Friday, 10 December 2010

வாழ்த்தலாம் வாங்கமச்சி நீ ஒரு பொறிக்கி.. சமுகத்தில் நடக்கும் அக்க்ரமங்களை பொறிக்கி அதை கண்டிப்பதால்


மச்சி நீ ஒரு பொறம்போக்கு.. நண்பர்களையும் சரி, மற்றவர்களையும் சரி அவர்கள் இல்லாத நேரத்தில் முதுகின் புறமாய் பேசும் போக்கு இல்லாத நல்ல மனம் உடைய பொறம்போக்கு.. 


மச்சி நீ ஒரு முடிச்சவுக்கி.. உலகின் நடக்கும் பல குற்றங்களின் மூலகாரணங்களையும், மர்மமாய் யாருக்கும் புலப்படாத விஷயங்களின் முடுச்சுக்களை அவிழ்க்கும் ஒரு முடிச்சவுக்கி.. 


மச்சி நீ ஒரு கேப்மாரி.. நண்பர்களுடன் உரையாடும் பொழுது சிறு கேப் கிடைத்தாலும், யானை காதில் புகுந்த எறும்பு போல விடமால் நோண்டிக்கொண்டே மாறி மாறி கலாய்க்கும் ஒரு கேப்மாரி  


மச்சி நீ ஒரு முள்ளமாரி.. உன் காலில் முள் குத்தினாலும் அதை பொருட்படுத்தாது உன் அன்பால் அந்த முள்ளின் குணத்தை கூட மாற்றும் சக்தி கொண்ட முள்ளமாரி.. 


மச்சி நீ ஒரு பரதேசி.. ஐந்தாம் வகுப்புலே டேசிபாபா சைட் பார்த்து பல உலக விஷயங்களை அறிந்து, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், ஸ்பெயின் என பல தேசங்களுக்கு பறந்த பறதேசி.. சாரி.. பரதேசி..


மச்சி நீ ஒரு டுபுக்கு.. பல புக்குகளை ரெண்டு முறை படித்து அதில் டூ மச்சாக அர்த்தங்களை கண்டுபிடித்த டுபுக்கு..


மச்சி நீ ஒரு கபோதி.. கற்றறிந்த சான்றோர்களுக்கே நீ போதி மரமாய் விளங்கும் க-போதி 


மச்சி நீ ஒரு கம்னாட்டி.. இளம்பெண்களின் மனதை கவர்ந்து, வாடா நாட்டி பாய் என அழைக்க பதும் கம்னாட்டி..


மச்சி நீ ஒரு சாவுகிராக்கி.. மைகேல் ஜாக்சன் அட்டாக் செய்த  ஆட்டக்காரன்..  சாவு வீட்டில் நடனத்துக்கு செம கிராக்கி கொண்ட நீ ஒரு சாவுகிராக்கி..  


சரி மச்சி உன்ன ரொம்ப புகழ்ந்தா உனக்கு பிடிக்காதுன்னு தெரியும்.. 

நீ சொல்வியே ஒரு பஞ்ச டயலாக் 

முகத்துக்கு முன்னாடி முகஸ்துடி போடுறவனையும் பிடிக்காது
முதுகுக்கு முன்னாடி முட்றவனையும் பிடிக்காது 


அதுனால நா இத்தோட ஸ்டாப்பு.. 
இன்னிக்கு உன் பொறந்த நாளுல.. 
அதான் நல்ல நாள் அன்னிக்கு 
நாலு நல்ல வார்த்த சொல்லலாம்ன்னு இந்த போஸ்ட்டு.. (ரைமிங்கா பேசுவோம்ல) 


ஹாப்பி பர்த்டே மச்சி.. ஓஒ.. நீ தமிழ்காரன்ல.. அதுனால தானே கேக் கூட வெட்ட மாட்ட.. 

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..


உனக்கு இந்த போஸ்ட் பிறந்த நாள் பரிசா தர அளவுக்கு நா கஞ்சன் இல்ல.. 
நீ ரொம்ப நாளா கேட்டியே BAJAJ AVENGER பைக் அத தரலாம்னு பார்த்த காசு இல்ல.. ஏதோ என்னால முடிஞ்சுது


நம்ப சாம் அன்டேர்சன்  எப்புடி கார் படம் வரஞ்சு, கார் போஸ்டர் வாங்கி அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் ஆனாரோ, அது போல இந்த பைக் போஸ்டர் பார்த்தே நாம பைக் வாங்குறோம்.. ஒகே?

முகப்புத்தகத்தில் வாழ்த்தை தெரிவிக்க- அருண்

செத்துப்போன பிளாக்கில் மொய் எழுத- அருண் பிளாக்


டிஸ்கி: அடுத்த மாசம் ஒருத்தரு பொறந்த நாளு இருக்கு.. அவருக்கு இது ஒரு ட்ரைலர்.. இதைப் படித்து டரியல் ஆக வேண்டாம் சகா..


வருகைக்கு நன்றி!! 

Monday, 6 December 2010

நந்தலாலா - மீண்டும் மிஷ்க்கின்

அவனை நான் என் சித்தி வீட்டிற்கு செல்லும் போது பார்த்திருக்கிறேன்...  எனது ஐந்தாவது வயதில் அறிமுகம்.. அந்த தெருவில் இருக்கும் மத்த குழந்தைகளுக்கு அவன் விளையாட்டு பொம்மை.. அவனை சீண்டுவது, கொக்கா மைனாவில் முட்டிக்கால் போட்டு குனிய வைத்து எகிறுவது, கண்ணாமுச்சி விளையாடும் போது அவன் முதுகுக்கு பின்னால் ஒளிந்தே கத்துவது என அவனை ஒரு காமெடி பீஸ் போல நடத்தினோம்.. ஆனால் அது எதுவும் புரியாமல் அவன் வெள்ளந்தியாக சிரித்து கொண்டிருப்பான்.. மற்ற குழந்தைகளின் அம்மாக்கள் அவனோடு விளையாடுவதை கண்டாலே அலறுவர். “ஹே… இங்க வா… அவன் கூட விளையாடதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன், அறிவில்ல, கால உடச்சா தான் சரி படுவ வீட்டுக்கு வீடு வார்த்தைகள் மாறினாலும், அர்த்தம் ஒன்று தான்… “போடா லூசு பயலே” என்று அவனை ஏசி விட்டால் போதும், முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து உக்கிரமும், அழுகையும் சேர்ந்து கதறுவான்… அவன் அம்மா வந்து சமாதானம் சொன்னாலும் அவளையும் அடிப்பான்.. வெறித்த பார்வை, கலங்கிய கண்கள்.. சில நிமிடங்களில் ‘உன் பேச்சு பளம்’ என்று விளையாட வருவான்.. அவனுக்கு வேண்டியது அன்பும், நண்பர்களும்.. அவன் அம்மாவிடம் என் சித்தி ஒரு முறை கேட்டாங்க “இந்த மாதிரி பயன வளக்கற்து கஷ்டமாச்சே, எங்கேயாவது சேக்கலாம்ல?" ஆனா அவங்க அம்மா சொல்வாங்க, “இதெல்லாம் கஷ்டம் பாத்தா நான் என் இவன பத்து மாசம் வயித்துல வச்சு பெத்தேன், எப்டி இருந்தாலும் அவன் என் மவன் தான், என் கூடவே கடசி வரைக்கும் இருப்பான் வயது ஆக ஆக நண்பர்கள் வட்டம் பெருக, அவனை மறந்தே போனோம்.. ஒரு நாள் சித்தி வீட்டிற்கு போகும் போது அவன் வீட்டு கதவில் விற்பனைக்கு என எழுதி இருக்க, ‘என்ன ஆச்சு சித்தி’ கேட்டேன்… “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி கிணத்த எட்டி பார்த்து கத்திக்கிட்டே விழுந்துட்டான்பா.. பாவம்.. அவங்க அம்மா அழுதது இன்னும் கண்ணுலேயே இருக்கு.. பையன் இல்லாத இடத்துல எதுக்கு இருக்கணுன்னு சொந்த ஊருக்கே போயிட்டாங்கப்பா” அன்பும் நண்பர்களும் கிடைக்காததால், தனது பிம்பத்தை பார்த்து யாரோ விளையாட அழைக்கிறாங்க நினச்சு குதிச்சிட்டான்னா? அந்த அம்மா எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்…நந்தலாலா- தாயை தேடி இரண்டு குழந்தைகளின் பயணம்- ஒருவன் உருவத்தால், இன்னொருவன் மனதால்… சின்னவனுக்கு அம்மாவ பார்த்து கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்க ஆச... அதுனால யாரு முத்தம் கொடுக்க வந்தாலும் கன்னத்த காட்டாம ஓடிடுவான்.. பெரியவனுக்கோ அந்த மூளிய இழுத்து வச்சு கன்னத்துல அறைய ஆச.. ரெண்டு பேரும் அவங்க அம்மாவ பார்த்தாங்களா, அவங்க ஆச நெறவேருச்சா இதுதான் கதை.. நமக்குள்ளேயே சந்தோஷத்த தேடுறத காட்டிலும் நம்மள சுத்தி இருக்குற சின்ன சின்ன விஷயத்துல கூட சந்தோஷம் இருக்குங்கறத படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மூலமாக நமக்கு உணர்த்துகிறார் மிஷ்க்கின்…


