Tuesday, 17 November 2009

கில்ஸ் அண்ணாவின் தசவாதாரம்

ரொம்ப நாளா ஜி3 அக்காவ வேண்டிக்கொண்டதிற்கு, ஒரு வழியா பதிவுலக சந்திப்ப நட்த்தியாச்சு.. TARAPORE டவர்ல இருக்குற ஒரு ஹோட்டல்ல 11.30 மணிக்கு வர சொன்னாங்க... மீட்டிங்கு கில்ஸ் அண்ணாவும் வராங்கன்னு சொன்னதால, 12 மணிக்கு வரலாம், எப்படியோ அண்ணாத்த லேட்டா தானே வருவாருன்னு நினச்சேன்... ஆனா ஜி3 அக்கா, அவர்கிட்ட 11 மணி ட்ரீட்னு சொல்லிட்டாங்க (அப்ப தான் 11.30க்கு வருவாருன்னு) ஆனா அன்னிக்கு பார்த்து, கில்ஸ் அண்ணா உள்ள உறங்கிட்டு இருந்த PUNCTUALITY மிருகம், சீக்கிரமா எழுந்ததால், பாவம் 11 மணிக்கே வந்துட்டாரு... நான் பஸ் பிடிச்சி 11.20க்குல்லா வந்துட்டேன்.. ஆனா ஹோட்டல் பேரு மறந்துபோச்சு.. எதிர்தாப்புல வேற ஒரு ஹோட்டல் (BAHURI) இருந்துச்சு.. சரி ஒரு வேள இந்த ஹோட்டல் தான் போலன்னு அவசரப்பட்டு உள்ளே போனா, மொய்க்க ஈ கூட காணோம்.. ஆஹா அக்கா நமக்கு ஆப்பு வச்சிட்டாங்களான்னு யோசிச்சே அவங்களுக்கு ஃபோன் போட, மதுரா ஹோட்டல்னு ஞாபகப்படுத்துனாங்க.. கில்ஸ் வந்துட்டாருன்னு கூடுதல் தகவல் தெரிவிச்சாங்க.. அங்க அடையாளங்கள்: உயரமானவர், கண்ணாடி அணிந்திருப்பார், அழகாக இருப்பார்..
அவங்க சொன்னதுக்கு ஏத்த மாதிரி ஒருத்தர் மார்ச் ஃபாஸ்ட் பண்ணிண்டே இருந்தாரு.. அவர் தான் கில்ஸோன்னு ஒரு DOUBT.. ஆதவன்ல பத்து வயசு சூரியா பார்த்தீங்களே.. அதே மாதிரி ஸ்கூல் பையன் கணக்கா BAG மாட்டிக்கிட்டு இருந்தாரு அவரு.. SIX PACK சூரியாக்கு போட்டியா BACK PACK சூரியா... அதுமட்டுமின்றி, ஜீ-டாக்ல அவரோட போட்டோ சீரியல் ஹீரோ அப்ஸர் (அலைகள், பாலசந்தர் சீரியல்ல நடிச்சவரு) மாதிரியே இருந்துச்சு... ஆனா நேர்ல பார்க்க வேற மாதிரி இருந்ததால் ஒரு தயக்கம்.. பக்கத்துல ஒரு சூப்பர் ஃபிகரு பஸ்க்கு காத்துக்கொண்டு இருந்தாங்க.. சரி.. முதல்ல இவங்கள டீல் பண்ணலாம்னு ஒரு 10 நிமிசம் விடாம நோட்டம் விட்டேன்.. ஆனா அவங்க பஸ் வந்த உடனே கிளம்பி என்ன டீல்ல விட்டுட்டாங்க.. ஒகே.. பாவம் கில்ஸ், போய் அவர அப்ரோச் பண்ணலாம்னு பேசி, அறிமுகம் ஆகிட்டோம்..
ஆனா எங்கள சீக்கிரமா வரசொன்ன ஜி3 அக்கா, கரகாட்டகாரன்ல வந்த சொப்பனசுந்தரி காரோட உதிரி பாகங்கள்ல செய்யப்பட்ட அவங்க ஸ்கூட்டியை உருமிக்கொண்டே, சே சே.. உருட்டிக்கொண்டே பொறுமையா, 12 மணிக்கு வந்தாங்க... கேட்டா “ஓவர்-ஸ்பிட் பண்ணி மாட்டிக்கிட்டேன்” சொல்லி எங்களுக்கு ஹார்ட்-அட்டாக் கொடுத்துட்டாங்க... கில்லி சேஸ் சீனுக்கு அக்காவோட வண்டிய தான் முதல்ல கேட்டாங்க.. ஆனா ஒரு முறுக்குல மதுரைல இருந்து சென்னைக்கு வந்ததால, வேணாம்னு சொல்லிட்டாங்க.. கனகு அண்ணாக்கு ஃபோன் பண்ணா, “ஓஓஓ... விடிஞ்சிடிச்சா?” கேட்டு, இதோ கிளம்புறேன்னு சொன்னாரு..


