Monday, 21 December 2009

வேட்டைக்காரன்- விஜய் வெறியர்களுக்கு


பாபுசிவன்: சார்.. உங்களுக்கு ஒரு சூப்பர் கதை இருக்கு


விஜய்: ண்ணா... நம்ப படத்துல கதைலா இருக்க கூடாது... 5 பாட்டு, 3 ஃபைட்டு, அப்றோம் அங்கங்க கொஞ்சம் பஞ்ச் டயலாக்.. இதான் ஃபேன்ஸ் கேக்குறாங்க.. அதுமாதிரி ஸ்கிர்ப்ட் இருக்கா?


பாபுசிவன்: இருக்கு சார்.. நல்ல பரபர ஆக்‌ஷன் கதை..


விஜய்: இப்டி சொல்லித்தான் மூணு படம் ஊத்திகிச்சு... போஸ்டர்ல ஓடவைச்சாச்சு.. இதாவது சுடச்சுட தரணும்ன்னா..


பாபுசிவன்: ஓகே சார்... எல்லா பழைய படத்துல இருந்தும் சீன் சுட்டு, சுடசுட ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு வரேன்..


விஜய்: எதுக்கு டைம் எடுத்துக்கிட்டு... நாம பேசிக்கிட்டே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணலாம்..


பாபுசிவன்: டைட்டில் என்ன வைக்க?


விஜய்: நாம தான் அடுத்த எம்.ஜி.ஆர் ஆக ட்ரை பண்றோம்ண்ணா.. அவர் படடைட்டில் வைக்கலாம்...

எஸ்.ஏ.சி: குருவி, வில்லு ரெண்டையும் தூக்கி சாப்பிடுற மாதிரி ஒரு பேரு வைப்பா..


பாபுசிவன்: குருவி, வில்லு ரெண்டையும் இணைக்குறதுன்னா வேட்டைக்காரன்.. எம்.ஜி.ஆர் சார் படம் வேற.. நல்லா இருக்கும்... ஆனா கதைக்கு பொருந்துமா?


விஜய்: அட.. போங்கண்ணா காமெடி பண்ணிக்கிட்டு... இதுவரைக்கும் வந்ததெல்லாம் அப்டியே பொருத்தமா இருந்த மாதிரி..

(அப்போ திருப்பாச்சி பாடல் சன் மியுசிக்ல ஓட)


பாபுசிவன்: சார்.. அதுல வர மாதிரி நீங்க கிராமத்துல இருந்து சென்னைக்கு வரீங்க..


எஸ்.ஏ.சி: என்ன காரணம் தம்பி?


விஜய்: வேற எதுக்கு நைனா.. சென்னைல இருக்குற எல்லா தாதாக்களையும் அழிக்க தான்...


பாபுசிவன்: சார்... இங்க தான் நாம வித்தியாசம் காட்றோம்.. நீங்க போலிஸ் ஆகணும்னு ஆச படுறீங்க..


எஸ்.ஏ.சி: அட.. காக்கி சட்டை கமல் சார் மாதிரியா?

கவுண்டமணி: சத்ய சோதனை


பாபுசிவன்: லீட் எடுத்து கொடுத்ததுக்கு நன்றி.. சத்யம் விஷால் மாதிரி ஒரு போலிஸ்காரர் தான் உங்க இன்ஸிபிரேசன்..


கவுண்டமணி: ஆமாமா.. இவருக்கு இன்ஸிபிரேசன், பாக்குற நமக்கு லூஸ்மோஷன்..

எஸ்.ஏ.சி: ஓகே.. சென்னைக்கு வந்தாச்சு.. அடுத்து எப்டி பொழைக்கற்து?

பாபுசிவன்: அங்கே தான் நாம பாட்ஷா கதைய எடுக்குறோம்.. நீங்க சென்னை வந்து ஆட்டோ ஓட்றீங்க..

விஜய்: வாவ்.. ரஜினிண்ணா.. அடுத்த சூப்பர்ஸ்டார்க்கு பேஸ்மண்ட் போடுற மாதிரி..

எஸ்.ஏ.சி: தம்பி.. பாட்ஷால வர அதே ட்ரெஸ், கர்சீப், ஆட்டோ நம்பர் இருக்கட்டும்..

கவுண்டமணி: நாறிடும்..

எஸ்.ஏ.சி: என்ன?