படத்தின் நாயகன் இளையராஜா… அதிரடி பின்னணி இசை, மனதை வருடும் இசை என்றில்லாமல், மௌனத்தை கூட இசையாய் புகுத்தி நம்மை காட்சியோடு கட்டிப் போடுகிறார்.. எந்த இடத்தில் இசை வேண்டும், எங்கு அமைதியாக விட வேண்டும் என்பதை உணர்ந்து இசை அமைத்துள்ளார்.. ஆரம்பத்தில் ஒரு சில மௌன நொடிகளை கடந்து வரும் அந்த வயலின் பிட்.. சூப்பர் சார்.. இளையராஜா இல்லாம இந்த படம் இல்லைய்யா ராஜான்னு சொல்லலாம்.. பாதி ஜீவன் ராஜாவின் இசை என்றால் மீதி ஜீவன் மிஷ்க்கினின் திரைக்கதையும், பாத்திர தேர்வும்… கதையின் நாயகனாக மிஷ்க்கின்.. ட்ரைலர் பார்த்து மொக்கயா பண்ணிருப்பாரோன்னு பயந்தேன்… ஆனா நல்ல நடிச்சிருக்காரு… காசு வேணுன்னு சில்லறைகளை மட்டும் வாங்குவது, தன்னை பைத்தியம் என்று சொன்ன ஆட்டோக்காரனை அடிப்பது, சிறுவன் அவங்க அம்மாவை பாக்கக்கூடாதுன்னு தூக்கிக்கொண்டு ஓடும் காட்சியில் மிஷ்க்கினின் கண்ணில் தெரியும் மிரட்சி- அப்ப்பப்ப்பா… ஆனால் தனது தாயை பார்த்தவுடன் பரித்தவிக்கும் காட்சியில் கோட்டை விட்டுட்டார்.. திரைக்கதை அங்கே பலவீனமாக இருந்ததால், அவரின் நடிப்பும் எடுபடவில்லை.. குட்டிப்பையன் அஷ் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், ரெண்டாவது பாதியில் நம்பளை கவர்கிறான்.. பக்கத்து வீட்டு குழந்தை போல பார்த்த உடனே ‘மாமா’ என்று ஒட்டி கொள்வதாகட்டும், கடைசியில் தனது அம்மாவை பார்த்தவுடன் அவனது கண்கள் (இடைவேளையில் மிஷ்க்கின் என்றால், க்ளைமாக்ஸ்ஸில் இவன்) மட்டுமே பேசுவது- அருமை…வசனங்களின்றி காட்சிகளை நகர்த்தும் பாணி படத்துக்கு பலமாகவும் அதே சமயம் பலவீனமாகவும் இருக்கிறது.. படத்தில் நிறைய குறியீடுகள் (Symbolisms).. அம்மா எங்கே என கேக்கும் சிறுவனுக்கு நிழலாய் பதில் சொல்வது (நிழல்-பொய்) அவன் ஓடி இறுதியில் கதாநாயகியிடம் முடிவது, சிறுவனின் அம்மா தவறானவள் என தெரிந்தவுடன் அவள் முகத்தை காட்டாது காட்சி அமைத்த பாணி, மிஷ்க்கின் அக்கி அம்மாவுக்காக ஒரு செம்பருத்தி பூவை பறித்து வைத்திருப்பார்.. கடைசி காட்சியில் ஸ்னிகிதா தலையில் செம்பருத்தி பூ.. இப்படி படம் முழுக்க வியாபித்திருக்கும் Symbolisms ஒரு கடைகோடி சினிமா ரசிகனால் (Layman's point of view) புரிந்துக்கொள்ள முடியுமா என்பது சந்தேகம்…’நீ தானே பாம்பாம்ம எடுக்க சொன்ன’ என்று மிஷ்க்கின் அப்பாவியாய் அழும்போது மனம்மாறும் லாரி ட்ரைவரின் பகுதி ஒரு குட்டிக்கவிதை.. தாய்வாசல், அன்னைவேர் என ஊரின் பெயரிலேயே தாய்மையை புகுத்தியது, மெதுவாக கடக்கும் வண்டியில் அக்கி தனது அம்மாவை அவளின் இன்னொரு குழந்தை மூலம் தெரிந்து கொள்வது (அதற்கு முன்னரே DRIVE SLOWLY-  என எழுதப்பட்டிருக்கும்) என மெனக்கெட்டு திரைக்கதை அமைத்துள்ளார் மிஷ்க்கின்.. பள்ளி மாணவியின் காட்சிகள் மிகையான உறுத்தல்.. அதே போல படத்தின் உயிர்நாடியான காட்சி- தன் அம்மாவை மிஷ்க்கின் பார்த்த உடன் அவருக்கு வரும் பரிதவிப்பு, அதிர்ச்சி எனக்கு வரவில்லை… அதை தொடர்ந்து வந்த காட்சிகளும் மிகவும் செயற்கைத்தனமாக இருந்தது.. சில இடங்களில் மிஷ்க்கின் Cliches.. தலையை குனிந்தபடியே இருப்பது, கால்கள், ஆகாயத்தை மாற்றி மாற்றி காட்டுவது என சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவில் பார்த்த காட்சிஅமைப்புகள்.. மற்றபடி கேமராவில் குறை சொல்ல ஒண்ணும் இல்லை (அஞ்சாதே நிறய வாட்டி பாத்துருக்க கூடாது)நாம மத்தவங்களுக்கு எது கொடுத்தாலும் அது நமக்கு திரும்ப வருமாங்கறது சந்தேகம் தான், ஆனா சந்தோஷத்த கொடுத்து பாரு, அது மட்டுந்தான் வட்டியோட வரும்.. இதை களமாக்கி, காட்சியமைத்த விதத்தில் மிஷ்க்கினுக்கு ஒரு சபாஷ்… ஆனாலும் அஞ்சாதே தான் என்னை பொருத்தமட்டில் மிஷ்க்கினின் சிறந்த, முழுமையான படைப்பு
53 பூச்செண்டு தரலாம்

நந்தலாலா- இனிமை


வருகைக்கு நன்றி!! 

Saturday, 13 November 2010

விக்ரமாதித்யன் கதைகள்- பேருந்து வேதாளம்

வயிற்றில் படிக்கட்டு (சிக்ஸ்-பேக்) வைக்க வக்கில்லாத இளைஞர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி ரோமியோக்களாய் அயோக்கியத்தனம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாய் இருக்க, இப்போது பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து, மகளிரை வலப்பக்கத்திற்கு இடமாற்றம் என பல நற்செயல்களை அரங்கேற்றி வருகிறார்கள். நாங்க என்ன வச்சிக்கிட்டேவா வஞ்சனை செய்றோம் என்பது போல, பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் எல்லாரும் கெட்டவர்கள் இல்லை என்ற மனக்குமுறல் தான் இந்த பதிவு. 


பேருந்து.. விசித்திரம் நிறைந்த பல பயணிகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல ரூட்களையும் சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த பேருந்து ஒன்றும் விசித்திரமானதல்ல... தொங்கி வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமை ஆனவன் அல்ல.. பேருந்து வாழ்க்கை பாதையிலே,  தொங்கிப்  பிழைக்கும் மங்கிகளில் நானும் ஒருவன். .


29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன்
Deluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன்
ஸ்டெல்லா மேரிஸ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்


குற்றம் சாட்டப்பட்டுருக்கிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...

29Cஇல் தொங்கிக்கொண்டே வந்தேன்.. ஏன்??? ஸ்டெல்லா மேரிஸ் பிகரை கரெக்ட் செய்யவா? இல்லை. அடுத்த ஸ்டாப்பில் ஏறும் ஸ்டெல்லா ஆன்ட்டி, மேரி ஆன்ட்டி இவர்கள் எல்லாம் படிக்கட்டில் பரிதாபமாக நிற்க கூடாது என்பதற்க்காக


Deluxe பஸ்சிலும் கதவை மூட விடாமல் Footboard அடித்தேன் ஏன்..?? விஜய் போல ஹீரோயிசம் காட்டி விஜய் பேன் MOP வித்யாவை கரெக்ட் செய்யவா? இல்லை.. உள்ளே போக முடியாமல் தவிக்கும் நான், மூடும் கதவிலே சிக்கி முகமெல்லாம் ரணகளமாய் ஆகி பரலோகம் போக வேண்டாம் என்பதற்காக 


ஸ்டெல்லா மேரிஸ் பெண்ணுக்கு நோட் கொடுத்தேன்.. ஏன்??? பை கொடுத்தால் அவள் கை கொடுப்பாள் என்ற நப்பாசையா? இல்லை குடும்ப பாரத்தை இரக்க வழியின்றி தவிக்கும் நடுத்தர வர்க்கம், தங்கள் முதுகு பாரத்தையாவது இறக்குவதற்காக 


உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..


நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாகப் பாதிக்கப்பட்டேன், எனது நலத்திலே பொது நலமும் கலந்து இருக்கிறது, என்னை குற்றவாளி என்கிறீர்களே, என் வாழ்க்கை பாதையோடு, பேருந்து வரும் பாதையையும் சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய இடிகள் எத்தனை, மிதிகள் எத்தனை, அடிகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...


நான் ஓட்டுனரை பார்த்ததில்லை, ஆனால் அவர் நல்ல ஆயுளோடு இருக்க வேண்டும் என்று வேண்டினேன் 


நான் காலியான பேருந்தில் தொங்கியதில்லை, ஆனால் எல்லாப் பேருந்தும் கூட்ட வெள்ளத்தில் தத்தளித்ததைப் பார்த்து வேறு வழியின்றி சென்றேன்..


கேளுங்கள் என் கதையை, என் மேல் கேஸ், அபராதம் போட்டு என்னை அபாண்டமாக அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..


இந்தியாவிலே, தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான், பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர், மென்பொருள் துறையின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???


தமிழ்நாட்டில் பிறந்த நான், அலுவலகம் செல்ல பேருந்து நிலையத்திற்கு ஓடோடி வந்தேன், பஸ், நிற்காமல் இஸ்ஸ் என்று வேகமாய் கடந்து சென்றது. 


என் பெயரோ விக்ரமாதித்தன், ராஜாவுக்கான பெயர். ஆனால் தொங்கும் வேதாளத்தைப் பிடிக்கும் விக்ரமாய் இல்லாமல் அவ்வேதாளமாய் ஆனேன். நான் மட்டும் நினைத்து இருந்தால் ஹீரோ ஹோண்டா பைக் வாங்கி ஹீரோவாய் சென்றிருந்திருக்கலாம், ஷேர் ஆட்டோ, டாட்டா மேக்ஸீ என்று ஏதாவது ஒரு ஊர்தியில் இடுக்கிக்கொண்டு போயிருக்கலாம், இல்லையெனில் அலுவலகம் பக்கத்திலேயே வீடு வாங்கி, நடந்து சென்றே காலத்தை ஓட்டி இருக்கலாம்.


ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த சமுதாயம்.


ஹீரோ ஹோண்டா முடியாது, ஆக்டிவா தான் உனக்கும், சென்னை நெரிசலுக்கும் சரி என்று ஆக்டிங் இல்லாமல் அப்பா சொன்னார். அதுவும் ஒரு வருடம் கழித்தே என்றார்... தொங்கினேன்


ஸ்டாப்பில் நிற்காமல் பேருந்தை நூறடி தள்ளி நிறுத்தினான், தொங்கினேன்


மகளிர்க்கு தனி வரிசை போல ஆண்களுக்கு இல்லாததால், அங்கேயும் பெண்கள் அமர்ந்திருக்க, வேறு வழியின்றி பாவப்பட்ட மற்ற ஆண்களைப் போல நிற்க ஆரம்பித்தே தொங்கினேன்


600 ரூபாய் பாஸில் இஷ்டம் போல செல்லலாம் என்று 3,4 பேருந்துகளைப் பார்த்தால், அதிலும் சின்ன பொடியன் கூட சிங்காரமாய் படிக்கட்டில்.... தொங்கினேன்


23Cஇல் தொங்கினேன், 24Cஇல் தொங்கினேன், 41Dஇல் தொங்கினேன், 27Lஇல் தொங்கினேன், 147Cஇல் தொங்கினேன், 29Cஇல் தொங்கினேன் தொங்கினேன் தொங்கினேன்.. சென்னையின் பல பேருந்துகளில் தொங்கினேன். தாத்தா, பாட்டி, பியுட்டி இவர்களெல்லாம் தொங்க திறனி இல்லாதவர்கள் என்பதால் இறங்கி வழியும் விட்டேன்


என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும், அலுவலக, கல்லூரி நேரங்களை மாற்றிருக்க வேண்டும், பேருந்தில் இன்னும் 18 படிகள் வைத்திருக்க வேண்டும், டீலக்ஸ் பஸ்ஸிற்கு கதவின்றி தயாரித்திருக்க வேண்டும், நான் செல்லும் ரூட்டில் மகளிர்க்கு மட்டும் சிறப்பு பேருந்து இயக்கிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர்.


