Sunday, 6 September 2009

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்


என் நண்பர்கள் வானவில் கார்த்தி, ஜி3 அக்கா, பூர்ணிமா அக்கா, ஆர்க் இவங்க தான் கவிதை எழுதுவாங்களா?? ஏன் நான் எழுத மாட்டேனா?? இதோ எழுதுறேன்னு நானும் ஆரம்பிச்சிட்டேன்.. ஏன் இந்த கொல வெறின்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது.. என்ன செய்ய?? கவிதை வெறி கொண்ட வேங்கைய, கமுக்கமா அமுக்க பார்த்தா ஆகுமா?? அதான் கவிஞர் காத்துவாயன் வழியா கவிதை உரை ஆற்ற வருகிறேன்.. ஏன் காத்துவாயன்ன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது.. காற்றினிலே வரும் கீதம்னு எம்.எஸ் அம்மா பாடிருக்காங்க,.. அது மாதிரி என்னுடைய கவிதைகள் காற்று வழியா வந்து உங்க மனதை உருக்கும்.. எனவே காற்றுவழியன் என்ற பெயர் ம்றுவி காற்றுவாயன் ஆகியது.. சரி வாங்க.. நாம கவிதைக்கு போகலாம்..நீங்க பொறந்ததோ செப்டம்பர் ஒண்ணு

அன்று தான் உங்க பாதம் தொட்டது நம் மண்ணு

உங்களுக்கு ஊட்டி விடணும் பன்னு

நீங்க எப்பவுமே ஜெயிக்கணும் நின்னு
மலேசியால உன்ன சொல்வாங்க பெண் சிங்கம்

மொத்தத்துல நீ ஒரு 53 காரட் தங்கம்

உனக்கு பரிசா நான் வாயில எடுத்தேன் லிங்கம்

ஈகா தியேட்டர் தாண்டுனா வருது சங்கம்
இன்னொருத்தங்க பேரு ஜி3

உங்களுக்கு என்றுமே கிட்டட்டும் கீர்3

அவங்களுக்கு எடுங்கடா ஆர்3

சொல்றவன் யாரு, அவன் தான் க்யூட் ஸ்டார் கார்3
நீங்கள் இருவரும் வாழணும் பல்லாண்டு

அதுக்கு இந்த கவிதை வழியா இரு பூச்செண்டு

இத படிச்சிட்டு ஆகாதீங்க காண்டு

மகிழணும், உங்கள் புன்சிரிப்பை கண்டு
நான் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் லேட்டா

ஏனா என் சிஸ்டம்ல கரப்ட் ஆகிடிச்சி டேட்டா

கடி ஆகி காட்டாதீங்க பேட்டா

இத்தோட முடிச்சிக்கிட்டு நான் சொல்றேன் டாட்டா

வர்ர்ர்ட்டா??கம்பெனி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இருவருக்கும் சேர்த்து ஒரே பன்னு!!
வருகைக்கு நன்றி!!


27 comments:

kanagu said...

கவிதை எழுத வந்த காற்றுவழியனே வருக!!! வருக!!!

kanagu said...

/*நீங்க பொறந்ததோ செப்டம்பர் ஒண்ணு

அன்று தான் உங்க பாதம் தொட்டது நம் மண்ணு*/

அடேங்கப்பா... ஆரம்பமே அசத்தல்...

/*உங்களுக்கு ஊட்டி விடணும் பன்னு*/

கவிதை-ல கூட கேக்-னு சொல்ல முடியாத அளவுக்கு கம்பெனி இருக்கா?????

viji said...

Thanks karthik.. Konjam overa thithennu ninaikiren anaiku..sorry athuku..

AAMA... NI AVALO NALLAVAN RAASA?? :P

p/s: g3 akka vukku, my wishes too :) may god bless you ka. :)

kanagu said...

/*மலேசியால உன்ன சொல்வாங்க பெண் சிங்கம்

மொத்தத்துல நீ ஒரு 53 காரட் தங்கம்

உனக்கு பரிசா நான் வாயில எடுத்தேன் லிங்கம்

ஈகா தியேட்டர் தாண்டுனா வருது சங்கம்*/

மலேசியாக்கும், சென்னைக்கும் ஒரு பெரிய லிங்கே போட்டுட்டியேப்பா... :))

kanagu said...

/*இன்னொருத்தங்க பேரு ஜி3

உங்களுக்கு என்றுமே கிட்டட்டும் கீர்3

அவங்களுக்கு எடுங்கடா ஆர்3

சொல்றவன் யாரு, அவன் தான் க்யூட் ஸ்டார் கார்3*/

கவித நடையா இருக்கே.....

kanagu said...

/*நான் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் லேட்டா

ஏனா என் சிஸ்டம்ல கரப்ட் ஆகிடிச்சி டேட்டா*/

ஹீம்ம்ம்ம்ம்.... நீ இப்டி எல்லாம் எழுதுவ-னு சொல்லிட்டு தான் சிஸ்டம் கரப்ட் அகி இருக்கு...

kanagu said...

சரி.. விஷயத்துக்கு வரேன்...

விஜி, ஜி3 அக்கா... இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :))

G3 said...

Ada ada ada.. Innuma da indha porandhanaal koothu mudiyala !!!

Nandri da thambi postukku :)))

Viji kku ennoda belated wishesa sollikkaren :D

ராஜு.. said...

என்ன, ஞாயித்துக்கிழமை அரட்டைஅரங்கம் பாத்தீங்களா பாஸ்..?

G3 said...

//
ஹீம்ம்ம்ம்ம்.... நீ இப்டி எல்லாம் எழுதுவ-னு சொல்லிட்டு தான் சிஸ்டம் கரப்ட் அகி இருக்கு...//

ROTFL :))))))))))))))))

G3 said...

