Thursday, 9 July 2009

ஃபிகர் மடிக்கிறதுலா ஒரு மேட்டரா மச்சி??

முன்குறிப்பு: இது கொஞ்சம் (இல்ல ரொம்ப) பெரிய பதிவு.. அதனால் மன்னித்தருள்க!!


ஈ.சி.ஆர் போன கஜகஜா... தியேட்டர் போன கஜகஜா.. பீச்சி போனா கஜகஜா... பார்க் போனா கஜகஜா... பைக்ல உரசிகிட்டே கஜகஜா.. திரும்பிய பக்கமெல்லாம் கஜகஜா.. இப்டி எல்லாருக்கும் கேர்ள்-ப்ரெண்ட் இருக்கும் போது, எனக்கு மட்டும் ஏன் ஒரு ஃபிகர் கூட கிடைக்கலன்னு என்ன மாதிரி புலம்பும் பல நல்உள்ளங்களுக்காக நான் ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் இந்த பதிவு.. லான்ஸூ நண்பர் ரமணி அவர்களின் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அவரும் என்ன மாதிரி ஆராய்ச்சி செய்துள்ளார்ன்னு அறிந்தேன்.. அதனால அவரின் யோசனைகளோடு, என்னோட மொக்கைகளும் கலந்த பதிவு இது...


* பொதுவாவே என்ன மாதிரி பசங்களா ரொம்ப நல்லவங்க. பொண்ணுங்க்கிட்ட பேசவே கூச்சப்படுவாங்க.. இதுக்கு முக்கிய காரணம் நாங்க படிச்சது பாய்ஸ் ஸ்கூல். கோ-எட்ல (CO-ED) படிச்சாலும் அது பாய்ஸ் ஸ்கூல் தான்.. ஏனா அங்க பொண்ணுங்ககிட்ட பேசுனா லாடம் தான்.


* நாமலா எப்பவுமே பொண்ணுங்க நம்ம கிட்ட வந்து பேசணும்னு நினைக்கிற டைப்பு.. மைக் மோகன் மாதிரி கொஞ்சம் லட்சணமா இருந்தாலாவது வந்து பேசுவாங்க.. நாமளோ லூசு மோகன் கணக்கா லுக்குல இருப்போம்.. சுமார் ஃபிகர் கூட நம்ம கூட பேச தயங்குவாங்க.. சரி, அழகை விட அறிவு முக்கியம். அப்பவாது காதல் கொண்டேன் தனுஷ் கணக்கா ஒரு சோனியா அகர்வால் வந்து பேச சான்ஸ் இருக்கு.. நாம படிக்கிற படிப்புக்கு இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?? ஸ்கூல் ஆயாகிட்ட குப்பய போட்டு (டெஸ்ட் பேப்பர்லா வீட்டுக்கு எடுத்துபோக முடியாதுல) திட்டு வாங்குற பசங்களுக்கு ஃபிகர் கிடைக்குமா??


* இனம் இனத்தோட சேரும்னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க?? நம்மகூட சேர்ற பசங்களும் பொண்ணுங்க கூட பேச ஆச படுற டைப்பா தான் இருப்பாங்க.. (ஆச மட்டும் தான் படுவாங்க) அதியசமா ஒருத்தனுக்கு மட்டும் கேர்ள் ஃப்ரெண்ட்(GIRL-FRIEND) கிடச்சாலும், பாவி பையன் நமக்கு இண்ட்ரோ (INTRO) தரமா மேட்டர கமுக்கமா வச்சிருப்பான். இவனலா தீர விசாரிச்சா தான் உண்மை வெளிய வரும்.. துரோகிகள் (மச்சி, ஜேஜே, உன்ன சொல்லலடா). சரி அவன் ஃபிகர் பத்தி தான் சொல்ல வேண்டாம், அவ ஃப்ரெண்ட்ஸ் பத்தி சொல்லலாம்ல?? நாங்களும் நட்பு பாராட்டுவோம்ல?? நாடோடிகள் படத்துல சொல்ற மாதிரி என் நண்பனின் நண்பன், எனக்கும் நண்பன். ஆனா அந்த பிள்ளையோட ஆண் நண்பர்கள் செல்போன் நம்பர் தருவாங்க பிக்காளி பசங்க (மச்சி, மெசேஜ் மாமா, உன்ன சொல்லலடா) வெட்கத்த விட்டு போய் ஹாய் சொன்னாலும், அந்த பொண்ணு நாய் சொல்லியும், அலுக்காம பேசுறதுக்கு, சும்மாவே இருக்கலாம் (மச்சி, கடல உன்ன சொல்லல)


