Wednesday, 4 November 2009

சிம்போசியத்தில் கடலை

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு சிம்போசியம் (SYMPOSIUM) என்பது தேவதைகளின் தரிசனம் மாதிரி.. மற்ற கல்லூரியில் நடக்கும்போது.. அப்ப அவங்க கல்லூரியில் நடந்தா?? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குற மாதிரி.. எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் தன்னுடைய கல்லூரியைக் காட்டிலும், பிற கல்லூரி பெண்கள் மீது தான் ஈர்ப்பு இருக்கும்.. அதுனால எந்த காலேஜ் சிம்போசியம் என்றாலும் நாங்க ஓடிடுவோம்.. இப்படி நான் ஆர்.எம்.கே கல்லூரிக்கு சென்று அங்கே ஒரு பொண்ண டாவடித்த அனுபவம் இதோ..


ஜேஜே, கடல, மெசேஜ் மாமா, நான்!!


கடல: என்னடா மச்சி.. ஒரு ஃபிகரும் காணோம்..

ஜேஜே: வந்த உடனே கடய போட்டுட்டான்டா.. கொஞ்சம் பொறுமை காக்கவும் தம்பி!!

மெசேஜ் மாமா: டேய் கார்த்தி.. இப்டி எமாத்திட்ட.. ஓ** உன்ன நம்பி வந்தோம்.. காலைல 6:30 மணிக்குலா பஸ் பிடிச்சேன்டா.. இன்னிக்கு ஒண்ணுமே தேறலைன்னா, இது ஒரு கருப்பு நாள்டா..


நான்: தம்பி.. நீ நினைக்குற மாதிரி பொண்ணுங்கல்லா வந்து ஜாலியா பேசுவாங்க நினைக்காதே.. இங்கல்லா ரேஞ்ஜே வேற.. கொஞ்சம் STRICT.. காலேஜ் வெளியே தான் வச்சிக்கணும்.. நிறய டெலுகுகாரங்க.. ரெட்டி காருக்கு நீ ரொட்டி காரு ஆகிடாத..


கடல: மாப்ள.. நமக்கு டெலுகு, ஹிந்தி, கன்னடா எல்லாமே அத்துப்படி.. ஆர்க்குட்ல எத்தன பொண்ணுங்களுக்கு வலை வீசுறோம்.. இதெல்லாம் கத்துக்கிட்டா தான் பொழப்பு ஓடும்.. இப்ப மராத்தி கத்துக்கிட்டு இருக்கேன்.. WANT TO HEAR SOME TELGU? ஏமி பாகுன்னாரா? மாட்லாடு, சேசுனாரா?


ஜேஜே: தம்பி.. இந்த ஆர்வத்த கொஞ்சம் அப்டியே படிப்புல காமிச்சு இருந்தீங்கன்னா, ஒரு ரெண்டு PROGRAMMING LANGUAGES கத்துக்கிட்டு இருக்கலாம்.. அப்பத்தான் எதிர்கால பொழப்பு ஓடும்..


மெசேஜ் மாமா: போடா.. நீ பேசுவ.. உனக்கொடு ஆள் இருக்கு.. நாங்கல்லா இன்னும் ஆரம்ப பாட சாலையிலே இருக்கோம்.. இதெல்லாம் யூத்து.. உன்ன மாதிரி UNCLESக்கு தெரியாது..


அப்ப A அங்கே வர..


நான்: டேய் A.. மச்சி.. இவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ்.. என்னடா எல்லாமே சுமாரா இருக்கு?? நீ கூப்பிட்டன்னு தான் வந்தோம்.. ஆனா ஒண்ணும் வேலைக்காவது போல இருக்கே.. பசங்கல்லா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. உன்ன நம்பி வந்தவங்கள இப்டி கலங்கின மனதோட அனுப்புறது ஒரு நண்பனுக்கு அழகில்லை..


A: டேய்... என் DEPARTMENT சிம்போசியத்துக்கு வாடா...


அதிர்ச்சி

கடல: அப்ப இது உங்க டிப்பார்ட்மெண்ட் சிம்போசியம் இல்லையா?

A: இல்ல... இது E&I


எல்லாரும் என்னை முறைக்க

நான்: டேய்.. அப்டி பெருசா என்ன தப்பு பண்ணிட்டேன்?? ஏதோ TECHNICAL FAULT.. IT HAPPENS டா.. அதான் சாப்பாடு இருக்குல.. இங்க செமத்தியா இருக்கும்!!


கடல:
ஓஓஓ... E&I?? எல்லாரும் சுமாரா இருக்கும் போதே ஒரு DOUBT வந்துச்சு..


ஜேஜே: ஆமா.. இவரு பழம் தின்னு கொட்டை போட்டவரு.. சொல்றாரு, எந்த டிப்பார்ட்மெண்ட்ல சூப்பரு, எதுல சப்பைன்னு... நாயே.. E&I ஃபுல் ஃபார்ம் தெரியுமா?


A:
ஜேஜே... இன்னிக்கு நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்க போல??

