Sunday, 26 July 2009

விடலை பையன் கடலை-1


நம்ப நண்பர் கடலயோட சித்து விளையாட்டுகள் பத்தி மொத போஸ்ட்ல சொல்லிருந்தேன்.. அதை மிஸ் பண்ணவங்களுக்கு, மறந்தவங்களுக்கு ஒரு பின்னோட்டம்!!அட்டு ஃபிகரா? சுமார் ஃபிகரா? மொக்க ஃபிகரா?? ஒரு பொண்ணையும் இவர் விட்டு வைக்க மாட்டாரு.. இவன் ஆர்குட் ப்ரொபைல் (PROFILE) பாருங்க.. 567 தோஸ்துங்க.. அதுல 512 பொண்ணுங்க... மவராசன் வஞ்சனை இல்லாம, எல்லா தேசத்து பொண்ணுங்க கிட்டயும் நேச கரம் நீட்டி, நோகாம, நேரம் போகற்து தெரியாம, பொறுமையா, அருமையா கடலை வறுப்பாரு... ஒவ்வொரு கண்டத்திலும், இவருக்கு ஒவ்வொரு தோழிகள்... மவனே நீ என்னைக்கு கண்டம் ஆக போறேனு தெரில... நெட்ல வர காதல் கவிதைகள், , நட்பு கவிதைகள், , பார்வட் மெசஜ் எல்லாத்தையும் சுட்டு , இவர் எழுதுன மாதிரி ஃபில் கொடுப்பான் பாருங்க, அட அட அட.. அத கண்டுபிடிச்சி சில பொண்ணுங்க சீ சீ னு அவன அசிங்கப்படுத்தும் போதும், கலங்காம இருப்பாரு.. இவன் என்ன செய்தாலும் நாங்க கண்டுக்காம இருந்தோம்.. ஆனா ஒரு நாளு எங்கள இவனோட ஒரு செயல் உசுப்பி விட அவனுக்கு நாங்க செய்த காரியம் என்ன?? டேய் பசுபதி, டார்டாய்ஸ் கொசுவர்த்திய சுழல விடுடா...
டான்: மச்சி.. படத்துக்கு போக போறோம்.. வரியாடா??


கடல: டேய்.. நான் இப்ப பீச்ல இருக்கேன் மாமா!!


டான்: ஓகே...


பிட்டு: மச்சி.. மெயில் செக் பண்ணிட்டு கிளம்பலாம்!


பிட்டு எப்பவுமே INVISIBLE MODE SIGN IN பண்ணுவான்..


பிட்டு: டேய், மச்சி, இங்க பாருடா..


டான்: என்னடா?


பிட்டு: பாவி.. பீச்ல இருக்கேன்னு சொல்லி ஆன்லைன்ல கடல போட்டுட்டு இருக்கான்டா.. சும்மா PROFILE பார்க்கலாம்னு போனேன்.. இவன் SCRAPBOOKல பண்ற அட்டுழியம் பாரேன்!!


டான்: டேய் மொக்க, பழய கடல இருக்கும்டா..


பிட்டு: ஓ**.. டைம் பாருடா... 0 SECONDS AGO இருக்கு.. இரு, REFRESH பண்றேன்..REFRESH பண்ணா, புதுசா 4 SCRAPS வந்துருக்கு.அன்று நாங்கள் எடுத்த முடிவு தான், ஒரு போலி அக்கவுண்ட் உருவாக்கி, அவனோட SCRAPBOOKல போயி கலாய்க்கறது.. மொதல்ல அவரு கடல போடுற பொண்ண போயி கலாய்ச்சோம்நாங்க: We are from Orkut Security Center. We have thereby found that you have violated the Orkut rules by putting looks “ATTRACTIVE” but when investigated, you are a “MIRROR CRACKING MATERIAL” So hereby your ACCOUNT will be deleted in minutes! (மொழிப்பெயர்ப்பு: நாங்க ஆர்குட் பாதுகாப்பு வளையத்தில் உள்ளோம்... அழகுன்னு இடத்துல, மொக்க ஃபிகருன்னு போட வேண்டிய நீங்க, சூப்பர் ஃபிகருன்னு குறிப்பிட்டுள்ளதால், உங்க அக்கவுண்ட் அழிக்கப்பட உள்ளோம்)பொண்ணு: Iooo.. Sorry! I’ll change… Please, don’t delete!


நாங்க: தொப்பி, தொப்பி!!


பொண்ணு: பொறுக்கி.. இரு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றேன்!!


