Wednesday, 13 May 2009

கம்மாவால் (,) பறிபோன காதல்: பகுதி-1

கடலை வீட்டில் மெசேஜ் மாமா, டான் உள்ளேன் அய்யா...

மெசேஜ் மாமா: என்னடா மச்சி?? என்ன மேட்டரு?

கடலை: டேய்.. நாளைக்கு பிசிக்ஸ்-2 எக்ஸாம்டா.. எதாவது சொல்லி தாங்கடா..

டான்: அய்யோ... பூமாதேவி வாய புளக்க போறாடா... நாம எல்லாம் உள்ள போக போறோம்..

கடலை: என்னடா உளர்ற??


டான்: கொய்யா... செமஸ்டர் எக்ஸாமுக்கே, ராவெல்லாம் படிக்காம, ராவா குவார்டர் அடிச்சி குப்புற படுத்து தூங்குறவன் நீ... சாதா யூனிட் டெஸ்ட்டுக்கு படிக்கிறியா??


மெசேஜ் மாமா: நீ மட்டும் இத போய் கலக்க போவது யாருல சொல்லிருந்த வச்சிக்கோ, கொக்க மக்கா உனக்கு தான்டா ஃபர்ஸ்ட் பரிசு..

கடலை: சரி சரி... பிரித்தி நம்பர் கிடச்சிடிச்சிடா...

மெசேஜ் மாமா: வாவ்... எப்டி மச்சி?? அவ இ.சி.இ (ECE) ஆச்சே..

கடலை: அதுக்கு தான் என் க்ளாஸ் ஸ்மிதாவ ஃப்ரெண்ட் பிடிச்சேன்.. நீங்க தான் அழகா இருக்குற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பேசுவேன்னு சீன் போட்டீங்க.. என்ன எப்டி கலாய்ப்பீங்க, ஸ்மிதா கூட பேசுனா?? மொக்க ஃபிகர கூட விடமாட்டீயானு.. இப்ப பார்த்தல??


டான்: ஓஓ.. இது தான் சின்ன மீன வீசி பெரிய மீன பிடிக்கறதா??


மெசேஜ் மாமா: இல்ல மச்சி.. டெக்னிக்கலா இதுக்கு பேரு INHERITANCE… இஞ்சினியரிங் படிக்கிறோம்.. PROFESSIONAL போல பேசுங்கடா... இன்னும் பழமொழி சொல்லிகிட்டு... அது சரி நீ தான் கவிதாவ ஓட்டிகிட்டு இருந்த!! அவள தான் சின்சியரா லவ் பண்றேன்னு சொன்ன.. இப்ப என்ன பிரித்தி??


டான்: டேய்.. இவனே ஒரு டுபாக்கூரு.. சின்சியரா லவ் பண்றேன்னு பாக்குற பொண்ணயெல்லாம் சொல்லிட்டு திரிவான்.. விசாரிக்கறான் பாரு கேணே.. அடுத்த வாரம் சஞ்சனாவோ ரம்யாவோ... யாரு கண்டா??

கடலை: டேய்.. லவ் ஸ்டார்ட் பண்ண ஐடியா கொடுப்பன்னு பார்த்தா என்ன கலாசிட்டு இருக்கீங்க..


டான்: இது என்ன பல்சர் வண்டியாடா?? ஸ்டார்ட் பண்ண ஐடியா கொடுக்க.. பல்ஸ் பாக்குற காதல்டா..

கடலை: இப்ப இந்த பன்ச் தேவையா??


டான்: டேய்.. வாழ்க்கைனா ஒரு நகைச்சுவை இருக்கணும்டா...


கடலை: இதுக்கு பேரு மொக்க..


டான்: உன்ன மாதிரி இ.ஐ (E&I) பசங்களுக்கு இது போதும்.. கவிதா மேட்டர் என்ன ஆச்சு? அசிங்கப்படுத்திட்டாளா??


கடலை: இல்லடா.. நான் ஒரு தொலைநோக்கு பார்வையோட லவ் பண்றேன்.. செட்டியார் பையன், செட்டியார் பொண்ண தான் கல்யாணம் பண்றான்.. அய்யர் பையன் அய்யர் பொண்ண தான் கல்யாணம் பண்றான்.. முஸ்லீம் பையன் முஸ்லீம் பொண்ண தான் கல்யாணம் பண்றான்.. இப்டி சாதி, மதம்னு கட்டுண்டு, முன்னேறாமல், குறுகிய வட்டத்துல இருக்குற சமுகத்துல நானும் ஏன்டா என் டிப்பார்ட்மெண்ட் பொண்ண கட்டிக்கணும்?? அதான் வேற டிப்பார்ட்மெண்ட் பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம்னு..