* பொதுவாவே லாஸ்ட் பெஞ்ச் (LAST BENCH) பசங்கன்னா பொண்ணுங்களுக்கு (குறிப்பா மிஸ்ங்களுக்கும்) மக்கு பசங்க, பொறுக்கி பசங்கன்னு ஒரு எண்ணம் இருக்கும். நாமளும் ஃப்ர்ஸ்ட் பெஞ்ச்ல (FIRST BENCH) படிக்கிற பசங்க கூட சேர்ந்தா எங்க அந்த வியாதி நமக்கு தொத்திக்குமோன்னு பயந்து லாஸ்ட் பெஞ்ச் உக்காருவோம்.. நம்ம எண்ணம், படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிப்பான், ஆனா பெண்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லையே??


* ஸ்கூல், காலேஜ், வேலை பாக்குற இடமாகட்டும், நமக்கு ஒரு பொண்ணு புடிச்சு போச்சுன்னா, அதே பொண்ணு நம்ம எதிரிக்கும் பிடிக்கும்.. நம்ப பசங்க சைட் அடிக்க நமிதா மாதிரி பொண்ணுங்கள பார்ப்பாங்க.. ஆனா கல்யாணம்னு வந்துட்டா பாவனா மாதிரி பவ்யமான பொண்ண கட்டிக்க ஆச படுவாங்க.. நம்ம கண்ணுல கஷ்டப்பட்டு மாட்டுற ஒரே ஃபிகரு, அவள எப்டி இம்ப்ரெஸ் (IMPRESS) பண்ணலாம்னு மனக்கோட்டை கட்டி வச்சி, தைரியத்த வரவழைத்து போய் சொல்லலாம்னு போனா, நம்பள காதல் தூதுவனா ஆக்கி வச்சிருப்பாங்க.. கவுண்டர் சொல்ற மாதிரி, “டேய், ஆனா ஒண்ணு சொல்றேன்! எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மா விடாதுடா பனங்கொட்ட தலையா


* டேட்டிங் (DATING) போக சிறந்த இடங்கள் நமக்கு தெரியுமா?? ஸ்பென்ஸர் (SPENCER), சிட்டி சென்டர் (CITY CENTRE) தவிர?? சரி, அங்கே போனா கூட, கேர்ள்-ஃப்ரெண்ட்ஸ்க்கு செலவு பண்ண காசு இருக்கா?? அப்பா கிட்ட இருந்து ஆட்டைய போடுற காசு, பஸ் காசுக்கே சரியா போயிடும்.. இதுல எங்க இருந்து செலவு செய்ய? பரிஸ்டா (BARISTA), கஃபே காப்பி டே (CAFE COFFEE DAY) போனாக்கூட ஒரு காப்பி 50ரூபான்னு பில் வரும்... பேரு ஏதோ கஃப்பச்சீனோ (CAPPUCCINO).. இத குடிச்சோம்னா அப்றோம், காப்பி-சீ-நோ-நோன்னு சொல்வோம். சேட்டா, நாயர் கடைல இருக்குற அக்கவுண்ட்டையே இன்னும் அடைக்காம வச்சிருக்கோம்.. இட்லி, தோச, பூரி சாப்பிடுற பசங்களுக்கு பாஸ்டா (PASTA), பீஸ்ஸா, கஸ்பெக்கொ (GAZPACHO) ஹாட்-டாக்ஸ் (HOT DOGS) என்னன்னு தெரியுமா?? யாராவது ட்ரீட் கொடுத்தா தான் இப்டிலா உணவுகள் இருக்கேன்னு நமக்கு தெரியும். அதிகப்பட்சமா சரவணபவன்ல போயி மீல்ஸ் சாப்டுருப்போம்.. பட்ஜெட் கட்டுப்படி ஆகலைன்னா, இருக்கவே இருக்கு- மீனாட்சி டிப்பன் சென்டர், மணி மெஸ், கையேந்தி பவன், பாய் கடை சூப், சுண்டல்.