அவ உடனே நம்ப கடல கிட்ட சொல்ல, அவரு எங்களுக்கு SCRAP பண்ணாரு.. எலியே வந்து வலையில் சிக்கிய கதையா, இதுக்காக தான் நாங்க காத்து இருந்தோம்!!கடல: டேய் மொக்க பையா.. கடல போடவே ஆர்குட் வரீங்களா??நாங்க: ஓஓஓஓஓ.. அப்ப நீங்க எதுக்கு வரீங்க?? சோசியல் நெட்வோர்க்ல சோசியல் செர்வீஸ், அதான் சமூக சேவை செய்ய வந்தீங்களா?? போ.. தீயுது.. சீக்கிரம் வறுத்து தள்ளு!!
அன்னிக்கு ஆரம்பிச்ச சனி தான்.. கடலய நாங்க இன்னிக்கு வரைக்கும் போட்டு வறுத்து எடுக்குறோம்!! அவன் ஒரு பொண்ணுக்கு SCRAP அனுப்ப, நாங்க அதை அங்கன போயி கண்டுபிடிச்சி, அவரு SCRAPBOOKல அதை ஓட்டி, அதுக்கு கலாய் COUNTER கொடுப்போம்.. அப்டி நாங்க கொடுத்த சில, உங்கள் பார்வைக்கு, இந்த பதிவில்1. Hi, this is xxxxxxxx. And about me I am from Chennai but my native is Trichy. I’m doing my BE in YYYYYYY College. I’m quite tall 6.0 feet and I am just good looking not great looking (mark my words) then I am kind of cool and computer freak kind of guy always makes fun out of life.. Hey need more info just reply me ya, I am there to answer u. I am here to have a lot of friends. I hope I will get some company here.கம்பெனி வேணும்னா அம்பத்தூர், வேளச்சேரி, சிருச்சேரி போங்க பாஸூ.. உங்களுக்காக நெறய ஓப்பனிங் இருக்கு! கடல போட சொன்னா, கேம்பஸ் இண்டர்வியுக்கு RESUME எழுதுறீங்க?? இந்த ஆர்வத்த நல்ல விதத்துல யூஸ் பண்ணிருந்தா, இந்நேரம் வேலவெட்டி கிடச்சி இருக்கும்.. இப்டி வெட்டி வேல பண்ணாம இருக்கலாம்ல??2. U r looking exceptionally cute en sweet...;-).


தம்பி தான் அடையாறு ஆனந்த பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல இருக்குற ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் நக்கிப் பார்த்து ஸ்வீட்னு சொல்வாரு.. அப்டியே அருண் ஐஸ்கீரிம்லயும் தன்னோட சேவையை செய்து, கூலா இருக்குனு சொல்வாரு...3. You look like Traditional Angel in the Saree


அடடா.. உன்னல்லா பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்த்து விடணும்.. ஏஞ்சல் என்னைக்கு புடவை கட்டி இருக்கு புண்ணாக்கு??4. Hi Ma’m , if u visited my profile den a scrap was must.. I’ll be waiting for one.


செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட்க்கு கூட இப்டி வெயிட் பண்ணிருக்க மாட்ட... இதையே ஒரு தொழிலா பார்த்தசாரதி கோவில்ல செய்துருந்தா, இந்நேரம் மூணு பேங்கல அக்கவுண்ட் இருக்கும்... நான் கூட தான் உன் ப்ரொஃபைல் (PROFILE) விசிட் பண்ணேன்.. எனக்கொரு SCRAP அனுப்பேன்.. அதுமட்டும் மாட்டேன்னு அடம்பிடிக்கிற.. ஒரு பொண்ணு போட்டோ பார்த்துட கூடாது, FRIEND’s REQUEST பறக்குது.. வையாபுரிக்கு சேலை கட்டி விட்டா கூட, சலிக்காம ரசிப்ப நீ..
5. Scrap-Without your Scraps days are like: Moanday, Tearsday, Wasteday, Thirstday, Frightday, Shattereday & Sadday. So send me Scrap every day.அடேய்... ஓசில கிடச்ச குட்-டே (GOOD DAY) பிஸ்கட்ட நக்கி சாப்பிடுறவன் நீ.. டேஸ் பத்தி பேசுறியா??
6. Hi Priyanka.... How r u?? Saw u in Iyer and Iyengar community... Me too a member! Would u like to be friend with me???


வாவ்... வாட் எ மேன் (WAAW… WHAT A MAN).. தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காக்க, ஜாதி பார்த்து கடலை போடுறியே மாமா.. நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...7. கடல: You know Tamil??

