Friday, 10 April 2009

அயன்-ஆக்‌ஷன் லயன்

புதன்’s குறைப்பார்வை:


நேத்து ப்ராஜக்ட்க்கு டாக்குமெண்டேசன் (DOCUMENTATION) பண்ண கடசி நாள்.. ஆனா அத முடிக்க வழிய காணும்.. கல்லூரில வீட்டுக்கு போய் எடுத்துகிட்டு வாங்க அனுப்ப, நானும், சில நண்பர்களும் சேர்ந்து அயன் படத்துக்கு கிளம்பிட்டோம்.. மோசமான பசங்க சார்.. டாக்குமெண்டேசன்லா பண்ணி முடிச்சிட்டாங்க... நாம வீட்டுக்கு போனாலும் ஒண்ணும் புடுங்க போறதில்லையே... அதான் இவங்க கூட கிளம்பிட்டேன்..
என்னோட பள்ளி, கல்லூரி நண்பர்கள் ஆகட்டும்.. ப்ளாக் நண்பர்கள் ஆகட்டும்... நிறய பேரு (95% மேல்) அஜித் விசிறிகளாக உள்ளனர்.. என் நண்பர்கள் எல்லாம் என்னை கலாய்ப்பாங்க, டேய் நீ விஜய் ஃபேனா இருக்கறதுக்கு பதிலா நாக்க புடிங்கிட்டு சாகலாம்.. நான் சொல்வேன், டேய், உங்கள மாதிரி அஜித் ஃபேனா இருக்கறதுக்கு ஷூலேஸ்ல தூக்கி மாத்தி செத்துடலாம்.. நான் விஜய் ஃபேன்னு சொல்லிக்க எனக்கு கில்லி, போக்கிரி போதும்டானு சொல்லிடுவேன்... அது என்னமோ தெரில, அஜித் நல்லா நடிச்சாலும் கலாய்க்கணும் தான் தோணுது... அவர் படத்துல காமெடி (ஆழ்வார் தவிர்த்து) தாளம் போட வைக்கும் பாடல்கள் சிறப்பா இல்ல... அயன் படம் கில்லி மாதிரி இருக்குனு என் மற்ற நண்பர்கள் சொல்ல, ஒரு எதிர்ப்பார்ப்போட தான் போணோம்...கதைனு பெருசா ஒண்ணும் இல்ல.. ஆனா அத கையாண்ட விதம் ரொம்ப புதுசு.. ரெண்டு கடத்தல் கூட்டம்.. ஒண்ணு பிரபு-சூரியா கேங்.. மற்றோன்று வில்லனுடையது... கடத்தல் பண்ணாலும் அத நியாயமா செய்வாராம் பிரபு.. தங்கம், வைரம், எலட்ரானிக் பொருட்கள் தான் கடத்துவேன்.. நோ போதை, கெட்ட சமாச்சாரம்.. (என்ன கொடும சரவணன் இது) மொத கேங் வளர்ச்சி வில்லனுக்கு பிடிக்கல.. அதுனால அவர பழி வாங்க இவர் எடுக்கும் முயற்சிகள், அதனால் வரும் கொலைகள், எதிர் விளைவுகள் என என படபடத்து முடிவில் வில்லனை போட்டுத்தள்ளி ஹீரோ ஜெய்க்கும் சுபமே...இப்ப இருக்கும் ஹீரோக்களின் மசாலா படங்கள் வில்லுடைந்து, தியேட்டரில் பேகான் அடிக்கும் நிலையில் உள்ளன.. ஆனால் தனக்கு சரியாக எது சூட் ஆகுமோ அந்த கதையை தேர்ந்தெடுத்து கணகச்சிதமாக சூரியா நடிக்கிறார்.. மசாலா, மாஸ், ஆக்‌ஷன் படங்கள் சூரியாவால் பண்ண முடியுமா? என்றால் முடியும் என்று சொல்கிறது இந்த படம்.. (ஆனாலும் சில ரசிகர்களால் தாங்க முடியாது, இவரும் இது மாதிரி படம் பண்ணுறாரே) காங்கோவின் வீதிகளில் வைரம் கைமாறிக்கொண்டே இருக்க, சூரியா விடாமல் துரத்தும் அந்த ஸ்டண்ட்க்கே பாதி டிக்கெட் காசு போச்சு.. ஆக்‌ஷனிலும், நட்பிலும் மின்னும் சூரியா, வலுவில்லாத ரொமன்ஸ் காட்சிகளில் மட்டும் பின்ன முடியாமல், சிரித்தே பெண்களை மயக்குகிறார்.. (ஐயோ... சிரிக்கிறான்டீ.. பின்னாடி இருந்த பெண்ணின் கமெண்ட்) முதல் பாதி சூரியா-ஜெகன் காமெடி காட்சிகளில் லைட்டா கில்பான்ஸி இருக்கு.. என்னவோய்.. பெண்கள், தாய்மார்கள் படத்துக்கு அதிகமா வருவாங்க.. மறந்துடேளா?