Friday, 1 May 2009

மைலோ வித் பாப்பு- அஜித்க்கு ஆப்பு: பகுதி-2

பகுதி ஒண்ணு படிக்க சொடுக்குங்க இங்க....


கவுண்டரு: இதே மாதிரி தான் ஓல்ட்-மேன், இவரு பரமசிவன்னு ஒரு படத்துல நடிச்சாரு.. அந்த கதையில அப்டி என்னத்த இவரு கண்டாரு தெரில. அதுல ஜெயில்ல ஒரு பாட்டு வரும்.. ஆச தோச.. அப்பள வடனு.. சம்பந்தமே இல்லாம உள்ள வந்து..


அஜித்: அண்ணே.. அது என் INTRODUCTION..


டீ.ஆரு: (விஜய் குரலில் மிமிக்ரி) ஹேஹேஹேஹே.. பேசிட்டு இருக்கோம்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. (SILENCE) SORRY FOR THE INTERRUPTION, DURING THE CROSS EXAMINATION, YOU CAN SEE THE ACTION COME DIRECTION, ADDED WITH PERFECTION, IN THE NAME OF WITNESS YOU ARE PLAYING WITH LIMITATIONSபாப்பைய்யா: DON’T PLAY WITH EMOTIONS!! எங்களால முடிலய்யா.. ஷோ நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. உனக்கு டயலாக் வேணும்னா டைரக்டர் கிட்ட கேளுய்யா.. ஏன் இப்டி நடுவுல? கவுண்டரு நீ பேசுய்யா...டீ.ஆரு: டேய் ஆப்பிரிக்கன் அங்கிள்.. இன்னொரு வாட்டி நடுவுல வந்த, அப்டியே அப்பி புடுவேன்.. ஆங் எங்க விட்டேன்.. சம்பந்தமே இல்லாம உள்ள வந்து, புள்ள குளிக்காம, பல்லு விளக்காம, அட முடி கூட வாராம, எழுந்து வந்து, நானும் ஆடுறேங்கற பேருல கரண்ட்-ஷாக் அடிச்ச மாதிரி குதிப்பான் பாருங்க.. நான் பயந்துட்டேன்.. கடசிலே அந்த பொண்ணுக்கு எச பாட்டு பாடுறேன்னு, ஆங் ஆஆங் ஆஆங்னு சாப்ட அப்பளம், வட செரிக்காம ஏப்பம் வுட்டுட்டு இருப்பான் பாருங்க.. பயங்கர கொடும...பாப்பைய்யா: பாவம்யா.. அந்த பி.வாசு இவர சந்திரமுகிய வச்சி ஏமாத்திட்டாரு.. அஜித்து, எதுக்கு உன்னை எல்லாரும் தலன்னு சொல்றாங்க??


அஜித்: ஏற்றி விடவும் தந்தையும் இல்லை.. ஏந்தி கொள்ள தாய்மடி இல்லை.. என்னை நானே சிகரத்தில் வைத்தேன்... அதனால் உனக்கென்ன??கவுண்டரு: டேய் ஜிம்பலக்கடி பம்பா.. எனக்கென்னவா?? அந்த பாட்ட கேட்டு வூட்டுக்கு போற வழியெல்லாம் எவனாவது எதாவது கேட்டா, உனக்கென்ன்னு கேட்டு தர்ம அடி வாங்குனது எனக்கு தான் தெரியும்.. இந்த ஆல்-இன்-ஆல் அழகுராஜா இதுவரைக்கும் அவன் பொண்ஜாதி கிட்ட அடியே வாங்குனதில்ல.. ஆனா (குமுறுகிறார்) அவ அன்னைக்கி நைட் ஏதோ கேக்க, நான் உன்னால உனக்கென்ன உனக்கென்னனு சொல்லி மொத்து மொத்துனு அடி வாங்கிட்டேன்டா ஜெல் தலையா (அழுகிறார்)டீ.ஆரு: விடுங்க சார்.. இந்த வரி கூட தாங்கிக்கலாம்.. ஆனா சொன்னாரு பாரு இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன.. ஏழு கடலும் என் பெயர் சொன்னால் உனக்கென்னனு.. தம்பி.. கடல் பேசி நீ கேட்டுருக்கியா?? அது உஸ் உஸ்னு உயிருள்ள வரை உஷானு தான் சொல்லும், என்னை மாதிரி... உன் பேர சொல்லாது... இந்த உடம்ப வச்சிகிட்டு உன்னால இமயமல மேல நடந்து கொடி நட முடியுமா??