பொண்ணு 341: தெரியாது

கடல: Oh Sorry!! தமிழ் தெரியும்னு நினச்சேன்!!மாப்ள.. உனக்காகத் தான் எடிசன் ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காரு.. தல மேல கைய வச்சிப்பாரு... ஏதோ தட்டுப்படுடா?? ஒரு ஒளி தெரியுதா?? ம்ம்ம்.. நடத்து!!8. Hey beauty... You look so fair

if you don’t add me its unfair


டேய் மொன்ன நாயே... உனக்கெல்லாம் கவிதை கேக்குதா?? என்னடா ஃபேர், தேங்க நார்னு.. ஃபேர் அண்ட் லவ்லி (FAIR AND LOVELY) போட்டா கூட காக்காக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கா அவ.. ஆர்குட்ல ஒரு பொண்ணையும் விட்டு வைக்குறதில்ல போல...9. L+O+V+E=54

but the value of

F+R+I+E+N+S+H+I+P= 108

54+54= 108

LOVE+LOVE= FRIENDSHIP

so friendship is two times greater than love......... so will u be my friend?இந்த உலகத்துலேயே ரெண்டே ரெண்டு பேரு தான் மேத்ஸ் விஞ்ஞானி.. ஒருத்தரு சி.வி.ராமன்.. இன்னொன்னு நீ தான்.. என்னமா ஆராய்ச்சி பண்ணிருக்கான் பாருங்க.. உனக்கெல்லாம் ஏன் இன்னும் நோபல் பரிசு தராம இருக்காங்க?? இந்த ஆர்வத்த படிப்புல காட்டுனா, 3 செமஸ்டர் மேத்ஸ் அர்ரியர் க்ளியர் (ARREAR CLEAR) பண்ணிடலாம்..

ஆனா ஒண்ணு.. ஃப்ரெண்ட் ஆன உடனே, இரண்டால வகுக்கலாம்னு சொல்லி லவ் பண்ண மாட்டீயே??10. Strawberry ---- I love you

Chocolate ---- Be my Valentine

Vanilla Honey ---- You are in my Crush list.

Black Forest --- Best Friend

Banana Colada --- Let's be Chums(friends) !!!

Almond Mocha --- You are Lovely

Apricots n' Cream -- Have a nice Day!

Devils Food Cake --- You take my Breath away

do replyகார்ப்பரேஷன் ஸ்கூல் பக்கம் தள்ளுவண்டில ஐஸ்-க்ரீம் விக்குறவனுக்குலா ஆர்குட்ல அக்கவுண்ட் கொடுக்காதீங்கன்னா கேக்குறாங்களா??என்ன தான் நாங்க மானப்பங்கம் செய்தாலும், அவன் இன்னும் சலிக்காம, தன் சேவையை தொடர்கிறான்.. ஆர்குட் இப்பல்லா
SCRAPBOOK பூட்டு போடுற மாதிரி மாற்றம் செய்தாலும், இவன் தன்னோட தொழிலுக்கு தோய்வு வரக்கூடாதுன்னு, இன்னும் ஓப்பன்ல வச்சிருக்காரு!! “மாமா... தினமும் புதுசா ஒரு ஃபிகர் இந்த உலகுல உருவாகும் போது, நம்ப வண்டி பிரச்சனை இல்லாம ஓடும்... எவ்வளவோ அசிங்கப்பட்டுருக்கோம்.. இதுலா ஜுஜுபிடா.. கடல போட்டு அசிங்கப்படுறவன் மனுசன்... அதையும் தொடச்சிட்டு, தொடர்பவன் வீரன்.. நான் வீரன்” பன்ச்லா வைப்பான்... அதுனால, அவன் அவன் சேவை செய்ய செய்ய, எனக்கும் பதிவு மீட்டர் ஓடும்ல??
டிஸ்கி: என் பதிவு லிங்க் அவனுக்கு தெரியாது!! அதுனால இது போல பல பகுதிகள் வெளிவரும்!!
வருகைக்கு நன்றி!!

Thursday, 9 July 2009

ஃபிகர் மடிக்கிறதுலா ஒரு மேட்டரா மச்சி??

முன்குறிப்பு: இது கொஞ்சம் (இல்ல ரொம்ப) பெரிய பதிவு.. அதனால் மன்னித்தருள்க!!


ஈ.சி.ஆர் போன கஜகஜா... தியேட்டர் போன கஜகஜா.. பீச்சி போனா கஜகஜா... பார்க் போனா கஜகஜா... பைக்ல உரசிகிட்டே கஜகஜா.. திரும்பிய பக்கமெல்லாம் கஜகஜா.. இப்டி எல்லாருக்கும் கேர்ள்-ப்ரெண்ட் இருக்கும் போது, எனக்கு மட்டும் ஏன் ஒரு ஃபிகர் கூட கிடைக்கலன்னு என்ன மாதிரி புலம்பும் பல நல்உள்ளங்களுக்காக நான் ஆராய்ச்சி செய்ததன் விளைவு தான் இந்த பதிவு.. லான்ஸூ நண்பர் ரமணி அவர்களின் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைக்க, அவரும் என்ன மாதிரி ஆராய்ச்சி செய்துள்ளார்ன்னு அறிந்தேன்.. அதனால அவரின் யோசனைகளோடு, என்னோட மொக்கைகளும் கலந்த பதிவு இது...