கில்ஸ்: கனகு எங்க இருந்து வராரு?

ஜி3 அக்கா: எண்ணூர் கிட்ட..

கில்ஸ்: எண்ணூர் கிட்டயா?? எண்ணூர் ரொம்ப தூரம்மா...இந்த மொக்க தாங்க முடியாததால் எல்லாரும் சாப்பிட கிளம்பினோம்.. CVRன்னு இன்னொரு பதிவர் வந்தாரு... அவர் ப்ளாக் நான் பார்த்ததில்லை... ஆனா எல்லாத்தையும் அவர் கலைகண்ணோட பார்ப்பாருன்னு கில்ஸ் அண்ணா சொன்னாரு... மீட்டுக்கு வர சொன்ன உடனே, அமெரிக்கால இருந்து நேரா வந்துட்டாரு போல, எல்லாமே ஆங்கிலம்+தமிழ் மொழிப்பெயர்ப்போட தான் பேசுனாரு.. “YES!! YOU CAN SEE IT! பாருங்க.. LOOKS DIFFERENT... வித்தியாசமா இருக்கு” இவருக்குள்ள மேஜர் சுந்தராஜன்னும் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்... ஹோட்டல்ல நுழைந்த உடனே அங்கே இருந்த சேர்ஸ் எல்லாம் பார்த்து “SUPER VIEW.. இதே பார்த்தா வித்தியாசமா இருக்கு” தன்னோட கலா ஆர்வத்த (யார் அந்த கலான்னு மொக்க போடக்கூடாது) ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. சீரியல் ஆக்டர், ஸ்மார்ட்ன்னு சொன்னதாலோ என்னவோ கில்ஸ் அண்ணா பின் டேபிள்ல இருந்த ஃபிகர நோட்டம் விட டேபிள் மாறுவதிலேயே குறியா இருந்தாரு... ஏன் சார்.. நமக்கு எது வருமோ அத ட்ரை பண்ணுவோமே?? இவர் தன்னோட தொடர்கதையில ராம்னு எழுதுற கிருஷ்ண லீலை சேட்டைகளுக்கு எது மூலத்தனம்னு தெரிஞ்சிகிட்டேன்.. கில்ஸ் இன் தசாவதாரத்துல ரெண்டு பார்த்துட்டேன்... இனிமேலும் நா ராம் இல்ல, நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டேள், நான் அது மாதிரி கிடையாதுன்னு சேது வசனம் பேசக்கூடாது.. கடசி வரைக்கும் நாங்க டேபிள் மாறல.. கடவுள் இருக்காருன்னு இது மாதிரி சம்பவங்களால் தான் தெரியுது :P
விஜய்ய நடிக்க சொன்னா எப்டி இருக்கும்? அது மாதிரி மெனு கார்ட் கொடுத்து என்னை ஆர்டர் பண்ண சொன்னாங்க.. அதுல இருந்த முக்கால்வாசி ஐட்டம் எனக்கு புரியவே இல்ல.. அபியும் நானும் ரவி சாஸ்திரி மாதிரி பேந்த பேந்த முழிச்சிக்கிட்டே ஜி3 அக்கா என்ன சொல்றாங்களோ அதையே ஆர்டர் பண்ணேன்.. நல்ல வேள ஐஸ்-க்ரிம் மட்டும் எனக்கு புரிஞ்சிது :D உல்லாச பயணம், கோடை சுற்றுலா சென்று வந்த மாதிரி முகமெல்லாம் பல்லோட சென்னைய சுத்தி பார்த்துக்கிட்டே நாங்க எல்லாம் முடிச்ச உடனே கனகு அண்ணா வந்தாரு.. வந்தவருக்கு என்ன கோவமோ தெரில, செர்வர்வ (ஏனா இவர் க்ளைண்ட்) அசிங்கமா திட்டிட்டாரு.. வெஜ் ஹோட்டல்ல ஏன் நான்-வெஜ் போடலன்னு டென்ஸன் ஆகிட்டாரு.. ஹோட்டல்ல இருந்த மான், சிங்கம், மாடு அவற்றின் PAINTING, SCULPTURES பார்த்து நான்-வெஜ் நினச்சிட்டாரு.. நல்ல வேள, பேர பார்த்து (மது+ரா) சரக்கு கொண்டு வான்னு கேக்கல...அப்புறம் கில்ஸ் அண்ணாக்கு ஆபிஸ்ல ஸ்நாக்ஸ் தராங்கன்னு செய்தி வந்த உடனே, அலுவலக பணி, கடமை என்னை அழைப்பதால் நான் செல்கிறேன்னு ஜகா வாங்கிட்டாரு..டிஸ்கி 1: கடைசி வரை ஜி3 அக்கா எனக்கு சமோசா மட்டும் வாங்கி தரலை