செய்தார்களா? உள்ளே செல்ல விட்டார்களா இந்த விக்ரமனை. 


என்னை தொங்கும் தோட்டமாய் மாற்றியது யார் குற்றம்?? எனது குற்றமா? முதல் படியில் இருந்த என்னை, “தம்பி கொஞ்சம் வழி விடுப்பா” என்று ஒவ்வொரு ஸ்டாப்பிலும் கெஞ்சலாய் கேட்டு கடைசி படிக்கு கொண்டு வந்த ஆண்ட்டிகளின் குற்றமா?


டீலக்ஸ் கதவை மூடப்பார்த்து டீலில் விட நினைத்தது யார் குற்றம்? கதவே கண் கண்ட தெய்வம் என்று அதைப் இறுகப்பிடித்த எனது குற்றமா? காலியாக இருக்கும் போது திறந்து வைத்து கூட்டம் வரும் போது மூட நினைக்கும் கடமை உணர்வு மிக்க ஓட்டுனரின் குற்றமா?


ஸ்டெல்லா மேரிஸ் பிகர் நோட் வாங்கியது யார் குற்றம்? CAN YOU PLEASE HAVE IT? என்று பீட்டர் இங்கிலாந்து ஷர்ட் போட்டு பீட்டர் விட்ட எனது குற்றமா? இல்லை ஸ்மார்ட்டாய் இருக்கும் என்னை சைலண்டாய் ரசிக்க நோட் வாங்கிய அவளின் குற்றமா??


இந்த கூட்டங்கள் எல்லாம் களையப்படும், குறையப்படும் வரையில், என்னை போன்ற விக்ரமாதித்யன்கள் தொங்கிக்கொண்டே தான் இருப்பர்....


டிஸ்கி: சரி, என்ன மேசேஜ் சொல்றன்னு கேக்குறீங்களா? ஏன்டா எல்லாத்துலயும் மேசேஜ்ஜ பாக்குறீங்க? சரி, படியில் பயணம், நொடியில் மரணம், அதனால் வேண்டும் கவனம். எப்பூடி?வருகைக்கு நன்றி!!

Sunday, 19 September 2010

முக்கோண காதல்- A Samosa Love Story

தடார்..

அருண் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, கார்த்திக் நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..

அருண்: மச்சி எழுந்துடுடா..

கார்த்திக்: கிர்ர்ரர்ர்ர்...
 
அருண்: டேய்.. பன்னி.. எழுந்துடுடா..
 
கார்த்திக்: என்னடா வேணும்?
 
அருண்: மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா? எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..
 
கார்த்திக்: அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்?
 
அருண்: ஏன்டா எனக்கும் அனுஷாக்கும் இப்டி பண்ண?
 
கார்த்திக்: என்னத்த பண்ணேன்?
 
அருண்: ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..
 
கார்த்திக்: நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...
 
அருண்: ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..
 
கார்த்திக்: ஓத்தா.. பொறம்போக்கு..
 
அருண்: கூல் மாதி.. என் இப்ப திட்ற? என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு?

கார்த்திக்: உன் கனவுல எனக்கென்ன வேல?
 
அருண்: வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..

கார்த்திக்: தெளிவா சொல்லுடா..
 
அருண்: ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..
 
கார்த்திக்: உனக்கு கல்யாணமா? பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..
 
அருண்: டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..
 
கார்த்திக்: யாரு? அனுஷா தானே?
 
அருண்: ஆமாடா.. உனக்கு எப்டி?
 
கார்த்திக்: டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா? டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..
 
அருண்: மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..
 
கார்த்திக்: கும்முன்னு அனுஷா இருக்க..
 
அருண்: டேய்.. என் பக்கத்துல நீ..
 
கார்த்திக்: மாப்பிளை தோழன்?
 
அருண்: இல்லடா.. மந்திரம் ஓதுர  அய்யர்..
 
கார்த்திக்: வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி? சரி மேல சொல்லு..
 
அருண்: தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..
 
கார்த்திக்: அப்றோம்..
 
அருண்: அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு..  தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..
 
கார்த்திக்: டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..
 
அருண்: த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா? ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..
கார்த்திக்: நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே..  சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..

அருண் சுடசுட பஜ்ஜியுடன் வர, கார்த்தி பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..
 
அருண்: என்ன Question பேப்பர் மச்சி?

அருண் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்
 
அருண்: UPSC IAS.. டேய் என்னடா நடக்குது? நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா? இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா?
 
கார்த்திக்: மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..
அருண்: போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..

உடனே கார்த்தி மூக்கை பொத்திக்கொண்டே
 
கார்த்திக்: நாயே.. மன்னிச்சு விடுறது இருக்கட்டும். முதல்ல குஸு விடுறத நிறுத்து.. நாத்தம் குடல்ல பொறட்டுது..
 
அருண்: ஹஹாஹா வாயுபகவானை வையாதே..

 
கார்த்திக்: நீ பஜ்ஜி வாங்கிட்டு வர லேட் ஆகும் போதே யோசிச்சேன்டா.. நைசா நாலு, அஞ்சு உன் STACKல Push பண்ணிட்டு இங்க வந்து POP பண்ணிட்ட..
 
அருண்: மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது!
 
கார்த்திக்: என்னடா ஆச்சு?
 
அருண்: நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல?  கேன்டீன்ல சமோசா சாப்டேன்..
 
கார்த்திக்: பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..
 
அருண்: ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..
 
கார்த்திக்: எனக்கே அவ்வையார், வள்ளுவரா? சரி மேல சொல்லு..
 
அருண்: அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அனுஷா..
 
கார்த்திக்: அப்றோம்?
 
அருண்: என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல? சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...
இதை கேட்டு கொண்டிருந்த கார்த்திக் வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்.. பதற்றத்தில்  அருண்.. சிறிது நேரம் கழித்து கார்த்திக் வர..
 
அருண்: என்ன மச்சி ஆச்சு? உடம்பு சரி இல்லையா?
 
கார்த்திக்: சும்மா இருடா
 
அருண்: பஜ்ஜி ஒத்துக்கலையா?
 
கார்த்திக்: ஓனர் வரட்டும், வாஷ்-பேசின் கொஞ்சம் பக்கமாவே வைக்க சொல்லணும்..
 
அருண்: எனி ப்ராப்ளம்? பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்? ஏன்டா வாமிட் பண்ண?
 
கார்த்திக்: நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா?    
 
அருண்: புரியல மச்சி..
 
கார்த்திக்: பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு.. சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம்? பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..
 
அருண்: என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட?
 
கார்த்திக்: எச்சக்கல.. வாங்கி கட்டிக்காத  சொல்லிட்டேன்..  இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா  ஞாபகம் வரும்.. அய்யகோ..
 
அருண்: ரொம்ப சூடா இருக்கியா மச்சி? வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா?
 
கார்த்திக்: வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்கீரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...


வருகைக்கு நன்றி!!

Tuesday, 14 September 2010

லொல்லு சொல்லு-2

புனேவில் இருந்து மாற்றலாகி சென்னை வந்து விட்டேன்.. நான் திரும்ப சென்னைக்கே வரமாட்டேன்னு எங்க அப்பா என்னோட கணிப்பொறிய என் மாமாவுக்கு கொடுத்து விட்டார்.. அதுனால பதிவுகளும் போட முடியல..  புனேவில் கிடைத்த அருமையான நண்பர்களை விட்டு வந்ததில் ரொம்ப வருத்தமா இருக்கு.. விரைவில் அவர்களுக்கும் மாற்றலாகி இங்க வருவாங்கன்னு நம்பிக்க இருக்கு..


