Sunday, 14 June 2009

நல்லா கேக்குறாங்கயா கேள்விய-2

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?


எங்க வீட்டுல எல்லாருக்கும் முருகர் பேரு தான் வைப்பாங்க... அதுவும் எங்க அம்மா, நான் பிறப்பதற்கு முன் மௌனராகம் பார்த்தாங்களாம்.. அதுல கார்த்திக்கின் நடிப்பு பிடித்ததால், கார்த்திகேயன் என்று வச்சிட்டாங்க...2. கடைசியாக அழுதது எப்பொழுது?


கண்ணீர் விட்டு அழமாட்டேன்.. மனசுக்குள்ளே ஃபீல் பண்ணுவேன்.. ஹாரி பாட்டர் கடைசி பாகம் படிக்கும் போது DOBBY மறைவுக்கு மனசுக்குள்ளே அழுதேன்.. சந்தோசத்தில் தற்போது ஃபெடரர் பிரெஞ்சு ஓப்பன் ஜெயித்த போது அழுதேன்
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?


எனக்கு மட்டும் தான் பிடிக்கும்.. சின்ன வயசுல முத்து முத்தா அழகா எழுதி பரிசு வாங்கிருக்கேன்.. தமிழ் கையெழுத்து, ஆங்கிலத்தை விட அழகா இருக்கும்.. கல்லூரி வந்த பிறகு. எழுதுவது குறைந்து விட்டதால், கையெழுத்தும் மாறி போச்சு
4. பிடித்த மதிய உணவு என்ன?


ஸ்கூலு, கல்லூரில மதியானம் சாப்டதே இல்லை.. INTERVALல எல்லாருடைய லன்ச்சையும் அபேஸ், சுவாகா செய்து விடுவேன். அதுனால மதியம் என் லன்ச்சை, பழிக்குப்பழியா என்கிட்ட இருந்து சாப்பிடுவாங்க.. விடுமுறை நாட்கள்ல வீட்டுல இருந்தா மாங்காய் சாம்பார், கருணைகிழங்கு, வாழக்காய் தான்..


காலேஜ் கேண்டீன்ல மீல்ஸ் மட்டும் தான் சுமாரா இருக்கும்.. மற்றதெல்லாம் வாயில கூட வைக்க முடியாது...5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?


கண்டிப்பாக... ஆனா நெருக்கமாக கொஞ்ச காலமாகும்6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?


குளிக்கவே பிடிக்காது.. ஹிஹி.. சும்மா தமாசு... எங்க ஊருல அருவியும் இல்ல, குருவியும் இல்ல.. லவ்வர்ஸ் கஜாகஜா பண்ணுவாங்கன்னு பீச்சுக்கும் போக மாட்டேன். லைஃப்பாய் சோப்பு போட்டு குளிக்க பிடிக்கும்.7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?


பர்ஸு, பாக்கெட்ல பணம் இருக்கான்னு... அதை தவிர்த்து அவங்க கண்ணு, முகம்.. பெண்கள்னா அவங்க உடை, பேசும் தோரணை..
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?பிடிச்சது: என்னை சுத்தி எப்பவுமே பெண்கள் இருப்பாங்க.. அதுக்குன்னு நீ லேடீஸ் பஸ் கண்டக்டரான்னு கேக்க கூடாது... அழகான ஆண்கள் இருக்குற இடத்துல, பல ஆயிரம் இளம்பெண்கள் தேடி வரத்தான் செய்வாங்க...

பிடிக்காதது: ரொம்ப பொய் சொல்றது9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?


எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்கோ. அப்டியே ஆனாலும் என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களேன்னு சந்தோசப்படுவேனே தவிர குறை கண்டுபிடிக்க மாட்டேன்...10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?


காதலிக்க, ஊர் சுத்த ஒரு பொண்ணு இல்லையேன்னு11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?


ஒரே வெக்கை.. அதுனால கருப்பு SHORTS மட்டும்.. மேலங்கி இல்லை12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?