* பொதுவாவே என்ன மாதிரி பசங்களா ரொம்ப நல்லவங்க. பொண்ணுங்க்கிட்ட பேசவே கூச்சப்படுவாங்க.. இதுக்கு முக்கிய காரணம் நாங்க படிச்சது பாய்ஸ் ஸ்கூல். கோ-எட்ல (CO-ED) படிச்சாலும் அது பாய்ஸ் ஸ்கூல் தான்.. ஏனா அங்க பொண்ணுங்ககிட்ட பேசுனா லாடம் தான்.


* நாமலா எப்பவுமே பொண்ணுங்க நம்ம கிட்ட வந்து பேசணும்னு நினைக்கிற டைப்பு.. மைக் மோகன் மாதிரி கொஞ்சம் லட்சணமா இருந்தாலாவது வந்து பேசுவாங்க.. நாமளோ லூசு மோகன் கணக்கா லுக்குல இருப்போம்.. சுமார் ஃபிகர் கூட நம்ம கூட பேச தயங்குவாங்க.. சரி, அழகை விட அறிவு முக்கியம். அப்பவாது காதல் கொண்டேன் தனுஷ் கணக்கா ஒரு சோனியா அகர்வால் வந்து பேச சான்ஸ் இருக்கு.. நாம படிக்கிற படிப்புக்கு இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?? ஸ்கூல் ஆயாகிட்ட குப்பய போட்டு (டெஸ்ட் பேப்பர்லா வீட்டுக்கு எடுத்துபோக முடியாதுல) திட்டு வாங்குற பசங்களுக்கு ஃபிகர் கிடைக்குமா??


* இனம் இனத்தோட சேரும்னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க?? நம்மகூட சேர்ற பசங்களும் பொண்ணுங்க கூட பேச ஆச படுற டைப்பா தான் இருப்பாங்க.. (ஆச மட்டும் தான் படுவாங்க) அதியசமா ஒருத்தனுக்கு மட்டும் கேர்ள் ஃப்ரெண்ட்(GIRL-FRIEND) கிடச்சாலும், பாவி பையன் நமக்கு இண்ட்ரோ (INTRO) தரமா மேட்டர கமுக்கமா வச்சிருப்பான். இவனலா தீர விசாரிச்சா தான் உண்மை வெளிய வரும்.. துரோகிகள் (மச்சி, ஜேஜே, உன்ன சொல்லலடா). சரி அவன் ஃபிகர் பத்தி தான் சொல்ல வேண்டாம், அவ ஃப்ரெண்ட்ஸ் பத்தி சொல்லலாம்ல?? நாங்களும் நட்பு பாராட்டுவோம்ல?? நாடோடிகள் படத்துல சொல்ற மாதிரி என் நண்பனின் நண்பன், எனக்கும் நண்பன். ஆனா அந்த பிள்ளையோட ஆண் நண்பர்கள் செல்போன் நம்பர் தருவாங்க பிக்காளி பசங்க (மச்சி, மெசேஜ் மாமா, உன்ன சொல்லலடா) வெட்கத்த விட்டு போய் ஹாய் சொன்னாலும், அந்த பொண்ணு நாய் சொல்லியும், அலுக்காம பேசுறதுக்கு, சும்மாவே இருக்கலாம் (மச்சி, கடல உன்ன சொல்லல)


* பொதுவாவே லாஸ்ட் பெஞ்ச் (LAST BENCH) பசங்கன்னா பொண்ணுங்களுக்கு (குறிப்பா மிஸ்ங்களுக்கும்) மக்கு பசங்க, பொறுக்கி பசங்கன்னு ஒரு எண்ணம் இருக்கும். நாமளும் ஃப்ர்ஸ்ட் பெஞ்ச்ல (FIRST BENCH) படிக்கிற பசங்க கூட சேர்ந்தா எங்க அந்த வியாதி நமக்கு தொத்திக்குமோன்னு பயந்து லாஸ்ட் பெஞ்ச் உக்காருவோம்.. நம்ம எண்ணம், படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிப்பான், ஆனா பெண்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லையே??