கவுண்டமணி: இல்ல.. அதயேவா யூஸ் பண்ண போறீங்க? பேட்-ஸ்மெல் வருமே.. நீ மேல சொல்லுப்பா...

(அப்போ எஸ்.ஏ.சி போன் அலற..)


எஸ்.ஏ.சி: சொல்லு... என்னது? 100 நாள் போஸ்டர் முடியாதா? என்ன தெனாவட்டு அவனுக்கு... மலைக்கோட்டை ஏரியா பசங்களே இப்டி தான்.. சாமி அருள் எப்பவுமே நம்மகிட்ட இருக்குடா...


பாபுசிவன்: ஐ.. ஐ... இன்னொரு லீட்... தெனாவட்டு, அருள், மலைக்கோட்டைல வர மாதிரி வில்லனோட பையன் ஒரு பொண்ணு கூட பிரச்சனை பண்றான்...

கவுண்டமணி: அந்த பொண்ணு தானே விஜய் சென்னைக்கு வந்த உடனே ஹெல்ப் பண்ணா..

பாபுசிவன்: ஆமா.. எப்படி சார்?


கவுண்டமணி: ஐயோ.. ராமா ராமா.. டேய்.. இந்த மொக்க மாவத்தானே பல வருஷமா அரைக்கிறீங்க?? ஓகே நெக்ஸ்ட்...


பாபுசிவன்: கோவம் வந்து நம்ப தளபதி அவன அடிச்சு ஹாஸ்பிட்டல்ல படுக்க வைக்க

எஸ்.ஏ.சி: அங்க வைக்கிறோம் இடைவேளை..

கவுண்டமணி: அங்க வச்சா இடிக்குமாம்.. கொஞ்சம் தள்ளி வைடா போண்டா மண்டையா...

விஜய்: இல்ல.. எப்பவுமே இடைவேளை முன்னாடி ஒரு ஜம்ப் வைக்கணும்... காற்று, நிலம், ஆகாயம்னு பறந்தாச்சு..

பாபுசிவன்: அடுத்து நீர்.. உங்கள ஒரு குருப் காட்டுக்கு கடத்தி போக, ஃபைட் பண்ணி, நீங்க நீர்அருவில இருந்து ஒரே ஜம்ப்...


கவுண்டமணி: டேய் ஜிம்பலக்கடி பம்பா... சென்னைல எங்கடா நீர்அருவி?? எம்.ஜி.எம், கிஷ்கிந்தால போயி எடுப்பியா? நீர்அருவில இருந்து குதிச்சா எலும்பு கூட மிஞ்சாது...


எஸ்.ஏ.சி: விதிய மதியால வெல்பவர் தான் எங்க தளபதி...


பாபுசிவன்: ஆமா.. அப்போகலிப்டோ மாதிரி தளபதி குதிச்சும் அடி படாம தப்பிப்பாரு...

கவுண்டமணி: டேய் நாதஸ்... தமிழ் படம் சுட்டது பத்தாதுன்னு இங்கிலீஸ் படம் வேறயா?


விஜய்: ஆமாங்ண்ணா... இங்கிலீஸ் படத்துல பண்ணா மட்டும் வாவ்ன்னு வாய திறந்து பாப்பீங்க.. இதுவே நான் பண்ணா கலாய்ப்பீங்க..


கவுண்டமணி: ராஜா... வாஸ்தவமான கேள்வி... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல.. தமிழ்நாட்டுலேயே, அட உலகத்துலேயே ரெண்டு பேருக்கு தான் சினிமா அறிவு அதிகம்.. ஒண்ணு நீ.. இன்னொண்ணு உங்க அப்பா... சரி.. ரெண்டாவது பாதி கொஞ்சம் தூளா சொல்லு ராசா...


பாபுசிவன்: மறுபடியும் லீடுக்கு நன்றி.. நம்ப தளபதி இன்ஸ்பயர் ஆன போலீஸ வில்லன் க்ரூப் பழி வாங்கிடுறாருங்க.. அதுனால பழிக்குப்பழி வாங்க தளபதி களம் இறங்குறாரு...


கவுண்டமணி: நல்லவேல.. இத கேக்க சிவாஜி சார் இல்ல..


பாபுசிவன்: சூப்பர் சார்.. சிவாஜி, பாட்ஷா, பகவதி மாதிரி 5-6 பேரோட ரௌடியிசத்த எதிர்த்து போராடுறார்... நடுவுல பஞ்ச், சாங்ஸ், மாஸுன்னு காட்டலாம்...