* சரி அடித்தளமான விஷயம், எங்களுக்கு கடலை போட தெரியாது. கரெக்ட் பண்ண யாகூ (YAHOO), ஜி-டாக் (G-TALK)ல வார்த்தய விட ஸ்மைலி(SMILEY) தான் அதிகமா இருக்கணும்.. நாமல்லா கிரிக்கெட் ஸ்கோர், எக்ஸாமுக்கு வர கேள்வி, பாங்க்ல இருந்து லோன் வாங்கலையா சார், க்ரெடிட்-கார்ட் வேணும்மா?? இந்த விசயத்துக்கு தான் போன் யூஸ் பண்ணுவோம்.. மிஸ்ட்-கால் (MISSED CALL) கொடுத்து விளையாட தெரியுமா?? நைட் 12 மணி வரைக்கும் போர்வைக்குள்ள போன ஒளிச்சி, மெசேஜ் அனுப்ப தெரியுமா?? மெசேஜ்ல அரை-மணி நேரமா என்ன சாப்டன்னே மொக்க போடுவாங்க. அந்த ஸைட்ல தோசன்னு சொன்ன போடும். பத்து பக்கத்துக்கு கட்டுரை எழுதுற மாதிரி தோச சரித்தரத்தையே பேசிட்டு இருப்பாங்க..அவன்: யேய்.. தோசயா?? தோசக்கு தோசன்னு எப்டி பேரு வந்தது சொல்லு??

அவள்: ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆசயா சுட்டதால தோசயா??

அவன்: லூசு.. மாவ கல்ல ஊத்துனோம்னா சைன்னு ஒரு சவுண்ட் வரும்.. அப்றோம் அத திருப்பி போட்டா சைன்னு இன்னொரு சவுண்ட் வரும்.. ஹிந்தில தோ-ரெண்டு. அதுனால ரெண்டு முறை சைன்னு சவுண்ட் வரர்தால, அது பேரு தோசை. எப்புடி??

அவள்:ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா... எப்டிடா இதெல்லாம் யோசிக்கிற??

நான்:அடப்பாவி.. நேட்டு நைட் நான் யோசிச்சி உனக்கு ஃபார்வட் பண்ண மேசேஜ்ஜ ரீ-மேக் பண்ணிட்டியே...

அவன்: சரி சரி.. என்ன சாப்ட??

நான்: டேய்.. திருப்பியுமா?? சத்தியமா முடிலடா..* பொண்ணுங்களுக்கு நல்ல பையன் மாதிரி நடந்துக்கணும்... இங்கிலிஷ்ல HEY BUDDY, WASSUP, LOL, YO, HOLYSHIT, DUDE, MATE, KEWL, OMG இப்டி பல வார்த்தைகள் பேசி பீட்டர் விடணும்.. நாம பேசுற 5 வார்த்தைல ஒரு வார்த்தை ஓ-போடும். ஆனா அதையே FUCKனு சொன்னா ரசிப்பாங்க.. சரி, அவங்க்கிட்ட டீசண்டா பேசுவோமா?? ஒரு பொண்ணு கடந்து போனாலே ஓராயிரம் கமெண்ட் அடிப்போம்.. பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா நமக்கு தெரிஞ்சது எல்லாம் A-ஜோக்ஸ் தான். நம்ம பசங்களுக்குள்ள சொன்னா ரசிப்பாங்க, ஆனா அவங்ககிட்ட போய் சொன்னா?? அதுக்குதான் வாயையும், வாசமலரையும் வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும். நாம எவ்வளவு தான் மூளைய கசங்கி பிழிஞ்சி யோசிச்சாலும், நல்ல ஜோக்குக்கெல்லாம் அவங்க சிரிக்க மாட்டாங்க.. இந்த அசத்த போவது யாரு மொக்க ஜோக்ஸ் மட்டும் எடுத்து விடுங்களேன், ஜகன்மோகினி தங்கச்சி மாதிரி சிரிப்பாங்க.. நாம எவ்வளவு தான் ட்ரை பண்ணாலும் நமக்கு மொக்க ஜோக்ஸ் கிடைக்காதே, என் பதிவே அதுக்கு எடுத்துக்காட்டு. நாம பசங்களுக்குள்ள சொல்ற ஜோக்ஸ்ஸ, வேற ஒருத்தன் சொல்லி கரெக்ட் பண்ணிடுவான் (மச்சி, மொக்க, உன்ன சொல்லலடா)