சென்னை வந்தா சும்மா இருக்க முடியுமா? வழக்கம் போல திரை அரங்கை முற்றுகை செய்ய ஆரம்பிச்சிட்டேன். முதல்ல காதல் சொல்ல வந்தேன்.. தனது வழக்கமான காமெடி பாணியில் காதலை கலந்து முதல் பாதில அரங்கம் அதிர பொளந்து கட்டிருக்காரு.. ஹீரோக்கும் அவர் நண்பராக வரும் குண்டு பையனுக்கும் நல்ல Chemistry.. சிங் ரோல்ல "இவன் நல்லா வருவான்டா" வர பையன் கிங்.. அவரோட சுட்டி டி.வி. நண்பருக்கு கொடுக்கும் பில்ட்-அப் மியூசிக் ஆகட்டும், கடசில புஸ் ஆகும் போது அரங்கமே அதிருது.. ஹீரோயின் யாருப்பா? சின்ன வயசு நயந்தாரா மாதிரி பப்லீயா இருக்காங்க..   கலகலன்னு போற படம் பிற்பாதியில பொலபொலன்னு கண்ணீர் விடுற அழுவாச்சி காவியமா மாறிடுது.. ரொம்ப செயற்கை தனம். ஹீரோக்கு அழ கூட வரல.. பாவம் சார்.. க்ளைமாக்ஸ் ஏதோ பண்றேன்னு சொதப்பிட்டாரு..  மனசுல ஒட்டவே இல்ல.. அதுவும் கடைசி காட்சி சம்பந்தமே இல்ல.. காதல் சொல்ல வந்தேன்- ரெண்டாவது பாதியால் நொந்து வந்தேன்..நான் மகான் அல்ல.. அதே பொறுப்பே இல்லாத ஹீரோ-லூசு ஹீரோயின்.. பார்த்த உடனே லவ்வு.. நாலு சீரழிந்த சின்ன பசங்க.. முதல் சீன்ல பார்த்த உடனே பின்னால இவங்க பெருசா ஏதோ பண்ண போறாங்க தெரியுது.. அதே மாதிரி அப்பாவ போட, கார்த்தி அவங்கள போட, படத்துல The End போடுறாங்க.. சிம்பிள் கதைய கார்த்தி அஸ்சால்டா தனி ஆளா Carry பண்ணிருக்காரு.. ரசிக்கிற மாதிரி இருந்தாலும், சில இடங்களில் அதே தெனாவட்டு நடிப்ப பார்க்க சலிப்பா இருக்கு.. வேலைக்கு சேர்ந்த முதல் நாள் பண்ற அலப்பறை இருக்கே, ரகளை.. "லவ் மேரேஜ் செட் ஆகுதுன்னு அரேங்கேத் மேரேஜ் பேசலாம்னு வந்துருக்கேன் அங்கிள்", அதே மாதிரி ரௌடிய Friend பிடிக்கிற சீன் விசில்.... காஜல் அழகு.. அவ்ளோ தான்.. அப்பாவ வர ஜெயப்ரகாஷ் நல்லா தேர்வு.. Overdo செய்யாம அற்புதமா பண்ணிருக்காரு.. அந்த இளைஞர்கள் செட் கனகச்சிதமான தேர்வு.. படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்சே Character Selection. அப்பா, பையன், நண்பர்கள், தங்கை எல்லாம் நம்பள சுத்தி இருக்குறவங்க மாதிரியே தெரியுது.. படத்துல மிகபெரிய மைனஸ் முதல் பாதிக்கும், ரெண்டாவது பாதிக்கும் சம்பந்தமே இல்லாம இருக்குற மாதிரி ஒரு பீல்.. கமர்சியல் சினிமா பண்ணனுங்கறுதுக்காக செய்த மாதிரி இருக்கு.. அவ்ளோ பெரிய ரௌடிய இவங்க போடுற சீன் ரசிக்குற மாதிரி இருந்தாலும், ஏத்துக்க முடில.. யுவன் பாடல் இசை, பின்னணி இசை இரண்டிலும் பின்னி பெடல் எடுத்துருக்காரு.. அதுவும் கிளைமாக்ஸ்ல அந்த நாலு பசங்களுக்கு வர இசை அந்தர்.. மொத்தத்தில் நான் மகான் அல்ல- ரொம்ப மோசமெல்லாம் இல்ல.. ஒரு முறை பாக்கலாம்..இந்த Federerku என்ன பிரச்சன தெரில.. அரை இறுதி வரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒரு செட் கூட தோக்காம இருந்து, Djokovic கிட்ட தோற்றுட்டாறு.. செம காண்டு ஆகிட்டேன் .. இது வரைக்கும் சூப்பரா ஆடி, நா ரொம்ப Expect பண்ணிட்டேன், தக்காளி எங்க ஆளுக்கு தான் கப்புன்னு.. அதுவும் 2 Match Point இருந்தும், அட விட்டுட்டாரு.. இதுவும் Nadalக்கு எழுதி வச்சாச்சு போல..


சந்தோசமான விஷயத்தோட முடிக்கலாம், என் பிறந்த நாள் அன்றே பிறந்த நாள் கொண்டாடிய தாரணி அக்காவுக்கு என்னோட வாழ்த்துக்கள்.. வருகைக்கு நன்றி!!

Friday, 30 July 2010

இவர்கள் ஐ.பி.எல் ஆரம்பித்தால்

நம்ப லலித் மோடி பிரச்சன எப்போ ஓயும்னு தெரில.. எட்டு டீம் வச்சதுக்கே எட்டுபட்டில இருந்தும் கேஸ் போட்டாங்க.. இதுல புதுசா வேற ரெண்டு டீம்.. புதுசு புதுசா ரூல்ஸ் வேற.. சரி நம்ப ஆளுங்க டீம் ஆரம்பிச்சா என்னென்ன ரூல்ஸ் வைப்பாங்க? அந்த டீம் எப்டி இருக்கும்? ஒரு கற்பனைஅஜித் குமார்: டீம்ல ஆடறவங்க ஜெர்சி கோட்-சூட்.. வீரர்கள் எல்லாரும் கூலேர்ஸ் போட்டு இருக்கணும்.. நடன மங்கைகள் பிகினில இருக்கணும்.. வருஷத்துக்கு ஒரு மேட்ச் தான் ஆடுவாங்க.. அதுவும் தோக்கணும்.. 'தல' ரொம்ப முக்கியம்.. அதுனால காப்க்கு பதிலா ஹெல்மெட் தான் யூஸ் பண்ணனும்.. ஸ்ட்ரோக் வச்சாலும் 'தல நீ ஆடு தல'ன்னு கோஷம் போடணும்.. ஜால்ரா போட சின்ன நடிகர்கள் எல்லாம் டீம்ல இருக்கணும்.. நடுவுல போர் அடிச்சுடுனா கார் ஓட்ட கிளம்பிடணும்.. டீம்ல எல்லாரும் ரன்க்கு ஓடுவாங்க.. ஆனா இவங்க டீம்ல எல்லாரும் நடையா நடையா நடந்துட்டே இருப்பாங்க..விஜய்: அப்பா சொல்ற வீரர்கள் தான் டீம்ல இருக்கணும்.. பேரரசு, பாபுசிவன், எஸ்.பி. ராஜ்குமார் இவங்க தான் கோச்.. பாஸ்ட் பௌலிங், ஸ்பின் பௌலிங் எதுவா இருந்தாலும் பால் பேட் கிட்ட வரும் போது, ப்ரீஜ பண்ணி பஞ்ச் டயலாக் சொல்லிட்டு தான் அடிக்கணும்.. முதல் பந்து வீசுறதுக்கு முன்னாடி ஒரு இன்ட்ரோ சாங்.. நடுவுல பறந்து பறந்து அடிக்கணும், ஒரே மாதிரி ஷோட்ஸ் ஆடணும், சில சமயம் பிட்ச்ல ஆடாம நடன மங்கைகள் கூட ஆடணும்.. 2 ரன் தான் அடிசிருக்கணும்.. ஆனாலும் 'வெற்றிகரமான நூறாவது ரன்'னு போஸ்டர் அடிக்கணும்.. ரன் அடிக்க வழி இல்லைனா, டிக்கெட் விலைய குறைக்கணும்.. அப்பயும் பருப்பு வேகலன்னா ரெட் கார்டு கொடுத்தாலும் கமுக்கமா இருக்கணும்.. தெலுகு, மலையாள வீரர்கள் ஆடுறத Observe பண்ணனும்.. எல்லா ஆட்டமும் தோட்ட உடனே அரசியலுக்கு வருவேன்னு பேட்டி கொடுக்கணும்.. மெசேஜ், இ-மெயில்ல 'லைவ் ஸ்கோர்' வரும்.. ஆனா இவங்க டீம் ஆடுனா மட்டும் கலாய் மெசேஜ் இலவசமா வரும், ஸ்கோர்க்கு பதிலா..சூரியா: ஷாட் அடிச்சாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி.. 'ஜோ திஸ் இஸ் போர் யூ' சொல்லணும்.. 10 வயசு சச்சின்னா மாறி மாயஜாலம் காட்டணும், சிங்கமா மாறி கடுங்கோபத்த காட்டணும்.. அப்போ தான் குழந்தைங்க போன் பண்ணி, 'அங்கிள் அங்கிள் எப்டி அங்கிள் சிங்கமா மாறுனீங்க?' கேக்கும்.. சூல பெரிய ஹீல்ஸ் இருக்கணும்..


டி. ராஜேந்தர்: பேட் இல்ல, ஆனா ரன் அடிப்பேன்.. பால் இல்ல ஆனா விக்கெட் எடுப்பேன்.. கேட்ச் புடிக்கல, ஆனா கத்துவேன்.. நடன மங்கைகள் இல்ல, ஆனாலும் இசை, டான்ஸ் ஆடுவேன்.. எனக்கு வாயும், கையும் இருக்கு சார்.. அப்டியே எல்லாமே பண்ணுவேன்.. ஒரு கையுல பேட்.. சிக்ஸ், பௌண்டரி, டமார் டமார்.. இன்னொரு கையுல பால்.. ஸ்பின், பாஸ்ட், மீடியம், விக்கெட்டு, அவுட்டு.. வாயுல மியூசிக்.. வச்சிருக்கேன் நான் வச்சிருக்கேன் .. உம்மா டும்முக்கு டும்மா, ஆஆஆ அம்மா, டகடக டும் டும், டகடக டும் டும்.. எதிர் டீம் வீரர்களுக்கு எல்லா தங்கச்சிகள கட்டி கொடுத்து மேட்ச்ல தோட்டுடுவாங்க.. கடைசிலே தங்கச்சிகளுக்கு எதாவது ஆச்சுனா பொங்கி எழுந்து எல்லா மாட்ச்சும் ஜெயப்பாங்க.. நடன மங்கைகள தொடாம ஆடுவாங்க.. சிம்பு தான் அவங்க கூட ஆடணும்னு சொல்வாங்க.. ரன் அடிச்சாலும் விக்கெட் எடுத்தாலும் பஞ்ச் டயலாக் பேசிட்டு தான் அடுத்த காரியத்துல இறங்குவாங்க.. "ஜெயபாலு, போட்டே நீ நோ-பாலு" "காளி- இப்போ நீ காலி" "சுகுமாரு- நீ ஆடுற தாறுமாறு" "வாயில போடுறேன் சிக்லேட்டு, பால்ல போடறேன் விக்கெட்டு" இப்டி பாலுக்கு ஒரு வசனம் பேசியே ஆகணும்..

