ராஜா

கார்த்திக்: சாரி.. நான் யூ.எஸ் போறேன்.. MSc in PHYSICS... Massachusetts Institute of Technology...

மேக்னா: நீ எங்க போனாலும் நான் அங்கே வருவேன்... AND I WILL SWEEP YOU OFF YOUR FEET…

கார்த்திக்: யார் மேல கைய வச்ச? டமார்.. குத்து.. பஞ்ச்..

திவ்யா: கார்த்திக்... AM IN LOVE WITH YOU… ரொம்ப நாளாவே... உனக்கு 17 எனக்கு 15... எனக்கு எட்டு வயசு இருக்கும் போது உன்ன முதல்ல பார்த்தேன், ஸ்ரீரங்கத்துல நீ பேசிட்டு இருக்கற்த நான் ரசிச்சிட்டே இருப்பேன்... அப்போத்ல இருந்து கூட இருக்கலாம்...

முகம் பார்த்து பேசும் உன்னை, முதல் காதல் சிந்தும் கண்ணை, அழைக்காமல் போவேனோ வா உயிரே..

கார்த்திக், சமீரா ரெட்டி, திவ்யா, சிம்ரன் நடித்த காதலி ஆயிரம்- புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படம்இரவு 9.30க்கு வானவில்லில் நட்சத்திரங்கள்..

திரைஉலகப் பரமுகர்கள் கலந்து கொண்டு கார்த்திக்குடன் தங்களுக்கு இருக்கும் நட்பை பற்றி விவரிக்கும் சுவாரசியமான நிகழ்ச்சி..

க்ளிப்ஸ்:

சிம்பு: ஆக்ஸ்ஸூவலா நயந்தாரா என்ன விட்டு போக இவரும் ஒரு காரணம்..

விஜய்: அவர் ஒரு நடமாடும் யூனிவர்சிட்டி.. அதுல சாதாரண லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடண்ட் நான்...

சூரியா: நான் சிக்ஸ்-பேக் வச்சு இம்ப்ரஸ் பண்ணா, அவர் சைலண்டா இம்ப்ரஸ் பண்ணுவாரு.. என் பொண்ணு தியா கூட இவர ரொம்ப பிடிக்கும் சொல்வா.. ஜோ.. திஸ் இஸ் ஃபார் யூ..

கமல்: கார்த்திக் அவர்களின் வெற்றியை எனது வெற்றியாகவே பாவித்து கொள்கிறேன்.. இதெல்லாம் ஒண்ணும் இல்ல.. இன்னும் நெறய போக வேண்டி இருக்கு... இந்த கணமெல்லாம் ஒண்ணுமில்ல..நேயர்களே.. உங்கள் வானவில் டீ.வியின் ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்.. புத்தாண்டில் வசந்தம் பொங்கட்டும்...********************************


இந்த பதிவில் வரும் கார்த்திக் நான் தான் சொல்ற அளவுக்கு ஏமாத்துக்காரன் இல்ல.. இந்த கார்த்திக் நானேன்னு சொல்லல... நானா இருந்தா நல்லா இருந்துருக்கும்ன்னு சொல்றேன்... இருந்தாலும் இன்று பிறந்த நாள் காணும், உலகமே கொண்டாடும், பல பெண்களின் தூக்கத்தில் நாயகனாக வலம்வரும் வானவில் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்டிஸ்கி 1: ஏதோ இப்டி எழுதுனா கார்த்திக் ட்ரீட் தருவாருன்னு எழுதல


டிஸ்கி 2: கார்த்திக் கிருஷ்ணாக்கும் இந்த பதிவு கொஞ்சம் பொருந்தும் என்பதால் அவர் பிறந்தநாளுக்கும் இத யூஸ் பண்ணிக்கலாம்


டிஸ்கி 3: ஏற்கனவே நிறய கேர்ள்ஸ் ஃபேன் இருப்பதால், இருக்கும் கொஞ்ச பேராவது மடக்க வேணும்ன்னு கார்த்திக் புகைப்படத்தை போடவில்லை...
வருகைக்கு நன்றி!!


Blogger templates

Custom Search