Monday, 22 June 2009

முணுமுணுக்க வைக்கும் மூணு கதைகள்

வணக்கம் கண்ணு... நான் தான் உங்க நாட்டாம வந்துருக்கேன்.. ரொம்ப மாசமா ஆளே காணும்னு நீங்க வருத்தப்பட்டீங்க போல?? அதான், இப்ப ஐ ஆம் பேக்.. இப்ப உங்களுக்கு ஒரு கதையா சொல்லாம, 3 கதைகள் சொல்லப்போறேன்!!


மொத ஒரு நெஞ்சை வருடும் காதல் கதை


எங்க ஊருல ஒரு மெக்கானிக் பையனும், வொயின் ஷாப் ஓணர் பொண்ணும் லவ் பண்ணாங்க.. பொண்ணு ரொம்ப பெரிய இடம்.. காதலுக்கு தான் கண்ணுயில்லையாமே... அதுனால அந்தஸ்துலா பாக்காம ரெண்டு பேரும் பழகுனாங்க.. ஆனா எப்பவுமே சந்துல சிந்து பாடுறதுக்கு ரெண்டு பக்கமும் நண்பர்கள்னு பேருல வில்லங்க இருப்பாங்க.. பொறாம புடுங்கி தின்னுற பயலுங்க இவங்கல்லா.. இந்த புள்ளயோட ஃப்ரெண்ஸ்ங்க, இவன பத்தி, இல்லாத்தும், பொல்லாததும் சொல்லி கலகமூட்டிட்டாங்க..


ராசு நீ என்ன நெசமா தான் காதலிக்குறியா??


என்ன புள்ள, தீடீர்ன்னு இப்டி கேட்டுப்புட்ட.. நான் உன்ன எம்புட்டு விரும்புறேன் தெரியுமா??


இல்ல, என்கூட படிக்கிற புள்ளைங்க சொல்லிச்சு, பசங்கலா ஆரம்பத்துல இப்டி தான் இருப்பாங்க.. அப்றோம் காரியம் முடிஞ்ச உடனே, கை கழுவிட்டு போயிடுவாங்க


என்ன புள்ள, சந்தேகப்படுறியா?? அம்புட்டு தானா நீ என்ன நம்புறது?? இங்க பாரு புள்ள, நீ எப்பவுமே என் நெஞ்சுல இருக்கணும்னு உன் பேர பச்ச குத்திருக்கேன்.. என் ஆத்தா, அப்பன் அடுத்து உன்ன தான் நா மனசார நேசிக்கிறேன்.. ஆனா நீயோ இப்டி கேட்டுட்டியே!!


அவ, அவன் நெஞ்சுல இருக்குற பேர பார்த்து, அதிர்ச்சியாகி, கண்ணுல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வருது.. அத அப்டியே தொட்டு பாக்குறா..


வலிக்குதா ராசு??


இல்ல... அதான் உன் கை பட்டுச்சுல!!


அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..


எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??


**************


இதே மாதிரி இன்னொரு பையன், அவ வகுப்புல படிக்கிற இன்னொரு புள்ளய வெறித்தனமா காதலிச்சான்.. ஆனா அந்த பொண்னு அவன மதிக்கவே இல்ல... ஒரு நாள் அவளுக்காக ஆசயா எழுதுன காதல் கவிதைகள் எல்லாத்தயும் ஒண்ணா எடுத்திட்டு போய் அவகிட்ட போய் நீட்டுனான்.. கடுப்பான அவளோ, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டா.. மனசொடைந்து போயிட்டான் அவன்.. காத்துல பறந்த காகித்த எல்லாம் புடிக்க ஓடும் போது, எதிர்த்தாப்புல வந்த தண்ணீ லாரி அவன அடிச்சி தூக்க, இத பார்த்துட்டு இருந்த அவ மேல அவன் ரத்தம் தெரிக்க, அதிச்சில ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிகிட்டே மயங்கி விழுந்துட்டா... உடனே அங்க இருந்த பொதுமக்கள் எல்லா பொண்ணோட அப்பா-அம்மாவுக்கு விசயத்த தெரிவிச்சிட்டு, அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.. பதறி அடிச்சி, அங்கன வந்த அப்பா-அம்மா நேரா அவ இருக்குற ரூமுக்கு ஓடுனாங்க..

டாக்டர்.. என் பொண்ணுக்கு...


நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்... ஆனா...


அய்யோ டாக்டர்.. இப்டி சொல்லாதீங்க...