டிஸ்கி 2: மீட்டிங் ப்ளான் போட்டு கடைசி நிமிடத்தில் திருவல்லிக்கேணியில் தனது கேர்ள் ஃப்ரெண்டுடன் டேட்டிங்.. சே மீட்டிங் போன வானவில் கார்த்திக்கை கண்டித்து இந்த போஸ்ட்...


டிஸ்கி 3: ஜி3 அக்காவின் தூண்டுதலின் பேரில், அல்ப சமோசாக்கு ஆசைப்பட்டு கில்ஸ் அவர்களை ஓட்ட எழுதப்பட்டதில்லை இந்த பதிவு என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்...வருகைக்கு நன்றி!!

Wednesday, 11 November 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே- 5

1. விழா, போஸ்டர் மூலம் எதாவது ஆதாயம் இருக்குதா?


அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்ப வேண்டிய கேள்வில்லா ஏன்யா எனக்கு அனுப்புறீங்க.. என்ன கொடும ஜெகட்ரட்சகன் இது?2. வீட்ல பொண்டாட்டி தொல்ல தாங்கல.. சாமியார் ஆகலாம்னு இருக்கேன்..


அடேய்.. ஒரு பொண்ணய உன்னால சமாளிக்க முடில.. நீ எல்லாம் சாமியார் ஆகி எப்படி அத்தன பொண்ணுங்களயும் சமாளிப்ப??3. சப்ப ஃபிகர், சூப்பர் ஃபிகர்- வித்தியாசம்?


உன்ன, கனகு அண்ணன, வானவில் வீதி கார்த்திக், கில்ஸ் இவங்கள பாக்குறதுல்லா சப்ப ஃபிகரு..


என்ன பாக்குறதுல்லா சூப்பர் ஃபிகரு..


4. தனக்குத்தானே சிரிச்சீப்பீங்களா?


இல்லங்க.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல5. எனக்கு லவ் ஃபெயிலியர்.. என்ன பண்ண?

தற்கொலை
தம்
மது
கஞ்சா
இதெல்லாம் வேண்டாம்..இன்னொரு ஃபிகர லவ் பண்ணு.. நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி.. CONFIDENCE மச்சி CONFIDENCE6. டைட்டானிக் கப்பல் எப்படி மூழ்கியது?


லுபுக்
குபுக்
புலுக்
குலுக்
பொதக்
பொதக்
லொசக்
சக்
க்க்க்க்க்க்...
7. இப்ப நீங்க முணுமுணுக்குற பாடல்??


22 22222 22222 22222 222222222222222 222 222 2222 2222

டொகோமோ பாடல்..8. சில நேரம் நம்ம சுத்தி இருக்கறத பாக்கவே வெறுப்பா இருக்கு.. எதுவுமே இல்லாம ஒரு வெறுமையும், இருளுமா இருக்கு. என்ன செய்ய?


வாங்க.. வாசன் ஐ-கேர் க்ளினிக் போலாம்.. நாங்க இருக்கோம்!!9. குட்டி கதை ஒண்ணு சொல்லுங்க.


கடவுள் சரகடிக்க டாஸ்மாக் போனாரு..

ஒரு பீர் முதல்ல குடிச்சாரு.. கிக் ஏறல

அடுத்து ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல

அடுத்து ஒரு ஃபுல் ப்ராண்டி.. கிக் ஏறல

மீண்டும் ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல

அசால்டா தலய சொரிங்சிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.. பக்கத்துல இருந்தவனுக்கு அதிர்ச்சி..


