Monday, 24 August 2009

கந்தசாமி- அய்யோ, முடிலடா சாமீமீமீ

குப்ப குப்ப குப்ப குப்ப குப்பசாமி (ஒழுங்கா படிங்க.. குப்புசாமி இல்ல, குப்பசாமி) கந்தசாமி படம் பார்த்தவங்கல்லா இதத்தான் பாடிகிட்டு இருக்காங்க.. தமிழ் சினிமாவில நல்ல நடிகர்களில் (அழுத்தி படிக்கவும், நடிகர்.. விஜய், அஜித்லா இல்ல) விக்ரமும் ஒருவர்.. ஸ்டில்ஸ்ல பெண்வேடம், சாமியார் வேடம், சேவல்-மேன் (ஆங்கிலத்துல சேவல்ல சொன்னா அசிங்கமா இருக்கும்) மாதிரி விக்ரம் இருக்கறத பார்த்து அவர் நடிப்புக்கு சம தீனி போலன்னு நினச்சி, போயீ பார்த்தா?? நல்ல வேளை, நம்ம பதிவர் வானவில் கார்த்திக்க அவங்க கேர்ள் ஃப்ரெண்ட் காப்பாத்திட்டாங்க.. ரீலிஸ் அன்னிக்கு மேசேஜ் அனுப்பிச்சேன்.. பி.எஸ்.ன்.ல் (BSNL) பிரச்சனையா, இல்ல புது கேர்ள் ஃப்ரெண்ட் கூட ஜாலி கடலையா தெரில, பதில் வராததால நான் மட்டும் போனேன்.. நல்லா இரு ராசா..படம் ஆரம்பத்துல, மக்கள்லா சாமிகிட்ட கத்துறாங்க, “கடவுளே காப்பாத்து! எங்க பிரச்சனை எல்லாம் போக்கு அப்பவே மைண்ட் வாய்ஸ் சொல்லிச்சு, “ஆஹா! சைத்தான் சைக்கிள்ல வருது ஒரு சின்ன குழந்தை கூட சொல்லும், இந்த வசனம் வந்தா, பின்னாடியே ஹீரோவும் வருவாரு!! கரெக்டா கொஞ்ச நேரத்துல விக்ரம் அறிமுக காட்சி வித் மன்சூர் அலிகான்.. அடிக்கிறாரு, அடிக்கிறாரு.. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அதுக்குள்ளே ரெண்டு பேரு தூங்க ஆரம்பிச்சிட்டாங்க, ஒருத்தன் தம் அடிச்சிட்டு வந்தான்.. “டேய் இன்னுமா போகுது? கொக் கொக் கொக் கொக் கொக்னு விக்ரம் ஒரு உடற்பயிற்சி செய்வாரு.. அமைதியா இருந்த அரங்கம், சிரிப்பு ஆராவத்துல அதிருது.. அடுத்து விக்ரம் சி.பி.ஐ ஆபிசராம்.. போங்கடா போக்கத்தவங்களா.. ஏற்கனவே சிக்கன்குனியா போயி, பன்றிக்காய்ச்சல் பீதியில இருக்கோம்.. இப்ப சேவல் காய்ச்சல் பரவ போகுது டோய்!! இந்த எஃபெக்ட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடலாம்னு இருந்த ப்ளான் கேன்சல் பண்ணிட்டோம்..மக்கள் எல்லாரும் முருகன் கோயில்ல பேப்பர்ல தங்கள் கஷ்டத்த எழுதி தொங்கவிட்டா, ஹீரோ சேவல்-மேன் வேஷத்துல வந்து குறைகளை தீர்ப்பாரு.. முருகன்-சேவல்.. லாஜிக் லாஜிக்.. அஹா.. அந்நியன் கணினி-இங்கே பேப்பர்.. அந்நியன்ல இருந்து ஒரு 15 கோடி.. அடுத்து இந்தியால எழைகள் இருக்க காரணம், கருப்பு பணம்.. சிவாஜில இருந்து ஒரு 10 கோடி.. இதை செய்ய இவருக்கு உதவியாக இருப்பது, 15 பேர் குழு.. ரைட்டு, ரமணால இருந்து ஒரு 3 கோடி.. இதை செய்ய கெட்-அப் மாத்தணும், சிட்டிசன், தசாவதாரத்துல, பேட்-மேன் இருந்து 12 கோடி.. அப்றோம், நல்லது செய்ய காரணம், ஒரு இத்து போன ப்ளாஷ்பேக்.. ஜெண்டில்மேன்ல இருந்து 1 கோடி.. மொத்தம் 41 கோடி.. கணக்கு சரியா?? அட வெண்கலமே, இதுக்கு நான் தீபாவளிக்கு சன் டீ.