டான்: அட்றா சக்கை, அவனவன் காதலிக்க ப்ளான் போட்டா இங்க ஒருத்தன் கல்யாணத்த பத்தி யோசிக்க ஆரம்பிச்சிடான்டா.. விட்டா புள்ளைக்கு இப்பவே எல்.கே.ஜி அட்மிஷன் ஃபார்ம் வாங்கி வச்சிப்ப போல... நீ லவ் பண்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிப்பனா, உனக்கு 134 கல்யாணம் நடக்கணும்டா...


மெசேஜ் மாமா: டேய்.. டெக்னிக்கலா பேசுங்கடா.. ஸ்டாக் (STACK) INITIALISE பண்றதுக்கு முன்னாடியே POP பண்ற கதையால இருக்கு..


கடலை: அய்யோ.. உன்ன ஏன் தான் கூப்டோமோ?? க்ளாஸ்ல அந்த தேங்காய் தலையன் தொல்ல தாங்கலன்னா இங்க இவன் வந்து மொக்க போடுறான்.. உன் வாயில ஈயத்த ஊத்த..


மெசேஜ் மாமா: ஊத்துறது தான் ஊத்துற.. ஏன்டா ஈயத்த ஊத்துறீங்க.. ஒரு ஆப்பிள் ஜூசு, பெப்ஸி ஊத்தலாம்ல??


டான்: டேய்.. முடிலடா.. சரி, பிரித்தி நல்லா படிப்பாளா??

கடலை: ஏன்டா கேக்குற? போன செம்ல டிப்பார்ட்மெண்ட்ல ஆறாவதுடா..


டான்: அப்ப பிரச்சனை இல்ல.. நீ பண்ற பொழப்புக்கு உனக்கு எப்டியோ வேல கிடைக்காது.. வேணும்னா கால் சென்டர் கடல சென்டரானா உனக்கு கன்ஃபார்ம்மா வேல உண்டு.. சோ இப்பவே இந்த பொண்ண கரெக்ட் பண்ணிக்கோ.. பிற்காலத்துல யூஸ்ஃபுல்லா இருக்கும்... நோகாம நுங்கு தின்னலாம்டா...


மெசேஜ் மாமா: ஆனாலும் உன்னையும் நம்பி பொண்ணுங்க பேசுறாங்க.. எங்களுக்கு தான் எந்த கொடுப்பினையும் இல்ல..


கடலை: மச்சி.. அதுக்குலா ஒரு முகராசி வேணும்டா.. அப்றோம் நல்ல ஃபிகருங்க கூட தான் பேசுவேன்னு இருந்தா, ஒண்ணும் சிக்காது.. ஆனா உன் பக்கத்துல இருக்கான் பாரு.. அவன நம்பாத.. கேக்க தான் கெத்து, பொண்ணுங்க கிட்ட பேசவே மாட்டேன்னு சொல்றான்.. ஆனா ரகசியமா அண்டர்க்ரவுண்ட்ல பல வேலைகள் பண்றான்.. மொபைல்ல யாருக்கோ மெசேஜ் பண்றான்.. SEND ITEMS பார்த்தா எதுவும் இல்ல... கால் DURATION 20 நிமிசம் காட்டுது... ஆனா RECEIVED CALLS, DIALLED NUMBERS ல நம்பரே இல்ல... நாம இருக்கும் போது போன் வந்தா, ம்ம்ம்ம், சரி, ஒக்கே, அப்றோம் பண்றேன்னு ABRUPT கட் பண்ணிடுறான், கேடிபையன்...


டான்: தக்காளி இதுக்கு தான் போன் வாங்குறீங்களா?? அடுத்த வாட்டி போன் தரவே மாட்டேன்டா.. ஏன்டா அவன் கல்லுல என் மாவ வச்சி தோச சுட்றீங்க.. வந்த வேலைய பாருங்க.. சரி.. உனக்கு என்னடா பொண்ணுங்களுக்கு மேசேஜ் அனுப்ப தயக்கம், பயம்.. என்னமோ இவ தான் மொத ஃபிகர் மாதிரி ஸீன்?


கடலை: அது இல்லடா.. இதுக்கு முன்னாடி வாங்குனதெல்லாம் டைரக்டா அவங்க்கிட்டயே கேட்டு வாங்கினதுடா.. ஆனா பிரித்தி கிட்ட கேட்டும் அவ நம்பர் தரல.. அதான் ஸ்மிதா மூலமா வாங்குனேன்.. ஆனா அவ என் பேர யூஸ் பண்ணாத, யாரு நம்பர் தந்தான்னு கேட்டா, என் பேர சொல்லாதன்னு சொல்லிட்டா.. இப்ப எப்டி ஸ்டார்ட் பண்றது?? அதுக்கு ஐடியா தாங்கடா கேக்குறேன்.. வந்ததுல இருந்து மொக்க போட்டுட்டு இருக்கீங்க..


