Thursday, 21 May 2009

கம்மாவால் (,) பறிபோன காதல்: பகுதி-2

பகுதி ஒண்ணு படிக்க சொடுக்குங்க இங்க...


கடலை வீட்டில் மெசேஜ் மாமா, டான் உள்ளேன் அய்யா...


கடலை: சரி.. இப்ப என்ன அனுப்ப??


டான்: மொபைல என்கிட்ட கொடு... (டைப் அடிக்க, மத்தவங்க அதை படிக்க) ஹே.. அன்னைக்கு சிம்போசியம்க்கு(SYMPOSIUM) வந்த கீதாவோட ஃப்ரெண்ட் அனிதாவோட பாய் ஃப்ரெண்ட் சுரேஷோட ரூம்மேட் கிருஷ்ணாவோட தங்கச்சி திவ்யாவோட சீனியர் ராஜேஷோட பக்கத்து வீட்டுல இருக்குற ஆனந்தோட லவ்வர் அர்ச்சனாவோட கசின் (Cousin) வெங்கட்டோட க்ளாஸ்மேட் பிரித்தி தானே நீ??


கடலை: டேய்.. செம கடியா இருக்குடா.. அசிங்கமா திட்ட போறா.. இல்லன்னா லூசுன்னு நினைக்க போறாடா..


டான்: கவலைய விடுடா.. நீ ரிப்ளைய மட்டும் பாரு..


10 நிமிடங்கள் வேகமாக கரைய, எல்லாரும் மொபைலை வெறித்து பார்க்கின்றனர்..


கடலை: என்னடா.. ரிப்ளை வரல?? நான் தான் சொன்னேன்ல.. அவ கடியாயிருப்பா.. போடா.. உன்ன போய் கேட்டேனே....


மெசேஜ் மாமா: டேய்.. அவ உன்ன மாதிரி வேல இல்லாதவளா?? பொண்ணுங்கலா ப்ளட்-டெஸ்ட்(BLOOD TEST) வச்சாலே படிச்சிட்டு போவாங்க.. அதிலும் இவ இ.சி.இ (ECE) பொண்ணு.. கேக்கவா வேணும்?? பொறுமை கடலினும் பெரிது.. வெயிட் பண்ணுடா..


5 நிமிசம் கழித்து, மொபைல் அலற, 1 மெசேஜ் ரிசிவ்ட் (RECEIVED)


கடலை: டேய்.. அவதான்டா..


மெசேஜ் மாமா: படி படி..


கடலை: LOL… LMAO… =) WHO IS THIS?? என்னடா அவ டெலுகு பொண்ணு.. அதுனால டெலுகுல திட்றாளோ?? கூட இக்குவல் சைன் வேற போட்டுருக்கா??


டான்: வெண்ண... LOLனா LAUGHING OUT LOUD… LMAOனா LAUGHING MY ASS OFF... அந்த சிம்பல் வந்து ஸ்மைலி (SMILEY) மச்சி... எப்பவுமே ஸ்மைலி போடுற பொண்ணுங்களே ரேன்ஞ் (RANGE)தான்... நான் சொன்னேன்ல பொண்ணுங்கள எப்பவுமே மொக்கை எனப்படும் நகைச்சுவை உணர்ச்சி மூலமா இம்ப்ரெஸ் பண்ணலாம்டா..


மெசேஜ் மாமா: சீன் மச்சி நீ.. அடுத்து எப்படி CONTINUE பண்ண?? பேர சொல்லலாமா??


டான்: நோ நோ.. சி.எஸ்.இ (CSE) பொண்ணுங்களுக்கு ஒரு மொக்கயோட நிறுத்தணும்.. இ.சி.இ(ECE) பொண்ணுங்களுக்கு 3,4 போட்டா தான் சும்மா நங்குரம் மாதிரி நச்சுனு நிக்கும்.. இப்ப பாரு..


I’m KHAN…

ஒரு நிமிடத்தில் இன்னொரு மெசேஜ்...

WHICH KHAN??


கடலை: என்னடா சொல்லலாம்??

டான்: இக்கட சூடு... SHARUKH KHAN DI…..


ஒரு நிமிட்த்தில் ரிப்ளை..


WOATA DIE? AVVALAVVU THAAN UNAKKU… DIE POTTA NAAYEE, SAAVADICHIDUVEEN….


மெசேஜ் மாமா: ஓத்* டேய்.. அவ்வளவு தான் உனக்கு.. டேய் பொட்ட நாயே, சாவடிச்சிடுவேன்..


அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி.. கடல முகத்தில் 1000 வாட்ஸ் மின்சார ஷாக்.. மெசேஜ் மாமா காதை பொத்திக்கொள்ள, டானுக்கு சிரிக்கவா, அழவா தெரில..


அவர்களுக்குள் நிசப்தம்.. மீண்டும் மெசேஜ் வர, ஆனால் அவர்கள் அதை படிக்கவில்லை... 5 நிமிசம் கழித்து..


டான்: மச்சி.. சாரிடா.. ப்ளான் BACK FIRE ஆயிடிச்சி..

மெசேஜ் மாமா: அதாவது டெக்னிக்கலா DEFAULTEXECUTE ஆகுற SWITCH CASE மாதிரி...