மாலை நேரம்- ஆயிரத்தில் ஒருவன்... இன்னைக்கு தான் இழுத்துவை செய்தேன்.. அதுக்குள்ளே 10 முறை கேட்டுட்டேன்... அடுத்து நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?


சிகப்பு... என் தேர்வுத்தாள்ல எத்தனை சூழியங்கள்.. மவனே உலகம் பூரா மத்தவங்க பேப்பர்லயும் நான் பார்க்கணும்...
14. பிடித்த மணம்?


கோமணம்... மல்லிப்பூவின் வாசம்15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


கார்த்திகை பாண்டியன்: காரணம் – காலேஜ் முடிஞ்சிடிச்சி, வாத்தியாருங்கள வம்பிழுக்காம தூக்கமே இல்ல... அதான்


லொல்லு சபா: காரணம் – நம்ப ப்ளாக் பக்கம் வர வைக்க தான்காயத்ரி: காரணம்- தங்கைக்கோர் கீதம்16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?


வானவில் கார்த்திக்கின் பதிவில் பிடித்தது, தனிமையின் விலை

கனகு அண்ணாவின் பதிவில் பிடித்தது வயநாடு வதிவு17. பிடித்த விளையாட்டு?


தோஸ்துங்களோட காதல் வாழ்க்கையில் விளையாடுவது..

கால்பந்து-இங்கிலாந்துக்காக

டென்னிஸ்- ஃபெடரர், இவனோவிக், மற்றும் அழகிய மங்கையர்.. நாளுக்கு நாள் புதுசா வராங்க.. அதான் எல்லாரு பேரையும் சொல்ல முடில

கிரிக்கெட்- நண்பர் யாராவது மெசேஞ் பண்ணி, ஸ்கோர் கேட்டா18. கண்ணாடி அணிபவரா?


இதுவரை இல்ல.. காரட் நல்லா சாப்பிடுவேன்.. இது மாதிரி டேக் எழுதுனா கண்டிப்பா போட்டு தான் ஆகணும் போல
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?


எல்லா படமும் பார்ப்பேன்.. FANTASY, ROMANTIC COMEDY, ANIMATION என்றால் முன்னுரிமை
20. கடைசியாகப் பார்த்த படம்?


தோரணை தான்... அந்த ரோதணைய படிக்க இங்க சொடுக்குங்க

ஆங்கிலத்தில் DEFINITELY, MAY BE... 5வது முறை
21. பிடித்த பருவ காலம் எது?


குளிரும், மழையும்... அப்டியே கொஞ்சம் பனிமழை பெய்தால் நல்லா இருக்கும்...22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?


ஜாவா- நாங்களும் இஞ்சினியர் தான்லே..

காலைல ஆனந்த விகடன்.. சே.. அட்டைப்படத்துல நயந்தாரா-பிரபுதேவா கிராபிக்ஸ் போட்டோவால ஏமாத்திட்டாங்க..

ஆங்கில நாவல்ல ஹாரிபாட்டர் ஆறாவது பாகம்.. HALF BLOOD PRINCE (அரை ரத்த இளவரசன்)23. உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


விண்டோஸ் எக்ஸ்.பி இயற்கை போட்டோ (BLISS) தான் இன்னும் இருக்கு... முன்னெல்லாம் ஜெனியிலா போட்டோ போடுவேன்..24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?


வயலின் இசை பிடிக்கும்

வாகனங்களின் இரைச்சல் பிடிக்காது25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?


மூணாறு, பெங்களுரு26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?


என்ன பத்தி நானே பெருமையா சொல்லிக்க கூடாது... இப்டிதான் பாருங்க அன்னிக்கு ரோட்டுல அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சலை பாட்டு பாடிட்டே போனேன்... இரண்டு வருசம் கழிச்சு அத பாட்டா எடுத்துட்டாங்க.. பொல்லாத உலகமடா இது27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?


இது மாதிரி கேள்வி கேட்டு அதுக்கு பதில் சொல்ல சொல்வது28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


மை டியர் குட்டிச்சாத்தான்... இங்க பாருங்க, உனக்குள்ளே முழிச்சிட்டு இருக்குற சாத்தான் தான் எனக்குள்ள ஏசி போட்டு தூங்கிட்டு இருக்கு.. அதை தேவையில்லாம அலாரம், ரிமைண்டர் வச்சி எழுப்பாதீங்க29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?