* ஆர்குட்(ORKUT) பார்த்தா ஃபயாஸ், ரஞ்சித், சதீஷ், நிவாஸ், சைத்தன்யா இவங்களுக்கு தான் பொண்ணுங்க ஃபேன்னா இருப்பாங்க.. இந்த ரியாலிட்டி-ஷோவால தான் எங்களுக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச கேர்ள்-ஃப்ரெண்ட்டும் கிடைக்க மாட்டேங்குது. எல்லா பொண்ணுங்களும் இந்த மானாட-மயிலாட பசங்களுக்கு SCRAP அனுப்புறதுல குறியா இருக்காங்க.. சரி நாமளும் டான்ஸ் ஆடி இம்ப்ரெஸ் பண்ணலாம்னு பார்த்தா, தக்காளி டப்பாங்குத்து கூட ஒழுங்கா வர மாட்டேங்குது.. இதுல ஜாஸ்ங்கிறான் (JAZZ), ஹிப்-ஹாப்ங்கிறான் (HIP HOP), சல்சாங்கிறான்..(SALSA) எழவு, ஜல்சா கூட பண்ண முடில. வீட்டுல போயி டான்ஸ்-க்ளாஸுக்கு (DANCE CLASS) காசு கேட்டா வாயிலே ரெண்டு குத்து விட்டு, அசிங்கமா கேக்குறாங்க.. இவரு படிப்பே டப்பா டான்ஸ் ஆடுது, இதுல இவருக்கு டான்ஸ் க்ளாஸ் ஒண்ணு தான் கேடு.. சே.. பொண்ணுங்கள கரெக்ட் பண்ண முடிலங்கிற வருத்தம் கூட இல்ல... ஆன ஒரு வளரும் கலைஞனை இப்டியா கேவலப்படுத்துவது?? சொல்லுங்க.. சரி 18 வயசு ஆகிவிட்டது.. பப்புக்கு போயி டான்ஸ் ஆடலாம்னு போனா, கையிலே காசு இல்ல.. நாமளே டாஸ்மாக்குல ஓசி சரக்கு அடிச்சி, ஹாப்-பாயில் போடுற பசங்க.. இதுல பப்ல போயி டான்ஸ் ஆடிகிட்டே, ஃபாரின் சரக்கு ஒத்துக்காம, ஃபுல்-பாயில் போடவா??


