Tuesday, 14 April 2009

திருந்த விட மாட்டேங்கிறாங்களே!!

இன்னைக்கு ஏப்ரல் 14.. ஆனா இதை என்ன நாளா கொண்டாடுவதுனு குழப்பம் இருக்கு.. தாத்தா கருணாநிதி சித்திரை திருநாள் சொல்ல, இன்னொருத்தர் தமிழர் திருநாள் சொல்ல, அந்த பக்கம் தமிழ் புத்தாண்டுனு சொல்ல, ஷப்பா... இப்பவே கண்ண கட்டுடே... ஒரு நாள் லீவு கிடச்சதே சந்தோசமா இருந்துட்டு போவியா??ஆங்கில புத்தாண்டுக்கு தான் உறுதிமொழி எடுக்கணுமா? தமிழன்டா நான்... அதுனால தமிழ் புத்தாண்டு அன்னைக்கி எதாவது உறுதிமொழி எடுக்கலாம்னு பார்த்தா, இந்த சமூகமும் சுற்றமும் என்னை திருந்த விட்டார்களா? குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.. நான் திருந்த தடையாய் இருக்கும் சில காரணங்களை பார்ப்போம்.. இது என் ஒருவன் தனிப்பட்டவனுக்கு மட்டும் பொருந்தாது.. என்னைப்போல் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் இருக்காங்க.. அவங்க எல்லாருக்கும் இது சமர்ப்பணம்.. (கமல் மாதிரி பேசுனது போதும்.. மேட்டருக்கு வாடா)1. பக்கத்து வீட்டு பொண்ணு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தா நம்ம கத டரியல் தான்.. ஆண்ட்டி, அம்மா தந்தாங்கனு பலகாரம்லா கொண்டு வருவா.. நமக்கு அந்த பொண்ணு மேலயும் ஒரு கண்ணு இருக்கும், பலகாரம் மேலயும் ஒரு கண்ணு இருக்கும்... தெரிந்தோ நம்ம வீட்டு பெரியவங்க, நல்லா படிக்கிறியானு கேக்க, அவளும் படிக்கிறேன் ஆண்ட்டினு சொல்ல, அப்றோம் நம்ம மானம் புத்தாண்டு அதுவுமா ஜெட் ஏர்வேஸ் ஏறி போகும்.. இவனும் இருக்கானே.. படிக்கிறானா? எப்ப பார்த்தாலும் ஊரு சுத்துறதுலேயே இரு.. இந்த பொண்ண பாருடானு காலைல சாமிக்கு பண்ண அர்ச்சனை நமக்கு ஆரம்பிக்கும்.. அப்றோம் எப்டிங்க அந்த பொண்ண கரெக்ட் பண்ண??2.இவ்வளவு வருசம் ஒழுங்கா தேர்வு எழுதல.. கடசி வருசம் ஒழுங்கா படிக்கலாம்னு நினச்சா இந்த ஐ.பி.எல் (IPL) ஒண்ணு இருக்குலே... நைட் ஃபுல்லா கண் முழிச்சி படிக்கலாம்னு ப்ளான் (PLAN) பண்ணா, கரெக்டா நைட் மாட்ச் போடுறாங்க... மாட்ச் நைட் முடிய, தூக்கம் கண்ண இழுக்க அப்றோம் என்னத்த படிக்க??3.மூணு வருசம் நம்ம மேல இருக்குற காண்டயெல்லாம் இந்த கடசி வருசம் காட்டுவாங்க வாத்தியாருங்க.. டேய்.. கேடி.. என்னடா தாடி? உனக்கு ஹால் டிக்கெட் இல்ல.. ப்ராஜக்ட் ரிப்போர்ட்ல (PROJECT REPORT) இந்த ஃபான்ட் (FONT) தப்பு.. போ.. போ போய் மாத்து.. கடசி தேதி முடிஞ்சி போச்சே.. கையெழுத்துலா போட முடியாது.. சொல்லி வெறியேத்துவாங்க..