கமல்ஹாசன்: டீம்ல பதினொரு பேரும் ஒருத்தர் தான்.. மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடி மேக்-அப் போட ஹாலிவுட்ல இருந்து வருவாங்க.. ஒரு ஒரு வீரருக்கும் மேக்-அப் போடுறதுலேயே நேரம் போயிடும் ஒரு குற்றச்சாட்டு..மணிரத்னம்: தமிழ் வீரர்கள விட ஹிந்தி வீரர்கள் மேல தான் கண்ணு.. முன்னாடி டீம்ல அர்விந்த் சாமி, மாதவன், ஆனா இப்போ அபிஷேக் பச்சன்.. நார்த்தயே நினச்சு ஆடுறதால தமிழ் வீரர்கள் கோட்ட விட்டுடுறாங்க.. அங்கேயும் தோல்வி, இங்கேயும் தோல்வி.. இவங்க அணி நல்ல ஆடாடியும் நல்ல ஆடுனாங்கன்னு சொல்ல சொல்லி ஒரு கூட்டம் சுத்தும்.. கிரௌண்ட் அழகா இருக்கும், மியூசிக் நல்ல இருக்கும், வீரர்கள் கூட நல்ல ஆடற மாதிரி ஆடுவாங்க, ஆனாலும் டார்கெட் பெருசா இருப்பதால் தோத்துடுவாங்க..அம்மா டீம்: மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எல்லாரும் அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்.. எங்க மேட்ச் நடக்கும் போதும் இது நடக்குமோன்னு பயந்து அம்மா கொடநாடு பங்களாக்கு ஓய்வெடுக்க போய்டுவாங்க.. கேப்டன் இல்லாம சில சமயம் டீம் திண்டாடும்.. இன்னொரு 'கேப்டன்'ன சேர்த்துக்கலமான்னு மனசு துடிக்கும்.. ஆனா 'நானே ராஜா நானே மந்திரி' கதையா அடுத்த கட்ட தலைவர் யாரும் வளரமாட்டாங்க.. WISE-CAPTAIN இல்ல.. ஆக்ஸ்சன் (ஏலம்) நடக்கும் பொது இந்த அணி நிலைமை பாவம்.. இருக்குறவங்க எல்லாம் வேற அணிக்கு தாவுவாங்க.. எந்த வீரர வாங்குறது, யாரு நம்ப அணிக்கு வருவாங்கன்னு வழி மேல் விழி வைத்து காத்து இருப்பாங்க.. மேட்ச் எப்போவாது தான் ஆடுவாங்க.. அப்டியே ஆடுனாலும் சப்ப மட்டேர்கெல்லாம் சண்டை, ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க.. வைடு போட்டா என் வைடு பால் போட்டாங்கன்னு ஆர்ப்பாட்டம், வைடு போடலனா என் வைடு போடலனன்னு ஆர்ப்பாட்டம்.. சில சமயம் ஸ்டேடியம் விட்டு வெளிநடப்பு செய்யணும்.. அப்றோம் எல்லாரும் மறந்த உடனே திரும்ப ஆர்பாட்டங்கள் நடத்தணும், அறிக்கை விடணும்..அண்ணன் அழகிரி: மதுரை க்ரௌன்ட்ல மரண அடி அடிப்பாங்க.. 30,000, 50,000 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்ன்னு மேட்ச் ஆரம்பிகற்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க.. டெல்லி கிரௌன்ட்ல ஆசையோட விளையாட போய் பாதி மேட்ச்ல பிடிக்கலன்னு வந்துடுவாங்க.. அப்பா டீமோட கேப்டன் ஆகணும்க்றது தான் நீண்ட நாள் ஆசை..தலைவர் கருணாநிதி: ஒரு டீம்ல 11 வீரர்கள் இருக்கணும் ரூல்ஸ் இருக்கு... ஆனா இவங்க டீம்ல 11 டீம் இருக்கும்.. எத்தன பேரு Auctionல எடுத்தாலும் குடும்ப கண்மணி, கனிமொழிகளுக்கு தான் முதல் உரிமை.. பிட்ச்க்கு வந்தாலும் சரி, பேட் பிடிச்சாலும் சரி, பால் அடிச்சாலும் சரி, ஓடி வந்தாலும் சரி, பௌலிங் பண்ணாலும் சரி, கேட்ச் புடிச்சாலும் சரி, கேட்ச் விட்டாலும் சரி எல்லாத்துக்கும் பாராட்டு விழா நடத்துவாங்க.. வீரர்கள் எல்லாரும் தலைவருக்கு புதுசா எதாவது ஒரு பட்டம் கொடுப்பாங்க.. 'நான் இன்று ஒரு ரன் அடித்தேன் என்றால் அதன் புகழ் முழுக்க தானை தலைவர், தாய்த் தமிழ் ஈன்றெடுத்த தவப்புதல்வரே, அய்யா கலைஞர் அய்யாவையே சேரும்'ன்னு சொல்லணும்.. இதனால் 20௦-20௦ மேட்ச், டெஸ்ட் மாட்ச மாற வாய்ப்புக்கள் இருக்கு.. மேட்ச் முடிஞ்ச உடனே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதம், இலங்கை அணி வீரர்கள் ஆடக்கூடாதுன்னு சோனியா அம்மையாருக்கு கடிதம், கூடவே கதை, வசனம் எழுதி 24 மணி நேரமும் பிஸியாக இருப்பாங்க.. தனக்கு அப்றோம் கேப்டன் பதவி யாருக்குன்னு அய்யாவுக்கே குழப்பம்..


ராமதாஸ் அய்யா: இவரு டீமா இருக்காரா, இல்ல டீம்ல இவர் இருக்காரான்னு சந்தேகம்.. தனியா ஆடுனா ஜெய்க்க முடியாதுன்னு, ஜெய்க்க போற அணி கூட சேர்ந்து ஆடுவாங்க.. ஆனா ஜெயச்ச அப்றோம் எங்களால தான் ஜெய்ச்சீங்கன்னு சொல்லிடுவாங்க.. கோவம் வந்தா எல்லாரையும் கெட்ட வார்த்தையால திட்டுவாங்க.. மேட்ச் ஆடுறட விட மீட்டிங் போட்டு நாம எந்த டீமோட கூட்டணி வச்சு ஆடலாம்னு செயற்குழு தீர்மானத்துல சொல்வாங்க.. 2012ல கப் எங்களுக்கு தான் சொல்லிட்டு இருக்காங்க.. பாக்கலாம்.. ஒரு சீரீஸ்ல ஒரு அணிய பாராட்டி பேசணும், அடுத்த சீரீஸ்ல அவங்கள பச்சை பச்சையா திட்டணும்.. ஏனா அது தான் கூட்டணி தர்மம்..

நித்யானந்தா சுவாமி: மேட்ச் பரபரப்பா போகும்.. பிட்ச்ச பார்த்தா சாமிய காணும்.. பௌண்டரி லைன்ல மாமிய (நடன மங்கைகள்) காணும்.. அணி வீரர்கள் மைதானத்த விட மெத்தைல நல்ல விளையாடுவாங்க.. இவர்கள் ஆடும் ஆட்டத்தை ரகசியமா படம் பிடிக்கணும்.. இல்லன்னா 'அதில் ஆடியது நான் இல்லை.. எனது சுத்தத்தை நிருபிக்க நான் அக்னி குண்டத்தில் இறங்குகிறேன்'னு பிட்ச் நடுவுல நெருப்ப கொழுத்தி இறங்கிடுவாங்க.. எங்கள் அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும்ன்னு போராடுவாங்க..
 
 
வருகைக்கு நன்றி!!

Sunday, 11 July 2010

ராவணன்- ”டென்”ஷன்

கொஞ்ச நாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ப்ளாக் பக்கம் வரமுடியல.. இனி உங்க ஆரோக்யம் கெட்டுப்போனா அதுக்கு நான் பொறுப்பு இல்ல..

எப்டி விஜய் படத்த நல்லா இருக்குன்னு சொன்னா குத்தமோ, அது மாதிரி மணிஜி படங்கள குறை சொன்னா நமக்கு சினிமா அறிவு இல்ல, அவரோட படங்கள ரசிக்க ஒரு இது வேணும், ஞானக்கண் இருந்தா தான் ரசிக்க முடியும்ன்னு என்னமோ சினிமாவ கண்டுபிடிச்சவனோட பேரன்-பேத்திகளாட்டும் சண்டைக்கு வருவாங்க.. பிசா, பர்கர் சாப்பிடுறது எப்டி UBER COOLன்னு காட்டிக்றாங்களோ, அது மாதிரி I’m Fan of Mani Sir Movies சொல்றது ஃபஷனா போச்சு..

ராவணன் படம் எப்டிடான்னு நண்பர்கள் கிட்ட கேட்டா காமரா சூப்பரு, சினிமாடொக்ராபி சீனு, லொக்கேஷன் செம மச்சி, ஒளிப்பதிவு ஒத்தா பின்னிட்டாங்கல, இந்திய சினிமால்ல இது மாதிரி படப்பிடிப்பு இல்ல, லைட்டிங்ல ரகள பண்ணிட்டாங்க மாமா சொல்றாங்க.. இது எல்லாமே ஒரே விஷயம் தான்.. இது கூட தெரியாம மத்தவங்கள குற சொல்வாங்க.. படத்துல நல்லா இருந்ததே இது மட்டும் தான்..

ஏன் எதிர்ப்பார்ப்போட போற? எந்த Expectationsம் இல்லாம படத்த பாக்கணும்ன்னு இன்னும் சில பேரு.. அப்டி பார்த்தா தான் படம் பிடிக்குமாம்.. என்னங்கடா உங்க லாஜிக்.. அப்றோம் என் விஜய் படத்துக்கு மட்டும் குத்துடு, குடையுதுன்னு சொல்றீங்க? அவர் தான் நான் இப்டி நடிப்பேன், என் படம் மொக்கயா தான் இருக்கும்னு ஓப்பனா சொல்றாருல.. அதுக்கும் எதிர்பார்ப்பு இல்லாம போய் பாருங்க..

படத்த பத்தி சொல்லணும்னா, HALF BAKED SCRIPT. ஒழுங்கா இந்தில எடுத்து இருக்கலாம்.. படம் முழுக்க ஒரு செயற்கை தனம்.. தாஜ்மகால்ன்னு ஒரு படம் மணி-பாரதிராஜா எடுத்தாங்களே, அது மாதிரி.. லொக்கேஷன்ஸ் எல்லாமே அந்நியமா தெரிஞ்சது.. படத்தோட ஒன்றி பார்க்க முடியல.. விக்ரம் நல்லா பண்ணிருக்காரு.. ஆனா அவரோட Characterisation சரியா எழுதல.. அவர் சைக்கோவா இல்ல வைகோவான்னு சந்தேகமாவே இருந்துச்சு.. கடசில மணி கூட அவர் வாழ்க்கைல விளையாடிட்டாரு.. ஐசு ஆன்ட்டிக்கு வயசாகிட்டே போகுதே.. லிப்-சிங்க்கும் மிஸ் ஆச்சு.. பல இடத்துல இந்தி உதட்டசைவு.. எடிட்டர் நோட் பண்ணல போல..

இசை, பின்னணில கலக்கிருக்காரு… பாடல்கள் சுமார்.. ஹிந்திக்கு கம்போஸ் பண்ணி அத தமிழுக்கு மொழி பெயர்த்த மாதிரி இருந்துச்சு.. டாக்டர் ராஜசேகரின் உடம்பு எப்புடி இருக்கு ஞாபகங்கள்.. வசனங்கள்ல எல்லா ஊரு பாசையும் பேசுறாங்க.. நெல்லை, கோவைன்னு வால்வோ பஸ்ல ஊர் ஊரா போற மாதிரி ஒரு ஃபீல்..

இதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல.. இந்த காவியத்த சூப்பர், ஆஹோ, தமிழ் சினிமாவ திருப்பி போட்டுச்சு, உலக சினிமாவ பொறட்டி போட்டுச்சு, பலே பேஷ்ஷ்ன்னு சப்போர்ட் பண்ணி நான் புத்திசாலின்னு காட்டிக்கறத விட முட்டாளவே இருந்துடுறேன்..

ஒரு பெரிய ஃபைவ்-ஸ்டார் ஹோட்டலுக்கு போயி, அழகான, மிருதுவான சோபால அமர்ந்து, கலக்கல் டிஷைன் போட்ட தட்ட முன்னால வச்சு, கமகம வாசனையோட உணவ ருசிச்சா உப்பில்ல, சாப்பாட வாயில வைக்க முடில.. அது போல தான் ராவணன்..

