Friday, 5 June 2009

தோரணை-- முடில.. ரொம்ப ரோதனை

புலிய பார்த்து பூன சூடு போட்டுகிச்சாம், அந்த பூனய பார்த்து எலி சூடு போட்டுக்கிச்சாம் கணக்கா, ரஜினி மாதிரி விஜய் வர ட்ரை பண்ணி நம்மை வெறியேத்த, இங்கன ஒருத்தரு விஜய் மாதிரி வரேன்னு ட்ரை பண்றாரு.. அவரு பேரு தான் உமக்கு தெரியுமே.. ஆமா விஷால், இப்ப தோரணை மூலமா, நமக்கு பெரும் ரோதனை தந்துருக்காரு... தனக்கு பொருந்தாத பேண்ட் மாட்டுனா, எவ்வளவு லூசா இருக்கும்?? அது மாதிரி விஷால் (லூசா இல்ல) இந்த காரெக்டர்.. சுத்தமா அவருக்கு மாஸ் ஹீரோ ரோல் பொருந்த மாட்டேங்கிது.. ஏதோ சண்டக்கோழி ஹிட் ஆச்சி.. இன்னும் அந்த நினப்பாவே இருக்காரு.. எல்லா படத்துலயும் ஊர விட்டு வரர்த விஷால் எப்ப நிறுத்துவார் தெரில.. மொதல்ல அவருக்கு பஸ், ட்ரெயின் டிக்கெட் கொடுக்கறத நிறுத்துங்கப்பா.. அப்பா, அண்ணன் என்று ஒரு குடும்பமே ஏத்தி விட இருக்கு.. அத காப்பாத்த நல்லா படமா நடிக்கலாம்ல??சின்ன வயசுல காதலி பேர பச்ச குத்தியதால் அம்மா சூடு வைக்க, பக்கி அண்ணன் வீட்ட விட்டு ஓட, அவர தேடி விஷால் வர, கோலிவுட் மிக்ஸியில் அரைக்கப்பட்ட 1456வது மசாலா தான் தோரணை.. அட பசங்களா, அது எப்டிடா அண்ணன் சென்னைக்கு தான் ஓடி வந்து இருப்பான்னு கரெக்டா கண்டுபிடிக்கிறீங்க?? விஷாலோட அண்ணன் யாருன்னு கொஞ்சம் விறுவிறு, ரொம்ப மொக்க ஜோக்குன்னு முதல்பாதி ஓட, வில்லன், ஹீரோ என ஆளாளுக்கு பன்ச் வசனம் பேசி ரெண்டாவது பாதில நம்பள ஓட விடுறாங்க.. ஆரம்பமே போக்கிரி பட எஃப்பெகட்.. படம் பாக்குறவங்க இது மலைக்கோட்டையா, திருப்பாச்சியா, சிவகாசியான்னு குழம்புற நேரத்துல படம் பேரு தோரணைன்னு ஞாபகப்படுத்த, தோரணையா வந்துட்டான், தோரணையா ஜெயிச்சிட்டான்னு பிரகாஷ் ராஜ் பண்ற அலும்பு தாங்க முடில...விஷால் நடிப்பு?? அது அவருக்கு எப்ப போதணையா வரும்?? அவரோட குரு மாதிரி கெட்-அப் சேஞ்ச் பேருல முடி வெட்டிருக்காரு.. திருவிழால காணாம போன குழந்த மாதிரி பேந்த பேந்த முழிக்கிறாரு.. மொக்கத்தனமான வசனங்கள் எல்லாம் (நீ அடிச்சா பணம், நான் அடிச்சா பொணம், ஆனா அக்குனா போட நீ முக்குனா கூட நடக்காது) பன்ச்ன்னு பேசுறாரு... நடனம் வழக்கம் போல, அதே ஸ்டெப், ஸ்டண்ட் பராவயில்ல.. ஆன இந்த எகிறி வந்து நெஞ்சுல குத்துறத எப்ப விடுவாரு தெரில.. அண்ணா.. அடுத்த படத்துல கொஞ்சம் இறங்கி கு..கு..கு..கு.. குறி பார்த்து குத்துங்க..படத்தின் ஆறுதல், வெயிலுக்கான குளிர்ச்சி போல (தியேட்டர்ல ஏசி கொஞ்சம் மைல்ட்டா தான் இருந்திச்சி) ஸ்ரேயா செல்லம்.. வா வா செல்லம்னு கூப்பிடலாம்.. அப்டி அழகா இருக்காங்க.. ஆனா இதே பாட்ட நாம பேபி நீ தேவமிர்தம்னு மலைக்கோட்டைல பார்த்துருக்கோம்ல.. அடங்கொப்புறானே.. பாட்டு கூடவா காப்பி அடிப்பாங்க?? அட.. ஸ்ரேயா கிட்ட என்ன நடிப்பு வேண்டி கிடக்கு.. சார்... ஸ்ரேயா ஸார்.. ஆடுறாங்க சார்.. (அருமையான இடை.. அழகுக்கு அதுதான் பிரம்மனின் விடை)


பிரகாஷ் ராஜ், ஷாயாஜி சிண்டே, புதுப்பேட்டை வில்லன், லால், கிஷோர் என ஒரே வில்லங்களின் கூட்டம்.. ஏன் ஆசிஷ் வித்தியார்த்தி விட்டாங்க தெரில?? பிரகாஷ் ராஜ், இது மாதிரி அவர பல வேசத்துல பார்த்துட்டோம்.. அதுனால இதுல சலிப்பு தான்.. கிஷோர், நீங்களுமா?? பொல்லாதவன், வெண்ணிலா கபடி குழு மாதிரி நடிங்க சார்.. இவங்க கூட சேராதீங்க.. அப்றோம் CAREER போய்டும்.. உஷாரு.. முதல் பாதியில் நம்பள காப்பாத்தும் சந்தானம் இரண்டாம் பாதியில் நம்பள தவிக்க விட்டு போய்விடுகிறார்...