* ஸ்கூல், காலேஜ், வேலை பாக்குற இடமாகட்டும், நமக்கு ஒரு பொண்ணு புடிச்சு போச்சுன்னா, அதே பொண்ணு நம்ம எதிரிக்கும் பிடிக்கும்.. நம்ப பசங்க சைட் அடிக்க நமிதா மாதிரி பொண்ணுங்கள பார்ப்பாங்க.. ஆனா கல்யாணம்னு வந்துட்டா பாவனா மாதிரி பவ்யமான பொண்ண கட்டிக்க ஆச படுவாங்க.. நம்ம கண்ணுல கஷ்டப்பட்டு மாட்டுற ஒரே ஃபிகரு, அவள எப்டி இம்ப்ரெஸ் (IMPRESS) பண்ணலாம்னு மனக்கோட்டை கட்டி வச்சி, தைரியத்த வரவழைத்து போய் சொல்லலாம்னு போனா, நம்பள காதல் தூதுவனா ஆக்கி வச்சிருப்பாங்க.. கவுண்டர் சொல்ற மாதிரி, “டேய், ஆனா ஒண்ணு சொல்றேன்! எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மா விடாதுடா பனங்கொட்ட தலையா


* டேட்டிங் (DATING) போக சிறந்த இடங்கள் நமக்கு தெரியுமா?? ஸ்பென்ஸர் (SPENCER), சிட்டி சென்டர் (CITY CENTRE) தவிர?? சரி, அங்கே போனா கூட, கேர்ள்-ஃப்ரெண்ட்ஸ்க்கு செலவு பண்ண காசு இருக்கா?? அப்பா கிட்ட இருந்து ஆட்டைய போடுற காசு, பஸ் காசுக்கே சரியா போயிடும்.. இதுல எங்க இருந்து செலவு செய்ய? பரிஸ்டா (BARISTA), கஃபே காப்பி டே (CAFE COFFEE DAY) போனாக்கூட ஒரு காப்பி 50ரூபான்னு பில் வரும்... பேரு ஏதோ கஃப்பச்சீனோ (CAPPUCCINO).. இத குடிச்சோம்னா அப்றோம், காப்பி-சீ-நோ-நோன்னு சொல்வோம். சேட்டா, நாயர் கடைல இருக்குற அக்கவுண்ட்டையே இன்னும் அடைக்காம வச்சிருக்கோம்.. இட்லி, தோச, பூரி சாப்பிடுற பசங்களுக்கு பாஸ்டா (PASTA), பீஸ்ஸா, கஸ்பெக்கொ (GAZPACHO) ஹாட்-டாக்ஸ் (HOT DOGS) என்னன்னு தெரியுமா?? யாராவது ட்ரீட் கொடுத்தா தான் இப்டிலா உணவுகள் இருக்கேன்னு நமக்கு தெரியும். அதிகப்பட்சமா சரவணபவன்ல போயி மீல்ஸ் சாப்டுருப்போம்.. பட்ஜெட் கட்டுப்படி ஆகலைன்னா, இருக்கவே இருக்கு- மீனாட்சி டிப்பன் சென்டர், மணி மெஸ், கையேந்தி பவன், பாய் கடை சூப், சுண்டல்.


* சரி அடித்தளமான விஷயம், எங்களுக்கு கடலை போட தெரியாது. கரெக்ட் பண்ண யாகூ (YAHOO), ஜி-டாக் (G-TALK)ல வார்த்தய விட ஸ்மைலி(SMILEY) தான் அதிகமா இருக்கணும்.. நாமல்லா கிரிக்கெட் ஸ்கோர், எக்ஸாமுக்கு வர கேள்வி, பாங்க்ல இருந்து லோன் வாங்கலையா சார், க்ரெடிட்-கார்ட் வேணும்மா?? இந்த விசயத்துக்கு தான் போன் யூஸ் பண்ணுவோம்.. மிஸ்ட்-கால் (MISSED CALL) கொடுத்து விளையாட தெரியுமா?? நைட் 12 மணி வரைக்கும் போர்வைக்குள்ள போன ஒளிச்சி, மெசேஜ் அனுப்ப தெரியுமா?? மெசேஜ்ல அரை-மணி நேரமா என்ன சாப்டன்னே மொக்க போடுவாங்க. அந்த ஸைட்ல தோசன்னு சொன்ன போடும். பத்து பக்கத்துக்கு கட்டுரை எழுதுற மாதிரி தோச சரித்தரத்தையே பேசிட்டு இருப்பாங்க..அவன்: யேய்.. தோசயா?? தோசக்கு தோசன்னு எப்டி பேரு வந்தது சொல்லு??

அவள்: ம்ம்ம்ம்ம்ம்ம்... ஆசயா சுட்டதால தோசயா??

அவன்: லூசு.. மாவ கல்ல ஊத்துனோம்னா சைன்னு ஒரு சவுண்ட் வரும்.. அப்றோம் அத திருப்பி போட்டா சைன்னு இன்னொரு சவுண்ட் வரும்.. ஹிந்தில தோ-ரெண்டு. அதுனால ரெண்டு முறை சைன்னு சவுண்ட் வரர்தால, அது பேரு தோசை. எப்புடி??