கவுண்டமணி: அடப்பாவி எது சொன்னாலும் அந்த படத்துல இருந்து உருவுறானே.. டேய்... க்ளைமாக்ஸ்க்கு என்னடா பண்ணுவ?


பாபுசிவன்: அதுக்கு தான் தில், திருப்பாச்சில இருந்து எடுக்குறோம்... விஜய் சார் நண்பன வில்லன் ஆளுங்க போட்டு தள்ளிடுறாங்க... அதுனால கொந்தளிக்குற நம்ப தளபதி எப்டி வில்லன அழிக்குறாரு தான் க்ளைமாக்ஸ்...


எஸ்.ஏ.சி: தம்பி.. அருமையான கதை.. தமிழ் சினிமால இது மாதிரி ஒரு கதை வந்ததே இல்ல...


கவுண்டமணி: ஆமாமா.. இதுமாதிரி எல்லா படத்தோட கதையும் சேத்து, குழம்பி, கேவலமா ஒரு ஸ்கிரிப்ட் பண்ணிருக்கீங்களே... கண்டிப்பா வந்ததே இல்ல..

விஜய்: ஹீரோயின்னா யார போடலாம்?


கவுண்டமணி: இதுவரைக்கும் யார போடலையோ அவங்கள போடலாம்..


பாபுசிவன்: டபுள் மீனிங் மாதிரி இருக்கே..


கவுண்டமணி: நான் சொல்றது எப்பவுமே டைரக்ட் மீனிங் தான்டா காரகுழம்பு மண்டையா... ஏன்டா ரெண்டு ரெண்டா நினைக்குற?

விஜய்: ரெண்டு.. அனுஷ்காவ ஹீரோயினா போடலாம்ண்ணா..

கவுண்டமணி: டேய் இப்பதான்டா அவங்க அருந்ததின்னு ஒரு நல்ல படத்துல நடிச்சாங்க.. வெயிட்டான ரோல் இருக்கா?


பாபுசிவன்: இருக்கு.. 3 பாட்டு, 6 சீன்னு... அவங்க இன்ட்ரோவே புதுசா இருக்கும்...

எஸ்.ஏ.சி: எப்புடி?


பாபுசிவன்: விஜய்யோட அம்மா “உனக்கு எப்படா கல்யாணம் ஆகும்”ன்னு கேப்பாங்க.. அப்போ காட்றோம்..

கவுண்டமணி: எத?

பாபுசிவன்: அனுஷ்காவ..

கவுண்டமணி: ஓஓஓஓஓ... போக்கிரி மாதிரி இருக்கும் போல... சரி.. படத்துல பஞ்ச், பஞ்ச்ன்னு சொல்ற.. எங்க கொஞ்சம் எடுத்து விடு தீச்சட்டி தலையா..

பாபுசிவன்: நான் சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவேன்.. சாக்கட முன்னாடி இல்ல..


கவுண்டமணி: நீ ஏன்டா சாக்கட கிட்டல்லா போயி பேசுற? முனுசிபால்ல வேல பாக்குறியா? வேற சொல்லு...

பாபுசிவன்: நேத்து கலக்டர், இன்னிக்கு சி.எம். நாளைக்கு?


கவுண்டமணி: பிச்சைக்காரன்... இந்த மாதிரி வசனங்கள் வச்சா படத்த எடுத்த தயாரிப்பாளரும் பிச்ச எடுக்கணும், டைரக்ட் பண்ற நீயும் பிச்ச எடுக்கணும்..


எஸ்.ஏ.சி: சார்.. சும்மா இருங்க.. பஞ்ச் டையலாக்லா சூப்பரா இருக்கு.. நீ சொல்லுப்பா...


பாபுசிவன்: வேதநாயகம்னா பயம்..

கவுண்டமணி: டேய்.. பூதநாயகம்னு வை... அதப்பார்த்தா தான் பயம் வரும்..


விஜய் சன்: யப்பா... நீயும் எல்லா படமும் இதயே பண்ற... வேற ட்ரை பண்ணுப்பா.. சும்மா ரௌடிஸ்ஸ கொன்னுட்டே இருக்க.. இப்டியே போனா அடுத்த படத்துல கொல பண்ண ஆளுங்களே இருக்கமாட்டாங்க.. அதுவும் உன்கிட்ட ஃப்ர்ஸ்ட் சீன்ல அடிவாங்குற ஆளுங்க திரும்ப கூச்சமே இல்லாம, க்ளைமாக்ஸ்லயும் அடிவாங்குறாங்க.. ஏன்பா? ஸ்கூல்ல என் ஃப்ரெண்ட்ஸ் கூட கிண்டல் பண்றாங்க...


