Tuesday, 17 November 2009

கில்ஸ் அண்ணாவின் தசவாதாரம்

ரொம்ப நாளா ஜி3 அக்காவ வேண்டிக்கொண்டதிற்கு, ஒரு வழியா பதிவுலக சந்திப்ப நட்த்தியாச்சு.. TARAPORE டவர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல 11.30 மணிக்கு வர சொன்னாங்க... மீட்டிங்கு கில்ஸ் அண்ணாவும் வராங்கன்னு சொன்னதால, 12 மணிக்கு வரலாம், எப்படியோ அண்ணாத்த லேட்டா தானே வருவாருன்னு நினச்சேன்... ஆனா ஜி3 அக்கா, அவர்கிட்ட 11 மணி ட்ரீட்னு சொல்லிட்டாங்க (அப்ப தான் 11.30க்கு வருவாருன்னு) ஆனா அன்னிக்கு பார்த்து, கில்ஸ் அண்ணா உள்ள உறங்கிட்டு இருந்த PUNCTUALITY மிருகம், சீக்கிரமா எழுந்ததால், பாவம் 11 மணிக்கே வந்துட்டாரு... நான் பஸ் பிடிச்சி 11.20க்குல்லா வந்துட்டேன்.. ஆனா ஹோட்டல் பேரு மறந்துபோச்சு.. எதிர்தாப்புல வேற ஒரு ஹோட்டல் (BAHURI) இருந்துச்சு.. சரி ஒரு வேள இந்த ஹோட்டல் தான் போலன்னு அவசரப்பட்டு உள்ளே போனா, மொய்க்க ஈ கூட காணோம்.. ஆஹா அக்கா நமக்கு ஆப்பு வச்சிட்டாங்களான்னு யோசிச்சே அவங்களுக்கு ஃபோன் போட, மதுரா ஹோட்டல்னு ஞாபகப்படுத்துனாங்க.. கில்ஸ் வந்துட்டாருன்னு கூடுதல் தகவல் தெரிவிச்சாங்க.. அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்..
அவங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் மார்ச் ஃபாஸ்ட் பண்ணிண்டே இருந்தாரு.. அவர் தான் கில்ஸோன்னு ஒரு DOUBT.. ஆதவன்ல பத்து வயசு சூரியா பார்த்தீங்களே.. அதே மாதிரி ஸ்கூல் பையன் கணக்கா BAG மாட்டிக்கிட்டு இருந்தாரு அவரு.. SIX PACK சூரியாக்கு போட்டியா BACK PACK சூரியா... அதுமட்டுமின்றி, ஜீ-டாக்ல அவரோட போட்டோ சீரியல் ஹீரோ அப்ஸர் (அலைகள், பாலசந்தர் சீரியல்ல நடிச்சவரு) மாதிரியே இருந்துச்சு... ஆனா நேர்ல பார்க்க வேற மாதிரி இருந்ததால் ஒரு தயக்கம்.. பக்கத்துல ஒரு சூப்பர் ஃபிகரு பஸ்க்கு காத்துக்கொண்டு இருந்தாங்க.. சரி.. முதல்ல இவங்கள டீல் பண்ணலாம்னு ஒரு 10 நிமிசம் விடாம நோட்டம் விட்டேன்.. ஆனா அவங்க பஸ் வந்த உடனே கிளம்பி என்ன டீல்ல விட்டுட்டாங்க.. ஒகே.. பாவம் கில்ஸ், போய் அவர அப்ரோச் பண்ணலாம்னு பேசி, அறிமுகம் ஆகிட்டோம்..
ஆனா எங்கள சீக்கிரமா வரசொன்ன ஜி3 அக்கா, கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே, சே சே.. உருட்டிக்கொண்டே பொறுமையா, 12 மணிக்கு வந்தாங்க... கேட்டா “ஓவர்-ஸ்பிட் பண்ணி மாட்டிக்கிட்டேன்” சொல்லி எங்களுக்கு ஹார்ட்-அட்டாக் கொடுத்துட்டாங்க... கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க.. கனகு அண்ணாக்கு ஃபோன் பண்ணா, “ஓஓஓ... விடிஞ்சிடிச்சா?” கேட்டு, இதோ கிளம்புறேன்னு சொன்னாரு..


கில்ஸ்: கனகு எங்க இருந்து வராரு?

ஜி3 அக்கா: எண்ணூர் கிட்ட..