* இப்பலா அட்டு ஃபிகர்களே ஃபாரின் ஃபிலிம்ஸ் பார்த்து டாம் க்ரூஸ் (TOM CRUISE), வில் ஸ்மித் (WILL SMITH), ஜாக் ஆப்ரான் (JACK EFRON)னு சொல்றாங்க.. நாம தான் இன்னும் பேரரசு, விஜய், அஜித் படத்த பார்த்து விசில் அடிச்சிகிட்டு இருக்கோம்.. மிஞ்சி போனா ஜாக்கிசான் படம், பேய் படம் பார்ப்போம்.. அதுவும் விஜய் டீ.வி, சன் டீ.வி, ஹாலிவுட் கொண்டாட்டம் டப்பிங்ல பாக்குற பசங்க்.. நம்மகிட்ட வந்து அவங்க பியுட்டிஃபுல் மைண்ட் (A BEAUTIFUL MIND), ஹாரி மெட் சாலின்னு (HARRY MET SALLY) தாலி அறுத்தா என்னங்க பண்ண முடியும்?? ஸ்டார் வேர்ல்ட்ல இருக்குற ஆங்கில சீரியல்னா அவங்களுக்கு உசிரு.. நமக்கோ கோலங்கள், அரிசி.. சேசே.. அரசி பார்த்தா தான் வீட்டுல சோறு.. ஃப்ரெண்ட்ஸ்(F.R.I.E.N.D.S.), லாஸ்ட் (LOST)ன்னு பாக்குற பொண்ணுகிட்ட போய், அபி-ஆதி பிரச்சனை எப்ப முடியும்னு கேட்டா, அவங்க அரசி மேடம் மாதிரி யேயேயேயேயேயேய்னு கத்துவாங்க.* சில பேருக்கு சேட்டு பொண்ணுங்கள கரெக்ட் பண்ண ஆச.. ஆனா நமக்கு ஏக் கவுன் மேய்ன் ஏக் கிஸான் ரகு தாத்தா தான் தெரியும்... ஆங்கில படம்னா கூட, ஏதோ கொஞ்சம் புரியும். ஹிந்தி படம்னா சுத்தம். நாம தியேட்டர்ல டேட்டிங் போனா, ரொமன்ஸ் படத்துக்கு கூட முழிச்சிகிட்டே இருக்கணும். அப்ப உள்ள ஒரு ஜீவன் கதறும், என்னடா மச்சி, வசனமே புரில. அதை டேய், வசனமடா முக்கியம்னு சொல்லி, இருட்டுல அவங்க அழகை பார்த்து தேத்திக்க வேண்டியது தான்..


* படத்த விடுங்க.. பாப் ஆல்பம் கேப்போமா?? ராக் தெரியுமா?? நமக்கு தெரிஞ்சது பாறை, சின்ன வயசுல ரசிச்ச மல்யுத்த வீரர் ராக். ஜாஸ், ராப் (RAP), ப்ளூஸ் (BLUES), சம்பா (கோதுமை இல்ல)?? லிங்கின் பார்க் (உபயம் கில்ஸ் அண்ணா) தெரியுமான்னு கேட்டா, நாம அது பனகல் பார்க் பக்கத்துல இருக்குற தெருவான்னு கேக்குற ஆளு, இல்லாட்டி அது ஜுராஸ்ஸிக் பார்க்கோட அடுத்த பாகம்னு நினைச்சி கத விடுற ஆளு. 50 செண்ட் தெரியுமா கேட்டா, அது பர்மா பஜார்ல இருக்குற செண்ட்ன்னு வாங்க போயிடுவோம். வெண்ணிலா ஐஸ்-க்ரீம் சாப்பிடுற நமக்கு வனீஸா-ஆனி ஹட்ஜன்ஸ்(VANESSA ANNE HUDGENS) தெரியுமா?? அடுத்த முறை கில்ஸ் அண்ணாவோட ஐ-போட்(I-POD) சுட வேண்டியது தான்.. மனுசன் என்னமா ஆங்கில பாடல்களை சொல்றானுன்னு பாருங்களேன்... இசை எங்க இருந்து வருது?? ஆர்மோணிய-பெட்டில இருந்து சொல்றவங்க நாமலா... பேசமா நாக்க-முக்க, டாடி-மம்மி, ஆத்திச்சூடி கேட்டுட்டு தூங்குற வழிய பார்க்கலாம்...