க்ளாஸ்ல (CLASS) இருந்தாலும் ஆப்ஸெண்ட் (ABSENT).. ஐ.வி, டூர்க்கு (IV,TOUR) தடா.. தெரியாத பாடம் எல்லாம் செமினாரா (SEMINAR) கொடுக்குறது.. இம்போசிஷன் (IMPOSITION), அஸ்ஸைன்மெண்ட்னு (ASSIGNMENT) உசுர வாங்குறது.. அது எல்லாத்தையும் விட விஞ்ஞானிகள் மூணு வருஷம் ஆராய்ந்து பண்ண ப்ராஜக்டை, நம்பள மூணு மாசத்துல முடிக்க சொல்லுற அபத்தம் இருக்கே... அப்பப்பா....4.மத்த நாளுக்கு எல்லாம் ஃப்ரி மெசஜ் தரும் இந்த செல்போன் மண்டையன்ஸ், முக்கியமான நாட்களப்ப 10, 25, 50னு தங்கள் வசதிக்கேற்ப பிச்சை எடுப்பாங்க.. சேசே... கொள்ளை அடிப்பாங்க.. லீவ் நாளாச்சே, கடல போடலாம்னு ஹாப்பி நியு இயர்னு மெசஜ் அனுப்பலாம்னு பார்த்தா, மிஸ்ட் கால் கொடுக்க கூட பேலன்ஸ் இருக்காது போன்ல.. ஏர்செல் (AIRCEL) கார்ட்னா, மக்கா நீ செத்த.. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தெரியாத நம்பர்ல இருந்து கால் வர, நாமளும் ஆவலா எடுக்க, வணக்கம், ஊஊ ஆயியே ஆயியே.. இந்த பாடல் உங்க காலர்டியூனா வேணுமா? உடனே அழுத்துங்கனு அழகான வாய்ஸ்ல அம்மணி குரல் கேக்கும்.. இவனுங்கள எல்லாம்.... வேணாம்பா.. அப்றோம் வன்முறைய தூண்டுற மாதிரி பேசுறேனு கைது பண்ண போறாங்க..5.இந்த மின்சார துறை இருக்கே.. இந்த ஒரு நாளாவது வீட்டுக்கு அடங்கி, நல்ல பிள்ளையா எங்கேயும் சுத்தாம டி.வில நிகழ்ச்சி பார்த்து, வடை, சக்கர பொங்கல் கொரிச்சிகிட்டு இருக்கலாம்னு பார்த்தா, விடுவாங்களா?? கரண்ட்ட கட் பண்ணி விட்டுடுவாங்க.. ஏற்கனவே வெயில் மண்டைய பொளக்கிறது.. இதுல போய் வெளிய சுத்துனா அப்றோம் பயங்கர கருப்பா இருக்குற நாம கருப்பா பயங்கரமா வினு சக்கரவர்த்திக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஆக வேண்டியது தான்..6.காலேஜ் முடிய போகுது.. ஒரு வழியா நம்ம ஆளு கிட்ட ப்ரோப்போஸ் (PROPOSE) பண்ணலாம்னு ஐ லவ் யூனு சொன்னா, சொல்லி வச்ச மாதிரி எல்லா பொண்ணுமே (அடப்பாவி.. ஒரு பொண்ணுகிட்ட சொல்லாம, நிறய பொண்ணு கிட்ட சொல்றியேடா கேக்குறீங்களா?? டெக்னிக்கலா, IF-ELSE LOOP, SWITCH CASE தான் சரி பட்டு வரும்) சாரி.. எனக்கு படிக்கணும்.. அதுல தான் என் கவனம், படிச்சி முடிச்சி டிகிரி (DEGREE) வாங்கணும்னு பழய பஞ்ஜாங்கம் பேசிட்டு இருப்பாங்க.. ஏம்மா.. அதான் கடசி வருசம் வந்தாச்சுல.. இதுக்கு மேலயும் படிக்கணும் படிக்கணும்னா என்னத்த படிக்கணும்?? குமுதம், கல்கியா?? கேக்க, நான் படிச்சி பாஸ் ஆயிடுவேன்.. நீ டிகிரி வாங்குவியா? நம்ப படிப்ப தாக்கி, அர்ரியர்ஸ்ஸ (ARREARS) திரும்ப கேசரி மாதிரி கிளருவாங்க..இத்தனை புத்தாண்டு வந்தாலும் இந்த பொண்ணுங்க என்ன நினக்கிறாங்க தெரிஞ்சிக்க முடில.. பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.. ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு...


