Saturday, 27 June 2009

சங்கறுக்கும் சங்கங்கள்: பகுதி-2

1. க்ரீம் பிஸ்கட்ல க்ரீம் இருக்கும்

நாய் பிஸ்கட்ல நாய் இருக்குமா??


டைகர் பிஸ்கட்ல இருக்குற க்ரீமை விடாமல் நக்குவோர் சங்கம்2. ஐயர்ன்-பாக்ஸ்ல ஐயர்ன் பண்ண முடியும்

பென்சில்-பாக்ஸ்ல பென்சில் பண்ண முடியுமா??


எக்ஸாமுக்கு பக்கத்து பொண்ணுகிட்ட பென்சிலை ஆட்டய போடுவோர் சங்கம்


3. சிற்பி உளியால கல்ல உடைச்சா அது சிலை

நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை


மகாபலிபுரத்தில் சிலை பார்த்து பலி கொடுக்க யோசிப்போர் சங்கம்


4. அடையாரு ஆனந்த பவனோட ப்ராஞ்ச் பல இடத்துல இருக்கும்

ஆனா அடையாரு ஆலமரத்தோட ப்ராஞ்ச் அடையாருல மட்டும் தான் இருக்கும்


பல நாட்களாக ஜி3 அக்காவிடம் அடையாரு ஆனந்த பவனில் சமோசா கேட்டு போராடுவோர் சங்கம்


5. கோல்ட்-செயின் அடகு வச்சு சைக்கிள் வாங்கலாம்

ஆனா சைக்கிள்-செயின் அடகு வச்சு கோல்ட் வாங்க முடியுமா??


சைக்கிள் செயினை கழுத்தில் மாட்டி ஃபிலிம் காட்டுவோர் சங்கம்


6. இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.

ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?


இஞ்ஜினியரிங் முடிக்க முடியாம பிதற்றுவோர் சங்கம்7. பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.

ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.

ஆனா கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?


கொசு கடியையும் பாராமல் மொக்க போடுவோர் சங்கம்8. பயம் என்பது என்ன?

தேர்வுக்கு சில மணி நேரங்களே இருக்கும்போது புத்தகத்த பிரித்து பார்த்தால், கசங்காத பக்கங்கள பார்த்து லைட்டா கலங்கும் மனசு, அப்ப அடி வயித்துல ஒரு பந்து உருவாகி, பாத்துக்கலாம் மச்சானு மனச தேத்தி, தேர்வு அறைக்கு போய், கேள்வித்தாள பார்த்தா, ஒண்ணுத்துக்கும் பதில் தெரியாம, அந்த பந்து சுருண்டு மேலெழும்பி வருமே அதான் பயம்...


தேர்வறையில் பதில் தெரியாம, இன்விஜிலேட்டர சைட் அடிப்போர் சங்கம்9. என் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிருமே என்று தான் ஐஸ்க்ரிம் சாப்பிடவே தயங்குகிறேன்


ஐஸ்க்ரிம் வாங்க காசில்லாமல், ஐஸ் வைப்போர் சங்கம்10. ரொம்ப நாள் உயிர் வாழ என்ன செய்யணும் தெரியுமா??

சாகாம இருக்கணும்...


மொக்கயில் பிறரை சாகடிக்க துடிபோர் சங்கம்11. பழய காரு, செல்போனு, டி.வி கொடுத்து எக்ஸேஞ்ச் ஆஃபரில் புதுசா மாத்திடலாம்...

ஆனா பழய காலண்டர கொடுத்து எக்ஸேஞ்ச் ஆஃபருல புதுசா காலண்டர் வாங்க முடியுமா?


ஓ.சியில் காலண்டர் கிடைக்காமல் புலம்புவோர் சங்கம்...12. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!


பெண்கள் பைக் ஓட்டுவதை பார்த்து வயிறு எரியும் சைக்கிளே துணை சங்கம்

வருகைக்கு நன்றி!!


Monday, 22 June 2009

முணுமுணுக்க வைக்கும் மூணு கதைகள்

வணக்கம் கண்ணு... நான் தான் உங்க நாட்டாம வந்துருக்கேன்.. ரொம்ப மாசமா ஆளே காணும்னு நீங்க வருத்தப்பட்டீங்க போல?? அதான், இப்ப ஐ ஆம் பேக்.. இப்ப உங்களுக்கு ஒரு கதையா சொல்லாம, 3 கதைகள் சொல்லப்போறேன்!!


மொத ஒரு நெஞ்சை வருடும் காதல் கதை


எங்க ஊருல ஒரு மெக்கானிக் பையனும், வொயின் ஷாப் ஓணர் பொண்ணும் லவ் பண்ணாங்க.. பொண்ணு ரொம்ப பெரிய இடம்.. காதலுக்கு தான் கண்ணுயில்லையாமே... அதுனால அந்தஸ்துலா பாக்காம ரெண்டு பேரும் பழகுனாங்க.. ஆனா எப்பவுமே சந்துல சிந்து பாடுறதுக்கு ரெண்டு பக்கமும் நண்பர்கள்னு பேருல வில்லங்க இருப்பாங்க.. பொறாம புடுங்கி தின்னுற பயலுங்க இவங்கல்லா.. இந்த புள்ளயோட ஃப்ரெண்ஸ்ங்க, இவன பத்தி, இல்லாத்தும், பொல்லாததும் சொல்லி கலகமூட்டிட்டாங்க..


ராசு நீ என்ன நெசமா தான் காதலிக்குறியா??