கடசியா ஒரு ரூவாய்க்கு வேல வரும்னு நான் நினக்கலைங்க...


அய்யோ டாக்டர்.. நெத்தில ஒட்ட ஒரு ரூபாவா?? இப்டி நடக்கும்னு நான் நினச்சி கூட பாக்கலையே... ஆண்டவா.. ஏன் இப்டி என்ன சோதிச்சிட்ட??


அட.. அது இல்லங்க.. ஒரு ரூபாய்க்கு போயி சர்ஃப் எக்ஸல் வாங்குங்க... ஏனா அந்த கரை இந்த கரை எந்த கரையா இருந்தாலும், சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல??


அப்டியே அவ சுடிதாருல இருக்குற ரத்த கரைக்கு ஒரு ஜூம்..


**************


எங்க ஊருல ஒரு பிக்காளி பையன் ஒருத்தன் இருந்தான்.. ஊதாரி, யாருக்குமே அடங்க மாட்டான்.. ஒரு நாள் எமன் அவன் முன்னால வந்து, டேய், நீ இன்னும் 30 வருஷம் சந்தோசமா இருப்ப, அதுனால எவ்வளவு கூத்தடிக்கணுமோ, அவ்வளவையும் இப்பவே அனுபவிச்சிக்கோ, இந்தா காசு சொல்லி மறங்சிட்டாரு.. இவனும் சந்தோசத்துல, தண்ணி, வண்டின்னு காச செலவழிச்சிட்டே சந்தோசமா இருந்தான்.. ஆனா ராத்திரி வேகமா வந்த அவன் வண்டி ஒரு லாரில மோதி அங்கேயே செத்துட்டான்..

நேரா மேலோகம் போன அவன எமன் வரவேற்றாரு.. அவர பார்த்த உடனே இவனுக்கு செம கோவம்..


யோவ்.. இப்டி பண்ணிட்டீயே.. உன்ன நம்பி தானே சந்தோசமா சுத்துனேன்.. நம்ப வச்சி கழுத்து அறுத்துட்டீயே... போய்யா.. ஆளும் மொகரயும்..


எமன் சொன்னாராம்..


சாரி மச்சி, முதல் காலாண்டு அறிக்கை (First Quarter Report) வெளியிடணும்.. ட்டர்ன்-ஓவர் (TURN-OVER) அதிகமா காட்டணும்.. இல்லன்னா வேலை போயிடும்.. செம ப்ரஷ்ஷர் அதான்... மன்னிச்சிக்கோ...


**************

சரி கண்ணு.. அப்ப நான் கிளம்புறேன்.. இத படிச்சிட்டு கோவத்துல கும்மணும்னா பதில் பிரிவுல கும்முங்க.. புண்ணியமா போகும்..


வருகைக்கு நன்றி!!

11 comments:

Ajay said...

Dei.. epdi da unna la innum usiroda vaazha vaikiraanga?? :o Kaalankaatala inda mokkaya keka thaan msg panni padi da sonneya?? Vennaiya!! O la aarampichi P varaikkum thithuven!! Odi poidu!!

நட்புடன் ஜமால் said...

’காதல்’ கதை தத் ரூபம் ..

நட்புடன் ஜமால் said...

அந்த கரை இந்த கரை எந்த கரையா இருந்தாலும், சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல??


அப்டியே அவ சுடிதாருல இருக்குற ரத்த கரைக்கு ஒரு ஜூம்..\\

இது லொள்ளு தாண்டி வேற என்னமோ

kanagu said...

என்ன கார்த்திக்... வழக்கமான லொள்ளு ரொம்ப ரொம்ப கம்மி :(

Karthik said...

உங்களை நேரில் அடுத்து எப்ப பார்த்தாலும் ________. ;)

என் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. LOL. :))

Karthik said...

உங்க கதையை திருடி சினிமா எடுக்க பாலாஜி சக்திவேல்னு ஒருத்தர் அலையுறாராம்... ;)

pappu said...

அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..


எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??

/////
ரொம்ப சொரியாதய்யா. why blood? same blood.

ரெண்டாவது கதை தான் கொஞ்சம் தொங்கிடுச்சு.

Arc said...

Pirst kada kaadal kaadalnu oru mutta payan edhutha padathulendhu sutta maadri irukku:P:P

Epdi sir, room potti yosipiyaa nee!?

G3 said...

Aniyaaya ravusu da raasa :)))))

Aparnaa said...

Loosa nee?? Mokka Mokka!!

Divyapriya said...

aniyaaya ragalai :D

Blogger templates

Custom Search