வி, கே டீ,வி, ஜெயா டீ.வி, விஜய் டீவி, கலைஞர் டீ.வில இந்த படங்கள மாத்தி மாத்தி பார்த்துருப்பேனே.. இதுக்கு எதுக்குய்யா ஒரு படம்??விக்ரம் சார்.. பாய்ஸ்ல ஒரு பையன், நான் கடசியா பார்த்த இங்கிலிஷ் படம் ஷோலேன்னு சொல்வாரு.. அது மாதிரி உங்க கடசி ஹிட் அந்நியன்னு ஆகாம பார்த்துக்கோங்க.. ஏற்கனவே போராடி, சேது மூலமா ஒரு ப்ரேக் கிடச்சி முன்னணி நட்சத்திரமா வந்துருக்கீங்க.. இது மாதிரி கதையம்சமுள்ள படத்துல தொடர்ந்து நடிச்சா, சினிமாலருந்து நிரந்தர ப்ரேக் கிடச்சிடும்.. சொல்லிட்டேன்.. இந்த படத்துல என்ன இருந்துதுன்னு நீங்க மூணு வருசம் உழச்சீங்க?? ஏற்கனவே பீமாக்கு 2 வருஷம்.. இப்ப வட போச்சே.. விக்ரம் நடிப்பு?? ஆளே இல்லாத கடைக்கு டீ ஆத்துன மாதிரி..கொடுத்த காசுக்கு மேலே நடிச்சிருக்காங்க, சிவசிவா... காட்டிருக்காங்க ஷ்ரேயா செல்லம்.. அதுனால மேல ரொம்ப கம்மியா ட்ரெஸ் போட்டுகிட்டாங்க.. ஏம்பா, சம்பள காசுல கொஞ்சம் உடை வாங்கி இருக்கலாம்ல?? உனக்குமா RECESSSION?? கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே.. ஸ்ரேயாவின் ஹேர்ஸ்டைல்ல பார்த்தா கரெண்ட் ஷாக் அடிச்ச மாதிரி இருக்கு.. BUT SHE IS DAMN HOT!! அலேக்ரா பாட்டுல, கன்னியாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் வளையுது இடுப்பு.. ஏ.சி. தியேட்டர்ல கூட குப்ப்ப்புன்னு வேர்க்குது.. ஹீ ஹீ...படம் சீரியஸா போனா, கொஞ்சம் கலகலப்பூட்ட காமெடியன் வருவாரு.. ஆனா, இங்கே விக்ரமே காமெடி பண்ணதால கொஞ்சம் சீரியஸ் மூடுக்கு மாத்த வடிவேலு.. நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்.. பக்கத்துல இருக்குறவன சிரி சிரின்னு சொல்றேன்.. மாட்டேன்னுட்டான்.. குசேலனுக்கு அப்றோம், வடிவேலு நல்லா புகுந்து விளையாடி இருக்காரு.. படம் பார்த்த யாராவது வடிவேலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க?? ஒரு வேள, வடிவேல்-முருகன் லாஜிக்கோ??இந்த படம் மூலம் நமக்கு கிடச்ச ரெண்டு நம்பிக்கை, வளரும் நட்சத்திரங்கள், மின்மினி கண்மணிகள்- சுசி கணேசன் (நடிகர்சொல்ல வாய் மாட்டேங்குது) மற்றும் மெக்சிகோ பிச்சுமணி- அலெக்ஸ். சுசி அண்ணா ஏற்கனவே படம் எப்படா முடியும்னு இருக்கோம்.. இதுல உங்களுக்கு எதுக்கு இந்த பில்ட்-அப் சீன்ஸ்.. இந்த அடியாள், அமெரிக்க மாப்பிள்ளை அது மாதிரி ட்ரை பண்ணுங்களேன்.. உங்கள MINDல வச்சிருக்கேன்.. JK ரீத்திஷ், சாம் ஆண்டர்சன் வரிசையில் எழுச்சித் தளபதி சுசி... SECURITY என்ற வார்த்தையை SEKKUROTTYன்னு பேசி தான் ஒரு டான்னு நிருப்பிச்ச அலெக்ஸ்க்கு ஒரு மாலை... இவர் வர காட்சியில் எல்லாம் டான் டான் டான் டான்னு தியேட்டர் அலறுது… க்ளைமாக்ஸ்ல முமைத்கானோட ஒருத்தர் போடுற ஆட்டம் இருக்கே.. எல்லா கண்ணும் முமைத்கான விட்டுட்டு அவரையே ஃபோகஸ் பண்ணுச்சு.. (டீ.