ராவணன்- அந்நியன்

வருகைக்கு நன்றி!!

Tuesday, 11 May 2010

கவி-Dieஅருண்: ஒரு மாலை இலவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ஸட்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்


கார்த்திக்: என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு, Dailyum தான் அனுஷாவ பாக்குற.. என்னிக்கும் இல்லமா இன்னிக்கு எதுக்கு Song?

அருண்:
மச்சி.. அனுஷா இன்னிக்கு என்ன பண்ணா கேட்டா நீ Fire-Stationக்கு போன போடுவடா..

கார்த்திக்:
ஏன்டா? நம்ப ரூம கொழுத்த போறாளா?

அருண்:
நா சொன்னது உன்னோட Stomach-Burning அணைக்கடா வெண்கலம்..

கார்த்திக்:
அடத்தூ.. மேட்டர சொல்லு

அருண்:
நா ஃபூட்-பால் க்ரவுண்ட்ல விளையாடிட்டு இருந்தேன்டா

கார்த்திக்:
டேய்.. பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும்.. உனக்கு ஃபூட்-பால் தெரியுமா?

அருண்:
போன வாரம் நாம மைலோ வாங்குனதுக்கு ஃப்ரீயா கொடுத்தாங்களே..

கார்த்திக்:
டேய்.. அது வாலி-பால்டா.. இப்போ தான் புரியுது எப்புடி அந்த பால் மூணு நாள்ல கிழிஞ்சிடுன்னு.. போனா போகட்டும், You Continue..

அருண்:
நா வேடிக்க தான்டா பார்த்தேன்.. ஒரு கால் குறையுது வரியானு ரமேஷ் கேட்டான்.. அதுனால போய் ஆடுனேன்.. எனக்கும் ஃபூட்-பால் தெரியும்டா..

கார்த்திக்:
Chelsea தெரியுமா?

அருண்:
ராபர்ட்டோட ஃபிகருடா.. சப்ப ஃபிகரு, ஆனா அநியாயத்துக்கு சீன போடுவா..

கார்த்திக்:
டேய்.. Gerrard தெரியுமா?

அருண்:
ECE சீனியர்? அவனும் அனுஷாவ ட்ரை பண்றானா? மச்சி நீ தான்டா ஹெல்ப் பண்ணனும்..

கார்த்திக்:
அடத்தூ.. உன்கிட்ட கேட்டேன் பாரு..

அருண்:
மச்சி.. கேளுடா.. அப்போ அனுஷா வந்து என்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு தனியா கூப்டா.. நானும் அவளும் கிறுக்கல் மரத்துக்கு பின்னாடி போனோம்..

கார்த்திக்:
போயி...

அருண்:
அவ சொன்னா எவ்வளவு நேரம் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு தான் மொதல்ல கொடுக்கணும்னு ரொம்ப நாளா காத்துட்டு இருந்தேன்னு சொல்லி வெக்கத்தோட சிரிச்சா..

கார்த்திக்:
டேய்.. கில்லாடிடா நீ.. தந்தாளா?

அருண்:
ஆமா.. தந்தா..

கார்த்திக்:
எங்க? left or right?

அருண்:
டேய்.. பீசாங்கைல எப்டிடா வாங்குறது? Rightல தான்..

கார்த்திக்:
இத்தன நாள் நா தான் பொண்ணுங்க விஷயத்துல கில்லாடின்னு நினச்சேன்.. ஆனா நீ தான்டா உண்மையான ஜலபுலஜன்க்ஸ்.. இன்னும் ரெண்டு நாளைக்கு அந்த Right Handa கழுவ மாட்ட..

அருண்:
ஏன்டா?

கார்த்திக்:
அவ முத்தம் தந்தால..?

அருண்:
முத்தமா?

கார்த்திக்:
அப்போ இல்லயா?

அருண்:
நா முத்தம் தந்தான்னு சொல்லவே இல்லயே?

கார்த்திக்:
அட நாயே நீ கொடுத்த பில்ட்-அப்க்கு நா என்னமோ imagine பண்ணேனே.. இப்டி பொத்துனு போட்டுட்டியே?

அருண்:
அவ மேரேஜ்- இன்விடேஷன் தந்தாடா..

கார்த்திக்:
என்னது? அதுக்குள்ள கல்யாணமா?

அருண்:
23 வயசு ஆச்சுடா.. சின்ன வயஸா என்ன?

கார்த்திக்:
டேய்.. அப்போ இவ்ளோ நாளு வயஸு பெரிய பொண்ணயா லவ் பண்ணிட்டு இருந்த? எத்தன வருஷம் எந்தெந்த க்லாஸ்ல பேஸ்மெண்ட் போட்டா?             
 

அருண்: ஷப்பா.. எல்லாத்தயும் அரகொறையா கேக்குறதே உனக்கு வேலயா போச்சு.. கல்யாணம் அவ அக்காக்கு..

கார்த்திக்:
ஓ.. அவங்க அக்கா வேற இருக்குறால அவங்கொக்கா..

அருண்:
என்ன Chief-Guestஆ Invite பண்ணிருக்காடா..

கார்த்திக்:
ஆமா.. நீ தான் சீப்பா கிஃப்ட் தருவ.. அதுனால போல..

அருண்:
மொக்க மண்டையா..

கார்த்திக்:
பின்ன இது என்ன 500 பேருக்கு இலவச திருமணமா இல்ல விருது வழங்கும் விழவா Chief-Guestஆ கூப்ட..

அருண்:
ஸாரிடா, டங்க்-ஸ்லிப் ஆகிடிச்சு.. பத்திரிக்கைல முதல் தடவையா பேர பாக்குறேனா.. அதான்..

கார்த்திக்:
கொய்யால.. பெறுநர்ல பேரு வந்ததுக்கே இந்த ஆட்டமா? மாப்பிள்ளையா உன் பேரு வந்தா புடிக்க முடியாது போல.. ஆனா ஒரு ஐடியா..

அருண்:
கல்யாணத்துக்கு என்ன கிஃப்ட் வாங்குறதுன்னா?

கார்த்திக்:
இல்லடா, இப்போ அனுஷா அக்காக்கு கல்யாணம்னா அவளுக்கு ரூட் க்ளியர் ஆகிடிச்சு.. இப்போ அந்த ரூட்ல நாம காதல் வண்டிய ஒட்டணும்டா..

அருண்:
நாமலா? டேய்.. உன் மனசுல இந்த ஆச வேற இருக்கா?

கார்த்திக்:
ஒரு ஃப்லோல சொல்டேன்டா.. கிருஷ்ணர் எப்பிடி அர்ஜுணர்க்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்தாரோ அது மாதிரி உன் காதலுக்கு நா இருக்கேன்டா..

அருண்:
சரி ஐடியாவ சொல்லு..

கார்த்திக்:
பொண்ணுங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் Snacks, Pizza, நகை, ட்ரெஸ், பொம்ம, Cute Heroes அப்றோம்.... கவிதை..

அருண்:
ஸோ நாம என்ன பண்ண போறோம்?

கார்த்திக்:
அவளுக்கு கவிதையா ஒரு லவ் லெட்டர் எழுதலாம்டா.. லவ் லெட்டர்..

அருண்:
மச்சி வேணும்னா அந்த முன்னாடி சொன்ன Snacks, Pizza, பொம்ம ட்ரை பண்ணலாம்டா.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்றத விட்டுட்டு தெரியாத விஷயங்கள எதுக்கு பண்ணனும்?

கார்த்திக்:
இது தான்டா பெரிய சக்ஸஸ் ஆகும்..

அருண்:
கல்யாண பத்திரிக்கைல பேர் வந்துச்சுன்னு சந்தோசப் பட்டேன்.. ஆன இப்போ நீ கொடுக்குற Ideaல கருமாரி பத்திரிக்கைல பேர் வரும் போல இருக்கே.. அப்றோம் கண்ணீர் அஞ்சலில என் ஃபோட்டோவ நடுவுல போட்டு காலேஜ் ஃபுல்லா ஒட்டுவாங்கடா.. இது வேணாம்..

கார்த்திக்:
டேய் பயந்தவனுக்கு பொக்க ஃபிகர் கூட மடியாதுன்னு வள்ளுவர் சொல்லிருக்கார்டா..


அருண்:
அவர் 1330 சொல்லுவாருடா.. எனக்கு கவிதை எல்லாம் எழுத வராதுடா.. ஸ்கூல்ல நா மனப்பாட பாடல் எழுத சொன்னாலே முழிச்சிட்டு இருப்பேன்.. கவிதைலா?

கார்த்திக்:
நா எதுக்குடா இருக்கேன்..

அருண்:
நீ கவிதை எழுதுவியாடா?

கார்த்திக்:
மச்சி.. எனக்குல்ல ஆயிரம் திறமைகள் ஒழிந்து இருக்குடா..இனிமேல் ஒண்ணு ஒண்ணா உனக்கு காட்ட போறேன்.. 

2 மணி நேரம் கழித்து பார்த்தால் அந்த அறையில் எங்கும் காகித குவியல்கள்.. கார்த்திக் வாயில் பேனாவை வைத்து எதோ யோசித்து கொண்டுருக்க, அருண் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டுருக்கிறான்


கார்த்திக்:
அன்க்க்க்..

அருண்:
என்னடா..

கார்த்திக்:
அது இல்லடா..

அருண்:
டேய்.. இது என்ன எக்ஸாம் பேப்பராடா? இப்டி மறச்சு மறச்சு எழுதுற? என்ன எழுதுறன்னு காட்டுடா..

கார்த்திக்:
மச்சி.. கற்பனை குதிரைல பயனிக்கும் போது லிஃப்ட் கேட்டு Disturb பண்ணாதடா..

அருண்:
டேய்.. டேய்.. நா முத்துக்குமார் மச்சான் மாதிரியே பேசாதடா
 
5 நிமிடங்கள் கழித்து

கார்த்திக்:
முடிச்சிட்டேன்டா..

அருண்:
என்னடா இங்கிலிஷ்ல எழுதிருக்க?

கார்த்திக்:
இப்போல்லா எந்த பொண்ணுடா தமிழ் கவிதை படிக்கிறாங்க?? நீ எப்டி இருக்குனு சொல்லு..
 
Once I dreamt of playing See-saw
And you were with me Anusha
Your childish speech is as sweet as Badushah
To hear this I will drop my jaw
 

அருண்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....

கார்த்திக்:
மச்சி கீழ படிடா
 
Anusha you are my heart-beat
I swear I wont cheat
Sooner or later we will meet 
Then I will sweep you off your feet

அருண்:
மச்சான்ன்ன்ன்ன்ன்....


கார்த்திக்:
எப்புடி?
 