விஜய்: இவன் ஓவரா பேசுறான்... எதாவது பனிஸ்மெண்ட் கொடுக்கணுமே...


பாபுசிவன்: நம்ப படத்துல நடிக்க வச்சிடலாம்... இண்ட்ரோ சாங்க்கு இவன ஆட வைக்கலாம்.. நான் அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட, மோதிபாரு வீடு போயி சேர மாட்ட..


விஜய்: தெரிக்குது... மாஸ் தெரிக்குது... சூப்பர் லைன்..


கவுண்டமணி: டேய்.. இது சூப்பரா? நீ நடிச்சாலே தாங்க முடியாது, இதுல அடிக்க போறியா? உன் படத்த பார்த்தா தான் வூடு போயி சேர மாட்டாங்க..


எஸ்.ஏ.சி: இவர் கிடக்குறாரு... கத எனக்கு புடிச்சிருக்கு.. ஏ.வி.எம் கிட்ட சொல்லிடுங்க.. அட்வான்ஸ் வாங்கிக்கோங்க..


கவுண்டமணி: டேய்.. இந்த படத்த எடுத்தே ஆகணுமா?? வேணாம்டா.. டேய் டேய்.. ஐயோ இவன்கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதான்... நல்லா பேசிட்டு இருப்பான்.. நடுவுல இதுமாதிரி ஏதாவது மொக்க பண்ணிடுவான்...


*************************


இந்த படத்த இதுக்குமேலயும் விமர்சனம் பண்ணியே ஆகணுமா?? ஏதாவது இருந்தா தானே பண்றதுக்கு... விஜய் ஏன் இதுமாதிரி பண்றாரு தெரில.. இந்த படத்த பார்த்தா லொல்லுசபா மாதிரி இருந்துச்சு... அவங்க ஆர்டிஸ்ட் வச்சு சூட் பண்ண வேணாம்.. அப்டியே டெலகேஸ்ட் பண்ணலாம்... எடிட்டர் ஒருத்தர் ரெண்டாவது பாதில இருந்தாரா தெரில்ல.. இன்ட்ரோ சாங் யாரு டான்ஸ் மாஸ்டர் தெரில.. மகாமட்டம்.. வடிவேலுக்கு கம்போஸ் பண்ண மாதிரி ஸ்டெப்ஸ்... ப்ளஸ் என்னன்னா விஜய்யோட எனர்ஜி, சாங்க்ஸ், அனுஷ்கா கில்பான்ஸி... மத்ததெல்லாமே மைனஸ் தான்... படத்த பார்த்த என் ஃப்ரெண்ட விஜய் ஃபேன்ல இருந்து தனுஷ் ஃபேன் ஆகிட்டான்... படம் முழுக்க ஒரே கூச்சல்... இந்த சீன் எந்த படத்துல வந்துச்சுன்னு.. பாரப்பட்சம் பாக்காம எல்லா படத்துல இருந்தும் பாபுசிவன் சுட்டுட்டாரு... என்னய்யா நீ.. சுடுறது தான் சுடுற, நல்ல படத்துல இருந்து சுட்டுருக்கலாம்ல? படம் பார்த்த ஏ.வி.எம் முடிவு பண்ணிட்டாங்க போல, வேலைக்காவதுன்னு... அதான் சன் பிக்சர்ஸ் கிட்ட வித்துட்டாங்க...விஜய்ண்ணா, உங்க்கிட்ட இருந்து கமர்ஷியல் படம் வேணாம் சொல்லல.. கொஞ்சம் வித்தியாசமா தாங்க.. ENTERTAINMENTன்னு ஆங்கிலத்துல ஒரு வார்த்தை இருக்கு... அதை கரெக்டா புரிஞ்சிக்கோங்க... உங்க படம் விஜய் ஃபேன்ஸ் விட அஜித் ஃபேன்ஸுக்கு கலாய்க்க நல்ல ENTERTAINMENT… படத்துல வர பாடல்வரி உங்களுக்காகவே எழுதிருக்காங்க, “ஏதோ நானும் சொல்லிபுட்டேன் ஏத்துக்கா ஏத்துக்கோ.. சொன்னதெல்லாம் உண்மையுனா உன்ன நீயே மாத்திக்கோ”36 பூச்செண்டு தரலாம்

வேட்டைக்காரன்- ஒரே மாதிரி வேட்டையாடுபவன்
இடமிருந்து வலம்

1. அண்ணா... இனிமேல் கெட்-அப் சேஞ்ச் பண்ணுங்கன்னு கேக்க மாட்டோம்ன்னா...