அவள்:ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா... எப்டிடா இதெல்லாம் யோசிக்கிற??

நான்:அடப்பாவி.. நேட்டு நைட் நான் யோசிச்சி உனக்கு ஃபார்வட் பண்ண மேசேஜ்ஜ ரீ-மேக் பண்ணிட்டியே...

அவன்: சரி சரி.. என்ன சாப்ட??

நான்: டேய்.. திருப்பியுமா?? சத்தியமா முடிலடா..* பொண்ணுங்களுக்கு நல்ல பையன் மாதிரி நடந்துக்கணும்... இங்கிலிஷ்ல HEY BUDDY, WASSUP, LOL, YO, HOLYSHIT, DUDE, MATE, KEWL, OMG இப்டி பல வார்த்தைகள் பேசி பீட்டர் விடணும்.. நாம பேசுற 5 வார்த்தைல ஒரு வார்த்தை ஓ-போடும். ஆனா அதையே FUCKனு சொன்னா ரசிப்பாங்க.. சரி, அவங்க்கிட்ட டீசண்டா பேசுவோமா?? ஒரு பொண்ணு கடந்து போனாலே ஓராயிரம் கமெண்ட் அடிப்போம்.. பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா நமக்கு தெரிஞ்சது எல்லாம் A-ஜோக்ஸ் தான். நம்ம பசங்களுக்குள்ள சொன்னா ரசிப்பாங்க, ஆனா அவங்ககிட்ட போய் சொன்னா?? அதுக்குதான் வாயையும், வாசமலரையும் வச்சிக்கிட்டு சும்மா இருக்கணும். நாம எவ்வளவு தான் மூளைய கசங்கி பிழிஞ்சி யோசிச்சாலும், நல்ல ஜோக்குக்கெல்லாம் அவங்க சிரிக்க மாட்டாங்க.. இந்த அசத்த போவது யாரு மொக்க ஜோக்ஸ் மட்டும் எடுத்து விடுங்களேன், ஜகன்மோகினி தங்கச்சி மாதிரி சிரிப்பாங்க.. நாம எவ்வளவு தான் ட்ரை பண்ணாலும் நமக்கு மொக்க ஜோக்ஸ் கிடைக்காதே, என் பதிவே அதுக்கு எடுத்துக்காட்டு. நாம பசங்களுக்குள்ள சொல்ற ஜோக்ஸ்ஸ, வேற ஒருத்தன் சொல்லி கரெக்ட் பண்ணிடுவான் (மச்சி, மொக்க, உன்ன சொல்லலடா)


* ஆர்குட்(ORKUT) பார்த்தா ஃபயாஸ், ரஞ்சித், சதீஷ், நிவாஸ், சைத்தன்யா இவங்களுக்கு தான் பொண்ணுங்க ஃபேன்னா இருப்பாங்க.. இந்த ரியாலிட்டி-ஷோவால தான் எங்களுக்கு இருக்குற கொஞ்ச நஞ்ச கேர்ள்-ஃப்ரெண்ட்டும் கிடைக்க மாட்டேங்குது. எல்லா பொண்ணுங்களும் இந்த மானாட-மயிலாட பசங்களுக்கு SCRAP அனுப்புறதுல குறியா இருக்காங்க.. சரி நாமளும் டான்ஸ் ஆடி இம்ப்ரெஸ் பண்ணலாம்னு பார்த்தா, தக்காளி டப்பாங்குத்து கூட ஒழுங்கா வர மாட்டேங்குது.. இதுல ஜாஸ்ங்கிறான் (JAZZ), ஹிப்-ஹாப்ங்கிறான் (HIP HOP), சல்சாங்கிறான்..(SALSA) எழவு, ஜல்சா கூட பண்ண முடில. வீட்டுல போயி டான்ஸ்-க்ளாஸுக்கு (DANCE CLASS) காசு கேட்டா வாயிலே ரெண்டு குத்து விட்டு, அசிங்கமா கேக்குறாங்க.. இவரு படிப்பே டப்பா டான்ஸ் ஆடுது, இதுல இவருக்கு டான்ஸ் க்ளாஸ் ஒண்ணு தான் கேடு.. சே.. பொண்ணுங்கள கரெக்ட் பண்ண முடிலங்கிற வருத்தம் கூட இல்ல... ஆன ஒரு வளரும் கலைஞனை இப்டியா கேவலப்படுத்துவது?? சொல்லுங்க.. சரி 18 வயசு ஆகிவிட்டது.. பப்புக்கு போயி டான்ஸ் ஆடலாம்னு போனா, கையிலே காசு இல்ல.. நாமளே டாஸ்மாக்குல ஓசி சரக்கு அடிச்சி, ஹாப்-பாயில் போடுற பசங்க.. இதுல பப்ல போயி டான்ஸ் ஆடிகிட்டே, ஃபாரின் சரக்கு ஒத்துக்காம, ஃபுல்-பாயில் போடவா??


