Saturday, 26 September 2009

மொக்க மாமாவின் கொடுரங்கள்-1

நம்ப நண்பர் மொக்கயோட உலக மெகா, மகா பலி வாங்கும் கொடுர மொக்கைகள் பத்தி மொத போஸ்ட்ல சொல்லிருந்தேன்.. அதை மிஸ் பண்ணவங்களுக்கு, மறந்தவங்களுக்கு ஒரு பின்னோட்டம்!!காதுல ரத்தம் வராத குறையா மொக்க போடுவான்.. இவன் கூட எதிர் மொக்க போட்டா, , நாம காலி.. அதுக்கும் சட்னு கவுன்டர் கொடுப்பான்.. ஒரு சம்பிள்

ஒருத்தன்கிட்ட ரிசல்ட் வந்த உடனே கேட்டோம், மச்சி.. ரிசல்ட் என்ன ஆச்சு??

கரண்ட் (அதாவது இந்த செமஸ்டர் பேப்பர்) போச்சுடா..

கவலைப்படாதே... மறுகூட்டல் போடுடா...

உடனே அவன் வந்து, “கரண்ட் போச்சுனா ஏன் மறுகூட்டல் போடணும்??? E.B.OFFICEகு போன் போடு... இல்ல ஒரு 2 மணி நேரம் வெயிட் பண்ணு... இப்ப மின்சார பற்றாக்குறை... அதுனால கரண்ட் போக தான் செய்யும்...


1. டேய்.. இப்பல்லா நீ மொதல மாதிரி இல்ல..

மாப்ள.. நான் எப்பவுமே ‘முதலை மாதிரி இல்ல.. நான் மனித சிங்கம்டா...


2. சிம்போசியம் முன்னாடி, ரங்கோலி கோலம் போட க்ளாஸ் பொண்ணு தரைய சுத்தம் செய்தாள்..

ஓய்.. என்ன பண்ற??

பெருக்குறேன்..

அப்ப 5உம் 4உம் பெருக்குனா என்ன வரும்னு சொல்லேன்..


3. மச்சி உன் ஃபிகர கூட்டிட்டு நான் படத்துக்கு போகவா??

ஓ**.. திமுரா??

இல்லடா... சத்யம்


4. மச்சி.. டைம் என்னடா?

டேய் கூ.. அதான் கைல வாட்ச் இருக்குல..

ஆனா ஓடல மச்சி.. காலைல தான் பார்த்தேன்..

கைல கட்டிக்கிட்டு இருந்தா எப்டி ஓடும்.. அவுத்து வுடு.. நல்லா ஓடும்!


5. லஞ்ச் ப்ரேக்ல..

பொண்ணு: ஹே.. என்னடா வாசனை மூக்க துளைக்குது.. ANY SURPRISE??

SURPRISEலா இல்லங்க... FRIED RICE தான்...6. கேண்டீன்

என்னன்னா... இட்லி 15 ரூபாயா?? ஓவரா தான் இருக்கு

இல்லப்பா.. முன்னல்லா மூணு இட்லி தானே.. இப்ப நாலு நாலு இட்லி..

ஐய்ய.. நாலு நாள் இட்லில்லா வேணாம்.. இன்னிக்கு சுட்ட இட்லி தாங்க..


7. லாஸ்ட் பீரியட்.. எல்லாரும் பேக் எடுத்துக்கிட்டு கிளம்புறோம்

எங்கடா போறீங்க??

பஸ்ஸுக்கு டைம் ஆச்சு.. கிளம்பணும்டா..

பஸ்க்கு டைம் ஆச்சுன்னா பஸ் தானே கிளம்பணும்.. நீ எதுக்கு?? என்னம்மோ ட்ரைவர், கண்டக்டர் மாதிரி..


8. டீக்கடை வெளியில்..

வாங்க தல.. தலக்கு ஒரு டீ போடு..

ஏன்டா டீலா போட்டு?? ஷாம்ப்பூ போடுடா.. பொடுகு எல்லாம் போகும்ல??


9. மேம் கேள்வி கேட்டா, நம்ம மொக்க பதிலே சொல்ல மாட்டான்.. க்ளாஸ் முடியுற வரைக்கும் நிக்க வச்சிடுவாங்க.. அப்டி தான் ஒரு நாள்..

ஏன்டா எந்த கேள்வி கேட்டாலும் தெரியாது, தெரியாது.. அப்ப உனக்கு என்ன தான் தெரியும்??நீங்க மறைக்காம இருந்தா ஃப்ர்ஸ்ட் பெஞ்ச் திவ்யா தெரியும்..

பசுமையான நினைவுகள்.. இப்ப கொஞ்ச நாளா பேசவே இல்ல.. வேலைப்பளு இருவருக்கும்.. ஒரு நாள் அதிசயமாய் இருவரும் ஜி-டாக்கில்..10. நான்: மச்சி.. என்னடா பண்ற?

மொக்க: ஆபிஸ்ல ஒர்க் பண்றேன்..

நான்: டேய்.. சொல்லவே இல்ல.. என்ன ஆபிஸ்??