டான்: மச்சி.. இதுக்கு தான்டா ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா இருக்கணுங்கறது.. பொண்ணுங்கள இம்ப்ரெஸ் பண்ற டெக்னிக்லா என்கிட்ட கேளுடா..


மெசேஜ் மாமா: ஆனா இவருக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இல்லையாம்.. டேய் டேய்..


டான்: ஏன்டா ஹார்ட்-அட்டாக் வந்தா தான் ஹார்ட் ஸ்பலிஸ்ட் ஆக முடியுமா?? ஐடியா கொடுத்தா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.. என் மாவுல தோச சுடுறத நிறுத்து.. மச்சி எடுத்த உடனே ஹாய், அவ் ஆர் யூ (HI, HOW ARE YOU) அனுப்பாத.. சி.எஸ்.இ (CSE) பொண்ண கரெக்ட் பண்ண நல்ல ஜோக்ஸ் அனுப்பனும்.. இ.சி.இ (ECE) பொண்ண கரெக்ட் பண்ண மொக்க மெசேஜஸ் அனுப்பனும்...


கடலை: சரி.. இப்ப என்ன அனுப்ப??


தொடரும்.....


வருகைக்கு நன்றி!!!

19 comments:

Lancelot said...

siluvai the first...

ஆளவந்தான் said...

எச்சூஸ் மீ.. ஐ ஆம் கண்ணன் ...... அந்த கதையாவுல இருக்கு

Karthik Lollu said...

என்னப்பா எல்லாரும் மெயின் பிச்சர போடாம போயிட்டீங்க???

Chriz said...

appurom...

ponnu fotova add pannunaa innum swaarasiyamaa irukkum

Karthik said...

மெயின் பிக்சர் எங்கப்பா?? சீக்கிரம் போடுங்க..

//டான்: டேய்.. வாழ்க்கைனா ஒரு நகைச்சுவை இருக்கணும்டா...
கடலை: இதுக்கு பேரு மொக்க..

ஹா..ஹா. :))

Karthick Krishna CS said...

//அவன் கல்லுல என் மாவ வச்சி தோச சுட்றீங்க..//
dialogue ezhudha s.j suryah help pannaaro???

SUREஷ் said...

கதை நல்லாயிருக்கு தல.

தல இந்த மாதிரி நானும் ஒரு கதைய எழுதிட்டு இருக்கேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

E&Iக்கு இது போதுமா? என்ன ஆட்டோ அனுப்பனுமா? கதை நல்லா இருக்கு நண்பா..:-)

Thamizhmaangani said...

//குறுகிய வட்டத்துல இருக்குற சமுகத்துல நானும் ஏன்டா என் டிப்பார்ட்மெண்ட் பொண்ண கட்டிக்கணும்??//

தஞ்சாவூர் கல்வெட்டில் எழுத வேண்டிய வாசகம்!!

Divyapriya said...

ரொம்ப பெருசா இருக்கு...அப்புறமா படிக்கறேன் :)

GAYATHRI said...

adadadadaaa!!seekiram ezhudhungappa!!adhukaprom enna aachu?!!

Anonymous said...

thambi nalla comedyaa erukku.

கலாட்டா அம்மணி said...

\\அவன் கல்லுல என் மாவ வச்சி தோச சுட்றீங்க.. வந்த வேலைய பாருங்க\\

ஹி ஹி ஹி....

தம்பிங்களா..காலேஜ்ல படிக்கிறத தவிற மற்றதெல்லாம் நடக்குதுபோல??

Poornima Saravana kumar said...

உன்ன மாதிரி இ.ஐ (E&I) பசங்களுக்கு இது போதும்.. //

அடப்பாவி... உனக்கு இ.ஐ (E&I) ன்னா அவ்ளோ இளப்பமா இருக்கா?
உதை விழும்...

Poornima Saravana kumar said...

ஜாக்கிரதை!

Poornima Saravana kumar said...

காமெடி நல்லா இருக்கு:))

kanagu said...

/*அவன் கல்லுல என் மாவ வச்சி தோச சுட்றீங்க..*/

உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு தம்பி... அரிஸ்டாடில் போல், பிளாட்டோ போல் வருவீர்கள் :)

அடுத்த பகுதி படிக்க போகிறேன் :)

kanagu said...

/*அடப்பாவி... உனக்கு இ.ஐ (E&I) ன்னா அவ்ளோ இளப்பமா இருக்கா?
உதை விழும்...*/

கார்த்திக் இதை wanted ஆக சொல்லி இருக்க மாட்டார் என நம்புகிறேன் :P

Saranya said...

Hehehe So funny!!! ROTFL!!! :D

Blogger templates

Custom Search