கரெக்ட்டா தான் சொல்லிருக்கான்.. விரோதி ஆண்டுனு.. எத்தன விரோதிகள்டா என் முன்னேற்றத்திற்கு??எல்லருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேணாமா? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

வேணாமா? தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

வேணாமா? சன் டீ.வி. 16வது வருச வாழ்த்துக்கள்

இதுவும் வேணாமா? டாக்டர். அம்பேத்கார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விஷ் யூ எ ஹாப்பி செவ்வாய்க்கிழமை

விஷ் யூ எ ஹாப்பி ஹாலிடே


வருகைக்கு நன்றி!!


55 comments:

Narayanan said...

"பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.."

Chance eh illa da...sema bit and punch...

Narayanan said...

veyil kaalam vera ...

chummaa color color aah kudaiyum,facial creamu,sun glass,cotton transparent(puupy shame) dressu ..intha ponnunga thollai irukae ..yamma saamy

veyilae paravala da athuku!!

Arv said...

mudiyala da... romba kashtam...

enna kodumai kadavule idhu???

G3 said...

Hehe.. malayala chechigalukkum innikku dhaanae pudhu varusham.. avangalukku vaazhthu sollalai??? !!!!

G3 said...

//ஒரு நாள் லீவு கிடச்சதே சந்தோசமா இருந்துட்டு போவியா??
//

Enakku adhu kooda illiyae :(((

G3 said...

//காலைல சாமிக்கு பண்ண அர்ச்சனை நமக்கு ஆரம்பிக்கும்.. //

:))) Karpooram ethi theebaaradhanaiyae nadakkum pola :D

G3 said...

//கடசி வருசம் ஒழுங்கா படிக்கலாம்னு நினச்சா//

??? !!! neeya? ippadi ellam kooda nenaippiya nee??

G3 said...

//ப்ராஜக்ட் ரிப்போர்ட்ல (PROJECT REPORT) இந்த ஃபான்ட் (FONT) தப்பு.. போ.. போ போய் மாத்து.. கடசி தேதி முடிஞ்சி போச்சே.. கையெழுத்துலா போட முடியாது.//

Every dog has its own day nu chummava sonnaanga :D

G3 said...

// மிஸ்ட் கால் கொடுக்க கூட பேலன்ஸ் இருக்காது போன்ல..//

:))))))))))

G3 said...

//அப்றோம் பயங்கர கருப்பா இருக்குற நாம கருப்பா பயங்கரமா வினு சக்கரவர்த்திக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஆக வேண்டியது தான்..
//

ROTFL :)))

G3 said...

//டெக்னிக்கலா, IF-ELSE LOOP, SWITCH CASE தான் சரி பட்டு வரும்//

Switch case If-else edhulayumae condition satisfy aagalae pola :P

G3 said...

//.. பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.. ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு... //


:)))))))))))))))))

Onnum soldradhukkillai :D

pappu said...

தல, நீ காலேஜ் ஸ்டூட்ணடா. நீ நிஜமாலுமே யூத்தா? பல டுபாக்கூர் யூத்துங்க பதிவுலகில வலம் வர்றாங்க!

Chronicwriter said...

oru manidhanukkul evvalavu porattangal? invvalavaiyum sagichukitta kanna ivvalavu naal irukura?

baley...

pakkathu veetu ponnu peru enna?

IPL southafricavukku poyiruchu.. namma vijay tvla innum cheer leaders selection panraanga!

hehe comedydhaan po!!


www.chronicwriter.com

viji said...

பயங்கர கருப்பா இருக்குற நாம கருப்பா பயங்கரமா

---> haaahhhaaaahhaaa......பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி..

----> what a kandupidipu....hehehehe.. agree also.. :P


ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு...