//
கம்பெனி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இருவருக்கும் சேர்த்து ஒரே பன்னு!!//

Selladhu selladhu :(((

G3 said...

//நீங்க பொறந்ததோ செப்டம்பர் ஒண்ணு அன்று தான் உங்க பாதம் தொட்டது நம் மண்ணு உங்களுக்கு ஊட்டி விடணும் பன்னு நீங்க எப்பவுமே ஜெயிக்கணும் நின்னு//

avvvvvvvvvvvvvvvvvvv

G3 said...

//இன்னொருத்தங்க பேரு ஜி3 உங்களுக்கு என்றுமே கிட்டட்டும் கீர்3 அவங்களுக்கு எடுங்கடா ஆர்3 சொல்றவன் யாரு, அவன் தான் க்யூட் ஸ்டார் கார்3//

Nalla thaanaeda irundha?? Ennada aaachu dhideernu ;)

G3 said...

//நீங்கள் இருவரும் வாழணும் பல்லாண்டு அதுக்கு இந்த கவிதை வழியா இரு பூச்செண்டு இத படிச்சிட்டு ஆகாதீங்க காண்டு மகிழணும், உங்கள் புன்சிரிப்பை கண்டு//

:)))))))))))))))))))))

[Indha sirippu podhuma ;))) ]

G3 said...

rounda 15 :D

Anonymous said...

aio paavam...yaar petha pullayaio....ipdi aaiduchay..!!!

~gils

ஆயில்யன் said...

கமெண்ட் லிங்க் தேடி தேடி டெரரர் ஆகிட்டேன் முதல்ல அந்த சிங்கிள் பன்னை நான் எடுத்துக்கிடறேன் ! :)

Anonymous said...

g3kum, vijikkum belated wishes.

ஆயில்யன் said...

//G3 said...

//
கம்பெனி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இருவருக்கும் சேர்த்து ஒரே பன்னு!!//

Selladhu selladhu :(((///


அம்புட்டு கஸ்டப்பட்டு கவிதை எழுதுனா அது போதாதாம் அந்த பன்னும் வேணுமாம் அதுவும் இல்லாம செல்லாத காசும்கூடவே வேணுமாம்ல பார்த்தீயாப்பா எப்படி அடம்புடிக்குறாங்க ஜி3?

:))

Anonymous said...

த‌ம்பி என்னாச்சு உன‌க்கு ?


நான் கூட‌ க‌விதைய‌ க‌விதை மாதிரி எழுதுதிவியோன்னு நினைச்சேன்.

ஆனா நீ க‌விதைய‌க்கூட‌ உன் ஸ்டைல்ல‌ தான் எழுதிருக்க‌.
ந‌ல்லாருக்குப்பா உன் கொலைவெறி தாக்குத‌ல்.

Anonymous said...

\\"அவன் தான் க்யூட் ஸ்டார் கார்3"//

இப்ப‌ல்லாம் சிங்கிள் ந‌ம்ப‌ர்ல‌யே காருக்கு ந‌ம்ப‌ர் பிளேட் கொடுக்க‌றாங்க‌ளா?

த‌ம்பி அது ஓட்ட‌க்காரா இருக்கும்.

Anonymous said...

\\"உனக்கு பரிசா நான் வாயில எடுத்தேன் லிங்கம்"//


த‌ம்பி சாமியாராய்ட‌யா

Karthik said...

என்னோட வாழ்த்துக்க்ளையும் சொல்லிக்கிறேன். :)

காத்துவாயன் மட்டும் கையில் கிடைச்சா அவ்வளவுதான் சொல்லிட்டேன். கவுஜ எழுதுறதுமில்லாம என்னைய ஏம்பா கலாய்ச்சீங்க? :P

கவுஜ படிச்சு கிறுகிறுனு ஆய்டுச்சு. மறுபடி வந்து கவனிக்கிறேன்.

Karthik said...

என்னோட வாழ்த்துக்க்ளையும் சொல்லிக்கிறேன். :)

காத்துவாயன் மட்டும் கையில் கிடைச்சா அவ்வளவுதான் சொல்லிட்டேன். கவுஜ எழுதுறதுமில்லாம என்னைய ஏம்பா கலாய்ச்சீங்க? :P

கவுஜ படிச்சு கிறுகிறுனு ஆய்டுச்சு. மறுபடி வந்து கவனிக்கிறேன்.

Anonymous said...

ப‌ன்ன‌ப் பார்த்தாலே தெரியுது க‌ம்பெனியோட‌ நிலைமை.

த‌ம்பி அத‌ பார்த்தா நீ காசு கொடுத்து வாங்கின ப‌ன் மாறி தெரிய‌லையே
ப‌க்க‌த்து வீட்டு டாகோட‌ த‌ட்டுல‌ இருந்து 2 ப‌ன்ன‌ சுட்டுட்டு வ‌ந்து அம்மா ச‌ப்பாத்தி பினைய‌ வ‌ச்சிருந்த‌ மாவை ந‌டுல‌ வ‌ச்சு அது மேல‌ டால்க‌ம் ப‌வுட‌ரை தூவுன‌ மாதிரி இருக்கே

இத‌ சாப்பிட்டா உயிருக்கு கேர‌ண்டி உண்டா?

Divyapriya said...

bday annikku ellaarukkum bun kuduthu bulb kudutheengale! paavam :D

Archana said...

Cha...naam indha posta miss pannitaen po.

Raasa...nee kavida ezhudha arambiocha neram paru, naadu urptrum.

Kidding. seriously, it was hilarious:) It needs quite a knack to be writing such stuff:)

Blogger templates

Custom Search