கவுண்டரு: டேய் தாடி.. உன் மொக்க தாங்காம இங்க தான் எல்லாரும் உஸ் உஸ்னு சொல்றாங்க.. நிறுத்துடா!!


பாப்பைய்யா: உடம்ப பத்தி யாரு பேசுறாங்கனு பாருங்க.. இது அடுக்குமா?? அவருக்கு வயித்துல தான் தொப்ப.. உமக்கு உடம்பெல்லாம் தொப்பய்யா...


டீ.ஆரு: (தீடீரென்று டென்சன் ஆகி, சட்டையை தூக்கி, வயிற்றை அடித்து) பாருங்க சார்.. அடுத்த படம் கருப்பனின் காதலிக்காக, வெயிட் குறைக்கிறேன்.. ஜிம்க்கு (GYM) போறேன்..


கவுண்டரு: (ஷாக்காகி) டேய் டேய் டேய் ஓவர்டா.. ஜிம்க்கு போயி ஸ்கிப்பிங் (SKIPPING) ஆடுறியா??


டீ.ஆரு: யார் சார் அந்த ஆமிரு, சூரியா?? சிக்ஸ்-பேக்கா?? (SIX PACK) நான் வைக்கிறேன் சார் ஏய்ட்-பேக்.. (EIGHT PACK) (வயித்த குத்தி) நம்பிக்கை வைங்க... வரான் சார் இந்த டீ.ஆரு.. யூத்தெல்லாம் நோ-மோரு..


கவுண்டரு: அய்யோ ராமா ராமா.. நம்ம ஊருக்கு நாய் புடிக்கற வண்டி மட்டும் வரட்டும்... உனக்கு இருக்கு அன்னைக்கு கச்சேரி...


பாப்பைய்யா: மக்களே.. நீங்களே பாருங்க.. நாங்க ஒரு ஷோ ஆரம்பிச்சி மத்தவங்கள கலாய்க்கலாம்னு இருந்தோம்... ஆனா இவரோ எங்களுக்கு வேல வைக்காம அவரே கலாய்ச்சிக்கிறாரு.. சூப்பருலே.. தம்பி அஜித்து.. நீங்க சாமியாரா ஒரு படத்துல நடிச்சீங்களே?? அது என்ன??அஜித்: கடவுள்... நான் கடவுள்..


டீ.ஆரு: இப்ப எதுக்கு இந்த பன்ச்?? படமே ஒரு மொக்க.. நீ இத சீரியசா பேசியே ஊரு சிரிச்சது...