---> how about aunties or akka's?

p/s: ninga pakathu veethu ponna mathum ille, auntyum serthu side adikire matter nan satiyama veliya solla mathen. nambunga... =)

ஆளவந்தான் said...

//
ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு...
//
சூப்பரு :))

ஆளவந்தான் said...

//
விஞ்ஞானிகள் மூணு வருஷம் ஆராய்ந்து பண்ண ப்ராஜக்டை, நம்பள மூணு மாசத்துல முடிக்க சொல்லுற அபத்தம் இருக்கே... அப்பப்பா
//
காப்பி அடிக்கிறாதுக்கு மூனு மாசம் அதிகமா தெரியல :))))

Ajay said...

Dei pakkathu veethula pudusa oru ponna?? sollave illa.. naan varen da.. nee eppa free??

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கல் பதிவு நண்பா..கடைசி வருஷம் ப்ரொஜெக்தா.. கஷ்டம் தான்.. அதோட உங்களுடைய கவலைகள் எல்லாமே ரொம்ம்ம்ம்ப அருமை.. வாழ்த்துக்கள்..

Karthik said...

//பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி..

பின்றீங்க. இதான் நம்ப கொள்கை விளக்கமா??? ;)

'வாழ்த்துக்கள்' என்று மட்டும் சொல்லி எஸ் ஆகிக் கொள்வது இன்னொரு கார்த்திக்.

kanagu said...

/*தெரிந்தோ நம்ம வீட்டு பெரியவங்க, நல்லா படிக்கிறியானு கேக்க, அவளும் படிக்கிறேன் ஆண்ட்டினு சொல்ல, அப்றோம் நம்ம மானம் புத்தாண்டு அதுவுமா ஜெட் ஏர்வேஸ் ஏறி போகும்.. இவனும் இருக்கானே.. படிக்கிறானா? எப்ப பார்த்தாலும் ஊரு சுத்துறதுலேயே இரு.. இந்த பொண்ண பாருடானு காலைல சாமிக்கு பண்ண அர்ச்சனை நமக்கு ஆரம்பிக்கும்..*/

ithu LKG la irundhu koodave vara problem.. yaarum thirundha maatanga :)

/*மூணு வருசம் நம்ம மேல இருக்குற காண்டயெல்லாம் இந்த கடசி வருசம் காட்டுவாங்க வாத்தியாருங்க.. டேய்.. கேடி.. என்னடா தாடி? உனக்கு ஹால் டிக்கெட் இல்ல.. ப்ராஜக்ட் ரிப்போர்ட்ல (PROJECT REPORT) இந்த ஃபான்ட் (FONT) தப்பு.. போ.. போ போய் மாத்து.. கடசி தேதி முடிஞ்சி போச்சே.. கையெழுத்துலா போட முடியாது.. சொல்லி வெறியேத்துவாங்க*/

ipdi nadakala na engg padithathoda muzhu payana adaya mudiyathu :D

/*/*மிஸ்ட் கால் கொடுக்க கூட பேலன்ஸ் இருக்காது போன்ல.. ஏர்செல் (AIRCEL) கார்ட்னா, மக்கா நீ செத்த.. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தெரியாத நம்பர்ல இருந்து கால் வர, நாமளும் ஆவலா எடுக்க, வணக்கம், ஊஊ ஆயியே ஆயியே.. இந்த பாடல் உங்க காலர்டியூனா வேணுமா? உடனே அழுத்துங்கனு அழகான வாய்ஸ்ல அம்மணி குரல் கேக்கும்..*/

Nachu :)

/*கரண்ட்ட கட் பண்ணி விட்டுடுவாங்க.. ஏற்கனவே வெயில் மண்டைய பொளக்கிறது.. இதுல போய் வெளிய சுத்துனா அப்றோம் பயங்கர கருப்பா இருக்குற நாம கருப்பா பயங்கரமா வினு சக்கரவர்த்திக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி ஆக வேண்டியது தான்..*/

muhahahahahahahahahaha :)


/*பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.. ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு... */

ithan source ah naan kandupidithu vitten :P

Super post :)

Lancelot said...

@ Siluvai the first ....