கடலை: போங்கடா *^%#*(^%$%$**^... டெக்னிக்கல், வெங்காயம்னு.. நானே எதாவது அனுப்பி கரெக்ட் பண்ணிருப்பேன்.. உங்க கிட்ட ஐடியா கேட்டு, இ.சி.இ பொண்ண மொக்க போட்டு கரெக்ட் பண்ணனும்னு தியரி பேசி, இப்டி அசிங்கப்பட வச்சிட்டியே..


டான்: மச்சி.. எங்களுக்கு என்னடா தெரியும்.. நீ அடையாறு ஃபிகருன்னு சொன்ன.. டீசன்டா இருப்பான்னு நினச்சேன்.. ஆனா வாய திறந்தா நம்பள விட அசிங்கமா பேசுவா போல.. மாடர்ன் டிரெஸ்சை பார்த்து மயங்க வேணாம்னா கேக்குறியா..


மெசேஜ் மாமா: ஆமாம் மச்சி.. நான் கூட ஏதோ இடியட், லூசு, போடான்னு அசிங்கமா திட்டுவா பார்த்தா, அதுக்குன்னு இவ்வளவு லோக்கலா?? இவ உனக்கு வேணாம்டா.. நல்ல வேள.. இவள பத்தி இப்பவே தெரிஞ்சது.. கல்யாணத்துக்கு அப்றோம் இப்டி திட்டுனா, பாவம் உன்னால தாங்க முடியுமா??


மீண்டும் நிசப்தம்...


டான்: மச்சி.. விடுடா.. இதை நான் வெளிய சொல்ல மாட்டேன்... உனக்கு வேற மெசேஜ் வந்துருக்கு... என்னன்னு பாரு.. யாராவது எக்‌ஷாம்க்கு IMPORTANT QUESTIONS அனுப்பி இருக்க போறாங்க..


அவன் மொபைல் வாங்கி பார்க்க, அதிர்ச்சியில் அதை திருப்பி கீழே போட்டான்..


மெசேஜ் மாமா: என்னடா??

கடலை: அவ மெசேஜ் தான்.. எனக்கு படிக்க பயமா இருக்குடா

டான்: சரி கொடு.. நான் படிக்கிறேன்..


படித்து, அவன் அதை திருப்பி கீழே போட

கடலை: என்னடா திருப்பி திட்டிருக்காளா??

டான்: இல்ல...

கடலை: பின்ன??

டான்: நீயே படி..

கடலை: டேய்..

டான்: படிடா..


SORRY PA... TYPO ERROR… I MEANT “WAT DA DI?? AVALAVU THAAN UNAKKU… DI POTTA, NAAYEE SAAVADICHIDUVEEN….


கடலை: புரிலடா...


டான்: சாரி பா.. டைப்போ எர்ரர்.. ஐ மீன்.. வாட் டா டீ?? அவ்வளவு தான் உனக்கு.. டீ போட்ட, நாயே சாவடிச்சிடுவேன்..


அதிர்ச்சி.. அதிர்ச்சி.. அதிர்ச்சி..

டான்: ஒரு கம்மாவாலே காதலே போச்சே... ஆனா செம பல்ப்பு மச்சி!!


வருகைக்கு நன்றி!!

11 comments:

Karthick Krishna CS said...

//பொண்ணுங்கள எப்பவுமே மொக்கை எனப்படும் நகைச்சுவை உணர்ச்சி மூலமா இம்ப்ரெஸ் பண்ணலாம்டா//

of course...

the last comma piece is gud.. :)

கார்த்திகைப் பாண்டியன் said...

சரியான லொள்ளு கண்ணா.. வெளுத்து வாங்குறீங்க..

kanagu said...

நல்ல கதை...
என்னப்பா இன்னும் friend eh ஆகல.. அதுக்குள்ள காதல் பறிப்போய்டிச்சினு சொல்லிட்ட :)

pappu said...

என்ன தலைவா பாதில நிறுத்திட்ட?

அந்த பொண்ண பிக் அப் ப்ண்ணு.

Narayanan said...

pagudhi 3ku waiting......

kanagu said...

indha 3 per la neenga yaaru??

லொள்ளு சபா said...

நல்லாருக்கு கார்த்திக். அடடா இந்த பதிவுக்கு புல் ஸ்டாப் வச்சிட்டயா(முடிஞ்சதா) ? இல்ல கமாவா (தொடருமா)?

Saranya said...

I did read this post. Thought I did leave a comment as well. But just realised I didn't when I came here again to see if u hav updated.
That was a funny post..you are so creative -if that was not your own story ;)

GAYATHRI said...

ha ha ha chance eh ill anna!!aana indha kaalathu ponnunga enna venaa solvaaluga lol[bein a girl i kno how girls talk amongst themselves..but am a good girl;)]

ApocalypsE said...

athena cse ponnuku oru mokka... ece ponnuku 3/4 mokka...? nangalum ece than... 3/4 pathathu... infinity mokka podum... :)

typo error lam onnum kidayathu... ponnuga epadi pesarthe naane ketruken... no no ena yaarum thitala... LOL

Karthik said...

கார்த்திக், நிஜமா நீங்க ஒரு ஜீனியஸ்!!!

Blogger templates

Custom Search