2. சன் பிக்சர்ஸ் துணை.. நீங்க தான் காப்பத்தணும்.. சீக்கரமே தியேட்டர், தியேட்டரா வந்து பாட்டு பாடுறேன், டான்ஸ் ஆடுறேன்


3.சத்தியமா மொக்க படத்துல தான் நடிப்பேன்...


வருகைக்கு நன்றி!!


26 comments:

Karthick Krishna CS said...

இதமாதிரி தானே காலங்காலமா அஜித் ரசிகர்கள் பாடுபடறாங்க. அவரு படத்துல பாட்டு கூட அவ்வளவு நல்லா இருக்காது. பாவம்.
ஆனா, விஜய் ரசிகரான நீங்களே இந்த ரியாக்ஷன் குடுக்கறீங்களே, மத்தவங்க???

Srivats said...

LOL had a hearty laugh reading this! Sema kalai

I liked the herion bit , i mean the part where you say which herion to put hehe

I dont take the chance ( read watching his movies )anyway :)

kanagu said...

sema vimarsanam... onnum solrathukilla...

/*கவுண்டமணி: இதுவரைக்கும் யார போடலையோ அவங்கள போடலாம்..


பாபுசிவன்: டபுள் மீனிங் மாதிரி இருக்கே..*/

LOL.... sema comdedy...

andha get-up change... vacharulla thalaivar mutrupulli... evanavathu kaepeengalangra maathiri... sagikala... :D :D

viji said...

Hahahahhaha.. i think my review is better than the real movie.. kikikiki

SAACHU PUTARA unga talaivar??

GAYATHRI said...

huhahahahahahahahaha...irundha ore fan ah yum vijay azhichutaan...inimeyaadhu vijay vijay nu olaramaa ozhunga irunga annao!!!ungalkulaam veerasaami pathaadhu,..vera vera vettaikaaran dhaan venum:p inimeyaadhu thirundhunga karthik anna:)

250WcurrentIsay said...

kalakkiputeengo bossu.....

keep blogging....

pappu said...

//ஆமாங்ண்ணா... இங்கிலீஸ் படத்துல பண்ணா மட்டும் வாவ்ன்னு வாய திறந்து பாப்பீங்க.. இதுவே நான் பண்ணா கலாய்ப்பீங்க..///

என்னய்யா இது அநியாயமா இருக்கு? District B13 ல தாவுற சீன் வந்தா வாயப் பொளக்குறோம். விஜய் நடிச்சா குருவிய பார்த்து சிரிக்குறோம். இது நீதியல்ல. :)

ரொம்ப கொலவெறியா ஓட்டிருக்கயே? கொஞ்சம் இரக்கப் பட்டிருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

ராஸா சிரிச்சி சிரிச்சி

ஆனா ஒன்னுங்கண்ணா விஜய் படம்(?) ஓடுதோ இல்லையோ அதையொட்டி வரும் சிரிப்பலைகள்

ஆகா ஆகா

Anonymous said...

:-)))))))))))))

super .....

Anonymous said...

:-)))))))))))))

super .....

Anonymous said...

Thankzzzzz a ton for your negative reviews..Keep up d same......

Vijay said...

மொக்கைன்னு டிரெயிலரைப் பார்த்தாலே தெரியலியா? அதை தியேட்டருக்குப் போய் காசு கொடுத்து வேற பார்க்கணுமா?

போக்கிரி பார்த்த பிறகு, இனி விஜய் படத்த திருட்டு வி.சி.டி.ல கூட பார்க்கக் கூடாது’ன்னு முடிவு செய்து விட்டேன் :)

Vijay said...

By the way, your vimarsanam was rocking :)

Extra-Ordinarily Ordinary said...

Damn funny!! I guess your real sensible person has finally taken over the Vijay Veriyan in you - Man, ever since I saw the ctrl c ctrl v Pokiri, I have decided that Vijay does not deserve our money. He is trying to take a short cut using our money, all the while lying about fans and their intentions.....