I cant wait till Valentine's day
I Love you is what I want to Say
I love you Anusha 
Come let us play See-saw

கார்த்திக்:
ஏன் மச்சா கண் கலங்கிருக்கு? ஓஓ.. நமக்காக இவ்லோ பண்றானேன்னு ஆனந்த கண்ணீரா?

அருண்:
டேய்.. இதலா ஒரு கவிதைன்னு என்ன படிக்க வச்சிட்டியேடா.. சொரி நாயே..

கார்த்திக்:
ஏன்டா புடிக்கலயா.. கவிதைல எதாவது Changes?

அருண்:
டேய்.. இத கவிதைன்னு சொல்றத நிறுத்து.. அசிங்கமா திட்டிட போறேன்.. அவள கரெக்ட் பண்ண ஐடியா தாடான்னு கேட்டேன், இத அவகிட்ட கொடுத்து ரெட் பென்ல கரெக்ட் பண்ண கேக்கல.. யோசிச்சேன்டா.. எனக்குல்ல ஆயிரம் திறமை ஒழிஞ்சு இருக்கு சொல்லும் போதே யோசிச்சேன்.. அது ஒழிஞ்சே இருக்கட்டும், வெளிய காட்டாத..

கார்த்திக்:
மக்சி.. உனக்கு Poem types தெரியுமா? இது Englishல Rareஅ எழுதுற Genreடா.. First ரெண்டு லைன்ல கடசி வார்த்தை கடசி ரெண்டு லைன்ல கடசி வார்தையா வருது பாருடா.. இதெல்லம் எழுத டலென்ட் வேணும்..

அருண்:
டேய்.. ஓடிடு அப்றோம் உனக்கு கண்ணீர் அஞ்சலி அடிக்க வேண்டி இருக்கும், இத கசக்கி..

கார்த்திக்:
மச்சி.. வேணாம்டா..

அருண்:
கசக்கி குப்ப தொட்டில போட மாட்டேன்டா.. அப்டி கசக்கி போட்டா குப்ப தொட்டிக்கே அசிங்கம்..

கார்த்திக்:
மச்சி வேணா Greeting-card?

அருண்:
எனக்கு லவ்வே வேணாம்டா.. வருகைக்கு நன்றி!!

Sunday, 2 May 2010

சுறா - வேக(மா)வே இல்ல

சுறா- உங்க மொக்க எங்க மொக்க இல்ல, சூற மொக்க.. அசுர மொக்க. அதுனால தான் என்னமோ படத்துக்கு சுறான்னு வச்சிட்டாங்க.. இந்த படத்த சினிமா வரலாற்று கல்வெட்டுல பொறிக்கணும்.. ஒருத்தரோட 50வது படத்த எப்படில்லா எடுக்கக்கூடாதுன்னு இத பார்த்து வருங்கால சந்ததியினர் பயன்பெறுவாங்க..

 
புதுசா புதுசா இருக்கா?

எல்லாரும் சுறா எங்க தேடுறாங்க- விஜய் நீந்திக்கிட்டே பறக்குற இண்ட்ரோ- தத்துவ முத்துக்கள் சிதறியிருக்கும் பாட்டு-விஜய்யோட லட்சியம்-காமெடி சீன்-ஹீரோயின் இண்ட்ரோ- ஹீரோயின்-விஜய்-வடிவேலு மொக்க காமெடி-வில்லன் இண்ட்ரோ- பாட்டு-ஃபைட்டு-லட்சியத்துக்கு தடையா இருக்குற வில்லனுக்கு சவால்.. இத பாக்குற நமக்கு முட்டிட்டு  நிக்குது; நான் ஆத்திரத்த சொன்னேன்.. அப்றோம் விஜய் கோட்டு, கண்ணாடி போட்டு கெட்-அப் மாற்றி பழிவாங்குறாரு.. நடுவுல கோடைக்கால சுற்றுலாக்கு வர மாதிரி தமன்னா டான்ஸ் ஆடிட்டு போறாங்க-அப்றோம் விஜய் போற்றி ஆளுக்கொரு டயலாக்குன்னு நம்ப உசுர வாங்குறாங்க… வழக்கம்போல சண்ட-க்ளைமாக்ஸ்ன்னு படம் முடியுது..
 
 
சுறா மேனரிசம்ஸ்:
 
விஜய் இன்னும் இது மாதிரி ஒரு 3 படம் நடிச்சா தமிழ்நாட்டு மக்கள் தொகைல்ல பாதி குறஞ்சிடும் (மீதிய நம்ப தல ஒரே படத்துல பாத்துப்பாரு).. படத்துல புதுசா என்ன இருக்குன்னு கேட்டா அவர் போட்டுருக்குற செயின்.. போன படத்துல பண்ண மாதிரி கர்சீப், கருப்பு கோட்டு, ஃபாரின் காரு, கண்ணாடின்னு பழய பஞ்சாகத்த பாடிட்டு இருக்காரு.. கருகுனாலும் பரவாயில்லன்னு சுட்டுக்கிட்டே இருக்காரு… ஆனா பாவம் மாவு தான் இல்ல... நடந்தா சுனாமி வருதாம், சூறாவளி வருதாம்—பாக்குற நமக்கு தலவலி தான் வருது… வழக்கம் போல பல்ல கடிக்குறது, குழந்தைகளை கொஞ்சுறது, மூக்க உறியது, ஹீரோயின் டவுசர தூக்குறது, பட்டக்ஸ்ஸ தொடுறது, கைய ஆட்டி காமெடின்னு வாய்ஸ் மாடுலேசன்ல குழஞ்சி பேசுறது, பிதாமகன் விக்ரம் மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு டயலாக் சொல்லுறதுன்னு கொடும படுத்துறாரு.. அவர் பாணியில “என் படத்த பாக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சு பாரு.. ஏனா ஒரு தடவ புக் பண்ணிட்டனா அப்றோம் யோசிக்க முடியாது”

 
தமன்னா-கம்முன்னா, துணி எல்லாம் கம்மின்னா: 
தமன்னா அதே லூசு ஹீரோயின், அவங்க ஃபெமிலியும் அதே மாதிரி.. விஜய் பேனா வாங்குன உடனே லவ் வந்துடுச்சாம்.. இது மாதிரி பொண்ணுங்க நான் படிச்ச ஸ்கூல்ல இருந்துருக்கலாம்.. பாட்டுல்ல தாராளம், பையா விட இதுல ட்ரெஸ் இன்னும் குறைச்சல்.. இதுக்கு பேசாம முமைத் கான், மும்தாஜ், ரகசியாவ ஹீரோயின்னா போட்டுருக்கலாம்.. அவங்களும் இதே தான் செய்றாங்க.. ஆ சாங்கு சாங்கு.. அப்றோம் தூங்கு தூங்கு..
 
 
சார் சப்ப காமெடி சார் நீங்க: 
வில்லன் இவருக்கும் நடிப்பும் வரல, லிப்-சிங்க்கும் வரல.. அப்டியே டெலுகு தேசத்துலு செட்டில் காரு, தமிழ் பிலிமிலு ஆக்டிங் பெர்பாமன்ஸ் சேவை போதும் காரு.. யார் படத்துல வர பேய் பொம்ம மாதிரி வாய மேல, கீழ் தான் ஆட்டிட்டே இருக்காரு.. ஊ, ஆ தவிர அங்க ஒண்ணும் காணோம்.. வேட்டைக்காரன் மாதிரி நிறய வில்லன்ஸ் இல்ல, அது ஒரே ஆறுதல்.. இவரோட அடியாட்கள் இன்னும் காமெடி.. லைன்னா வந்து விஜய் கிட்ட அடி வாங்குறாங்க.. தீபாவளி ராக்கெட்க்கும், ராக்கெட் லான்ச்சருக்கும் வித்தியாசம் தெரியாத பசங்களா இருக்காங்க..
 
 
கடிவேலு:
 
வடிவேலு காமெடின்னு மொக்கய போட, விஜய் மொக்கன்னு காமெடி போட, நாமளும் ஒரு குட்டி தூக்கம் போடலாம்.. வேட்டைக்காரன் முதற்பாதில்ல காமெடி பரவாலைய்யா இருந்துச்சு.. இந்த படத்துல எப்படா இடைவேளை வரும்ன்னு காக்க வச்சிட்டாங்க..
 
 
பாட்டு-அதிர்வேட்டு:
 
படத்துல நல்லா இருந்த ஒரே விஷயம்- பாட்டு, டான்ஸ், ரெண்டாவது ஃபைட்.. கண்ண கூச வைக்குற ட்ரெஸ் அவ்வளவா இல்ல.. அறிமுக சாங் குத்து டைப்பா இல்லாம புதுசா இருந்துது.. பொம்மாயி, நான் நடந்தால் அதிரடி டான்ஸ் பட்டய கிளப்பிட்டாரு.. இதயே வச்சு கடைய எத்தன நாளைக்கு ஓட்ட போறீங்க? பேசாம டான்ஸ், சாங் சம்பந்தப்பட்ட படமா நடிங்க- சலங்கை ஒலி, STEP UP-2 மாதிரி.. இல்லன்னா விஜய் ஜோசப் ஜாக்சன்னு ஆல்பம் ரீலிஸ் பண்ணுங்க.. (Thriller, Dangerous, Blood on the Floor- டைட்டில் கூட பொருத்தமா இருக்கு) 
 
 
டை-லாக் (DIELOCK):
 
கலெக்டர் முதற்கொண்டு ஊர்மக்கள் வரை எல்லாரையும் பஞ்ச் டையலாக் பேச வச்சிட்டாரு வசனகர்த்தா.. வலையில சிக்க எறா இல்லடா சுசுசுசுசுசுசுசுசுர்ர்ர்ர்ர்ர்றா, இவன் பார்த்தா கடல்லே பத்திகிட்டு எரியும், என்கூட இருக்குறவங்க சின்னப்பசங்க இல்ல, சிங்கக்குட்டி, சிறுத்தக்குட்டி (கவுண்டமணி ஜெயிந்த் காமெடி பூனைக்குட்டி தான் ஞாபகம் வந்துச்சு) மனசுல பதியுற மாதிரி வசனங்களை எழுதி இருக்காரு.. அரசியல் பிரசவத்துக்கு, சே சே பிரவேசத்துக்கும் அங்கிட்டு இங்கிட்டுன்னு கொஞ்சம் இருக்கு..

 
அடுத்து என்ன?

யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல நான் இப்டி தான் நடிப்பேன்னு முடிவோட இருக்குறவர என்ன சொல்றது.. நாலு மாசம் தூங்கமாட்டன்னு பாடுறாரு.. இப்டி நாலு மாசத்துக்கு ஒரு படத்த கொடுத்து நம்பள தூங்கவுட மாட்டேங்குறாரு.. இந்த படம் குப்பைன்னு குப்பத்தொட்டில போட்டா அதுக்கே அசிங்கம்.. திரும்ப திரும்ப அதயே செஞ்சிட்டு இருக்காரு.. பாக்குற நமக்கு போர் அடிக்குற மாதிரி, இவருக்கு போர் அடிக்கவே அடிக்காதா? அதுக்கு பழய படங்களோட சீன்ஸ் எடுத்து ஒரு படமா ரிலிஸ் பண்ணுங்க..