பிரவுக்கு பில்லா அப்புறம் செம சான்ஸு.. நல்லா உபயோகித்துள்ளார்.. போலிஸ் ஸ்டேசனில் அவர் எகிறும் காட்சிக்கு, அதான் கும்பி சொல்றாருல வசனத்திற்கு தியேட்டரில் விசிலும், கைதட்டலும்.. தமன்னாவ இப்டி வீணாக்கிடீங்களே... நடிக்க வாய்ப்பே இல்ல.. ஆடை குறைப்பும் இல்ல.. ஜி3 அக்கா பாஷைல சொல்லணும்னா அவ்வ்வ்வ்வ்வ்.. துணி மாத்தும் போது ஹீரோ பாத்த உடனே காதல் வருதாம்.. இது தெரிந்து இருந்தால் சூரியாக்கு முன்னாடி நான் போய் இருப்பேன்... போங்கடா உங்க ரொமான்ஸ் லாஜிக்.. நீங்க இன்னும் எம்.ஜி.ஆர் பாணில இருந்து மாற மாட்டீங்களா?? விழி மூடி யோசித்தால் பாடலில் அருமையான முகபாவங்கள்...கருணாஸ், ஜெகன் பிரபு கேங்கில் இருக்கும் மற்ற கதாபாத்திரங்கள்.. இடைவேளைக்கு முன்னாடி ஜெகன் பற்றி தெரியும் அந்த காட்சி எதிர்பாராத திருப்பம்.. போதை மயக்கத்தில் சூரியாவிடம் மன்னிப்பு கேட்டு, மச்சி நீ என் ஃப்ரெண்டுடானு அழும் காட்சியில் கைத்தட்டல் அள்ளுகிறார்... ஹாஸ்பத்திரியில் கருணாஸ் வெகுந்து அழும் போது நல்ல நடிப்பு..எல்லா கேரக்டரையும் சூப்பரா தேர்வு செய்த இயக்குநர் கே.வி. முக்கியமான டெம்போ கதாபாத்திரம் வில்லனை மட்டும் கோட்டை விட்டுட்டார்.. படம் ஆரம்பத்தில் இருந்து எங்கள பயமுறுத்துடானு கத்தி டையர்ட் ஆனது தான் மிச்சம்.. முடி வெட்ட கூட காசு இல்லாத பாவ வில்லன்.. பைல்ஸ் வந்த குரங்கு மாதிரி முகத்தில் உணர்ச்சிகள்.. பிரபு-சூரியாவ கொடுமபடுத்துவதை விட நம்மள தான் அதிகம் பண்ணுறாரு...
காங்கோ மலைக்குகைகள், மலேசியா, சென்னை என கதையோடு நம்மை பயணிக்க வைக்கின்றது எம்எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு.. ஹாரிஸின் பாடல்கள் ஸ்வீட் மெலடி.. ஆனால் எல்லாமே கதையினுள் திணிக்கப்பட்ட பாடல்களாவே இருக்கு.. சூரியாவும் தமன்னாவும் லவ் பண்ண வந்தாலே தியேட்டரில் பாட்டானு கத்த ஆரம்பிச்சிடலாம்... ஹனி ஹனி பாட்டுக்கு எங்க கல்லூரி கல்சுரல்ஸ்ல ஆடுற மாதிரி நடன அமைப்பு.. அந்த பொண்ணும் கிக்கா இல்லாம, சிக்கா (SICK) முகபாவங்கள்...
சுறுசுறு முதல் பாதி, ஆனால் இரண்டாம் பாதியில் படம் வேகம் குறைந்து படம் எப்படா முடியும்னு உஸ்ஸ் போட வைக்கின்றது.. அண்ணனே தங்கையை நண்பணுக்கு செட் செய்து தருவது... இருவரையும் குஜாலாக பார்த்து ரசிப்பது... கேட்டா உன்ன மாதிரி நல்லவன் கிடைக்க கஷ்டம்னு சொல்றது டூடூ மச்.. கஸ்டம்ஸ் அதிகாரி பொன்வண்ணனிடம் சூரியா சேர்ந்து, வில்லனை போட்டு கொடுப்பது, அவரும் சூரியா குற்றவாளினு தெரிந்தும் எதிரிக்கு எதிரி நண்பன்னு இணைந்து வேலை பார்ப்பது லாஜிக் உதைத்தல்..
லாஜிக் மிஸ் ஆகும் சில காட்சிகளுக்கு பின்னோட்டம் மாதிரி ரீ-வைண்ட் பண்ணும் இடங்களில் கே.வி. ஆனந்த் பளிச்.. ஆனா அதுவே நிறய வர, கொஞ்சம் சலிப்.. ஆங்கில பிஸ்ஸாவை நம்ம ஊரு டேஸ்டுக்கு ஏத்த மாதிரி படைத்து இருக்கிறார்... ஆனாலும் ருசியா தான் இருக்கு..
43 பூச்செண்டுகள் தரலாம்!!