* இப்பலா அட்டு ஃபிகர்களே ஃபாரின் ஃபிலிம்ஸ் பார்த்து டாம் க்ரூஸ் (TOM CRUISE), வில் ஸ்மித் (WILL SMITH), ஜாக் ஆப்ரான் (JACK EFRON)னு சொல்றாங்க.. நாம தான் இன்னும் பேரரசு, விஜய், அஜித் படத்த பார்த்து விசில் அடிச்சிகிட்டு இருக்கோம்.. மிஞ்சி போனா ஜாக்கிசான் படம், பேய் படம் பார்ப்போம்.. அதுவும் விஜய் டீ.வி, சன் டீ.வி, ஹாலிவுட் கொண்டாட்டம் டப்பிங்ல பாக்குற பசங்க்.. நம்மகிட்ட வந்து அவங்க பியுட்டிஃபுல் மைண்ட் (A BEAUTIFUL MIND), ஹாரி மெட் சாலின்னு (HARRY MET SALLY) தாலி அறுத்தா என்னங்க பண்ண முடியும்?? ஸ்டார் வேர்ல்ட்ல இருக்குற ஆங்கில சீரியல்னா அவங்களுக்கு உசிரு.. நமக்கோ கோலங்கள், அரிசி.. சேசே.. அரசி பார்த்தா தான் வீட்டுல சோறு.. ஃப்ரெண்ட்ஸ்(F.R.I.E.N.D.S.), லாஸ்ட் (LOST)ன்னு பாக்குற பொண்ணுகிட்ட போய், அபி-ஆதி பிரச்சனை எப்ப முடியும்னு கேட்டா, அவங்க அரசி மேடம் மாதிரி யேயேயேயேயேயேய்னு கத்துவாங்க.* சில பேருக்கு சேட்டு பொண்ணுங்கள கரெக்ட் பண்ண ஆச.. ஆனா நமக்கு ஏக் கவுன் மேய்ன் ஏக் கிஸான் ரகு தாத்தா தான் தெரியும்... ஆங்கில படம்னா கூட, ஏதோ கொஞ்சம் புரியும். ஹிந்தி படம்னா சுத்தம். நாம தியேட்டர்ல டேட்டிங் போனா, ரொமன்ஸ் படத்துக்கு கூட முழிச்சிகிட்டே இருக்கணும். அப்ப உள்ள ஒரு ஜீவன் கதறும், என்னடா மச்சி, வசனமே புரில. அதை டேய், வசனமடா முக்கியம்னு சொல்லி, இருட்டுல அவங்க அழகை பார்த்து தேத்திக்க வேண்டியது தான்..


* படத்த விடுங்க.. பாப் ஆல்பம் கேப்போமா?? ராக் தெரியுமா?? நமக்கு தெரிஞ்சது பாறை, சின்ன வயசுல ரசிச்ச மல்யுத்த வீரர் ராக். ஜாஸ், ராப் (RAP), ப்ளூஸ் (BLUES), சம்பா (கோதுமை இல்ல)?? லிங்கின் பார்க் (உபயம் கில்ஸ் அண்ணா) தெரியுமான்னு கேட்டா, நாம அது பனகல் பார்க் பக்கத்துல இருக்குற தெருவான்னு கேக்குற ஆளு, இல்லாட்டி அது ஜுராஸ்ஸிக் பார்க்கோட அடுத்த பாகம்னு நினைச்சி கத விடுற ஆளு. 50 செண்ட் தெரியுமா கேட்டா, அது பர்மா பஜார்ல இருக்குற செண்ட்ன்னு வாங்க போயிடுவோம். வெண்ணிலா ஐஸ்-க்ரீம் சாப்பிடுற நமக்கு வனீஸா-ஆனி ஹட்ஜன்ஸ்(VANESSA ANNE HUDGENS) தெரியுமா?? அடுத்த முறை கில்ஸ் அண்ணாவோட ஐ-போட்(I-POD) சுட வேண்டியது தான்.. மனுசன் என்னமா ஆங்கில பாடல்களை சொல்றானுன்னு பாருங்களேன்... இசை எங்க இருந்து வருது?? ஆர்மோணிய-பெட்டில இருந்து சொல்றவங்க நாமலா... பேசமா நாக்க-முக்க, டாடி-மம்மி, ஆத்திச்சூடி கேட்டுட்டு தூங்குற வழிய பார்க்கலாம்...