விஜய் இந்த படத்த பத்தி என்ன நினைக்குறீங்க?

ஒரு தடவ என் படத்த பாத்தேன்னா அதுக்கு அப்றோம் நானே திரும்ப பாக்கமாட்டேன்.. இவங்க பொழக்க சன் பிக்சர்ஸ்ஸ நம்புறாங்க,, நீங்க பொழைக்க நான் சொல்றத நம்புங்க.. YOU-TUBE, MUSIC CHANNELS இதுல பாட்டு போடுவாங்க.. அத மட்டும் பாருங்க.. அதையும் மீறி பாப்பேன்னா எனக்கென்ன, பாருங்க.. அப்றோம் என்ன மாதிரி தலவலியோட Review எழுதாத வரைக்கும் நல்லது..
 
இதுக்கு பூச்செண்டு ஒண்ணு தான் குறைச்சல்.. போயா கடுப்ப கிளப்பிட்டு..

 
சுறா- ஆள விட்றா
 
டிஸ்கி: புது வலைப்பூ- வருகை தாங்க- தங்கலீஸ்
 
வருகைக்கு நன்றி!! 

Wednesday, 28 April 2010

மாஸ்டர் பிளான்-2

5 .05 - தாத்தா கடைலே மீட்டிங்..

அருண்: டேய்.. அலாரம் ஒழுங்கா வேல செய்யுமான்னே சந்தேகத்துல தூங்கவே இல்ல.. நீ வேற பச்சை தண்ணில குளிக்க வச்சிட்ட.. உடம்புலா நடுங்குது.. என்னதான்டா பிளான்?

கார்த்திக்: இன்னிக்கு என்ன?


அருண்: டேய்.. இதுக்கா காலைலே எழுப்பிவிட்ட?
 
கார்த்திக்: நீ எல்லாம் எப்ப வளர போறியோ?  உனக்கு லவ் ஒன்னு தான் கேடு..
 
அருண்: சாரி மச்சி.. இன்னிக்கு.. இன்னிக்கு...
 
கார்த்திக்: வெள்ளி கிழமை.. அவ காலைலே அவங்க அப்பா-அம்மா கூட கோவிலுக்கு வருவா... நாமளும் போறோம்.. போயி..
 
அருண்: டேய்.. வேணாம்டா.. விட்டா சம்பந்தம் பேசிடுவ போல.. அப்றோம் படிக்கிற வயசுல எதுக்கு உனக்கு லவ்வுன்னு அட்வைஸ் பண்ணுவாங்க.. இல்ல கோவில் நடைய சாத்திட்டு நம்பள நல்லா சாத்துவாங்க..  
கார்த்திக்: அடச்சீ.. உனக்குலா அவ்வளவு பில்ட்-அப் கொடுக்க மாட்டேன்டா.. தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போயிட்ட..  என் பிளான் மிஸ் ஆகாதுடா.. இது மூலமா அவளுக்கு உன் மேல ஒரு இது வரும்.. அந்த இத வச்சு நாம  சாரி நீ ஒரு அத டெவலப் பண்ணலாம்..

அருண்: கோவிலுக்கு போனா நல்ல பையன் இமேஜ் கிடைக்கும்.. அதானே உன் ப்ளான்?? அப்றோம் என்ன அம்பியா நினைச்சிட்டா?
 
கார்த்திக்: அம்பியாக பயந்து அவளுக்கு தம்பி ஆகிடாதே.. அவ்ளோ தான் சொல்ல முடியும்..

தாத்தா கடையில் இருந்து அருணின் வண்டியில் கிளம்பி அவர்கள் கோவில் வந்தடைகிறார்கள்..
 
அருண்: டேய்.. பைக்க வேகமா ஓட்டிட்டு வந்துட்ட.. குளிர் தாங்கலடா.. அப்டியே விறைஞ்சி போயிட்டேன்.. போகும் போது சூடா ஒரு காபி வாங்கித்தாடா..
 
அப்போ அனுஷா அவங்க அப்பா-அம்மா கூட வர,
 
அருண்: டேய் டேய்.. அவங்க வராங்க... வாடா போலாம்...
 
கார்த்திக்: மச்சி.. இப்டியே போனோம்னா அவளுக்கு சந்தேகம் வரும்டா... மொதல்ல அவங்க போகட்டும்.. நாம அடுத்து போயி  எதேச்சையா அவள பாக்குற மாதிரி இருக்கணும்...
 
அருண்: சீனு மச்சி.. உன் மூளையே மூளைடா..
 
கார்த்திக்: ரொம்ப கூவாத.. காபி கண்டிப்பா வாங்கி தரேன்.. 

அவர்கள் பின்னாலே சில்லறை பசங்க கோவிலுக்குள் நுழைகிறார்கள்.. அனுஷா பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறாள்..
 
அருண்: மச்சி.. என்னடா பேசவே மாட்டேன்கிறா?
 
கார்த்திக்: இந்த பொண்ணுங்களே இப்டி தான் மச்சி.. மெசேஜ்ல வாய்கிழிய பேசுவாங்க.. நேர்ல பார்த்தா ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க, வீட்ல ஸ்ட்ரிக்ட்ன்னு  சீன  போட வேண்டியது.. நல்ல பொண்ணுங்கன்னு பில்ட்-அப் கொடுப்பாங்க மச்சி..
 
அருண்: எப்டிடா உன்னால மட்டும்?
 
கார்த்திக்: என் அருமை உனக்கு தெரியுது.. மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குது..
 
புர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
கார்த்திக்: டேய்.. என்னடா கோவில்ல வந்து.. கருமம்..
 
அருண்: மச்சி.. மொபைல் வைப்ரேட்சன்டா…
 
1 MESSAGE RECEIVED- ANU
 
Hi. Wassup? To templ nd al?
 
அருண்: என்னடா சொல்றது?
 
கார்த்திக்: உன்ன பாக்க தான் வந்தோம்னு சொல்லிடு
 
அருண்: டேய்,. இது தான் உன் ஐடியாவா? காலங்காத்தால கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்றியா?
 
கார்த்திக்: ஹாஹா.. அப்டி டைப் பண்ணி கடசியில  jus kidding yaar, :P, :D சேர்த்துக்கோ.. பொண்ணுங்களுக்கு அது தான்டா பிடிக்கும்..
 
Came 2 see u :P Jus kidding yaar :D
 
MESSAGE SENT
 
DELIVERED TO ANU
 
அருண்: என்னடா ரிப்ளையே வரல? வட போச்சா?
 
கார்த்திக்: பொறுமையா இருடா..
 
அனுவும் அவங்க அப்பா-அம்மாவும் ஒரு இடத்தில் உட்கார, அதுக்கு நேரெதிர் சில்லறை பசங்க அமர்ந்தார்கள்..
 
அருண்: என்னடா பண்றது?
 
கார்த்திக்: பிரசாதம் சாப்டுட்டு கிளம்பலாம்..
 
அருண்: வெண்ண..
 
கார்த்திக்: கொஞ்சம் கம்மியா இருக்குடா பொங்கல்ல..
 
அருண்: டேய் மார்கழி மாசத்துல தெருநாய் கடிய விட உன் கடி தாங்க முடிலடா..
 
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
1 MESSAGE RECEIVED
 
Chalo.. me leaving.. c u n clg..
 
அருண்: டேய்.. போறாங்கடா..
 
கார்த்திக்: இரு இரு.. பின்னாடியே போனா சந்தேகம் வரும்..  அவங்க போகட்டும்.. கொஞ்ச நேரம் கழிச்சு நாம போலாம்..
 
புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
 
Sir busy oh? Nerla pesa bayama?
 
இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்க்க,
 
அருண்: எதுக்கு இந்த மெசேஜ்ன்னு புரிலடா..
 
Apdi la illaiye.. en?
 
புர்ர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்
 
Then u cud hv spoken wit me na? I wud hv introducd u to my mom-dad.. ;)
 
டமார் டமார்..
 
அருண்: இத நான் எதிர்பாக்கல..
 
கார்த்திக்: நானும் தான் மச்சி..
 
அருண்: பேசாதடா.. தப்பா எடுத்துப்பாங்கன்னு சொல்லி சொல்லியே எல்லாமே தப்பா போச்சு.. இதுக்கு கூட வருத்தமில்லடா.. பொண்ணுங்க விஷயத்துல நான் கில்லாடின்னு பேசி பேசியே என்னையும் உன்ன புகழ வச்சிட்டியே.. அத என்னால பொறுத்துக்க முடில…
 
கார்த்திக்: மச்சி.. SOLACE IN SORROW மாதிரி ஒண்ணு நடந்துருக்குடா..
 
அருண்: என்ன?
 
கார்த்திக்: அவ சொன்னால, எங்க அப்பா-அம்மா பாக்குற பையன தான் கட்டிப்பான்னு.. இன்னுக்கு ஆப்போசிட்ல உட்கார்ந்திருக்கும் போது உன்ன பாத்துக்கிட்டே இருந்தாங்கடா.. Futureல நீ அவகிட்ட Propose பண்ணும் போது, ”அன்னிக்கு கோவில்ல உங்க அப்பா-அம்மா என்ன பார்த்தாங்க.. நீ சொன்ன மாதிரி உங்க அப்பா-அம்மா பார்த்த பையன்ல நானும் ஒருத்தன்.. என்ன கட்டிக்கோ”ன்னு சொல்லிடு.. உன் ஹியுமர்-சென்ஸ்ல மயங்கி ஒத்துப்பாடா.. எப்ப்பூடி?
 
அருண்: இத நீ வேற யாருகிட்டவாது சொல்லிருக்கியா மச்சி?
 
கார்த்திக்: இல்லடா.. நீ தானே என் உயிர்-நண்பன்.. Exclusively for you..
 
அருண்: சொல்லிடாத.. அப்றோம் அவங்க குடும்பத்துல போலிஸ், கோர்ட் வாசல் மெதிக்க வேண்டி இருக்கும்.. எல்லாரும் என்ன மாதிரி அமைதியா இத கேட்டுட்டு உன்ன உயிரோட விடமாட்டாங்க..
 
கார்த்திக்:  என்னடா இப்டி சொல்ட? எவ்ளோ சூப்பரா யோசிச்சி சொன்னேன்?
 
அருண்: டேய்… கோவிலாச்சே பாக்குறேன்… ஆனா ஒண்ணுடா.. உன்ன மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கோவில் வாசல்லேயே செருப்ப விட்டுட்டு வராங்க..


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search