இது மாதிரி இருந்தா, எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியாது... ஆனா கேர்ள்-ஃப்ரெண்ட் இல்லாததுலா குற்றமே இல்ல.. இப்பல்லா கமிட் ஆகாத பசங்கள காணவே அதிசியமா இருக்கு.. அதுனால நாங்க கடவுளின் அரிய படைப்பு (இப்டி சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான், ஜேஜே நீ சொல்றது கேக்குது மச்சி! ஃபிகர் இருக்குன்னு ஆணவத்துல ஆடாத) கேர்ள்-ஃப்ரெண்ட் இல்லையே கலங்க வேண்டாம்.. பர்ஸ்ஸும் பத்திரமா இருக்கு, மனசும் பத்திரமா இருக்குன்னு நினச்சிப்போம்.. தினமும் சண்டை, லடாய், திட்டு, தூக்கமின்மை, வீட்டுல எதிர்ப்பு இதெல்லாம் கூட சுகம் தான்... ஆனா இதெல்லாம் கிடைக்காம, இதுல வீழ்ந்துருக்குற பசங்களோட நிலமைய பார்த்து, கலாய்ப்பதும் தனி சுகம் தான்... இதை படிச்சி பதிவுலக மகளிர் என்னை ஈவ்-டீசிங் கேஸ்ல மாட்டி விட்டுடாடீங்க...


மச்சி ஃபிகர் மடியாதது கூட பிரச்சன இல்லடா... ஆனா இவன்லா ஃபிகர் மடிக்கிறத பத்தி சொல்றானேன்னு என்மேல கோவத்துல இருக்குறவங்க, பின்னோட்டம் போட்டுடுங்க..


வருகைக்கு நன்றி!!


32 comments:

G3 said...

Me the firstae :)))

G3 said...

//இது கொஞ்சம் (இல்ல ரொம்ப) பெரிய பதிவு.. அதனால் மன்னித்தருள்க!! //

Adhellam mudiyaadhu

G3 said...

//பொதுவாவே என்ன மாதிரி பசங்களா ரொம்ப நல்லவங்க. பொண்ணுங்க்கிட்ட பேசவே கூச்சப்படுவாங்க.. //

Aarambamae abaandamaana poiya irukkae !!!

G3 said...

// நாமளோ லூசு மோகன் கணக்கா லுக்குல இருப்போம்.. //

Oru unmaya othukitaanpa :)))

G3 said...

//மச்சி, உன்ன சொல்லலடா//

Appadinu solli solliyae ellaraiyum sollitta :)) Adutha vaati avanga kitta sikkina tinnu dhaan pola :D

G3 said...

//மாவ கல்ல ஊத்துனோம்னா சைன்னு ஒரு சவுண்ட் வரும்.. அப்றோம் அத திருப்பி போட்டா சைன்னு இன்னொரு சவுண்ட் வரும்.. ஹிந்தில தோ-ரெண்டு. அதுனால ரெண்டு முறை சைன்னு சவுண்ட் வரர்தால, அது பேரு தோசை.//

G3-in manasaatchi - Thevaya? idhu unakku thevaya?? Inimae indha pakkam varuva nee ???

G3 - avvvvvvvvvv... ini indha pakkam thala vechchum padukka maaten..

me the esssssssssssssssssssssssssu

நட்புடன் ஜமால் said...

நெம்ப பெருசோ


சரி சரி படிச்சிட்டு வாறனுங்கோ

Chriz said...

nallaaa padikura paiyan enga irundhaalum nallaaa padippaaa...

summmaaaa solla kooodaadhu.. indha oru statement podhum.. summaaa sooooo (Oh censorla cut panniruvaangalo?)

ok preeyaaa vudu brother

Karthik Lollu said...

ஜி3 அக்கா.... கில்ஸ் அண்ணா பகுதி படிக்காம எஸ்ஸ் ஆகிட்டீங்களே

ஜமால் அண்ணா... மறக்காம கமெண்ட் பண்ணுங்க!!

Ajai said...

டேய்.. வெண்கல மண்டையா.. எங்கள கலாய்க்கிறியா?? உனக்கு கேர்ள்-ஃப்ரெண்டே இல்லையா?? ஏண்டா இப்டி பொய் சொல்ற??