மெசேஜ் மாமா: ச்ச்சே.. CSE சிம்போசியம்ன்னா கூட DE-BUGGING, QUIZல கலந்து இருக்கலாம்... இப்டி ஆகிடிச்சே... இந்த கார்த்தி ** நம்புனா இதான்டா...


நான்: டேய் என்னமோ கலந்துக்கிட்டா பரிசு வாங்கப்போற மாதிரி பேசுற?? லேப்ல அவுட்புட் (OUTPUT) வராம முக்கிட்டுருப்ப.. தும்பி DE-BUGGING பத்திலா பேசுது.. வா.. நமக்கு தான் AD-ZAP இருக்குல்ல?


A: டேய், இது உங்க காலேஜ் மாதிரி நினச்சிட்டீங்களா?? அரசியல் கட்சி ஆள் சேக்குற மாதிரி எந்த DEPARTMENT பசங்க வந்தாலும் உள்ள விட? ஜே.ஜே PASSED OUT.. ஐ.டி கூட இல்ல.. நீங்க எல்லாம் ஒவ்வொரு காலேஜ், வேற வேற DEPARTMENT.. E&I DEPARTMENT ஒரு மாதிரி... வேணாம்... MONDAY எங்கள்து... நீ வா மச்சி... என்ன PRIZE வேணுமோ வாங்கிக்கோ


ஜேஜே: அப்ப இன்னிக்கு ஒரு ஆறுதல் பரிசு கூட இல்ல?


A: சாரிடா... வழக்கம் போல சாப்டோமா, சைட் அடிச்சோமான்னு இருங்க... EVENTS நடக்குற ஹால்ல நல்லா இருப்பாங்க... என் கூட வாங்க... பராக்கு பாக்குற மாதிரி சைட் அடிக்கலாம்!


அப்ப ஒரு குரல்..


ஹாய் A..

ஹாய் S..


கடல:
வாவ்.. செமயா இருக்காடா..

A: அவ என்னோட ஃப்ரெண்ட்டா...

கடல: தெய்வ மச்சான் நீ.. INTRO PLEASE…

S: என்ன... எங்க DEPARTMENT GIRLS சாரில இருக்கறதுனால சைட் அடிக்கலாம்னு வந்தீயா?


A: புலி எளச்சு போச்சுன்னா எலி எலக்காரமா பாக்குமாம்.. இல்லப்பா.. அதுக்கு நான் LECTURE க்ளாஸ் ATTEND பண்ணுவேன்!!


S: டேய்..


A: சும்மா.. இவங்களா என் FRIENDS.. சிம்போசியத்துக்கு வந்தாங்க.. இவ S.. வேற டிப்பார்ட்மெண்ட்டா இருந்தாலும் என் CLOSE FRIEND!!

S: ஹாய்

ஹாய்


A: சம படிப்ஸ்டா.. 80+ தான் எப்பவுமே.. படிப்புன்னா இவ ஒரு புலி!!

நான்: வாவ்.. அப்ப நான் உங்க்கிட்ட ஒரு கேள்வி கேக்கவா? சிம்பிள் தான் :)

S: ம்ம்ம்ம்

நான்: இது என்னனனு சொல்லுங்க..

குழப்பமாக நம்மை பார்க்க!!

நான்: அட சொல்லுங்க.. உங்க மேத் அறிவுக்கு ஒரு சவால்..

S: காயின்..

நான்: ஏங்க? ஏன் எல்லா பொண்ணுங்களும் இப்டி இங்கிலிஷ்ல சீன போடுறீங்க?? தமிழ் தெரியும்ல?? இப்டி சின்னசின்ன விசயத்துக்கு கூட ஆங்கிலமா?? அதுவும் அழகா, லட்சணமா புடவைல இருக்கீங்க..

S: காசு..

நான்: ம்ம்ம்ம்.. நிறைய சர்க்யூட், ப்ராப்லம்ஸ் கரெக்ட்டா ஆன்ஸர் பண்ணித்தானே முதல் மதிப்பெண் எடுத்தீங்க.. எங்க இந்த காச (COS) கொஞ்சம் சைன்னா (SIN) மாத்துங்க பாக்கலாம்...


அவள் அதிர்ந்து போனாள்..


நான்: என்னங்க.. இவ்வளவு தான் உங்க அறிவா? உங்கள போய் மேத் புலி, எலக்ட்ரிக்கல் எலின்னு கலாச்சிட்டான் இவன்.. உங்க கிட்ட இருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்... சே... HIGHLY DISAPPOINTED…

S: எனக்கு தெரில.. என்ன விட்டுடுங்க..

நான்: சரி சரி.. பயப்படாதீங்க.. உங்க பர்ஸ் கொஞ்சம் ஓப்பன் பண்ணி காட்றீங்களா??


அவள் முழிக்க..


நான்: அடடா.. என்ன ஒரு குற்றவாளி மாதிரியே பாக்குறீங்க.. எதுவும் பண்ண மாட்டேங்க.. உள்ள இருக்குற லிப்-ஸ்டிக், ஃபேசியல் க்ரீம்லா நாங்க எடுத்துக்க மாட்டோம்.. அத வச்சி நாங்க என்ன பண்ண?? நம்புங்க..

S: அதெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு எப்டி.......??