கவுண்டரு: உனக்கு மனசாட்சினு ஒண்ணு இருந்துருந்தா அந்த படத்துல நடிச்சிருப்பியா?? நெஞ்ச தொட்டு சொல்லு நீ கதை கேட்டேன்னு? ஏன்டா, ராமர் வேசம் போட்டுகிட்டு வந்தீயே.. வில்லன கொல பண்ண அம்பு, வில்லு யூஸ் பண்ணி இருந்தா கூடா சகிச்சிக்கலாம்.. ராமரு எந்த ஊருல துப்பாக்கிலா யூஸ் பண்ணி இருக்காரு?? இத மட்டும் பா.ஜ.க, ஹிந்துட்வா அமைப்புகள் பார்த்து இருந்தாங்க, மவனே நீ கைமா தான்..பாப்பைய்யா: அந்த படம் பார்த்து அவங்க உயிரோட வந்தா தானேய்யா?? மொத பாதியிலே மர்கயா தான்..அஜித்: வித்தியாசமா பண்ணலாம்னு நினச்சோம்.. அது இப்டி ஆகும்னு யாருக்கு தெரியும்??டீ.ஆரு: வித்தியாசமா? உன்ன அந்த இரண்டு எழுத்து இயக்குனர் அவர் படத்துல இருந்து, சில பல கசமுசாக்கள் நடத்தி உன்ன தூக்குனதாலே தான் நீ அவருக்கு பல்ப் தரணும்னு அவசர அவசரமா நடிச்ச?? ALL-DETAILS I KNOW…பாப்பைய்யா: ஆனா பல்ப் ஃபாக்டரியே (BULB FACTORY) வாங்குனது இவர் தானே?? அந்த படத்துல நீ நடிச்சிருந்தா, அரை மணி நேரம் தான் ஹீரோ வருவாருலே, அதுனால உன் ரசிகர்கள் அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க.. அப்றோம் தொப்பய வச்சிகிட்டு உம்மால யோகாசனம்லா பண்ண முடியுமா?? தல’ கீழா நின்னா, தொப்ப சும்மா அதிரும்லே...அஜித்: ஹே... நான் கீழ இருந்தாலும், இறங்கி போறவன் இல்ல, ஏறி போறவன்..கவுண்டரு: மகனே.. நீ இன்னொரு வாட்டி பன்ச் சொல்றேன்னு மொக்க போட்ட, உன்ன மேடைல இருந்து கீழே இறக்கிடுவோம்... அப்றோம் எல்லாரும் உன்மேல ஏறிப்போவோம்.. பீ கேர்ஃபுல்.. (BE CAREFUL)டீ.ஆரு: நல்ல வேள.. வில்லன் படத்துல கிரண் கூட இவர சட்டையோட ஆட விட்டாங்க.. இல்லனா இவர் தொப்ப பெருசா இல்ல கிரண் தொப்ப பெருசான்னு போட்டி வைக்கலாம்..அஜித்: ஹே.. ஓவரா கலாய்க்காதீங்க.. நான் தனி ஆள் இல்ல..டீ.ஆரு: உன் வெயிட்ட பார்த்தாலே தெரியுதே, நீ தனி ஆளு இல்லனு.. அதான் உன் ஃபேன்ஸ் தல எப்பவுமே வெயிட்டுன்னு சொல்றாங்களா??


அஜித்: 690 உயிர்களின் ஆன்மா நான்...


பாப்பைய்யா: யாருய்யா அவங்க?? உன் படம் பார்த்து செத்துபோனவங்களா?


அஜித்: இந்த மழை நிக்கறதுக்குள்ள நீங்க பேசுறத நிறுத்தணும்..


கவுண்டரு: டேய்.. மொத கூலிங்-க்ளாஸ கிழத்து.. வெளிய வெயில் மண்டைய பொளக்குது... ஏன்டா, எந்த சிட்டுவேஷன்ல (SITUATION) எந்த பன்ச் சொல்லணும்னு வெவஸ்த இல்லையா உனக்கு??


அஜித்: ஹே.. அத்திப்பட்டி, தெரியுமா??


கவுண்டரு: ஐயோ... ஏற்கனவே ஒருத்தன்கிட்ட நான் வட்டிப்பட்டி கேக்க போயி, அவன் குடும்பமே பிரிஞ்சி போயி, என்ன அக்கு வேறா, ஆணி வேறா பிரிச்சிட்டான்.. இதுல இப்ப அத்திப்பட்டி வேறயா?? ஆள வுட்றா சாமீ...அஜித்: உங்களுடைய மாமன், மைத்துனன், தாய், தந்தை....பாப்பைய்யா: அய்யா.. போதும்.. எங்களால முடில.. இத்தோட முடிச்சிக்கலாம்.. இல்ல நீ பேசுவேன்னு அடம்பிடிச்சா உன் உச்சரிப்ப கேட்டு இங்க இருக்குறவங்களே ஓடிடுவாங்க.. பராசக்தி சிவாஜி பட சி.டி இருந்தா, தம்பிக்கு தாங்க.. அத பார்த்தாவது இனிமேல் இப்டி முயற்சி செய்ய மாட்டாரு... தம்பி இப்டி வசனம் பேசுறத விட்டுட்டு, நல்ல கதைகள கேட்டு நடிங்க.. ராஜூ சுந்தரம், செல்லா, சரவண சுப்பையா இவங்க நட்ப துண்டிங்க.. அப்ப தான் நீங்க தல.. இல்லனா எல்லாரும் தருதல தான் சொல்வாங்க..அஜித்: பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மகன், மகள், சுற்றம்...பாப்பைய்யா: இவரு நிறுத்த மாட்டாரு போல... எண்ட்-கார்ட்ட (END-CARD) போடுங்க.. போட்டாச்சா?? பிறவு சந்திப்போமா??? நன்றி!!
வருகைக்கு நன்றி!!

