Thursday, 10 December 2009

நான் அவன் இல்லை

இந்த பதிவு ஒரு பாசமான இதயத்தை வைத்து எழுதுவதால், இதில் கொஞ்சம் ஆ’பாசம்’ இருக்கும்.. 18+ மட்டுமே அனுமதி... அதையும் மீறி படித்து, ச்சீசீசீன்னு சொன்னா அதற்கு நான் பொறுப்பல்ல...


டிசம்பர்-9, 198*


டாக்டர் டாக்டர்..

என்ன?

இந்த குழந்தை ரொம்ப மோசம் டாக்டர்..

ஏன்?

நர்ஸ் நாங்கல்லா தூக்குன்னா சிரிக்குது, கண்ணடிக்குது, முத்தம் கொடுக்குது...

என்கிட்ட கொடு..


(சிறிது நேரத்தில் டாக்டர் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கிறது)

ஏன் டாக்டர், என்ன ஆச்சு?

என் மேல கக்கா போயிட்டான்... இவன் பிற்காலத்துல பெரிய ஆளா வருவான்... பெண்கள் உஷாரா இருக்கணும்...


*********************

3 வருடம் கழித்து


கனகு:
தல தல தல.. சீக்கிரம் வெளிய வா தல

பால்கோவா: என்னடா ஆச்சு?

கனகு: பக்கடா ஆளுங்க நம்ப செரோலாக் பாண்டிய போட்டு அடிச்சிட்டு இருக்காங்க தல..

பால்கோவா: ஏன்டா?

கனகு: அவன் ஃபிகர் நிம்மிக்கு ரப்பர் வச்ச பென்சில் கொடுத்து நம்ப பாண்டி கரெக்ட் பண்ணிட்டான் தல..

பால்கோவா: பக்கடாக்கு காரம் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு... நம்பள போட்டு நொறுக்கற்தே அவனுக்கு வேளையா போச்சு.. இன்னிக்கு முடிவு பண்றேன்டா.. பக்கோடாவா இல்ல இந்த பால்கோவான்னு... எடுறா வண்டிய...

பொதுஜனம்: ஐயய்யோ... பால்கோவா ஷார்ப்னரோட கிளம்பிட்டானே... இவனே ஒரு ப்ளேடு.. இப்போ ஷார்ப்னர் வேற.. இன்னிக்கு எத்தன பென்சில் சீவ போறான்னு தெரில்ல..


*********************

+4 வருடம் கழித்து


பால்கோவா: அவ என்ன பார்த்து சிரிச்சா மச்சான்

பால்கோவா: நான் என்ன அவள ஒரு 2 வருஷமா பார்த்துட்டு இருப்பேனா? நடுவுல ஒரு நாள் பாக்கலன்னு வையேன், என்னமோ மாதிரி இருக்கும் மச்சான்.. எப்டி சொல்றது?? DAIRY MILK, MILKY BAR நாலஞ்சு சாப்டு, அப்டியே கோக-கோலா குடிச்சோம்னு வையேன், வாந்தி வர மாதிரி இருக்கும் ஆனா வராதுல, அப்ப இருக்கும் பாரு அந்த மாதிரி...


அடுத்த நாள் காலைல அப்டியே சோகமா, ஆட்டோல்ல அவ பக்கத்துல உக்காருவேன் மச்சான்... ஆட்டோ மாமா வந்துட்டாரான்னு சைடா ஒரு லுக் விடுவா பாரு, அப்டியே உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணும் மச்சான்... எனக்கே தெரியாம சிரிச்சிட்டு இருப்பேன்... அவளும் அதே மாதிரி சிரிச்சிட்டு இருப்பா...


கார்த்தி: என் ஆளு கூட தான் என்ன பார்த்து சிரிக்கிறா..


காகி: உன்ன பார்த்து மட்டும் இல்லடா... அவ ஊருல இருக்குற எல்லாரையும் பார்த்து சிரிக்கிறா.. அவ ஆள் இல்ல, பைத்தியம்... ஆனா மச்சான் உன் ஆளு உன்ன பார்த்து சிரிக்கிறான்னா புடிச்சிருக்கு தானே அர்த்தம், STRAIGHTa போயி சொல்ல வேண்டியது தானே..


பால்கோவா: அப்டி நம்பி தான் ஒரு நாள் ஆட்டோல அவ பக்கத்துல தைரியத்த வரவழச்சு போயி பேசலாம்னு நின்னா...... குனிஞ்சி ஸ்கூல்-பேக்க காட்றா... த்தா... இவ்வளவு பெரியா சாக்-பீஸ்ஸு... 2 ஸ்டெப்ஸ் BACK…


காகி: கை கொடு மச்சான் கொடுத்து வச்சவன் நீ.. சாக்-பீஸ்ஸே அவ்வளவு பெர்ஸுன்னா??


காகி மூக்குல பாக்கி


பால்கோவா: வீட்ல புது ட்ரெஸ் எடுத்துக்கொடுத்தா, நம்ப கூட கண்ணாடில சரியா பார்க்காம, போவோம்.. ஊரே பாக்கும் மச்சா.. கட்டிபுடுச்சி கொஞ்சும்... கண்டுக்கவே மாட்டா டா...

காகி: மச்சான் அவ...