வி.ல சீக்கிரம் போடுங்க பாஸூ.. முமைத்த மிஸ் பண்ணிட்டேன்.. ஹீ ஹீ) என்ன நடனம், என்ன மூவ்மெண்ட்ஸ்... வர்ரே வா.. சார்.. நான் உங்க ஃபேன் ஆகிட்டேன்..பிரபு இருக்காரு.. ஆஷிஷ் வித்தியார்த்தி இருக்காரு, தெலுகு தாத்தா (யாரடி நீ மோகினில வருவாரே) அவர் இருக்காரு.. இன்னும் நிறய பேரு இருக்காங்க.. அவ்வளவுதான்.. இசை ஓகே.. ஆனா காது தான் கொஞ்ச நேரம் கேக்கல.. எடிட்டர் பாவம்.. எல்லா படத்தோட கலவையா இருப்பதால, எந்த காட்சிய எங்கே ஒட்டுறது, வெட்டுறது தெரில.. ஒளிப்பதிவு, காமரா ஆடிட்டே இருக்கு, ஒரே மஞ்சளா இருக்கு.. வீட்டுக்கு வந்தா, என்னடா கண்ணுலா மஞ்சளா இருக்கு, மஞ்ச காமலையான்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போக ஆயத்தம் ஆகிட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.. ஒரு கண்ணாடியோடு போகவும்.. கண்ணாடி மஞ்சளான அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது..தாணு சார்.. ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க.. குறைகுடம் கூத்தாடும்.. ஒண்ணும் இல்லாத இந்த படத்துக்கு நீங்க பில்ட்-அப் கொடுக்காம இருந்துருந்தா, கொஞ்சம் நல்லா இருந்துருக்கும்.. ஆளவந்தான், சக்கரகட்டி இதே மாதிரி வெத்து HYPE. நீங்க இந்த படம் ரீலிஸ் முன்னாடி கிராமத்த தத்தெடுத்தீங்க.. இந்த படம் எடுத்த காசுல, இன்னும் ஒரு பத்து கிராமத்த தத்தெடுத்து இருக்கலாம்.. சுசி சார், உங்க திருட்டுப்பயலே பார்த்து. நல்ல நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா கந்தசாமில கவுத்துட்டீங்களே.. இதுல க்ளைமாக்ஸ்ல விக்ரம் ஒரு வசனம் சொல்வாரு, “இந்த காச வச்சிட்டு, இத பண்ணலாம், அத பண்ணலாம் இந்த படம் பார்த்த காசுல, கண்டிப்பா எதாவது உருப்படியா பண்ணிருக்கலாம்.. சீக்கிரம் அந்த முருகன் கோயில கண்டுபிடிக்கணும், இந்த படம் பார்த்து வடக்கு தெரு ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊஊஊஊன்னு ஆன என் காசு வேணும்னு எழுதி போடணும்..35 பூச்செண்டு தரலாம்கந்தசாமி- இதெல்லாம் டூப்பு, வச்சிட்டான்டா ஆப்புடிஸ்கி: வானவில் கார்த்திக்க திரும்ப அழைத்துருக்கேன்.. அவரை என்னோடு வர சொல்லவும்.. மருத்துவமனை செலவை கம்பெனி ஏற்றுக்கொல்லும்வருகைக்கு நன்றி!!