கில்ஸ்: எண்ணூர் கிட்டயா?? எண்ணூர் ரொம்ப தூரம்மா...இந்த மொக்க தாங்க முடியாததால் எல்லாரும் சாப்பிட கிளம்பினோம்.. CVRன்னு இன்னொரு பதிவர் வந்தாரு... அவர் ப்ளாக் நான் பார்த்ததில்லை... ஆனா எல்லாத்தையும் அவர் கலைகண்ணோட பார்ப்பாருன்னு கில்ஸ் அண்ணா சொன்னாரு... மீட்டுக்கு வர சொன்ன உடனே, அமெரிக்கால இருந்து நேரா வந்துட்டாரு போல, எல்லாமே ஆங்கிலம்+தமிழ் மொழிப்பெயர்ப்போட தான் பேசுனாரு.. “YES!! YOU CAN SEE IT! பாருங்க.. LOOKS DIFFERENT... வித்தியாசமா இருக்கு” இவருக்குள்ள மேஜர் சுந்தராஜன்னும் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்... ஹோட்டல்ல நுழைந்த உடனே அங்கே இருந்த சேர்ஸ் எல்லாம் பார்த்து “SUPER VIEW.. இதே பார்த்தா வித்தியாசமா இருக்கு” தன்னோட கலா ஆர்வத்த (யார் அந்த கலான்னு மொக்க போடக்கூடாது) ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. சீரியல் ஆக்டர், ஸ்மார்ட்ன்னு சொன்னதாலோ என்னவோ கில்ஸ் அண்ணா பின் டேபிள்ல இருந்த ஃபிகர நோட்டம் விட டேபிள் மாறுவதிலேயே குறியா இருந்தாரு... ஏன் சார்.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்ணுவோமே?? இவர் தன்னோட தொடர்கதையில ராம்னு எழுதுற கிருஷ்ண லீலை சேட்டைகளுக்கு எது மூலத்தனம்னு தெரிஞ்சிகிட்டேன்.. கில்ஸ் இன் தசாவதாரத்துல ரெண்டு பார்த்துட்டேன்... இனிமேலும் நா ராம் இல்ல, நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டேள், நான் அது மாதிரி கிடையாதுன்னு சேது வசனம் பேசக்கூடாது.. கடசி வரைக்கும் நாங்க டேபிள் மாறல.. கடவுள் இருக்காருன்னு இது மாதிரி சம்பவங்களால் தான் தெரியுது :P
விஜய்ய நடிக்க சொன்னா எப்டி இருக்கும்? அது மாதிரி மெனு கார்ட் கொடுத்து என்னை ஆர்டர் பண்ண சொன்னாங்க.. அதுல இருந்த முக்கால்வாசி ஐட்டம் எனக்கு புரியவே இல்ல.. அபியும் நானும் ரவி சாஸ்திரி மாதிரி பேந்த பேந்த முழிச்சிக்கிட்டே ஜி3 அக்கா என்ன சொல்றாங்களோ அதையே ஆர்டர் பண்ணேன்.. நல்ல வேள ஐஸ்-க்ரிம் மட்டும் எனக்கு புரிஞ்சிது :D உல்லாச பயணம், கோடை சுற்றுலா சென்று வந்த மாதிரி முகமெல்லாம் பல்லோட சென்னைய சுத்தி பார்த்துக்கிட்டே நாங்க எல்லாம் முடிச்ச உடனே கனகு அண்ணா வந்தாரு.. வந்தவருக்கு என்ன கோவமோ தெரில, செர்வர்வ (ஏனா இவர் க்ளைண்ட்) அசிங்கமா திட்டிட்டாரு.. வெஜ் ஹோட்டல்ல ஏன் நான்-வெஜ் போடலன்னு டென்ஸன் ஆகிட்டாரு.. ஹோட்டல்ல இருந்த மான், சிங்கம், மாடு அவற்றின் PAINTING, SCULPTURES பார்த்து நான்-வெஜ் நினச்சிட்டாரு.. நல்ல வேள, பேர பார்த்து (மது+ரா) சரக்கு கொண்டு வான்னு கேக்கல...அப்புறம் கில்ஸ் அண்ணாக்கு ஆபிஸ்ல ஸ்நாக்ஸ் தராங்கன்னு செய்தி வந்த உடனே, அலுவலக பணி, கடமை என்னை அழைப்பதால் நான் செல்கிறேன்னு ஜகா வாங்கிட்டாரு..டிஸ்கி 1: கடைசி வரை ஜி3 அக்கா எனக்கு சமோசா மட்டும் வாங்கி தரலை


டிஸ்கி 2: மீட்டிங் ப்ளான் போட்டு கடைசி நிமிடத்தில் திருவல்லிக்கேணியில் தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங்.. சே மீட்டிங் போன வானவில் கார்த்திக்கை கண்டித்து இந்த போஸ்ட்...