பால்கோவா: என்னடா...

காகி: ஒண்ணுமில்ல.. சொல்லு..


பால்கோவா: ஆனா சண்டேஸ்ல கரக்டா நாலு மணிக்கு சைக்கிள் எடுத்து அவ தெருவுக்கு போவேன்டா... அவ கைல ஒரு குழந்த வச்சிக்கிட்டு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா... அவ என்ன பார்த்து சிரிச்சென்னே, அந்த குழந்தைக்கு ஒரு கிஸ் அடிப்பா... ஹிஹி... எனக்கே கொடுத்த மாதிரி இருக்கும்...


*********************

+5 வருடம் கழித்து


மிஸ்: 26 மார்க்கு... நீ எல்லாம் படிச்சு உருப்பட்ட மாதிரி தான்... ஃபெயில் தான் ஆக போற...

பால்கோவா: ஹீஹீஹீஹீஹீஹீஹீ

மிஸ்: என்னடா சிரிப்பு?

பால்கோவா: நேத்து, க்விஸ்ல ஆன்ஸர் தெரில.. அப்ப பாஸ்ன்னு சொன்னீங்க.. இப்ப எனக்கு ஆன்ஸர் தெரில... ஃபெயில்ன்னு சொல்றீங்க.. அதான்..

மிஸ்: ?!?!?!?!?!?!?!?!


*********************


+6 வருடம் கழித்து


காமெடி பீஸ்: அது என் ஃபிகரு... நீ பார்க்காத..

பால்கோவா: அத நீ சொல்லாத... அவ சொல்லட்டும்

காமெடி பீஸ்: த்தா.. அவ்வளவு தான் உனக்கு, மாடு..

பால்கோவா: நீ மூடு. போடா **

மிஸ்: என்னடா சண்ட?

காமெடி பீஸ்: மேம்..

மிஸ்: பொண்ணுக்காக அடிச்சிட்டு இருக்கீங்களா? யார் அவ?

அந்த பொண்ணு அங்கே வர, பால்கோவா ஒரு பார்வை பார்க்க,


வாக்க்க்க்க்க்க்க்க் வாக்க்க்க்க்க்க்க்க்

மிஸ்: என்னடா ஆச்சு?

பால்கோவா: நாங்கலா பார்வையாலே கற்பழிப்போம்டா... ஹிஹி.. அப்றோம் சொல்லுங்க மேம்..

மிஸ்: ஐயோ.. பெருமாளே... ஆள விடு... எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்...


*********************இந்த பதிவில் வரும் பால்கோவா வேற யாரும் இல்ல.. அல்வா மன்னன், தென்னகத்து புலி, கமிட் ஆன ஆண்களுக்கு கிலி, குட்டி தாதா, கன்னி பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன், மற்றவர்களின் காதலிகளை தன்னுடைய காதலியாக பாவிக்கும் நல்லுள்ளம், கூச்சமே இல்லாமல் பல பெண்களை கரெக்ட் செய்து எனக்கு வயிற்றெரிச்சலை தரும் வள்ளல், சரக்கடித்தாலும் சரக்கு தீராத சக்கரவர்த்தி, இந்தியாவில் காதல் இலக்கணம் பயின்றும், பயிற்றுவிட்டும், சிங்கப்பூர் சென்றும் சில்மிஷத்தை நிறுத்தாமல், லண்டனில் லவகுசாவில் இருக்கும் லாலாக்கு டோல் டப்பி, கடலை கப்பி- லான்ஸு என்னும் அருண்குமார்... அவருக்கு நேத்து பொறந்த நாள்... இணையத்தள பிரச்சனையால் பதிவு லேட்டா வந்ததுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்... இதையெல்லாம் படித்து, அவர் சொல்ல போவது, “நான் அவன் இல்லை, நான் அவன் இல்லை, நான் அவன் இல்லை”
வருகைக்கு நன்றி!!

7 comments:

♠ ராஜு ♠ said...

என்னா ஒரு மொக்கை வெறி...!
:-))

Karthik said...

சான்ஸ்லெஸ்ப்பா.. ROFL.. :)))))))))))))))))))))

Karthik said...

இப்புடி ஒரு பிறந்த நாள் வாழ்த்த நான் படிச்சதே இல்ல.. எல்லோரும் அவங்கவங்க பர்த் சர்டிபிகேட்ட எடுத்து பத்திரமா பூட்டி வைங்க ராசுகளா.. :)))

பிறந்த நாள் வாழ்த்துக்கள் லான்ஸ் அண்ணா!! தம்பிக்கு ஒரு கேக் அனுப்பி வைங்க.. ட்ரீட்ட கார்த்திக் கிட்ட வாங்கிக்கிறேன். :)))

KaKi said...

idhaan neenga sonna role ah?? nadatthunga nadatthunga...

cheena (சீனா) said...

அன்பின் கார்த்திக்

அருண்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்ள்

pappu said...

இந்த மாதிரி ’நல்ல’ வேலைய தொடருங்க!

லான்ஸ்கு வாழ்த்துக்கள்!

kanagu said...

நல்லா இருக்கு கார்த்திக்... லான்ஸூக்கு இருந்தாலும் இவ்ளோ பட்டமா???

ஆனா.......

Blogger templates

Custom Search