14 comments:

நட்புடன் ஜமால் said...

நொந்ஜாமி-ன்னு பேர் வச்சிருக்கேன் ...

pappu said...

யப்பா எம்புட்டு நாளு! கடைய மூடிட்டு போயிட்டயோன்னு நெனச்சுட்டேன்! ஏன் அடிக்கடி வானவில் ட்வின்ன கூப்பிடுற! உனக்கு அவனுக்கும் என்ன டீல்? சரியில்லையே!

///இது மாதிரி கதையம்சமுள்ள படத்துல தொடர்ந்து நடிச்சா, சினிமாலருந்து நிரந்தர ப்ரேக் கிடச்சிடும்.. சொல்லிட்டேன்.. /////
இப்படியெல்லாம் பேசுறயே மனசாட்சியே இல்லயா? படத்துல எங்க்கப்பா கதை?

அப்புறம் அது யாரடி நீ மோகினி கெழவன் இல்ல. இது ப்ழைய தெலுகு ஸ்டார் கிருஷ்ணா. நம் தங்க தலைவர், தானைய தலைவர், 'பிரின்ஸ் பாபு' (அ) மகேஷ் பாபு வோட அப்பா.

pappu said...

நானும் புலம்பிருக்கன். முதல் நாள் பாத்துட்டு ராத்திரியே புலம்பிருக்கேன். ஒரு தடவ எட்டிப் பத்திருந்தீங்கன்னா, தப்பிச்சிருப்பீங்க! ஹூம்!

kanagu said...

Nalla vimarasam... epavume edhir pakurathuku mela kalaipeenga.. indha vaati kammi than... susi ganesan edavathu koduthara... romba damage panna venam nu :)
ennoda vimarsanatha padika... thangalathu busy schedule-il neram oduki varavum :) apram pappu, srimathi ivangaloda vimarsanatha padinga... sema kalaai..
andha pacha pulla karthika vidunga.. pavam... neenga anubavacha kodumaya, avarum padananum nu nenaikirathu romba thappu :P

டக்ளஸ்... said...

உங்களையும் விட்டு வைக்கலையா கந்தசாமி..
ஹி..ஹி. நம்மளையெல்லாம் "ஆப்பசைத்த குரங்கு" மாதிரி ஆக்கிட்டாப்ல சுசி கணேசன்.
:)

gils said...

same blud :( i think kanthasamay padam ponavangalaam kanthal saamy aaitaanga :(

GAYATHRI said...

lol indha link ah en frnd ku anupirken...thursday[20.8.09] coll la class nadakarche kandhasaamy odne pillayaarappa nu ava oru chinna poojaye nadathittaa!!!huhaha anike en mind voice la naa sonnadha capture pani blog ezhudhiteenga:P
Elaa heroes um vijay[hehehe]maari try pani flop aaranunga nu paatha..namba susi shankar maari try pani flop aaitaaru!

Karthik said...

ஹா..ஹா. இவ்வளவு காமெடியா ஒரு போஸ்ட் படிச்சு ரொம்ப நாள் ஆச்சு. சுசி வாழ்க!! :)))

//“வடக்கு தெரு ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊஊஊஊ”

LOL. :)))))))))

Karthik said...

//நல்ல வேளை, நம்ம பதிவர் வானவில் கார்த்திக்க அவங்க கேர்ள் ஃப்ரெண்ட் காப்பாத்திட்டாங்க..

இந்த வதந்தியை என் பொட்டென்ஷியல் கேர்ள் ப்ரண்ட்ஸ் யாரும் படிச்சிடக் கூடாதே!! அவ்வ்!!

//வானவில் கார்த்திக்க திரும்ப அழைத்துருக்கேன்..

கொலைக்கேசில் உள்ள போயிருவீங்க, பார்த்துக்கங்க!! ;)

Karthik said...

//pappu said...
ஏன் அடிக்கடி வானவில் ட்வின்ன கூப்பிடுற! உனக்கு அவனுக்கும் என்ன டீல்? சரியில்லையே!

காட்டுக்குயிலு மனசுக்குள்ள.. பாட்டுக்கென்றும்.. பஞ்சம் இல்ல பாடத்தான்.. டன்டன்டன்.. டடடடா..

ஹி..ஹி. ;))

G3 said...

LOL :)) Ellarum paathu nondha kadhaiya blogla pottadhaala naan escape aagiten :)))

Idhukku dhaan avasarapattu vimarsanam paakaama padathukku pogapudaadhu :P

G3 said...

LOL :)) Ellarum paathu nondha kadhaiya blogla pottadhaala naan escape aagiten :)))

Idhukku dhaan avasarapattu vimarsanam paakaama padathukku pogapudaadhu :P

arc said...

aama...nee inda padam paakara alavukku avlo avlo vettiya enna?

Archana said...

Taaru maaru:) Sema kalai:) Super:) Inda maadri kalakavae, inda maadri padam eduka solanum:)

Blogger templates

Custom Search