பெலிக்கான் பாட்டுல விஷுவல் சூப்பர்... பயங்கரமா அடி வாங்கி, மூணே நாளுல திரும்பி வருவது, தீபாவளிக்கு சின்ன பசங்க ரோல்-கேப் சுடுற மாதிரி விஷால் வில்லங்களோட அடியாளை போட்டுத்தள்ளுவது, கடைசியா வசனம் பேசி தன்னோட அண்ணன், அடியாட்கள திருத்துவது (ஷொப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபா... நீங்க இன்னும் சத்யம் கொடுத்த அடியில இருந்து திருந்தல போல; தியேட்டர்ல கொஞ்ச பேரு அண்ணே, என்ன மன்னிச்சிடுங்க, தெரியாம வந்துட்டேன், வீட்டுல சொல்லிக்கல, ஆத்தா வையும்னே.. என்ன விட்டுடுங்கணேன்னு கத்த) என பல உச்சக்கட்ட நகைச்சுவை+எரிச்சல்+ரோதணை கலந்த லாஜிக் மீறல்கள்..எல்லாரும் தெலுகு படத்த ரீ-மேக் பண்ணா, இவரு பழய தமிழ் படத்த ரீ-மேக், அதுவும் இவர் நடிச்ச படத்தயே.. விஷால் சார்.. ஒண்ணு வேற ட்ரை பண்ணுங்க.. இல்ல நடிக்கறத நிறுத்துங்க.. 70 ரூபா தண்டமா போச்சேன்னு எங்க அப்பா என்ன அசிங்கமா திட்டுறாரு.. நல்ல வேள.. இந்த படம் பார்த்த கடுப்புல, தியேட்டர்ல ஸ்நாக்ஸ் எதுவும் சாப்டல.. இப்பல்லா ரசிகர்கள் உஷாரா ஆக்‌ஷன் படமா இருந்தாலும் லாஜிக் பாக்குறாங்க.. அதுனால மாத்தி யோசிங்க..


34 பூச்செண்டு தரலாம் (எல்லாமே ஸ்ரேயாக்கு தான்)


தோரணை- 50% ரோதனை, 50%சோதனை, 100% வேதனைவருகைக்கு நன்றி!!!!

18 comments:

Ajay said...

Vishal padatha vida review sema mass da... :)

VEDI VEDI VEDI SARAVEDI review

தாரணி பிரியா said...

இது போலவே அட்டகாசமா விமர்சனம் பண்ணணும் அதுக்காகவே நீ நிறைய மொக்கை படம் பார்க்கணும் கார்த்திக். அதுக்கு என் வாழ்த்துக்கள்

kanagu said...

kalakkal review Karthik... sema comedy ah irundhudu... ajay sonna maari padatha vida ithu than mass :)

LOL @ tharani akka's comment :)

ithukkaaga than naan vishal padatha ellam review paathutu poren :) nee yen eppavume thiruntha maatra????

நட்புடன் ஜமால் said...

சூப்பரு விமர்சணம்

அவசியம் ‘சர்வம்’ படம் பார்த்துட்டு எழுதுறீங்க - காத்திருப்பேன் கார்த்திக்.

Karthik said...

பின்றீங்க கார்த்திக். விஷால் புண்ணியத்துல ஒரு காமெடி போஸ்ட் படிக்க முடிஞ்சதே! படம் பார்த்து ஹாஸ்பிட்டலுக்கு போகாம உட்காந்து தபால் எழுதும் உங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி!!!

Karthik said...

//சார்... ஸ்ரேயா ஸார்.. ஆடுறாங்க சார்..

அடடா!! :)

கார்த்திகைப் பாண்டியன் said...

அசத்தலான, நக்கல் கலந்த விமர்சனம்.. தூள்

R-ambam said...

oh antha villain paeir Kishore aa? my favourite !
vishal oda anni Shriya Reddy ( SS music VJ , Thimuru padathula Villi ) avanga than intha padathu producer .. vittuteengale ?

R-ambam said...

puli ya paathu poonai ...
gud comparison ! review nallarukku...irunthalum un review la lollu 60 % jollu 40% :p

Divyapriya said...

//அருமையான இடை.. அழகுக்கு அதுதான் பிரம்மனின் விடை//

aahaaa...mudiyala. idhu sondha dialogue aa?

kadaisi one line comment sema kalakkal...mokkai padatha ivlo nallaa vimarsanam panradhukkaagave paakkalaam :)

G3 said...

//50% ரோதனை, 50%சோதனை, 100% வேதனை//


:))))))))))))))))))))))))))))))))))

rombavae nondhirukka pola :P

Karthick Krishna CS said...

hope this film will be telecasted, along with other vijay and vishal films, in sirippoli or aaditya channel...

kanagu said...

கார்த்திக்... உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் :)

Narayanan said...

nalla velai naan pizhaithu konden.

Poornima Saravana kumar said...

:))

Srivats said...

Attagasamana vimarsanam, evlo naal epdi vitu pochunnu therla unga blog pakka, office ellam link anippu romba enjoy panranga. Local chatla unga jokes dhaan varudhu hehe

Devaki said...

arumaiyana vimarsnam.... attakasamana thoranai...

SADHAMHUSSAIN said...

vimarsanam padithadhulirundhu ennul adakka mudiyaadha sirippu :D :D

Blogger templates

Custom Search