:)))

Lancelot said...

G3 akka style la comment


:))))))))))))))))))))))))

Lancelot said...

1) ithodaa 7G rainbow colonyaa naanum munimmavum black la ticket vaangi pathom...

Lancelot said...

2) I the see one football- cricket no saw

Lancelot said...

3) thaadi vecha kedi

itha nee TR stylea repeat koduthu irukkalam- pombala professorna

"serithaan PODI"

aambala professor na

"poiduven un ponnoda ODI"

Lancelot said...

4) ithukuthan siluvai mobile loose panrathu illa - one pigeon leg piece oops leg tie message send...

Lancelot said...

5) Aarvaattartta solren iru...

Lancelot said...

6) why the no proposing Ms K??? all asking - orkut she propose u- u the no accept yet...why why why??

Lancelot said...

@ A Anna style comment

Roundaa oru 30 pottachi

டக்ளஸ்....... said...

சோக்காகீதுப்பா....!

R-ambam said...

//காலேஜ் முடிய போகுது.. ஒரு வழியா நம்ம ஆளு கிட்ட ப்ரோப்போஸ் (PROPOSE) பண்ணலாம்னு //
intha kadamai unarchi padippulayum
irukkalaam.No ... seriously!

Poornima Saravana kumar said...

என்னடா இதெல்லாம்:((

Poornima Saravana kumar said...

சும்மா இருந்த என்னை என் கடை பக்கம் வாங்க வாங்க இந்த கொடுமைக்கு தான் கூப்பிட்டயா(lol)!!!

Poornima Saravana kumar said...

ஒரே புலம்பல்ஸா இருக்கு:(((

Poornima Saravana kumar said...

இவனும் இருக்கானே.. படிக்கிறானா? எப்ப பார்த்தாலும் ஊரு சுத்துறதுலேயே இரு.. இந்த பொண்ண பாருடானு காலைல சாமிக்கு பண்ண அர்ச்சனை நமக்கு ஆரம்பிக்கும்.. அப்றோம் எப்டிங்க அந்த பொண்ண கரெக்ட் பண்ண??
//

அடப் பாவி!

Poornima Saravana kumar said...

பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.. ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு//

அட!

Anonymous said...

//பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.."//

adaddadadaa enna thathuvam enna thathuvam..

~gils

Divyapriya said...

ROTFL :D

இத தவிர வேற எதுவும் போட முடியல தம்பு :D நிஜமாவே chair ல ஒழுங்கா உக்காந்திருக்கலைன்னா, கீழ தான் விழுந்திருப்பேன். அந்த அளவுக்கு சிரிப்பு வந்துச்சு...

இது செம தத்துவம்ப்பா...எப்படி? ஆனாலும், இது உலக உண்மை...என்னோட g-talk custom message ஆ வச்சுக்க அனுமதி உண்டா?

//பொண்ணுங்கள பொருத்த வரை பசங்க அதிகமா பேசுனா அறுவை, சிரிச்சி சிரிச்சி பேசுனா ஜொல்லு, பேசாம இருந்தா ஜடம், தமிழ்ல பேசுனா பழம், இங்கிலிஸ்ல பேசுனா பீட்டர், படிச்சா கிறுக்கு, படிக்கலைனா மக்கு, சண்ட போட்டா ரௌடி, சண்ட போடலைனா பயந்தாங்கோலி.. ஆனா பசங்க, எங்களுக்கு பொண்ணுங்க நீங்க என்ன பண்ணாலும் ஃபிகரு... //

Divyapriya said...

//G3 said...
//டெக்னிக்கலா, IF-ELSE LOOP, SWITCH CASE தான் சரி பட்டு வரும்//

Switch case If-else edhulayumae condition satisfy aagalae pola :P
//

அப்டீன்னா default case தான்...வெறும் exit(0); :D

தாரணி பிரியா said...

கார்த்திக் அடி பலம் போல இருக்கு

இனிய வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

கொஞ்சம் லேட் , என்னை பத்திதான் தெரியுமே.அதனால் இந்த வாழ்த்தை ஏத்துக்கோ :)

Anonymous said...