அயன்- ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும்!!
வருகைக்கு நன்றி!!

23 comments:

நட்புடன் ஜமால் said...

புதன்’s குறைப்பார்வை:\\


லொள்ளு இங்கே தொடக்கமா

நட்புடன் ஜமால் said...

\\டேய் நீ விஜய் ஃபேனா இருக்கறதுக்கு பதிலா நாக்க புடிங்கிட்டு சாகலாம்\\

ஹா ஹா ஹா

இது வில்லு சிரிப்பு

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட.. நீங்க குருவி ரசிகரா? எப்படிங்க அந்த படமெல்லாம் பார்க்குறீங்க?

சரி சரி.. இனியாவது தடம் மாறி சூர்யா, விக்ரம் படங்களை பாருங்க.. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

விமர்சனம் ரசிக்க வைத்தது. அதிலும் ஜி3 பாணி அவ்வ்வ்வ்... நச்! ;-)

Chronicwriter said...

arumai...

aanandha vigadam padicha maadhiri irundhuchu...

naan surya rasigan..

ajit rasiganaa irukuradhukku naaka pudinkittu saagalaam. thappaey illa..:)

dress maathum podu paartha loveaaa? good idea.. thanks will use this in future

www.chronicwriter.com

Thamizhmaangani said...

//dress maathum podu paartha loveaaa? good idea.. thanks will use this in future//

chronicwriterன் கருத்து...ஆஹா...யோசிக்க வைக்குறாரே!

நண்பா, விமர்சனம் அருமை. மனசுல பட்டத அப்படியே சொல்லியிருக்கீங்க! நல்லா இருக்கு.

நீங்க விஜய் ரசிகரா!! வாங்க வாங்க, கைய குடுங்க...நம்மளும் அப்படி தான்!:)

ஆளவந்தான் said...

//
அயன்- ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு மட்டும்!!
//
அப்போ பாக்கலாம் போல.. இங்கே ரிலீஸ் ஆகல.. நெட்ல தான் பாக்கனும்

ஆளவந்தான் said...

//
ஐயோ... சிரிக்கிறான்டீ.. பின்னாடி இருந்த பெண்ணின் கமெண்ட்
//
வாரணம் ஆயிரத்துக்கும் இதே காமெடி தான்... நம்ம சும்மா இருக்க முடியுமா.. சமீரா ரெட்டி வரும்போதெலாம் விசில் தான்.. ஆனா அந்த படுபாவி டைர டக்கர் அவள பாதியிலே கொன்னு புட்டான் :(

Anonymous said...

எனக்கு 50% விஜய் ரசிகை பிரண்ட்ஸ், 50% அஜித் ரசிகை பிரண்ட்ஸ், சோ அதப் பத்தி நோ கமெண்ட்ஸ்.

சூர்யா பிடிக்கும். அக்கா ஜோதிகாவையும் ரொம்ப பிடிக்கும்

GAYATHRI said...

suriya enna pannaalum azhagudhaa[:p]he he he...padam super hittu
!!![:D]

கார்த்திகைப் பாண்டியன் said...

விமர்சனத்துக்கு நடுவுல வர உங்க கமெண்ட்ஸ் எல்லாமே நல்லா இருக்கு.. பேருக்கு எத்த மாதிரியே லொள்ளுதான்..