சுற்றுலா சென்றதில்லை... ஸ்கூல்ல கூட்டிட்டு போனாலும் பாக்கவிட மாட்டாங்க.. அவன் கைய பிடிச்சிக்கோ, ஒரே வரிசைல போ சொல்வாங்க... அத முடிச்சிட்டு, நீ கண்டு மகிழ்ந்த சுற்றுலா பற்றி ஒரு கட்டுரை எழுத சொல்வாங்க.. வெறியா இருக்காது?? எனக்கு சுவிஸ், லண்டன் போகணும் ஆசை30. எப்படி இருக்கணும்னு ஆசை?


இதே மாதிரி இருக்கணும் தான்31. கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம்?


என் மனைவி கிட்ட கேளுங்க...
32. வாழ்க்கை பற்றி ஒரு வரி சொல்லுங்க?


சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்
வருகைக்கு நன்றி!!!

21 comments:

G3 said...

//பிடிச்சது: என்னை சுத்தி எப்பவுமே பெண்கள் இருப்பாங்க.. அதுக்குன்னு நீ லேடீஸ் பஸ் கண்டக்டரான்னு கேக்க கூடாது... அழகான ஆண்கள் இருக்குற இடத்துல, பல ஆயிரம் இளம்பெண்கள் தேடி வரத்தான் செய்வாங்க...

பிடிக்காதது: ரொம்ப பொய் சொல்றது//

ROTFL :)))) Mudiyala da raasa.. Eppadi ippadi ellam :P

G3 said...

//அப்டியே ஆனாலும் என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களேன்னு சந்தோசப்படுவேனே தவிர குறை கண்டுபிடிக்க மாட்டேன்...//

Avvvvvvvvvvvv.. en thanmbi imbuttu modest aana persona.. ithana naal idhu theriyaama pochae enakku :)))

G3 said...

//காதலிக்க, ஊர் சுத்த ஒரு பொண்ணு இல்லையேன்னு//

Aduthavan sogatha paathu sirikkakoodadhu dhan... aanalum ennala control panna mudila.. mannichikko :)))

G3 said...

//என் தேர்வுத்தாள்ல எத்தனை சூழியங்கள்.. மவனே உலகம் பூரா மத்தவங்க பேப்பர்லயும் நான் பார்க்கணும்...//

enna oru terrorrism.. avvvvvvvv

G3 said...

//வயநாடு வதிவு //

thambi kanaguvin pathivai ippadi ulkuthu vaithu kalaaithadhai kanna pinnavena kandikkiren !!!

G3 said...

//தோஸ்துங்களோட காதல் வாழ்க்கையில் விளையாடுவது.. //

avana neeyi????

G3 said...

//HALF BLOOD PRINCE (அரை ரத்த இளவரசன்)//

LOL :))) Adhuvum thamizhla translate panni poda aarambichitaaingala !!!

G3 said...

//28. எனக்குள்ள ஏசி போட்டு தூங்கிட்டு இருக்கு..//

//11. ஒரே வெக்கை.. //

Ulla AC odaradhaala dhaan velila vekkaiya irukko :P

G3 said...

//32. வாழ்க்கை பற்றி ஒரு வரி சொல்லுங்க?


சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்

//

ROTFL :))) Chance-ae illada raasa :)) Pinni pedaleduthutta po :D

நட்புடன் ஜமால் said...

காலேஜ் கேண்டீன்ல மீல்ஸ் மட்டும் தான் சுமாரா இருக்கும்.. மற்றதெல்லாம் வாயில கூட வைக்க முடியாது... \\


லொள்ளோ லொள்ளு

நட்புடன் ஜமால் said...

பிடிக்காதது: ரொம்ப பொய் சொல்றது

\\

எங்களுக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்சது இப்படி நீ உண்மைய சொல்றது

kanagu said...