இது மாதிரி இருந்தா, எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியாது... ஆனா கேர்ள்-ஃப்ரெண்ட் இல்லாததுலா குற்றமே இல்ல.. இப்பல்லா கமிட் ஆகாத பசங்கள காணவே அதிசியமா இருக்கு.. அதுனால நாங்க கடவுளின் அரிய படைப்பு (இப்டி சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான், ஜேஜே நீ சொல்றது கேக்குது மச்சி! ஃபிகர் இருக்குன்னு ஆணவத்துல ஆடாத) கேர்ள்-ஃப்ரெண்ட் இல்லையே கலங்க வேண்டாம்.. பர்ஸ்ஸும் பத்திரமா இருக்கு, மனசும் பத்திரமா இருக்குன்னு நினச்சிப்போம்.. தினமும் சண்டை, லடாய், திட்டு, தூக்கமின்மை, வீட்டுல எதிர்ப்பு இதெல்லாம் கூட சுகம் தான்... ஆனா இதெல்லாம் கிடைக்காம, இதுல வீழ்ந்துருக்குற பசங்களோட நிலமைய பார்த்து, கலாய்ப்பதும் தனி சுகம் தான்... இதை படிச்சி பதிவுலக மகளிர் என்னை ஈவ்-டீசிங் கேஸ்ல மாட்டி விட்டுடாடீங்க...


மச்சி ஃபிகர் மடியாதது கூட பிரச்சன இல்லடா... ஆனா இவன்லா ஃபிகர் மடிக்கிறத பத்தி சொல்றானேன்னு என்மேல கோவத்துல இருக்குறவங்க, பின்னோட்டம் போட்டுடுங்க..


வருகைக்கு நன்றி!!


Thursday, 2 July 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே-4

1. குடும்பத்தோட சுற்றுலா போகலாம்னு இருக்கேன்... நல்லா இடமா சொல்லுங்க?


டெல்லி போங்க.. பதவி கிடைச்சாலும் கிடைக்கலாம்


2. குளிர் 100 பார்த்தாச்சா??


வெளிய வெக்கைய்யா இருக்குன்னு தியேட்டருக்கு போனா, உள்ள படம் செம மொக்கயா இருக்கு.. டி.வி.டியில் கூட பார்க்க முடியாத அழியாக்காவியம்


3. பேசும் ஓவியம் நீங்கள்... பேசா ஓவியம்??


என் புகைப்படம்4. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயுமாமே??


அதெல்லாம் பழசு... அப்பா ஒரு ரூபா அரிசி போட்டா, மகன் இலவச பிரியாணி போடுவாரு... இதான் புதுசு...5. மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.. நீங்க??


அப்டியா?? நல்ல வேள.. நான் குழந்தையா பொறந்தேன்


6. விஜயகாந்த்தை எதிர்த்து வடிவேலு போட்டி போட போறேன்னு சொன்னாரே??


அட போங்க நீங்க வேற.. அவரு ஷூட்டிங் நினச்சி பேசுன வசனத்த இவ்வளவு சீரியசாவா எடுத்துக்கிறது?? சின்னப்புள்ள தனமா இல்ல?? ராஸ்கல்...


7. உலகக்கோப்பை முழுக்க தோனி ஏன் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு இருந்தாரு??


ஐ.பி.எல்ல தோற்ற உடனே விஜய் சொன்னாராம், விடு மச்சி செமி-ஃபைனல்ஸ்ல தானே தோத்தோம்.. ஃபைனல்ஸ்ல பார்த்துக்கலாம்.. அத கேட்டு ஷாக் ஆன மனுசன் தான், இன்னிக்கு வரைக்கும் மீளல..8. ஐ.டி., தகவல் தொழில்நுட்பத்துறை பின்னணியில் ஒரு திகில், திரில்லர் படம் எடுக்கலாம்னு நினைக்கிறேன்.. நல்ல படத்தலைப்பு ஒண்ணு தாங்க?பிங்க்-ஸ்லிப் (PINK SLIP)9. ஜேம்ஸ் பாண்ட் ரீ-மேக்ல அஜித் நடிச்சா நல்லா இருக்கும்ல??


ஜேம்ஸ் பாண்ட் மட்டும் இல்லங்ணா, எந்த கதையா இருந்தாலும், அஜித் நடிச்சா நல்லா தான் இருக்கும்... எங்க நடிக்கிறாரு??10. என்கிட்ட உங்களுக்கு பிடிச்ச விசயம்??

.

..

...

....

.....

......

.......

........

.............

இந்த கேள்விக்குலா பதில் சொல்வேங்கிற உங்க ஆர்வம் தான்...வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search