யோவ்.. என்னய்யா ஆளு நீ.. இவ்வளவு அடிச்சும் போத ஏறல உனக்கு? செம STEADYயோட இருக்க? எனக்கு போதை ஏறாது.. ஏன்னா நான் கடவுள்.. ரைட்டு.. உனக்கு போதை தலைக்கு ஏறிடிச்சி!! பாத்து வீட்டுக்கு போப்பா..10. இடைத்தேர்தல்ல யாருக்கு வெற்றின்னு நினைக்கிறீங்க?

மீனாட்சி... எப்பூடி??வருகைக்கு நன்றி!!


Wednesday, 4 November 2009

சிம்போசியத்தில் கடலை

இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு சிம்போசியம் (SYMPOSIUM) என்பது தேவதைகளின் தரிசனம் மாதிரி.. மற்ற கல்லூரியில் நடக்கும்போது.. அப்ப அவங்க கல்லூரியில் நடந்தா?? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குற மாதிரி.. எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் தன்னுடைய கல்லூரியைக் காட்டிலும், பிற கல்லூரி பெண்கள் மீது தான் ஈர்ப்பு இருக்கும்.. அதுனால எந்த காலேஜ் சிம்போசியம் என்றாலும் நாங்க ஓடிடுவோம்.. இப்படி நான் ஆர்.எம்.கே கல்லூரிக்கு சென்று அங்கே ஒரு பொண்ண டாவடித்த அனுபவம் இதோ..


ஜேஜே, கடல, மெசேஜ் மாமா, நான்!!


கடல: என்னடா மச்சி.. ஒரு ஃபிகரும் காணோம்..

ஜேஜே: வந்த உடனே கடய போட்டுட்டான்டா.. கொஞ்சம் பொறுமை காக்கவும் தம்பி!!

மெசேஜ் மாமா: டேய் கார்த்தி.. இப்டி எமாத்திட்ட.. ஓ** உன்ன நம்பி வந்தோம்.. காலைல 6:30 மணிக்குலா பஸ் பிடிச்சேன்டா.. இன்னிக்கு ஒண்ணுமே தேறலைன்னா, இது ஒரு கருப்பு நாள்டா..


நான்: தம்பி.. நீ நினைக்குற மாதிரி பொண்ணுங்கல்லா வந்து ஜாலியா பேசுவாங்க நினைக்காதே.. இங்கல்லா ரேஞ்ஜே வேற.. கொஞ்சம் STRICT.. காலேஜ் வெளியே தான் வச்சிக்கணும்.. நிறய டெலுகுகாரங்க.. ரெட்டி காருக்கு நீ ரொட்டி காரு ஆகிடாத..


கடல: மாப்ள.. நமக்கு டெலுகு, ஹிந்தி, கன்னடா எல்லாமே அத்துப்படி.. ஆர்க்குட்ல எத்தன பொண்ணுங்களுக்கு வலை வீசுறோம்.. இதெல்லாம் கத்துக்கிட்டா தான் பொழப்பு ஓடும்.. இப்ப மராத்தி கத்துக்கிட்டு இருக்கேன்.. WANT TO HEAR SOME TELGU? ஏமி பாகுன்னாரா? மாட்லாடு, சேசுனாரா?


ஜேஜே: தம்பி.. இந்த ஆர்வத்த கொஞ்சம் அப்டியே படிப்புல காமிச்சு இருந்தீங்கன்னா, ஒரு ரெண்டு PROGRAMMING LANGUAGES கத்துக்கிட்டு இருக்கலாம்.. அப்பத்தான் எதிர்கால பொழப்பு ஓடும்..


மெசேஜ் மாமா: போடா.. நீ பேசுவ.. உனக்கொடு ஆள் இருக்கு.. நாங்கல்லா இன்னும் ஆரம்ப பாட சாலையிலே இருக்கோம்.. இதெல்லாம் யூத்து.. உன்ன மாதிரி UNCLESக்கு தெரியாது..


அப்ப A அங்கே வர..


நான்: டேய் A.. மச்சி.. இவங்க தான் என் ஃப்ரெண்ட்ஸ்.. என்னடா எல்லாமே சுமாரா இருக்கு?? நீ கூப்பிட்டன்னு தான் வந்தோம்.. ஆனா ஒண்ணும் வேலைக்காவது போல இருக்கே.. பசங்கல்லா ரொம்ப ஃபீல் பண்றாங்க.. உன்ன நம்பி வந்தவங்கள இப்டி கலங்கின மனதோட அனுப்புறது ஒரு நண்பனுக்கு அழகில்லை..