மொக்க: MICROSOFT

நான்: **.. சொல்லவே இல்ல?? எப்படா ஜாய்ன் பண்ண?

மொக்க: மச்சி.. கொஞ்சம் பிஸிடா.. அப்றோம் கால் பண்றேன்..

மனசுக்குள் (ம்ம்ம்ம்... பையன் அமெரிக்கா போயிட்டான் போல.. அதான் டைம்-சோன் இடிக்குது.. ரொம்ப நாளா ஆளே காணோம்னு யோசிச்சேன்)

அடுத்த அரை-மணி நேரத்தில், மொக்கயின் மொபைல் நம்பரில் இருந்து போன்.. கொஞ்சம் குழப்பம்..

நான்: ஹலோ!

மொக்க: மச்சி.. என்ன பண்ற??

நான்: அது இருக்கட்டும்.. நீ எங்க இருக்க??

மொக்க: மவுண்ட் ரோடு..

நான்: டேய்.. அமெரிக்கா போல??

மொக்க: மச்சி.. காமெடி பண்ணாத.. பேரிக்கா வாங்க கூட காசு இல்ல..

நான்: டேய்.. மைக்ரோசாஃப்ட்ல வேல பாக்குறேன் சொன்ன..

மொக்க: ஆமாம்டா...

நான்: சென்னைல எங்கடா மைக்ரோசஃப்ட்?

மொக்க: மச்சி.. நான் வேல பார்த்தது மைக்ரோசஃப்ட் ஆபிஸ்லடா... MS WORD, MS EXCEL... அந்த ஆபிஸ்... ஏன்டா? நீ என்ன நினச்ச??இது மாதிரி தலைவரோட எவர்-க்ரீன் மொக்கைகள் கொட்டிக்கிடக்கிறது.. அதெல்லாம் சொல்ல ஒரு தனி ப்ளாக் போடணும்.. அவ்வ்வ்வ்வ்வ்.. முடில?? அடுத்த தபா உங்கள மீட் பண்றேன்!!


வருகைக்கு நன்றி!!Sunday, 6 September 2009

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்


என் நண்பர்கள் வானவில் கார்த்தி, ஜி3 அக்கா, பூர்ணிமா அக்கா, ஆர்க் இவங்க தான் கவிதை எழுதுவாங்களா?? ஏன் நான் எழுத மாட்டேனா?? இதோ எழுதுறேன்னு நானும் ஆரம்பிச்சிட்டேன்.. ஏன் இந்த கொல வெறின்னு நீங்க கேக்குறது என் காதுல விழுது.. என்ன செய்ய?? கவிதை வெறி கொண்ட வேங்கைய, கமுக்கமா அமுக்க பார்த்தா ஆகுமா?? அதான் கவிஞர் காத்துவாயன் வழியா கவிதை உரை ஆற்ற வருகிறேன்.. ஏன் காத்துவாயன்ன்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது.. காற்றினிலே வரும் கீதம்னு எம்.எஸ் அம்மா பாடிருக்காங்க,.. அது மாதிரி என்னுடைய கவிதைகள் காற்று வழியா வந்து உங்க மனதை உருக்கும்.. எனவே காற்றுவழியன் என்ற பெயர் ம்றுவி காற்றுவாயன் ஆகியது.. சரி வாங்க.. நாம கவிதைக்கு போகலாம்..நீங்க பொறந்ததோ செப்டம்பர் ஒண்ணு

அன்று தான் உங்க பாதம் தொட்டது நம் மண்ணு

உங்களுக்கு ஊட்டி விடணும் பன்னு

நீங்க எப்பவுமே ஜெயிக்கணும் நின்னு
மலேசியால உன்ன சொல்வாங்க பெண் சிங்கம்

மொத்தத்துல நீ ஒரு 53 காரட் தங்கம்

உனக்கு பரிசா நான் வாயில எடுத்தேன் லிங்கம்

ஈகா தியேட்டர் தாண்டுனா வருது சங்கம்
இன்னொருத்தங்க பேரு ஜி3

உங்களுக்கு என்றுமே கிட்டட்டும் கீர்3

அவங்களுக்கு எடுங்கடா ஆர்3

சொல்றவன் யாரு, அவன் தான் க்யூட் ஸ்டார் கார்3
நீங்கள் இருவரும் வாழணும் பல்லாண்டு

அதுக்கு இந்த கவிதை வழியா இரு பூச்செண்டு

இத படிச்சிட்டு ஆகாதீங்க காண்டு

மகிழணும், உங்கள் புன்சிரிப்பை கண்டு
நான் வாழ்த்துக்கள் சொல்லிட்டேன் லேட்டா

ஏனா என் சிஸ்டம்ல கரப்ட் ஆகிடிச்சி டேட்டா

கடி ஆகி காட்டாதீங்க பேட்டா

இத்தோட முடிச்சிக்கிட்டு நான் சொல்றேன் டாட்டா

வர்ர்ர்ட்டா??கம்பெனி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் இருவருக்கும் சேர்த்து ஒரே பன்னு!!
வருகைக்கு நன்றி!!


Blogger templates

Custom Search