R-ambam said...

ennathu Vijay fan aa ...? paravale ... atleast he can emote and dance unlike ajith.

gud review ... padamay paarka vaenaam poanga !

விஜய் said...

\\கல்லூரில வீட்டுக்கு போய் எடுத்துகிட்டு வாங்க அனுப்ப, நானும், சில நண்பர்களும் சேர்ந்து அயன் படத்துக்கு கிளம்பிட்டோம்.\\
அடப்பாவி :-) டாகுமெண்டேஷன் முடிந்ததா இல்லையா?

\\ டேய் நீ விஜய் ஃபேனா இருக்கறதுக்கு பதிலா நாக்க புடிங்கிட்டு சாகலாம்..\\
அவனா நீயி??

ஏம்பா இப்படி முழுக் கதையையும் சொசல்லிட்டீங்க???

Divyapriya said...

:D

Karthik said...

@ நட்புடன் ஜமால்:
லொல்லு சிரிப்புணே..

@.:: மை ஃபிரண்ட் ::.

விஜய் ரசிகர்... ஆனா குருவி மாதிரி படத்துக்கான ரசிகன் இல்ல..

@ Chronicwriter:

நீங்க முயற்சி செய்து என்ன ஆச்சுனு சொல்லுங்க.. அப்றோம் நான் அதை ட்ரை பண்றேன்..

@Thamizhmaangani:

தமிழே என் பக்கம்... ஹா ஹா... விஜய் ரசிகர்களை எல்லாம் ஒண்ணு சேர்ப்போம்...


@ஆளவந்தான்:

இங்க தமன்னா வரும் போது கத்துனோம்லே... செல்லம்.. ஐ லவ் யூ..


@மகா:

எனக்கும் ஜோ பிடிக்கும்.. விமர்சனத்தை விமர்சிக்க வில்லையே?

Karthik said...

@Gayathri:

நீ சூரியா ஃபேனா?? படம் பார்த்தியா?

@ கார்த்திகைப் பாண்டியன்:

நன்றிங்க.. தொடர்ந்து வாங்க..

@ R-ambam:

இப்டி சொல்லியே எந்த படமும் பாக்க மாட்டீங்களா?? நன்றிங்க

@விஜய்:

டாக்குமெண்டேசன் இன்னைக்கு தான் முடிச்சேன்.. 2 நாள் தூங்காம.. :( அண்ணா.. இதுலா நாம பாக்காத கதையா என்ன? :P


@ Divyapriya:

அக்கா... என் மேல எதாவது கோவம்னா சொல்லிடுங்க.. நான் வேணா தொடர்கத கூட எழுதுறேன்.. ஏன் இப்டி ஒரு எழுத்தில் கமெண்ட்?? அவ்வ்வ்வ் :( நான் உங்க கிட்ட இருந்து நிறய எதிர்பாக்குறேன்.. உன் ப்ளாக்க விசிட் பண்றதே பெர்சு.. போடானு உங்க உள்மனசின் குரல் எனக்கு கேக்குது.. நேக்ஸ்ட் மீட் பண்றேன்

Suresh said...

:-) machan super

Karthik said...

நீங்க பேஷன்ட்டா? அதாங்க டாக்டர்.விஜய் ஃபேனா?

நம்ப முடிய வில்லை.. வில்லை.. ல்லை.. லை.

review super. :)

G3 said...

Enakku padam pudikalae :((((

ApocalypsE said...

ena mamu avan avan evola kastta pattu padam edukran, neriya per padam nalla illanu soldranga...

Athu yaru avanga suriya munadi dress mathrenu soldrathu... :)

namalla jollu nu soldranga pa evangalaku ena pero...? keta rasigai yam... uhmmm...

Ramyah said...

nice review karthik. I didn't know that you were active in this blog that's why didn't visit you for long. Now that i know, i ll come often. tc

Saranya said...

Very nice :) Ur writings are amazing..

விஞ்ஞானிகள் மூணு வருஷம் ஆராய்ந்து பண்ண ப்ராஜக்டை, நம்பள மூணு மாசத்துல முடிக்க சொல்லுற அபத்தம் இருக்கே... அப்பப்பா....

SO TRUE!!! Sigh, what an irritating fact!

Puthandu vazhthukkal!

Suresh said...

summa super thalai, i am following u pichitinga tamil puthandu nal valthukkal

Blogger templates

Custom Search