Getup change.. man it was like someone took some coconut fibre and put it on his head....

dhina said...

tis 2much neenga movie etuthu parunga apa antha kastam theriyum naama pesarathu eppadi venunalum pesalam ok frns

ela said...

ALL AJAK FANS. KEEP UR MOUTH SHUT,,,,..... DONT IMITATE AS VIJAY FANS AND POST THESE UNNECESSARY REVIEWS.......... SHUT UR BLOODY F*****G A**............ GO AND WATCH THE MOVIE.. INDIA TODAY AND HINDHU HAS RATED THE VETTAIKARAN MOVIE AS 3/5.......... ASK UR AJAK HERO AND DIRECTOR TO DO AN ENTERTAINER AND MASALA MOVIE LIKE THIS.. ALL THE SONGS ARE SUPER HIT.... IN AJAK MOVIES SONGS ITSELF WONT BE NICE,,AND HOW CAN WE EXPECT THE MOVIE TO BE A GOOD ONE.... ALREADY HE REJECTED VENKAT PRABHU AND GOUTHAM MOVIES. I THINK HE IS GOING IN SEARCH OF VISHNUVARDHAN , TR, PERARASU AND MANY COMEDY DIRECTORS..........

ela said...

ALL AJAK FANS. KEEP UR MOUTH SHUT,,,,..... DONT IMITATE AS VIJAY FANS AND POST THESE UNNECESSARY REVIEWS.......... SHUT UR BLOODY F*****G A**............ GO AND WATCH THE MOVIE.. INDIA TODAY AND HINDHU HAS RATED THE VETTAIKARAN MOVIE AS 3/5.......... ASK UR AJAK HERO AND DIRECTOR TO DO AN ENTERTAINER AND MASALA MOVIE LIKE THIS.. ALL THE SONGS ARE SUPER HIT.... IN AJAK MOVIES SONGS ITSELF WONT BE NICE,,AND HOW CAN WE EXPECT THE MOVIE TO BE A GOOD ONE.... ALREADY HE REJECTED VENKAT PRABHU AND GOUTHAM MOVIES. I THINK HE IS GOING IN SEARCH OF VISHNUVARDHAN , TR, PERARASU AND MANY COMEDY DIRECTORS..........BAD LUCK AJAK'S MOVIE ASAL

Anonymous said...

ela if u find this as a wrong review,
Wait for few days.
The theatre result will prove tis review..

Karthik said...

எஸ்.ஏ.சி: என்ன காரணம் தம்பி?
விஜய்: வேற எதுக்கு நைனா.. சென்னைல இருக்குற எல்லா தாதாக்களையும் அழிக்க தான்...//

கவுண்டமணி: ஆமாமா.. இவருக்கு இன்ஸிபிரேசன், பாக்குற நமக்கு லூஸ்மோஷன்..//

அவங்க இன்ட்ரோவே புதுசா இருக்கும்...
எஸ்.ஏ.சி: எப்புடி?
பாபுசிவன்: விஜய்யோட அம்மா “உனக்கு எப்படா கல்யாணம் ஆகும்”ன்னு கேப்பாங்க.. அப்போ காட்றோம்..//

ஹாஹா கலக்கிட்டீங்க..:))))

Annamalai Swamy said...

நல்ல கலாய்க்கள் பதிவு. அதுவும் கவுண்டர் டையலாக்ஸ் எல்லாம் அருமை. ரெடியா இருங்க "சுறா" வுக்கும் இந்தப் பதிவையே மறுபடியும் உபயோகப்படுத்திக்கலாம்.

akila said...

kandippa nee oda waanga pora daaaaaaaaaaaaaaa

ela said...

i'm waiting........ tell me the spot

Ela said...

ya i'm waiting///// tell me the spot

ela said...

ya i'm waiting.... tell me when

bhilla said...

padama da idu....shit!!babu sivan nenga inime padam direct panadinga pls....vijay sir nenga inda madri kadaiyla nadikadinga pls....edula unga payana vera ada vachurkenga....enna koduma sir idu!!mokka padam da samy........

Anonymous said...

What am i seeing ? Karthi , I thought u had like the movie.. Hmm..Yeah too much of copying.

and that get up..sure freaked you out, uh? LOL .

Afterall, there is no point in waiting for his comeback, all he sees in cinema is an entry into politics.. like MGR.

R-ambam

Blogger templates

Custom Search