//"தாத்தா கருணாநிதி சித்திரை திருநாள் சொல்ல, இன்னொருத்தர் தமிழர் திருநாள் சொல்ல, அந்த பக்கம் தமிழ் புத்தாண்டுனு சொல்ல, ஷப்பா... இப்பவே கண்ண கட்டுடே...
"//

என் பங்குக்கு நானும் ஒன்னு சொல்லுறேன். அது விடுமுறை நாள்.

Anonymous said...

//"குற்றவாளிகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்.."//

கொலைகாரர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்

இந்த மாதிரியான பதிவுகளைப் படிப்பதால்

hahaha summathan.

Karthick Krishna CS said...

//தாத்தா கருணாநிதி//
அந்த ஆளுகெல்லாம் என்ன மரியாதை??? தாத்தானு சொன்னதுக்கு பதிலா, ஒ............னு சொல்லியிருக்கலாம்...

Arc said...

"அது எல்லாத்தையும் விட விஞ்ஞானிகள் மூணு வருஷம் ஆராய்ந்து பண்ண ப்ராஜக்டை, நம்பள மூணு மாசத்துல முடிக்க சொல்லுற அபத்தம் இருக்கே... அப்பப்பா....
Poruki edhutyha gem statement idhu:-)
'
Lstla mattum ponnungala ipdi kalachitiyae. Unma taan , aanalum unmai kasakum taana?:P

Idhu sema, nee total formla irukka:-)
Laughed my heart and mind out. Good luck:-)

akila said...

excuse me, ur info is wrong...kuruvi, vasigara and youth are not remakes ok!!!

ஆளவந்தான் said...

//
akila said...

excuse me, ur info is wrong...kuruvi, vasigara and youth are not remakes ok!!!
//

Helo all the three are FULL FLEDGE COPY from telugu... drop a message if you need proof

Lancelot said...

@ Aki

mokkai vaanguneeya :P un illayathalapathikku bow bow bow...he he he

@ Aalavandhan anna

theriyama solliduchu mannichu vittudunga...btw i am not ajith fan...I am only Kamalhaasan's fan in tamil cinema veraa entha dashum pidikaathu...

ஆளவந்தான் said...

@ Aki , Lance

Hey I didnt mean to attack her. Please do not take that as offensive.

I was ajith fan, but I am not anti-vijay. nowadays daily i am watching villu songs ( thats because of NAYANTHARAA LOLL :)

In the three movies, I like vaseegara very much, particularly that "nenjam oru murai" song and father/son affections.

One blogger wrote exactly about that here long back Once again, Please do not take my previous comment as offensive. Thanks!

ஆளவந்தான் said...

half :D

Lancelot said...

@ A Anna

siluvai inga iruken baa...lancelot comment podalla...avanthaan missing aaachae...

appalaikka aKila pathi feel pannathingo- ponnu nammaa pettai thaan... enga pettai vijay rasigar mandra thalaivi akila thaan... vijay movie vanthutaa first cut out paal abishegam ellam thalaivi thaan pannuvaango.... athukkaaaga vijaya kalaicha karthik mathiri peel panna maataango :P

Godwyn Premsingh .D said...

nee unmailai lollu pidichavan da... mavanae...kaila kidacha...avlavuthaan...marugayaa thaan ...

Godwyn Premsingh .D said...

nee unmailai lollu pidichavan da... mavanae...kaila kidacha...avlavuthaan...marugayaa thaan ...

Tyler said...

// மிஸ்ட் கால் கொடுக்க கூட பேலன்ஸ் இருக்காது போன்ல..// :))))))))))

William Tucker said...

Being a nurse doesn't seem to have the same good feeling that it used to. All of your records are kept in the nurse aide registry and if for any reason you have any misconduct or inappropriate behavior, these will be recorded as well too. we have a range of great tools and resources on our website so visit us today. After becoming an RN, if you still have some time aside from being a nurse is by working as a writer, medical transcriptionist and other online jobs related to medical industry. Now the Division of Nursing is delivering excellent and innovative nursing sacramento stafff in the society.

Blogger templates

Custom Search