A: டேய்... என் DEPARTMENT சிம்போசியத்துக்கு வாடா...


அதிர்ச்சி

கடல: அப்ப இது உங்க டிப்பார்ட்மெண்ட் சிம்போசியம் இல்லையா?

A: இல்ல... இது E&I


எல்லாரும் என்னை முறைக்க

நான்: டேய்.. அப்டி பெருசா என்ன தப்பு பண்ணிட்டேன்?? ஏதோ TECHNICAL FAULT.. IT HAPPENS டா.. அதான் சாப்பாடு இருக்குல.. இங்க செமத்தியா இருக்கும்!!


கடல:
ஓஓஓ... E&I?? எல்லாரும் சுமாரா இருக்கும் போதே ஒரு DOUBT வந்துச்சு..


ஜேஜே: ஆமா.. இவரு பழம் தின்னு கொட்டை போட்டவரு.. சொல்றாரு, எந்த டிப்பார்ட்மெண்ட்ல சூப்பரு, எதுல சப்பைன்னு... நாயே.. E&I ஃபுல் ஃபார்ம் தெரியுமா?


A:
ஜேஜே... இன்னிக்கு நீ ஃபுல் ஃபார்ம்ல இருக்க போல??

மெசேஜ் மாமா: ச்ச்சே.. CSE சிம்போசியம்ன்னா கூட DE-BUGGING, QUIZல கலந்து இருக்கலாம்... இப்டி ஆகிடிச்சே... இந்த கார்த்தி ** நம்புனா இதான்டா...


நான்: டேய் என்னமோ கலந்துக்கிட்டா பரிசு வாங்கப்போற மாதிரி பேசுற?? லேப்ல அவுட்புட் (OUTPUT) வராம முக்கிட்டுருப்ப.. தும்பி DE-BUGGING பத்திலா பேசுது.. வா.. நமக்கு தான் AD-ZAP இருக்குல்ல?


A: டேய், இது உங்க காலேஜ் மாதிரி நினச்சிட்டீங்களா?? அரசியல் கட்சி ஆள் சேக்குற மாதிரி எந்த DEPARTMENT பசங்க வந்தாலும் உள்ள விட? ஜே.ஜே PASSED OUT.. ஐ.டி கூட இல்ல.. நீங்க எல்லாம் ஒவ்வொரு காலேஜ், வேற வேற DEPARTMENT.. E&I DEPARTMENT ஒரு மாதிரி... வேணாம்... MONDAY எங்கள்து... நீ வா மச்சி... என்ன PRIZE வேணுமோ வாங்கிக்கோ


ஜேஜே: அப்ப இன்னிக்கு ஒரு ஆறுதல் பரிசு கூட இல்ல?


A: சாரிடா... வழக்கம் போல சாப்டோமா, சைட் அடிச்சோமான்னு இருங்க... EVENTS நடக்குற ஹால்ல நல்லா இருப்பாங்க... என் கூட வாங்க... பராக்கு பாக்குற மாதிரி சைட் அடிக்கலாம்!


அப்ப ஒரு குரல்..


ஹாய் A..

ஹாய் S..


கடல:
வாவ்.. செமயா இருக்காடா..

A: அவ என்னோட ஃப்ரெண்ட்டா...

கடல: தெய்வ மச்சான் நீ.. INTRO PLEASE…

S: என்ன... எங்க DEPARTMENT GIRLS சாரில இருக்கறதுனால சைட் அடிக்கலாம்னு வந்தீயா?


A: புலி எளச்சு போச்சுன்னா எலி எலக்காரமா பாக்குமாம்.. இல்லப்பா.. அதுக்கு நான் LECTURE க்ளாஸ் ATTEND பண்ணுவேன்!!


S: டேய்..


A: சும்மா.. இவங்களா என் FRIENDS.. சிம்போசியத்துக்கு வந்தாங்க.. இவ S.. வேற டிப்பார்ட்மெண்ட்டா இருந்தாலும் என் CLOSE FRIEND!!

S: ஹாய்

ஹாய்


A: சம படிப்ஸ்டா.. 80+ தான் எப்பவுமே.. படிப்புன்னா இவ ஒரு புலி!!

நான்: வாவ்.. அப்ப நான் உங்க்கிட்ட ஒரு கேள்வி கேக்கவா? சிம்பிள் தான் :)

S: ம்ம்ம்ம்

நான்: இது என்னனனு சொல்லுங்க..