///நாமளே டாஸ்மாக்குல ஓசி சரக்கு அடிச்சி, ஹாப்-பாயில் போடுற பசங்க.. இதுல பப்ல போயி டான்ஸ் ஆடிகிட்டே, ஃபாரின் சரக்கு ஒத்துக்காம, ஃபுல்-பாயில் போடவா??///


அது என்ன நாமளே?? என்னமோ உலக மகா குடிக்காரன் மாதிரி சொல்ற?? டேய்.. மூடிய மோர்ந்து பார்த்து மயக்கம் போடுற நாயி நீ... பேச்ச பாரு!! சுண்ணாம்பு மண்டையா!!

Ajai said...

///ஏனா அங்க பொண்ணுங்ககிட்ட பேசுனா லாடம் தான். ///

11 STDல உன்ன ஒரு பொண்ணு விஜய் மாதிரியே இருக்கன்னு சைட் அடிச்சாளே.. மறந்துட்டியா??/// நாமளோ லூசு மோகன் கணக்கா லுக்குல இருப்போம்.. சுமார் ஃபிகர் கூட நம்ம கூட பேச தயங்குவாங்க..///


இது (லுக் மேட்டரு) என்னமோ உண்ம தான்... ஆனா உன்கிட்ட பொண்ணுங்க பேசவே இல்லன்னு ஏன் பீலா விட்ர?? ஜூனியர் பொண்ணு சன் டீ.வி.ல யாரடி நீ மோகினி போடும் போது, போன் பண்ணி நீங்க தனுஷ் மாதிரியே இருக்கீங்க சொன்னாளே... கொய்யால... இங்க வந்து கத விடுறான்.. இருடி... இன்னும் வராங்க.. உன் வண்டவாளத்த தண்டவாளம் ஏத்த!!

Anonymous said...

//ஃப்ரெண்ட்ஸ்(F.R.I.E.N.D.S.), லாஸ்ட் (LOST)ன்னு பாக்குற பொண்ணுகிட்ட போய், அபி-ஆதி பிரச்சனை எப்ப முடியும்னு கேட்டா, அவங்க அரசி மேடம் மாதிரி யேயேயேயேயேயேய்னு கத்துவாங்க.//

he hee.. ! enga mamiyar ipdi thaan verupaethuraanga.. athukooda paravaala.. Cartoon network a yaarupa kandupudichaanga ... Tom n jerry a veruthu poachu .. Sigh !

R-ambam

Karthik said...

பின்றீங்க கார்த்திக். செம பதிவு. :)))

GAYATHRI said...

idhu oru nallllla aaraichi:D aana yaarume pasanga panra ravusu pathi padhive ezhudhardhila...koodiseekram en kitendhu edhirpaakalam:p

Ramani... said...

Nice one.. very funny.. :)

Narayanan said...

dei kaarthi..

un post padikirathoda..comments padikirathu nalla irukku da.

pala unmaigal theria varudhu..antha 11std matter sollave illa.

epdio,nalla irunthaa sari..

figure post vacant nu advertise pannu da..blog la..take dd in favor of dash nu pottu en address pothudu..

varathula ..figure unaku,dubbu enakku..

Narayanan said...

@ ajai..

yaar varla naalum..neengale unmaiya sollidunga?

unmaiya solla vendiya neram vandhuduchu..naa ungala nambaren.

enaa comment adikaravan poi solla maataan!!

Anonymous said...

evlo peria maathirai :)

Narayanan said...

sathyamaa nee sonna paathi vaartha puriala da...

capachino ngra..wassup ngra..GAZPACHO ngra ..

antha vaarthaigal ellaam out of syllabus nu question number pottutu varuva apdinu ethir paathen da.

ithellaaam enga padicha da..??

inimael unna nambi proyajanam illa..

machi post la poi ittha marakaama add pannidu da..

"INTHA POSTIL VARUM ANAITHU VITHAMAANA SAMBAVANGALLUKKUM ENAKKUM ENTHA VITHA SAMBANTHAMUM ILLAI.

ITHU NARAYANAN PONDRAVARGALUKKU AATHARAVAAGAVUM AARUTHALUKKAGAVUM ELUTHAPATTATHU"

pappu said...

யோவ், நீ வேற வயித்தெரிச்சல கெளப்பாதய்யா!

