Saturday, 17 October 2009

இந்த வருடம் தீபாவளி இல்லை


Mr. I.G.R. MAARAR… நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க... I’M SURE YOU ARE AWARE OF THE POWER OF THE லஷ்மி வெடி... பிஜிலி B4 வகை... அந்த மாதிரி பாம் உங்க சிட்டில 5 இடத்துல வச்சிருக்கேன்... இன்னிக்கு காலைல சரியா 8 மணிக்கு THERE WILL BE MANY EXPLOSIONS IN YOUR CITY… எந்த குப்பனோ சுப்பனோ இத செய்ய முடியுமா மாறர்?

இப்டிலா ஃபோன் பண்ணி கலாய்க்கணும் ஆச தான்.. ஆனா தீபாவளி நான் இன்னிக்கு கொண்டாடல... ஏன்?? ஏன்?? ஏன்?? காரணம் கீழே உள்ள படத்தை பாருங்கள்...


தலைவர் படம் இல்லாம எப்டி தீபாவளி கொண்டாட?? சுந்தரா ட்ராவல்ஸ் படமாவது கே டீ.வியில் போட்டுருக்கலாம்.. :(

தலைவி நமிதாவின் ஜெகன்மோகினி படத்த ரிலீஸ் பண்ண விடாம ஸ்டே (STAY) வாங்கிட்டாங்க.. இதனாலும் தீபாவளி கொண்டாட மனசே வரல... இந்த தீபாவளி மனதுக்கு தீரா-வலி.. :(

புது மொபைல் வாங்கி தரேன்னு போன தீபாவளி மாதிரியே அப்பா என்கிட்டேயே லொல்லு பண்ணிட்டாரு.. அது அடுத்த பதிவில் சொல்றேன்..

தீபாவளி ரீலிஸ்லா நேத்து பார்த்தோம்...


பேராண்மை- கொஞ்சம் பொறுமையா போகுது ஆரம்பத்தில்.. ஆனா டைரக்டர் அடுத்த அரை மணி நேரத்துல புது உலகத்துக்கு கொண்டு போகுறாரு.. THE MOMENTUM AND PACE IS MAINTAINED TILL THE END... வித்தியாசமான படம்... ஆனா அருமை, ரொம்ப சூப்பருன்னுலா சொல்ல முடியாது... GOOD BUT NOT THE BEST. ஜெயம் ரவி பிண்ணிருக்காரு... ஆனா குரல் தான் ஒத்துலைக்கல... ஹை-பிட்ச்ல கத்தும் போது கொஞ்சம் காமெடியா இருக்கு... ஆனா நடிப்புல குறைவைக்கல மனுசன்... சந்தோஷ சுப்பிரமணியம் அடுத்து நல்லா நடிக்கக்கூடிய நடிகர்னு மீண்டும் நிருபிச்சிட்டாரு... அண்ணன் கிக் ரீ-மேக் வேற வாங்கிருக்காரு.. தில்லாலங்கடின்னு எடுத்துக்கிட்டு இருக்காங்க.. அதையும் பார்த்துட்டோம்.. ENTERTAINMENT GUARANTEED… அடுத்த ஹிட்க்கும் ரெடி ஆகிக்கோங்க அண்ணா... இவருக்கு கிக் ஸ்க்ரிப்ட் சரியா இருக்குமான்னு தெரில... ஆனா தளபதி விஜய் நடிச்சிருந்தா செம மாஸ்ஸா இருக்கும்… TAILOR-MADE SCRIPT FOR VIJAY… யார் யாருக்கு என்ன எழுதிருக்கோ அதானே நடக்கும்... சுறா... கொடுமை...ஆதவன், நேத்து நைட் ஷோ பசங்க போனாங்க.. 12 மணிக்கு “HAPPY DIWALI.. BUT NOT FOR US MAAPS!!” மெசேஜ் வந்துச்சு... தலைவரு அவன் கேர்ள்-ஃப்ரெண்டுக்காக சூரியா ஃபேன் ஆனவன்... இப்பல்லா ஃபிகர மடிக்க சூரியா ஃபேன் ஆகணும்கறது எழுதப்படாத சட்டம்... நடத்துங்கடா... இன்னும் எத்தன நாளைக்குன்னு பாக்குறேன்.. படம் பாக்கலாமான்னு கேட்டேன்.. “டேய் தப்பிச்சிக்கோ.. அவ்வளவு தான் சொல்வேன் சொல்லிட்டான்.. தேவில்ல 10ரூவா தானே டிக்கெட்டு... சரி போய் தான் பார்க்கலாம்... (சூரியாக்காக இல்ல, அங்க வர போற ஃபிகர்களுக்காக) :D


தீபாவளி ரிசல்ட், சுருக்கமா சொல்லணும்னா, விரைவில் பசங்க ஜெயம் ரவி ஃபேன்ஸ் ஆனாலும் ஆச்சிரியம் இல்லை... அரவிந்த் சாமி, மாதவன், சூரியா, ஜெயம் ரவி???


எல்லாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்... பலகாரம்லா சாப்பிடுங்க... எனக்கு அப்டியே கொஞ்சம் அனுப்பிடுங்க... பட்டாசுலா ஜாக்கிரதையா வெடிங்க... நமிதா வெடி வேற வந்துருக்கு... வெடிக்கும் போது ஹாய் மச்சான்னு சொல்லுமாம்.. யாருடா மாப்பிள கூப்பிடுறதுன்னு திரும்பிடாடீங்க...


வருகைக்கு நன்றி!!Blogger templates

Custom Search