குழப்பமாக நம்மை பார்க்க!!

நான்: அட சொல்லுங்க.. உங்க மேத் அறிவுக்கு ஒரு சவால்..

S: காயின்..

நான்: ஏங்க? ஏன் எல்லா பொண்ணுங்களும் இப்டி இங்கிலிஷ்ல சீன போடுறீங்க?? தமிழ் தெரியும்ல?? இப்டி சின்னசின்ன விசயத்துக்கு கூட ஆங்கிலமா?? அதுவும் அழகா, லட்சணமா புடவைல இருக்கீங்க..

S: காசு..

நான்: ம்ம்ம்ம்.. நிறைய சர்க்யூட், ப்ராப்லம்ஸ் கரெக்ட்டா ஆன்ஸர் பண்ணித்தானே முதல் மதிப்பெண் எடுத்தீங்க.. எங்க இந்த காச (COS) கொஞ்சம் சைன்னா (SIN) மாத்துங்க பாக்கலாம்...


அவள் அதிர்ந்து போனாள்..


நான்: என்னங்க.. இவ்வளவு தான் உங்க அறிவா? உங்கள போய் மேத் புலி, எலக்ட்ரிக்கல் எலின்னு கலாச்சிட்டான் இவன்.. உங்க கிட்ட இருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்... சே... HIGHLY DISAPPOINTED…

S: எனக்கு தெரில.. என்ன விட்டுடுங்க..

நான்: சரி சரி.. பயப்படாதீங்க.. உங்க பர்ஸ் கொஞ்சம் ஓப்பன் பண்ணி காட்றீங்களா??


அவள் முழிக்க..


நான்: அடடா.. என்ன ஒரு குற்றவாளி மாதிரியே பாக்குறீங்க.. எதுவும் பண்ண மாட்டேங்க.. உள்ள இருக்குற லிப்-ஸ்டிக், ஃபேசியல் க்ரீம்லா நாங்க எடுத்துக்க மாட்டோம்.. அத வச்சி நாங்க என்ன பண்ண?? நம்புங்க..

S: அதெல்லாம் இருக்குன்னு உங்களுக்கு எப்டி.......??

கடல: அட.. எங்க காலேஜ் மொக்க ஃபிகர்ஸ் பர்ஸ் எல்லாம் நைசா பாக்கறது தானே எங்க ஹாபி.. அவங்களே யூஸ் பண்ணும் போது, நீங்க சூப்பர் ஃபிகரு இதெல்லாம் வச்சிக்காம இருப்பீங்களா?


அவள் முறைத்துக்கொண்டே


S: அதில்ல.. காலேஜ்ல பாய்ஸ்-கேர்ள்ஸ் இப்டி நின்னு பேசுனா பிரச்சனை.. அதான்..

மெசேஜ் மாமா: நீங்க என் அக்கான்னு சொல்லிடுறேன்.. பர்ஸ்ஸ காட்டுங்க..


அவள் எங்களிடம் நீட்ட, அதை பிடுங்கி, ஆராய்ந்தோம்.. அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து,


நான்: இந்தாங்க.. காசு.. (ஒரு ரூபாயை அவளிடம் கொடுத்தோம்).. இதோ பாருங்க.. GOVERNORக்கு மேலே ஒரு WAVE போகுதா? அதான் சைன்னு (Sin) எப்டி காசு சைன்னு ஆகிடிச்சா??


அவள் சில செகண்ட்ஸ் சைலண்ட்.. அப்றோம் சிரித்துக்கொண்டே..


S: கலக்குறீங்க.. எப்டி தான் இப்டி யோசிக்கிறீங்களோ?? ஆனா ஒரு ரூபா கொடுத்து, 10 ரூபா ஆட்டய போட பாக்குறீங்க??

நான்: அட... இது 360* அங்க காசு ஒண்ணு தானே..


வெடுக்கென்று கையில் இருந்த நோட்டை பிடுங்கி..


S: 360* ல சைன்னு 0.. அதுனால இந்த நோட்டு எனக்குத்தான்..


டொயிங்க்..


டிஸ்கி 1: A மூலமா நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், S தற்போது GRE எழுதி இருக்காங்க.. என்னோட MARKS எடுத்துருக்காங்க.. IRONY or CO-INCIDENCE or FIXED?


டிஸ்கி 2: நான் APPLY பண்ணப்போற யுனிவர்சிட்டியிலே அவங்களுக்கும் சீட் கிடைக்கணும்னு ஆசை.. :)வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search