14 comments:

GAYATHRI said...

firstuuu!!:P

GAYATHRI said...

enna paathi padikara ponnu nu ooovera build up panniteenga naa!!ipo paatheenga la firstu comment[:D]btw..inniku thala ku b'day..innikum avara ipdi kalaaichuteengale[:(]..neenga enna dhaan kalaaichaalum hes a gud human being..a better one than anyone els!!lol aana jolly kaaga unga kalaai laam enjoy panlaam..he must improve his dance for sure[inum ozhunga solnumna avar dance kathuka aaramikalaam:p]..hopin to see lots more frm thala!!indha blog oda link ah avarku forward panni vidunga!!lol apdiyaadhu edhaa seiraara papom[;)]
p.s:am not a thala fan and all..but i hate tat vijay guy..so started to lik thala!![:p]

Karthik said...

'தல'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறி எஸ் ஆகிக் கொள்வது.. உங்கள் அன்புக்கும் பண்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய உங்கள் அன்புத்தம்பி, உங்கள் வீட்டுப்பிள்ளை,

கார்த்திக். நன்றி வணக்கம்.

(ஹப்பா.. கமெண்ட் போதுமான நீளம் இருக்கு! ;))

Karthik said...

e mail follow up.

கார்த்திகைப் பாண்டியன் said...

தல பொறந்த நாள் அன்னைக்கு ஏனப்பா இப்படி? ஆனா உங்க லொள்ளு உண்மையிலேயே தூளு..:-)

R-ambam said...

Irunthaalum Ajith konjam nadikka try panlaam.kathal koattai last scene la , dei Devayani unnai thaan kandu pidichaa nnu theatre la kathunom,annan annikku enna reaction kodutharo athey reaction thaan Billavilayum. vijay sammanthame illaama dance aaduvaar.
Annan ellarum dance aadna, enakkum ithukkum sammanthame illayenra mathiri oru step poaduvaaru ..sorry sirichikitte sometimes athu kooda illaama summa nadapaaru ! ellaam namma vithi .

Divyapriya said...

aanaalum sema nakkal thaan

Anonymous said...

u have excellent creativity.
good. keep it up.

விஜய் said...

கலக்கறே கார்த்திக். சீக்கிரமே லொள்ளு சபாவுக்கு வசனகர்த்தாவாகும் வாய்ப்பு ரொம்ப பிரகாசமா இருக்கு :-)

kanagu said...

romba kalachiteenga... aanalum first part la irundha alavukku comedy illa nu than sollanum..

but on the whole great imagaination and write up... keep it up :)

Aparnaa said...

Karthik.. sema kalaainga.. naan idhu maadhiri en vaalakaile enaikum sirichadilla.. Ajith kalaikardhu na alwa saapdura maadhiri.. neenga idhu maadhiri Ajith kalasi neraya Post pannunga... Naa kandippa visit panren.. Starting to end, non-stop, unlimited comedy!!

Aparnaa said...

//அஜித்: இந்த மழை நிக்கறதுக்குள்ள நீங்க பேசுறத நிறுத்தணும்..


கவுண்டரு: டேய்.. மொத கூலிங்-க்ளாஸ கிழத்து.. வெளிய வெயில் மண்டைய பொளக்குது... ஏன்டா, எந்த சிட்டுவேஷன்ல (SITUATION) எந்த பன்ச் சொல்லணும்னு வெவஸ்த இல்லையா உனக்கு??
//


Weight and Top Karthik :D Ha Ha Ha!!

Ramyah said...

OMG! U have grilled Ajith to the max. But i throughly enjoyed it. Keep grilling n tc.

ApocalypsE said...

Apadi enaya ajith male kolla verri?

oru thamasa pochu...

P.S. nan ajith fan illai... pinna usha fan ah nu kekathe...

Blogger templates

Custom Search