/*சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்*/

LOL :)

/*இது மாதிரி கேள்வி கேட்டு அதுக்கு பதில் சொல்ல சொல்வது*/

LOL :)

/*DEFINITELY, MAY BE... 5வது முறை
*/

அவ்ளோ நல்லா இருக்கா... இல்ல அந்த படத்துல ஹீரோயின்
சூப்பரா.????

/*பிடிச்சது: என்னை சுத்தி எப்பவுமே பெண்கள் இருப்பாங்க.. அதுக்குன்னு நீ லேடீஸ் பஸ் கண்டக்டரான்னு கேக்க கூடாது... அழகான ஆண்கள் இருக்குற இடத்துல, பல ஆயிரம் இளம்பெண்கள் தேடி வரத்தான் செய்வாங்க...
பிடிக்காதது: ரொம்ப பொய் சொல்றது
*/

சான்சே இல்ல.. செம பதில் :)

kanagu said...

/* நட்புடன் ஜமால் said...
பிடிக்காதது: ரொம்ப பொய் சொல்றது

\\

எங்களுக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்சது இப்படி நீ உண்மைய சொல்றது*/

LOL :)

kanagu said...

/*G3 said...
//வயநாடு வதிவு //

thambi kanaguvin pathivai ippadi ulkuthu vaithu kalaaithadhai kanna pinnavena kandikkiren !!!*/

அவ்ளோ மொக்கையா இருந்துதா :((((
இனிமேலாவது நல்லா எதாவது எழுதுறேன் :|

Karthik said...

//கார்த்திகேயன் என்று வச்சிட்டாங்க...

நீங்க மாம்பழத்துக்கு சண்டை போடுவீங்களா??? :))

//அருவியும் இல்ல, குருவியும் இல்ல

இல்லைங்க. குருவினு ஒரு மொக்கை படம் வந்ததே! ஓ, அதான் வந்த வேகத்திலேயே போயிருச்சில்ல? :P

Karthik said...

//வானவில் கார்த்திக்கின் பதிவில் பிடித்தது, தனிமையின் விலை

தேங்க்ஸ்! :)

//இவனோவிக், மற்றும் அழகிய மங்கையர்.. நாளுக்கு நாள் புதுசா வராங்க..

Same pinch! :)

//FANTASY, ROMANTIC COMEDY, ANIMATION என்றால் முன்னுரிமை

இது எல்லாம் கலந்த டாக்டர் விஜய் படங்கள்.. :))

//சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்

இது எனக்கு புரியலை.. அது என்ன சீரியல்?

ARC said...

"ழகான ஆண்கள் இருக்குற இடத்துல, பல ஆயிரம் இளம்பெண்கள் தேடி வரத்தான் செய்வாங்க..."

Idhu romba romba romba ooveraaaa illa? Kadavulae. Natta kapathu pa.

Divyapriya said...

ஆரம்பத்துல சாதாரணமா தான் இருந்துச்சு...நக்கலு, லொள்ளு இதெல்லாம் காணோமேன்னு நினைச்சேன், கடைசி ஆக ஆக, ரெளண்டு கட்டி பதில் போட்ருக்கீங்க? (ஒத்துக்கவே முடியாத விஷயம் தான் கலக்கல் :))

ஹப்பாடி, பெருசா அடிச்சிட்டேன்ப்பா :))

Divyapriya said...

//அப்டியே ஆனாலும் என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களேன்னு சந்தோசப்படுவேனே தவிர குறை கண்டுபிடிக்க மாட்டேன்...//

தம்பி! நீ ரொம்ப நல்லவன்ப்பா :)

gils said...

//வாழ்க்கை பற்றி ஒரு வரி சொல்லுங்க?


சன் டீ.வி.யில் பல வருடங்களுக்கு முன்பு பட்டைய கிளப்பிய சீரியல்//

avvvvvvvvvvvvv...enna thathuvam enna tahthuvam...mudialaa

Saranya said...

Superb Karthik. I think all the tags should be done in this way...had a good laugh :) I always love ur posts!

Blogger templates

Custom Search