JACK EFRON///
Zackபா இது?
தப்பு கண்டு பிடிச்சிட்டோம்ல!
நக்கீரன் பரம்பரை நாங்களாம்!
தெரியாது, தெரியாதுன்னே உனக்கு தெரிஞ்சதெல்லாம் சீன் போட்டு காண்பிச்சுட்ட!

கார்த்திகைப் பாண்டியன் said...

:-))))))நாட்டுக்கு, நமக்குத் தேவையான ஆராய்ச்சி..;-))))))

Karthik said...

//ஈ.சி.ஆர் போன கஜகஜா... தியேட்டர் போன கஜகஜா.. பீச்சி போனா கஜகஜா... பார்க் போனா கஜகஜா... பைக்ல உரசிகிட்டே கஜகஜா.. திரும்பிய பக்கமெல்லாம் கஜகஜா..

அடடா, என்னா ஓப்பனிங்!!

//அதனால அவரின் யோசனைகளோடு, என்னோட மொக்கைகளும் கலந்த பதிவு இது...

சொந்த சரக்கில்லையா இது? ;)

Karthik said...

நான் படிக்கிற காலேஜ் கூட கிட்டத்தட்ட பாய்ஸ் காலேஜ்தான் பாஸ்! இருக்கறதெல்லாம் அக்காஸ் ஒன்லி! :((

Karthik said...

ஆனா, இந்த மெசேஜ் அனுப்புற விஷயத்தை பத்தி நீங்க பேசினா நான் டென்ஷன் ஆகிடுவேன் சொல்லிட்டேன். ;)

//யாராவது ட்ரீட் கொடுத்தா தான் இப்டிலா உணவுகள் இருக்கேன்னு நமக்கு தெரியும்.

அப்படியே ஓசில வாங்கி சாப்பிட்டாலும், அதெல்லாம் நமக்கு பிடிக்காது. சைக்கிள்ல வர்ற டீக்காரர்கிட்ட டீயும், மெதுவடையும் சாப்பிட்டாதான் பிடிக்கும். சரியா?? :))

Karthik said...

நமக்கெல்லாம் 'அடியே கொல்லுதே' தான் ராக். ஹாரிஸ் சுடற பாட்டுக்கள்லாம் தான் ப்ளூஸ். :)

இந்த பப்ஸுக்கு போற பசங்களை பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே? 10 டௌனிங் ஸ்ட்ரீட் லண்டன்ல இருக்குனு சொன்னா கேவலமா பாக்குறாங்க. :)

Karthik said...

25 ஆச்சு. என் கணக்குல 5 க்கு மேலையே ஆச்சு. அந்த கொ.ப.செ, பார்த்து செய்யுங்க! ;))

kanagu said...

ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல...

நீங்க சொன்னதுல பாதி பொய் தான் போல இருக்கே.. அஜய் எல்லா உண்மையையும் புட்டு புட்டு வச்சிட்டாரே..


கலக்கல் பதிவு :)

Saranya said...

Karthik, superb post! U must have done a research to write this. Once started reading, I didn't get the feel that its long, cos it was very interesting :) Nalla eluthi irukeenga. I like Zack Efron :)
Arisi (Arasi) was really funny :)

arc said...

Idhula athana ezhudirkardhum \sathiyamaa vartha. Experience-o?:P

Was laughing my way out..Romba sadaarnama nadakara vishayangala complile panni azaga nagaichuvaya supera ezhudirka:) Idha vikatan kumudam kaaranga paathangana aduthavaaramae publicity taan:)

Anonymous said...

//பொதுவாவே என்ன மாதிரி பசங்களா ரொம்ப நல்லவங்க. //

murugaaaa.....aarambamay romba sodanaiaya irukum polarukay

Anonymous said...

//மச்சி, உன்ன சொல்லலடா//
ipdi solala solala solitay elatiyum solitiye raasa..nallaru

~gils

Anonymous said...

adapaavi...unakumatum epdi ipdi essay kaameptitionuku nernthu uta mathiri aruvia kotutuhu points!!! oru phdye panirukay pola

Blogger templates

Custom Search