கடல: அட.. எங்க காலேஜ் மொக்க ஃபிகர்ஸ் பர்ஸ் எல்லாம் நைசா பாக்கறது தானே எங்க ஹாபி.. அவங்களே யூஸ் பண்ணும் போது, நீங்க சூப்பர் ஃபிகரு இதெல்லாம் வச்சிக்காம இருப்பீங்களா?


அவள் முறைத்துக்கொண்டே


S: அதில்ல.. காலேஜ்ல பாய்ஸ்-கேர்ள்ஸ் இப்டி நின்னு பேசுனா பிரச்சனை.. அதான்..

மெசேஜ் மாமா: நீங்க என் அக்கான்னு சொல்லிடுறேன்.. பர்ஸ்ஸ காட்டுங்க..


அவள் எங்களிடம் நீட்ட, அதை பிடுங்கி, ஆராய்ந்தோம்.. அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து,


நான்: இந்தாங்க.. காசு.. (ஒரு ரூபாயை அவளிடம் கொடுத்தோம்).. இதோ பாருங்க.. GOVERNORக்கு மேலே ஒரு WAVE போகுதா? அதான் சைன்னு (Sin) எப்டி காசு சைன்னு ஆகிடிச்சா??


அவள் சில செகண்ட்ஸ் சைலண்ட்.. அப்றோம் சிரித்துக்கொண்டே..


S: கலக்குறீங்க.. எப்டி தான் இப்டி யோசிக்கிறீங்களோ?? ஆனா ஒரு ரூபா கொடுத்து, 10 ரூபா ஆட்டய போட பாக்குறீங்க??

நான்: அட... இது 360* அங்க காசு ஒண்ணு தானே..


வெடுக்கென்று கையில் இருந்த நோட்டை பிடுங்கி..


S: 360* ல சைன்னு 0.. அதுனால இந்த நோட்டு எனக்குத்தான்..


டொயிங்க்..


டிஸ்கி 1: A மூலமா நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், S தற்போது GRE எழுதி இருக்காங்க.. என்னோட MARKS எடுத்துருக்காங்க.. IRONY or CO-INCIDENCE or FIXED?


டிஸ்கி 2: நான் APPLY பண்ணப்போற யுனிவர்சிட்டியிலே அவங்களுக்கும் சீட் கிடைக்கணும்னு ஆசை.. :)வருகைக்கு நன்றி!!

13 comments:

Srivats said...

wishes for her to get into the same college, appo dhaan neraya mokkai ezudhama love poem ellam ezhuduveenga :)

sema kalai, college pakkam pona maari erundhuchu

Srivats said...

//போய் மேத் புலி, எலக்ட்ரிக்கல் எலின்னு //

epdi ellam sonna onnum sikkadhu doi..

♠ ராஜு ♠ said...

நீங்க பண்ணுன லொள்ளுக்கு ஓங்கி tan45 கொடுக்கலயே..!
அது வரைக்கும் சந்தோஷமா இருந்திருக்குமே.
:-)

Narayanan said...

epdi daa.unakku mattum ipdi maatudhu.. manmadha k**** da nee...

enjoy pannu

Karthik said...

எஞ்சினியரிங் பொண்ணுங்ககிட்ட எல்லாம் என் பேர கொஞ்சம் யோசிச்சுதான் சொல்லணும் போலிருக்கே!

ROFL....:))))

Karthick Krishna CS said...

pepsi uma enna sollirukkaanga... try try try again... vera oru nalla sandharppam kedaikkaamalaa pogum...

R-ambam said...

Cos Sin.... Adengappaa ...! ennamaaa yosikraangappa ..!

pappu said...

நான் APPLY பண்ணப்போற யுனிவர்சிட்டியிலே அவங்களுக்கும் சீட் கிடைக்கணும்னு ஆசை..////

antha ponu kita solidatha boss... anga applyae panama poiduva....

தாரணி பிரியா said...

:) nallathan symposium visit senju irukkinga

Vijay said...

மலரும் நினைவுகள் !!

வெளி காலேஜுக்குப் போய் நாலு ஃபிகருங்களைப் பார்க்கறதுக்காகவே பேப்பர் ப்ரெசெண்டேஷன் போவோம். அதிலும் பரிசு ஏதும் கிடைச்சிடுச்சுன்னா கேக்கவே வேண்டாம், பொண்ணுங்களே நம்ம கிட்ட வந்து பேசும். ஹும் அதெல்லாம் ஒரு காலம் :)

GAYATHRI said...

oh god oh god!unga kita oru desperation theriyudhu.adhu enaku romba pidichurku karthik anna..S unga kooda varuvaala maatalanu kaalam badhil solum..apo oru post panidunga:p

Anonymous said...

ha ha ha!
lolz!!!

Divyapriya said...

கடலைன்னா இதுவல்லவோ கடலை!!!

கடவுளே! அந்த S பொண்ணுக்கு எப்படியாவது கார்த்திக் ப்ளாக கண்ல காட்டி, அவளை இந்த பையன்ட்ட உஷாரா இருக்க சொல்லுப்பா!!! :P

Blogger templates

Custom Search