டிஸ்கி 3: ஜி3 அக்காவின் தூண்டுதலின் பேரில், அல்ப சமோசாக்கு ஆசைப்பட்டு கில்ஸ் அவர்களை ஓட்ட எழுதப்பட்டதில்லை இந்த பதிவு என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்...வருகைக்கு நன்றி!!

15 comments:

Karthick Krishna CS said...

nalla vishayam.. aanaa menu card items puriyallanu solradhu konjam extra bit...

gils said...

//அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்.. //

:( adapaavi...maganay intha line..un blogspotla kurichi vachuko...ithukaga orunal unaku iruku aapu

gils said...

/முதல்ல இவங்கள டீல் பண்ணலாம்னு ஒரு 10 நிமிசம் விடாம நோட்டம் விட்டேன்..//

adapavi..apo velila tahan irunthia athana neram!! grrrrr

gils said...

//கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே//

ROTFL :D :D ithkaaga una manichinte :Dchaancela..g3 total damage :D

gils said...

//கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க//

ROTFL...:D :D :D haiooo haiooo :D oray nagaichuvai thaan poangal

gils said...

//இவருக்குள்ள மேஜர் சுந்தராஜன்னும் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்//

poona maari aniki silenta iruntu..ivlo note panirukia :D CVRum damage :D

gils said...

titleukum intha postukum ena sambandham??

Savitha said...

ROTFL!! ROTFL!! Sooper sir!! Oru Blogmeet,athuvum G3 and Gils irukra blogmeetla ivlo kooda illati epdi??

Aana,title mattum Gils annavin dasavatharam and G3-yin thikku-ratham (thikki,thikki thaana came?) nu per vechirukalaam :P

By the way,thanks for clarifying the 'ram' character,romba naalavey doubt irundhuchu,inniki cleared :P

pappu said...

மீட்டிங் ப்ளான் போட்டு கடைசி நிமிடத்தில் திருவல்லிக்கேணியில் தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங்.. சே மீட்டிங் போன வானவில் கார்த்திக்கை கண்டித்து இந்த போஸ்ட்...
////////

யோவ், வானவில்லு, உன்னப் பத்தி கலர்கலரா ந்யூஸ் வருது. இதெல்லாம் சரியில்லை சொல்லி புட்டேன்.

kanagu said...

/*“ஓஓஓ... விடிஞ்சிடிச்சா?” கேட்டு, இதோ கிளம்புறேன்னு சொன்னாரு..
*/

etho neenga ellam viruppa pattu koopteengale-nu solli aniku seekarama kelambi vandhen.. athuku ipdi oru damage-ah... :(

nalla vela seekrama varala... illana gils anna mathiri, G3 akka maathiri nalla indha post la maatiyiruppen..

ellam nanmaikke... :)

/* gils said...
//கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க//

ROTFL...:D :D :D haiooo haiooo :D oray nagaichuvai thaan poangal
*/

repeate.. any no. of times...


/*கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே
*/

aaha... sondha postulaye sooniyam vachikitiye... adutha treat-ku unaku info varathu-nu nenaikeren... :P :P

Anonymous said...

உன‌க்கு.... மெனு கார்ட் ஐயிட்ட‌ம்ஸ் புரிய‌லையா.... ந‌ம்பிட்டோம்

Srivats said...

ROFTL!! :)


//கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே//

Top notch! loved every bit of ur post, oru blog meet kuda evlo nalla witty ezudha mudiyumnu chance ellai!! :)

Divyapriya said...

adhisaiyamaa g3 innum attendance podaame irukkaanga? udambu kidambu sari illaiyaa? ;)

//அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்.. //

appadiyaa? gils!!! sollave illa? kodampaakkam pakkam poidaadheenga, appram ore phone calls ah vara pogudhu...

Anonymous said...

top [url=http://www.c-online-casino.co.uk/]uk casino bonus[/url] brake the latest [url=http://www.realcazinoz.com/]online casino[/url] unshackled no set aside hand-out at the leading [url=http://www.baywatchcasino.com/]baywatch casino
[/url].

Anonymous said...

[url=http://www.23planet.com]casino[/url], also known as accepted casinos or Internet casinos, are online versions of respected ("crony and mortar") casinos. Online casinos make up asunder except for gamblers to hold up up and wager on casino games living the Internet.
Online casinos typically submit on the superstore odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos insist on higher payback percentages in the overwhelm of m‚series corps games, and some split the circulate far-reaching payout consequence profit audits on their websites. Assuming that the online casino is using an fittingly programmed indefinitely auditorium troupe generator, eatables games like blackjack constraint an established accumulate a crease edge. The payout hold a allowance as a replacement for these games are established gone and forgotten the rules of the game.
Uncounted online casinos sublet out in inaction or clasp their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Ecumenical Foible work Technology and CryptoLogic Inc.

Blogger templates

Custom Search