என்ன புள்ள, தீடீர்ன்னு இப்டி கேட்டுப்புட்ட.. நான் உன்ன எம்புட்டு விரும்புறேன் தெரியுமா??


இல்ல, என்கூட படிக்கிற புள்ளைங்க சொல்லிச்சு, பசங்கலா ஆரம்பத்துல இப்டி தான் இருப்பாங்க.. அப்றோம் காரியம் முடிஞ்ச உடனே, கை கழுவிட்டு போயிடுவாங்க


என்ன புள்ள, சந்தேகப்படுறியா?? அம்புட்டு தானா நீ என்ன நம்புறது?? இங்க பாரு புள்ள, நீ எப்பவுமே என் நெஞ்சுல இருக்கணும்னு உன் பேர பச்ச குத்திருக்கேன்.. என் ஆத்தா, அப்பன் அடுத்து உன்ன தான் நா மனசார நேசிக்கிறேன்.. ஆனா நீயோ இப்டி கேட்டுட்டியே!!


அவ, அவன் நெஞ்சுல இருக்குற பேர பார்த்து, அதிர்ச்சியாகி, கண்ணுல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வருது.. அத அப்டியே தொட்டு பாக்குறா..


வலிக்குதா ராசு??


இல்ல... அதான் உன் கை பட்டுச்சுல!!


அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..


எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??


**************


இதே மாதிரி இன்னொரு பையன், அவ வகுப்புல படிக்கிற இன்னொரு புள்ளய வெறித்தனமா காதலிச்சான்.. ஆனா அந்த பொண்னு அவன மதிக்கவே இல்ல... ஒரு நாள் அவளுக்காக ஆசயா எழுதுன காதல் கவிதைகள் எல்லாத்தயும் ஒண்ணா எடுத்திட்டு போய் அவகிட்ட போய் நீட்டுனான்.. கடுப்பான அவளோ, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டா.. மனசொடைந்து போயிட்டான் அவன்.. காத்துல பறந்த காகித்த எல்லாம் புடிக்க ஓடும் போது, எதிர்த்தாப்புல வந்த தண்ணீ லாரி அவன அடிச்சி தூக்க, இத பார்த்துட்டு இருந்த அவ மேல அவன் ரத்தம் தெரிக்க, அதிச்சில ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிகிட்டே மயங்கி விழுந்துட்டா... உடனே அங்க இருந்த பொதுமக்கள் எல்லா பொண்ணோட அப்பா-அம்மாவுக்கு விசயத்த தெரிவிச்சிட்டு, அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.. பதறி அடிச்சி, அங்கன வந்த அப்பா-அம்மா நேரா அவ இருக்குற ரூமுக்கு ஓடுனாங்க..

டாக்டர்.. என் பொண்ணுக்கு...


நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்... ஆனா...


அய்யோ டாக்டர்.. இப்டி சொல்லாதீங்க...


கடசியா ஒரு ரூவாய்க்கு வேல வரும்னு நான் நினக்கலைங்க...


அய்யோ டாக்டர்.. நெத்தில ஒட்ட ஒரு ரூபாவா?? இப்டி நடக்கும்னு நான் நினச்சி கூட பாக்கலையே... ஆண்டவா.. ஏன் இப்டி என்ன சோதிச்சிட்ட??


அட.. அது இல்லங்க.. ஒரு ரூபாய்க்கு போயி சர்ஃப் எக்ஸல் வாங்குங்க... ஏனா அந்த கரை இந்த கரை எந்த கரையா இருந்தாலும், சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல??


அப்டியே அவ சுடிதாருல இருக்குற ரத்த கரைக்கு ஒரு ஜூம்..


**************


எங்க ஊருல ஒரு பிக்காளி பையன் ஒருத்தன் இருந்தான்.. ஊதாரி, யாருக்குமே அடங்க மாட்டான்.. ஒரு நாள் எமன் அவன் முன்னால வந்து, டேய், நீ இன்னும் 30 வருஷம் சந்தோசமா இருப்ப, அதுனால எவ்வளவு கூத்தடிக்கணுமோ, அவ்வளவையும் இப்பவே அனுபவிச்சிக்கோ, இந்தா காசு சொல்லி மறங்சிட்டாரு.. இவனும் சந்தோசத்துல, தண்ணி, வண்டின்னு காச செலவழிச்சிட்டே சந்தோசமா இருந்தான்.. ஆனா ராத்திரி வேகமா வந்த அவன் வண்டி ஒரு லாரில மோதி அங்கேயே செத்துட்டான்..

நேரா மேலோகம் போன அவன எமன் வரவேற்றாரு.. அவர பார்த்த உடனே இவனுக்கு செம கோவம்..


யோவ்.. இப்டி பண்ணிட்டீயே.. உன்ன நம்பி தானே சந்தோசமா சுத்துனேன்.. நம்ப வச்சி கழுத்து அறுத்துட்டீயே... போய்யா.. ஆளும் மொகரயும்..


எமன் சொன்னாராம்..


சாரி மச்சி, முதல் காலாண்டு அறிக்கை (First Quarter Report) வெளியிடணும்.. ட்டர்ன்-ஓவர் (TURN-OVER) அதிகமா காட்டணும்.. இல்லன்னா வேலை போயிடும்.. செம ப்ரஷ்ஷர் அதான்... மன்னிச்சிக்கோ...


**************

சரி கண்ணு.. அப்ப நான் கிளம்புறேன்.. இத படிச்சிட்டு கோவத்துல கும்மணும்னா பதில் பிரிவுல கும்முங்க.. புண்ணியமா போகும்..


வருகைக்கு நன்றி!!

Blogger templates

Custom Search